World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

A record 49 million Americans faced hunger in 2008

மிக அதிகமான எண்ணிக்கையாக 49 மில்லியன் அமெரிக்கர்கள் 2008ல் பட்டினியை எதிர்கொண்டனர்

By Barry Grey
17 November 2009

Back to screen version

திங்களன்று அமெரிக்க விவசாயத் துறை பட்டினி பற்றி வெளியிட்ட ஆண்டு அளவை ஒன்று மிக அதிக அளவில் 17 மில்லியன் குடும்பங்களில் 49.1 மில்லியன் அமெரிக்கர்கள் 2008ல் போதுமான உணவிற்கு வழியின்றித் தவித்தனர் என்று தெரிவிக்கிறது.

"உணவுப் பாதுகாப்பின்மை", "குறைந்த உணவுப் பாதுகாப்பு" என்ற அரசாங்கம் அழைக்கும் சொற்றொடர்களில், அதாவது நேரடியான பட்டினியில் தீவிர அதிகரிப்பு இருந்தது என்று தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இரு வகைகளிலும் பதிவான விகிதங்கள் 1995ல் இருந்து தன்னுடைய ஆண்டு மதிப்பீட்டை தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து மிக அதிமானவை ஆகும்.

2008ல் உணவுப் பாதுகாப்பின்மையினால் அவதியுற்றவர்களின் எண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகையில் 16.4 சதவிகிதம் ஆகும். இவர்களுள் 12.1 மில்லியன் வயதிற்கு வந்தவர்களும் 5.2 மில்லியன் குழந்தைகளும் குறைந்த உணவுப் பாதுகாப்பு (very low food security) உடைய குடும்பங்களில் வசித்தனர்.

இந்த அறிக்கையின் முக்கிய ஆசிரியரான மார்க் நோர்ட், உணவுப் பற்றாக்குறை இருந்த பெரும்பாலான குடும்பங்களில் ஒரு வயதிற்கு வந்தவராவது ஒரு முழு நேர வேலையில் இருந்ததாக சுட்டிக் காட்டியுள்ளார். இது வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீது அமெரிக்க பெருநிறுவனம் நிதிய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு நடத்திய தாக்குதலைப் பிரதிபலிக்கிறது. 2007 கோடை காலத்தில் நிதிய நெருக்கடி தொடங்கியதில் இருந்து பெரு வணிகம் நிதியச் சரிவின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த முற்பட்டுள்ளது. இந்த வழிவகை ஒபாமா நிர்வாகத்தின் கீழ் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் ஜெனரல் மோட்டர்ஸ், கிறைஸ்லர் கார்தயாரிப்புத் தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதல்களில் இருந்து குறிப்பை எடுத்துக் கொண்டு பெருநிறுவனங்கள் முறையாக வேலைகளை தகர்த்தும், ஊதியங்கள், பிற நலன்கள், பணி நேரங்கள் ஆகியவற்றை குறைத்தும் வந்துள்ளன. வோல் ஸ்ட்ரீட் கொண்டுவந்த நெருக்கடியைப் பயன்படுத்தி நிரந்தரமாக தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை குறைத்தும் தொழிலாளர்களை சுரண்டும் விகிதத்தை தீவிரப்படுத்தியும் உள்ளன.

இதன் விளைவு பெரு மந்த நிலைக்கு பின்னர் இணையற்ற முறையில் விளைந்துள்ள சமூகப் பேரழிவு ஆகும்.

