World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US imperialism, 9/11 and the Iraq war

அமெரிக்க ஏகாதிபத்தியம், 9/11 மற்றும் ஈராக்கியப் போர்

Patrick Martin
28 November 2009

Use this version to print | Send feedback

அமெரிக்க ஏகாதிபத்திய பெருநிறுவனச் செய்தி ஊடகம் இதற்கு அதிக கவனம் கொடுக்காவிட்டாலும், ஈராக் போர் பற்றிய உத்தியோகபூர்வ பிரிட்டிஷ் விசாரணை புஷ் நிர்வாகம் எப்படி வேண்டுமேன்றே சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்க்கவும் ஈராக்கை அமெரிக்க ஆதிக்கத்திற்குள் கொண்டுவரவும் ஒரு படையெடுப்பை நடத்தியது என்பது பற்றிய சான்றுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

2001-2003 காலத்திய முன்னாள் பிரிட்டிஷ் தூதர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் பிரமாணத்தின் கீழ் Sir John Chilcot தலைமையில் இருக்கும் ஒரு குழுவிற்கு முன் இந்த வாரம் சாட்சியம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்; இக்குழுவிற்கு போரின் முழுப் போக்கு முழுவதையும், அதன் தொடக்கங்களில் இருந்து ஜூன் 2009ல் பிரிட்டன் வெளியேறியது வரை ஆராய்வதற்கு பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

புஷ், ஷெனி, ரம்ஸ்பெல்ட், பவல் மற்றுரை ரைஸ் என்று புஷ் நிர்வாகத்தின் உயர்மட்டத் தலைவர்கள் மீது, 1946 நியூரெம்பேர்க் விசாரணைக்குழு முன் நாஜித் தலைவர்கள் தண்டிக்கப்பட்ட அதே குற்றச் சாட்டை - அதாவது வேண்டுமென்றே ஒரு ஆக்கிரோஷப் போரைத் தொடக்குதல் என்பதை சுமத்துவதற்கு போதுமான சான்றுகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டன.

1998 ல் இருந்து 2003 வரை ஐ.நா.வில் பிரிட்டிஷ் தூதராக இருந்த Jeremy Greenstock, புஷ் நிர்வாகம் மார்ச் 2003ல் போர் தொடங்குவதற்கு ஓராண்டிற்கு முன்பே மிகத் தீவிரமாக ஈராக் மீது போருக்கு காத்திருந்தது என்று விவரித்தார். அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரக முறைகள் போருக்குப் போலிக் காரணம் பெறப் பயன்படுத்தக்கூடிய ஐ.நா. தீர்மானம் ஒன்றைப் பெற விரும்பியது பற்றியும், ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் சூழ்ச்சிக்கையாளல்களால் ஏற்பட்ட காலதாமதம் பற்றிய அமெரிக்க அதிகாரிகளின் பொறுமையின்மையைப் பற்றியும் விளக்கினார்.

" 'இது கால தாமதத்தை ஏற்படுத்துகிறது, நாங்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறோம், எனவேதான் இதைப்பற்றிக் கவலைப் படுகிறோம், இந்த தாமதத்தை ஒதுக்க வேண்டும், செய்ய வேண்டியது எப்படியும் செய்யப்பட வேண்டும், வலிமை பயன்படுத்தப்பட வேண்டும்' என்பது பற்றிய சப்தங்கள் உள்பட" வாஷிங்டனில் இருந்து கிடைத்த தகவல்கள் கூறியதாக Greenstock சாட்சியம் அளித்தார்.

பிரிட்டிஷ் தூதரக முறையின் முழுத் திறன் படையெடுப்பை இரு வாரங்களுக்கு தாமதப்படுத்தியதுதான் என்று அவர் கூறினார். "அமெரிக்காவில் போருக்கான செயல்கள் மிக வலிமையாக முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில், நாம் வேறு ஏதும் செய்வதற்கில்லை" என்று அவர் விசாரணையில் ஒரு எழுத்து மூல அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Greenstock, அமெரிக்கத் தலைமையிலான போர் சர்வதேச சட்டத்தின்படி செல்லும் என்று கூறினார்; ஆனால் இது "வினாவிற்கு உட்படக்கூடிய நெறித்தன்மை", "ஜனநாயக முறைப்படி காணப்படக்கூடிய ஆதரவு" இவை ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு இடையேயோ அல்லது கிரேட் பிரிட்டன் மக்களிடையேயோ இல்லை என்றார். பெப்ருவரி 2003ல் லண்டன் தெருக்களில் போரை எதிர்த்து கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் அணிவகுத்தனர் என்றும் குறைந்தபட்சம் ஒரு தலைமுறையில் காணப்படாத மக்கள் திரள் அது என்றும் ஒருவேளை பிரிட்டிஷ் வரலாற்றிலேயே கூட மிக அதிகக் கூட்டமாக இருந்திருக்கலாம் என்றும் கூறினார்.

