World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Opel workers demonstrate in Antwerp in defence of jobs
Works councils and unions prepare sell-out

அன்ட்வெர்பில் வேலை பாதுகாப்பிற்காக ஓப்பல் தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களும் தொழிற்சங்கங்களும் காட்டிக்கொடுக்க தயாராகின்றன

By our reporters
25 September 2009

Use this version to print | Send feedback

Antwerp rally
The rally in Antwerp

புதனன்று, பெல்ஜியத்தின் அன்ட்வேர்பின் இல் உள்ள ஓப்பல் ஆலைக்கு வெளியில் சுமார் 3,500 தொழிலாளர்கள் தங்களின் வேலை பாதுகாப்பு கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்னா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸூக்கு இடையே ஏற்பட்ட திட்டங்களின்படி, பெல்ஜியம் ஆலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மூடப்படும்.

தற்போது, அண்ணளவாக 54,000 தொழிலாளர்கள் ஐரோப்பிய GM ஆலைகளில் வேலை செய்து வருகிறார்கள். ஜேர்மனியில் 4,116 (பொஹம் 2191, ரூஸ்ஷெல்ஹைம் 1427, கய்சர்ஸ்லவுர்ட்டன் 456, ஜசநாக் 42), ஸ்பெயினில் 2,090, பிரிட்டனில் 1,373 மற்றும் போலாந்தில் 437 உட்பட 10,952 வேலையிடங்களைக் குறைக்க மக்னா திட்டம் பரிந்துரைக்கிறது.

வேலைகள் பாதுகாப்பிற்காக ஒரு பொதுவான போராட்டத்தை ஒருங்கிணைக்க தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களும், தொழிற்சங்கங்களும் பல மாதங்களாக மறுத்து வந்தன. தொழிற்சங்கங்கள் அவர்களின் தாமதமான செயல்பாட்டிற்கு சாக்குபோக்குகள் சொல்வதற்கும், தொழிலாளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதையுமே செப்டம்பர் 23 போராட்டம் நோக்கம் கொண்டிருந்தது.

வெறும் இரண்டு டஜன் தொழிற்சாலை தொழிலாளர்குழு உறுப்பினர்களும், தொழிற்சங்க அதிகாரிகளும் மட்டும் தான் ஜேர்மனியின் பொஹம் ஆலையிலிருந்து அன்ட்வெர்ப் வந்திருந்தார்கள். ஒரு பெரிய பிரதிநிதிகள் கூட்டத்தை அவர் கூட்டி வரவில்லை என்பதை உலக சோசலிச வலைத்தளத்துடனான ஒரு பேட்டியில், பொஹம் தொழிற்சாலை தொழிலாளர்குழுத்தலைவர் Rainer Einenkel உறுதிப்படுத்தினார். "நான் மூன்று சகாக்களைக் கூட்டி வந்தேன்." இந்த பேரணியில் கலந்து கொள்ள விரும்பியவர்கள், விடுமுறை விடுப்பு எடுத்து கொள்ள வேண்டியிருந்தது என்றார்.

அதேபோல, ரூஸ்ஷெல்ஹைமில் உள்ள ஓப்பலின் முக்கிய ஜேர்மன் ஆலையிலிருந்தும் ஒரு சிறிய பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது, கய்சர்ஸ்லவுட்டர்ன் ஆலையில் இருந்து சுமார் 400 நபர்கள் கலந்து கொண்டார்கள். அந்த ஆலைகளில் இருந்து கலந்துகொண்டவர்களும் விடுமுறை விடுப்பு எடுத்து கொள்ள வேண்டி இருந்தது. பிற நாடுகளில் இருக்கும் ஓப்பல் ஆலையிலிருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிற்சாலை தொழிலாளர்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

தொழிற்சங்கங்களும், தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் வெளிப்படையாகவே வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிட மறுத்துவிட்டன. ஆலையின் உற்பத்தி சேதப்படாமல் இருக்க, அன்ட்வெர்ப்பின் தொழிலாளர்கள் கூட ஷிப்ட்களுக்கு இடையில் தான் பேரணியில் பங்கு பெற வேண்டி இருந்தது.

ஒட்டுமொத்த கூட்டமும், ஓப்பல் தொழிலாளர்கள் மத்தியில், குறிப்பாக அன்ட்வெர்ப் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கைகளையும், நப்பாசைகளையும் புகுத்தும் நோக்கத்தை கொண்டிருந்தது.

ஒரு சில போராட்டங்களுக்குள் எதிர்ப்பை திருப்பிவிடும் வகையில் எவ்வாறு வேலை வெட்டுக்களை நடைமுறைப்படுத்துவது என்று விவாதிக்க, புதனன்று காலையில், ஐரோப்பிய ஓப்பல் ஆலைகளின் தொழிற்கழகங்கள் சந்தித்தன. பின்னர் மதியம், ஆர்பாட்டங்களில் பேசிய தொழிற்கழகங்களின் பிரதிநிதிகள், எவ்வித ஆலைமூடல்கள் மற்றும் வேலை வெட்டுக்களையும் நிராகரிப்பது என்ற ஓர் ஒருமித்தகருத்துக்கு தாங்கள் வந்திருப்பதாக அறிவித்தார்கள். எவ்வாறிருப்பினும், இதுபோன்ற எவ்வளவு வெட்டுகள் மற்றும் மூடல்களைத் தடுக்க முடியும் என்பது குறித்து விவரிக்காமல் அவர்கள் தவிர்த்துவிட்டார்கள்.


Klaus Franz

ஐரோப்பாவில் இருக்கும் ஓப்பல்-வாக்ஸ்ஹாலின் கூட்டு தொழிற்சாலை தொழிலாளர்குழுவின் தலைவர் கிளவுஸ் பிரான்ஜ் கூடியிருந்த தொழிலாளர்கள்மத்தியில் பேசுகையில், ஆலைமூடல்களுக்கு மாற்று கண்டறியப்படும் என்று அறிவித்தார். அதே நேரத்தில், மக்னா உடன்பாடு மற்றும் அதனோடு தொடர்புபட்ட வேலை வெட்டுக்களுக்கான எவ்வித மாற்று ஏற்பாட்டையும் அவர் உடனடியாக நிராகரித்தார்.

முக்கிய தாக்குதல்கள் மற்றும் வெட்டுகள் தவிர்க்க முடியாதவை என்பதையும் அவர் உரையில், பிரான்ஜ் தெளிவுபடுத்தினார். "இந்த நிறுவனம் மீண்டும் ஒருமுறை ஊகத்திற்கான ஓர் ஆதாரமாக மாறினால் அது எங்களின் தவறில்லை," என்றார். வேலை குறைப்புகள் மற்றும் "ஆண்டுக்கு 265 மில்லியன் யூரோ" சம்பள வெட்டுகள் போன்ற வடிவங்களில்தொழிலாளர்கள் அவர்களின் பங்களிப்பை அளிப்பார்கள். ஓப்பல் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பாதை தடைகற்கள் நிரம்பிய கடுமையான பாதையாக இருக்கும். அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அவர்கள் மீண்டும் GMக்கு திரும்ப முடியாது. பிரான்ஜின் கருத்துப்படி, "GM டம் இருந்து சுதந்திரம் கிடைப்பதென்பது அவ்வளவு சாதாரணமானதல்ல." அதற்கேற்ற வகையில், இந்த சுதந்திரத்திற்கு தொழிலாளர்கள் "அன்போடு தங்களால் முடிந்ததை" செய்ய வேண்டும்.

