SWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Obama rules out troop drawdown in Afghanistan
ஆப்கானிஸ்தானில் துருப்புக்கள் குறைப்பதற்கில்லை என்று ஒபமா கூறுகிறார்
Patrick Martin
8 October 2009
Use this version
to print | Send
feedback
ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ ஈடுபாட்டில்
துருப்புக்களின் எண்ணிக்கை குறைப்பது பற்றி பரிசீலிக்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸ் அதிகாரிகள்
வெள்ளை மாளிகையில் ஒபாமாவிற்கும் 30க்கும் மேற்பட்ட குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் காங்கிரஸ்
உறுப்பினர்களுக்கும் செனட்டர்களுக்கும் செவ்வாயன்று மூன்று மணி நேரம் நடந்த பேச்சுக்களுக்கு பின்னர் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் தரைப் போரை விரிவுபடுத்த வேண்டும் என்று
வாதிடும் 2008 குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் மக்கெயின் மற்றும் ஜனநாயகக் கட்சியின்
காங்கிரஸ் உறுப்பினரும் இராணுவக்குழுவின் தலைவருமான
Ike Skelton ம் இருந்தனர். மேலும் மன்ற தலைவர் நான்சி
பெலோசி மற்றும் ஜோன் கெர்ரி என இராணுவ வெற்றி பற்றி அதிக நம்பிக்கையில்லதாவர்களும் கூட்டத்தில் கலந்து
கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் ஜனநாயகக் கட்சியின் செனட் பெரும்பான்மை தலைவர் ஹாரி
ரீட், ஒபாமா எந்த முடிவு எடுத்தாலும் காங்கிரசின் முழு ஆதரவு உண்டு என்று உறுதியளித்தார்; இது பல்லாயிரக்கணக்கான
கூடுதலான துருப்புக்களை அனுப்புவதில் இருந்து எல்லை கடந்து பாக்கிஸ்தானுக்குள் ஏவுகணைகள் சிறப்புப் படைகள்மூலம்
தாக்குதல் நடத்தும் வரையான பல இராணுவ விருப்புரிமைகளையும் தடையின்றிப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
அதிகபட்ச மூலோபாய வளைந்து கொடுக்கும் திறனை தக்கவைத்துக்
கொள்வதைத்தான் வெள்ளை மாளிகை தெளிவாக நம்பிக்கை காட்டியுள்ளது; அதே நேரத்தில் முழு காங்கிரஸ்
தலைமையையும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் அந்த நாட்டை மத்திய,
தெற்கு, தென்மேற்கு ஆசியா முழுவதும் பரந்த அளவில் அமெரிக்க சக்தியை அதிகரிக்கும் நடைமுறைகளுக்கு தளம்
போல் பயன்படுத்திக்கொள்ளவுமான இலக்கிற்கு ஆதரவாக சேர்ந்துள்ளது.
ஒரு அடையாளம் கூறப்படாது "மூத்த நிர்வாக அதிகாரி" செய்தி ஊடகங்களில்
ஒபாமா பல காங்கிரஸ் நிலைப்பாடுகளின் நடுவழிக் கொள்கையை ஏற்பார் எனக் கூறியதாக மேற்கோளிட்டுக்
கூறியுள்ளன. இக்கூட்டம் "ஜனாதிபதிக்கு என்ன விருப்புரிமைகள் மேசையின்மீது உள்ளன என்பதை அடையாளம் காணும்
வாய்ப்பு", "வெறுமே கூறப்படும் ஆப்கானிஸ்தானத்தில் படைகளை இரட்டிப்பு செய்வது அல்லது அங்கிருந்து விலகுவது
என்ற வாதத்தை ஒதுக்குதல்" என்பதைக் கொண்டிருந்தது.
அமெரிக்கத் துருப்புக்களை ஆப்கானிஸ்தானில் இரு மடங்காக ஆக்குவது என்பது
போதுமான மனிதசக்தி இல்லாததால் விரைவில் கிட்டத்தட்ட இயலாது என்ற நிலைமையில், இந்த ஏற்பாட்டின்படி
"நடு வழியை" ஏற்றல் என்ற விதத்தில் ஒபாமா இரு கட்சி காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான கூட்டத்தையும்
அமெரிக்கத் துருப்புக்கள் பின்வாங்குவது என்ற பேச்சிற்கு இடமில்லை என்பதை வலியுறுத்த பயன்படுத்திக் கொண்டார்
என்ற பொருள் ஆகும்.
அமெரிக்க மக்களின் பெரும்பான்மை உணர்வை ஒபாமா நிர்வாகம் வெளிப்படையாக
மீறுகிறது; அவர்கள் போர் விரிவாக்கத்தை எதிர்ப்பதுடன், துருப்புக்கள் தாயகம் திரும்ப வேண்டும் எனவும்
எதிர்பார்க்கின்றனர். ஒபாமா பதவியேற்று போரை விரிவுபடுத்தியதில் இருந்தே ஆப்கானிய போருக்கு எதிர்ப்பு
முறையாக வளர்ச்சி அடைந்துள்ளது. சமீபத்திய அசோசியேட்டட் பிரெஸ்ஸின் கருத்துக் கணிப்பு பேட்டி கண்டவர்களில்
40 சதவிகிதத்தினர்தான் போருக்கு ஆதரவு கொடுத்தனர் என்று காட்டுகிறது; இந்த சதவிகிதம் ஜூலை மாதம்
44ல் இருந்து சரிவு ஆகும்.
புதனன்று வந்த செய்தி ஊடகத் தகவல்கள் ஒபாமா இப்பொழுது ஆப்கானிஸ்தானில்
தலைமை அமெரிக்க தளபதியாக இருக்கும் தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டல் அதிகப் படைகள் கோரிய வேண்டுகோளை
பெற்றுவிட்டார் என்று உறுதிபடுத்தியுள்ளது. போர் பற்றிய அமெரிக்கக் கொள்கைகளை பரிசீலிக்கும் அதிகாரத்துடன்
ஒபாமா அவரை வசந்த காலத்தில் நியமித்திருந்தார். திங்களன்று உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு
வேண்டுகோளின் பிரதிகள் வழங்கப்பட்டன என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் கூறினார். எத்தனை கூடுதலான
துருப்புக்கள் இப்பொழுது ஒருமாதத்திற்குள் அனுப்பப்பட வேண்டும் என்று ஒபாமா முடிவெடுப்பார்--மக்கிரிஸ்டல்
40,000 பேர் வேண்டும் என்று கூறியுள்ளதால்--என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகளைக் கொள்கை மறுபரிசீலனையின் விளைவாக எந்தக் குறிப்பான
முடிவுகள் எடுக்கப்பட்டாலும், இந்த வழிவகையின் இறுதி முடிவு ஐயத்தில் இல்லை. அமெரிக்கா இன்னும் ஆழ்ந்த
முறையில் கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளாக இத்தகைய வெளிநாட்டுக் குறுக்கீடுகளை கடுமையாக எதிர்த்துப்
போராடிய மக்கள் இருக்கும் நாட்டில் காலனித்துவப் பாணி போரில் இன்னும் தீவிரமாக ஆழ்ந்துவிடும்.
ஜனநாயகக் கட்சியில் மக்கிரிஸ்டலின் கொடுத்துள்ள எழுச்சி --எதிர் திட்டத்தின்
விரோதிகள்-- துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் விரும்பும் "பயங்கரவாத-எதிர் முறை" போன்றவை--அமெரிக்க
மக்களின் போர் எதிர்ப்பு உணர்வுகளுடன் பொதுவில் எதையும் கொண்டிருக்கவில்லை. இவை வன்முறையை
வேறுவிதமாகப் பெருக்கும் திட்டங்கள் ஆகும்; இதல் கூடுதலாக டிரோன்ஸ் தாக்குதல்கள், குண்டுவீச்சுக்கள் என்று
எழுச்சியாளர்கள் படுகொலை செய்யப்படுதல் அதையொட்டி பொதுமக்களை பீதியில் ஆழ்த்துதல் ஆகியவை இருக்கும்.
வெள்ளை மாளிகையினால் பரிசீலிக்கப்படும் ஒவ்வொரு கொள்கை விருப்புரிமையும்,
பேரழிவு தரும் உட்குறிப்புக்கள், இன்னும் இப்பகுதியை கூடுதலாக உறுதி குலைத்தல், பாக்கிஸ்தான், இந்தியா, சீனா
போன்ற அண்டை நாடுகளுக்கு இடையே பூசல்களை எரியூட்டி
இன்னும் பரந்த போர் அபாயத்தை தூண்டும் திறனை உடையவை.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒபாமா போர் எதிர்ப்பு
வேட்பாளராக தன்னைக் காட்டிக் கொண்டார்; குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் தொடக்கப் போட்டியில்
ஹில்லாரிக்கு எதிராக; பிந்தையவர் 2002 ல் ஈராக் போர்த் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
ஆனால் அவர் ஈராக் போரில் ஈடுபட்டுள்ள படைகளை ஆப்கானிஸ்தானிற்கு மாற்றுவதாகவும் உறுதியளித்திருந்தார்;
தேர்தல் உறுதிமொழிகளில் காப்பாற்றப்பட்ட ஒரு சில உறுதிமொழிகளில் அதுவும் ஒன்றாகும்.
ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்கும் முடிவு மகத்தான வரலலாற்று முக்கியத்துவத்தை
கொண்டுள்ளது. சில தாராண்மைவாத வர்ணனையாளர்கள் ஒபாமா லிண்டன் ஜோன்சன் அடிச்சுவட்டில் செல்லும் ஆபத்தில்
உள்ளார் என்று எச்சரித்துள்ளனர்; அவருடைய உள்நாட்டுக் கொள்கை முயற்சிகள் --"வறுமையின் மீதான போர்"
என்று அழைக்கப்பட்டவை-- இறுதியில் வியட்நாம் போர் விரிவாக்க செலவுகளால் ஒதுக்கப்பட்டுவிட்டன.
வரலாற்று ஒப்புமை அதன் பயன்பாடுகளை கொண்டுள்ளது; ஆப்கானிஸ்தான் உறுதியாக
"ஒபாமாவின் போராக" எவ்வாறு வியட்நாம் போர் ஜோன்சன், மக்நமாரா, பின்னர் நிக்சன், கிசிங்கர்
ஆகியோரோடு அடையாளம் காணப்பட்டதோ அப்படிப் போய்விட்டது. ஆனால் இவ்விதத்தில் ஒற்றுமைகளைவிட வேறுபாடுகள்தான்
அதிகமாகி விட்டன.
ஜோன்சனுடைய உள்நாட்டில் குறைந்த சமூகச் சீர்திருத்தத் திட்டம் கூட வெளிநாட்டில்
அவர் கையாண்ட ஏகாதிபத்தியப் போர் கொள்கையால் மழுங்கியது. ஆனால் ஒபாமாவைப் பொறுத்த வரையில்
நிர்வாகம் உள்நாட்டுக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை இரண்டிலுமே அப்பட்டமான பிற்போக்குத் திட்டத்தைத்தான்
தொடர்கிறது.
புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை ஒபாமா நிர்வாகம் தொடர்வதுடன், தீவிரப்படுத்தவும்
செய்துள்ளது. வெளிநாட்டில் அது ஈராக் போரைத் தொடர்கிறது, ஆப்கானிய, பாக்கிஸ்தானிய போர்களை
விரிவுபடுத்துகிறது. உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளைத் தாக்கி, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள்
ஆகியவற்றை தாக்குகிறது; அதே நேரத்தில் பொதுக் கருவூலத்தை வங்கிகள் பிணை எடுப்பிற்காக காலியாக்குகிறது.
பல மில்லியன் தொழிலாளர்கள் ஒபாமாவிற்கு வாக்களித்தனர் அல்லது செய்தி ஊடகம்
அவரைப் பற்றிக் கூறிய போலித் தோற்றங்களால் பாதிக்கப்பட்டனர். இந்தப் போலித் தோற்றங்கள் பெருகிய
முறையில் இன்னும் தொடர்ந்து, வோல் ஸ்ட்ரீட்டின் மூலோபாயத்தின் கருவியாக தன்னை வெளிப்படுத்துக் கொண்ட
விதத்தில், உள்நாட்டு மந்த நிலை, வெளிநாட்டுப் போர் ஆகியவற்றின் கசப்பான அனுபவங்களால் சிதைவுறும்.
ஆப்கானிஸ்தான் மீதான வெள்ளை மாளிகை-இராணுவ பதட்டங்கள்
படையெடுப்பிற்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர்,
ஆப்கானிஸ்தானில் வாஷிங்டன் ஆழ்ந்த சங்கடத்தை எதிர்கொள்கிறது |