அமெரிக்காவில் முன்னாள் பிரிட்டிஷ் தூதராக இருந்த கிறிஸ்தோபர் மேயரும், க்ரீன்ஸ்டாக்கும் விசாரணைக் குழுவிடம் டெக்சாஸ் கிராபோர்டில் புஷ்ஷின் பண்ணையில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயருக்கும் புஷ்ஷிற்கும் இடையே நடந்த கூட்டம்தான் போர் பற்றி முடிவெடுக்கப்பட்ட முக்கிய தளம் என்றனர். இது ஏப்ரல் 2002ல் நடந்தது; அதாவது படையெடுப்பிற்கு கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன் நடந்தது --2002 இலையுதிர்காலத்தில் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் விவாதங்கள் நடைபெறுவதற்கு முன்னரே ஆகும்.

அவர்களுடைய சாட்சியங்கள் 2005ல் செய்தி ஊடகத்திற்கு கசியவிடப்பட்ட இழிந்த "டெளனிங் தெரு குறிப்பை" உறுதிப்படுத்துகின்றன; அதில் ஏப்ரல் 2002 கூட்டம் குறிப்பாகக் காட்டப்பட்டிருந்ததுடன், அமெரிக்க, பிரிட்டிஷ் தூதரகத்தின் அடுத்து வந்த முயற்சிகள் அனைத்தும் பொது மக்கள் கருத்தை ஏமாற்றுவதற்காக எடுக்கப்பட்டவைதான் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்னும் முக்கியமான முறையில் முன்னாள் மூத்த பிரிட்டிஷ் பாதுகாப்பு அதிகாரிகளுடைய சாட்சியம் இருந்தது; அதில் படையெடுப்பிற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷ்-அமெரிக்கப் பேச்சுக்களில் சதாம் ஹுசைன் பதவியில் இருந்து அகற்றப்படுவது வெளிப்படையாக விவாதிக்கப்பட்டதும், செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்கு முன்பே அது நடந்ததும் வெளிவந்துள்ளது.

அப்பொழுது கூட்டு உளவுத்துறைக் குழுவின் தலைவராக இருந்த Sir Peter Ricketts ஆட்சி மாற்றம் விரும்பத்தக்கது என்று விவாதிக்கப்பட்டிருந்தாலும், அதற்காகப் படையெடுப்பு என்பதற்கு நாங்கள் சட்டபூர்வ அடிப்படை இல்லை என்றுதான் கருதினோம் என்றார். அமெரிக்க, பிரிட்டிஷ் அதிகாரிகள் ஈராக் ஆட்சிக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் சரிந்து கொண்டிருக்கின்றன, சதாம் ஹுசைனை அகற்ற இன்னும் நேரடியான நடவடிக்கை தேவை என்று கவலை கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"வாஷிங்டனில் வேறு கருத்துக்கள் இருந்தன, அவற்றில் சில ஆட்சி மாற்றம் பற்றிப் பேசின என்பது பற்றி தான் அறிந்திருந்ததாகவும்" ரிக்கெட்ஸ் குறிப்பிட்டார்; 2000ம் ஆண்டில் ஜனாதிபதி புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் எழுதிய ஒரு கல்விக்கூடக்கட்டுரையில், ஈராக்கில் சதாம் அதிகாரத்தில் இருந்து அகற்றப்படும் வரை "எதுவும் மாறாது" என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது பற்றி குறிப்பாக மேற்கோளிட்டார்.

முன்னாள் வெளியுறவு அலுவலக அதிகாரியான Sir William Patey, ஈராக் பற்றிய பல விருப்புரிமைகளில் ஆட்சி மாற்றம் பற்றிய அறிக்கையை தயார் செய்யத் தான் அழைக்கப்பட்டதாகக் கூறினார். அறிக்கையில் ஆட்சி மாற்றம் பற்றிய குறிப்புக்கள் அகற்றப்பட்டு அது காபினெட் வரை சென்றது என்றும், இந்த விருப்புரிமை "அந்த நேரத்தில் சட்ட அடிப்படையைக் கொண்டிருக்காததால் அந்த முடிவு" என்றும் அவர் கூறினார்.

9/11 தாக்குதல்களால் ஏற்பட்ட முக்கிய முடிவு ஈராக் போர் பற்றிய அமெரிக்க கொள்கையின் பொறுப்பு, வெளிவிவகார துறையில் இருந்து பென்டகனுக்கு மாற்றப்பட்டது, அதன் தலைவர் பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட், ஈராக்குடனான போருக்குத் தீவிர ஆதரவாளர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் தூதர் Meyer, அப்பொழுது அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொண்டலீசா ரைஸுடன் செப்டம்பர் 11, 2001ல் நடந்த பேச்சுக்கள் பற்றி விவரித்தார்; இதில் அவர் முதலில் சதாம் ஹுசைன் பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என்று கூறியிருந்தார் --இது அமெரிக்க படையெடுப்பை நியாயப்படுத்துவதற்கு புஷ் நிர்வாகம் பயன்படுத்திய முக்கிய பொய்களில் ஒன்றாகும்.

மற்றொரு முக்கிய பொய் ஈராக்கிடம் அதிக அளவில் "பேரழிவு ஆயுதங்கள் (Weapons of Mass destruction) இருந்தன என்பதாகும். ஆனால் 2000த்தில் இருந்து 2002 வரை வெளியுறவு அலுவலகத்தில் பாதுகாப்பு, உளவுத்துறை தலைமை இயக்குனராக இருந்த Sir William Ehrman விசாரணைக் குழுவிடம் அமெரிக்க-பிரிட்டிஷ் படையெடுப்பிற்கு முன்னரே பிரிட்டிஷ் உளவுத்துறை சதாம் ஹுசைனின் ஆட்சி இரசாயன, உயிரியல் ஆயுதங்களைக் களைந்துவிட்டன என்பதை அறியும் என்றும், எனவே பேரழிவு ஆயுதத் தாக்குதல் திறனைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார்.

அமெரிக்க அதிகாரிகள் ஆந்த்ராக்ஸ் மாசு படிந்த கடிதங்களை மேற்கோளிட்டனர் என்றும் அவை 9/11 மாதங்களில் கிழக்கு அமெரிக்காவில் ஐந்து பேரைக் கொன்றது சதாம் ஹுசைனை இலக்கு வைக்க மற்றொரு காரணம் ஆயிற்று என்றும் Meyer சேர்த்துக் கொண்டார். "புஷ் அங்கு சென்று சதாமை விரட்டி அடிக்க விரும்பினார். அமெரிக்க இராணுவக் கால அட்டவணை ஏற்கனவே ஆயுத ஆய்வாளர்கள் அங்கு செல்வதற்கு முன் தயார் நிலையில் இருந்தது" என்றும் அவர் கூறினார்.

வேறுவிதமாகக் கூறினால், புஷ் நிர்வாகம் அதிகாரத்திற்கு வந்தபோதே, ஒரு முன்கூட்டித் தயாரிக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை செயற்பட்டியலைக் கொண்டிருந்தது என்றும் அதில் ஈராக்கில் ஆட்சி மாற்றத்திற்கு தீவிர உந்துதல் இருந்தது, அதாவது முதல் வளைகுடாப் போரில் தொடக்கப்பட்ட வேலை "முடிக்கப்பட வேண்டும்" என்ற உந்துதல் இருந்தது. 9/11 தாக்குதல்கள் --ஆப்கானிஸ்தானில் CIA அமைத்திருந்த இஸ்லாமிய அடிப்படைவாத கெரில்லாக்கள் குழுவால் நடத்தப்பட்டவை-- ஒரு பயனுடைய போலிக்காரணமாக இராணுவ ஆக்கிரமிப்பு என்ற உறுதியான திட்டத்தை நியாயப்படுத்த உதவின.

இவற்றுள் எதுவுமே உலக சோசலிச வலைத் தளத்தின் நீண்டகால வாசகர்களுக்கு அதிர்ச்சியை அளிக்காது. ஈராக்குடன் போர் வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் பிரச்சார தொடக்கத்தில் இருந்தே உலக சோசலிச வலைத் தளம் 9/11 தாக்குதல்களில் ஈராக் பங்கு பற்றிய பொய்கள், அல்குவைதாவுடனான சதாம் ஹுசைன் தொடர்பு என்று கூறப்பட்டமை, ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்களின் ஆபத்து ஆகியவற்றை கண்டித்து அம்பலப்படுத்தியுள்ளது. அதுவும் உலகிலேயே மிக அதிக பேரழிவு ஆயுதங்களின் குவிப்பைக் கொண்டுள்ள நாட்டில் இருந்து இத்தகைய குற்றச் சாட்டுக்கள் எழுந்தன.

ஆனால் புஷ்ஷிற்குப் பின் பதவிக்கு வந்தவர் மற்றொரு ஆத்திரமூட்டும் தன்மையுடைய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போருக்கான வாதத்தை முன்வைக்கையில் --ஆப்கானிஸ்தானிற்கு எதிராக அமெரிக்கா நடத்தும் போர்-- இச்சான்றுகள் சிந்திக்க வேண்டியவை ஆகும். அடுத்த செவ்வாயன்று தேசிய தொலைக்காட்சியில் --செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் நடந்து எட்டு ஆண்டுகள் முடிந்தபின்-- இன்னும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிற்கு 9/11 தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை எதிர்த்து போரிட வேண்டும் என பாரக் ஒபாமா பேச இருக்கிறார். அதே நேரத்தில் ஈராக்கிய ஆக்கிரமிப்பு தொடர்கிறது, அப்போரைத் தொடக்கிய பொறுப்புடைய எவர்மீதும் போர்க்குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை.

மில்லியன் கணக்கான மக்கள் ஒபாமாவிற்கு அவர் புஷ் நிர்வாகத்தின் இராணுவவாதம் நிறைந்த வெளியுறவுக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்ற பிரமையில் வாக்களித்தனர். மாறாக புஷ் நிர்வாகத்தின் "விரிவாக்க காலத்தில் இருந்ததை விட", இன்னும் கூடுதலான அமெரிக்கப் படைகள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் போரிடுகின்றன. "தலைமை படைத் தலைவர்" மாறியுள்ளார், பொய்கள் சற்றே நயமாக்கப்பட்டுள்ளன, ஆனால் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் அச்சு அப்படியேதான் உள்ளது--அதாவது அமெரிக்காவை ஆளும் நிதியப் பிரபுத்துவத்தின் மூலோபாய, பொருளாதார நலன்கள் புஷ்ஷினால் காக்கப்பட்டதை விட ஒபாமாவால் ஒன்றும் குறைவாகக் காக்கப்படவில்லை.

ஈராக் படையெடுப்பிற்கு முன் உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்திருந்தது: "இப்போரே அமெரிக்க ஜனநாயகத்தின் பேரழிவு நிறைந்த தோல்வியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஒரு சிறிய அரசியல் சதிகாரர்குழு --மறைமுகச் செயற்பட்டியலைக் கொண்டு, மோசடியின்மூலம் அதிகாரத்திற்கு வந்தது-- அமெரிக்க மக்களை அவர்கள் புரிந்திராத, விரும்பாத போருக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் போருக்கு எதிராக, ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக, சமூகப் பணிகள் தகர்ப்பிற்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களுக்கு எதிரான இடைவிடாத் தாக்குதலுக்கு எதிராக உள்ள புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு காட்டுவதை வெளிப்படுத்துவதற்கு எந்தவித முறையான அரசியல் கருவியும் இல்லை. முதலாளித்துவ தாராளவாத சடலத்தின் துர்நாற்றத்தை கொண்ட ஜனநாயகக் கட்சி ஆழ்ந்த இழிவைப் பெற்றுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் திரளான மக்கள் முற்றிலும் வாக்குரிமை இழந்த நிலையில்தான் தங்களைக் காண்கின்றனர்.

ஆறரை ஆண்டுகளுக்கு பின்னர், இந்த முன்னோக்கு முற்றிலும் சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம் ஜனநாயகக் கட்சியினரை தேர்ந்தெடுப்பதின் மூலமோ பெரு வணிகத்தின் இரு கட்சிகள் மீது அழுத்தம் கொடுப்பதின்மூலமோ நடத்தப்பட முடியாது. போரை முடிவிற்கு கொண்டுவர வேண்டியது தொழிலாள வர்க்கத்தின் செயற்பாடாகும்; அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் இருக்கும் தொழிலாளர்கள் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தை கட்டாயம் நடத்த வேண்டும்.