Israeli Arabs to launch strike against discriminatory
policies
இஸ்ரேலிய அரேபியர்கள் பாகுபாட்டுக் கொள்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய
உள்ளனர்
By Jean Shaoul
30 September 2009
Use this version
to print | Send
feedback
இஸ்ரேலில் உள்ள 1.4 மில்லியன் அரபு குடிமக்கள் பிரதம மந்திரி பென்யமின் நேடன்யாஹுவின்
அரசாங்கத்துடைய வெளிப்படையான இனவெறி, பாகுபாட்டுக் கொள்கைகளை எதிர்த்து அக்டோபர் 1ம் தேதி ஒரு
நாள் பொது வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளனர்.
இஸ்ரேலில் இருக்கும் அரபு மக்களை பாதுகாக்கும் மையமான மோசாவா மையத்தின்
(Mossawa Center)
இயக்குனர் ஜாபர் பாரா, "நடக்கும் போலீஸ் வன்முறை, உள்ளூர் அரபுக்குழுக்களை பெரிதும் பாதிக்கும் அரசாங்க
வரவு-செலவுத்திட்ட குறைப்பு, சமூக, பொருளாதார பாகுபாடுகள், அரபு சமூகத்திற்கு எதிராக சட்டபூர்வ
பிரிவினையை அதிகப்படுத்தும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மிக அதிகமான சட்டவரைவுகள், அரபு சமூகம்
மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக அரசியல் துவேஷம் மற்றும் புது அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டபின் உள்ள
சூழ்நிலை" ஆகியவற்றை மேற்கோடிட்டுள்ளார்.
"இதை எவரேனும் நிறுத்த வேண்டும்; நடந்தது போதும்; நிறுத்தப்பட வேண்டும்",
"இல்லாவிடின் இது உள்நாட்டுப்போருக்கு வழிவகுக்கும்." என்று அவர் எச்சரித்தார்.
இந்த வேலைநிறுத்தம் வடக்கு இஸ்ரேலில் 2000ம் ஆண்டில் ஆத்திரமூட்டும் விதத்தில்
ஏரியல் ஷரோன் அல்-அக்சா மசூதிக்கு பயணம் செய்து இரண்டு நாட்களின் பின்னர் ஜெருசல மசூதியில் ஆறு
அரேபியர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்த ஒரு பொது வேலைநிறுத்தமான இன்டிபாடா ஆண்டு நிறைவு
தினத்தில் நடக்கிறது. இதற்கு விடையிறுக்கும் வகையில் இஸ்ரேலிய போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 13
அரேபிய ஆர்ப்பாட்டக்காரர்களை, அதிலும் சிலரை மிக அருகாமையில் சுட்டுக்கொன்று, நூற்றுக்கணக்கானவர்களைக்
காயப்படுத்தினர். முதல் தடவையாக பாதுகாப்புப் படையினர் இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கு எதிராக துப்பாக்கியை
பயன்படுத்தினர்.
ஆளும் தொழிற்கட்சி கூட்டணியில் உள்ள மந்திரிகளும் செய்தி ஊடகமும்
ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் "எழுச்சி", "கலகம்" என்று கண்டித்தன. இது நிலைமையை
எரியூட்டத்தான் உதவியது, இன்னும் அதிக கொலைகளுக்கு வகை செய்தது, யூத வெறியர்களால் அரபு கடைகள்,
வீடுகள், தனிநபர்கள் மீது கணக்கிலடங்காத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அரபு சிறுபான்மையினரை பாதுகாக்க
இஸ்ரேலிய அதிகாரிகள் அதிக முயற்சி எடுக்கவில்லை.
1,000க்கும் மேற்பட்ட அரபு இஸ்ரேலியர்கள் இன்டிபாடாவின் முதல் சில
மாதங்களில் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேலில் இருந்த அரேபியக் குடிமக்கள் "உள்ளிருக்கும் பகைவர்கள்",
ஐந்தாம் படையினர் என்றும் பாராளுமன்ற அரேபிய உறுப்பினர்கள் முக்கிய துரோகிகள் என்றும் கண்டிக்கப்பட்டனர்.
