World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP holds public meeting in Sri Lankan plantations

சோ.ச.க. இலங்கை பெருந்தோட்டங்களில் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது

By S. Jayanth
1 October 2009

Use this version to print | Send feedback

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, தீவின் மையத்தில் உள்ள பெருந்தோட்ட பிரதேசமான ஹட்டன் நகரில் கடந்த ஞாயிரன்று முக்கியமான பொதுக் கூட்டமொன்றை நடத்தியது. "உலகப் பொருளாதார நெருக்கடியும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமும்" என்ற தலைப்பில் நடந்த இந்த கூட்டத்துக்கு உள்ளூர் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பப் பெண்களும் சமூகமளித்திருந்தனர். பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களால் அண்மையில் திணிக்கப்பட்ட சம்பள வியாபார உடன்படிக்கை தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பரந்த எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலைமையின் மத்தியிலேயே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைமையில் முதலாளிகளுடன் அணிதிரண்ட தொழிற்சங்கங்கள், தோட்டத் தொழிலாளர்கள் மீது வறிய மட்டத்திலான சம்பள ஒப்பந்தமொன்றை திணித்தனர். மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) மற்றும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்ட போதிலும், இந்த அமைப்புக்கள் ஒப்பந்தம் தொடர்பான தொழிலாளர்களின் எதிர்ப்பை தணிக்கவும் அடக்கவும் உபகரணங்களாக செயற்படுகின்றன.

"இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச முன்நோக்கு" என்ற சோ.ச.க. யின் அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகளையும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவந்த கட்டுரைகளையும் விநியோகித்து அக்கரபத்தன, தலவாக்கலை, கொட்டகலை, வட்டவளை, மஸ்கெலியா மற்றும் ஹட்டனிலும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இந்தக் கூட்டத்துக்காக சோ.ச.க. குழு பரந்தளவில் பிரச்சாரம் செய்திருந்தது.

பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழுவின் உறுப்பினர்கள் அக்கரபத்தனையில் இருந்து இரண்டு மணித்தியாலம் பயணித்து கூட்டத்துக்கு வருகை தந்திருந்தனர். சோ.ச.க.யின் அரசியல் உதவியுடன் பெல்மோரல் தோட்டத்தில் இந்த நடவடிக்கை குழு அண்மையில் அமைக்கப்பட்டமை, இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஒரு முக்கியமான பகுதி தொழிற்சங்கங்கள் போட்ட அரசியல் முடிச்சில் இருந்து விடுபடத் தொடங்கியுள்ளனர் என்பதற்கான அறிகுறியாகும்.

தொழிலாளர்கள் கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகளுக்கு கவனமாக செவிமடுத்தமையும் கலந்துரையாடலின் போது தமது சொந்த அனுபவங்களை விளக்கியதோடு கருத்துக்களை பரிமாறிக்கொண்டமையும், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமன்றி முழு தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலும் ஆழமான அரசியல் மாற்றம் ஏற்படுவதையே பிரதிபலிக்கின்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த சோ.ச.க. உறுப்பினர் ஏ. சாந்தகுமார், தொழிலாளர்களால் தமது உரிமைகளை தொழிற்சங்கங்கள ஊடாக காத்துக்கொள்ள முடியாது என்பதையும் சமுதாயத்தை சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் மறு ஒழுங்கு செய்ய வேண்டும் என்பதையுமே அண்மைய சம்பளப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார். உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணிக்க அரசாங்கமும் முதலாளிகளும் எடுக்கும் முயற்சிகளுக்கு இது மட்டுமே பதிலாக இருக்க முடியும், என அவர் மேலும் கூறினார்.

"தோட்டத் தொழிலாளர்களால் தனித்துப் போராட முடியாது" எனத் தெரிவித்த அவர், சோ.ச.க. "தோட்டத் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்கு மட்டுமன்றி, ஏனையை துறை தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்கும் அழைப்பு விடுப்பதோடு, தெற்காசியாவிலும் உலகம் பூராவும் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் தொழிலாளர்கள் திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறது" என அவர் விளக்கினார்.

SEP general secretary Wije Dias with A. Shanthakumar translating into Tamil
சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸின் உரையை ஏ. சாந்தகுமார் (இடது) தமிழ் மொழிபெயர்க்கிறார்

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா உரையைத் தொடங்கும் போது, சுயாதீன நடவடிக்கை குழுவொன்றை அமைக்க பெல்மோரல் தோட்ட தொழிலாளர்கள் எடுத்த முடிவு ஒரு சர்வதேச முக்கியத்துவம் கொண்டது என்றார். பெரும் பூகோள பொருளாதார வீழ்ச்சியின் சூழ்நிலையின் கீழ், "எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரே மாதிரியான பிரச்சினையையே எதிர்கொள்கின்றனர்" என அவர் கூறினார்.

