World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Obama leaves Asia empty-handed ஆசியாவில் இருந்து ஒபாமா வெறுங்கையுடன் திரும்புகிறார் By John Chan அமெரிக்க ஜனாதிபதியின் ஆசியப் பயணத்தில், மற்ற நாடுகளைப் போலவே இறுதியில் அவர் சென்றிருந்த தென்கொரிய பயணமும் அதிக வெற்றியளிக்கவில்லை. ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் சீனாவில், குறிப்பிடத்தக்க அளவிற்கு ஒபாமா எந்தப் பொருளாதாரச் சலுகைகளையும் பெற்றுவிடாததுடன், அதிரிக்கும் அமெரிக்க பொருளாதார பாதுகாப்புவாதம் பெரிதும் எதிர்ப்பிற்கு உட்பட்டது. நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடம் பெற்றிருந்த இரு நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற சந்தை உடன்பாடு பற்றியும், வியாழனன்று தென்கொரியாவிலும் இதேபோல் சமரசத்திற்கு இடமில்லாத ஜனாதிபதி லீ மிங் பாக்குடனான பேச்சுவார்த்தைகளிலும் அதிக முன்னேற்றம் காணவில்லை. முந்தைய தென் கொரிய ஜனாதிபதி ரோ மோ ஹுயின் உடன் புஷ் நிர்வாகம் ஒரு தடையற்ற சந்தை உடன்பாட்டில் புஷ் நிர்வாகம் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் இரு நாடுகளின் சட்டமன்றங்களிலும் அதற்கு இசைவு கிடைக்கவில்லை. அமெரிக்க காங்கிரஸில் இருந்த ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க கார்கள் மற்றும் மின்சார பாவனைப் பொருட்கள் மீது இருந்த கட்டுப்பாட்டு தடைகள் மற்றும் வரிகள் அகற்றப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். சியோல் தன்னுடைய விவசாயத்துறைக்கு அமெரிக்க ஏற்றுமதிகளில் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்திவிட்டது. இப்பிரச்சினைகளில் இருந்த தீவிர கருத்து வேறுபாடுகள் ஏட்டளவில் பூசி மெழுகப்பட்டன. லீயைச் சந்தித்த பின்னர் உடன்பாட்டில் முன்னேற்றம் காண தான் உறுதியாக இருப்பதாக ஒபாமா அறிவித்தார். ஆனால் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டார். தன்னுடைய பங்கிற்கு லீ உணர்ச்சிகள் நிறைந்த கார்ப் பிரச்சினை பற்றி பரிசீலனை செய்யத் தயார் என்றும், "அதே நேரத்தில் கொரியாவின் விவசாய, பணிகள் தொழில்துறைகள் பற்றிய அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நியாயமற்றதாக உள்ளது என்று தெளிவாக்க விரும்புகிறேன்." என்று கூறினார். ஒபாமாவை போல் தென்கொரிய பொருளாதார பாதுகாப்புவாத செல்வாக்கு செலுத்துபவர்கள் குழுவிடம் இருந்து லீ அதிக அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளார். அமெரிக்க பண்ணைப் பொருட்களுக்கு நாட்டின் சந்தைகளை திறந்துவிடுவது விவசாயத் துறையில் 130,000 வேலைகளை தகர்த்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு அமெரிக்க மாட்டு இறைச்சி இறக்குமதியை மீண்டும் தொடரலாம் என்ற லீயின் முடிவு எதிர்பாராமல் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்கள் பலவற்றை பாரியளவில் தூண்டிவிட்டு, பல குழப்பக் கலவைகள் நிறைந்த பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. அதில் மாட்டு நோய், வேலை இழப்புக்கள் தொடர்பான அச்சத்துடன் அமெரிக்க எதிர்ப்பு உணர்வின் எழுச்சியும் இருந்தது. கார் துறையைப் பொறுத்தவரையில், தென்கொரிய சந்தையை விட அமெரிக்கச் சந்தை 13 மடங்குதான் அதிகமானது என்றாலும் கடந்த ஆண்டு கெடிலக், கிறைஸ்லர் மற்றும் போர்ட் கார்கள் தென் கொரியாவில் மொத்தமாக விற்றதைக் காட்டிலும் Hyndai-Kia அமெரிக்காவில் 100 மடங்கு அதிக வாகனங்களை விற்றுள்ளது என வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தென் கொரிய அதிகாரிகள் தென் கொரியக் கார்கள் அமெரிக்க சந்தையில் விற்கப்பட்டவற்றில் பாதிக்கும் மேலானவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்றும் GM தான் தென்கொரியாவின் மூன்றாம் மிகப் பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனமான Daewoo உடைய உரிமையாளர் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஏற்கனவே கடுமையான பாதிப்பிற்கு உட்பட்டுள்ள கார்த் தயாரிப்புத் துறையில் இன்னும் வேலை இழப்புக்கள் ஏற்பட்டால் சமூக அமைதியன்மை ஏற்படும் என்று லீ அஞ்சுகிறார். ஆகஸ்ட் மாதம் அவர் பியாங்டெக்கில் இருக்கும் Ssangyong கார் ஆலையில் 2,600 வேலைகள் குறைக்கப்பட வேண்டும் என்பதற்கு எதிராக 77 நாட்களாக நடைபெற்றுவந்த தொழிலாளர்கள் ஆக்கிரமிப்புப் போராட்டத்தை முறிக்க ஆயிரக்கணக்கான கலகம் அடக்கும் பிரிவுப் போலீசாரை அனுப்பிவைத்தார். அதே நேரத்தில், மற்ற ஆசிய தலைவர்களை போலவே, அமெரிக்காவில் காப்புவரி முறை பெருகுவது பற்றி கவலை கொண்டுள்ளார். சீனப் பொருட்களுக்கு எதிராகச் சமீபத்தில் அமெரிக்காவில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது அதைச் சுட்டிக்காட்டுகிறது. தென்கொரியாவுடனான ஒரு தடையற்ற வணிக ஒப்பந்தம் என்பது அமெரிக்காவிற்கும் முக்கிய ஆசிய நாட்டிற்கும் இடையிலான முதலாவதாக இருக்கும். தென்கொரியா அமெரிக்காவில் ஏழாம் மிகப் பெரிய வணிகப் பங்காளி ஆகும். இரு நாடுகளுக்கும் இடையேயான வணிகம் 2008ல் 82.9 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. தாய்லாந்துடனும் மலேசியாவுடனும் வணிக ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளுவதற்கான முயற்சிகளும் இடர்பாடுகளை கண்டன. ஆசியாவை சீனா, ஜப்பான் ஆகியவற்றை மத்தியமாக கொண்டுள்ள பிராந்திய வணிகக் கூட்டிற்கான 70 வணிக உடன்பாடுகளில் அமெரிக்கா பெரிதும் கைவிடப்பட்டுவிட்டது. சிங்கப்பூரின் முன்னாள் பிரதம மந்திரி லீ குவான் யூ சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் பொருளாதார பாதுகாப்புவாத உணர்வு நீண்டகால விளைவுகளைக் கொடுத்துவிடும் என்ற எச்சரித்தார். "இப்படிச் சென்றால், ஒபாமா ஒரு இரண்டாம் பதவிக்காலத்தையும் விரும்புவார் என்று கொண்டால் அடுத்த எட்டு ஆண்டுகளில் தடையற்ற சந்தைக்கு எதிரான கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டால், அமெரிக்கா பொருளாதாரப் போட்டியில் இருந்து அகற்றப்பட்டுவிடும். பொருளாதாரப் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டால், நீண்ட கால அடிப்படையில் இழப்பு நேரிடும்--குறிப்பாக சீனாவிடம்" என்று அவர் கூறினார். இப்பகுதியில் மற்ற இடங்களைப் போல், சீனாவில் எழுச்சிபெறும் பொருளாதார சக்தி தென்கொரியாவிலும் அதன் பாதிப்பைக் கொண்டுள்ளது. "நகரத்தில் விழா நடத்துவது அமெரிக்கா மட்டுமல்ல" என பைனான்ஸியல் டைம்ஸ் கூறியுள்ளது. சியோலுக்கு 20 ஆண்டுகள் முன்பு ஜனாதிபதி மூத்த புஷ் பயணித்தார். அப்பொழுது அமெரிக்காதான் இந்நாட்டின் முக்கிய வணிகப் பங்காளியாக இருந்தபோது வாரத்திற்கு ஒரு முறைதான் தென்கொரியாவில் இருந்து சீனாவிற்கு விமானப் போக்குவரத்து இருந்தது. அமெரிக்காவிற்கு பதிலாக இப்பொழுது தென்கொரியாவின் மிகப்பெரிய வணிகப் பங்காளி என்று சீனா வந்துவிட்டது. வாராந்திர விமானப்போக்குவரத்துக்கள் 642 என்று உயர்ந்துள்ளன. சீனாவிற்கு ஒபாமா சென்றது குறித்து, தென் கொரியாவின் பெரிய நாளேடான Chosun Ilbo அறிவித்தது; "சீனாவிடம் என்ன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் நிலையில் அமெரிக்கா இல்லை." இரு சக்திகளுக்கும் இடையே ஒரு சமசீர் தன்மையை தென்கொரியா காண முற்பட வேண்டும் என்று அந்தத் தலையங்கத்தில் வாதிடப்பட்டுள்ளது. "ஒரு புதிய தசாப்தம் தொடங்குகையில் இராஜதந்திர மூலோபாயங்கள் மாறவேண்டும். ஒரு தனிப்பாதை அணுகுமுறைக்கு அப்பால் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது; அதற்கு பதிலாக பல அடுக்குகள் உள்ள திட்டம் தேவைப்படுகிறது." ஆனால் தென் கொரியா இராணுவரீதியில் அமெரிக்காவை பெரிதும் நம்பியுள்ளது. பனிப்போர்க்காலத்தில் வாஷிங்டனும் ஏற்பட்ட உடன்பாட்டை சியோல் இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், இந்நாட்டில் இன்னும் பல அமெரிக்க இராணுவத் தளங்களும் 28,500 அமெரிக்க துருப்புக்களும் உள்ளன. தென் கொரிய ஜனாதிபதி லீ வலதுசாரி Grand National Party ஐ சேர்ந்தவர். 1980களின் பிற்பகுதி வரை அமெரிக்க ஆதரவுடன் பதவியில் இருந்த பல அரசாங்களின் அரசியல் முகமாக அக்கட்சிதான் இருந்தது. ஒபாமாவும் லீயும் வட கொரியா மற்றும் அதன் அணுசக்தி திட்டம் பற்றி தங்கள் பொதுக் கடினப் போக்கை உறுதி செய்தனர். அதுதான் மற்ற முக்கிய விவாதிக்கப்பட்ட பிரச்சினையாகும். "ஜனாதிபதி லீயும் நானும் கடந்தகாலத்தில் இருந்த நடைமுறை உடைக்கப்பட வேண்டும் என்பதில் உடன்பட்டுள்ளோம். அதில் வடகொரியா ஆத்திரமூட்டும் முறையில் நடந்து கொள்கிறது. பின் சிறிதுகாலம் பேச்சுவார்த்தைகளுக்கு வருகின்றது. அதன் பின் இன்னும் சலுகைகளைக் கோரி பேச்சுவார்த்தைகளில் இருந்து விட்டுவிலகிக் கொள்கின்றது" என்று ஒபாமா அறிவித்தார். ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீபன் பொஸ்வொர்த் டிசம்பர் 8ம் தேதி பியோங்யாங்கிற்கு வருவார் என்றும், அந்தப்பணி அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா மற்றும் இருகொரியாக்கள் ஆகியவை நடத்தும் பேச்சுவார்த்தைகளப் பற்றி மட்டும்தான் இருக்கும் என்று வலியுறுத்தினார். அதன் அணுசக்தி நிலையங்களை அகற்றுவதற்கு வட கொரியா மீது அழுத்தும் கொடுக்கும் விதத்தில் பொருளாதார சக்தியை "பெரும் பேரமாக" பயன்படுத்த வேண்டும் என்னும் லீயின் திட்டத்திற்கு தான் உடன்பட்டுள்ளதாகவும் ஒபாமா கூறினார். வட கொரியாவின் ஆத்திரமூட்டும் அணுகுமுறை பற்றி பிரச்சாரங்கள் இருந்தாலும், அமெரிக்க ஆதரவுடன் இரு கொரியாக்களுக்கும் இடையே அழுத்தங்களையும் வேண்டுமேன்றே லீ அதிகரிக்கிறார். முந்தைய நிர்வாகங்களின் "சூரிய ஒளி வீசும் கொள்கை" என அழைக்கப்படும் முறைக்கு மாறாக, 2007ல் அதிகாரத்திற்கு வந்தபின்னர் வடகொரியாவிற்கு உணவுப் பொருட்கள், உரங்கள் ஆகியவற்றை அனுப்புவதை நிறுத்திவிட்டார். இது வடகொரியாவிற்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு மில்லியன் தொன் உணவுப் பொருட்களை இல்லாமல் செய்துள்ளது. மேலும் பட்டினிக்கும் வழிவகை செய்துள்ளது. லீயின் "பெரும் பேரம்" என்பது ஒரு பொருளாதார அச்சுறுத்தல்தான். வாஷிங்டன் போஸ்ட்டின் கருத்துப்படி, வட கொரியாவுடன் எந்தவித கொடுக்கல்வாங்கல்களின் ஒரு பகுதியாக உணவு உதவியளிப்பது இல்லை என்று ஒபாமா நிர்வாகம் கூறிவிட்டது. உறுதியளிக்கப்பட்டிருந்த அரை மில்லியன் டன்களுக்கு பதிலாக புஷ் நிர்வாகம் 160,000 தொன் உணவுதான் கொடுத்தது. அது பெப்ருவரி 2007ல் ஆறு நாடுகள் கொண்ட உடன்பாட்டின் ஒரு பகுதியாகும். டிசம்பர் 2008 ஐ ஒட்டி, இந்த உடன்பாட்டை அமெரிக்கா புதிய மதிப்பீட்டு கோரிக்கைகள் முன்வைத்ததும் கிட்டத்தட்ட சரிந்துவிட்டது. அந்தக் கொள்கை ஒபாமாவாலும் தொடரப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒபாமா நிர்வாகம் வடகொரியா நடத்திய ஏவுகணைச் சோதனை ஒன்றைப்பயன்படுத்தி அனைத்து உணவு உதவிகளையும் நிறுத்திவிட்டது. ஒபாமாவின் பயணத்தை எந்த வெளிநாட்டு விருந்தாளியையும் சூழ்ந்திராமல் பரத்த, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை பற்றி கவலை கொண்டு தென்கொரிய அதிகாரிகள் 13,000 துருப்புக்களையும் பாதுகாப்புப் பிரிவினரையும் ஒரு நாள் பயணத்திற்கு திரட்டியிருந்தனர். கடந்த சனிக்கிழமை அன்று சியோலில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் முன் தென்கொரியா ஆப்கானிஸ்தானிற்கு 300 துருப்புகளை அனுப்பவதாக இருந்த திட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பரித்தனர். துருப்புக்களின் எண்ணிக்கை பின்னர் 500 ஆக அதிகரிக்கும், "மறு சீரமைப்பு" என்று அழைக்கப்படும் திட்டத்தின்கீழ் அனுப்பபட்டுள்ள 130 கொரிய வல்லுனர்களை பாதுகாப்பதற்கு இது என்று கூறப்படுகிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு தென்கொரியா கொடுக்கும் ஆதரவு நாட்டில் பரந்த மதிப்பிழப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி கிம் டே யுங் தென்கொரிய மருத்துவ, பொறியியல் பிரிவுகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியிருந்தார். 2004 ல் ஜனாதிபதி ரோ ஈராக்கிற்கு 3,600 துருப்புகளை அனுப்பியிருந்தார். இது அமெரிக்க, பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு அடுத்தாற்போல் அதிக எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டு அவர்கள் திரும்பப் பெறப்பட்டனர். 2007ல் தென்கொரிய உதவிப் பணியாளர்களை தலிபான் கைப்பற்றியபின் எதிர்ப்பு அலைகள் வெடித்து, தென் கொரியா ஆப்கானிஸ்தானிற்கு படைகள் அனுப்புவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கட்டாயம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் நவகாலனித்துவப் போரை விரிவாக்கும் ஒபாமாவின் கொள்கைக்கும் குறைந்த ஆதரவு கிடைத்ததைத்தான் ஒபாமா தன் ஆசியப் பயணத்தில் பெற்ற ஆதாயம் என்று காட்ட முடிந்தது. லீயின் சிறு அளவு துருப்புக்கள் அனுப்பப்படும் என்ற உறுதிமொழியை அடுத்து ஜப்பானிய பிரதம மந்திரி யுகியோ ஹடோயமா, ஆக்கிரமிப்பிற்கு உதவும் வகையில் ஜப்பானிய கடற்படை எரிபொருள் அமெரிக்காவிற்கு கொடுத்து உதவுவது நிறுத்தப்படுமானால் அதற்கு நஷ்ட ஈடாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானிற்கு உதவியாக 5 பில்லியன் டாலரை உறுதி கொடுத்துள்ளார். |