படைகளின் தலைமைத் தளபதி மோஷே யாலோன் இஸ்ரேலிய அரேபியர்களை "புற்றுநோய் வெளிப்பாடு" போல்
உள்ளனர் என்று விவரித்தார்.
அப்பொழுது முதல் 27 இஸ்ரேலிய அரபு குடிமக்கள் போலீசாரால்
கொல்லப்பட்டனர். ஒரே ஒரு தண்டனைதான் இதற்கு கொடுக்கப்பட்டது. மஹ்மூத் கானைமை மிக அருகில் இருந்து
தலையில் சுட்டுக் கொன்றதற்காக பெயரளவிற்கு ஒரு 15 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது.
அழுத்தம் அதிகரித்த நிலையில் அரசாங்கம் அக்டோபர் 1, 2000ன் நிகழ்வுகளைப்
பற்றி ஆய்வு செய்ய Orr
ஆணைக்குழுவை நியமித்தது. அது பாதுகாப்புப் பிரிவுகள் எச்சரிக்கை
கொடுக்காமல் உண்மையான தோட்டாக்களை பயன்படுத்தியதையும் மற்றும் இதற்கு இஸ்ரேலின் வடக்கு மாவட்டத்தின்
தளபதி குறிப்பாக இசைவு கொடுத்தார் என்று உறுதிபடுத்தியது.
இஸ்ரேலிய போலீஸ் அதிக வலிமையைப் பயன்படுத்தியது என்று
Orr குழு
குறைகூறியது. ஆனால் எவரும் இதையொட்டி சட்டபூர்வ குற்றச்சாட்டுக்களையோ உள்ஒழுங்கு நடவடிக்கையையோ
எதிர்கொள்ளவில்லை. நெருக்கடியைத் தோற்றுவித்ததில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த அரசியல்வாதிகளை குழு
விட்டுவிட்டது. அதே நேரத்தில் அரேபியத் தலைவர்களை எதிர்ப்புக்களை தூண்டிவிட்டதற்காக குறைகூறியது. போலீஸ்
துறை பொறுப்புக் கொண்டிருந்த உள்துறை பாதுகாப்பு மந்திரி ஷலோமோ பென்-அமி பின்னர் வெளியுறவு மந்திரி
ஆனார்.
ஆனால் உத்தியோகபூர்வமாக
Orr குழு முதல்
தடவையாக அரபு இஸ்ரேலியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர் என்பதை ஒப்புக் கொண்டது.
"அரபுப் பிரிவை அரசாங்கம் நடத்துவது "முக்கியமாக புறக்கணிக்கும், பாகுபாடுகாட்டும் தன்மையைக்
கொண்டுள்ளது." அரேபிய மக்களின் தேவைகளுக்கு நியாயமான, சமமான கவனத்தைக் கொடுக்காததற்காக அது
அரசாங்கத்தைக் குறைகூறி, இந்த பாகுபாடாக நடத்தும் முறைதான் விரக்தியை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டங்களுக்கும்
வழிவகுத்தது என்ற முடிவிற்கு வந்தது.
இஸ்ரேலிய அரேபியர்கள் 1948ல் இஸ்ரேல் நிறுவப்பட்ட பின்னர் அப்பகுதியில் இருந்த
பாலஸ்தீனியர்களின் வம்சாவளியினர் ஆவர். அந்த நேரத்தில் 750,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள்
வெளியேற்றப்பட்டிருந்தனர் அல்லது தாமாகவே தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தொடர்ச்சியான அரசாங்கங்களின்கீழ்
பல தசாப்தங்களாக பாகுபாடு மற்றும் அடக்குமுறையை எதிர்கொண்டதுடன், 1966 வரை இராணுவ ஆட்சியின்
கீழும் இருந்தனர். நாட்டை விட்டு சென்றவர்களின் நிலங்களும் வீடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு
தொடர்ந்து இருந்தவர்களுடைய உடமைகளையும் அரசாங்கம் பறிமுதல் செய்தது. இதன் விளைவாக நிலங்களில் மீது
அரேபியர்கள் கொண்டிருந்த பங்கு 9 சதவிகிதத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 சதவிகிதம் என்று ஆயிற்று.