விவசாயத் துறை அறிக்கை உணவுப் பற்றாக்குறை இருக்கும் வீடுகளில் பாதி உத்தியோகபூர்வ வறுமைத்தரத்தில் அல்லது அதற்கும் குறைவான வருமானங்களை கொண்டிருந்தன என்றும் மற்றவற்றில் பெரும்பலானவை இதைப்போல் இருமடங்கு தரத்தில் வாழ்ந்தன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது உத்தியோகபூர்வ வறுமைத்தரத்தின் மோசடித்தன்மையைத்தான் நிரூபிக்கிறது. அது வறுமையில் வாழும் பல இலட்சம் மக்களை ஒதுக்கி வைத்துள்ளது. அமெரிக்காவில் உண்மை வறுமை நிலை 2008ல் உத்தியோகபூர்வமாக மதிப்பிடப்பட்டுள்ள 13.2 சதவிகிதத்தைவிட இருமடங்காக இருக்கக்கூடும். அதுவே 2007ன் 12.5 ல் இருந்து உயர்வானது ஆகும். அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பு அலுவலகத்தகவல்படி (US Census Bureau) முந்தைய ஆண்டு இருந்த 37.3 கோடியில் இருந்து 2008ல் அமெரிக்காவில் 39.8 மில்லியன் மக்கள் வறுமையில் வாடினர். உண்மையான எண்ணிக்கை 70 முதல் 80 கோடி வரை இருக்கக்கூடும். அதாவது மொத்த மக்கள் தொகையில் கால் பங்கினர்.

அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பு அலுவலகம் கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் நடுநிலை வீடுகள் வருமானம் உண்மையில் 3.6 சதவிகிதம் 2007க்கும் 2008க்கும் இடையே குறைந்ததாக அறிவித்தது. அந்தப்போக்கு சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த ஆண்டும் அதிகரித்துள்ளது.

டிசம்பர் 2008ல் உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 7.2 சதவிகிதம் ஆகும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த விகிதம் 10.2 சதவிகிதம் ஆகும். இதன் பொருள் திங்களன்று அறிவிக்கப்பட்ட பட்டினிப் பெருக்கம் தற்போதைய நிலையை கணிசமாக குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்பதாகும்.

திங்களன்று ஜனாதிபதி ஒபாமா விவசாயத்துறை அறிக்கைக்கு பயனற்ற அறிக்கை ஒன்றை விடையிறுப்பாக கொடுத்தார். சீனத் தலைவர்களை ஒபாமா சந்தித்துக் கொண்டிருக்கும் பெய்ஜிங்கில் இருந்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை "விவசாயத் துறையில் அறிவிப்பு நிலைகுலைய வைத்துள்ளது" என்று கூறுகிறது. "நம் நாடெங்கிலும் பல சமூகங்களில் உணவு பங்கீட்டு அட்டைக்கான விண்ணப்பகாரர்கள் மிகஅதிகரிக்கையில், பல உணவு நுகர்விடங்கள் காலியாக உள்ளன" என்று அது குறிப்பிடுகிறது.

தன்னுடைய கவலையை குழந்தைகள் மத்தியில் பெருக்கிக்கொண்டிருக்கும் பசியின் பாதிப்பு பற்றி முக்கியத்தும் காட்டி, ஒபாமா, "இந்த ஆண்டு 500,000 குடும்பங்களில் ஒரு குழந்தை பல முறை பட்டினியை அனுபவித்தது." போதுமான ஊட்டச் சத்து இல்லாமல் அவதியுறும் வயதானவர்களை பற்றி அவர் ஏதும் கூறவில்லை.

உண்மையில், விவசாயத்துறை அறிக்கை கிட்டத்தட்ட 17 மில்லியன் குழந்தைகள் (அமெரிக்க முழுவதிலும் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை) உணவுத் தட்டுப்பாடு இருக்கும் குடும்பங்களில் வாழ்கின்றன. இது அதற்கு முந்தை ஆண்டில் இருந்த 12 மில்லியனை விட அதிகம் என்று கூறியுள்ளது. முழுப் பட்டினியை அனுபவித்த குழந்தைகளின் எண்ணிக்கை 700,000த்தில் இருந்து கிட்டத்தட்ட 1.1 மில்லியனாக உயர்ந்துள்ளது என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய பட்டினித் தரங்களில் இருக்கும் மனிதப் பெரும் சோகம் பற்றி மிக அதிக வலியுறுத்தலை ஒபாமா வைக்கவில்லை. மாறாக "நாடு என்னும் விதத்தில் எதிர்காலத்தில் எமது போட்டித் தன்மையின் "தாக்கங்கள்" எப்படி இருக்கும் என்பதில்தான் கொண்டார். அதாவது, அமெரிக்க முதலாளித்துவத்தின் போட்டித்தன்மை உலகில் எப்படி இருக்கும் என்பது பற்றி.

