WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
Amnesty International condemns Spain's Incommunicado
Detention Law
ஸ்பெயின் நாட்டின் தனிமைப்படுத்தப்பட்டு தடுத்து வைத்திருக்கும் தடை சட்டத்தை சர்வதேச
மன்னிப்பு சபை கண்டிக்கிறது
By Marcus Morgan
7 October 2009
Use this
version to print | Send
feedback
மனித உரிமைகள் குழுவான சர்வதே மன்னிப்பு சபை (Amnesty
International) ஸ்பெயினின் சட்ட முறை "தனிமைப்படுத்தப்பட்டு
தடுத்துவைத்திருக்கும்'' சட்டத்தின் கீழ் என்ற கைதிகளை நடத்துவது சர்வதேச வழிகாட்டு முறைகளை மீறியிருக்கிறது
எனக்கூறி கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறைகூறியுள்ளது.
"ஸ்பெயின்: நிழல்களை தாண்டி--தனிமைப்படுத்தப்பட்டு தடுத்துவைத்திருக்கும்
காவலுக்கு முடிவு கட்டும் நேரம்" என்ற தலைப்பில் உள்ள அறிக்கை சந்தேகத்திற்கு உரியவர்கள் ஐந்து நாட்களுக்கு
விரும்பிய வக்கீலுடன் தொடர்பு, குடும்ப உறுப்பினருடன் பேச்சு அல்லது விருப்பப்படி டாக்டரை தேர்ந்தெடுத்தல்
ஆகிய உரிமைகளை மறுக்கும் வழக்கத்தை பற்றி ஒரு விரிவான மதிப்பீட்டைக் கொடுத்துள்ளது. பயங்கரவாதக் குற்றங்களின்
கீழ் காவலில் இருப்பவர் பிடிபட்டிருந்தால் தகவல் வழங்காது தடுத்துவைத்திருக்கும் காவல் 13 நாட்களுக்கு அதிகபட்சமாக
இருக்கலாம்.
அவர்களை குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் வெளியே கொண்டுவருதல்
அல்லது எந்த குற்றச்சாட்டும் இல்லமால் வெளியே அனுப்பப்படுதல் என்பதற்கு முன்பு இதன் விளைவு சந்தேகத்திற்கு
உரியவர்கள் இந்த நேரத்தில் காணாமல் போய்விடுகின்றனர். சந்தேகத்திற்கு உரியவர்களுக்கு அடிப்படை உரிமைகள்
மறுக்கப்படுவதோடு, தங்களுக்கு பிரியமானவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாத நிலையில் குடும்ப உறுப்பினர்கள்
மீதும் தீவிர அழுத்தத்தை சட்டம் கொடுக்கிறது.
காவலில் உள்ளவர்களை அடித்தல், தூக்கத்தைக் கெடுத்தல், பல வித மிரட்டல்
முறைகள் உட்பட சித்திரவதை போன்றவற்றிற்கு உட்படுத்தப்படுதல் பற்றிய சாட்சியங்களின் அறிக்கைகள் குறித்தும்
அது கவனத்தை ஈர்க்கிறது. மனித உரிமைகள் அமைப்புக்கள் மேற்கொள்ளும் சட்டத்திற்கு சவால்விடும் முயற்சிகள்
இச்சட்டமானது போலீசாரின் சித்திரவதைச் செயல்கள் தடுக்கப்படாத சூழ்நிலையை ஊக்குவிக்கிறது மற்றும்
ஸ்பெயினின் அரசாங்கத்தால் கவனிக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிடுகின்றன.
இந்த அறிக்கை தற்போதைய சட்டம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கைது
செய்யப்பட்டு இருப்பவர்களின் மனித உரிமைகள் தரத்தை மீறும் விதத்தில் ஐந்து முக்கிய பகுதிகளில் இருப்பதையும்
எடுத்துக்காட்டுகிறது.