1967க்கு பின்னர் இஸ்ரேலுடன் சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட கிழக்கு
ஜெருசலத்தில், ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருக்கும் 250,000 அரேபியர்களுக்கு இஸ்ரேலியக் குடியுரிமை
கிடையாது.
இஸ்ரேலிய அரேபியர்களுக்கு நிலத்தை குத்தகைக்கு எடுப்பதும் இயலாமற் போயிற்று.
ஏனெனில் அதில் 93 சதவிகிதம் அரசாங்கம் அல்லது பகுதி அரசாங்க அமைப்புக்களின் உடைமையில் உள்ளன. அவை
அரேபியர்களுக்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ மறுக்கின்றன. நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்ட
அவர்கள், இஸ்ரேலியத் தொழில்துறை, விவசாய பிரிவுகளில் தொழிலாளிகளாகும் கட்டாயம் ஏற்பட்டது.
அவர்களுடைய சக யூத நாட்டினரைவிட மிகக் குறைந்த ஊதியத்தைத்தான் பெற்றனர்.
பல ஆண்டுகளாக யூத நகரசபைகளுக்கு வழங்கப்படுவதிலும் பார்க்க பாதி உதவித்
தொகைகளையும், அரசாங்க மானியங்களையுமே அரேபிய சிறு நகரங்கள் பெற்றன. மக்கள் தொகை ஏழு மடங்கு
அதிகரித்த போதிலும்கூட, புதிய சிறு நகரங்கள் கட்ட அனுமதியோ பணமோ வழங்கப்படவில்லை.
Galilee, Triangle, Negev
ஆகிய அரபு சிறு நகரங்கள், கிராமங்களை சுற்றி அவற்றின் அபிவிருத்தியை
தடுக்கும் நோக்கத்தில் புதிய யூதர்களின் சிறு நகரங்களும் நிலையங்களும் கட்டப்பட்டன. இன்னும் 160,000
பேடுக்கள் (Bedu)
தெற்கு இஸ்ரேலில்
Negev இல் வசிக்கின்றனர். இவர்களில் பாதிப்பேர்
"அங்கீகரிக்கப்படாத குடியிருப்புக்களில்" வசிக்கின்றனர். அங்கு மிக அடிப்படை வசதிகள்கூடக் கிடையாது. பொதுப்
பணிகள் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் இருந்து வந்த பாதிக்கப்பட்ட யூத இஸ்ரேலியர்களை
காட்டிலும் மிகக் குறைவாக இருந்தன.
இஸ்ரேலில் இரண்டு அரேபியக் குழந்தைகளில் ஒன்று வறுமைக் கோட்டிற்குக் கீழே
வசிக்கிறது. மொத்த மக்கள் தொகையில் அவர்கள் 20 சதவிகிதம்தான் என்றாலும், வாழும் குழந்தைகளில்
வறுமையில் இருப்பவற்றில் அரைப்பகுதி அரேபியர்கள் ஆவர். யூத இஸ்ரேலியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே
இருக்கும் இடைவெளி பெருகிக் கொண்டே போகிறது.
கட்டாய இராணுவ சேவையில் இருந்து விலக்கிவைக்கப்பட்டதால், ஆட்சிப் பணித்
துறையிலோ அரசாங்கத் தொழில்களிலோ அதிக அரேபியர்கள் வேலையில் இல்லை. எல்லா பணிகள், வேலைப்
பிரிவுகள் ஆகியவற்றிலும் பாகுபாடு தன்மை உள்ளது. இஸ்ரேலிய அரேபியர்கள் அரசியலிலும்
பாகுபடுத்தப்படுகின்றனர். பெரும் அதிர்ச்சியுண்டாக்கும் சட்டங்களில் ஒன்று 2003ம் ஆண்டு குடியரிமைச் சட்டம்
ஆகும். இது மேற்கு கரை அல்லது காசா பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய அரேபியர்களை திருமணம்
செய்து கொண்டால் தங்கள் கணவன் அல்லது மனைவியுடன் இஸ்ரேலில் வசிக்க வரக்கூடாது எனத் தடை செய்வது
ஆகும்.
அக்டோபர் 1ல் திட்டமிடப்பட்டுள்ள வேலைநிறுத்தம் 2005 க்குப் பின்னர் முதலாவது
ஆகும்; நேட்ரான்யாகு அரசாங்கம், கூட்டிணிப் பங்காளி இஸ்ரேல் பெய்டினுவின் (Israel
Beiteinu) நடவடிக்கைகளால் தூண்டுதல் பெற்றுள்ளது.
அக்கட்சி அரபு இஸ்ரேலிய ஜனத்தொகை மாற்றப்படுவதற்கு ஆதரவு கொடுக்கிறது.
கடந்த சில மாதங்களில், இஸ்ரேல் பெய்டினு நிறைய பாகுபாடு காட்டும், இனவெறி
நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 1948ல் தங்கள் நிலப்பகுதியை இழந்ததைக் குறிக்க
பாலஸ்தீனியர்களால் பயன்படுத்துகின்ற சொல்லான "நக்பா" அல்லது பேரழிவை நினைவுறுத்தும் நடவடிக்கைகளும்
ஆர்ப்பாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டிற்கு விசுவாச உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்
என்ற கட்டாயம்; யூத நாடு என்றவகையில் இஸ்ரேலின் அந்தஸ்தை இல்லாது செய்ய வேண்டும் எனப்படும்
கோரிக்கைகளை சட்ட விரோதமாக்கியது ஆகியவை இதில் அடங்கும்.
இத்திட்டங்கள் பரந்த எதிர்ப்புக்களை அடுத்து கைவிடப்பட்டன, அல்லது
உள்ளடக்கத்தில் தன்மை குறைக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது கல்வி மந்திரியாக இருக்கும்
Gideon Saa
"நக்பா'' என்னும் சொல்லை அரபு பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க முயல்கிறார். அதே நேரத்தில் யூத
மரபு, சியோனிசம் பற்றிய வகுப்புக்களை அறிகமுகப்படுத்துகிறார். பள்ளிகளுக்கான வருங்கால
வரவு-செலவுத்திட்டத்தில் இராணுவப் பணியை செய்ய இருக்கும் மாணவர்களின் சதவிகிதத்துடன் தொடர்புபட்டதாக
இருக்கும். இது அரபுப் பள்ளிகளை பாதிக்கும். இப்பொழுது யூதர்களுடைய பள்ளிகள் அரபு பள்ளிகளைவிட ஒரு
குழந்தைக்கு 9 மடங்கு அதிகமாக நிதி பெறுகின்றன.
வெளியுறவு மந்திரியும் இஸ்ரேல் பெய்டினுவின் தலைவருமான அவிக்டோ லீபமான்
இராஜதந்திர
பணிகளுக்கான பயிற்சி இராணுவ சேவையை முடித்தவர்களுக்கு மட்டும்தான்
இருக்கும் என்று கூறியுள்ளார். வீடுகள்துறை மந்திரி ஆரியல் அத்தியாஸ் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே
பிரிவுபடுத்தல் வேண்டும் என்றும் பெரும்பாலான அரேபியர்கள் வசிக்கும்
Galilee
பகுதியில் "யூதமயமாக்கும்" முயற்சிகளையும் தொடக்கியுள்ளார். இது பாலஸ்தீனியர்களுடன் சமாதான
ஒப்பந்தத்தின்போது நிலப்பரிமாற்றத்தைத் தடுத்துவிடும். இதற்கிடையில் உள்துறை மந்திரி எலி ஜிஸ்கார் அரபு சிறு
நகரங்களில் அலையென வீடுகளை இடித்துத் தள்ளுவதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார்.
போக்குவரத்து மந்திரி இஸ்ரேல் காற்ஸ் தற்பொழுது இடங்களில் பெயர்களை ஹீப்ரூ,
அரபு, ஆங்கில மொழியில் காட்டும் சாலை அடையாளங்கள் இனி ஹீப்ருவில் மட்டும்தான் இருக்க வேணடும் என்று
கோரியுள்ளார்.
அரசாங்க மந்திரிகள் அராப் பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது ஆத்திரமூட்டல் தரும்
வகையில் சொற்தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். அவர்கள் அரசியல் படுகொலைகளுக்கான முறையான இலக்குகளாக
இருக்கலாம் என தெரிவித்தார். லீபமான் கூறினார்: "எமது மத்திய பிரச்சினை பாலஸ்தீனியர்கள் அல்ல; அஹ்மத்
ரிபிதான் [ஒரு அரபு
பாராளுமன்ற உறுப்பினர்],
மற்றும் அவருடைய நண்பர்களும்தான்--அவர்கள் ஹாமாஸ் அல்லது
[இஸ்லாமிய] ஜிகாத் இரண்டும் இணைந்ததைவிட ஆபத்தானவர்கள்."
மோசமாகி வரும் பாலஸ்தீனர்களை அழிக்கும் சூழ்நிலை, இனச்சுத்திகரிப்பிற்கான
கோரிக்கைகள் ஆகியவை இறுதியில் நாட்டின் உண்மையான மக்களை தொடர்ச்சியான இடத்தை விட்டு அகற்றுதல்
மற்றும் அடக்குதல் ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு ஒரு யூதநாடாக இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்டதால்
ஏற்பட்ட விளைவாகும்.
அரபு மக்கள் தனித்தன்மை வாய்ந்த, ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினராக இருக்கும்
வரை அவர்கள் ஆளும் உயரடுக்கினால் பொறுத்துக் கொள்ளப்படுவர். ஆனால் இன்று அவர்கள் இஸ்ரேலின் இருப்பிற்கு
மக்கட்தொகைரீதியாக ஒரு அச்சுறுத்தல் என்று காணப்படுகின்றனர். பாலஸ்தீனர்களின் பிறப்பு விகிதமானது
அவர்களுடைய இஸ்ரேலிய யூதர்களைவிட அதிகமாகும். 2000ம் ஆண்டு 8.2 மில்லியன் மக்கள் இஸ்ரேல் மற்றும்
ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்தனர். அவற்றுள் 40 சதவிகிதத்தினர் பாலஸ்தீனியர்களாவர். 2015 ஐ ஒட்டி, இது
50 சதவிகிதமாக உயரும். அதே நேரத்தில் இஸ்ரேலின் அரபு குடிமக்கள் நாட்டின் மக்கட்தொகையில் 25
சதவிகிதத்தினராக இருப்பர்.
யூத இஸ்ரேலியர்கள் இஸ்ரேல்/பாலஸ்தீனத்தில் விரைவில் சிறுபான்மையாகக்கூடும் என்ற
சூழ்நிலையில் ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில் மேற்கு கரை மற்றும் காசாப் பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும்
இஸ்ரேலிய அரபு மக்களுக்கும் இடையே வேறுபாட்டைக் காண்பது இயலாததாகி வருகிறது.
ஒரு இரு நாடுகள் தீர்வு இஸ்ரேலின் நிதிய உயரடுக்கினால் ஒப்புக் கொள்ளப்படுமேயானால்,
அதற்குக் காரணம் அது "மக்கட்தொகையை ஒட்டி வரும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் என்பதால்தான். தொழிற்கட்சி
முன்வைத்த "சமாதானத்திற்காக நிலம்" என்ற ஒஸ்லோ ஒப்பந்தத்தில் இஸ்ரேலிய அரபுக் குடிமக்கள் ''மாற்றப்படுவது''
என்பது உட்குறிப்பாக உள்ளது. இப்பொழுது இது நேடன்யாகுவின் தீவிர வலது கூட்டணிப் பங்காளிகளின் வெளிப்படைக்
கொள்கை என்று மட்டும் இல்லாமல் அனைத்து உத்தியோகபூர்வ அரசியல் அமைப்பிலும் எதிரொலிக்கிறது.
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, எதிர்க்கட்சியான காடிமாவின் தலைவி
ரிசிப்பி ஒரு பாலஸ்தீனிய நாடு என்பது இஸ்ரேல் அரேபியர்களுக்கு ஒரு "தேசியத் தீர்வை" கொடுக்கும் என்று
பகிரங்கமாக அறிவித்தார். இதன்பின் அவர் "கட்டாயமாக அவர்களை அனுப்புதல்" அல்லது "யூத மற்றும் ஜனநாயக
இஸ்ரேல் நாடு" என்ற விருப்பம் ஏதும் இல்லை என்று மறுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.