WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Wall Street lauds FDIC plan to replenish bank deposit
insurance fund
FDIC திட்டமான வங்கி
சேமிப்பு காப்பீட்டு நிதியை நிரப்புதலுக்கு வோல் ஸ்ட்ரீட் பாராட்டுத் தெரிவிக்கிறது
By Barry Grey
1 October 2009
Use this version
to print | Send
feedback
அமெரிக்க கூட்டாட்சி சேமிப்பு காப்பீட்டு நிறுவனம் (FDIC)
செவ்வாயன்று மில்லியன் கணக்கான அமெரிக்க நுகர்வோர்களின் வங்கி சேமிப்புக்களுக்கு 250,000 டாலர் வரை
உத்தரவாதம் செய்யும் அதன் காப்பீட்டு நிதி இந்த வாரம் எதிர்மறையில் விழுந்துவிடும் என்று அறிவித்துள்ளது. அதன்
காப்பீட்டு நிதி, ஜனவரி 2008ல் இருந்து 115 வங்கிகள் முற்றிலும் திவாலாகிப் போய்விட்ட நிலையில் அதன் காப்பீட்டு
நிதி 45 பில்லியன் டாலர்
ரொக்க உட்செலுத்தலை காலாண்டுக் கட்டணம் முன்கூட்டிப்பெறுதல் என்ற முறையில் பெறவேண்டும் என்றும் வங்கிகள்
அந்நிதியை செலுத்தம் கட்டாயம் உண்டு என்றும் இந்த அமைப்பு திட்டம் என்ற முறையில் கூறியுள்ளது.
FDIC நிர்வாகக்குழுக் கூட்டத்தை
அடுத்து, இந்த அமைப்பு வங்கிகள் தங்கள் இந்த ஆண்டின் எஞ்சிய பகுதி மற்றும் 2010, 2011 மற்றும் 2012
க்கு டிசம்பர் 31ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தற்காலிக ரொக்க உட்செலுத்துதல்
வந்தாலும் FDIC
அதன் சேமிப்பு காப்பீட்டு நிதி பெயரளவிற்கு எதிர்மறையில்தான் 2012 வரை இருக்கும் என்றும் 2017 வரை "வசதியான"
அளவுகளுக்கு மீளாது என்றும் கூறியுள்ளது.
காப்பீட்டு நிதியின் கொடுக்க வேண்டிய நிதிகளில் 32 பில்லியன்
டாலர்
அடங்கியுள்ளது. இதை
FDIC 2010ல்
எதிர்பார்க்கப்படும் வங்கித் திவால்களுக்காக வைத்துள்ளது. செவ்வாயன்று அரசாங்க அதிகாரிகள் வங்கி திவால்கள்
2009ல் இருந்து 2013 வரை FDIC
க்கு 100 பில்லியன் டாலர்
செலவைக் கொடுக்கும் என்றும் இது பல மாதங்களுக்கு முன்பு மதிப்பிடப்பட்டிருந்த
70 பில்லியன் டாலரை விட அதிகம் என்றும்
கூறினர்.
இந்த மதிப்பீடுகள் கூட பெரும் நம்பிக்கை வாய்ந்தவை. புதனன்று சர்வதேச நாணய
நிதியம் (IMF)
அதன் சமீபத்திய "உலக நிதிய உறுதிப்பாட்டு அறிக்கை"யை
கொடுத்தது. இதில் அது உலக நிதிய நெருக்கடியினால் ஏற்பட்ட இழப்புக்கள் 2007-10 காலத்திற்கு 3.4
டிரில்லியன் டாலர்
என்று மதிப்பிட்டு, இதில் பாதிக்கும் குறைவு இதுவரை அடையப்படவில்லை என்றும் கூறியுள்ளது. அமெரிக்காவிலும்
சர்வதேச அளவிலும் வங்கிகள் மகத்தான இழப்புக்களை மோசமான கடன்கள் பற்றி குறிப்பு எழுதாமல்
மறைத்துள்ளதுடன், வணிக மற்றும் சொத்துக்கள், நுகர்வோர் கடன் ஆகிய பிரிவில் அலைபோன்ற ஒரு புதிய பணம்
செலுத்தாதவர்கள் பட்டியல் எதிர்பார்க்கப்படுகிறது.
2008ல் 25 என்பதில் இருந்து இந்த ஆண்டு இதுவரை 95 வங்கிகள்
திவாலாகிவிட்டன. இதைத்தவிர
FDIC தன்னுடைய
"பிரச்சினைக்குரியவை" என்ற பட்டியிலில் 416 வங்கிகளை ஜூன் இறுதியில் கொண்டிருந்தது. இது 15 ஆண்டு
காலத்தில் மிக அதிகமாகும், பட்டியில் இன்னும் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இலையுதிர்காலத்தில் நிதிய நெருக்கடி வெடித்தற்கு முன்
FDIC காப்பீட்டு
நிதியிடம் 50 பில்லியன் டாலருக்கும் மேலாக இருந்தது. ஜூன் முடிவிற்கும் அந்த எண்ணிக்கை 10.4 பில்லியன்
டாலர்
என்று 6.2 டிரில்லியன் டாலர்
மொத்த சேமிப்புக்களுக்கு ஆதரவு கொடுக்குமளவிற்கு குறைந்துவிட்டது.
புதனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
RBC Capital
ல் ஒரு வங்கி பற்றிய பகுப்பாய்வளராக இருக்கும்
Gerard Gassidy ஐ, "நம்முடைய வங்கித் தோல்விகளில்
சில ஏற்கனவே நடந்து விட்டாலும், இன்னும் பல நூற்றுக்கணக்கானவை இந்தச் சுற்றில் தோல்வியுறும்" என்று கூறியதாக
மேற்கோளிட்டுள்ளது.
FDIC யின் 76 ஆண்டு வரலாற்றில்
அதன் சேமிப்பு காப்பீட்ட நிதி பெரிதும் குறைந்துவிட்டமை இது இரண்டாம் தடவையாகும். அதன் நிகர மதிப்பு
1991ல் சேமிப்புக்கள், கடன் நெருக்கடி ஏற்பட்டபோது எதிர்மறையாயிற்று.
1933ம் ஆண்டு அரசாங்கம் சேமிப்புக்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் ஒரு
நடவடிக்கை, அமெரிக்காவை பெருமந்த நிலையில் தள்ளிய வங்கிகளின் ஓட்டம் என்ற அலையைத் தடுப்பதற்கும்
FDIC
நிறுவப்பட்டது. காப்பீடு செய்யப்பட்ட சேமிப்புக்கள் மீதான வரம்பு கடந்த ஆண்டு நிதிய நெருக்கடியின்
உச்சக்கட்டத்தில் 100,000
டாலரில் இருந்து 250,000
டாலர் என்று உயர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கை
செல்வந்தர்களுக்கு உத்தரவாதம் அளித்தல், பெருமுதலீட்டாளர்களின் சேமிப்புக்களுப் பாதுகாப்பு கொடுத்தல்
ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு இருந்தது.
FDIC அதிகாரிகள் செவ்வாயன்று
காப்பீட்டி நிதியின் பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும், சேமிப்பாளர்களுக்கு பாதிப்பு இருக்காது, ஏனெனில்
மத்திய அரசு காப்பீடு கொடுத்திருக்கும் சேமிப்புக்கள் அமெரிக்க அரசாங்கத்தின் "முழு நம்பிக்கை, நாணயம்"
ஆகியவற்றின் ஆதரவைக் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினர். எந்த நேரமும்
FDIC கருவூல
வகை கடன் மூலம் 100 பில்லியன்
டாலர் பெற முடியும் என்றும் இந்த ஆண்டு முன்னதாக
காங்கிரஸ் அது மத்திய கருவூலத்தில் இருந்து 500 பில்லியன் டாலர்
வரை கடன் வாங்க அனுமதித்துள்ளது.
ஆனால்
FDIC நிதி
நடைமுறையில் திவாலாகியுள்ளமை அமெரிக்க அரசாங்கத்தின் நாணயத்தின் மீது சர்வதேச கவலைகளைத்தான்
எரியூட்டும் என்பதுடன் அமெரிக்க டாலரின் மதிப்பையும் இல்லாதொழிக்கும். இதன் மதிப்பு தீவிரமாக உலக நாணய
சந்தைகளில் சமீபத்திய மாதங்களில் குறைந்துள்ளது. அடுத்த தசாப்தத்தில் மத்திய வரவு-செலவுத் திட்டத்தில்
பற்றாக்குறைகள் 9 டிரில்லியன்
டாலராகப் போகக்கூடும் என்று மதிப்பிட்டுள்ள
நிலையில், கடந்த ஆண்டின் போக்கில் மத்திய வங்கி கொடுக்க வேண்டிய திறனுள்ள பணங்கள் இரு மடங்காவதும்,
தேசிய கடனில் மகத்தான ஏற்றமும்,
FDIC யின்
பிரச்சினைகளை அரசாங்கத் திவால் என்ற ஆவியுருவை எழுப்பும் அச்சத்தைத் தோற்றுவிக்கின்றன.
FDIC இந்த நெருக்கடியை
சமாளிக்க கருவூலத்தில் இருக்கும் கடன்வசதியை பெறுவதைக்காட்டிலும் வங்கிகள் முன்கூட்டியே காப்பீட்டு நிதியைக்
கட்ட வேண்டும் என்று கூறியிருப்பதற்கு ஒரு காரணம், அரசாங்கம் விரைவில் சட்டபூர்வ தேசியக்கடன் வரம்பை
அடைந்துவிடும் என்பதாக இருக்காலாம். நிதி மந்திரி டிமோதி கீத்னர் கடந்த மாதம் 12.1 டிரில்லியன்
டாலர்
உச்சவரம்பு இந்த ஆண்டி கடைசிப்பகுதியில் அடைந்துவிடக்கூடும் என்று எச்சரித்தார். ஒபாமா நிர்வாகம் இந்த
கடன் வரம்பை உயர்த்துமாறு காங்கிரஸிடம் வலியுறுத்தி வருகிறது.
இன்னும் கூடுதலான ஆழ்ந்த கருத்து முக்கிய வங்கிகளின் எதிர்ப்பு ஆகும். கருவூலக்
கடன் விருப்பம் மற்றும் மாற்றீடான சிறப்புக் கட்டணம்
FDIC யினால்
வங்கிகள்மீது காப்பீட்டு நிதியை உயர்த்துவதற்கு கடுமையாக எதிர்த்து நின்றன. இரண்டு திட்டத்தில் எதுவுமே
வங்கிகள் மீது அதிக கட்டணங்களை சுமத்தியிருக்கும். மேலும் கருவூலக் கடன் என்பது நிர்வாகிகளின் ஊதியஙகள்
வரம்பு என்பது உட்பட வங்கிகளைக் கட்டுப்படுத்தும் புதிய முயற்சிகளைக் கொண்டுவரக்கூடும் என்றும் அவை அஞ்சின.
மே மாதம் FDIC
ஒரு சிறப்புக் கட்டணத்தை சுமத்தி காப்பீட்டுநிதிக்கு 5.6 பில்லியன்
டாலரை
நிகரமாகக் கொண்டுவந்தது. இம்முறை வங்கிகள் அரசாங்க ரொக்கம், குறைந்தவட்டிக் கடன்கள்,
FDIC
உத்தரவாதம் அளித்திருக்கும் கடன்கள் என்று டிரில்லியன் கணக்கில் பெற்று இருந்தபோதிலும் கடன் கொடுக்கத் தயங்குகின்றன.
செப்டம்பர் 21ம் தேதி
FDIC தலைவர் ஷீலா பயருக்கு அனுப்பிய கடிதத்தில் அமெரிக்க
வங்கியாளர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
Ed Yingling வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குவதற்கு
ஒப்புதல் கொடுத்தார் (இது அவற்றிற்கு வட்டி வகையில் நல்ல இலாபங்களை கொண்டுவரும்); அல்லது
வாடிக்கையான விஷேட கொடுப்பனவு கட்டணத்தை முன்கூட்டியே மற்றொரு கட்டணத்தை சுமத்துவதற்குப் பதிலாக
பெறலாம் என்று கூறினார்.
கடந்த வாரம் பிரதிநிதிகள் மன்றத்தின் வோல் ஸ்ட்ரீட் நலன்களுக்கு எப்பொழுதும்
ஆதரவு கொடுக்கும் நிதிப்பணிகள் குழுவின் தலைவரான மாசாசுசட்ஸைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சிக்காரர் பார்னி
பிராங், பயரிடம், "வங்கிகள் மீது மதிப்பீட்டுக் கட்டணங்களை அதிகரிக்கும் நேரம் இதுவல்ல." என்றார்.
மன்றக்குழுவின் முன் சாட்சியம் கொடுத்த நாணயக் கட்டுப்பாடு அலுவலரும் தேசிய
வங்கிகள் மேற்பார்வையாளரும் FDIC
நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருப்பவருமான John
Dugan, தான் இரண்டாம் சிறப்பு மதிப்பீடுகள் பற்றித் தான்
"பெரிதும் கவலை" கொண்டுள்ளதாக கூறினார்.
முன்கூட்டி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்னும் திட்டத்தைக் கடந்த வாரம்
கொண்டுவந்து FDIC
செவ்வாயன்று கொடுத்த அறிவிப்பையும் வங்கி அதிகாரிகள் பாராட்டினர்.
Bloomberg News
க்கு கடந்த வாரம் அனுப்பிய மின்னஞ்சலில் அமெரிக்க வங்கியாளர்கள் சங்கத்தின் தலைமை பொருளாதார வல்லுனர்
ஜேம்ஸ் செஸன் கூறினார்: "முன்கூட்டி கட்டணம் செலுத்தும் விருப்புரிமை
FDIC க்கு
தேவையான ரொக்கத்தை கையில் கொடுத்து வரவிருக்கும் தோல்விகளை தொழில்துறை மீது ஒரே அடியாகச்
சுமத்தாமல் சமாளிக்க வைக்கிறது."
JP Morgan Chase இல்
பொருளாதார வல்லுனராக இருக்கும் Michael
Feroli,
Bloomberg
இடம் கூறினார்: "முன்கூட்டிய மதிப்புக்கட்டணம் FDIC
க்க சேமிப்பு காப்பீட்டு நிதியை நிரப்புவதுடன், வங்கியின் நிதியச் செயற்பாடுகளையும் நிரந்தராமான
பாதிப்பின்றிப் பார்த்துக் கொள்ளும்." என்றார்.
செவ்வாய் அறிவிப்பைத் தொடர்ந்து
JP Morgan Chase
ன் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் டைமன், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில்
FDIC
திட்டத்தை "அவர்கள் பெரும் நயத்துடன் செய்துள்ள செயல் இது" என்று பாரட்டினார்.
வங்கிகளுக்கும் இன்னும் கூடுதலான மகிழ்ச்சிதான். ஏனெனில்
FDIC திட்டம்
அவர்களை முன்கூட்டி கட்டணங்களை சொத்துக்கள் என்று கணக்கிட வைக்கிறது. பொதுவாக கட்ட வேண்டிய நேரம்
வரும்போது அது செலவு என்றுதான் எழுதப்படும். இதைத்தவிர இது சிக்கலில் உள்ள வங்கிகளை தள்ளுபடி கோரிக்கையை
முன்வைக்கவும் அனுமதிக்கிறது.
இந்த அறிவிப்பைச் செய்ததில்
FDIC தலைவர்
பயர் அவநம்பிக்கையான முறையில் முன்கூட்டிச் செலுத்தும் திட்டம் வரி செலுத்துபவர்களுக்கு ஒரு வரம் என்ற முறையில்
சித்தரிக்க முயன்று கூறினார்: "இந்த வழியைத் தேர்ந்தெடுத்ததில் தொழில்துறை களைப்புற்றிருக்கும் வரி செலுத்துபவரிடம்
வெறுமே தோள்களைத் தட்டி பணத்தைக் கேட்டுக் கொண்டிருக்காது என்பது பொதுமக்களுக்கு தெளிவாகத்
தெரியவரும்."
உண்மையில் வங்கிச் சேமிப்பு காப்பீட்டுத் திட்டத்தின் சரிவிற்கு முக்கிய காரணம்
FDIC
இனதும் ஒபாமா நிர்வாகத்தினதும் கொள்கையான நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட தோல்வியுறும் அமைப்புக்களுக்கு,
மகத்தான உதவித் தொகைகளை அவற்றின் பொறுப்புக்களை கொள்ளும் வங்கிகளுக்கு கொடுப்பதுதான். கடந்த மாதம்
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் FDIC
சிக்கலில் இருக்கும் வங்கிகளை பெரிய நிறுவனங்கள் வாங்கும் வகையில் உதவித் தொகைகள் கொடுப்பதுடன்,
பெருவங்கிகளின் இழப்புத்திறன் முழுவதையும் கிட்டத்தட்ட உறுதி செய்வதும்தான் என்று தகவல் கொடுத்துள்ளது.
இக்கட்டுரை 80 பில்லியன்
டாலர் என
தோல்வியுற்ற வங்கிகளின் சொத்துக்கள் மற்ற வங்கிகளால் வாங்கப்பட்டதில் 95 சதவிகிதத்திற்கு
FDIC
பொறுப்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. ஜேர்னல்
குறிப்பிட்டுள்ளபடி, FDIC
கொள்கையான பொதுச் செலவில் வங்கிகளை எடுத்துக் கொள்ள ஊக்கம் தருவது என்பது, "தேர்ந்தெடுக்கப்பட்ட
டஜன் கணக்கான வங்கிகளுக்கு உதவித் தொகை கொடுப்பது போல் ஆகும்."
|