World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்France: Teachers and students mobilise to defend education பிரான்ஸ்: ஆசிரியர்கள், மாணவர்கள் கல்வியைக் காக்க திரள்கின்றனர் By Antoine Lerougetel பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆரம்ப, இடைநிலைக் கல்வி பள்ளிகளில் 40 சதவிகிதம் வரை ஆசிரியர்களும் மாணவர்களும் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, ஆசிரியர் குறைப்புக்கள், பிரெஞ்சுக் கல்வி முறையில் கல்விக்கான ஒதுக்குதலில் சரிவு ஆகியவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். உலகம் முழுவதும் அரசாங்கங்கள் கல்வித் துறையில் செயல்படுத்தும் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக மாணவர்களும் ஆசிரியர்களும் உலகெங்கும் நடத்தும் எதிர்ப்பின் ஒரு பகுதிதான் இந்த அணிதிரளல். குறிப்பாக சமீபத்தில் ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் அமெரிக்காவில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை முக்கிய கல்வித் தொழிற்சங்கக் கூட்டமைப்பான FSU (Federation of Unitary Unions), CGT (பொது தொழிலாளர் கூட்டமைப்பு) மற்றும் SUD (ஒற்றுமை-ஒருங்கிணைப்பு-ஜனநாயகம்) கல்விப்பிரிவு ஆகியவற்றால் நடத்தப்பட்டன. முக்கியக் கல்லூரி மாணவர்கள் சங்கமான UNEF (பிரான்சின் தேசிய மாணவர்கள் சங்கம்) மற்றும் பள்ளி மாணவர்களின் சங்கங்களும் மாணவர்களை ஆசிரியர்களை இந்நடவடிக்கையை ஆதரிக்குமாறு அழைப்பு விடுத்தன. தனியார் மயம், அஞ்சல் அலுவலகம் மூடல் இவற்றிற்கு எதிராக நாட்டின் அஞ்சல் துறை ஊழியர்களில் 15 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரு தனி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்; தனி ஆர்ப்பாட்டம் ஒன்றில் 3,000 தொழிலாளர்கள் அணிவகுத்து நின்றனர். FSU பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் 8,000 பேர் இருந்ததாகக் கூறியுள்ளது. ஏராளமான, ஆர்வம் நிறைந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் தொகுப்பும், ஒரு சிறிய பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமும் இதில் சேர்ந்திருந்தன; அவர்கள் முக்கியமாக சோர்போன் மற்றும் பாரிஸ் மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து வந்திருந்தனர். இளைஞர்கள் தொடக்க மற்றும் இடைநிலை ஆசிரியர்களையும் விட அதிக எண்ணிக்கையில் இருந்தது போல் தோன்றியது.சிறிய ஆர்ப்பாட்டங்கள் பிரான்சின் முக்கிய நகரங்களில் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன; இதன் பொருள் பல வேலைநிறுத்தம் செய்தவர்களும் தெருக்களில் சங்கத்துடன் சேர்வதற்குப் பதிலாக வீட்டிலேயே இருக்க முடிவெடுத்தனர் என்பதாகும். மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒன்றாக நடவடிக்கையில் ஈடுபடுத்தும் முக்கிய பிரச்சினைகள், ஆசிரியர் வேலைத் தொகுப்பை முறையாகக் குறைத்தல், ஆசிரியர் பயிற்சியில் சரிவு, மற்றும் கல்வித்துறையில் முறையான வேலை வாய்ப்புக்களை மூடுதல் போன்றவையாகும். உயர்ந்து வரும் வேலையின்மைக்கு மத்தியில், இளைஞர்களிடையே வேலையின்மை 20 சதவிகிதத்திற்கும் அதிகம் சென்றுள்ள நிலைமையில் இது நடக்கிறது. 2010ல் கிட்டத்தட்ட 16,000 ஆசிரியர் பதவிகள் குறைக்கப்பட உள்ளன; இது ஐந்து ஆண்டில் மொத்தம் 50,000 ஆகும்; அரசாங்கப் பணிகளில் இதே காலத்தில் மொத்தம் வெட்டப்பட்ட 136,000 வேலைகளில் கிட்டத்தட்ட பாதி என்ற நிலையில், அரசாங்கத்தின் கொள்கையானது அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெறும் இரு ஊழியர்களுக்கு ஒருவரைத்தான் மாற்றாக நியமிப்பதாக உள்ளது. FSU/CGT யின் கூட்டு அறிக்கை அறிவிப்பதாவது: "அனைத்து ஊழியர் பிரிவுகளிலும் வேலைகுறைப்புக்கள், புதிதாக தேர்ந்தெடுத்தல் இல்லை என்பவற்றின் மொத்த விளைவு கல்வி, பணி நிலைகளில் பெரும் சரிவைக் கொண்டுவருவதாக உள்ளது...செயல்படுத்தப்படும் அல்லது திட்டமிடப்படும் சீர்திருத்தங்கள் .....பல இளைஞர்களுக்கு பொது பணி வேலைகளுக்கு வாய்ப்பை இழக்குமாறு செய்கின்றன...இச்சீர்திருத்தங்கள் கல்வி முறையை சந்தைச்சார்பு உடையதாகச் செய்வதற்கு வளங்களை குறைக்க வேண்டும் என்ற உறுதியுடன் வழிகாட்டப்படுகின்றன." கல்வித்துறை தொழிற்சங்கங்கள் கல்வி ஊழியர்களுக்கு ஊதிய உயர்விற்கு அழைப்பு விடுத்துள்ளன; பல தசாப்தங்களாக அவர்களுடைய வாங்கும் திறன் சரிந்து வருகிறது.இன்னும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு வேண்டும் என்ற அழைப்பைத் தவிர, ஒப்புமையில் குறைவாக இருப்பவற்றை விட அதிகமானவற்றிற்கு கூடுதலான மானியத்தை கொடுக்க வேண்டும் என்றும் UNEF அழைப்பு விடுத்துள்ளது; "ஆசிரியர் பயிற்சியில் புகுத்தப்பட்டுள்ள பிற்போக்குத்தனமான, ஊழல் மலிந்த சீர்திருத்தத்திற்கு" மக்கள் எதிர்ப்பை மேற்கோளிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தற்போதைய இரண்டாண்டு பட்ட மேற்படிப்பிற்கு பதிலாக வரும். இதில் ஓராண்டு கற்பிக்க வேண்டிய கல்விப் பிரிவைப் பயில்வதும், சில கல்வித்துறை கோட்பாடுகளும், இதன் முடிவில் நிரந்தரமாக ஆசிரியர் பதவிக்கு வழிவகுக்கும் ஒரு போட்டித் தேர்வில் பயிற்சியாளர் பங்கு பெறுவது ஆகியன உள்ளடங்கும். அது போட்டியில் 5 சதவிகிதத்தினர் மட்டுமே வெற்றுபெறுபவர்; அவர்கள் இரண்டாம் ஆண்டு, அனுபவம் மிக்க ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்சித் துறை ஊழியர் மேற்பார்வையில் வாரத்திற்கு சில மணி நேரம் கற்பிப்பர்; கற்பிக்கும் கலைப் படிப்புக்களை தொடர்வர். ஆனால் திட்டமிடப்பட்டுள்ள புதிய முறைப்படி, வருங்கால ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு ஆண்டு முதுகலைப் படிப்பை முடிக்க வேண்டும்; அதன் பின் ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளுக்கான போட்டித் தேர்வை எழுதுவர். அதன் பின் அவர்கள் அனுபவமிக்க ஆசிரியர்களை போல் உடனே கற்பிக்க வேண்டும். இதையொட்டி அரசானது இந்தப் புது ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டிய ஓராண்டு ஊதியங்களை சேமிக்கும். அரசாங்க நிதிக்கு மற்றொரு நலன் தோல்வியுற்ற பலர், கல்வித்துறையில் முதுகலைப் பட்டப்படிப்பை பெற்றிருந்தும், ஊதியங்கள், பணி நேரம், உரிமைகள் ஆகியவை மிகவும் குறைக்கப்பட்ட நிலையில், குறுகிய கால ஒப்பந்தத்தில் நியமிக்கப்படக்கூடிய ஆசிரியர்களாக ஒரு தொகுப்பில் இருப்பர். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இரு பிரிவையும் எதிர்ப்பிற்கு தூண்டுதல் கொடுக்கும் மற்றொரு முக்கிய பிரச்சினை அரசாங்கப் பள்ளிகளில் சுமத்தப்படும் சீர்திருத்தம் ஆகும் இது கல்வி மந்திரி லுக் சாட்டெலால் சுமத்தப்படுகிறது; இவருக்கு முன்னால் பதவியில் இருந்த சேவியர் டார்கோஸ் திட்டத்தின் நீர்த்த வடிவை இவர் கொடுத்துள்ளார்; சேவியர் திட்டம் கடந்த கல்வி ஆண்டில் பல்கலைக்கழகங்கள், அரசாங்கப் பள்ளிகள் ஆகியவற்றில் எழுந்த மகத்தான எதிர்ப்பை அடுத்து ஒத்திப்போட வேண்டியதாயிற்று. இச்சீர்திருத்தத்தில் அரசாங்கப் பள்ளிகள் பள்ளிப் பாடத்திட்டங்களில் குறிப்பிட்ட கற்பிக்கும் நேரம் குறைக்கப்பட்டது; இதற்கு காரணம் "தனிப்பட்ட கவன ஆதரவு" கொடுப்பதற்கான நேரம் கிடைக்கும் என்று கூறப்பட்டது; ஆனால் ஆசிரியர் சங்கங்களோ இது பின்தங்கிய மாணவர்களுக்கு நலன்களைக் குறைத்து, நன்கு படிப்பவர்களுக்கு கூடுதல் ஆதாயத்தை கொடுக்கும் என்று கூறின. தொழிற்சங்க அறிக்கைகள் கடந்த ஆண்டுகளில் அனுபவங்கள் பற்றிய மதிப்பீடுகளை கூறவில்லை 2003 (ஓய்வூதியக் குறைப்புக்கள்), 2006 (பணி உரிமைகள் மீதான கடும் தாக்குதல்கள்), 2007/08 (ஓய்வூதிய உரிமைகள், பொதுத்துறையில் பணி நிலைமைகள்) ஆகியவை தொழிற்சங்க்களின் கடும் எதிர்ப்பை மீறி நடத்தப்பட்டன. தொழிற்சங்கங்கள் தங்களால் இயன்ற அளவு போராட்டங்களை தனிமைப்படுத்தி ஒருநாளுடன் நிறுத்தவும், ஒன்றுகூடா எதிர்ப்புக்களாகவும் செய்ய முற்பட்டன. ஆனால் இது ஒன்றும் தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் உரிமைகள், நிலைமைகள் ஆகியவற்றின்மீது அரசாங்கத் தாக்குதல் நடத்துவதைக் குறைத்துவிடவில்லை; மாறாக அதற்கு ஊக்கம் கொடுத்தது. இதையொட்டி அரசாங்கம் குறிப்பிடத்தக்க வகையில் தொழிலாளர்கள் நிலைமையை கணிசமாகக் குறைத்தது மட்டும் இல்லாமல், பொதுப் போக்குவரத்துத்துறை மற்றும் கல்வித்துறை ஆகியவற்றில் வேலைநிறுத்த உரிமைகளிலும் தீவிரக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடிந்தது; அதற்கு குறைந்தபட்சப் பணி என்பது சட்டமாக்கப்பட்டது. தொழிற்சங்கங்களின் அறிக்கைகள் உலகப் பொருளாதார, நிதிய நெருக்கடியைப் புறக்கணிக்கின்றன; இதுதான் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களை தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் வறிய நிலையில் தள்ள வைக்கிறது; அதையொட்டி முதலாளித்துவத்தினர் உலக அரங்கில் போட்டித்தன்மையை அதிகம் பெறுவர். CGT/FSU அறிக்கை இன்னும் அதிக வேலைகள் வேண்டும், நல்ல பணி நிலைமகள், கற்கும் சூழல் ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றுக்கு அழைப்பு விட்டதுடன், குறுகிய கால ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியும், இக்கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் "நீடித்த, பெரிய பூசல்" வரும் என்றும் கூறியுள்ளது: இந்த அச்சுறுத்தல் தங்கள் உறுப்பினர்களை திருப்தி செய்வதற்குத்தான்; உறுப்பினர்களை தொழிற்சங்க முன்னோக்கு உண்மை நிறைந்திருப்பதால் சார்க்கோசி அரசாங்கத்தை தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோருடைய நலன்களைக் காக்க செயல்படச் செய்யும் என்று நம்ப வைப்பதற்காக கூறப்படுவது.கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தினர் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றதாக அறிவித்த பின் FSU ஒரு பயனற்ற அச்சுறுத்தலையும் வெளியிட்டது: "போலித்தனமான விவாதங்கள் என்பவற்றை மந்திரி நடத்துகிறார், ஊழியர்களின் கோரிக்கைகளுடைய அடிப்படையைக் கேட்க மறுக்கிறார். ஊழியர்களின் கருத்துக்களை மந்திரி கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறினால், SNES (FSU வின் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் பிரிவு) கல்வித்துறை, அதன் ஊழியர்கள் பற்றிய மற்ற கொள்கைகளை முன்வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்." இதேபோல் UNEF "Luc Chatel இச்சீர்திருத்தும் ஓராண்டு ஒத்திப்போடப்பட்டதை பயன்படுத்தி உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகும் நலனை எடுத்துக் கொள்ளவில்லை" என்று குறைகூறியிருப்பதுடன், "சமூக உரையாடல் பற்றி" அவர் கொண்டுள்ள இகழ்வுணர்வு பற்றியும் வருந்தியது. "இடது" அரசியல் கட்சிகள் எதுவும் --பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, Jean-Luc Melenchon உடைய இடது கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை-- சலுகைகளைப் பெற அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற முன்னோக்கைத் தவிர வேறு ஏதும் கூறவில்லை. ISSE யின் (International Students for Social Equality) யின் ஜேர்மனியப் பிரிவின் கல்வியைக் காக்க சுயாதீன தொழிலாள வர்க்க இயக்கத்திற்காக" என்னும் அறிக்கை பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் ISSE ஆதரவாளர்களால் வினியோகிக்கப்பட்டது; அது அனைவருக்கும் கெளரவமான கல்விக்கான போராட்டம் என்பது சமூகத்தை சோசலிச மாற்றத்திற்குட்படுத்துவது என்ற போராட்டத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளதுடன், முதலாளித்துவத்திற்கு மாற்றீடு செய்வதை நோக்கமாகக் கொண்ட உலகெங்கிலுமான சோசலிச இயக்கத்தின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது என்றும் கூறியது.அணிவகுத்துச் சென்றவர்கள் சிலரை WSWS நிருபர்கள் பேட்டி கண்டனர். பாரிசில் உள்ள Lycée Jacques Decoures ல் உள்ள Amelie இரண்டாம் ஆண்டு இலக்கியம் பயில்கிறார். மாணவர்களால் தன்னுடைய பள்ளி முற்றுகையிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். "ஆசிரியர்களையும் பொது பண்பாட்டுச் செலவுகளையும் அரசாங்கம் குறைக்கிறது என்றால், அவர்கள் அரசாங்க ஊழியர்கள் பாதி பேரை அகற்ற விரும்புகின்றனர் என்று பொருள்." மற்ற நாடுகளிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கியது நலனைத் தரும் என்றார் அவர். ஆனால் இத்தாக்குதலை நிறுத்த ஆர்ப்பாட்டங்கள் போதுமானவை என்றும் சோசலிஸ்ட் கட்சியின் மீது நம்பிக்கை வைக்கலாம் என்ற கருத்தையும் அவர் கொண்டிருந்தார். பாரிஸில் Clichy ல் உள்ள Lycée Newton ல் இருந்து வந்த Sofyan கூறியது: "அவர்கள் ஆசிரியர்களை குறைத்து கல்விக்கான செலவுகளையும் குறைக்கின்றனர்; இதன் நோக்கம் பெருவணிகத்தின் நலனுக்காக கல்வியை தனியார்மயமாக்குவது ஆகும். எந்தப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் அனைவருக்கும் கல்வி இலவசமாகக் கிடைக்க வேண்டும். சார்க்கோசி இருக்கும் வரை வலதை உறுதிகுலைப்பது என்பது கடினம். நம் வருங்காலம் கடினமாக உள்ளது. தற்போதைய முறை மாற்றப்பட வேண்டும். அதற்காக நாம் எதையும் செய்ய வேண்டும். அதன்பின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கலாம்." பாரிசில் Lycée Rodin ல் முதலாண்டு படிக்கும் பெர்ட்ராண்ட் கூறியது: "தெருக்களில் இருந்து வரும் அழுத்தம் டார்க்கோசை பின்வாங்க வைக்கும்." கடந்த காலத்தில் போராடியது போல் இளைஞர்கள் போராட முடியும், ஆனால் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மூலம் தீர்வு ஏதும் வராது என்று இவர் கருதினார். "போர்கள் நிறுத்தப்பட்டு சமாதானம் வேண்டும்; ஆனால் அது சிக்கல் வாய்ந்த பிரச்சினை; சமூகம் பிளவுற்றிருக்கிறது, பல்வேறு நலன்களைக் கொண்டுள்ளது" என்றார். பாரிசில் ஒரு தொடக்கப் பள்ளி பயிற்சி ஆசிரியராக மோர்கன் உள்ளார். அவர் கூறினார்: "ஐரோப்பாவில் கல்விப் பாதுகாப்பிற்காக நடக்கும் இயக்கங்கள் பற்றி அறிவோம். எப்பொழுதும் நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆசிரியர்களையும் பொதுப் பண்பாட்டையும் அகற்றுவதின் மூலம் அரசாங்கம் சிக்கனம் செய்ய விரும்புகிறது. சிறப்புக் கல்வியையும் அவர்கள் குறைக்க முற்படுகின்றனர். இதன் பொருள் கூடுதலான ஆசிரியர்கள் தற்காலிக ஒப்பந்தங்களில் நியமிக்கப்படுவர் என்பதாகும்." தெருக்களில் இருந்து வரும் அழுத்தம் போதாது என்று அவர் ஒப்புக் கொண்டார். "ஆசிரியர் பயிற்சியாளர்கள் நடைமுறை அனுபவம் பெற மாட்டார்கள் என்பதைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டு பல்கலைக்கழகச் சீர்திருத்தத்தை விரட்டியிருக்க முடியும் [LRU என்பதின்படி பெருவணிகத்தின் நிதியத்திற்கு உட்பட்ட தன்னாட்சி பல்கலைக்கழக முறை]. ஆனால் தொழிற்சங்கங்கள் அதிகம் ஏதும் செய்யவில்லை." இருக்கும் அரசியல் கட்சிகளுடன் நெருக்கடி தீர்க்கப்பட முடியும் என்று அவர் நினைத்தாலும், சோசலிஸ்ட் கட்சியில் நடக்கும் "தனிநபர் உயர்வுப் போராட்டம்" ஏமாற்றத்தைத் தருகிறது என்றார். "நாம் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும். உண்மையான எதிர்க்கட்சி வேண்டும்...இத்தாலி போல் மாறுகிறது என்று நினைக்கிறேன்; அங்கு எதிர்க்கட்சிகள் சில்வியோ பெர்லுஸ்கோனியின் ஆளுமையில் குவிப்புக் காட்டுகின்றன, அவருடைய அரசியல் வேலைத்திட்டத்தில் அல்ல. பிரான்ஸும் அந்த திசையில்தான் சென்று கொண்டிருக்கிறது." |