World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama's China trip

ஒபாமாவின் சீனப் பயணம்

Barry Grey
20 November 2009

Back to screen version

தன்னுடைய எட்டு நாள் ஆசியப் பயணத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ஒபாமா தன்னை "முதல் பசிபிக் ஜனாதிபதி" என அறிவித்து, தன்னுடைய பயணம் அப்பிராந்தியத்தில் அமெரிக்கத் தலைமையை மீண்டும் உறுதிப்படுத்தும் என்று கூறினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பொறுத்த வரையில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியைக் கொண்டுள்ள பூகோளத்தின் ஒரு பகுதியில் அதன் மேலாதிக்க நிலையைத் தக்க வைத்துக் கொள்ளுதல் ஒரு வாழ்வா-மரணமா என்ற பிரச்சினை ஆகும்.

எப்படிப் பார்த்தாலும், இப்பயணம், மிகவும் குறிப்பாக ஒபாமாவின் மூன்று நாள் சீனப் பயணம் உலக நிலையில் அமெரிக்காவின் வீழ்ச்சியைத்தான் காட்டியது என்பதுடன், ஆசியாவிலும் மற்ற இடங்களிலும் உள்ள தலைவர்கள் இந்த பெரும் உண்மையை பெருகியமுறையில் நன்கு அறிந்துள்ளனர் என்ற தகவலையும்தான் காட்டியுள்ளது. அமெரிக்காவில் வெடித்த உலகப் பொருளாதார நெருக்கடியினால் விரைவாக்கப்பட்ட உலக உறவுகளில் மாறும் நிலைப்பாடுகள் உலக விஷயங்களில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முன்னோடியில்லாத வகையில் உறுதியற்ற தன்மையையும், அழுத்தத்தையும் கொடுத்துள்ளன.

ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் சீனாவில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைககளில் இருந்த இராஜதந்திர சிறப்பு நெறிகளின்கீழ், வணிகம், நாணயங்கள், பொருளாதாரச் செல்வாக்கு ஆகியவற்றைப் பெற்றி பெருகிய முரண்பாடுகள் சில நேரங்களில் அசாதாரணமான அப்பட்டமான முறையில் உணரப்பட்டன.

அமெரிக்கா தற்போதைய பொருளாதார நெருக்கடியின் முதல்கட்டங்களில் இருந்த, அதன் எழுச்சி பெற்று வரும் போட்டியாளர்களிடம் இருந்து, குறிப்பாக சீனாவிடம் இருந்து, இன்னும் வலிமை இழந்தவகையில்தான் வெளிப்பட்டு வந்துள்ளது. டாலர் சரிவதை அனுமதிக்கும் கொள்கையினால் அதன் போட்டியாளர்கள் வாஷிங்டனின் முக்கிய பொருளாதார நெம்புகோலைக் கொண்டு, அது தன் நலன்களை உறுதிப்படுத்த முடியாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற உண்மையில் இது மிக வேதனையுடன் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய ஏற்றுமதிகளை மலிவாக்கு போட்டியிடும் நாடுகளின் பொருள் இறக்குமதிகளை அதிக செலவுடையதாகச் செய்யும் விதத்திலும், சீனா, ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் மிகப் பெரிய டாலர் இருப்புக்களை அச்சுறுத்துவதின் மூலமும், அமெரிக்கா தன்னுடைய நீண்ட காலச் சரிவை, நெருக்கடியின் பாதிப்பை மற்ற நாடுகளின் மீது சுமத்தும்முறையைக் கையாள முற்பட்டுள்ளது.

இவ்வாறு செய்கையில், அது டாலர் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் மீதும் உலக நம்பிக்கையை இன்னும் குறைமதிப்பிற்குட்படுகிறது.

அமெரிக்கா-சீனாவிற்கு இடையே உள்ள அப்பட்டமான மாறியுள்ள நிலைமை பற்றி வெளிவந்துள்ள ஏராளமான கருத்துக்களில் நியூயோர்க் டைம்ஸில் நவம்பர் 15 அன்று வந்த ஒரு கட்டுரை கீழ்க்கண்டவாறு தொடங்கியது: "ஜனாதிபதி ஒபாமா முதல் தடவையாக ஞாயிறன்று சீனாவிற்கு செல்லுகையில், பல விதங்களில் ஒரு ஊதாரித்தனமாக செலவுசெய்பவர் தன்னுடைய வங்கியாளருக்கு மரியாதை தெரிவிக்கவந்துள்ள பங்கைத்தான் கொள்ளுவார்.

சீனாதான் அமெரிக்காவிற்கு வெளிநாட்டில் இருந்து மிகஅதிகம் கடன் கொடுத்துள்ள நாடு என்ற அப்பட்டமான உண்மை. இது உலகின் தனி மிக்குயர் சக்தி என்ற நிலைமைக்கு சவால் விடுக்கக்கூடிய சாத்தியத்தை கொண்டுள்ள ஒரே நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள உறவுகளின் மையத்தன்மையை மாற்றி விட்டது."

இதே கருத்தாய்வின் சற்று மாறுபட்ட ஒலிக்குறிப்பு நவம்பர் 14 பைனான்ஸியல் டைம்ஸில் வந்துள்ள தலையங்கம் ஆகும்; அது பின்வருமாறு தொடங்கியது: "ஆசியாவிற்கு ஒபாமா பயணிக்கையில் அவர் ஒரு பெரும் தாக்குதலுக்குள்ளான மிக்குயர் சக்தியின் அரசாங்கத் தலைவர் என்ற முறையில் செல்லுகிறார். அமெரிக்காவில் நலிந்த தன்மைக்கு டாலரை விட வேறுசிறந்த அடையாளம் இல்லை. ஆசியர்கள் இந்த நாணயத்தின் மீது தங்கள் மக்கள் பாடுபட்டு உழைத்த செல்வத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் திரு ஒபாமாவோ அவருடைய விருந்தாளிகளிடம் சிரித்துக் கொண்டு அதைப் பொறுத்துக் கொள்ளுமாறு மட்டுமே கூறமுடியும்."

அமெரிக்க நிதியக் கொள்கையின் ஆத்திரமூட்டும் மற்றும் ஆக்கிரோஷத்தன்மை பற்றி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூடுதலான முக்கியத்துவத்தை காட்டியுள்ளது; "நிக்சன் சகாப்தத்தின் நிதி மந்திரி ஜோன் கோனலியின் புகழ்பெற்ற சொற்களான "டாலர் எங்களுடைய நாணயமாக இருக்கலாம், ஆனால் அது உங்கள் பிரச்சினை" என்பதின் புதுப்பிக்கப்பட்ட, இன்னும் நயமான கருத்தைத்தான் ஒபாமா நிர்வாகம் வெளியிடுவது போல் உள்ளது."

உண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்த முதல் ஜனாதிபதியாக நிக்சன் இருந்தன் பின்னர் வந்துள்ள மாற்றம் பல படிப்பினைகளை கொடுக்கிறது. 1972ல் ஏற்கனவே சரியத் தொடங்கியிருந்தாலும், அமெரிக்கா உலகின் மேலாதிக்க தொழில்துறை சக்தியாக இருந்து, அதிக கடன்களை பிற நாடுகளுக்குக் கொடுத்த நாடாகவும் இருந்தது.

ஜனாதிபதி கிளின்டன் பெய்ஜிங்கில் 11 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய தர்பாரை விட இப்பொழுது வந்துள்ள மாற்றம் இன்னும் குறிப்பிடத்தக்கது ஆகும். அப்பொழுதே உலகில் மிக அதிகம் கடன் வாங்கிய நாடு என்று இருந்த அமெரிக்கா, நவம்பர் 18 பதிப்பில் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டதைப் போல், "பனிப்போரில் வெற்றியாளர், உலகின் ஒரு பெரும் மிக்குயர் சக்தி என்ற நிலைப்பாட்டில் குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், சீனா அமெரிக்க கருவூலப் பத்திரங்களை அதிகமாக கொண்ட ஏழாவது பெரிய நாடாக இருந்தது. இன்று சீனாதான் அமெரிக்காவிற்கு மிகஅதிகம் கடன் கொடுத்துள்ள நாடு என்று இருப்பதுடன், அமெரிக்காவுடனான அதன் வணிகம் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது."

இப்பொழுது ஒபாமாவின் நோக்கம் கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளிடம் சீனாவின் பெருகிவரும் பொருளாதார, அரசியல் மற்றும் பெரும் இராணுவ திறனுக்கு தான் ஒரு எதிர்க்கனமாக நம்பப்படலாம் என்பதை உறுதி செய்வதாக உள்ளது. அடுத்த ஆண்டு சீனா ஜப்பானையும் கடந்து, அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல் உலகின் இரண்டாம் மிகப் பெரிய பொருளாதாரம் என்ற நிலைக்கு வரும்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிலும், தெற்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் சிங்கப்பூர்க் கூட்டத்திலும், வெளிப்பட்டு வந்து கொண்டிருக்கும் ஒரு ஆசிய வணிக முகாமில் இருந்து தன்னை ஒதுக்கிவிடாத முயற்சியில் ஒபாமா ஈடுபட்டார். அத்தகைய வணிக முகாமில் சீனா மேலாதிக்கச் செல்வாக்கைச் செலுத்தத் தயாரான நிலையில் உள்ளது.

டாலர் சரிவின் எதிர்மறைப்பாதிப்பு மற்றும் கிட்டத்தட்ட பூஜ்ய வட்டி விகிதத்தை ஒட்டி சொத்துக்கள் குமிழி பெருகக்கூடிய அபாயத்தைப் பற்றியும் மற்றும் மத்திய வங்கிக்கூட்டமைப்பு மாபெரும் அளவில் டாலர்களை அச்சிடுவது ஆகியவற்றால் ஆசிய நாடுகளிடையே உள்ள சீற்றத்தை அமெரிக்காவிடம் இருந்து அதை சீனாவிற்கு திசைதிருப்பும் விதத்தில் அவர் முற்பட்டார். சீனாவோ தன்னுடைய அண்டை நாடுகளுடன் வணிக நலன்களை தன்னுடைய நாணயமான யுவானை டாலருடன் பிணைத்ததில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையொட்டி அதுவும் பச்சை வண்ண டாலருடன் இணைந்த விதத்தில் தன் நாணய மதிப்பைச் சரிய விடுகிறது.

ஆனால் பொருளாதார பாதுகாப்பு வாத கொள்கைக்கான பகிரங்கக் கண்டனங்களுக்கு அமெரிக்காதான் உட்பட்டுள்ளது. இதில் மெக்சிகோவின் கண்டனமும் அடங்கும். சந்தை சக்திகளுடன் தொடர்பு கொண்ட முறையில் நாணயங்கள் மதிப்புப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்க ஆதரவு பெற்ற தீர்மானம் ஒன்றைத் தடுப்பதில் சீனா வெற்றி அடைந்தது.

சீனா தன் நாணயத்தை மறுமதிப்பீடு செய்யும் வகையில் உலகப் பொருளாதாரத்தை "மறு சீர் நிலைக்கு" கொண்டு வருவதற்கான பொறுப்பைக் கொள்ள வேண்டும் என்னும் ஒபாமாவின் திட்டம், சீன அதிகாரிகளின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் சிதைந்தது. சீன அதிகாரிகள் அமெரிக்க நிதியக் கொள்கையை உலகப் பொருளாதார மீட்பிற்கு ஒரு அச்சுறுத்தல் என்று கண்டித்து, பாதுகாப்பு வரிக் கொள்கைகளுக்காகவும் அமெரிக்காவைத் தாக்கியுள்ளனர். மலிவான அமெரிக்க டாலர்கள் மற்றும் வாஷிங்டன் சமீபத்தில் சீன டயர்கள், எஃகு குழாய்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதின் மீது இறக்குமதி வரி சுமத்தியது ஆகியவற்றினால் வரக்கூடிய பணவீக்க அச்சுறுத்தல் பற்றி அப்பகுதியில் இருக்கும் கவலைகளை அவர்களால் சுட்டிக்காட்ட முடிந்தது.

மிகப் பெரிய, அமைதியற்ற, பெரும்பாலும் வறிய மக்களை கொண்ட வலுவற்ற ஆட்சிக்கு தலைமை தாங்கும் சீனாவின் ஆளும் உயரடுக்கிற்கு, வாஷிங்டனின் கோரிக்கைகளை ஏற்பது என்பது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது ஆகும். கடந்த ஆண்டில், பெயரளவிற்கு தேர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் இருந்தாலும், சீனாவின் ஏற்றுமதிகள் 20 சதவிகிதம் குறைந்து, கிட்டத்தட்ட 40 மில்லியன் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். ஏற்றுமதிகளில் இன்னும் சரிவு ஏற்படுவதால் வரககூடிய சமூக தாக்கங்கள், அதுவும் யுவானை முக்கிய மறுமதிப்பீட்டைத் தொடர்ந்து வரக்கூடியது, இன, பெரும்மக்கட்தொகை மற்றும் வர்க்க அழுத்தங்கள் நிறைந்திருக்கும் ஒரு பிற்போக்கான நாட்டில் இன்னும் பெரிய வெடிப்பை ஏற்படுத்தும்.

நிதிப்பிரிவில் நம்பியிருப்பது என்பதின் உண்மை நிலை ஒபாமாவை சீனாவின் நிதியக் கொள்கை மற்ற பிரச்சினைகள் பற்றி தன்னுடைய பொது எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதில் பெரும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளச் செய்துள்ளன. ஒபாமாவும், சீன ஜனாதிபதி ஹு ஜீன்டாவும் தனிப்பேச்சுக்களுக்குப் பிறகு கூட்டாக செய்தியாளரிடம் தோன்றியது ஒரு கடுமையான சூழலைக் காட்டியது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கைகளில் உடன்பாடு வேண்டும் என்னும் ஒபாமாவின் அழுத்தத்திற்கு ஹு அடிபணிய மறுத்து யுவானைப் பற்றி ஏதும் பேசவில்லை. மாறாக அமெரிக்க ஜனாதிபதிக்கு காப்புவரிக் கொள்கையின் தீமைகள் பற்றி உபதேசித்தார்.

சீனாவின் எழுச்சியை வரவேற்பது போல் காட்டிக் கொள்ளுவதில் ஒபாமா பெரும் ஊக்கம் கொண்டு, உலக விவகாரங்களில் முக்கிய பங்கை அது கொண்டுள்ள அந்தஸ்த்திற்கும் ஒப்புதல் கொடுத்தார். கிட்டத்தட்ட $800 பில்லியனை அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களாகக் கொண்டுள்ள அமெரிக்காவிற்கு மிக அதிக கடன் கொடுத்துள்ள சீனாவிற்கு அவர் உத்தரவாதம் அளிக்க முற்பட்டார். உயரும் அமெரிக்கப் பற்றாக்குறைகளைக் கட்டுப்படுத்துவது பற்றித் தான் தீவிரமாக இருப்பதாகவும், அமெரிக்க மக்கள்மீது நிதியக் கட்டுப்பாட்டைச் சுமத்த இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் அமெரிக்க ஆளும்வர்க்கம் மற்றும் அதன் நெருக்கமான மேலை நாடுகளின் உண்மையான சிந்தனையின் வடிவமைப்பு செய்தி ஊடக வர்ணனையாளர்களால் வெளிப்படுத்தப்பட்டது; அவர்கள் ஒன்றும் எந்த தடைக்கும் உட்பட்டிருக்கவில்லை. குறிப்பிடத்தக்க வகையில் சீற்றத்தைக் கொட்டியது தாராளவாதிகளின் கருத்துக்கள் ஆகும்; அவர்கள்தான் தங்கள் தடையற்ற சந்தை நிலைப்பாடுகள் பற்றி பெருமிதம் கொள்ளுபவர்கள் ஆவர்.

ஒபாமாவின் ஆசியப் பயணத்திற்கு முன்னதாக நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையாளரும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனருமான பெளல் க்ருக்மன் அக்டோபர் 23ம் தேதி "சீனாவின் சீற்றத்திற்குரிய நாணயக் கொள்கை பற்றி" சாடி, "உங்கள் அண்டை வீட்டாரை பிச்சைக்காரர்களாக்குக என்னும் கொள்கை முக்கிய நாடுகளால் செயல்படுத்தப்படுவது ஏற்கப்பட முடியாதது. சீனாவின் நாணயம் பற்றி ஏதேனும் செய்யப்பட வேண்டும்" என்றார்.

ஒபாமா சீனாவில் இருந்தபோது, க்ருக்மன் மீண்டும் இந்தக் கருத்து பற்றி கூறினார் (நவம்பர் 16); "சீனா தன்னுடைய போக்கைத் திருத்திக் கொள்ளாவிட்டால் இழிவான மோதலுக்கான ஒரு சாத்தியம் உள்ளது" என்று எச்சரித்த அவர், "ஒரு ஆபத்தான விளையாட்டை அவர்கள் மேற்கொண்டுள்ளனர் என்பதை ஒபாமா சீனர்களுக்கு கூற வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

நவம்பர் 18 அன்று ஒரு கட்டுரையில் பைனான்ஸியல் டைம்ஸில் மார்ட்டின் வொல்ப், சீனத் தலைமையிடம் நடத்தும் விவாதங்களில் "ஜனநாயகங்கள் தங்கள் வெளிப்படையான அணுகுமுறையில் இருந்து சண்டையிடுவதற்கு தயாராக விரைவாக மாறிக்கொள்ளலாம் என்பதை நீங்கள் அறியத் தவறியிருக்கக்கூடும்." என்பதை விளக்கியவிதத்தில் ஒபாமா ஈடுபட வேண்டும் என்று ஆலோசனை கூறினார்:

பிரிட்டிஷ் ரெலிகிராப்பில் எழுதிய அம்புரோஸ் ஈவல்ஸ் பிட்சார்ட் இன்னும் வெளிப்படையாக "அமெரிக்கா இரந்து நிற்பது போல் பேசுவது நவீன நிலைப்பாடாக இருக்கிறது. இது மூலோபாய சமசீர்நிலையை தவறாகப் புரிந்து கொள்ளுவது ஆகும். சந்தையை மூடுவதின் மூலம் எந்த நேரமும் சீனாவை வாஷிங்டன் மண்டியிட வைக்க முடியும். இதில் ஒன்றும் செஞ்சீரான அளவு இல்லை. பெய்ஜிங் அதன் அமெரிக்க கருவூலப் பத்திரங்களை மாற்றிவிடுவது என்பதும் மூலதனக் கட்டுப்பாடுகளின் மூலம், தீவிரமாக தேவைப்பட்டால், சமன் செய்துவிடப்பட முடியும். நல்ல இராணுவ வலிமை படைத்த முழுஉரிமை பெற்ற நாடுகள் தாங்கள் விரும்புவதைச் செய்யலாம்." என்றார்.

இத்தகைய சீற்ற உரைகள் அவற்றில் இருக்கும் தகுதி என்பது மட்டுமல்லாமல், அமெரிக்க மேலாதிக்கத்தை தளமாகக் கொண்டுள்ள பழைய உலக ஒழுங்கின் முறிவை குழப்பும் நிலையில் உலக மறுபகிர்வு செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் முக்கிய சக்திகளுக்கு இடையே வெடிப்புத்தன்மை மற்றும் வன்முறை அழுத்தங்கள் பெருகுவதின் பிரதிபலிப்பு என்றுதான் கவனத்துடன் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். உலக முதலாளித்துவ முறையில் "பல்துருவமுனைப்பட்ட" துண்டாடலுக்காக அமைதியான முறையிலான மாற்றம் என்பது இருக்காது என்பதை இவை வலுவாக குறிப்பிட்டுக் காட்டுகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved