பாக்கிஸ்தானில் மதத்தை இழிவுபடுத்துவருக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்புக்கள் பெருகுகின்றன
இந்தக் கோடையில் கிட்டத்தட்ட இனவாத கொலைபோல் முஸ்லிம் அடிப்படைவாதிகள்
பல கிறிஸ்துவர்களை கொன்றபின், "மதத்தை இழிவுபடுத்தும்" நிலைப்பாட்டை தண்டிக்கும் பாக்கிஸ்தானின் கடுமையான
சட்டங்கள் பற்றி மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 1980 களில் அமெரிக்க ஆதரவைப் பெற்றிருந்த தளபதி ஜியா-உல்-ஹக்
"இஸ்லாமிய மயமாக்குதல்" உந்துதலின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்திய இச்சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற
கோரிக்கைகள் வந்துள்ளன. இச்சட்டங்கள் பலமுறை கிறிஸ்துவர்கள், பிற சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள்மீது
விசாரணைகள் நடத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பஞ்சாபின் சிறுபான்மை துறை மந்திரி கம்ரான் மைக்கேல், "நான் உடலைப் பார்த்தேன், சித்திரவதை
அடையாளங்கள் இருந்தன" என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
மதத்தை இழிவு செய்ததாகக் கூறப்பட்டு சிறையில் மர்மமான சூழ்நிலையில் மசி
ஒன்றும் முதன் முதலான இறந்த நபர் அல்ல.
மசியின் குடும்பம் அவரை சியால்கோட்டில் இருந்து 20 கி.மீ. இருக்கும் அவருடைய
சொந்த கிராமத்தில் புதைப்பதற்கு உள்ளூர் அதிகாரிகள் அனுமதி கொடுக்கவில்லை. சியால்கோட்டில் இறுதி
ஊர்வலம் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக மாறி இழிவுபடுத்துதல் பற்றிய சட்டங்கள் கைவிடப்பட வேண்டும், மசி
இறப்பு பற்றி பகிரங்க விசாரணை வேண்டும் என்று கோரிய போது போலீசார் அதை கண்ணீர்ப்புகை குண்டு மூலம்
தாக்கினர்.
சமீபத்திய கிறிஸ்துவ எதிர்ப்பு வகுப்புவாதத் தாக்குதல்கள் கிறிஸ்துவர்கள், மனித
உரிமை ஆர்வலர்கள், இன்னும் பல உழைக்கும் மக்களை பாக்கிஸ்தான் முழுவதும் எதிர்ப்புக்களை நடத்த
தூண்டியுள்ளன. கிறிஸ்துவ தேசியக் கட்சியின் தலைவரான ஜோசப் பிரான்ஸி்ஸ் கருத்தின்படி, "நாங்கள்
பாக்கிஸ்தானை வெறுக்கிறோம். இங்கிருந்து வெளியேற விரும்புகிறோம். சமூகங்களுக்கு இடையேயான உறவு இங்கு
உண்மையில் கொடுரமானது" என்று மக்கள் கூறுவதாகத் தெரிகிறது.
வன்முறையினால் மட்டும் எதிர்ப்பவர்கள் சீற்றம் அடையவில்லை. போலீசார் சிறிதும்
பொருட்படுத்துவதில்லை, சில நேரம் தாக்குதலை நடத்துபவர்களுக்கு ஒத்துழைக்கிறார்கள் என்பதினாலும்
எதிர்ப்பவர்கள் சீற்றம் கொண்டுள்ளனர்.
ஒரு உதாரணத்திற்கு, செப்டம்பர் 16ம் தேதி
The News,
கராச்சிப் போலீசார் லோரன்ஸ் என்னும் கிறிஸ்துவருடைய குடும்பத்தின் பல உறுப்பினர்களையும் கடுமையாகத்
தாக்கினர். இதற்குக் காரணம் இவருடைய குடும்பத்தினர் ஒருவரான 60 வயதான நீரிழிவு நோயாளி அண்டை
வீட்டுக்காரரின் கூரைமீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுவதுதான் காரணம் என்று தகவல் கொடுத்துள்ளது. அந்த
இடத்தில் சில மத நூல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
பாக்கிஸ்தானில் உள்ள மனித உரிமைகள் குழுவின்படி, "இதையொட்டி பெரும்
பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் மத குருமார்கள் கூடி லோரன்ஸின் வீட்டைத் தாக்கினர். இதைப்பற்றி மனித
உரிமைகள் குழு ஒன்று விசாரணை நடத்திவிருகிறது." கராச்சி நகரசபை ஆட்சியை வழிநடத்தும்
Muthahida Qaumi
Movement (MQM) ஐச்
சேர்ந்த யூசுப் ஆஷிக், "இந்த நிகழ்ச்சி பற்றி நேரடி சாட்சியம் இல்லை என்றாலும், கிறிஸ்துவ குடும்பம்
இஸ்லாமியச் சட்டங்களின்படி இழப்பீட்டுத் தொகையை கொடுக்க முடிவு எடுத்துள்ளது. உள்ளூர் மசூதியில் இதைப்
பற்றி தக்க அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது." என்றார்.
பாக்கிஸ்தானில் உள்ள கிட்டத்தட்ட மூன்று மில்லியன் கிறிஸ்துவர்கள் நாட்டின் மொத்த
மக்கள் தொகையில் 2 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளனர். பெரும்பாலான கிறிஸ்துவர்கள், 19ம் நூற்றாண்டின்
பிற்பகுதியிலும், 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தீண்டத்தகாதவர்கள் என்று
இருந்தவர்களின் வழித் தோன்றல்களாவர். இந்த மத மாற்றங்கள் ஓரளவேனும் அவர்களுடைய சமூகப்
பொருளாதார அந்தஸ்த்தை உயர்த்தி சாதி அடக்குமுறையில் இருந்து தப்பும் முயற்சிகள் ஆகும்.
பிராம்மண ஹிந்து பிரிவுதான் மத வழியில் தீண்டாமைக்கு ஒப்புதல் கொடுத்தாலும்,
காலனித்துவ இந்தியாவில் வசதி உடைய முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்கள் சாதிப் பிளவுகளை செயல்படுத்தினர்.
இன்றைய பாக்கிஸ்தானின் கிறிஸ்துவர்கள் வர்க்க மற்றும் சாதி அடிப்படையிலான எதிர்ப்புணர்வை சமாளிக்க
வேண்டும். அவர்கள் பல நேரமும் "தோட்டிகள்" என்று அவர்களுடைய முன்னோர்கள் செய்து வந்த இழிந்த
பணிகளைச் சுட்டிக்காட்டி ஏளனப்படுத்தப்படுகின்றனர்--அப்பணிகள் பெரும் வறுமையினால் இன்றும் பலராலும்
தொடர்ந்து செய்யப்படுகின்றன.
இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கினால் 20ம் நூற்றாண்டின் முதற்
பகுதியில் நடத்தப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்று பிரிட்டிஷ் இந்தியாவை உலுக்கி, 1947ல்
பிரிவினையை பிரிட்டிஷ் மேற்பார்வையில், ஒரு வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் பாகிஸ்தான் மற்றும்
முக்கியமான ஹிந்துப் பெரும்பான்மையைக் கொண்ட இந்தியா என்ற இரண்டு சுதந்திர முதலாளித்துவ நாடுகள்
உருவாக்கப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டதன் தவிர்க்க முடியாத விளைவுகளே மதவெறியும் மதக்குறுங்குழுவாதமும்.
பிரிவினையின் உடனடி விளைவு பாரிய வகுப்புவாதக் கலவரக் கொடுமைகள் ஆகும்; இதில் இரண்டு மில்லியன் மக்கள்
இறந்தனர், 12 மில்லியனுக்கும் மேலானவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம் பெயர நேரிட்டது..
கிட்டத்தட்ட அனைத்து ஹிந்துக்களும் சீக்கியர்களும் இரண்டாக்கப்ட்ட பாக்கிஸ்தான்
நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்து தப்பியோடினர்; மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வட இந்தியாவில் இருந்து
பாக்கிஸ்தானில் அடைக்கலத்தை நாடினர்.
இதற்கு மாறான நிலையில், கிறிஸ்துவர்கள் அதிக அளவில் பாக்கிஸ்தானை விட்டு
வெளியேறவில்லை; இதையொட்டி பின்னர் நாட்டின் மிகப் பெரிய மத சிறுபான்மையினர் ஆயினர். இதற்குப் பல
காரணங்கள் உண்டு. "பாக்கிஸ்தானை நிறுவிய" முகம்மது அலி ஜின்னா, ஒரு சிறிய கிறிஸ்துவ உயரடுக்கின் நட்பைப்
பெரிதும் விழைந்தார். இஸ்லாம் ஆபத்தில் உள்ளது, இஸ்லாமும் இந்து மதமும் சேர்ந்து இருக்க முடியாத,
பொருத்தமற்ற மதங்கள் என்று வலியுறுத்திபோதே, ஜின்னா கிறிஸ்துவர்கள் பாக்கிஸ்தானில் சம உரிமையுடன் வாழ
முடியும் என்று வலியுறுத்தினார். வறியவர்களில் மிக வறியவர்களாக இருந்த பாக்கிஸ்தானின் கிறிஸ்துவர்கள் உரிய
தொடர்பு, போக்குவரத்து நுட்பம், நிதிய இருப்புக்கள் என்று 1947-48 ல் நாட்டைவிட்டு வெளியேறும்
வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தனர்.
சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவை போலவே பாக்கிஸ்தானிலும், முதலாளித்துவம்
மக்களின் அடிப்படை தேவைகளை அது பூர்த்தி செய்ய இயலாததால் ஏற்பட்ட சமூக அதிருப்தியை திசை திருப்பவும்,
தகர்க்கவும், மற்றும் 1947ல் தோற்றுவிக்கப்பட்ட போட்டி நாடுகளுக்கு எதிரான பூகோளஅரசியல்
போராட்டத்திற்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும் வகுப்புவாதத்தை ஒரு வழிவகையாகப் பயன்படுத்திக் கொண்டது.
ஜியா-உல்-ஹக்கின் சர்வாதிகாரத்தின்கீழ், பாக்கிஸ்தானிய அரசியல் மற்றும் சமூகம்
இன்னும் கூடுதலான வகுப்புவாதத்தைக் கொண்டது. அதையொட்டி பாக்கிஸ்தானிய மக்களுக்கு பேரழிவுதரும்
விளைவுகள்தான் ஏற்பட்டன. இஸ்லாமியக் கட்சிகள் மற்றும் முஸ்லிம் சமயகுருக்களை தொழிலாள வர்க்கத்திற்கு
எதிராக ஒரு பெரிய தடுப்பாக ஜியா வெளிப்படையாள வளர்த்தார். அமெரிக்கா மற்றும் அதன் சவுதி நட்பு
நாடுகளுடன் சேர்ந்து பாக்கிஸ்தானிய அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீனுக்கு ஆயுதம் கொடுத்து இஸ்லாமியப்
போராளிகளை பாக்கிஸ்தானின் முதலாளித்துவ பூகோள-அரசியல் மூலோபாயத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக
ஆக்கியது. கல்வி, சுகாதாரத்திற்கு அரசாங்கம் செலவழிக்க வேண்டியதின் மாற்றீடாக மத பள்ளிகள் மற்றும் சமூக
பணிகளையும் ஜியா செய்தார்.
ஜியாவின் கீழ்தான் பாக்கிஸ்தான் அதன் கடுமையான மத இகழ்வு பற்றிய சட்டங்களை
வளர்த்தது. 1982ம் ஆண்டு குற்றவியல் சட்டத் தொகுப்பில் 295-
க்கு மாறிவிட்டனர். பல இஸ்லாமியக் கட்சிகளும் இழிவு சட்டங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளன.
பாக்கிஸ்தானிய சமூகத்தை எதிர்கொண்டிருக்கும் பொது நெருக்கடியின் ஒரு
அடையாளம்தான் வகுப்புவாத வன்முறை ஆகும். நாட்டின் பொருளாதாரம் மிகக் கடுமையாக உலக நிதிய
கரைப்பினால் தாக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF)
சமீபத்தில் இன்னும் ஒரு $3.2 பில்லியனை பாக்கிஸ்தானுக்கு ஒதுக்கியது; இதற்கு ஈடாக அரசாங்கம் எரிபொருள்
மானியத்தை கொடுத்தலை அகற்ற வேண்டும், வரிகள் மூலம் வருவாயை உயர்த்த வேண்டும், மற்றும்
வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை குறைக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் சுமத்தியுள்ள கடும் சிக்கன
நடவடிக்கைகள் பாக்கிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள்மீது கடுமையான சேதத்தைத்
தொடர்ந்து ஏற்படுத்தும். பாக்கிஸ்தானியர்களில் பெரும்பாலானவர்கள் நாள் ஒன்றுக்கு $2 க்கும் குறைவான
பணத்தில் வாழ்கின்றனர். பொதுக் கல்வி, சுகாதாரப் பணிகள் ஆகியவற்றை பெறுவதற்கு முடியாத நிலை தவிர்க்க
முடியாமல் பெரும்பாலான மக்களுக்கு ஒரு அவலமான வாழ்க்கை நிலை என்றுதான் ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் வாடிக்கை நாடு என்று தொடக்கத்தில் இருந்தே இருக்கும்
பாக்கிஸ்தானும் அதன் முதலாளித்துவ உயரடுக்கும் வெளிசக்திகள்மீது, குறிப்பாக வாஷிங்டன் மீது மிக அதிகம்
நம்பிக்கை கொண்டுள்ளன.
இப்பொழுது பாக்கிஸ்தானிய அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக
தன்னுடைய மக்களின் ஒரு பெரும் பகுதியின்மீதே கீழ்ப்படிந்த முறையில் ஒரு போரை அறிவித்தள்ளது.
அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு என்பது பாக்கிஸ்தான மக்கள் கட்சி (PPP)
தலைமையின்கீழ்
தீவிரமாகியுள்ளது--இக்கட்சிதான் கடந்த காலத்தில் ஒரு சோசலிசக் கட்சி என்றும் பாக்கிஸ்தானிய
தாராளவாதத்தின் இழிந்த, வெற்றுத் தன்மையை உருவகப்படுத்தி நின்றது.
மத இழிவு பற்றிய சட்டங்கள் பாக்கிஸ்தானில் உள்ள ஜனநாயக விரோதத் தன்மையில்
ஒரு உதாரணம்தான். பாக்கிஸ்தானில் அரசியல் அதிகாரம் பெரும்பாலும் அமெரிக்க ஆதரவு பெற்ற
இராணுவத்திடம்தான் உள்ளது. ஆனால் பல அரசியல்வாதிகளும் பிற்போக்குத்தன மத, தேசியவாத, இன-மொழி
உணர்வுகளுக்கு அழைப்புவிடுகின்றனர். அரசியல்வாதிகளும் இராணுவமும் இதையொட்டி தற்பொழுது உள்ள பெரும்
சமத்துவமற்ற சமூகப் பொருளாதார ஒழுங்கை நிலைநிறுத்துவதில்தான் உறுதியாக உள்ளனர்.
மசூதியையும் அரசாங்கத்தையும் பிரித்தல், நிலப்பிரபுத்துவத்தை அழித்தல் ஆகிய
அடிப்படை ஜனநாயக கடமைகளை தீர்ப்பதற்கான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான பெரிய
போராட்டத்துடன்தான் பிணைந்துள்ளது. பாக்கிஸ்தான் தொழிலாளர்களும் தெற்கு ஆசியா முழுவதும் இருக்கும்
அவர்களுடைய சக தொழிலாளர்களும் மத, இன வேறுபாடுகளைக் கடந்து பாக்கிஸ்தானிலும், அப்பகுதி முழுவதும்
சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக ஒன்றுபட வேண்டும்.