திட்டமிடப்பட்ட வேலை வெட்டுகள் குறித்து ஊடகத்தில் வெளியான புள்ளிவிபரங்கள் பற்றி கருத்து கூற பிரான்ஜ் மறுத்துவிட்டார். இந்த பிரச்சனையில் அவரின் மெளனம், அன்ட்வெர்ப்பின் தொழிற்சாலை தொழிலாளர் குழு தலைவர் ரூட் கென்னிஸ் மற்றும் பிரான்க்போர்ட்டின் IG-Metall பிரதிநிதியான ஆர்மின் ஷில்ட் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதற்கடுத்த பத்திரிகையாளர் கூட்டத்திலும் வெளிப்பட்டது.

ஊடகங்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்ட பிரான்ஜ் மற்றும் ஐனென்கெல், பத்திரிகையாளர் கூட்டத்திற்கும் வரவில்லை. அந்நிலையில், ஓப்பல் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் நிலைமை மற்றும் வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து வெளிப்படுத்தி காட்ட வேண்டிய நிலைக்கு கென்னிஸ் மற்றும் ஷில்ட் உம் தள்ளப்பட்டார்கள். அவ்வாறு செய்ததால், குழப்பங்களுக்கும் தடுமாற்றங்களுக்கும் உள்ளானர்.

மக்னாவுடன் சங்கங்கள் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளில் வேலை இழப்புகளின் பரிமாணங்கள் (22,000 வேலை இழப்புகள் இருக்கும் என்று ஜூலையில் பிரான்ஜ் பேசி இருந்தார்) குறித்து உலக சோசலிச வலைத்தள செய்தியாளர் கேட்ட போது, அதை ஷில்ட் தவிர்த்து விட்டார். இந்த புள்ளிவிபரத்தை அவர் ஒத்து கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை, அத்துடன் அவர் எவ்வித உறுதியான புள்ளிவிபரத்தையும் அவர் கொடுக்கவில்லை. அதே நேரம், வேலை குறைப்புகள் தவிர்க்க முடியாததாய் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னர் தான் இதுபோன்ற குறைப்புகளின் இறுதி எண்ணிக்கை தெரியவரும்.

அன்ட்வெர்ப் ஆலையை மூடுவதற்கான அதன் விருப்பத்தை மக்னா ஒருபோதும் அறிவிக்கவில்லை என்று ஷில்ட் மற்றும் கென்னிஸ் இருவரும் தொலைக்காட்சி கேமராக்களின் முன்னால் அறிவிக்கும் அளவிற்கு சென்றார்கள். அதே நேரத்தில், ஓப்பல் நிதியத்தால் (Opel trust) Üளிக்கப்பட்ட அறிக்கையுடன் அவர்கள் முரண்படவில்லை. அடுத்த சில மாதங்களில் (அதாவது 2010ன் தொடக்கத்தில்) அட்ட்வெர்ப்பின் உற்பத்தி நிறுத்தப்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

ஒரு சிறிய விளையாட்டுத்துறை வாகன (sports utility vehicle - SUV) உற்பத்தியின் மூலம் அன்ட்வெர்ப் ஆலையைக் காப்பாற்றலாம் என்று கென்னஸ் குறிப்பிட்டார். இதுபோன்ற வாகனங்களை சீனாவிலுள்ள ஆலைகளில் உற்பத்தி செய்ய GM மற்றும் மக்னா திட்டமிடுகின்றன. "சீன ஆலையுடனான போட்டியில் அன்ட்வெர்ப் அதன் மேன்மையைக் காட்டி இருந்த" போதினும், சீனாவிற்கே உற்பத்தி ஆணை கொடுக்கப்பட இருக்கிறது என்ற செய்தி கசிவிற்கு கென்னஸ் எந்த பிரதிபலிப்பையும் காட்டவில்லை. ஐரோப்பாவின் ஐக்கியம் குறித்து அவர் அறிவித்த போதினும், சீனா பற்றி கென்னெஸ் வாய்திறக்கவில்லை. சீனா உற்பத்தி ஆணையை பெற்று விட்டது என்ற உண்மையைத் தாம் நிராகரிப்பதாக அவர் வலியுறுத்தினார். ஆசியாவின் வழியாக போகும் பணம், "சுற்றி சுற்றி ரஷ்யாவின் கறுப்பு குழிகளுக்குள் சென்றடையும்" என்பதைத் தான் இது குறிக்கிறது.