2006ல் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களையும் அண்மைய வாரங்களில் நடந்த போராட்டங்களையும் பற்றி குறிப்பிட்ட தேவராஜா, பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம் செய்த 34 தோட்டத் தொழிலாளர்களின் பெயர்களை எழுதி பொலிசுக்கு பக்ஸ் செய்யப்பட்டிருந்த பட்டியலொன்றை தேவராஜா காட்டினார். இந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் சம்பள ஒப்பந்தத்தை எதிர்த்த காரணத்தால், இந்த பக்ஸை இ.தொ.கா. அனுப்பியிருக்கலாம் என பலமாக சந்தேகிக்கப்படுகிறது என அவர் கூறினார். சம்பள உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் ஏனைய தொழிற்சங்கங்கள், தமது சொந்த உறுப்பினர்களை சுற்றி வளைத்து நீதிமன்றுக்கு கொண்டுவருவதற்கு பொலிசாருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது என அவர் சுட்டிக் காட்டினார். இந்த நடவடிக்கைகள், தொழிற்சங்கங்கள் தொழிற்துறை பொலிஸ்காரனாக பாத்திரமாற்றியிருப்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும் என அவர் தெரிவித்தார்.

சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் தனது உரையைத் தொடங்குகையில், இந்த பிரதேசத்தில் பல பெருந்தோட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்திருப்பது, இலங்கையிலும் உலகம் பூராவும் இப்போது தொழிலாளர் இயக்கத்தில் சமூக மற்றும் அரசியல் உறவுகளில் ஆழமான மாற்றம் ஏற்படுவதையே பிரதிபலிக்கிறது என விளக்கினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான முன்னைய சம்பள கூட்டு ஒப்பந்தம் மார்ச் மாதம் காலங்கடந்த போதிலும், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதல்கள் முடிந்துவிட்டதாக பிரகடனம் செய்து ஐந்து மாதங்கள் கடந்த பின்னரும் எந்தவொரு தொழிற்சங்கமும் புதிய சம்பளக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. "இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொடூரமான தமிழர்-விரோத யுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் தடங்கல் ஏற்படுத்த விரும்பாமையே இதற்குக் காரணம். அவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் யுத்த சக்கரங்களோடு பிணைக்கப்பட்டிருந்ததோடு, இப்போது சகலருக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் ஆதரித்தனர்," என டயஸ் தெரிவித்தார்.

"இப்போது அவர்கள் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் ஜனாதிபதி இராஜபக்ஷ பிரகடனம் செய்துள்ள புதிய 'பொருளாதார யுத்தத்தை' ஆதரிக்கின்றனர். தொழிற்சங்கங்கள் முதலாளிகளதும் முதலாளித்துவ அரசினதும் ஆயுதமாகியிருக்கிறதே அன்றி, தமது உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளாக இல்லை என்பதை பல தொழிலாளர்கள் இயல்பாகவே புரிந்துகொண்டுள்ளனர்.

"ஒரு மாற்று சோசலிச வேலைத் திட்டத்திற்கு நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என சோ.ச.க. பிரேரித்த போது, அது பெல்மோரல் தோட்ட தொழிலாளர்களின் கவனத்தையும் விசுவாசத்தையும் ஈர்த்தது. இந்தக் குழுவை ஸ்தாபிப்பதில் பெல்மோரல் தொழிலாளர்கள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நகர்வை மேற்கொண்டுள்ளதோடு தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினர் அதை பின்பற்றுவர்."

பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழுவுக்கு மத்திய வங்கி ஊழியர் சங்க தலைவர் எம். பியரத்ன எழுதிய கடிதத்தை டயஸ் வாசித்தார். "நீங்கள் பெல்மோரல் தோட்டத்தில் ஒரு நடவடிக்கை குழுவை ஸ்தாபிக்க எடுத்த நடவடிக்கையை எங்களுக்கு வழிகாட்டும் மற்றும் எங்களை பலப்படுத்தும் ஒரு செயலாக நான் கருதுகிறேன். நீங்கள் தொழிலாளர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளை ஆர்வத்துடன் வாசித்தேன். தோட்டத் தொழிலாளர்கள் மீது அற்ப சம்பளத்தை திணித்த தொழிற்சங்கங்களை நீங்கள் எதிர்ப்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் உங்களது குழுவை ஆதரிக்கவும் மற்றும் உங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதை தயவு செய்து கருத்தில்கொள்ளுங்கள். ஏனைய வேலைத் தளங்களிலும் அலுவலகங்களிலும் நடவடிக்கை குழுக்களை அமைக்கும் போராட்டத்தில் நாமும் இணைந்துகொள்வோம்," என அந்தக் கடிதம் தெரிவித்தது.

A section of the Hatton meeting
ஹட்டன் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தவர்களில் ஒரு பகுதியினர்

பெல்மோரல் தொழிலாளர்கள் எடுத்துள்ள நடவடிக்கை 1930களில் தோட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிரொலிக்கின்றன என டயஸ் தெரிவித்தார். 1930களில் அப்போதைய ட்ரொட்ஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) தொழிற்சங்கங்களை ஸ்தாபிக்கவும் தேசிய சுதந்திரம் மற்றும் சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போராடவும் முடிவெடுத்தது. அந்தக் காலகட்டத்தில் தொடுத்த போராட்டங்களின் விளைவாகவே தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகளை வென்றனர்.

"பின்னர், 1964ல் முதலாளித்துவ அரசாங்கத்துடன் இணைந்து ல.ச.ச.க. காட்டிக் கொடுத்த பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) உறுப்பினர்களை சேர்த்துக்கொள்வதற்கு வழி கிடைத்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாகமாக இருந்து இ.தொ.கா. செய்த காட்டிக்கொடுப்புகள், மலையக மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்படுவதற்கு வழியமைத்ததோடு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தொழிலாளர்கள் மத்தியில் கால் பதிக்கவும் அனுமதி கிடைத்தது," என அவர் தெரிவித்தார்.

ஏதாவதொரு வழியில், இத்தகைய அமைப்புக்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்றன, என டயஸ் கூறினார். உழைக்கும் மக்களுக்கு இருக்கும் ஒரே பாதை, சுயாதீன நிலைப்பாட்டை எடுப்பதோடு சோசலிச வேலைத் திட்டத்துக்காக போராடுவதேயாகும்.

"இது உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு பொது அனுபவமாகும். தொழிற்சங்கங்கள் மற்றும் பழைய 'இடது' கட்சிகள் அனைத்தும் தமது 'இடதுசாரி' பாசாங்கையும் தொழிலாள வர்க்க பாசாங்கையும் கைவிட்டுவிட்டன," என டயஸ் தொடர்ந்தார். இது வெறுமனே மோசடியான தனிநபர்களின் உற்பத்தியல்ல, மாறாக இந்த அமைப்புக்கள் அடித்தளமாகக் கொண்டுள்ள பிற்போக்கு தேசியவாத தர்க்கத்தின் வெளிப்பாடாகும். "பூகோளமயமாக்கப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி, தேசிய ரீதியிலான அமைப்புக்கள் அனைத்தையும் கீழறுத்துள்ளதோடு, அவை முதலாளித்துவத்தின் துணையுறுப்புக்களே என்ற அவற்றின் உண்மையான பண்பை அம்பலப்படுத்தியுள்ளன."

கடந்த நூற்றாண்டில் உலக பொருளாதாரத்தின் அபிவிருத்திகள் மற்றும் இரண்டு உலக யுத்தங்களின் வெடிப்புக்கள் பற்றிய ஒரு வரலாற்று மற்றும் அரசியல் மீளாய்வை டயஸ் வழங்கினார். சமூக ஜனநாயகத்தினதும், ஸ்டாலினிசத்தினதும் காட்டிக்கொடுப்புகளாலும் மற்றும் அமெரிக்க டொலரின் உதவியாலும் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் முதலாளித்துவத்தின் மீள் ஸ்தாபிதம் சாத்தியமானது, என டயஸ் தெரிவித்தார்.

அவர், 1960களில் இந்த ஒப்பீட்டளவிலான ஸ்திர நிலைமையின் வீழ்ச்சியையும் மற்றும் 1970களின் முற்பகுதியில் பிரிட்டன், ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் 1975ல் அமெரிக்கப் படைகள் வியட்னாமில் தோல்வியடைந்தமை போன்ற புரட்சிகர போராட்டங்களின் வெடிப்பை பற்றியும் மீளாய்வு செய்தார். இத்தகைய அபிவிருத்திகள், ல.ச.ச.க. மற்றும் ஸ்டாலினிச கம்யூனிசக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த சிறிமா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தை கவிழ்த்த இலங்கை தொழிலாளர்களின் 1976 பொது வேலை நிறுத்தத்திலும் இது பிரதிபலித்தன.

தொழிலாள வர்க்கத்தின் இந்த உலகப் போராட்டத்துக்கு புரட்சிகரத் தலைமை இல்லாமல் போன காரணத்தால், முதலாளித்துவ வர்க்கத்தால் அதிகாரத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ள முடிந்ததோடு அதனது பொருளாதாரங்களை பூகோள அளவில் மறுசீரமைக்க முடிந்தது. இது, ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ முறைக்கு சார்பாக செயற்படும் வெளிப்படையான பொலிஸ்காரனாக மாறியிருக்கும் தொழிற்சங்கங்கள் உட்பட, சகல அமைப்புக்களதும் தேசிய சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டங்கள் முடிவுக்கு வந்திருப்பதை குறித்தது. தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புக்கு எதிர்ப்பைக் காட்டிய தொழிலாளர்களின் பெயர்களை பொலிசுக்கு கொடுக்க பெருந்தோட்ட சங்கங்கள் முடிவெடுத்தமை அவற்றின் சீரழிவுக்கு இன்னுமொரு உதராணமாகும்.

பெல்மோரல் தோட்ட தொழிலாளர்கள் எடுத்த நடவடிக்கையை பின்பற்றுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்த டயஸ், அனைத்துலக சோசலிசத்துக்கான போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு கல்வியூட்டவும் அவர்களை வழிநடத்தவும் வெகுஜன புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கூட்டம் கலந்துரையாடலுக்கு ஒதுக்கப்பட்ட போது, பல தொழிலாளர்கள் முக்கியமான பங்களிப்பை செய்தனர். பெல்மோரல் தோட்ட தொழிலாளி ஒருவர் விளக்கியதாவது: "சம்பள வியாபாரத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் தங்களுக்காகவும் முதலாளிகளுக்காகவுமே கைச்சாத்திட்டன, மாறாக தொழிலாளர்களுக்காக அல்ல. ஒரு தொழிலாளிக்கு 285 ரூபா [2.48 அமெரிக்க டொலர்] நாள் சம்பளம் என்பது மிகவும் அற்பமானது. நாங்கள் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே சோ.ச.க. உறுப்பினர்களை சந்தித்தோம்."

ஹட்டனுக்கு அருகில் உள்ள வெலெ ஓயா தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். 2006ல் இ.தொ.கா. வின் மாவட்டத் தலைவராக இருந்த அவர், சம்பள உயர்வுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த மட்டுப்படுத்தப்பட்ட போராட்டத்தைக் கூட இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் எதிர்த்ததோடு 170 ரூபா அடிப்படை சம்பளத்துக்கு தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன, என அவர் தெரிவித்தார்.

"இம்முறை தொழிற்சங்கங்கள் 285 ரூபா அடிப்படை சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளன, ஆனால் தொழிலாளர்கள் தோட்டத்துக்கு வெளியில் வேலை செய்தால் ஒரு சாப்பாட்டுடன் 400 ரூபா சம்பாதிக்க முடியும். எங்களது சம்பளத்தை தீர்மானிக்க அவர்கள் [தொழிற்சங்கங்கள்] யார்?" என அவர் கேட்டார்.

கூட்டத்தின் பின்னர் பல தோட்டத் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடினர். வெலி ஓயாவைச் சேர்ந்த ஒருவர் "அனைவரது உரைகளையும்" வரவேற்பதாகக் கூறியதோடு தொழிலாளர் நடவடிக்கை குழுவை அமைப்பதற்கு தனது ஆதரவையும் வெளிப்படுத்தினார். "தோட்டத் தொழிலாளர்களுக்கு சோ.ச.க. தேவை" என அவர் கூறினார். "அவர்கள் சகல முதாலளித்துவ அரசியல்வாதிகளாலும் ஒடுக்கப்படுகிறார்கள். இந்த முதலாளித்துவ சுரண்டலை தூக்கிவீச சோ.ச.க. உதவி செய்ய வேண்டும்."

தான் கண்ட எந்தவொரு கட்சியும் "இவ்வாறு அரசியலை கற்பித்ததில்லை. எவ்வாறு முன்னேறுவது மற்றும் எவ்வாறு முடிவுகளை எடுப்பது மற்றும் எவ்வாறு சரியான முறையில் செயற்படுவது என்பதை புரிந்துகொண்டுள்ளோம்," என பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழுவின் உறுப்பினர் ஒருவர் விளக்கினார்.