WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Unemployment rises in 29 US states
29 அமெரிக்க மாநிலங்களில் வேலையின்மை பெருகுகிறது
By Patrick Martin
23 November 2009
Use this
version to print | Send
feedback
மத்திய தொழிற்துறை வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையின்படி அக்டோபர் மாதத்தில்
அமெரிக்க மாநிலங்கள் ஐம்பதில் 29 மாநிலங்களில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ள. கலிபோர்னியா, புளோரிடா,
தென்கரோலினா, டிலாவேர் ஆகியவை 1976ல் இருந்து மிக அதிக உயர்வைக் காட்டியுள்ளன. 1976 இல் தான்
தொழிற்துறை மாநிலவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆரம்பித்தது. கொலம்பியா மாவட்டமும் இதுவரை
இல்லாத அளவிற்கு உயர்ந்த வேலையின்மை எண்ணிக்கையைக் கண்டுள்ளது.
அமெரிக்காவில் மிகப் பெரிய மாநிலமான கலிபோர்னியாவில் வேலையின்மை விகிதம்
12.5 சதவிகிதத்தை எட்டியது. இது நான்காம் மிகப் பெரிய மாநிலமான புளோரிடாவில் 11.2 சதவிகிதம்
ஆகும். 29 மாநிலங்கள் வேலையின்மைப் பெருக்கத்தைக் காட்டுவதே செப்டம்பர் மாதத்தை விட அதிகமாகும்.
அம்மாதம் 22 மாநிலங்கள்தான் வேலையின்மை விகிதத்தில் உயர்வைக்காட்டியிருந்தன. எட்டு மாநிலங்களில் வேலையின்மை
விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. 13 மாநிலங்கள் வேலையின்மை அதிகரிப்பை காட்டியுள்ளன.
நாட்டின் மிக உயர்ந்த வேலையின்மை விகிதத்தை மிச்சிக்கன் தொடர்ந்து
அக்டோபரிலும் காட்டியது. இதன் 15.1 சதவிகிதம், செப்டம்பர் விகிதமான 13.2 ஐ விட சற்று குறைந்ததாகும்.
இதைத் தொடர்ந்து நெவடா 13 சதவிகிதம், ரோட் தீவு 12.9 சதவிகிதம், கலிபோர்னியா 12.5 சதவிகிதம்,
தென் கரோலினா 12.1 சதவிகிதம் என்று கொண்டுள்ளன. மொத்தத்தில் 13 மாநிலங்கள் தேசிய சராசரியான
10.2 சதவிகிதத்தைவிட அதிக விகிதத்தைக் கொண்டுள்ளன (மற்றவை இல்லிநோய்ஸ், இந்தியானா, ஒகையோ, கென்டக்கி,
டெனசி, ஓரேகான், அலபாமா, வடக்குகரோலினா மற்றும் ஜோர்ஜியா ஆகியவை.)
கார்த்தயாரிப்புத் தொழிலின் மையங்களான மிச்சிகன், ஒகையோ, கென்டக்கி மற்றும்
இந்தியானா ஆகியவற்றில் வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் சிறிது உயர்வைக் கண்டன. இதற்கு
ஓரளவு பழைய வாகனங்குக்கு பதிலாக புதிய வானங்களை வாங்குவோருக்கான நிதியுதவி திட்டமே காரணமாகும்.
இத்திட்டம் செப்டம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டது.
மிச்சிக்கன் தகவல்படி வேலைகளின் எண்ணிக்கை 38,600 என்று உயர்ந்துள்ளது. இது
எந்த மாநிலத்துடனும் ஒப்பிடும்போது இரண்டாம் மிகப் பெரிய எண்ணிக்கை ஆகும். டெக்சாஸிற்கு அடுத்து இது
உள்ளது. டெக்சாஸில் பெரும்பாலும் கல்வித்துறை, சுகாதாரக் காப்புத் துறை மற்றும் அரசாங்கப் பிரிவுகளி.
41,700 வேலைகள் அதிகமாயின. ஆயினும்கூட மொத்தத்தில் டெக்சாஸின் வேலையின்மை மொத்தம் 8.3
சதவிகிதம் என்று உயர்ந்துள்ளது.
ஓராண்டிற்கு முன்பு இருந்ததைவிட 50 மாநிலங்கள் ஒவ்வொன்றும் அதிக வேலையின்மை
விகிதத்தைக் காட்டியுள்ளது. அனைத்துமே அக்டோபர் 2008ல் இருந்த மொத்த வேலையில் இருந்த
எண்ணிக்கையைவிடக் குறைவான எண்ணிக்கையைத்தான் கொண்டுள்ளன. டிசம்பர் 2007ல் உத்தியோகபூர்வமாக
அமெரிக்க மந்தநிலை துவங்கியதில் இருந்து மொத்த அமெரிக்க வேலையின்மை 8.2 மில்லியன் மக்களை கூடுதலாகக்
கொண்டுள்ளது.
மாநில வாரியான வேறுபாடுகள் உறுதியா தெரிந்தளவில் மிச்சிகனின் 15.1
சதவிகிதத்தில் இருந்து வடக்கு டகோடாவின் 4.2 சதவிகிதம் வரை பிராந்திய வேறுபாடுகள் அதிகம் இல்லை.
மேற்கு அமெரிக்கா மிக அதிக வேலையின்மை விகிதத்தை 10.8 சதவிகிதம் என்று கொண்டுள்ளது. வடகிழக்கு
குறைந்த விகிதமான 8 சதவிகிதமாக Midwest,
South இவற்றிற்கு இடையே உள்ளன.
இந்தப்புள்ளி விவரங்கள் சமூக இடர்பாட்டின் பேரழிவு தரும் தரங்களைக்
குறிக்கின்றன. அதுவும் உத்தியோக பூர்வ வேலையின்மை விகிதம் பகுதி நேரம் மற்றும் ஊக்கமற்ற தொழிலாளர்கள்
என அழைக்கப்படுபவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டால் இரு மடங்கு ஆகும்.
மற்ற சில வெளிவந்துள்ள அறிக்கைகளும் அமெரிக்காவில் பொருளாதார, சமூக
நெருக்கடிகள் ஆகியவற்றின் மனித பரிமாணங்களை நன்கு புலப்படுத்துகின்றன.
The Mortgage Bankers Association
கடன் வாங்குபவர்களில் 14 சதவிகிதம் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் (ஜூலை- செப்டம்பர் 2009)
தொந்திரவிற்கு உட்பட்டிருந்ததாகவும் இது எந்தத் தொழிலிலும் இல்லாத அளவிற்கு அதிகம் என்றும் தகவல்
கொடுத்துள்ளது. வீடுகள் விலைச் சரிவைவிட வேலையின்மைதான் தவணைகளைக் கட்டுவதில் தாமதம் போன்றவற்றில்
மிகப் பெரும் காரணியாக உள்ளது.
இந்த 14 சதவிகிதம் என்பது எண்ணிக்கையில் மாற்றப்படும்போது 7.4 மில்லியன்
குடும்பங்கள் என்று ஆகிறது. இது ஏலத்திற்கு விடப்பட்ட கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி ஆகும். கொடுக்க வேண்டிய
கட்டண தாமதங்களில் மூன்றில் இரு பகுதியாகும். ஆனால் இன்னும் அவை முன்கூட்டிய விற்பனைக்கு வரவில்லை. இது
ஓராண்டிற்கு முன் பிரச்சனைகுட்பட்டிருந்த 5 மில்லியன் வீடுகளுடன் ஒப்பிடத்தக்கது.
மக்கள் புள்ளிவிவரக் கணக்கு அளவையின் படி, தற்பொழுதைய சரிவின் துவக்கக்
கட்டமான 2007ல் தயாரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில், அமெரிக்கர்களில் 20 சதவிகிதத்தினருக்கு
வெளி உதவி இருந்தால்தான் உணவு, அடைமானச் செலவுகள் மற்ற பயன்பாடுகள் இவற்றைச் சமாளிக்க முடியும்
என்று இருந்தது. 9 சதவிகித வீடுகள் உணவு, சூப் இலவசத் திட்டங்களுக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஒரு மில்லியன்
விடுகள் குளிர்பதன சாதனமோ, உஷ்ணப்படுத்தும் கருவியோ இல்லாமல் இருந்தன.
டெட்ரோயிடன் ப்ரி பிரஸ் ஞாயிறன்று கொடுத்த அறிக்கை ஒன்று மிச்சிகனில் மிக
அதிக மக்கள் உணவு உதவி, மருத்துவ உதவி, மற்றும் பிற சமூக உதவி வழிவகைகளை ஏற்கின்றனர் என்றும், தங்கள்
வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள சமீபத்திய தொழிலாளர்களின் புதிய விண்ணப்பங்களும் கருத்திற்
கொள்ளப்பட்டால், நாடு முழுவதும் சமூகப் பணி அலுவலகங்கள் பெரும் திணறலுக்கு உட்பட்டுள்ளன என்று கூறுகிறது.
கிட்டத்தட்ட 1.8 மில்லியன் மக்கள் கடந்த மாதம் மிச்சிகனில் மருத்துவ உதவி
நலன்களைப் பெற்று வந்தன 1.65 மக்கள் உணவு உதவியைப் பெற்றனர். மக்களில் 20 சதவிகிதத்திற்கும்
மேலானவர்கள் ஏதேனும் ஒரு வித உதவியை நம்பியுள்ளனர்.
மாநிலத்தின் மிகப் பெரிய தொகுதியான வேன் தொகுதியில் கிட்டத்தட்ட ஒரு
மில்லியன் மக்கள் உணவு அல்லது மருத்துவ உதவியைப் பெற்றனர். இப்பட்டியலில் டெட்ரோயிட் நகர மக்களும்
அடங்குவர். முன்பு பெரிதும் வசதி பெற்றிருந்த ஓக்லாந்து தொகுதிப் புற நகரங்களில் கிட்டத்தட்ட 224,000
மக்கள் அக்டோபர் மாதம் உணவு உதவி அல்லது மருத்துவ உதவியைப் பெற்றனர்.
இதற்கிடையில் நியூ யோர்க் மாநிலத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி நவம்பர் 17 அன்று
வெளியிட்ட அறிக்கையில், 2009ல் வோல் ஸ்ட்ரீட்டின் இலாபங்கள், ஊகவணிகக் குமிழின் உச்சியான 2006ல் பெற்ற
மிக உயர்ந்த இலாபங்களையும் விட அதிக இலாபங்களைக் கொள்ளும் என்று கணித்துள்ளார். நான்கு பெரும்
முதலீட்டு நிறுவனங்கள்--Goldman Sachs, Morgan
Stanley, Merrill Lynch (இப்பொழுது பாங்க் ஆப்
அமெரிக்காவின் முதலீட்டுப் பிரிவு), JP Morgan
Chase--ஆகியவை இந்த ஆண்டு முதல் ஒன்பது மாதங்களில்
$22.5 பில்லியன் இலாபங்களை ஈட்டின.
நியூயோர்க் பங்குச் சந்தையின் உறுப்பு நிறுவனங்கள் 2009ன் முதல் ஆறு மாதங்களில்
மிக அதிகமான $35.7 பில்லியன் வணிக இலாத்தை ஈட்டின. இது முந்தைய உயர்நிலையைவிட மிக அதிகமாகும்;
2000 த்தில் இருந்ததைவிட இது கிட்டத்தட்ட $9 பில்லியன் அதிகமாகும். அமெரிக்க வங்கிகளில் உயர்மட்டத்தில்
உள்ள 6 வங்கிகள் ஏற்கனவே $112 பில்லியனை ஊதியங்களுக்கும் மேலதிக கொடுப்பனவுகளுக்கும் இந்த ஆண்டின்
முதல் 9 மாதங்களுக்கு ஒதுக்கி வைத்துள்ளனர்; இது இந்த ஆண்டின் இறுதியில் மேலதிக கொடுப்பனவுகபானஸ்கள்
அறிவிக்கப்படும்போது, 2007ல் மிக அதிகமாக இருந்த மொத்தமான $162 பில்லியனையும் விட எளிதில் அதிகமாக
இருக்கும்.
ஆசியப் பயணத்தின் இறுதியில் பதிவு செய்யப்பட்ட தன்னுடைய சனிக்கிழமை இணையதள,
வானொலி உரையில், ஜனாதிபதி ஒபாமா எவ்விதச் சிறப்பு வேலைகள் தோற்றுவிக்கும் திட்டத்திற்கும் இடமில்லை
என்று கூறிவிட்டார். அமெரிக்கப் பொருளாதாரம் இப்பொழுது மந்த நிலையில் இருந்து மீள்கிறது என்று கூறிய ஒபாமா,
"வளர்ச்சிப் பெருக்கத்தை தொடர்வதற்கு நாம் செலவைக் குறைக்க வேண்டும், சேமிப்பை அதிகரிக்க வேண்டும்,
நம்முடைய கூட்டாட்சி வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும்" என்று அறிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி அரங்கம் என்று வெள்ளை மாளிகையில் டிசம்பர் மூன்றாம்
திகதி ஐனாதிபதி கூட்டவிருக்கும் அமைப்பிற்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில், "நன்கு ஆராயப்படாத
முடிவுகள்--நல்ல நோக்கங்கள் இருந்தாலும்--நாம் எடுக்காமல் இருப்பது முக்கியமாகும்; அதுவும் நம்முடைய
இருப்புக்கள் மிகக் குறைந்த நிலையில் இருக்கும்போது" என்றார்.
"வணிகங்கள் மீண்டும் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் வரை நான் ஓயமாட்டேன்"
என்று பொதுத் துறையில் இருந்து இல்லாமல், தனியார் முதலாளித்துவத்தினரிடம் இருந்துதான் புதிய வேலைகள்
வரும்" எனக் கூறும் சொல்லாட்சியல் அவர் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை அரங்கிற்கு ஒபாமா அழைத்துள்ளோர் பட்டியில் நல்ல உண்மையைப்
புலப்படுத்துகிறது: "தலைமை நிர்வாக அதிகாரிகள், சிறு வணிக உரிமையாளர்கள், பொருளாதார வல்லுனர்கள்,
நிதிய வல்லுனர்கறள், மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், இலாபம் எதிர்பாராமல் நடத்தும் அமைப்புக்களின்
பிரதிநிதிகள் என்று பட்டியலில் உள்ளனர்." ஒரு தொழிலாளியோ, வேலையில்லாதவரோ இதின் தொடர்பு
இல்லாதுள்ளனர். |