1. தனிமைப்படுத்தப்பட்டு தடுத்துவைத்திருக்கும் தனிநபர்களுக்கு தாங்கள் விரும்பும்
வக்கீலின் உதவியை நாடும் உரிமை கிடையாது.
2. தனிமைப்படுத்தப்பட்டு
தடுத்துவைத்திருக்கும் தனிநபர்களுக்கு தனியே தன்னுடைய வக்கீலுடன் ஆலோசனை நடத்தும் உரிமை காவலில் இருக்கும்
காலத்தில் கிடையாது.
3. தனிமைப்படுத்தப்பட்டு தடுத்துவைத்திருக்கும் தனிநபர்களுக்கு ஒரு குடும்ப
உறுப்பினர் அல்லது விரும்பும் நபரிடம் தொடர்பு கொள்வதற்கோ, அவர்கள் இவர்களுடன் தொடர்பு
கொள்ளுவதற்கோ, தங்கள் காவல் பற்றி, வைக்கப்பட்டுள்ள இடம் பற்றிக் கூறும் உரிமை இல்லை. வெளிநாட்டு
குடிமக்களை பொறுத்தவரையில் அந்நாட்டு தூதரகங்களுக்கு இத்தகைய தகவலைத் தெரிவிக்கும் உரிமையும்
கிடையாது.
4. தனிமைப்படுத்தப்பட்டு தடுத்துவைத்திருக்கும் தனிநபர்களுக்கு அவர்கள் விரும்பும்
மருத்துவர்கள் மூலம் மருத்துவ சோதனை செய்து கொள்ளும் உரிமை இல்லை.
5. பயங்கரவாதத் தொடர்புடைய
குற்றங்கள் அல்லது திட்டமிட்ட குற்றச்செயல்களுக்காக சந்தேகத்திற்கு உரிய முறையில் காவலில் இருக்கும் நபர்கள்
(அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தடுத்துவைத்திருக்கும் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தாலும்,
இல்லாவிட்டாலும்) கைதுசெய்யப்பட்ட ஐந்து நாட்கள் வரை உரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் போலீஸ்
காவலில் வைக்கப்பட முடியும்.
சர்வதே மன்னிப்புச் சபையின் ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசியா திட்டத்தின்
இயக்குனரான Nicola Duckworth
கூறினார்: "தனிமைப்படுத்தப்பட்டு தடுத்துவைத்திருக்கும் முறை கடந்தகாலத்திற்குரியதாக தள்ளிவிடப்பட வேண்டும்.
வேறு எந்த ஐரோப்பிய நாடும் இத்தகைய காவல்முறையை காவலில் இருப்பவர்களின் உரிமைகள்மீது கடுமையான
தடைகளை சுமத்தவில்லை. தற்போதைய ஸ்பெனியில் எந்தக் காரணத்திற்காக எவர் கைது செய்யப்பட்டாலும்,
ஏதோ கறுப்பு ஓட்டையில் நாட்கணக்கில் முடிவில்லாமல் காணாமற் போவது ஏற்கப்பட முடியாததாகும். இத்தகைய
வெளிப்படைத் தன்மை இல்லாதது மனித உரிமைகள் மீறப்படுவதற்கு மறைப்புப்போல் பயன்படுத்தப்பட முடியும்.
தனிமைப்படுத்தப்பட்டு தடுத்துவைத்திருக்கும் முறையில் காவலில் இருந்தாலும், கைது செய்யப்பட்டவர்கள் ஒரு
வக்கீலிடம் பேச முடியாது அல்லது தாங்கள் விரும்பும் மருத்துவரை பெற முடியாது. அவர்களுடைய குடும்பங்கள்
இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் அழுத்தத்தில் வாழ்கின்றன; பல தனிமைப்படுத்தப்பட்டு
தடுத்துவைத்திருக்கும் முறையில் காவலில் இருப்பவர்கள் தாங்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர் அல்லது
தவறாக நடத்தப்பட்டனர் என்று கூறுகின்றனர். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அபூர்வமாகத்தான்
விசாரணைக்கு உட்படுகின்றன.''
காவலில் இருப்பவர்களுக்கு எதிராக மிரட்டல் மற்றும் தவறாக நடத்தப்படுதலைத்
தவிர, போலீஸ் வக்கீல்களையும் மிரட்டி மோசமாக நடத்தும் வழக்குகளும் வந்துள்ளன. இது குற்றம்
சாட்டப்பட்டவருக்கு போதிய பாதுகாப்பை மேலும் இல்லாதொழிக்கின்றது. தக்க பரிசீலனை இல்லாமல் நீதிபதிகள்
அதிககாலம் காவல் நீட்டிப்பில் சந்தேகத்திற்கு உரியவர்கள் வைக்கப்படவேண்டும் என்பதற்கு ஒப்புதல்
கொடுக்கின்றனர் என்றும் வக்கீல்கள் குறைகூறியுள்ளனர். ஒரு வக்கீல்: "காவலில் இருப்பவர்களின் உரிமைகள் பதிவு
செய்து ஒட்டுக" (Copy-paste')
என்ற முறையில் முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றன. என கூறினார்.
மொரக்கோவில் பிறந்த முகம்மது பஹ்சியோடு தொடர்பு கொண்ட மிகத் தீவிர
வழக்குகளில் ஒன்று, மக்கள் கவனத்திற்கு வந்ததை அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. இவர் 2006 ஜனவரி மாதம்
ஈராக்கில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு உதவுவதற்கு போராளிகளை அனுப்புவதில் தொடர்பு
கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இவருடைய தனிமைப்படுத்தப்பட்டு
தடுத்துவைத்திருக்கும் காவலில் அவருக்கு தன் சொந்த வக்கீலை ஆலோசிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. தான்
சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கம் நியமித்த மருத்துவர் மற்றும் விசாரணை நீதிபதி
ஆகியோர் இவருடைய புகார்களை புறக்கணித்ததாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கள் பற்றி குற்றவியல்
விசாரணைகள் ஏதும் தொடங்கவில்லை. நீதித்துறை பொது ஆணைக்குழுவிடமும் மற்றும் மாட்ரிட் அரசாங்க
வழக்குத்தொடுனரிடமும் இருந்தும் நேரடி மறுப்புக்கள்தான் வெளிவந்துள்ளன.
பஹ்சியின் மனைவி போலீசார் அவரிடம் கணவரைப் பற்றி எங்கு கைது
செய்யப்பட்டார் என்ற விவரத்தையும் தெரிவிக்கவில்லை என்றார். சர்வதேச மன்னிப்புசபையிடம் அவர் "பல
நாட்கள் அவர் ஏதோ மறைந்துவிட்டது போல் இருந்தது. எவருக்கும் அவர் எங்கு இருக்கிறார் என்று
தெரியவில்லை. அவர் கைது செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பின்னர்தான் சிறையில் இருந்த அவரிடம் இருந்து
எனக்கு தொலைபேசித் தகவல் வந்தது. என்னிடம் பேசும்போது அவர் அழுதார்." எனக்கூறினார்.
அவர் நடத்தப்பட்ட விதம் பல விதங்களில் குவாந்தநாமோ குடாவில் கைதிகளை
நடத்தியது போல் இருந்தது என்று அவர் கூறினார். தகவல் வழங்காது தடுத்துவைத்திருக்கும் முறையில் காலில்
இருந்தபோது பல நாட்கள் "குளிர், தூக்கக் குறைவு, அதிக வெளிச்சம், அடியுதை, மிரட்டல்கள் ஆகியவற்றை
சந்தித்தார். காவல்கைதிகள் தங்கள் மதத்தை கண்டிக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர்; அவர்கள் பொய்
கூறவைக்கப்பட்டும் மற்றும் சக கைதிகளை மிரட்டவும் பயன்படுத்தப்பட்டனர்."
இத்தகைய தவறான செயல்கள் அதிகமாக வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், பல
சர்வதேச மனித உரிமைகளின் உறுதியான குறைகூறலும் வந்த நிலையில் (இதில் ஐ.நா. குழுக்களும் ஐரோப்பிய
சித்திரவதைத் தடுப்புக் குழுவும் (CPT)
அடங்கும்) தனிமைப்படுத்தப்பட்டு தடுத்துவைத்திருக்கும் முறைக் காவல்சட்டம் பெருகிய முறையில் தொடர்ச்சியான
ஸ்பெயின் அரசாங்கங்களால் கடந்த தசாப்தத்தில் அடக்குமுறைச் சட்டமாகிவிட்டது.
1995 லேயே சித்திரவதை பற்றிய ஐ.நா. சிறப்பு தொடர்பாளர்: "தனிமைப்படுத்தப்பட்டு
தடுத்துவைத்திருக்கும் காவல் முறையில் மிகவும் கூடுதலான முறையில் சித்திரவதை பயன்படுத்தப்படுகிறது. அக்காவல்
முறை சட்டவிரோதமாக ஆக்கப்பட வேண்டும். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் உடனே விடுவிக்கப்பட
வேண்டும். சட்ட முறைகள் காவலில் வைக்கப்படுபவர்கள் சட்ட உதவியை 24 மணி நேரத்திற்குள் பெறுமாறு
உறுதிப்படுத்தப்பட வேண்டும்." எனக்கூறினார்
1997ல் ஐ.நா. சித்திரவதைக்கு எதிரான குழு (CAT)
ஸ்பெயின் பற்றி அதன் முடிவுரையான கருத்துக்களில் கூறியதாவது: "எந்தச் சூழ்நிலையில் இது நடைமுறைப்படுத்தப்படலாம்
என்ற சட்டபூர்வ உத்தரவாதங்கள் இருந்தாலும், நீடித்த காலம் தனிமைப்படுத்தப்பட்டு காவலில் வைத்திருக்கும்
முறை வழக்கத்தில் உள்ளது...இது சித்திரவதை வழக்கத்திற்கு வசதியளிக்கிறது. இக்காலத்தில்தான் சித்திரவதைக்குட்பட்டது
பற்றிய குறைகூறல்கள் பெரும்பாலும் வருகின்றன."
ஈராக் படையெடுப்பை ஒட்டி மற்றும் 2003 மாட்ரிட் இரயில்மீது குண்டுவீச்சுக்களை
அடுத்து, அதிகபட்ச காவல் காலம் உண்மையில் முன்பு இருந்த 5 நாட்களில் இருந்து 13 ஆக உயர்த்தப்பட்டது.
பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்கள் சந்தேகத்திற்குரியவர்களை நீடித்த 28 நாட்கள் வரை காவலில் வைக்கும்
புதிய சட்டங்களை நியாயப்படுத்தின. இரண்டிலுமே மக்களை பாதுகாக்கவும், "தேசிய பாதுகாப்பிற்கும்" இத்தகைய
சட்டம் தேவை என்று வாதிடப்பட்டது. 9/11 க்குப் பின்னர் 1000 க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத எதிர்ப்பின்கீழ்
கைதுசெய்யப்பட்னர்; இதில் 50 க்கும் குறைவானவர்கள்தான் தண்டிக்கப்பட்டனர்.
இந்த அறிக்கை ஸ்பெயினின் அதிகாரிகள் காவல் சட்டத்தை விமர்சிப்பவர்களை எதிர்கொள்ளும்
விதம், அவை வெறும் "அரசாங்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முறையில் திட்டமிட்ட குற்றம் சார்ந்த மூலோபாயம்"
என்று உதறியிருப்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. "இத்தகைய விடையிறுப்பு குற்றச்சாட்டுக்களில் இருக்கும் உள்ளடக்கம்
பற்றி விசாரணை வருவதற்கு முன்பே கூறப்படுகிறது. இது சித்திரவதை, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு
எந்த தண்டனையும் கிடைக்காது என்ற சூழலுக்குத்தான் வழிவகுக்கும்" என்று அறிக்கை எச்சரித்துள்ளது. |