World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
British documents detail US and UK plans for Iraq war ஈராக் போர் பற்றிய அமெரிக்க, பிரிட்டிஷ் திட்டங்களை பிரிட்டிஷ் ஆவணங்கள் விரிவாகக் கூறுகின்றன By Julie Hyland மார்ச் 2003ல் அமெரிக்கத் தலைமையிலான ஈராக்மீது படையெடுப்பின் குற்றத்தன்மைக்கு Sunday Telegraph பத்திரிகைக்கு கிடைத்துள்ள ஆவணங்கள் இன்னும் கூடுதலான நிரூபணத்தை அளிக்கின்றன. அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த டோனி பிளேயர் தானும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷும் "ஆட்சி மாற்றத்தை" ஏற்படுத்த படையெடுப்பிற்கு பல மாதங்கள் முன்பே போருக்கு உடன்பட்டிருந்ததை பலமுறை அவர் பகிரங்கமாக மறுத்தது பொய் என்பதை அவை உறுதிபடுத்துகின்றன. "நூற்றுக்கணக்கான இரகசிய அரசாங்க அறிக்கைகளில் பக்கங்களை" தான் பெற்றதாக Sunday Telegraph கூறியுள்ளது. தன்னுடைய வலைத்தளத்தில் அது சிலவற்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 16, 2002 ல் ஈராக் தாக்குதலில் பிரிட்டிஷ் தொடர்பு பற்றிய ஊகத்திற்கு பிளேயர் விடையிறுத்ததை செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது. வெளியுறவு விவகாரங்கள் குழுவின் தலைவரான டோனால்ட் ஆண்டர்சன் "ஈராக்கில் ஒருவேளை இராணுவ நடவடிக்கைக்கு நாம் தயாரிப்பு நடத்திக் கொண்டிருக்கிறோமா?" என்று பிரதம மந்திரியைக் கேட்டார். அதற்கு டோனி பிளேயர் விடையிறுத்தார்: "இல்லை. இராணுவ நடவடிக்கை பற்றி எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை." அதே ஆண்டு செப்டம்பர் கடைசியில் அரசாங்கம் அதன் போலியான "உளவுத்துறை" அறிக்கைகளை வெளியிட்டது. "ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மதிப்பீடு" என்ற தலைப்பில் இந்த அறிக்கை ஈராக்கிடம் "பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும்", அவை "45 நிமிடங்களுக்குள்" தாக்குதலுக்கு தயார் செய்யப்பட்டுவிட முடியும் என்றும் கூறின. ஆனால், ஈராக் மீது ஒரு இராணுவப் படையெடுப்பிற்கு தயாரித்தல், சதாம் ஹுசைனை பதவியில் இருந்து அகற்றுதல் என்பதற்கான திட்டம் சில மாதங்களாகவே தயாரிப்பில் இருந்தன. ஆவணங்கள் கூறுவது: "[ஈராக்கிற்கு பிரிட்டிஷ்] படைகள் எந்த முறையில் அனுப்புவது என்பது பற்றிய திட்டம் பெப்ருவரி 2002லேயே நடந்தது." போரின்போது சிறப்புப் படைகளின் இயக்குனராக இருந்த மேஜர் ஜெனரல் Greame Lamp, "2002 தொடக்கத்தில் இருந்தே போருக்காக நான் தயாரிப்புக்களை நடத்திக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியதாக அது மேற்கோளிட்டுள்ளது. டெலிகிராப்பின் செய்தியாளர் ஆண்ட்ரூ கில்லிகன் எழுதினார்: "பாராளுமன்றத்தில் திரு.பிளேயர் மறுப்பு தெரிவிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே, 2002 ஜூன் 28 ல் அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டு நிலையம் (Cetcom) போரை நடத்த இருப்பவர்களனா பிரிட்டன் மற்றும் இன்னொரு கூட்டணி நட்பு நாடு ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் ஒரு சிறப்பு ஈராக் திட்டமிடல் கூட்டத்தை நடத்தினர் என்று ஆவணங்கள் கூறுகின்றன. மேலும் ஆகஸ்ட் 13ம் தேதி, ஆவணங்களின்படி, மத்திய கட்டுப்பாட்டு நிலைய தலைவர் தளபதி டாமி பிராங்க்ஸ் துருக்கி மூலம் வடக்குப்புற படையெடுப்பு சக்திகளாக பிரிட்டிஷ் துருப்புக்கள் ஏராளமானவற்றை ஒன்று சேர்ப்பது பற்றி ஒரு விவாதம் நடத்தினர். அது உண்மையில் பின்னர் போர்த் திட்டமாக ஏற்கப்பட்டது." செப்டம்பர் 24, 2002ல் பாராளுமன்றத்திற்கு "உளவுத்துறை" கோப்பை அளித்த பிளேயர் கூறினார்: "எந்தவித இராணுவ விருப்புரிமை பற்றியும், அவற்றைப் பற்றி முடிவு எடுக்கும் கட்டத்தில் நாம் இல்லை. ஆனால் அதுவும் அந்தக் கட்டத்திற்கு வந்தால் முக்கியம்தான். அந்த விருப்புரிமைகள் பற்றி முழு விவாதங்களையும் கொண்டிருக்கிறோம்." இந்த அறிக்கைக்கு குறைந்தது ஆறு மாதங்கள் முன்பே தாக்குதலுக்கான தயாரிப்புக்கள் நடந்து வந்தன. கில்லிகன் தொடர்கிறார்: "2005ல் கசியவிடப்பட்ட டெளனிங் தெரு குறிப்பு என்று அழைக்கப்படும் குறிப்பில் இருந்து, திரு.பிளேயர் ஏப்ரல் 2002ல் டெக்சாஸ், கிராபோர்டில் ஜனாதிபதி புஷ்ஷுடன் நடத்திய உச்சிமாநாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு கையெழுத்திட்டார். பிரிட்டிஷ் பொதுமக்கள் இறுதியாக இதைப் பற்றி கூறப்பட்டபோது கணிசமான துருப்புக்கள் பயன்படுத்தல் இருக்கும் என்றது. டிசம்பர் 18, 2002ல் போருக்கு முன்பு ஒரு சில வாரங்கள்தான் இருந்ததுடன், நிறுத்த இயலாத வகையில் அது வேகத்தைப் பெற்றிருந்தது." மே 2005 இங்கிலாந்து பொதுத் தேர்தலுக்கு முன்பு சண்டே டைம்ஸுக்கு "டெளனிங் தெருக் குறிப்பு" கசியவிடப்பட்டது. உயர் இரகசிய வெளியுறவு ஆவணம், ஈராக் மீது ஒரு தவிர்க்க இயலாத தாக்குதலின் சட்ட நெறி பற்றி விவரித்தது, மார்ச் 2002ல் எழுதப்பட்டு, ஜூலை 21, 2002 ல் அமைச்சரக அலுவலக குறிப்பு ஒன்றில் "இணைப்பு A" என்று கொடுக்கப்பட்டது. அதில், "ஈராக்கிற்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தில் இராணுவத் திட்டம் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.... ஈராக் பற்றி ஜனாதிபதி புஷ்ஷுடன் ஏப்ரல் மாதம் கிராபோர்டில் பிரதம மந்திரி விவாதித்தபோது அவர் இங்கிலாந்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான இராணுவ நடவடிக்கைக்கு இங்கிலாந்து ஆதரவு கொடுக்கும் என்றார். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றார்." அந்த நேரத்தில் அரசாங்கத்தின் தலைமை சட்ட அதிகாரியாக இருந்த தலைமை வக்கீல் கோல்ட்ஸ்மித் பிரபு "ஆட்சிமாற்றம் பற்றிய விருப்புக்கு இராணுவ நடவடிக்கை எடுப்பது ஒரு சட்டபூர்வ அடித்தளமாகாது" என்று முடிவிற்கு வந்த பின்னும் இந்த முடிவு வந்திருந்தது. மே 2002 க்கும் ஜனவரி 2003க்கும் இடையே அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்கள் ஈராக் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை பிரிட்டிஷ் பொதுமக்களுக்குத் தெரியாமல் நடத்தியது என்பது நன்கு அறியப்பட்ட விஷயம் ஆகும். இவை நூற்றுக்கணக்கான தொன்கள் வெடிமருந்துகளை கீழே போடும் செயலை, ஒரு முழு அளவுபடையெடுப்பிற்கு முன் தங்கள் "நிலைமையை எளிதாக்கும்" ஒரு பகுதியாகச் செய்தன. இந்தக் கசிய விடப்பட்ட ஆவணங்கள் ஜூலை 2001ல் இருந்து ஜூலை 2009 வரை ஈராக் படையெடுப்பிற்கு முன்பு இருந்து அதற்குப்பின் நடந்தவை பற்றிய ஒன்பது ஆண்டு காலத்தின் நிகழ்வுகள் பற்றி Chilcot விசாரணை என்று அழைக்கப்படுவது தன் பணியைத் துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு Sunday Telegraph ஆல் வெளியிடப்பட்டன. ஜூன் 2009ல் ஈராக் போரைச் சூழ்ந்திருந்த நிலைமை பற்றி ஒரு புதிய விசாரணை சேர் ஜோன் சில்கோட்டின் கீழ் நடத்தப்படும் என்ற அறிவிப்பை பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் வெளியிடும் கட்டாயத்திற்கு உட்பட்டார். அரசுக்கு ஆலோசனை கூறும் Privy மன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழுவின் தலைமையில், இது படையெடுப்பின் சட்டநெறி பற்றி ஆராயாதது மட்டுமல்லாது பிளேயரின் ஏமாற்றுத்தனங்கள் தேவை என்பதற்குக் காரணமாக இருந்த மக்கள் எதிர்ப்பு பற்றியும் ஆராயும் நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. இதன் பணி "கற்றுக்கொண்ட படிப்பினைகளை" அடையாளம் காண்பது என்றும் "எவர் மீதும் சிவில் அல்லது குற்றப்பொறுப்பைக் கொடுக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு அல்ல" என்றும் பிரெளன் கூறியுள்ளார். இது 2010 இறுதிக்கு முன்பாகத் தன்னுடைய முடிவுகளை கொடுக்காது. ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த பயன்பட்ட உளவுத்துறை பற்றிய பட்லர் விசாரணைக் குழுவில் சில்கோட் ஒரு உறுப்பினராக இருந்தார். அந்த அறிக்கை ஒரு பூசிமெழுகலாக போயிற்று. இவருடைய சமீபத்திய மறு ஆய்வு முதலில் பகிரங்கமாக இருக்காது என்று கூறப்பட்டது. ஆனால் அரசாங்கத்திற்கும் முக்கிய இராணுவ அதிகாரிகளுக்கும் இடையே இருக்கும் பகைமையுணர்வின் தன்மை பிரெளனை அத்திட்டத்தைக் கைவிடுமாறு செய்தது. டெலிகிராப்பின் செய்தியாளர், கில்லிகன் ஆகஸ்ட் 2003ல் அந்த ஆண்டு ஜூலை 17ல் உயர்மட்ட ஆயுத ஆய்வாளர் டாக்டர் டேவிட் எல்லியின் மரணத்தைச் சூழ்ந்திருந்த நிகழ்வுகள் பற்றிய ஆகஸ்ட் 2003 ஹட்டன் விசாரணையில் மாட்டப்பட்டிருந்த நபராவார். போருக்கு நியாயம் கற்பிப்பதற்காக ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய உளவுத் துறைத் தகவலை அரசாங்கம் "கொச்சைப் படுத்திவிட்டது" என்று BBC Radio 4 Today நிகழ்ச்சியில் கில்லிகன் கொடுத்த அறிக்கையை வெளியிட்டது கெல்லி என்று கூறப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. அரசாங்கத்தை ஹட்டன் விசாரணைக் குழு இதில் கெளரவமாக விடுவித்து BBC ஐ "ஆதாரமற்ற", "குறைபாடு நிறைந்த" தகவலைக் கொடுத்தது என்றும் குற்றம் சாட்டியது. சில்கோட் விவாதங்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் இராணுவத்தின் உயர்நிலையில் இருப்பவர்களுடைய விமர்சனத்தை சமாளித்து திருப்தியளிக்கும் நோக்கத்தைக் கொண்டவை. அவர்கள் பிளேயரின் திருட்டுத்தன செயற்பாடுகள்தான் படையெடுப்பிற்கு போதுமான இராணுவத் தயாரிப்புக்கள் இல்லாமல் செய்துவிட்டன என்றும், அவைதான் ஆறு ஆண்டுகள் "வெற்றி" என்று பிரகடனப்படுத்திய பின்னரும் இராணுவம் அங்கு சகதியில் சிக்கியிருப்பதற்கு காரணம் என்றும் குறைகூறியுள்ளனர். இதில் வினாவிற்கு உட்படுத்த இருப்பவர்களுள் பிளேயரும் ஒருவர் ஆவார். சமீபத்திய வாரங்களில் செய்தி ஊடகத்தில், பிளேயர் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைவர் நியமன முயற்சியில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் அப்பதவி அவருக்கு குற்றச்சாட்டில் இருந்து பாதுகாப்பளிக்கும் என்பதால்தான் என்ற ஊகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் செய்தி ஊடகத்திலோ, இராணுவப்படைகளிலோ, எவரும் குற்றச்சாட்டு நடவடிக்கை முறையாக இருக்கும் என்று கூறவில்லை. டெலிகிராப் தலையங்கம் எழுதியதாவது: "சில்கோட் விசாரணையின் நோக்கம் திரு.பிளேயர் மீது "போலி விசாரணை அல்ல, இது ஒரு சட்ட நீதி மன்றமும் அல்ல...ஆனால் இது ஒன்றும் முன்னாள் பிரதம மந்திரியை பிரிட்டிஷ் வெளியுறவுக் கொள்கையில் இந்த வருந்தத்தக்க அத்தியாயம் பற்றி முக்கிய வினாக்கள் சிலவற்றிற்கு பொறுப்பை பகிரங்கமாக கூறவேண்டியதில் இருந்து விடுவிக்க முடியாது." ஆயினும்கூட, விசாரணை வெடிப்புத் தன்மை உடைய பிரச்சினைகளை ஆராய்கிறது. இது பிளேயரை மட்டும் இல்லாமல் போர்க்குற்றத்தில் பலரையும் உட்குறிப்பாக ஈடுபடுத்திவிடும். இக்காரணத்தால்தான் விசாரணையின் முதல்நாள், பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் இராணுவ உயர் தலைமை ஆட்சி மாற்றத்திற்காக சட்டவிரோதப் போரைத் திட்டமிட்ட குற்றம் என்பதில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதற்கான பெரும் முயற்சிகளில் ஆதிக்கம் செலுத்தியது. கூட்டு உளவுத் துறைக் குழுவின் அப்போதைய தலைவராக இருந்த பீட்டர் ரிக்கெட்ஸ் அமெரிக்காவில் ஒரு "பின்னணி சலசலப்பு" ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஈராக்கில் ஆட்சி மாற்றம் தேவை பற்றி இருந்தது என்பது பற்றி தான் அறிந்ததாகக் கூறினார். கொண்டலீசா ரைஸ் புஷ் அதிகாரத்திற்கு வருமுன்பே Foreign Affairs இதழில் சதாம் ஹுசைன் வெளியேற்றப்பட வேண்டும் என்று விவாதித்து "போக்கிரி நாடுகள்" என்ற கருத்தாய்வை அறிமுகப்படுத்தி எழுதியிருந்த கட்டுரை பற்றி பிரிட்டிஷ் அதிகாரிகள் "முழு உணர்வுடன்" அறிந்திருந்தனர் என்றும் அவர் கூறினார். ஒரு புதிய புஷ் நிர்வாகம் இருத்தப்படுவது எதிர்பார்க்கப்பட்டபோது ஈராக் கொள்கை பற்றிய ஒரு பரிசீலனை ஏற்கனவே பாராளுமன்ற தெருக்களில் நடந்தது என்றும் அவர் ஒப்புக் கொண்டார்; ஆனால், "சதாம் ஹுசனை அகற்றுவது பற்றி நம்மிடம் கொள்கை இல்லை. 2001ல் நான் பிரிட்டிஷ் மந்திரிகளுக்கு கொடுத்த ஆலோசனை....நாம் எது உகந்தது என்று நினைத்தோமோ, அது தெளிவாக இருந்தது." 2001ல் வெளியுறவு அலுவலகத்தில் மத்திய கிழக்குத் துறையின் தலைவராக இருந்த சேர் வில்லியம் பேடி கூறினார்: "பெப்ருவரி 2001ல் வாஷிங்டனில் முழங்கிய போர் முரசுகளைப் பற்றி எங்களுக்கு தெரியும், அதைப்பற்றி எங்களுக்குள் விவாதித்தோம்." "எங்கள் கொள்கை அதில் இருந்து ஒதுங்கியிருப்பது என்பதாகும்....ஆட்சியை அகற்றுவது என்ற பிரச்சினை குறிப்பிடப்பட்டது என்று நான் நினைவு கூருகிறேன்....ஆனால் நாங்கள் அத்திசையில் செல்ல வேண்டும் என்ற கட்டாயக் குறிப்பு ஏதும் இல்லை என்பது மிகத் தெளிவு." அப்பொழுது பாதுகாப்பு அமைச்சரகத்தில் கொள்கை இயக்குனராக இருந்த சைமன் வெப், மார்ச் 2001ல் வாஷங்டனுக்கு சென்றிருந்தபோது, அமெரிக்க அதிகாரிகளுடன் சதாம் ஹுசனை அகற்றும் பிரச்சினை விவாதிக்கப்பட்டது என்றார். "அகற்றுவது என்னும் பிரச்சினை விவாதத்திற்கு வந்தது, என்னுடைய குறிப்புக்களில், "நாய் குரைக்கவில்லை" என்று நான் எழுதிவைத்தேன். அது முனகியதே அன்றி குரைக்கவில்லை" என்ற பொருளாகும் என்று அவர் கூறினார். நிரபராதித் தன்மையை பறையறிவிக்கும் நம்பகத்தன்மை சிறிதும் அற்ற முயற்சிகளில், சாட்சியம் கூறியவர்கள் புஷ் நிர்வாகத்தால் நடத்தப்பட்டது துல்லியமாக ஒரு சட்டவிரோதப்போர் என்றுதான் உறுதிபடுத்தியுள்ளனர்--9/11 தாக்குதல்களையும் சதாம் ஹுசைனுக்கும் அல் குவைடாவிற்கும் இடையே இல்லாத பிணைப்புக்கள் இருந்ததாக குற்றம்சாட்டியது அதற்கு போலிக் காரணமாகப் பயன்படுத்தப்பட்டன. |