World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama continues assault on democratic rights

ஒபாமா ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைத் தொடர்கிறார்

Tom Eley and Barry Grey
12 October 2009

Back to screen version

கடந்த மாதம் ஜனாதிபதி பாரக் ஒபாமாவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவருக்கு முந்தையவர் ஜோர்ஜ் டபிள்யு. புஷ் போல் அரசின் போலீஸ் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கு முழுமையாக அர்ப்பணித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம், ஒபாமா, பெயர் குறிப்பிடப்படாது என்ற நிபந்தனையின் பேரில் செய்தியாளர்களுடன் பேசும் தகவல் ஆதாரங்களில் சம்பந்தப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் அரசாங்க அம்பலப்படுத்துபவர்கள் ஆகியோருக்கு புதிய பாதுகாப்பு அளிக்கும் "ஊடக கவசம்" என்ற மசோதாவை காங்கிரஸ் வழியே நிறைவேற்றுவதை குறிப்பிடத்தக்க வகையில் பலவீனப்படுத்துவதற்கு நகர்ந்தார். இது ஒரு செனட்டர் என்ற வகையில் அதே போன்ற நடவடிக்கைக்கு ஆதரவாக இருந்த ஒபாமாவிற்கான இன்னொரு நேரெதிர்முகத் திருப்பத்தை குறிக்கிறது.

காங்கிரஸ் மற்றும் செய்தி ஊடக நட்பு அணியினர் வியப்பில் ஆழ்ந்தனர். இரு முன்னணி பத்திரிகைகளான நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியன ஒபாமாவின் நிலைப்பாட்டை பற்றி விமர்சிக்கும் ஆசிரியர் தலையங்கங்களை வெளியிட்டன. "இந்த மசோதாவின் சாரத்திற்கு நிர்வாகத்தின் எதிர்ப்பானது முற்றிலும் வியப்புக்குரியதாக வந்தது மற்றும் சமரசத்திற்கு அதிகம் அக்கறை காட்டவில்லை" என நியூயோர்க் ஜனநாயக கட்சி செனட்டர் சார்லஸ் சூனர் கூறினார். "இது மசோதாவை உயர்ந்த கட்டப் போராட்டத்துக்கான பாதைக்குள் கிட்டத்தட்ட திருப்பிவிட்டது."

பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்ட கவச சட்டம் அறிக்கையானது அரசாங்கம் செய்தியாளர்களை நீதிமன்றத்திற்கு இழுத்து அவர்களின் தகவல் ஆதாரங்களை வெளியிடும்படி நிர்பந்தம் செய்யும் சம்பவங்களில் "தேசிய பாதுகாப்பு" பற்றிய கருதிப்பார்த்தல்களை அறிவதற்கான பொதுமக்களின் உரிமையை எடைபோடுவதற்கு நீதிபதிகளை அனுமதிக்கிறது. இந்த மசோதாவிற்கு எதிராக, ஒபாமா தனது சொந்த பதிப்பை, தேசிய பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என்று வெள்ளை மாளிகை கோரும்பொழுதெல்லாம் தங்களின் ஆதாரங்களை வெளியிட செய்தியாளர்களை நிர்பந்திக்கும் பதிப்பை வழங்கினார்.

ஒபாமாவின் தெளிவான நோக்கம் பத்திரிகை மற்றும் அரசாங்க இரகசியங்களையும் குற்றங்களையும் வெளிப்படுத்துவதிலிருந்து உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களின் தடுக்கும் உறுப்பினர்களை அச்சுறுத்துவதாகும். தேசிய பாதாகாப்புக்கு வெளிப்படையான அச்சுறுத்தல் என்பது "சிறைக்கைதிகளை கீழ்த்தரமாக நடத்தல், பயங்கரவாதிகள் என சந்தேகப்படுவோருக்கான சிஐஏ சிறைகள் மற்றும் முன் அனுமதி இல்லாத ஒட்டுக்கேட்டல் -இரகசிய தகவல்கள் அதிகாரபூர்வமற்றவகையில் வெளிப்படுத்தல் மூலம்- பொதுமக்கள் அறிவதாக புஷ் நிர்வாகத்திலிருந்து மாறாத கூக்குரலாக இருந்தது.

சிஐஏ- ஆல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பான தகவல்களை நசுக்குவதற்கு ஒபாமா நிர்வாகத்தால் நடந்த இன்னொரு முயற்சி, செப்டம்பர் 30 அன்று ஒரு மத்திய நீதிபதி, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோர் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளமை பற்றிய 92 ஒளிநாடாக்களை உளவு நிறுவனம் அழித்தது தொடர்பான நூற்றுக்கணக்கான பத்திரங்களை நசுக்கும் நிர்வாகத்தின் முயற்சிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.

அமெரிக்க மக்கள் உரிமைக் கழகம் தகவல் அறியும் சுதந்திரம் சட்டத்தின் கீழ் பத்திரங்களை வெளியிடுவதற்காக வழக்குத் தொடர்ந்தது, சிஐஏ இன் "கறுப்பு பகுதியில்" பயன்படுத்தப்பட்ட விசாரணை முறைகளை விவரிக்குமாறும் கூடகுறிப்பிட்டது. தற்போதைய சிஐஏ இயக்குநர் லியோன் பனெட்டா முகவாண்மைகளின் விசாரணை முறைகள் பற்றிய எந்த பத்திரத்தையும் வெளியிடும் மனுக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.

கடந்த மாதம் ஒபாமா நிர்வாகம் அமெரிக்க நாட்டுப்பற்று சட்டத்தின் இவ்வாண்டு முடிவில் காலாவதியாக போகும் மூன்று பிரிவுகளை நாம் நீட்டிப்பதாக ஒபாமா நிர்வாகம் தெரிவித்தது. இப்பிரிவுகள் எந்த தனிநபரின் வணிகம் பற்றி தேடும், தனிநபர் பற்றி விவரம் தேடும் பதிவு நாடாக்களை இயக்க, நூலக விவரங்களை கூடப் பெற அரசாங்கத்தை அனுமதிக்கும் மற்றும் "தனி ஓநாய்" சந்தேகப்படுபவர்கள் என அழைக்கப்படும், அதாவது தேசியப்பாதுகாப்புக் கடிதத்தின் பேரில் பயங்கரவாதி என வடிவமைக்கப்பட்ட குழுக்களுடன் தொடர்புகள் இராத வெளிநாட்டுக் குடிமக்கள் மீதாக உளவு அறிய அரசாங்கத்தை அனுமதிக்கின்றன.

காங்கிரஸ் அந்த பிரிவுகளை நீட்டிப்பதாக இப்பொழுது தோன்றுகிறது.

மிக சமீபத்திய நகர்வு நன்கு ஸ்தாபிக்கப்பட்ட முறையில் தொடர்கிறது. அவரது தொடக்கவிழா முதல், "மாற்றத்தின்" வேட்பாளர் என்பது புஷ் நிர்வாகத்தின் ஜனநாயக விரோத கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கிறது.

நிர்வாகம் திரும்பக் கொடுக்கும் நடைமுறையை தொடர்வதற்கான அதன் உள்நோக்கத்தை அறிவித்தது, அதனால் பயக்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் பிடிக்கப்பட்டு சித்திரவதையை நடைமுறைப்படுத்தும் மூன்றாம் நாடுகளுக்கு இரகசியமாய் அனுப்பி வைக்கப்படல்.

குவாண்டநாமோ குடாவில் சிறைமுகாமை மூடுவதற்கான தனது உள்நோக்கத்தை அறிவிக்கும் அதேவேளை, ஒபாமா சிறைக்கைதிகள் தொடர்பான ஆட்கொணர்வு வழக்குப் போடுவதை எதிர்த்துள்ளார் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாக்ராமில் உள்ள இழிபுகழ் பெற்ற அமெரிக்க இராணுவ சிறையில் சிறைக்கைதிகளுக்கான ஆட்கொணர்வு உரிமையை நிராகரிக்கிறார்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோரை சித்திரவதை செய்தல் மற்றும் கொல்லுதல் ஆகியவற்றைக் கட்டளை இட்டு மேற்பார்வை இடும் சிஐஏ அதிகாரிகள் மற்றும் புஷ் நிர்வாகத்தின் உயர் மட்ட அதிகாரிகளை எந்த விசாரணை செய்வதையும் ஒபாமா எதிர்த்துள்ளார். கொலை நிகழ்வுகளை வெளிக்காட்டும் சிஐஏ தலைமை ஆய்வாளரின் அறிக்கையை வெளியிடச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒபாமாவின் அட்டர்னி ஜெனரல், எரிக் ஹோல்டர், புஷ் நிர்வாகத்தின் சித்திரவதை வழிகாட்டுநெறிகளை மீறிய ஒரு சில "போக்கிரி முகவர்களை" அடையாள நிமித்தமாக விசாரிப்பதை அறிவித்தது.

கைதிகளை சித்திரவதை செய்தல், கொலை செய்தல், கற்பழித்தல் ஆகியவற்றை விளக்கும் நிழற்படங்களை, அதேபோல புஷ் நிர்வாகத்தின் குற்றத்திற்கான ஏனைய ஆதாரங்களை வெளியிடுவதை ஒபாமா நசுக்கியுள்ளார்.

சித்திரவதை, திரும்ப ஒப்படைத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களினால் தொடுக்கப்படும் வழக்கை மற்றும் அதேபோல அமெரிக்க குடிமக்களை முன் அனுமதி இல்லாமல் தொலைபேசி ஒட்டுக்கேட்டலுக்கு எதிர்ப்பில் வழக்குத் தொடுப்பதையும் நீக்கும் முயற்சியில் அரசின் இரகசிய சலுகையை வெள்ளைமாளிகை வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

ஒபாமா ஜனாதிபதிபதவிக்கு நிற்கையில், அரசாங்க வெளிப்படைத்தன்மையின் புதிய சகாப்தத்திற்கு வாக்குறுதி கொடுத்தார் மற்றும் புஷ் நிர்வாகத்தின் ஜனநாயக உரிமைகள் தொடர்பான மிக வெறுக்கத்தக்க துஷ்பிரயோகத்தை தான் தடைசெய்யவோ அல்லது தலைகீழாக மாற்றவோ செய்வதாய் கூறினார். அவர் தேர்தலில் வென்றதற்கு போலீஸ்-அரசு வழிமுறைகள் பற்றிய புஷ் நிர்வாகத்தின் அங்கீகாரத்தை பொதுமக்கள் எதிர்த்தது பகுதி அளவில் காரணமாகும்.

ஆயினும் - ஈராக் போரை தொடர்தல் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் போரை விரிவுபடுத்தல் மற்றும் இராணுவத் தலையீட்டை விரிவுபடுத்தல் என காணப்படும் வெளியுறவுக்கொள்கை மற்றும் வோல்ஸ்ட்ரீட்டுக்கு அரசாங்கத்தின் பிணை எடுப்பை தொடர்தலும் விரிவுபடுத்தலும், வேலைகள், சம்பளங்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் மீதான தாக்குதலும் என்றவாறாக- ஒபாமா தனது முன்பிருந்தவரின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறார்.

பதவியிலிருக்கும் பத்துமாதகாலத்தில், ஜனநாயகக் கட்சி நிர்வாகம் ஜனநாயக உரிமைகளைக் காப்பதில் கட்சியிலோ அல்லது அமெரிக்க அரசியல் நடைமுறையின் எந்த பகுதியிலுமோ அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

குடியரசுக் கட்சி புஷ்ஷின் வலதுசாரிக் கொள்கைகளுக்கும் ஜனநாயக கட்சி ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையிலான தொடர்ச்சியானது, இராணுவவாதமும் சமூக பிற்போக்கும் அடிப்படையில் ஜனாதிபதிகளின் தனிப்பட்ட பண்புத்திறன்கள் பற்றிய பிரச்சினை அல்ல, மாறாக அவை அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடி மற்றும் வர்க்க கட்டமைப்பில் வேரூன்றி உள்ளன.

அமெரிக்க நிதிய தன்னலக்குழுவின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதில் ஒபாமா, புஷ்ஷிற்கும் குறைந்தவரல்ல. அதன் உலக பொருளாதார அந்தஸ்தில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டுவதற்கான முயற்சியில், அதன் பூகோளப் பொருளாதார மற்றும் மூலோபாய இலக்குளை அடைவதில் அது சர்வதேச ரீதியாக, அதிகரித்த அளவில் இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்கிறது. உள்நாட்டில், பரந்த அளவிலான உழைக்கும் மக்களுக்கு திகைப்பூட்டும்வகையில் சமூக சமத்துவமின்மையையும் வளர்ந்துவரும் சமூக இன்னல்களையும் முன்னேற்றுவிக்கும் ஒரு பொருளாதார அமைப்பை பாதுகாப்பதற்கு அது ஜனநாயக விரோத வழிமுறைகளுக்கு திரும்புகிறது.

செல்வமானது சமுதாயத்தின் மேல்மட்டத்தில் என்றுமிராத அளவு அதிகமாய் குவிக்கப்பட்டிருப்பதும் வர்க்கப் பதட்டங்கள் உயர்ந்து வருவதும் இறுதியில் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளுடன் பொருந்திப்போகாது. உரிமைகள் மசோதாவையும் ஆட்கொணர்வு உரிமையையும் மிதித்துதுவைத்தல், தங்களின் கொள்கைகள் சமூக எதிர்ப்பை கட்டாயம் எழுச்சியுறச்செய்யும் என்று ஆளும்வட்டாரங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுடன் கட்டுண்டிருக்கிறது. புஷ் மற்றும் ஒபாமாவின் கீழ் கட்டப்படும் போலீஸ் அரசு கட்டமைப்பானது வெளிநாட்டு பயங்கரவாதிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலுக்கு ஆளும் தட்டால் கொடுக்கப்படும் பதில் அல்ல, மாறாக அதன் பிரதான பகைவனான- அமெரிக்க தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரும் அச்சுறுத்தலுக்கு கொடுக்கப்படும் பதில் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved