World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி The new leadership of the German Social Democratic Party Opportunists, lobbyists, careerists ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியின் புதிய தலைமை சந்தர்ப்ப வாதிகள், செல்வாக்கு நாடுபவர்கள், பதவி மூலம் தங்களை உயர்த்திக் கொள்ளுபவர்கள் By Ulrich Rippert ஒரு கட்சியின் சரிவு பல நேரமும் அது தன்னுடைய தலைமையை மாற்றும் விதத்தில் வெளிப்படுகிறது. சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஐப் பொறுத்தவரையில் முக்கிய தலைவர்களை மிக விரைவில் மாற்றியதில் இருந்து உறுதியாகத் தெரிகிறது. ஒரு வாரத்திற்கு முன்னர் ஞாயிறன்று வியத்தகு முறையிலான தேர்தல் தோல்வியை அடுத்து இரண்டு மணி நேரத்தில், கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நான்கு பேர் ஒரு சிறு வட்டமாகச் சந்தித்து, கட்சியின் உயர்மட்ட மாற்றங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அதன் சமீபத்திய பதிப்பில் Der Spiegel இக்கூட்டத்தில் வெளியேறும் பெரும் கூட்டணியில் இருந்த இரு முன்னாள் மந்திரிகள், தொழிலாளர் துறை மந்திரி Olaf Scholz, சுற்றுச் சூழல் மந்திரி Sigmar Gabriel மற்றும் பேர்லின் மேயர் Klaus Wowereit, கட்சியின் துணைத் தலவர் Andrea Nahles ஆகியோரும் இருந்தனர் என்று தகவல் கொடுக்கிறது. இந்த நான்கு பேரும் தங்களுக்குள்ளேயே Gabriel கட்சித் தலைவர், Nahles தலைமைச் செயலராக இருக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர். Scholz, Woweriet இருவரும் கட்சியின் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தத் திட்டம் பின்னர் ஒருமனதாக SPD யின் Presidium ஒப்புதலையும் பெற்றது; Hesse பிரதிநிதி Andrea Ypsilanti வாக்களிக்கவில்லை. கட்சியின் நிர்வாகக் குழுவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அதிக எதிர்ப்பும் இருந்தது. இப்பொழுதுள்ள 36 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் காப்ரியலுக்கு 28 வாக்குகள்தான் கிடைத்தன; தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள Nahles க்கு 24 வாக்குகள்தான் கிடைத்தன. புதிய தலைமைக் குழுவிற்கு அதிக உற்சாகம் காட்டப்படவில்லை என்று இருந்தாலும், நவம்பர் மாதம் நடக்க இருக்கும் கட்சியின் சிறப்புப் பேரவையில் இதற்கு ஒப்புதல் வாடிக்கையாகக் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தலைமை மாற்றம் ஒரு உட்கட்சி அதிரடி மாற்றம் போல் உள்ளது. ஒரு சிறிய உயர் தலைவர்கள் குழு கட்சியின், போருக்குப் பிந்தைய மிக மோசமான தேர்தல் முடிவு கட்டவிழ்த்த அரசியல் அதிர்ச்சியை பயன்படுத்தி மிக விரைவில் கட்சியின் தலைமையை மாற்றிவிட்டனர். தேர்தல் சங்கடத்திற்கான அரசியல் காரணங்கள் பற்றி எந்த வித தீவிர விவாதமும் இருக்கப் போவதில்லை. தன்னுடைய உறுப்பினர்கள் சம்பந்தமாக கட்சியின் தலைமை கொண்டுள்ள அக்கறையின்மை, இழிவு ஆகியவற்றை இதைவிட வேறு ஏதும் தெளிவாகக் காட்டப்போவதில்லை. கடந்த 11 ஆண்டுகளில் அரசாங்கத்தில் கூட்டாக இருந்தபோது, அதன் வாக்காளர் தளத்தில் பாதிக்கும் மேலாக இழந்துள்ள கட்சி (1998ல் SPD-பசுமைக் கட்சி கூட்டணி தொடங்கியபோது SPD க்கு 20 மில்லியன் வாக்காளர்கள் ஆதரவு இருந்தது; இந்த எண்ணிக்கை இப்பொழுது 10 மில்லியனுக்கும் குறைவாகிவிட்டது), இதன் சமீபத்திய தேர்தல் தோல்வியை எதிர்கொள்ளும் வகையில் பெரும் கூட்டணியின் வலதுசாரிக் கொள்கைகளை ஒரு மந்திரியாக இருந்து முற்றிலும் ஆதரித்தவரை தலைவராக நியமித்துள்ளது. SPD யின் முக்கிய வேட்பாளராக கூட்டாட்சித் தேர்தலில் இருந்த பிராங் வால்டர் ஸ்ரைன்மயர், இப்பொழுதுதான் வாக்காளர்களால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார் என்றாலும், SPD யின் பாராளுமன்ற (பண்டேஸ்டாக்) பிரிவிற்கு தலைமையை எடுத்துக் கொள்கிறார். இந்த முழு இழிந்த விவகாரமும் பின்னர் "எதிர்த்தரப்பு புதுப்பித்தல்" என்று கூறப்படுகிறது. தலைமை மாற்றத்தின் வடிவமே கட்சியின் வருங்காலத் தலைவர் காப்ரியல் மற்றும் தலைமைச் செயலர் நேஹ்ல்ஸ் என்பவர்களின் தலைமையில் இருக்கும் புதிய கட்சித் தலைமையின் அரசியல் பொருளுரை, நிலைப்பாடு பற்றி அதிகம் கூறுகிறது. இவர்கள் தேர்தலில் மிக மோசமான தோல்வி உட்பட ஒவ்வொரு அரசியல் நிகழ்வையும் ஒரே கண்ணோட்டத்தில் இருந்து, தங்களின் சொந்த பிழைப்பு அடிப்படையில் பார்க்கும் கட்சியின் அடுக்கைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். அரசியல் கருத்துக்கள், கொள்கைகள் பற்றி நீடித்த நிலைப்பாட்டைக் கொள்வது இவர்களுக்கு முற்றிலும் அந்நியமானதாகும். இன்று எந்தக் கருத்தையும் அவர்கள் கொள்ளத் தயார், நாளை இதற்கு முற்றிலும் எதிரான கருத்தையும் அது தங்களுக்கு நலன்கள் கொடுத்தால் ஏற்கும் தன்மையைக் கொண்டுள்ளனர். இந்தப் பின்னணியில் "இடது" அல்லது "வலது" என்ற முத்திரை உண்மையான அரசியல் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. Sigmer Gabriel இத்தகைய சமூக ஜனநாயக தொண்டர்களின் மாதிரிப் பிரதிநிதியாவார். இப்பொழுது 50 வயதில் இருக்கும் அவர், 18 வயதிலேயே 1977ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்துவிட்டார். அவருடைய கட்சிப் போக்கை உணர இந்த ஆண்டு முக்கியமானது ஆகும். மூத்த சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் வில்லி பிராண்ட் அப்பொழுதும் கட்சித் தலைவராக இருந்தும், அதற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கும் இருந்தார் என்றாலும், உண்மையாக கட்சியில் உந்து சக்தி பெற்றிருந்தது அதிபர் ஹெல்மூட் ஷ்மித் ஆவார். Herbert Wehner உடன் இணைந்து ஷ்மித் 1974 வசந்த காலத்தில் பிராண்டை அதிபர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்படுத்தினார். தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கடுமையான போக்கு வேண்டும் என்று வணிக செல்வாக்குத் திரட்டுபவர்களின் அழுத்தத்தை அடுத்து இது நடந்தது. பல வாரங்கள் நீடித்திருந்த பொதுப்பணி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பரந்த ஆதரவைப் பெற்று, கணிசமான ஊதிய உயர்வுகளைக் கொடுத்திருந்தது.ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மனியின் (GDR) Gunter Guillaume ஒரு ஒற்றர் என்பது வெளிப்பட்டது பிராண்ட்டின் இராஜிநாமாவிற்கு இயக்கம் கொடுத்த செயலாயிற்று. Guillaume அதிபர் அலுவலகத்தின் பிராண்டின் தனி உதவியாளராக இருந்தார். இதன்பின் ஷ்மித் ஒரு அரசாங்கத்தை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் நிறுவினார். அது சமூக வாழ்வின் பரந்த பிரிவுகளில் தொழிலாளர்களுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியது. சோசலிச சார்பு உடைய குழுக்கள், போக்குகள் என்று கட்சியில் இருந்தவை மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்தவை தேடி விரட்டப்பட்டு நசுக்கப்பட்டனர். 1970 களின் பிற்பகுதி ஷ்மித்தின் இடதுகளை துன்புறுத்தும் செயல்களின் உச்சக் கட்டம் ஆகும். பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களும் பரிவாளர்களும் ஏமாற்றத்துடன் சமூக ஜனநாயகக் கட்சியை விட்டு நீங்கினர். இந்நேரத்தில்தான் பசுமைக் கட்சி வெளிப்பட்டது. பின்னர் கட்சி வலதிற்கு மாறியிருந்தாலும், 1970 களின் கடைசியில் பசுமைவாதிகள் நிறுவன உறுப்பினர்களாக, பல ஏமாற்றத்திற்குட்பட்ட சமூக ஜனநாயக வாதிகள், இன்னும் மனிதாபிமான, தாராளவாத சமூகம் வேண்டும் என்று கருதியவர்களை ஈர்க்க முடிந்தது. அத்தகைய சக்திகள்தான் சமூக ஜனநாயக கட்சியில் இருந்து வெள்ளமென வெளிப்பட்டு வருகையில், இளம் Sigmar Gabriel ஷ்மித்தின் தலைமையில் இருந்த கட்சியின் பால் ஈர்க்கப்பட்டார்.காப்ரியல் தன்னுடைய சமூக ஜனநாயகக் கட்சி இளைஞர் அமைப்பான Falcons உடனான தொடர்பை கட்சிக்குள் தன்னை விரைவில் உயர்த்திக் கொள்ளும் விசைப்பலகையாக பயன்படுத்திக் கொண்டார். Goslar பகுதியில் இருந்த மாவட்ட சட்டமன்றத்தின் வழியே அவர் மாநில அரசியல் வட்டங்களில் ஏற்றம் பெற்று, 1990ம் ஆண்டு லோயர் சாக்சனி மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினரானார். இதன் பின் அவர் பாராளுமன்றக் குழுவின் தலைவரானார்; அப்பொழுது மாநிலத்தின் பிரதம மந்திரியாகவும் பின்னர் அதிபராகவும் வந்த கெஹார்ட் ஷ்ரோடருக்கு ஆதரவளித்தார். ஷ்ரோடர் அதிபராக 1998 அக்டோபரில் பதவியேற்றபோது, பின்னர் டிசம்பர் 1999ல் எந்த தேர்தலுக்கும் நிற்காமல் காப்ரியல் லோயர் சாக்சனியின் பிரதம மந்திரியாக ஆனார். "ஷ்ரோடரின் நபர்" என்ற முறையில் அவர் தன்னுடைய ஆசானின் வலதுசாரி கொள்கைகளை தொடர்ந்தார். Volkswagen மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் என்னும் முறையில், அவர் ஜேர்மனியின் மிகப் பெரிய கார் நிறுவனத்தின் செல்வாக்குத் திரட்டும் நபராகவும் இருந்தார். 2002ல் அவருடைய பங்காளியாக இருந்த Ines Kruger VW ல் ஊழியர்கள் துறையில் நல்ல ஊதியம் இருந்த பதவி ஒன்றைப் பெற்றார். இதில் அழுத்தம் ஏதும் தன்னால் கொடுக்கப்படவில்லை என்று காப்ரியல் கூறினார்; பல முறையும் Kurger உடைய நியமனம் தன்னுடைய VW மேற்பார்வைக்குழு அல்லது மாநில அரசாங்கத்தின் தலைவர் என்பவற்றுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். லோயர் சாக்சனியில் மீண்டும் இவர் தேர்ந்தெடுக்கப்பட முடியாததை அடுத்து, காப்ரியல் ஒரு வோல்க்ஸ்வாகன் ஆலோசனை நிறுவனத்தில் 75 சதவிகிதப் பங்கைக் கொண்டிருந்தார் என்பது வெளிப்பட்டது.கெஹார்ட் ஷ்ரோடருடன் நெருக்கமான பிணைப்புக்கள் இருந்தாலும், காப்ரியல் 2003 தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு தந்திரோபாய மாற்றத்தைக் கையாண்டு தன்னை வெளிப்படையாக ஷ்ரோடரின் உத்தியோகபூர்வ "செயற்பட்டியல்" அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்துக் கொண்டார். ஆனால் லோயர் சாக்சனியில் இருந்த வாக்காளர்கள் இதை நன்கு உணர்ந்து இது ஒரு தேர்தல் உத்திதான் என்பதை அறிந்தனர். காப்ரியல் முக்கிய வேட்பாளர் என்ற நிலையில் சமூக ஜனநாயகக் கட்சி 2003ல் அதன் வாக்குத்தளத்தில் 14.4 சதவிகிதத்தை இழந்தது; மாநில நிர்வாகம் கன்சர்வேடிவ் CDU வின் கைகளுக்கு மாறியது. இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் ஷ்ரோடர் காப்ரியேலை பேர்லினுக்கு அழைத்து பெரும் கூட்டணியில் (CDU-SPD-CSU) சுற்றுச்சூழல் மந்திரி பொறுப்பை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். இந்தப் பதவியில் காப்ரியல் தன்னுடைய அரசியல் செல்வாக்குத் திரட்டுதலை பல நிறுவனங்களுக்காக மேற்கோண்டதுடன், அரசாங்கத்தின் சமூக விரோத நடவடிக்கைகளுக்கும் --ஓய்வூதியம் பெறும் வயது 67 என்று உயர்த்தப்பட்டது ஒரு உதாரணம்-- ஆதரவு கொடுத்ததுடன் தன்னுடைய ஒத்துழைப்பை Seehim வட்டம் என்று அழைக்கப்பட்ட சமூக ஜனநாயகக் கட்சியின் வலது சாரிப் பிரிவிற்கும் கொடுத்தார். ஆனால் இதையொட்டி தேர்தல் பிரச்சாரத்தில் இடது போல் காட்டிக் கொள்ளுவதை அவர் நிறுத்திவிடவில்லை; தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு Klaus Wowereit ஐ சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை விவாதிப்பதையும் தடுக்கவில்லை. பின்னர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காப்ரியலுக்கும் அவருடைய சகாக்களுக்கும் மேலே செல்லும் வாய்ப்பாயிற்று. Wowreit, Nahles இருவருமே பல முறையும் தவறுக்கு இடம் கொடுக்கும் வகையில் "இடதுகள்" என்று சமூக ஜனநாயகக் கட்சிக்குள் விவரிக்கப்படுகின்றனர்; ஆனால் பேர்லின் மேயராக கடந்த எட்டு ஆண்டுகள் இருந்த Wowereit நகரத்தின் வரலாற்றிலேயே மிகவும் வியத்தகு செலவினக் குறைப்புக்கள் மற்றும் பொதுநல செலவுகளைக் குறைப்பதற்கு தலைமை தாங்கியுள்ளார்.தலைமைச் செயலர் என்று நியமனம் பெற்றுள்ள ஆண்ட்ரே நேஹ்லஸ் காப்ரியலைவிட 10 ஆண்டுகள் இளையவர் ஆவார்; தன்னை "கட்சி இடதின்" பிரதிநிதி என்றும் முன்வைத்துக் கொள்ளுகிறார். இந்த பதவியின் முழுப் பொருத்தமின்மை இந்த உறுதியான, நம்பிக்கைகளை தொடரும் கத்தோலிக்கர்களின் அரசியல் வளர்ச்சி பற்றிப் பார்த்தால் நன்கு தெளிவாகிறது. இவர் 18 வயதில் சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து கட்சியின் உயர்மட்டத்திற்கு புயலென முதலாளித்துவ மீட்பு ஆண்டில், 1989ல், உயரத் தொடங்கினார். கட்சியில் இவர் அரசியலளவில் முழுமையாக ஒருங்கிணைந்தது, கிழக்கு ஐரோப்பா மற்றும் GDR ல் முதலாளித்துவம் மீள நிறுவப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட சமூகச் சரிவுடன் நேரடியாகப் பிணைந்துள்ளது. 1990களின் இறுதி வரையில் Nahles கட்சியின் இளைஞர் இயக்கத்தின் தலைவராக இருந்து விரைவில் சமூக ஜனநாயகக் கட்சியின் வலதுசாரிக் கொள்களைகளை இடது சொற்றொடர்களால் மூடி மறைப்பது என்பதை விரைவில் கற்றுக் கொண்டார். ஷ்ரோடரின் செயற்பட்டியல் அரசியலை இவர் குறை கூறினாலும், முக்கியமான முடிவுகள் என்று வரும்போது அதற்கு ஆதரவாகத்தான் வாக்களித்தார். இவருடைய பணிகளுக்கு ஈடாக அவர் 2003ல்--ஷ்ரோடர் அரசாங்கக் காலத்திலேயே--கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து கட்சியின் மிக உயர்ந்த அமைப்பான சமூக ஜனநாயகக் கட்சியின் (Presidium) நிலைக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் இவ்வம்மையார் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளார்; சில காலம் பேர்லினில் இருந்த IG Metall அலுவலகத்திலும் செயலூக்கமாக இருந்தார். தலைமைச் செயலர் என்றும் முறையில் Nehles நெருக்கமாக தொழிற்சங்கங்களுடன் செயல்பட்டு தற்பொழுதைய CDU-Free Democratic Party கூட்டாட்சி கூட்டணியின் கொள்கைகளுக்கு தேவையான அரசியல் ஆதரவை உத்தரவாதம் செய்வார். செய்தி ஊடக வர்ணனையாளர்கள் சமூக ஜனநாயகக் கட்சி எதிர்க்கட்சியாக ஆற்ற இருக்கும் பங்கு, கட்சி தன்னை வெற்றிகரமாக புதுப்பித்துக் கொள்ளுமா என்று ஊகங்களை தெரிவிக்கையில், சமூக ஜனநாயகக் கட்சி தலைமை ஏற்கனவே கட்சி அதன் தோல்வியை எதிர்கொள்ளும் விதத்தில் தான் தனது வலதுசாரிப் போக்கை தொடரும் என்பதைத் தெளிவாக்கியுள்ளது. |