World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

OECD report cites higher education crisis in Britain

OECD அறிக்கை பிரிட்டனில் உயர்கல்வி நெருக்கடியைக் காட்டுகிறது

By Robert Stevens
16 September 2009

Back to screen version

பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் (OECD) ஆண்டு அறிக்கை "கல்வி ஒரு பார்வை" என்ற தலைப்பில் பிரிட்டனில் உயர்கல்வித்துறையில் வளர்ந்து வரும் நெருக்கடியை சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த அறிக்கை 30 உறுப்புநாடுகள் மற்றும் 6 பங்காளி நாடுகளில் உயர்கல்வித் தேர்ச்சி பற்றிய முக்கிய குறியீடுகளில் இருந்து விவரமாகக் கொடுக்கப்படும் மதிப்பீடாகும். இம்மதிப்பீட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஜேர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன. உயர் கல்வி முடித்து பல்கலைக்கழகப் பட்டம் பெறுபவர்கள் 2000 இல் இருந்த 37 சதவிகிதத்தில் இருந்து 2007இல் 38.7 என்று சிறிது உயர்ந்திருந்தாலும், இங்கிலாந்து 26 மிக அதிக வளர்ச்சியுற்ற நாடுகள் பட்டியலில் 14வது இடத்தைத்தான் பெற்றது. 2000இல் இங்கிலாந்து மூன்றாம் இடத்தில் இணைந்து இருந்தது.

பட்டப்படிப்புக்கல்வி விகிதம் இங்கிலாந்து சர்வதேச சராசரியைவிட சற்றே குறைவான நிலையில் இருப்பதைத்தான் காட்டுகிறது. அக்காலத்தில் 11 நாடுகள் பட்டியலில் பிரிட்டனை விட அதிக நிலையைக்கு உயர்ந்தன. அவற்றுள் ஐஸ்லாந்து, போலந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் போர்த்துக்கல் ஆகியவை உள்ளன.

2000த்தில் இருந்து 2007வரையிலான காலத்தில் போலந்தில் பட்டப்படிப்பு விகிதம் 34 சதவிகிதத்தில் இருந்து 49 சதவிகிதத்திற்கு உயர்ந்தது. அயர்லாந்தில் 33 ல் இருந்உத 63 சதவிகிதம் உயர்ந்தது. மேலும் இப்பொழுது இங்கிலாந்தைக் காட்டிலும் பட்டியலில் மேலிடம் பெற்றுள்ளது ஸ்லோவாக்கிய குடியரசு ஆகும். பள்ளி நீங்குபவர்கள் பட்டத்தைப் பெறும் விகிதம் அந்நாட்டில் 2002ல் 23 சதவிகிதம் என்பதில் இருந்து 2007ல் 39% உயர்ந்துள்ளது.

அமெரிக்காவிற்கு வெளியே பிறநாடுகளைவிட இங்கிலாந்துதான் கூடுதலான சர்வதேச மாணவர்களை அதிகமாகக் கொண்டுள்ளது. OECD இதன் பொருள் "உண்மையான பட்டப்படிப்பு முடிக்கும் விகிதத்துடன் பார்க்கையில் மொத்த உள்நாட்டு பட்டப்படிப்பு விகிதம் கணிசமாக கூடுதல் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. பிரிட்டனில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையை கவனத்திற்கெடுக்காவிட்டால் பிரிட்டனின் பட்டப்படிப்பு விகிதம் 2007ல் 33.6 சதவிகிதம் என்று சரிந்துவிட்டது.

கடந்த தசாப்தத்தில் இங்கிலாந்தின் பல்கலைக்கழகங்கள் அதிகரித்தளவில் வெளிநாட்டு மாணவர்களை அதிக வருமானம் கிடைக்கும் ஆதாரமாகத் தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை கொண்டுள்ளன. பிரிட்டிஷ் மாணவர்களுக்கு இருப்பது போல் அவர்களுடைய கல்விக் கட்டணத்திற்கு உச்ச வரம்பு இல்லை. OECD இந்த வருமான ஆதாரம் இப்பொழுது அதிக உறுதியானதாக இல்லாதுள்ளது என்றும் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைவு வந்துள்ளது என்றும் கண்டறிந்துள்ளது.

"ஒரே மாதிரியான கல்வி வாய்ப்பில் விரும்புவதைத் தேர்தெடுக்கையில், அபிவிருத்தியடையும் நாடுகளில் இருந்து வரும் மாணவர்களைப் பொறுத்தவரையில் செலவு பற்றிய கவலைகள் ஒரு பங்கு வகிக்கின்றன." என்று அறிக்கை கூறியுள்ளது.

"இவ்விதத்தில், இங்கிலாந்திலும் அமெரிக்கவிலும் 2000 முதல் 2007 வரை ஒப்புமையில் வெளிநாட்டு மாணவர்கள் பதிவு செய்வது குறைந்த அதிகரிப்பைத்தான் கண்டுள்ளது... சர்வதேச மாணவர்களிடம் வசூலிக்கப்படும் உயர் கல்விக்கட்டணம் ஒப்புமையையில் இதற்கு காரணம் என்று கூறமுடியும்."

மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை முடிக்க முடியாமல் இருப்பதில் பிரிட்டன்தான் உயர்ந்த விகிதத்தைக் கொண்டுள்ளது. தொழில்தொடர்புடைய பாடத்திட்டங்களைப் பொறுத்த வரையில் மாணவர்கள் குறைந்தளவு பட்டப்படிப்பு விகிதங்களில்தான் உள்ளனர்.

வளர்ச்சியுற்ற நாடுகளில் இளவயதில் (teenge--13 முதல் 19 வரை) படிப்பை நிறுத்திவிடும் விகிதமும் பிரிட்டனில் மோசமான தன்மையில்தான் உள்ளது. துருக்கி, இஸ்ரேல் மற்றும் பிரேசில் ஆகியவற்றில்தான் பிரிட்டனை விட 15-19வயதுவரை உள்ளவர்கள் கல்வி, வேலை அல்லது பயிற்சியில் இல்லாத நிலைப்பாட்டில் (Neets) அதிக சதவிகிதத்தைக் கொண்டுள்ளன.

2006க்கும் 2007க்கும் இடையே இங்கிலாந்து ஏதேனும் ஒரு வகையில் கல்வி, வேலை, பயிற்சி என்று இல்லாத இளைஞர்களை கொண்ட நாடு என்பதின் பட்டியலில் ஆறாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு இங்கிலாந்து வந்துவிட்டது. அக்காலக்கட்டத்தில் 15-19 வயதுக்காரர்கள் Neets என்று வகைப்படுத்தப்பட்டனர். இது 2006ல் 10.9 சதவிதிமும் 2005ல் 9.3 சதவிகிதமும் இருந்தது. OECD சராசரி 4.8% உடன் ஒப்புநோக்கையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான இளவயதினரின் பிரிட்டனில் பணி, பயிற்சி அல்லது கல்வியில் ஈடுபட்டிருக்கவில்லை.

"தொழிலாளர் சந்தையில் தங்கள் இடத்தைப் பெற முயற்சிக்கையில், திறைமைகளின் தேவை மற்றும் விநியோகம் தொடர்பான மாற்றங்களில் இந்த இளம் சந்ததியினர் மிகவும் உணர்வுடன் செயல்படுகின்றன" என்று அறிக்கை கூறியுள்ளது.

OECD புள்ளிவிவரங்கள் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுமுன் திரட்டப்பட்டவை ஆகும். இன்றைய நிலைமை தங்கள் படிப்பைவிட்டு நீங்குபவர்கள், Neets என்று வகைப்படுத்தப்படுவர்கறள் ஆகியோரைப் பொறுத்தவரையில் மிக மோசமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வியில் இருந்து கட்டாயமாக வெளியேறும் நிலைக்கு உட்படுத்தப்படும் இளைஞர்களின் இருண்ட எதிர்காலம் பற்றி கருத்துத் தெரிவித்த OECD கல்வி இயக்ககத்தில் இருக்கும் அன்ட்ரையாஸ் ஷிலைஸர்" இது இன்னும் மோசமாகப் போகும். வேலையற்றுப்போகும் இளைஞர்கள் வேலையற்றே இருக்கின்றனர். தொழிலாளர் சந்தையில் இருந்து விலகிவிட்டால், தக்க தகுதிகள் இல்லாவிட்டால் அங்கு மீண்டும் செல்லுவது கடினம்." என கூறினார்.

பெரும்பாலான மாணவர்கள் இப்பொழுது உயர்கல்விக்கூடத்தை விட்டு விலகுகையில் பல ஆயிரக்கணக்கான பவுண்டுகள் கடனில்தான் நீங்குவர் என்பதை உணர்ந்துதான் நுழைகின்றனர். இந்த ஆரம்பக் கடன்கள் வட்டிப்பணத்துடன் பல ஆண்டுகள் உயர்ந்த நிலையில் இருப்பதுடன், பல்கலைக்கழகத்திற்கு செல்லும் செலவு இப்பொழுது கிட்டத்தட்ட முழு உழைக்கும் ஆயுட்காலம் முழுவதும் தொடரக்கூடும்.

OECD ஆய்வின் மிக வெளிப்படுத்தும் பிரிவுகளில் பள்ளியைவிட்டு நீங்கியவுடன் உடனடியாக வேலையில் சேர்வதைக் காட்டிலும் பல்கலைக்கழகத்தில் சேர்வதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் விளக்கப்பட்டுள்ளன.

மிகப்பெரிய நிதிய இழப்பு படிக்கும் மூன்று ஆண்டுகளில் ஈட்டப்பட்டிருக்கக் கூடிய வருவாய் இழப்புக்கள்தான் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. இதைத் தொடர்ந்து பெருகிய முறையில் கல்விக் கட்டணம் மற்றும் அடிப்படை செலவுகள் மாணவர்கள் வாடகை, உணவு, பானங்கள் ஆகியவற்றிற்கு செலவழிக்கும் பணமும் உள்ளது. பிரித்தானிய மாணவர் தேசிய அமைப்பு தொகுத்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் தங்கள் படிப்பின் முதலாண்டு இறுதிக்கு வரும் மாணவர்கள், படிப்பு முடிவதற்குள் 21,200 பவுண்டுகள் கடனை அடைந்துவிடக்கூடும் என்று கூறுகிறது. 2009/2010 ல் பட்டப்படிப்பை தொடக்குபவர்கள் குறைந்தது இன்னும் 2,000 பவுண்டுகள் அதிகமாக மொத்தத்தில் 23,500 பவுண்டுகள் கடனைக் கொண்டிருப்பர்.

OECD அறிக்கையில் இருந்து எடுக்கப்படும் புள்ளிவிவரங்கள் பட்டப்படிப்பில் இருந்து கிடைக்கும் எவ்வித "நிதிய முன்னேற்றமும்" மிகக் குறைந்ததுதான் என்று காட்டுகின்றன. ஆய்வின்படி, OECDக்குள் இருக்கும் நாடுகளுள் சராசரி நிதிய முன்னேற்றம் வாழ்நாள் முழுவதும் பட்டப்படிப்பு முடித்து உழைப்பதில் மூலம் கிடைப்பது சராசரியாக ஆணுக்கு 113,000 பவுண்டுகளும் பெண்ணுக்கு 81,000 பவுண்டுகள் என்று தெரிகிறது.

அமெரிக்காவை பொறுத்த வரையில் ஒரு ஆண் பட்டதாரிக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்லுவதால் ஏற்படும் நன்மை உழைக்கும் ஆயுட்காலத்தில் 222,000 பவுண்டுகள் என்று கணக்கிடப்படுகிறது. உழைக்கும் ஆயுட்காலம் 50 ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால், இது நிதிய "முன்னேற்றம்" ஆண்டு ஒன்றிற்கு ஆணுக்கு 2,260, பெண்ணிற்கு 1,620 என்றுதான் இருக்கும்.

உண்மையான அளவில் இத்தகைய முன்னேற்றங்கள் பல்கலைக்கழகங்களுக்கு பாரிய செலவினங்கள் செல்வதால், பல்லாயிரக்கணக்கான டாலர்கள் சம்பாதிப்பது இழக்கப்படுதலாலும் எதிர்மறையாகிவிடுகின்றன. OECD புள்ளிவிவரங்கள் பட்டதாரிகள் வேலையில் நுழைந்து பின்னர் "ஆயுட்காலம் முழுவதும் உழைப்பில்" ஈடுபடுவர் என்ற முன்கருத்தைக் கொண்டுள்ளன. பெரும்பாலான பட்டதாரிகளை பொறுத்தவரை இவ்வாறு நடப்பதில்லை. பலரும் நீண்டகால வேலையின்மையை எதிர்கொள்ளுகின்றனர், அல்லது பதவிக்கேற்ற தகுதியைவிட கூடக்கொண்டிருப்பர் அல்லது மிகக் குறைந்த ஊதியங்களை பெறுவர், பல நேரமும் குறைந்த பட்ச ஊதியம்தான் என்ற நிலையும் உண்டு.

OECD மேற்கோளிடும் மற்ற புள்ளிவிவரங்கள் பட்டதாரிகள் வேலை பெறுவதில் ஒரு வீழ்ச்சி உள்ளது என்பதைக் காட்டுகின்றன. 1998ல் இருந்து வேலைக்கு செல்லும் இளம் பட்டதாரிகள் விகிதம் 3 சதவிகிதம் குறைந்துள்ளது.

OECD இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தியடையும் நாடுகளில் இருக்கும் சராசரி அரசாங்க உதவியைவிட குறைவான நிதியைத்தான் பெறுகின்றன என்று காட்டுகின்றன. பிரிட்டனில் பல்கலைக்கழகக் கல்விக்கு பொதுச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.09 சதவிகிதம்தான். இது 1.6 என்று ஸ்வீடனிலும் 2.9 சதவிகிதம் என்று அமெரிக்காவில் இருப்பதைக் காட்டிலும் குறைவு ஆகும்.

இந்தக் கோடையில் 613,000 பேர் உயர்கல்விக்கு விண்ணப்பித்திருந்தனர். இப்படி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 60,000 கூடுதலாக உள்ளது; ஆனால் மிகக் குறைவான முறையில் 13,000 அதிக இடங்கள்தான் கிடைக்கும்.

"அதிக" இடங்களை அளிக்கும் பல்கலைக்கழகங்களிலும் அரசாங்கம் உயர்கல்விச் செலவினங்களை உண்மையில் குறைக்கிறது. பல பல்கலைக்கழகங்கள் அதிக இடங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பதை மறுக்கின்றன. ஏனெனில் கூடுதல் கற்பிக்கும் செலவுகளுக்காக ஆகும் தொகைக்கு அரசாங்கத்திடம் இருந்து அதிக உதவி கிடைப்பதில்லை. உண்மையில் இது செலவினக் குறைப்புப்போல்தான் உள்ளது என்று பல்கலைக்கழகங்கள் வாதிடுகின்றன. இது மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதில் இன்னும் அதிக வீழ்ச்சிக்குத்தான் வழிவகுக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved