World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Indian drought exacerbates social crisis இந்தியாவில் வரட்சி சமூக நெருக்கடியை அதிகரிக்கிறது By Deepal Jayasekera ஒரு மோசமான பருவமழைத் தோல்வியினால் ஏற்பட்டுள்ள தற்போதைய இந்திய வறட்சி நிலை மில்லியன் கணக்கான பெரும் திகைப்புடன் இருக்கும் வறிய விவசாயித் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கு பெரும் பாதிப்பைக் கொடுத்துள்ளது. இந்தியாவின் கிராமப் புறத்தின் பெரும் பகுதியில் நீண்டகாலமாக இருக்கும் பட்டினி மற்றும் ஊட்டமின்மை ஆகியவற்றை வரட்சி அதிகப்படுத்தியுள்ளது. ஆயினும்கூட இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கமோ அல்லது நாட்டிலுள்ள பல மாநில அரசாங்கங்களோ பெரும் அவசரத் தன்மையுடன் அதை எதிர்கொள்ளவில்லை. இந்திய அரசாங்க வானிலைத் துறைக் கருத்தின்படி இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை, பொதுவாக ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரை நீடிக்கும் இம்மழை, நீண்ட கால சராசரியை விட 23 சதவிகிதம் குறைவாக உள்ளது. இது 1972ல் இருந்து மிகக் குறைந்த மழை அளவு ஆகும்; அப்பொழுது மொத்தப் பற்றாக்குறை 24 சதவிகிதமாக இருந்தது. ஹரியானா, பஞ்சாப், சண்டிகர், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு, காஷ்மீர், ராஜஸ்தான் மாநிலங்களை கொண்டுள்ள வடமேற்கு இந்தியாவில், மழைப் பற்றாக்குறை இன்னும் கடுமையாகும் --மகத்தான அளவு 36 சதவிகிதம் ஆகும். பிகார், மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை அடங்கிய வடகிழக்குப் பகுதியில் மழைப் பற்றாக்குறை 27 சதவிகிதம் என்று பதிவாகியுள்ளது. பல பகுதிகளில், குறிப்பாக தென்னிந்தியாவில், சமீபத்திய வாரங்களில் மிக அதிக மழையைப் பெற்றாலும், தற்போதைய பருவத்தில் வரட்சியின் மோசமான பாதிப்பை மாற்ற முடியாமல், தாமதப்பட்டுத்தான் பெரும்பாலான இடங்களில் மழை வந்துள்ளது. மேலும் கர்னாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பெய்துள்ள பெரும் மழை, வெள்ளத்திற்கு வழிவகுத்து நூற்றுக் கணக்கான இறப்புக்கள், ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்தல் ஆகியவற்றை ஏற்படுத்திவிட்டது. இந்தியாவில் உள்ள மொத்தம் 626 மாவட்டங்களில் 246 ஐ UPA அரசாங்கம் "வரட்சி போன்ற நிலை" இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், இந்திய வேளாண்மை அமைச்சகத்தின் வலைத் தளத்தை பார்த்தால் இந்தியாவில் ஒரு கடுமையான வறட்சி நிலவுகிறது என்பதை எவரும் அறிய முடியாது. மாறாக அமைச்சகத்தின் வலைத் தளம் பசுமையான வயல்கள், நீரில் மூழ்கியிருக்கும் நாற்றுக்கள் ஆகியவற்றின் படங்களைத்தான் காட்டுகிறது. இவ்விதத்தில் ஒரு மலர்ச்சியான சித்திரம் கொடுக்கப்பட்டாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வறட்சி கடுமையாக பாதித்துள்ளது--இந்தப் புள்ளி விவரத்தை பற்றித்தான் இந்திய ஆளும் உயரடுக்கு மிகவும் அக்கறை கொண்டுள்ளது. நிதி மந்திரி பிரணாப் முக்கர்ஜியின் கூற்றுப்படி விவசாய உற்பத்தியில் வறட்சி உந்துதல் பெற்ற சரிவு இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் 1 சதவிகிதத்தை குறைத்துவிடும்; இது 2009-10 நிதிய ஆண்டின் இந்த மற்றும் அடுத்த காலாண்டிற்குப் பொருந்தும். நாட்டின் மொத்த தொழிலாளர் தொகுப்பில் பாதிக்கும் மேலானதைப் பயன்படுத்தும் விவசாயம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. ஏப்ரல்-ஜூன் 2009 காலாண்டில் பதிவான 6.1 சதவிகித வளர்ச்சிகூட இந்த நிதியாண்டின் அடுத்த பகுதிகளில் தக்க வைக்கப்படுமா என்பது பற்றி அரசாங்கம் இப்பொழுது சந்தேகிக்கிறது. 2009-2010 ல் 6 சதவிகித வளர்ச்சிவீதம் என்று அரசாங்கம் கணித்திருந்தது, 2004 தொடங்கி நான்கு ஆண்டுகளாக இந்தியா பதிவு செய்துவந்த 9 சதவிகிதத்திற்கும் அதிகமான வளர்ச்சியில் இருந்து கடுமையான சரிவு ஆகும். "ஏற்றுமதிகள், வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவற்றின் குறைவு நிதானமாகியுள்ளன, முடிந்துவிட்டது என்று கூட சொல்லலாம்" என்று Moody's Economy.com ஐ சேர்ந்த Sherman Chan கூறியுள்ளார். "ஆனால் வரட்சி ஒரு புதிய சவாலாக இந்தியாவில் வெளிவந்துள்ளது. நாட்டில் கிட்டத்தட்ட பாதிப் பகுதி வரட்சிக்கொப்பான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டபின், விவசாய உற்பத்தி வரவிருக்கும் மாதங்களில் ஆண்டு அடிப்படையில் சரியத்தான் செய்யும். கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் இந்தியாவில் அரிசியை மிக அதிக உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்றாகும். வரட்சி கரும்பு, நெல், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றின் விளைச்சலைச் சேதப்படுத்தியுள்ளது; இதையொட்டி கோடை அறுவடை காலத்தில் மிகப் பெரிய 20 சதவிகிதச்சரிவு ஏற்பட்டது. ஆகஸ்ட் 28 ஐ ஒட்டி, நெல் விதைக்கப்பட்ட பகுதிகள் 28.9 மில்லியன் ஹெக்டர்கள், சராசரியைவிட 26 சதவிகிதக் குறைவு என்றும், போன ஆண்டு மட்டத்தைவிட 19 சதவிகிதம் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சரிவு கடந்த ஆண்டு சற்றே மட்ட ரக நெல், கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை 20, 19 மற்றும் 6 சதவிகிதச் சரிவு என்று காட்டுகிறது. வட இந்தியாவில் இருக்கும் பண்டேல்கண்ட் பகுதியில், தோல்வியுற்ற பயிர்கள் கடனில் மூழ்கியுள்ள விவசாயிகளை இன்னும் பெருந் திகைப்பிற்கு உட்படுத்திய விதத்தில் சிலர் தங்கள் மனைவிகளை வட்டி கொடுப்பவர்களுக்கு விற்கும் நிலைக்குத் தள்ளித்தான் தங்கள் கடன்களை குறைக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. AFP எனப்படும் Agence Frnce Press இடம் ஒரு சமூக ஆர்வலர், "இது சிலகாலமாகவே இங்கு நடைபெற்று வருகிறது, ஆனால் மக்கள் இதைப்பற்றிக் கூறுவதற்கு தயக்கப்பட்டிருந்தனர்" என்றார். சிறு விவசாயிகளில் பலருக்கு வங்கிக் கடன்கள் மறுக்கப்படுகின்றன; இதற்குக் காரணம் வங்கி அதிகாரத்துவத்தினர் கோரும் பல உடைமைப் பத்திரங்களை அவர்கள் கொடுக்க முடியாததுதான். இதன் விளைவாக அவர்கள் தனியார் கடன் கொடுப்பவர்களின் பிடியில் சிக்கிப் போகின்றனர்; அவர்கள் மிகப் பெரிய வட்டிவிகிதத்தால் இவர்களைப்பிழிந்து எடுப்பதுடன், விவசாய உற்பத்தி இல்லாவிடினும் பணத்தைத் திரும்பப் பெற விவசாயிகளை விரட்டுகின்றனர். கடன்கள் மற்றும் நிலங்கள் இழப்பு என்ற அச்சுறுத்தல்கள் ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஒரு தசாப்தத்தில் தற்கொலைக்கு தூண்டியுள்ளன. சமீபத்தில் ஆந்திரப் பிரதேச அதிகாரிகள் 20 விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டது வரட்சியால் "ஏற்படுத்தப்பட்டவைதானா" என்று விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். வரட்சித் தூண்டுதலால் வந்துள்ள கோடை அறுவடையின் சரிவு ஏற்கனவே முக்கிய உணவுப் பொருட்களின் விலையை தீவிரமாக அதிகப்படுத்தி, அதையொட்டி கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறியவர்களுக்கு பேரழிவு விளைவை ஏற்படுத்தியுள்ளது. "அரிசி உற்பத்தியில் எதிர்பார்க்கப்படும் குறைவினால், அது சந்தையில் கிடைப்பது, அதன் விலை ஆகியவற்றின்மீது அதிக அழுத்தம் இருக்கும்" என்று விவசாயத்துறை மந்திரி ஷரத் பவார் கூறியுள்ளார். வணிக அமைச்சகத்தின் கருத்துப்படி மார்ச் மாத இறுதியில் இருந்து சர்க்கரை வில 29.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது, பருப்பு வகைகள் 17.8 சதவிகிதமும் கறிகாய்கள் மற்றும் உருளைக்கிழங்கு கிட்டத்தட்ட இரு மடங்கும் விலை உயர்ந்து விட்டன. சமீபத்திய மாதஙக்களில் மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index)-- நிறுவனங்கள் மற்றும் பெரிய பகிர்வாளர்கள் மற்றும் பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் (மூலப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், உணவுப்பொருட்கள் என) மொத்தமாக வாங்குபவர்கள் கொடுக்கும் விலையைப் பிரதிபலிப்பது--எண்ணெய் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலை உலக மந்த நிலையில் சரிந்ததின் விளைவினால் சரிந்துவிட்டது. ஆனால் விவசாயத் தொழிலாளர்களுடைய நுகர்வோர் விலைக் குறியீடோ (CPI) அதிர வைக்கும் விததிதல் ஜூலை மாதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 12.9 சதவிகிதம் உயர்ந்தது. இந்திய விவசாயம் நீண்ட காலமாகவே நெருக்கடியில் சிக்கியுள்ளது; பேராசை பிடித்த பெருவணிகக் கொள்கைகளை தொடர்ச்சியான இந்திய அரசாங்கங்கள் பின்பற்றுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பெருவணிக நிறுவனங்களுக்கான வரிகள் பெரிதும் குறைக்கப்பட்ட அளவில், இந்திய அரசாங்கம் உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோரும் உள்கட்டுமானத் திட்டத்திற்கு நிதியை அள்ளிக் கொடுத்துள்ளது. இது விவசாயத்துறைக்கு தேவையான பாசன வசதித் திட்டங்களின் இழப்பில் வந்துள்ளது; அவைதான் பருவமழையின் நிதானமற்றப் போக்கைக் கட்டுப்படுத்துபவை ஆகும். தற்போதைய வரட்சி இத்தகைய பரந்த, பெரிய பாதிப்பைக் கொடுக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியாவின் 70 சதவிகித மக்கள் விளைநிலைத்தை நம்பியுள்ளனர்; அவையோ பாசன வசதிகளைக் கொண்டு இருக்கவில்லை, அதாவது மழையையே பெரிதும் நம்பியுள்ளன; மக்களோ ஏற்கனவே கடின சூழ்நிலையில் வசிக்கின்றனர். இந்தியர்களில் 28.3 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்வதாக திட்டக்குழு கூறியுள்ளது; இது வெறும் உயிரும் உடலும் ஒட்டியிருப்பதற்கு மட்டுமே போதுமானதாகும். ஆனால் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் சமீபத்தில் நியமித்த வல்லுனர் குழு, சத்து அளவான கலோரிக் கணக்கை அடிப்படையாக கொண்டால் இந்த எண்ணிக்கை 60 சதவிகிதத்தில் இருக்கும் என்று கூறியுள்ளது. "இந்தியாவில் ஏழைகள் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையைவிட மக்களிடையே உணவுப் பற்றாக்குறை என்பது இரு மடங்காக இருக்கும்" என்று அறிக்கை கூறியுள்ளது. இந்தியாவின் புதிய தாராளவாதச் சீர்திருத்தத்தின் முதல் தசாப்தத்தில் தலா தனிநபர் கலோரி நுகர்வு, குறிப்பாக தானியங்களில் வறியவர்களிடையே பெரிதும் குறைந்துவிட்டது என்று அறிக்கை ஆவணமிட்டுக் காட்டியுள்ளது. 2001 க்கு பிற்பட்ட காலத்தில் விரிவான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. UPA அரசாங்கம் வறட்சியின் பாதிப்பைக் குறைமதிப்பீடு செய்ய முயல்கிறது; அரசாங்கத்திடம் போதுமான முக்கிய தானிய இருப்புக்கள் உள்ளன, பெரும் விலை உயர்வுகளை அது தடுத்து விடும் என்று கூறுகிறது. அரசாங்கத்திடம் இருக்கும் 17.7 மில்லியன் டன்கள் உபரி கோதுமை, 14 மில்லியன் டன் அரிசி ஆகியவற்றைச் சுட்டிக் காட்டும் நிதி மந்திரி பிரணாப் முக்கர்ஜி "உணவு தானியம் கிடைப்பது பற்றி அதிக கவலை கொள்ளத் தேவையில்லை" என்றார்.ஆயினும்கூட மேற்கூறிய புள்ளிவிவரங்கள் காட்டுவது போல் அதிக விளைச்சல் இருக்கும் நேரங்களில்கூட மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை நல்ல உணவு உட்கொள்ளும் வசதி இல்லை. வரட்சியை ஒட்டி நாட்டை எதிர்கொண்டிருக்கும் இத்தீவிரப் பிரச்சினைகளை ஆராய்வத்கு பதிலாக, காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் வெகுஜனத்திருப்தி கண்துடைப்பு வேலைகளை செய்ய முற்பட்டுள்ளது. அது மந்திரிகளும் உயர் அதிகாரிகளும் விமானத்தில் வணிகப் பிரிவிற்கு பதிலாக சாதாரண வகுப்பில் செல்ல வேண்டும், ஐந்து நட்சத்திர விடுதிகளில் மாநாடுகள் நடத்தப்படக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பதுடன், அவர்களுடைய ஒரு நாள் படியையும் 20 சதவிகிதம் குறைத்துக் கொண்டுள்ளது. |