அன்ட்வெர்ப்பில் SUV உற்பத்தி செய்தாலும் கூட, தற்போது அந்த ஆலையில் உள்ள 2,600 வேலைகளில் பல இழப்பு இருக்கும் என்பதையும் கென்னெஸ் தெரிவித்தார்.

குறைந்த தேவையுள்ள இதுபோன்ற கார்கள் தயாரிப்பும், அன்ட்வெர்ப் ஆலை குறுகிய காலத்திற்கு மட்டும் தான் இவ்வாறு "காப்பாற்றப்படும்" என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இந்நடவடிக்கையால், ஆலைமூடல் சற்றே தாமதப்படும் அவ்வளவு தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த ஆலையில் மொத்தம் 4,500 தொழிலாளர்கள் இருந்தார்கள்.

"ஓப்பல் மீட்பு" என்ற பெயரில் நடந்த முந்தைய வேலை குறைப்புகள், சம்பள வெட்டுகள் மற்றும் மோசமான வேலையிட நிலைமைகளுக்கும் தொழிற்சாலை தொழிளாளர் குழு தலைவர் கென்னெஸ் ஆதரவாகவே இருந்தார்.

தொழிலாளர்களுக்கு பின்னால், 1.6 பில்லியன் சேமிக்க தயாரிப்பு நடந்து வருவதாக செய்திகளுக்கு தொழிலாளர்கள் எவ்வாறு பிரதிபலிப்பு காட்டினார்கள் என்று உலக சோசலிச வலைத்தள செய்தியாளர் கேட்ட போது, அது தொடர்பாக இதுவரை எந்த உறுதியான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று ஷில்ட் தெரிவித்தார். "எதையும் ஒப்பு கொள்வதற்கு முன்னால், உறுப்பினர்களிடம் கேட்பது என்ற ஒரு நீண்ட பாரம்பரியத்தை IG Metall கொண்டிருக்கிறது" என்றார். இந்த விஷயத்திலும் கூட, தொழிற்சங்க உறுப்பினர்களிடம் கேட்கப்படும், வெட்டுகளுக்கான திட்டங்களுக்கு 90 சதவீத ஒப்புதல் கிடைக்கும் என்றும் ஷில்ட் தெரிவித்தார்.

ஷில்ட் இன் கருத்துக்கள் தவறானவை என்பதை மற்றொரு உலக சோசலிச வலைத்தள நிருபர் குறிப்பிட்டு காட்டினார். ஷில்ட் இன் அதிகாரத்திற்கு உட்பட்ட ருஸ்ஷெல்ஹைமில், சம்பள உயர்வு மற்றும் விடுப்பு சம்பளம் ஆகியவற்றை நீக்குவதில், தொழிற்சாலை தொழிளாளர் குழு ஒப்புதல் இல்லாமலேயே ஓப்பல் தொழிற்சாலை குழு அவற்றைப் பரிந்துரைத்தது. உண்மையில், இந்த வெட்டுகள் மக்னா கொள்கையின் ஒரு பகுதி தான், இதற்கு IG Metall மற்றும் தொழிற்கழகங்களும் ஆதரவளித்தன.

எந்தவித எழுத்துப்பூர்வமான உடன்பாடு குறித்தும் தமக்கு தெரியாது என்று ஷில்ட அதிகாரத்துவ தோரணையுடன் இதற்கு விடையிறுத்தார். "மக்கள் என்ன வாக்களித்தார்கள் என்பது குறித்து எனக்கு தெரியாது," என்றார்.

வரவிருக்கும் வேலை வெட்டுகள் குறித்து கற்பனைகளை உருவாக்கவும், போராட்டத்தின் உண்மையான எல்லா நடவடிக்கைகளையும் நாசப்படுத்தவும் தேவையான வாய்ஜாலங்களை அளிக்க, தொழிற்சங்கங்களும், தொழிற்சாலை தொழிளாளர் குழுக்களும் புதனன்று நடந்த ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்தி கொண்டன. ஆகவே உ.சோ.வலைத்தளத்தின் நிருபர்களோடு பேசிய பல தொழிலாளர்கள், வாழ்வதற்கான நம்பிக்கைக்கும், எதிர்கால அச்சங்களுக்கும் இடையில் மாட்டி குழம்பி கொண்டிருந்தார்கள்.

கய்சர்ஸ்லவுட்டர்ன் ஓப்பல் ஆலையின் பராமரிப்பு பிரிவில் சுமார் 20 ஆண்டுகள் வேலை செய்திருக்கும் கார்ல் ஈக்னெர் பின்வருமாறு கூறுகையில், "ஞாயிறன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், என்ன நடக்கவிருக்கிறது என்பது பற்றி இன்னும் நிறைய தெரிய வரும். மக்னா கையேற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், அதை பொறுத்து ஐரோப்பாவில் அண்ணளவாக பாதி வேலைகள் குறைக்கப்படுவதை நான் எதிர்ப்பேன்" என்றார்.

கய்சர்ஸ்லவுட்டர்னில் உள்ள Pfaff தையல் எந்திர உற்பத்தி ஆலையின் நிலைமையையும் ஐக்னெர் விவரித்தார். "அங்கு 6,000 தொழிலாளர்கள் இருந்தார்கள். பின்னர், அவர்கள் படிப்படியாக வேலைகளைக் குறைத்தார்கள். இப்போது வெறும் 200 தொழிலாளர்கள் தான் இருக்கிறார்கள்" என்றார். கய்சர்ஸ்லவுட்டர்ன் ஓப்பல் ஆலையிலும் அதேமாதிரி நடக்கும் என்று அவர் அஞ்சுகிறார். "அன்ட்வெர்ப் மற்றும் பொஹமில் உள்ள ஆலைகளை விரைவில் மூடிவிடுவார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்னர், அந்த உண்மைகளைச் சொல்ல யாரும் தயாராக இல்லை" என்றார்.

WSWS table
Workers and SEP supporters in front of the WSWS table

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்களும், சோசலிச சமத்துவக் கட்சியும் (PSG) டச், ஜேர்மன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் 2,000 துண்டறிக்கைகளை வினியோகித்தார்கள். PSG தலைவர் Ulrich Rippert, ஓப்பல் மற்றும் வாக்ஸ்ஹால் தொழிலாளர்களுக்கு எழுதிய ஒரு கடிதம் அந்த துண்டறிக்கையில் இடம் பெற்றிருந்தது. "சர்வதேச பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உங்கள் தோள்களில் ஏற்றுவது தான் இந்த உடன்படிக்கையின் நோக்கம். இது உழைக்கும் மக்களின் மீது நடத்தப்படும் உலகளாவிய தாக்குதலின் ஒரு பகுதியாகும். உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை 1930களில் இருந்த மட்டத்திற்கும் கீழாக கொண்டு வர முனைகிறார்கள்" என்று அக்கடிதம் எச்சரித்தது.

திட்டமிட்ட வேலைநீக்கங்கள், ஆலைமூடல்கள் மற்றும் சம்பள வெட்டுகள் நடத்தபடுவதற்கான எதிர்ப்பு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நீங்கள் அது போன்ற முறைமைகளை கையாளவில்லை என்றால், அனைத்தையும் இழந்துவிடுவீர்கள், உங்களின் குழந்தைகள் எதிர்காலம் இல்லாமல் நிறுத்தப்படுவார்கள்."

"தொழிற்சங்கங்களும், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களும் தான் இதுபோன்ற எதிர்ப்பை ஒருங்கிணைப்பதில் இருக்கும் மிகப்பெரிய தடைகளாகும்" என்று அக்கடிதம் எச்சரித்தது.