World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Parents, pupils speak out over Abbeydale Grange closure

ஏபிடேல் கிரேஞ்ச் பள்ளி மூடலைப் பற்றி பெற்றோர்கள், மாணவர்கள்

By our reporters
24 November 2009

Back to screen version

நவம்பர் 21ம் தேதி ஷெபீல்டில் ஏபிடேல் கிரேஞ்ச் பள்ளி மூடப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் பலரிடம் உலக சோசலிச வலைதள செய்தியாளர் குழு உரையாடியது.

டீன் மோர்டொன் இப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவரின் பெற்றோர் ஆவார். "ஏழாம் ஆண்டில் இப்பள்ளியில் என்னுடைய குழந்தை படிக்கிறது. பள்ளி மூடப்பட்டால், ஷெபீல்டின் வரலாற்றில் அது மிக வருத்தம் கொடுக்கும் நாளாகும். நகரத்தின் மறு பகுதியில் இருந்து வருவதால் அவர் ஒரு பஸ், டிராம் ஆகியவற்றை எடுத்து பள்ளிக்கு வர வேண்டியிருக்கிறது.

"நங்கள் ஒரு பள்ளிக்கு அலைந்தபோது, ஏபிடேல் கிரேஞ்ச்தான் எங்களை வரவேற்ற ஒரே பள்ளி. ஏன் இப்பள்ளியை மூடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அவர்கள் கொடுக்கும் காரணங்கள் பள்ளியை மூடப் போதுமானதாக இல்லை. பணமோ இருக்கிறது, அவர்கள் அதை வேறுவிதத்தில் செலவிட முடிவெடுத்துள்ளனர். ஏபிடேல் கிரேஞ்சு மூடப்படக்கூடாது, ஏபிடேல் கிரேஞ்ச் மட்டும் அல்ல. நாங்கள் இருக்கும் இடத்தில் Wisewood, Myers Grove பள்ளிகள் உள்ளன. நான் Myders Grove க்குச் சென்றிருந்தேன். அங்கும் இரு பள்ளிகளையும் மூடி புதிய பள்ளியை நிறுவப் போகிறார்கள். அங்கு இது ஒரு பெரிய பிரச்சாரமாக உள்ளது; ஆனால் அமைப்பாளர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதைக் கைவிட்டுவிட்டனர்.

"எனவே விந்தையானது ஏபிடேல் முடப்பட்டால், நான் என்னுடைய பையனை எங்கள் உள்ளுர்ப்பள்ளியில் சேர்க்க வேண்டும், பின் அதுவும் மூடப்பட உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் பள்ளிகள் இருக்கும் இடப்பகுதிகள் பெரும் மதிப்புடையவை, அவர்கள் அந்தப் பணத்தை விரும்புகிறார்கள் என்றுதான் முக்கியமாகத் தோன்றுகிறது.

"நகரவையில் வேலைபார்க்கும் ஒரு நபரை எனக்குத் தெரியும்; அவருடைய வேலையே நகரவை நிலத்தை விற்பது; இது 20 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நமக்குத் தேவையான பல உட்பட அவர்கள் அனைத்தையும் விற்கின்றனர். எல்லா நீச்சல் குளங்களையும் அவர்கள் விற்றுவிட்டனர்."

ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் செய்தித்துறை, பிரெஞ்சு கற்கும் மாணவி எம்மா கிரையன் ஆவார். அவர் குறிப்பிடுவதாவது: "இப்பிரச்சினை அனைவருக்கும் பொதுவானது. இது கல்வித் தொடர்பு மட்டும் கொண்டிருக்கவில்லை. பள்ளியை சுற்றிப் பல சமூக செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது மூடப்பட்டால் அது பெரும் இழப்பு ஆகும்.

"அதற்கு மறுக்கப்பட்ட 14 மில்லியன் பவுண்டுகளை ஏபிடேல் பெற்றிருக்க வேண்டும். இதில் உள்ள பிரச்சினைகள் பலவற்றுள் ஆங்கிலத்தில் அது பெறவேண்டிய தரத்தை அடைய முடியவில்லை என்பது ஒன்று; ஏனெனில் அங்கு ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கொண்டவர்கள்தான் நிறைய உள்ளனர்."

ஜோன் பேக்கர் கூறினார்: "எனக்கு நான்கு பையன்கள் உண்டு; ஒன்று பள்ளிப் படிப்பை விட்டுவிட்டனர், அல்லது முடித்துவிட்டனர், ஒரு பையன் இன்னும் படிக்கிறான். நானே முன்னாள் ஆசிரியர்தான்.

"நாட்டில் பல இடங்களிலும் இத்தகைய மூடல்களை நான் பார்த்துள்ளேன். ஷெபீல்டில் இருக்கும் முக்கிய அரசியல் கட்சிகளைப் பார்க்கையில், அவை அனைத்தும் ஒரேவித புதிய தாராளக் கொள்கையைத்தான் தொடர்கின்றன; இவைதான் ஏபிடேல் போன்றவை மூடப்படும் நிலைமையை ஏற்படுத்துகின்றன."

ஹானா ஸ்மித் கூறினார்: "நான் Springfield Primary School ல் கற்கும் ஆசிரியர். அப்பள்ளி ஏபிடேல் கிரேஞ்சிற்கு மாணவர்களை அனுப்பி வைக்கும். ஏபிடேல் மூடப்பட்டால் அது ஒரு பெரும் சோகம் ஆகும். இது ஒரு குழந்தையின் முழு ஆளுமை பற்றியும் குவிப்பைச் சிறப்பாகக் காட்டுகிறது. கல்வித்துறை சாதனை பற்றி மட்டும் பல அழுத்தங்கள் உள்ளன, எல்லா குழந்தைகளும் அதை அடையமுடியாது. இப்பள்ளி அளிக்கும் சூழ்நிலை குழந்தைகள் பல விஷயங்களில் வெற்றி அடையக்கூடிய விதத்தில் உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி பெறும் உரிமை உண்டு; அரசாங்கத்தின் வேலை அதை அளிப்பதுதான்."

டோனி டிக்வெல் ஏபிடேல் கிரேஞ்ச் பள்ளியில் ஒரு ஆசிரியர் ஆவார்; 18 ஆண்டுகளாக அங்கு வேலைபார்த்து வருபவர். அவர் கூறியதாவது: "பள்ளியை திறந்து வைக்க உண்மையான ஆதாரங்கள் உள்ளன, ஆனால் நகரவை அதைப் புறக்கணிக்கக்கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். இதில் பிரச்சினை லிபரல் ஜனநாயகவாதிகள், நகரத்தின் அதிகாரத்தில் இருப்பவர்கள், பணத்தை சேமிக்க வேண்டும், நல்ல விலைக்கு விற்றுவிடக்கூடிய இடத்தில் பள்ளி உட்கார்ந்துள்ளது என்பதுதான்."

ஆடம் கூறினார்: "நான் இப்பள்ளியின் முன்னாள் மாணவர். இப்பொழுதும் அங்கு அவ்வப்பொழுது நாடகத் தொழில்நுட்பக்காரர் என்னும் முறையில் செல்லுகிறேன். என்னால் முடிந்தபோதெல்லாம் பிரச்சாரத்திலும் ஈடுபடுகிறேன்.

"இப்பிரச்சினையில் நகரவை ஏற்கனவே மூடல் என்ற முடிவை எடுத்துவிட்டது. மேசையில் அனைத்து விருப்புரிமைகளும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர், ஆனால் எந்த விருப்புரிமைகளையும் எங்களுக்கு கொடுக்கவில்லை. உதட்டளவில்தான் பலவற்றைப் பேசுகின்றனர்.

"முக்கிய அரசியல் கட்சிகள் பற்றி நீங்கள் கூறுவதுடன் நான் உடன்பாடு கொள்ளுகிறேன். அவை அடிப்படையில் தங்களுக்குள் அதே விஷயங்கள் பற்றி விவாதிக்கின்றன. நமக்குத் தேவையானது நம்பிக்கை நிறைந்த ஒரு கட்சி, அதைத் தைரியமாக எடுத்துக்கூறும் கட்சியாகும்.

"எனக்கு தெரிந்த பலரும் ஏபிடேல் கிரேஞ்சு மூடப்படக்கூடாது என்றுதான் விரும்புகின்றனர்; நகரவை செலைக் குறைக்கும் முயற்சியாக இதைச் செய்கிறது என்றுதான் நினைக்கின்றனர். நகரவையை பொறுத்தவரையில் குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிகளை வைத்திருப்பது செலவுக் குறைவு ஆகும்."

11ம் ஆண்டுப் படிப்பில் இருக்கும் ஏபிடேல் கிரேஞ்ச் மாணவி ராஷேல் ஆட்கின்சன் ஆவார். அவர் கூறியது: "என்னால் இயன்றளவு பிரச்சாரத்தில் தொடர்பு கொண்டுள்ளேன்; சில வாரங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டங்கள் இரண்டிற்கும் சென்றிருந்தேன். பள்ளியை அவர்கள் மூடுவது என்பது முற்றிலும் முறையற்றது ஆகும். பல பள்ளிகளில் இருப்பவர்கள் ஏபிடேலுக்கு ஆதரவு கொடுக்கின்றனர், இது மூடப்படக்கூடாது என்றுதான் விரும்புகின்றனர்."

ஏபிடேல் கிரெஞ்ச் பள்ளியில் ஒரு மாணவரான தோமஸ் ரைஸ் கூறினார்: "எங்கள் பள்ளி எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் ஒவ்வொரு பள்ளியாலும் அன்றாடம் எதிர்கொள்ளப்படுகிறது. மக்கள் கேட்கத் துவங்கிவிட்டனர். வலுவான வாதங்களை நாங்கள் முன்வைத்துள்ளோம்."

பிரச்சாரத்தின் அடுத்த கட்டங்களை பற்றிக் கேட்டபோது, தோமஸ் கூறினார்: "இப்பிரச்சாரம் விரிவுபடுத்தப்பட வேண்டும், ஏனெனில் மற்ற பள்ளிகளுக்கும் இதே கதிதான் ஏற்படும். அவற்றைவிட நாங்கள் வேறுபட்டவர்கள் அல்லர்."

ஏபிடேல் கிரேஞ்சிற்கு அவர்களை அனுப்பும் ஒரு உள்ளூர் பள்ளியில் உள்ள இரு குழந்தைகளுக்கு ஏஞ்சலா ரீடிங் தாயாவார்.

"ஏபிடேல் கிரேஞ்ச் மூடப்படுவதை நான் விரும்பவில்லை என்பதால் இங்கு உள்ளேன். இது வெற்று ஆர்ப்பாட்டமாக போய்விடாது என்று நம்புகிறேன். ஆலோசனை ஒன்றும் சரியான ஆலோசனையாக இல்லை. திட்டமிடும் அனுமதி The Stasr செய்தித்தாள் இருக்கும் இடத்தில் ஒரு பாதுகாப்பு இல்லத்திற்கு கொடுக்கப்பட இருப்பதை நான் அறிவேன். நான் என்னுடைய குழந்தை உள்ளூர்ப் பள்ளியில் படிக்க வேண்டும் என்று விரும்பினேன். குழந்தையின் நண்பர்கள் பிரிந்துவிட நான் விரும்பவில்லை. பள்ளிக்குச் செல்ல அதிகம் பயணிப்பதையும் விரும்பவில்லை. பஸ்களில் மிரட்டல்கள் இருக்கும். பள்ளி நேரமோ நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது."

"உண்மை என்ன என்றால், கூறப்படுவதில் இருந்து ஏபிடேல் முற்றிலும் மாறுபட்டது. பள்ளி எதிர்கொள்ளும் சவால்கள் மற்ற பள்ளிகளைவிட அதிகமாகும்; அதற்காக பள்ளி அதிகாரிகளுக்கு யாரும் நன்றி கூறுவதில்லை."

மாகம் பீயர்ஸ் இரு இளம் குழந்தைகளின் பெற்றோர் ஆவார்.

அவர் கூறியது: "என்னுடைய குழந்தைகள் உள்ளூர் பள்ளிகளுக்கு செல்கின்றனர் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் சமூகம் முக்கியம், அதுதான் சமூகப் பிரச்சினைகளுக்கு விடை என்று கூறுகின்றனர். பள்ளி என்பது சமூகத்தின் மையமாகும். ஆனால் பள்ளிகளை மூடுவதில் ஒரு வடிவமைப்பு இருப்பது தெரிகிறது. தோல்வியுறும் பள்ளிகள் மூடப்படத்தான் வேண்டும் என்பதுதான் அரசாங்கம் கொடுக்கும் ஒரே விடையாகும். உள்ளூர்ப்பள்ளியை மூடினால் சமூகம் சிதையும். குழந்தைகள் பல இடங்களுக்குச் செல்ல நேரிடும், பள்ளிக்குச் செல்ல நீண்ட நேரம் தேவைப்படும். குழந்தையில் பணி நாளை கிட்டத்தட்ட வயது வந்தவருடையதைப் போல் அது செய்துவிடும்.

"சில பயணங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவையாக இருக்கலாம். ஆபத்திற்கு அவர்களை உட்படுத்துகிறோம். என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து இதை நான் அறிவேன். சிறு குழந்தையாக Coventry ல் நான் பள்ளிக்குச் செல்ல நீண்ட பயணத்தைக் கொண்டிருந்தேன்; என்னை துன்புறுத்தினார்கள். என்னுடைய குழந்தைகளுக்கு சற்று அதிக வயதானதும் நான் வேலைக்குச் செல்லும் நம்பிக்கையில் இருக்கிறேன். உள்ளூர்ப்பள்ளி இல்லாவிட்டால் அது கடினமாகும்.

"இது ஒரு தேசியப் பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். பெற்றோர்கள், குழந்தைகள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக நின்று அரசாங்கத்திடம் எங்களுக்கு மிகப் பெரிய பள்ளிகள் தேவையில்லை. சமூகப் பள்ளிகள்தான் தேவை என்று கூறவேண்டும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved