World Socialist Web Site www.wsws.org |
Director Roman Polanski faces months in Swiss prison இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி சுவிஸ் சிறையில் பல மாதங்கள் இருக்க கூடும் By Hiram Lee அமெரிக்க அரசாங்கத்தின் ஆணையின்கீழ் சுவிஸ் அதிகாரிகளால் செப்டம்பர் 26ல் கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி, சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் சிறையில் பல மாதங்கள் இருக்க நேரிடலாம். சூரிச் திரைப்பட விழாவில் வாழ்நாள் முழுமைக்குமான சாதனையாளர் விருதை பெற சுவிட்சர்லாந்து வந்த போது, போலன்ஸ்கி கைது செய்யப்பட்டார். அமெரிக்க நீதித்துறையின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 1977ல் நடந்த ஒரு சம்பவம் சம்பந்தமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க, போலன்ஸ்கியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை கோரியுள்ளது. ஒரு வயதுக்குவராத பெண்ணுடன் சட்டவிரோதமாக பாலியலில் ஈடுபட்டதற்காக போலன்ஸ்கி குற்றவாளியாக நீதித்துறையின் முன் நிறுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தனக்காக பரிந்து பேசமாட்டார் என்பதால், ஒரு நீண்டகால சிறைவாசம் ஏற்படக்கூடும் என்று கருதி, போலன்ஸ்கி 1978ல் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். போலன்ஸ்கியின் வழக்கறிஞர்கள் அவரை விடுவிக்க கோரி உடனடியாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். அவர்களின் கோரிக்கைக்கான பதிலை சுவிஸ் பெடரல் கிரிமினல் நீதிமன்றம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது, "வரும் வாரங்களில் இதுபற்றி முடிவு எடுக்கப்படும்" என்று அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. போலன்ஸ்கிக்கு விடுதலையோ அல்லது வீட்டுக்காவலோ கூட இருக்காது என்று சுவிஸ் சட்டத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சுவிஸ் நீதித்துறை அமைச்சகத்தின் ஒரு செய்தித் தொடர்பாளர் பத்திரிகைகளிடம் தெரிவிக்கையில், "இதுவரை இதுபோன்ற ஒர் வழக்கில் ஒருபோதும் வீட்டுக்காவல் வழங்கப்படவில்லை" என்று தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அறுபது நாட்களுக்குள் அவரை ஒப்படைக்க கோரி அமெரிக்கா உத்தியோகப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு அந்த காலத்திற்குள்ளாக கோரிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றால், போலன்ஸ்கி விடுவிக்கப்பட வேண்டும், ஆனால் என்ன இருந்தாலும் இப்படி நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்பட தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க நீதித்துறை எடுக்கும்வரை, அவர் சுவிட்சர்லாந்து சிறையிலேயே பல மாதங்கள் இருக்க வேண்டி இருக்கலாம். குற்றவாளியை ஒப்படைக்க கோரி பதிவு செய்யப்படாவிட்டாலும் கூட, போலன்ஸ்கி விடுவிக்கப்பட வாய்ப்பில்லை, அவருக்கு மறு கைது ஆணை பிறப்பிக்கப்படலாம். இதன்மூலம் அவரை ஒப்படைப்பதற்கான கோரிக்கையைச் சமர்பிப்பதற்கு அமெரிக்காவிற்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். போலன்ஸ்கியின் கைது நடவடிக்கை, சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்களிடையே போராட்டங்களை எழுப்பி இருக்கிறது. பிரான்சின் ஒரு திரைப்பட தயாரிப்பாளர்கள் அமைப்பான Société des Auteurs et Compositeurs Dramatiques (SACD) ஆல் முன்வைக்கப்பட்ட ஒரு மனுவில், போலன்ஸ்கி "உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ட்டின் ஸ்கோர்சிஸ், வோடி ஆலன், பெர்ட்ரண்ட் டவெர்னெர், மெக்கல் மேன், வெஸ் ஆண்டர்சன், டேவிட் லென்ச், கோஸ்டா-கெளராஸ், விம் வென்டெர்ஸ் மற்றும் மார்கோ பெல்லோக்கி உட்பட பல முன்னணி கலைஞர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், சூரிச் திரைப்பட விழாவை ஏற்பாடு செய்திருந்த அமைப்பும், அதன் சொந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "இந்த விழா ஒரு விரும்பத்தகாத வகையில் பயன்படுத்தப்பட்டுவிட்டது" என்று கூறி அமெரிக்க