World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
Britain: Behind the disciplinary action in the Unison trade union பிரிட்டன்: யூனிசன் தொழிற்சங்கத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பின்னணியில் By Julie Hyland பொதுத்துறை தொழிற்சங்கமான யூனிசன் அதன் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கை அரசியல் முன்னோக்கில் சில முக்கியமான பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. ஒரு இரண்டாண்டுகால விசாரணைக்குப்பின், யூனிசன் சோசலிஸ்ட் கட்சியில் இருக்கும் நான்கு உறுப்பினர்களான Glenn Kelly, Onay Kasab, Brian Debus, Suzanne Muna ஆகியோரை பதவிகளில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் இருக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளது. லண்டன் உள்ளூர் தொழிற்சங்க உத்தியோகத்தர்களாக இருக்கும் நால்வரும் தொழிற்சங்க விதிகளை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2007ல் "எவருடைய மாநாடு?" என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரத்தை அவர்கள் யூனிசன் தேசிய மாநாட்டில் சுற்றறிக்கைக்கு விட்டதில் இருந்து குற்றச்சாட்டுக்கள் வெளிவந்துள்ளன. மூன்று குரங்குகளின் படங்களும் "தீமையைப் பார்க்காதே, தீமையைக் கேட்காதே, தீமையைக் கூறாதே" என்ற வாசகங்களும் இருந்த இச்சுற்றறிக்கை மாநாட்டின் மனுக்களை விசாரிக்கும் குழு (Standing Orders Committee) விவாதத்திற்கு அளிக்கப்பட்டிருந்த தீர்மானங்களில் மூன்றில் ஒரு பகுதியை நிராகரித்ததை சுட்டிக்காட்டியுள்ளது. இவை முறையற்றது என்று "விவாதத்திற்குரியதால்" தள்ளப்பட்டுவிட்டதாக கேட்ட துண்டுப்பிரசுரம் மாநாட்டின் செயற்பட்டியலுக்கு மீண்டும் தீர்மானங்களை அனுப்புமாறு கிளைகளைக் கேட்டது. இக்குற்றச் சாட்டுகள் இனவெறித் தன்மை உடையவை என்றும், மனுக்களை விசாரிக்கும் குழுவின் "நாணயத்தின்" மீதான தாக்குதல் என்றும் யூனிசன் குற்றம் சாட்டி, இது "விதிகளை மீறிய செயல்" என்றும் குறிப்பிட்டது. இனவெறி என்ற குற்றச்சாட்டு நகைப்பிற்கு இடமானது. இருந்தபோதிலும், உண்மையான இனவெறித் தன்மை இல்லை என்பதை விசாரணை ஏற்றுக் கொண்டாலும், நான்கு பேரும் "உறுப்பினர்களுக்கு இனவழியில் பாதிப்பைக் கொடுத்த" ஆவணத்தைத் தயாரித்த குற்றம் கொண்டவர்கள் என்று விசாரணை கண்டறிந்தது. துண்டுப்பிரசுரம் தயாரிக்கவும், வினியோகிக்கவும் கிளையின் நிதிகளைத் தவறாகப் பயன்படுத்திய குற்றமும் Debus இடம் இருந்தாகக் கூறப்பட்டுவிட்டது. அகற்றப்பட்ட நான்கு சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஊழிய நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு எதிரான பிரச்சாரம் சங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து இயக்கப்பட்டது என்ற சாட்சிகளை விசாரித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக பல சோசலிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினர்களும் யூனிசனில் இருந்து அற்ப குற்றச்சாட்டுக்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிகாரத்துவத்தின் தற்காப்பு நான்கு சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அரசியல் உந்துதல் பெற்ற போலிக் குற்றச்சாட்டின் பாதிப்பாளர்கள் என்பது தெளிவானாலும், இப்பூசல் தொழிற்சங்க அமைப்புக்குள்ளேயே இருக்கும் மோதலின் தன்மையைத்தான் அதிகம் காட்டுகிறது. ட்ரொட்ஸ்கிச அமைப்புக்கள் என்று கூறிக்கொண்டாலும் சோசலிஸ்ட் கட்சியும் (SP), சோசலிச தொழிலாளர் கட்சியும் (SWP) தற்போதைய தொழிற்சங்கங்களில் ஒரு சோசலிச எதிர்ப்போக்கு போல் செயல்படவில்லை. இரு அமைப்புக்களுமே தங்கள் மூலத்தை 1950களில் லியோன் ட்ரொட்ஸ்கி நிறுவியிருந்த நான்காம் அகிலத்திலிருந்து வலதுசாரி முறிவுகளை கொண்டிருக்கின்றன. சோசலிஸ்ட் கட்சி என்பது Militant tendency இனை நிறுவிய Ted Grant இன் வாரிசு அமைப்பாகும், SWPயோ Tony Cliff ஆல் நிறுவப்பட்டது. வேறுபட்ட ஆரம்பகட்டங்களில் இருந்து தோன்றி வந்தபோதிலும், ரொனி கிளிப் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை ஒட்டுண்ணித்தன சாதி என ட்ரொட்ஸ்கி கூறியதை நிராகரித்ததுடன் மற்றும் சோவியத் ஒன்றியத்தை அரச முதலாளித்துவம் என்று வரையறுத்தார். ரெட் கிரான்ட் கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் நிறுவப்பட்டமை தொழிலாளர்கள் அரசுகளை நிறுவுவதில் சோவியத் அதிகாரத்துவம் ஒரு முக்கிய பங்கைக் கொள்ள முடியும் என்பதற்கான சான்று என வாதிட்டார். இவை அடிப்படையில் ஒரே பார்வையைத்தான் பகிர்ந்து கொண்டிருந்தன. ஸ்ரானிலிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் காட்டிக் கொடுப்புக்களால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதலாளித்துவம் மறு ஸ்திரப்பாடு பெற்றதற்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு இவை சோசலிசப் புரட்சி நடப்பதற்கான வாய்ப்பை நிராகரித்தன. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், தங்கள் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கக் அமைப்புகள் ஆகியவற்றின் மேலாதிக்கம் வேண்டும் என்று வலியுறுத்திய ஒரு முன்னோக்கை அவை வளர்த்தன. உண்மையான புரட்சிகர மார்க்சிச அமைப்புக்களை கட்டமைப்பதற்கு பதிலாக, அவை ட்ரொட்ஸ்கிசவாதிகளின் பணி தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்களை இடதிற்கு நகருமாறு அழுத்தம் கொடுத்தல்தான் என்றன. கடந்த தசாப்தத்தில் இந்த அரசியல் முன்னோக்கின் திவால்தன்மை நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. போருக்குப் பிந்தைய நிலைப்பாடுகளில் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறையின் தாக்கம் ஸ்ராலினிச, தொழிற்சங்க அதிகாரத்துவங்களை மிகப் பெரிதாக மதிப்பிழக்க செய்துவிட்டது. அதை எதிர்கொள்ளும் விதத்தல் இவை வெளிப்படையாக தங்களை நிதிய தன்னலக்குழுவின் அரசியல் கருவிகளாக மாற்றிக் கொண்டன. உலக பொருளாதார நெருக்கடியின் சூழ்நிலை, பெருகிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான விரோத உணர்வுகள், இராணுவவாதம் இவற்றிற்கு இடையே, அதிகாரத்துவங்கள் சர்வதேச நிதியச் சந்தைகளின் ஆணைகளை சுமத்தின. அதே நேரத்தில் தங்களுடைய "சொந்த" ஆளும் உயரடுக்கை காப்பதற்கு தேசியவாதத்தையும் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டன. இதையொட்டி பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கும் அவற்றின் மரபார்ந்த அமைப்புக்களுக்கும் இடையே பரந்த இடைவெளி வந்தது. அது SP, SWP இரண்டையும் தந்திரோபாய மாற்றங்களை ஏற்க கட்டாயப்படுத்தியது. குறிப்பாக தேர்தல் முன்னணிகளில் தொழிற் கட்சிக்கு மாற்றீடு என்பது போல் காட்டிக்கொள்ள முற்பட்டன. ஆயினும்கூட, முன்னாள் அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை திரட்டுவதற்கு விரோதம் என்ற வகையில் அவற்றின் அரசியல் நிலைப்பாடு அடிப்படையில் ஒன்றாகத்தான் உள்ளது. இப்பொழுது தொழிற்கட்சிக்கு எதிராக குறைகூறும் நிலைப்பாட்டிற்கு தள்ளப்பட்டாலும், அவை தொழிற்கட்சியுடன் முறித்துக் கொண்டு புதிய தொழிலாளர்கள் கட்சியை அமைப்பது என்பது தொழிற்சங்கங்கள் மூலமாக அவற்றினால்தான் முடியும் என்று வலியுறுத்துகின்றன. அதிகாரத்துவ கருவியின் ஒரு பகுதியாக இது தவறான அரசியலின் விளைவு மட்டும் அல்ல. அவர்களுடைய நிலைக்கு ஒரு சமூக அடிப்படை உள்ளது. அதுதான் அவர்களுடைய அரசியல் போக்கை இறுதியில் நிர்ணயிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் தொழிற்சங்கங்கள் ஊதிய வரம்புகள், வேலைக்குறைப்புக்கள், தனியார்மயம் ஆகியவற்வறை சுமத்தியுள்ள போது, உள்ளுர்க் கிளைகள் வெற்றுக் கூடுகளாக உள்ள நிலையின் முன்னாள் தீவிரவாத அமைப்புக்களாக இருந்தவை பல தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ அமைப்பிற்குள் முக்கிய பங்கைக் பெற்றுக்கொண்டுள்ளன. இந்தப் பதவிகள் அடிமட்ட தொழிலாளர்களின் நலன்களை முன்னேற்றுவிக்க பயன்படுத்தப்படுவது இல்லை. ஆனால் முன்னாள் தீவிரவாத குழுக்கள் மற்றும் தொழிற்சங்க உயர்மட்டத்தினருக்கு இடையே உறவை வலுக்கவும், தீவிரவாத குழுக்கள் தங்கள் நம்பகத்தன்மைபற்றி உறுதிப்படுத்திக்கொள்ளும் வழிவகை என்றுதான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக, 2007 அஞ்சல்துறை தொழிலாளர்களின் போராளித்தன வேலைநிறுத்தத்தின்போது, தொடர்புத்துறை தொழிலாளர்கள் சங்கம் Royal Mail உடன் வேலைகள், ஓய்வூதியங்கள் பற்றி மற்றும் ஒரு அழுகிய உடன்பாட்டை தயாரித்துக் கொண்டிருக்கையில், SWP உறுப்பினரும் CWU துணைத் தலைவருமான Jane Loftus தொழிற்சங்கத்தின் திரித்தல் வேலைகள் பற்றி மெளனம் சாதித்தார். அஞ்சல் துறையில் வேலைநிறுத்த நடவடிக்கைகள் தீவிரமான நிலையில், அவரிடம் இருந்து எந்த சொல்லும் வெளிப்படவில்லை. வடக்கு அயர்லாந்தில், பெல்பாஸ்ட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் Amalgamated Transport and General Workers Union ஐச் சேர்ந்த பணி மேலாளர்கள் ஒரு உத்தியோகபூர்வமற்ற வேலைநிறுத்தத்தில் கொண்ட பங்கிற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட போது (அவர்களுடைய பாதிப்பிற்கு அவற்றின் சொந்த தொழிற்சங்கம் நிர்வாகத்துடன் கொண்டிருந்த ஒப்பந்தம் ஒன்றே உதவியது) SWP உறுப்பினரும் ATGWU செயலர் ஜிம்மி கெல்லியும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்க்க மறுத்ததுடன் அவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. " சோசலிஸ்ட் கட்சியை பொறுத்தவரையில், நான்கு பேருக்கு எதிராக யூனிசன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தபோது, SP பகிரங்கமாக தன்னுடைய உறுப்பினர்களில் ஒருவரையே இதன் நடவடிக்கைகள் அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கான போராட்டமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்ததற்காக கண்டித்தது. (See "Britain: Once again on the role of the "left" within the trade unions"): மேலும் யூனிசனின் பொதுச் செயலாளர் Dave Prentis அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பை திரட்ட அழுத்தம் கொடுக்கப்பட முடியும் என்றும் வாதிட்டது. தன்னுடைய உறுப்பினர்கள் 6 பேர் யூனிசனின் தேசிய நிர்வாக குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு SP பாராட்டு கூறியதுடன், யூனிசனை "ஒரு ஜனநாயக, போராடும் தொழிற்சங்கமாக" மாற்றுவதற்கு இதன் முயற்சிகள் மிக முக்கியம் என்றும் கூறியது.தொழிற்கட்சி அரசாங்கம் தன்னுடைய ஊதிய முடக்கத்தை பொதுத்துறையில் செயல்படுத்த இருக்கும் நேரத்தில் தொழிற்சங்கத்தை நம்பியிருக்கும்போது யூனிசனின் ஒழுங்கு நடவடிக்கைகள் SP இற்கும் மற்றவற்றிற்கும் ஒரு அடிபோல் கருதப்படுகிறது. தொழிற்சங்கங்களில் உள்ள பல போலி இடது குழுக்களுக்கு அவை விரும்பியோ விரும்பாமலோ தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக உண்மையில் எதுவும் செய்யவில்லை என்றால்தான் அவை பொறுத்துக் கொள்ளப்படும் என்ற எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகவல் உரத்தும், தெளிவாகவும் கேட்கப்பட்டது. SP அதிகாரத்துவத்திற்கு எதிராக போராடும் விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. எனவேதான் தன்னுடைய உறுப்பினர்களை அது பாதுகாக்கும் நடவடிக்கைகள் அதிக சுவையற்றதாக உள்ளன. ஒழுங்கு நடவடிக்கை ஒரு தனிப்பட்ட நிகழ்வு, ஒரு சில வலதுசாரிகளால் நடத்தப்பட்டது என்று சித்திரிக்கப்பட்டுள்ளது. யூனிசனுக்கு அனுப்பிய எதிர்ப்பு கடிதங்களுக்கான முறையீட்டில் SP மிகவும் தாழ்ந்து "குற்றச்சாட்டுகள் அகற்ற வேண்டும் என்றும்", தொழிற்சங்கம் "அத்தகைய மதிப்பிற்குரிய செயல்வீரர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும், தாக்கக்கூடாது" என்றும் கூறியுள்ளது. வலதுசாரிக்கு எதிரான ஒரு பரந்த அணிதிரட்டலுக்கு அழைப்பு இல்லை; அதேபோல் போலிக்குற்றச்சாட்டுக்காரர்களை விரட்டவும் முயற்சிக்கவில்லை. SP உறுப்பினர்கள் தொழிற்சங்க நிர்வாகக் குழுவிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை யூனிசன் தலைவர் பிரென்டிஸுக்கு எதிராகக் கொண்டுவந்ததாக ஆதாரமும் இல்லை. இதே போன்ற விதத்தில்தான் SWP ஜூன் மாதம் நடைபெற்ற யூனிசன்மாநாட்டில் Prentis ஆற்றிய சமீபத்திய உரையைப் பற்றி திகைப்பு தரும் விதத்தில் தகவல் கொடுத்தது; "இடது" எப்படி மாநாட்டின் "உணர்வை" கைப்பற்றிவிட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று மேற்கோளிட்டது--யூனிசனின் வலைத் தளத்தில் பிரென்டிஸின் கருத்துக்கள் கொண்ட முழுப் பொருளுரையையும் இணைக்கவும் வகை செய்தது. யூனிசனில் நடக்கும் நிகழ்வுகள் SP, SWP ஆகியவை தொழிற்சங்கங்களை "கைப்பற்றி" அவற்றை "போராடும்" அமைப்புக்களாக மாற்ற முடியும் என்னும் கூற்றுக்களை நடைமுறையில் நிராகரிப்பவை ஆகும். தொழிலாள வர்க்கத்தின் புதிய இயக்கம் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை எதிர்த்து கிளர்ந்தெழுதல் என்ற வடிவமைப்பைக் கொண்டு, அவற்றின் அரசியல் வக்காலத்து வாங்குபவர்களையும் நிராகரிப்பது என்று இருக்க வேண்டும். |