நோர்வேயில் வெள்ளியன்று 2009 சமாதானப் பரிசிற்கு பாரக் ஒபாமா
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற நோபல் குழுவின் அறிவிப்பு உலகம் முழுவதும் வியப்புடன் எதிர்கொள்ளப்பட்டது.
ஒன்பது மாதங்கள்கூட பதவியில் முழுமையாகாத நிலையிலும் எந்தப் பிரிவிலும் குறிப்பிடத்தக்க
சாதனைகள் ஏதும் இல்லாத நிலையில் ஒபாமா எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பலரும் வினா
எழுப்பியுள்ளனர். பரிசு நியமனத்தின் கடைசி தேதிக்கு 11 நாட்கள் முன்புதான் அவர் பதவியேற்றிருந்தார்.
ஆனால் இதையும்விட முக்கியமானது ஒபாமா பதவியில் என்ன செய்துள்ளார் என்பதாகும்.
ஏனெனில் அவை சமாதானத்துடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
தான் "வியப்பும், ஆழ்ந்த அடக்கத்தையும்" சமாதானப் பரிசைப் பெற்றுக் கொள்ளுவதில்
பெறுகிறேன் என்ற அறிவிப்புடன் தொடங்கிய கருத்துக்களை ரோசா மலர் தோட்டத்தில் காலையில் ஒபாமா தோன்றியபோது
வெளியிட்டார். அதன் பின் அவர் வெள்ளை மாளிகைக்குள் தன்னுடைய போர் ஆலோசனைக் குழுவைச் சந்தித்து இன்னும்
பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்பட்டு அந்நாட்டிலும் பாக்கிஸ்தானில் எல்லையிலும்
குண்டுவீச, போரை விரிவாக்க விவாதிப்பதற்காக சென்றார்.
ஈரானுக்கு எதிரான மறைமுக அச்சுறுத்தல்களைக் கொடுக்கவும் தன்னுடைய அறிக்கையைப்
பயன்படுத்திய ஒபாமா தேவையில்லாமல் தன்னை "தலைமைத் தளபதி" என்று அறிவித்துக் கொண்டு, தான் தலைமை
வகிக்கும் இரண்டு போர்கள், ஆக்கிரமிப்பு பற்றியும் குறிப்பிட்டார்.
"அணுவாயுதங்களில் இருந்து விடுதலை பெற்றுவிட்ட உலகம் என்ற நோக்கத்திற்காக"
நோபல் குழு அவரைப் புகழ்ந்துள்ளபோது, தன்னுடைய இலக்கு "என்னுடைய வாழ்க்கை காலத்தில் சிலவேளை
சாதிக்கப்பட இயலாது" என்று ஒபாமா கூறினார். மாஸ்கோ பேச்சுவார்த்தைகளில் அவருடைய நிர்வாகம்
குறைந்தது 1,500 அணுகுண்டு ஆயுதங்களை வைத்திருக்கும் உரிமையைக் கோரிய நிலையில், தான் எந்த
நிலைப்பாட்டில் இருந்து பேசுகிறோம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.
"நாம் அறிந்துள்ள உலகத்தை எதிர்கொள்ள வேண்டும்" என்று தன்னுடைய
"நோக்கம்" என்பதற்கும் அவருடைய நிர்வாகத்தின் அச்சுறுத்தும் அரசியலின் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள
வேறுபாட்டை ஒபாமா தெளிவாக்கினார்.
மேலோட்டமாகப் பார்த்தால் அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒரு சமாதானப் பரிசு
கொடுத்தல் என்பது கேலிக்கூத்து ஆகும். ஒபாமா நிர்வாகத்திற்கு இந்த பரிசுத் தேர்வு ஒரு சங்கடமாகக்கூட
இருக்கக்கூடும் என்ற பரந்த எச்சரிக்கைகள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள்மீது குண்டு வீசுதல் போன்ற
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான "தலைமைத் தளபதியை"(அத்தகைய ஒரு தாக்குதல் மட்டும் குழந்தைகள்,
மகளிர் உட்பட 100 பேரின் உயிருக்கு மேல் மே மாதத்தில்தான் குடித்துள்ளது) சமாதானத்திற்கு போராடுபவர்
என்று எப்படி அறிவிக்க முடியும்?
ஆயினுக் கூட நோபல் பரிசைப் பெறுவதே எப்பொழுதும் ஐயத்திற்கு இடமான ஒரு
மதிப்புத்தான். 1973ல் இன்று போர்க்குற்றவாளி என்று கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அமெரிக்காவை
விட்டு வெளியேற முடியாத நிலையில் இருக்கும் ஹென்ரி கிஸ்ஸிஞ்சருக்கு அப்பரிசு கொடுக்கப்பட்டதில் இருந்தே அதன்
புகழ் உண்மையில் மீட்கப்படவில்லை. அவருடன் சேர்த்து பரிசு கொடுக்கப்பட்ட பாரிஸ் சமாதான உடன்படிக்கையை
கிஸ்ஸிஞ்சருடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடாத்திய வியட்நாமியரான தலைவரான
அவ் உடன்படிக்கை தன்னுடைய நாட்டிற்கு எந்த
சமாதானத்தையும் கொண்டுவரவில்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டிபரிசை வாங்க மறுத்து விட்டார்.
ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு மெனாசம் பெகின் பரிசுக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட காலம் அவர் ஒரு பயங்கரவாதி, கொலையாளியாக இருந்தவர் என்பதை
நோபல் குழு புறக்கணித்து, அவரோடு இணையாக பரிசு பெற்ற எகிப்தின் அன்வர் சதாத்துடன்
Camp David
க்கு சென்றதற்காக அவர் கெளரவப்படுத்தப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் ஒரு மில்லியன் உயிர்களைக் குடித்த போரைத் தூண்டிவிட்ட
நிர்வாகத்தின் தலைவராக இருந்த ஜிம்மி கார்ட்டருக்கும் 2002ல் இந்த பரிசு கொடுக்கப்பட்டது.
அவர்களின் சொந்த கொள்கைகளைகளை மீறி பரிசு கொடுத்ததாக குழுவினை குற்றம்
சாட்ட முடியாது. இந்த பரிசை நிறுவிய ஆல்பிரெட் நோபல் டைனமைட்டை (Dynamite)
கண்டுபிடித்தவர் ஆவார்.
MOP (Massive Ordnance Penetrator)
எனப்படும் மாபெரும் ஊடுருவிக்
குண்டுபோடும் ஆற்றலை துரிதப்படுத்தும் பென்டகன் முயற்சிகளைப் பற்றி அவர் பெரும் அக்கறை
கொண்டிருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. இது ஒரு 30,000
pound
வெடிமருந்து வடிவமைப்புக் கொண்டு நிலத்தடியில் உள்ள இலக்குகளையும் தகர்க்கும் ஆற்றலைக் கொண்டது.
ஈரானுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆயுதம் தயாரிக்கப்படுகிறது.
ஒபாமாவின் "நோக்கம்", "ஒரு சிறந்த வருங்காலத்திற்கு உலக மக்களுக்கு நம்பிக்கை
கொடுக்கும் வகையில் அவர்களுடைய கவனத்தைப் பெற்றதற்கு" என்பதற்காக புகழப்பட்டாலும் நோபல் குழு
அவருடைய பிரச்சார வார்த்தை ஜாலங்களிலிருந்த போலித் தோற்றத்தைக் கண்டு அவரை பரிசிற்குத் தேர்ந்து
எடுத்துவிடவில்லை.
ஒரு நிர்ணயிக்கப்பட்ட அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக
கொடுக்கப்படும் அரசியல் வெகுமதியாகத்தான் நோபல் பரிசு உள்ளதுடன், எப்பொழுதும் இருந்திருக்கிறது.
நோர்வே நாட்டின் பாராளுமன்றத்தில் முக்கிய கட்சிகளில் இருந்து ஐந்து
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இக்குழு அமைக்கப்படுகிறது; இதில் தீவிர வலதுசாரிகள் முதல் சமூக
ஜனநாயகவாதிகள் வரை உள்ளனர். இதன் முடிவுகள் ஐரோப்பிய ஆளும் உயரடுக்கு முழுவதற்குள்ளும் பரவியுள்ள
நிலைப்பாடுகளைத்தான் பிரதிபலிக்கின்றன.
குழுவின் தலைவரும் முன்னாள் நோர்வே பிரதம மந்திரியமான
Thorbjorn Jagland,
நியூயோர்க் டைம்ஸுக்கு வெள்ளியன்று
கொடுத்த ஒரு பேட்டியில் இந்த தேர்வின் அடிப்படையில் இருக்கும் அவநம்பிக்கையை எதிர்த்து தமது தேர்வை
பாதுகாத்து கருத்து தெரிவித்துள்ளார். "உயர் சிந்தனையைக் கொண்டிருக்கும், அதற்காகப் பாடுபடும் மக்களை
குழு உய்த்துணர்வது மிகவும் முக்கியமாகும்; அதே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதைச் செய்துவிட முடியாது."
என்ற கூறிய அவர், "அவ்வப்பொழுது உண்மை அரசியல் (அதிகாரத்தை பயன்படுத்தும் அடிப்படையைக் கொண்ட
அரசியல் கொள்கை -Realpolitik)
மண்டலத்தையும் கவனிக்க வேண்டும்" என்று சேர்த்துக் கொண்டார்.
உண்மை அரசியல் நிலை (Realpolitik)
சமீபத்தில் மற்றும் இரு முக்கிய அமெரிக்க அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் உறுதியான பங்கைக்
கொண்டிருந்தது. 2002ல் கார்ட்டர், 2007ல் அல்கோரின் தேர்வு அப்படித்தான். புஷ் நிர்வாகத்தின் சீற்றம்
மிகுந்த ஒருதலைப்பட்ச தன்மையை சாடும் வகையில், ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போர் துவங்குவதற்கு
முன்பு கார்ட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 தேர்தலுக்கு முன்னதாகவே 2000ம் ஆண்டில் ஜனநாயகக்
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த அல் கோரே இந்தப் பரிசைப் பெற்றார். புஷ் நிர்வாகத்திடம்
இருந்து ஐரோப்பா ஒரு முறித்துக்கொள்ள வேண்டும் என ஒரு நயமற்ற குறிப்புத்தான் இது.
அந்த ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையைப் பற்றி ஒரு விமர்சனம் என்ற
விதத்தில் இப்பரிசு பயன்படுத்தப்பட்டது என்றால், இந்த ஆண்டு அதற்கு ஒப்புதல் கொடுக்கும் விதத்தில் அது
உள்ளது. Jagland
கூறுவது போல், "அவர் என்ன செய்யமுயல்கிறார் என்பதைச் சற்றே விரிவுபடுத்த இது உதவும் என்று நாங்கள்
நம்புகிறோம்."
ஆப்கானிஸ்தானிற்கு இன்னும் கூடுதல் துருப்புக்களை அனுப்ப ஒபாமா தயாரித்து
வருகையில் அவருக்கு பரிசைக் கொடுத்திருப்பதில் இருக்கும் வெளிப்படையான முரண்பாடு வெளித்தோற்றத்திலும் விட
உள்ளடக்கத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானில் போர் விரிவாக்கம், பாக்கிஸ்தான் மீதான தாக்குதல்கள், ஈராக்கைத்
தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளது என்னும் வாஷிங்டனின் செயல்களை நெறிப்படுத்தி, இவை சமாதானத்திற்கான
போர்களுக்கு ஒப்புதல் என்ற ஐரோப்பாவின் இசைவு முத்திரையைத்தான் இந்தப் பரிசின் உள்ளடக்கம்
கொண்டுள்ளது.
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஒபாமா நிர்வாகம் நடத்தும் போர்களுக்கு
உள்ள எதிர்ப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த இது உதவுகிறது; அதே போல் வருங்காலத்திற்காக திட்டமிடப்படும்
போர்களுக்கும் ஆதரவு ஆகும்.
ஆப்கானிஸ்தான் போருக்கு ஐரோப்பிய சக்திகள் ஆதரவு கொடுக்கின்றன. இந்த
நிலைப்பாடு அதிகமாக செய்தி ஊடகத்தில் வெளிப்பாட்டை காண்கிறது. உதாரணமாக பிரிட்டிஷ் நாளேடான
Independent,
"கொள்கையளவில்" இன்னும்
40,000 அமெரிக்கத் துருப்புக்கள் போரில் ஈடுபடுத்தப்படுவதற்கான முயற்சிகளுக்கு இது ஆதரவு கொடுப்பதாக
அறிவித்துள்ளது.
இதற்கிடையில் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் ஈரானிலும் தங்கள் நிலைப்பாட்டை
மாற்றிக் கொண்டு, வாஷிங்டனின் பிரச்சாரமான கடுமையான நடவடிகைகளுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளன.
ஐரோப்பாவின் ஆளும் வட்டங்கள் ஒபாமா ஒன்றும் சமாதானத்திற்கு பாடுபடுபடுவர்
இல்லை என்று கருதிக்கொண்டாலும், புஷ்ஷின் ஒருதலைப்பட்சமான தன்மையில் இருந்து சிறிது மாற்றம் மற்றும் அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நோக்கங்களைத் தொடர ஐரோப்பிய ஆதரவையும் ஒரு காரணியாக எடுத்துக்
கொள்ளும் விருப்பம் இவற்றை கருத்திற் கொள்ளுகிறது.
ஐயத்திற்கு இடமின்றி, ஐரோப்பிய அரசாங்கங்கள் அமெரிக்க இராணுவத் தலையீடுகளுக்கு
தங்கள் ஆதரவினால் மத்திய ஆசியா, பாரசிக வளைகுடா ஆகியவற்றில் எரிசக்தி இருப்புக்கள் சுரண்டப்படும்போது
தங்களுடைய பங்கும் இந்த ஆதரவினால் கிடைக்கும் என்று கணக்குப் போடுகின்றன.
மேலும் இப்போர்களை நியாயப்படுத்தி, அமெரிக்க வெளியறவுக் கொள்கை பன்முக
விவாதத்திற்கு வருவதை வளர்ப்பதற்காக ஐரோப்பிய சக்திகள் தங்கள் சொந்த இராணுவவாதத்தை நியாயப்படுத்துவதோடு,
தங்கள் மக்களின் போருக்கான எதிர்ப்பை அடக்கவும் ஒரு கருவியாக காண்கின்றனர்.
ஒபாமாவின் நோபல் பரிசு, உலகின் மிகப் பெரிய இராணுவ சக்தி சமாதானத்
திசைக்கு மாறுகிறது என்ற நம்பிக்கையை அடையாளம் காட்டுவதற்கு முற்றிலும் தொலைவான நிலையில், போருக்கு
அதுவே ஒப்புதலாக இருப்பதுடன், உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி மீண்டும் இராணுவவாதம், சர்வதேச
மோதல்கள் விரிவடைதல் ஆகியவற்றிற்கான சூழ்நிலையைத் தோற்றுவிக்கிறது என்ற எச்சரிக்கையையும் கொடுக்கிறது.