மற்றும் சுவிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஹாலிவுட் செய்தியாளருடனான ஒரு நேர்காணலில் விழா ஏற்பாடு உறுப்பினர் ஹென்னிங் மொல்ஃபென்டர், "இப்போது நான் சுவிட்சர்லாந்து போவதற்கே வாய்ப்பில்லை. ரோமன் போலன்ஸ்கி 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறைச்சாலையில் உட்கார்ந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு உங்களால் திரைப்படங்களைப் பார்க்க முடியாது" என்று கூறி, இந்த விழாவைப் புறக்கணிக்கும் அவரின் கருத்தை வெளியிட்டார். போலன்ஸ்கியின் கைது நடவடிக்கை திடீரென்றும், வன்முறையான வகையிலும் நடந்திருக்கும் நிலையில், இந்த சம்பவத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்துவரும் பலர், இதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்துக்கு இடையில் நடந்த சமீபத்திய பேச்சுவார்த்தைகளைக் குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்கள். அமெரிக்காவின் வரி ஏய்ப்பாளர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள அவர்களின் இரகசிய கணக்குகளில் பணங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று நம்பப்படுவதால், அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து சுவிஸ் அரசாங்கத்திற்கும், சுவிஸ் வங்கியான UBS க்கும் அழுத்தம் கொடுத்து வந்தது. UBS க்கும், அமெரிக்க உள்நாட்டு வருவாய்த்துறைக்கும் இடையில் ஜூலையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த அதன் 52,000 வாடிக்கையாளர்களின் பெயர்களை வெளியிட அந்த வங்கி ஒப்புக்கொண்டது. ஆனால், 1934 ல் இருந்து சுவிட்சர்லாந்தின் ஆவணங்களில் இருந்து வரும் அந்த வங்கியின் இரகசிய விதிகளை இந்த முடிவு மீறுவதாக தெரிகிறது. போலன்ஸ்கியை எங்கே கண்டுபிடிப்பது என்பது நம்பக்கூடியதாக இல்லை என்பதை முதல்முறையாக அமெரிக்க அதிகாரிகள் துல்லியமாக தெரிந்து கொண்டார்கள் என்பதால் தான், இந்த கைது நடவடிக்கைக்கான உத்தியோகப்பூர்வ கதையாக உள்ளது. அகாடமி விருது பெற்ற உலக புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான போலன்ஸ்கி, 1978ல் இருந்தே நிழலுகத்தில் மறைந்து வாழவில்லை. அவர் சுவிட்சர்லாந்தின் கிஸ்தாட்டில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் அவரை கைது செய்திருக்கலாம். போலன்ஸ்கியைப் பின்தொடர்ந்து வரும் அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பதற்கான சுவிஸ் அரசாங்கத்தின் விருப்பம், உண்மையில் UBS மீதான அழுத்தத்தைக் குறைக்க, வாஷிங்டனுக்கு ஆதரவாக செயல்படும் ஒரு முயற்சியாக தோன்றுகிறது. போலன்ஸ்கியின் கைது நடவடிக்கையில் நீதி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா அல்லது சுவிஸ் அரசாங்கங்களுக்கு விடுக்கப்படும் எவ்வித கோரிக்கையும் நிராகரிக்கப்படும். 76 வயதான இந்த கலைஞர், நிச்சயமாக யாருக்கும் அச்சுறுத்தலாக இல்லை. 1978ல் அமெரிக்காவில் இருந்து விமானம் ஏறியதில் இருந்து, போலன்ஸ்கி அவருக்கென ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவரின் திரையுலக வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அத்துடன் 2002ல் The Pianist திரைப்படத்தை இயக்கியதற்காக அகாடமி விருதையும் வென்றார். அந்தப் படம், போலன்ஸ்கியின் வாழ்க்கையைப் போலவே, நாஜி படுகொலையில் இருந்து தப்பித்த ஒரு உன்னதமான பியானிஸ்ட் கலைஞன் Wladyslaw Szpilmanன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. போலன்ஸ்கியின் கைது நடவடிக்கையில் எந்த சமூக நன்மையையும் கிடையாது. அதேபோல 1978 வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களுக்காகவும் கூட அமெரிக்க நீதித்துறை எந்த சிபாரிசும் காட்டவில்லை. இந்த வழக்கின் மையத்தில் இருக்கும் அந்த பருவமடையாத பெண்ணான சமந்தா கெய்மர், தற்போது வயது 40 களில் இருக்கிறார். அவர் போலன்ஸ்கிக்கு எதிரான வழக்கைக் கைவிடுமாறு கேட்டு கொண்டிருக்கிறார். ஆதலால், இந்த வழக்கு தொடர்பாக இயக்குனரை அமெரிக்கா பின்தொடர்வது இத்தோடு முடிவுக்கு வந்துவிடுகிறது. |