"வேலை வளர்ச்சியை" மீட்பது பற்றி ஒரு பெயரளவு கூறிய அவர், தன்னுடைய நிர்வாகத்தின் கடந்த மாதம் ஒரு நடவடிக்கையை சட்டமாக்கும் முயற்சியில் "85 மில்லியன் டாலர் புதிய மூலோபாயங்களில் முதலீடு ஆகிறது என்றும் அவை கோடைகாலத்தில் குழந்தைகள் பட்டினியை எதிர்கொள்வதை தடுக்கும் என்றும் " கூறினார். இந்த அற்பத் தொகை ஒதுக்கீடு கோடை விடுமுறை காலத்தில் பள்ளிகளில் பகல் உணவுத் திட்டத்தை தக்க வைப்பதற்குச் செல்லுகிறது.

அதுவும் ஒரு அரசாங்க அமைப்பே 23.7 டிரில்லியன் டாலர் என்று மதிப்பிட்டுள்ள அரசாங்கம் வங்கிகளுக்கு பிணை எடுப்பிற்காக செலவழித்த டிரில்லியன் கணக்கான டாலர்களை கருத்தில் கொண்டால் இது ஒரு வாளியில் ஒரு துளி தண்ணீர் விழுவதற்குத்தான் ஒப்பாகும். மேலும் வங்கி நிர்வாகிகளுக்கு அடுத்த மாதம் கொடுக்கப்பட இருக்கும் பல பில்லியன் கணக்கான டாலர்களுடன் ஒப்பிடுகையில் மங்கி விடும் எண்ணிக்கைதான்.

தன்னுடைய சுருக்கமான கருத்துக்களை முடிக்கும் விதத்தில் குழந்தைகளுக்கு "அவை வளர்ந்து, வெற்றிபெறுவதற்கு தேவையான சுகாதாரமான ஆகாரம்" அளிப்பதற்கு "பல தசாப்தங்கள் அமெரிக்காவின் போட்டித்தன்மை தக்க வைக்கப்படுவது முக்கியம்" என்று வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து வயது பிரிவுகளிலும் உள்ள மக்களில், கிட்டத்தட்ட 15 சதவிகிதத்தினர் (17 கோடி குடும்பங்கள்) கடந்த ஆண்டு தொடர்ந்து போதுமான உணவு இல்லாமல் இருந்தனர் என்றும் 2007ல் இருந்த 11 சதவிகிதத்துடன் இது ஒப்பிடப்பட வேண்டும் என்றும் விவசாயத்துறை கூறியுள்ளது. இது ஆண்டு மதிப்பீடு வரலாற்றில் ஓராண்டில் உணவு துறையில் மிகப் பெரிய சரிவாகும்.

இந்த 15 சதவிகிதத்தில் 5.7 சதவிகிதம் (6.7 மில்லியன் வீடுகள்) "மிகக் குறைந்த உணவுப் பாதுகாப்பைத்தான்" பெற்றிருந்தன". இதன் பொருள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர் உட்கொண்ட உணவு அளவு குறைந்துவிட்டது, இந்த ஆண்டில் அவர்களுடைய சாப்பிடும் வடிவமைப்பு குழப்பத்திற்குட்பட்டது. அதற்குக் காரணம் குடும்பத்தில் போதிய பணம் இல்லை என்பதாகும். இந்தப் பிரிவின் எண்ணிக்கை 2007ல் இருந்து 4.1 சதவிகிதம் உயர்ந்தது.

இந்த அறிக்கை உணவுப் பாதுகாப்பின்மை 1999ல் இருந்து 2007க்குள் அதிகரித்துவிட்டது என்றும் கூறியுள்ளது. அதாவது, ஊகவணிகம், மோசடித்தனம் ஆகியவை கிட்டத்தட்ட அமெரிக்க, உலக நிதியமைப்பு முறையைக் கரைப்பதற்கு முன் வோல் ஸ்ட்ரீட் பெரும் செல்வக் கொழிப்பு கொண்டிருந்த ஆண்டுகளில் இவ்வாறு நடைபெற்றது.

விவசாயத் துறை செயலர் Tom Vilsack நிருபர்களுடன் சுருக்கமாக பேசுகையில், "இது ஒன்றும் இரகசியம் அல்ல. வறுமை, வேலையின்மை இவை அனைத்தும் காரணிகள் ஆகும்." 2009ல் எண்ணிக்கை "சற்று கூடுதலாக இருக்கக்கூடும்" என்றார்; அது இன்னும் ஓராண்டிற்குப் பின்தான் வரும்.

இந்த அறிக்கை அரசாங்கத்தின் தற்போதைய உணவுத் திட்டங்களிலுள்ள பற்றாக்குறையைத்தான் சுட்டிக் காட்டுகிறது. மதிப்பீட்டிற்கு உட்பட்டவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தாங்கள் உணவுப் பற்றாக்குறையை அனுபவித்ததாக கூறியவர்கள், முந்தைய மாதத்தில் அரசாங்கத்தின் மிகப் பெரிய பட்டினி-எதிர்ப்பு, ஊட்ட உணவுத் திட்டங்களில் கலந்து கொண்டவர்கள், உணவு விநியோகம், பள்ளி உணவுகளுக்கு உதவித் தொகை WTC எனப்பட்ட கைக்குழந்தைகள், சிறு குழந்தைகளுடன் கூடிய மகளிருக்கு ஊட்டச் சத்து உணவு வழங்குதல் போன்றவற்றில் கலந்து கொண்டவர்கள் உள்ளடங்குகின்றனர்.

2008ம் ஆண்டு 4.8 மில்லியன் குடும்பங்களில் இருந்த மக்கள் தனியார் உணவு வழங்கும் நிலையங்களை பயன்படுத்திக் கொண்டனர். இவை 2007ல் இருந்த 3.9 மில்லியனில் இருந்து 23 சதவிகிதம் அதிகமாகும். கிட்டத்தட்ட 625,000 வீடுகள் இத்தகைய உணவு வழங்கும் சமையலறையை (soup kitchens) பயன்படுத்தின. இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 90,000 அதிகம் ஆகும்.

உணவுத் தட்டுப்பாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் தனித்து குழந்தைகளை வளர்க்கும் மகளிரிடேயே பொதுவாக இருந்தது. கடந்த ஆண்டு மூன்று தனித்து வாழும் தாய்மார்களில் ஒருவர் குழந்தைக்கு உணவு கொடுக்கத் திணறினார். ஏழு பேரில் ஒருவருக்கு மேல் தங்கள் குடும்பம் பட்டினி கிடந்ததாக கூறினர். ஆபிரிக்க-அமெரிக்கர்கள், ஹிஸ்பானிக்குகள் தங்கள் வீடுகளில் போதுமான உணவு இல்லை என்றவர்கள், இருமடங்கானதாக கூறினர் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.

சராசரியாக, உணவுத் தட்டுப்பாடு பற்றி தகவல் கொடுத்த வீடுகள் இப்பிரச்சினையை ஆண்டில் ஏழு மாதங்கள் கொண்டிருந்தன. நான்கில் ஒரு பகுதி இப்பிரச்சினை அநேகமாக ஒவ்வொரு மாதமும் வந்ததாகக் கூறியது. கடந்த ஆண்டில் பணம் கிடைப்பதற்குள் உணவு வீட்டில் இல்லாமல் போய்விட்டதா, ஊட்டச் சத்து மிகுந்த உணவை வாங்க அவர்களால் முடிகிறதா, குடும்பத்தில் பெரியவர்கள் பணம் இல்லாத காரணத்தால் தங்கள் உணவை சாப்பிடாமல் அல்லது குறைத்துச் சாப்பிட்டார்களா என்ற வினாக்களும் இம்மதிப்பீட்டில் இருந்தன.

பிராந்திய ரீதியாக, உணவுப் பாதுகாப்பின்மை தெற்கில் மிக அதிகமாக இருந்தது. 13 மாநிலங்களில் இந்த விகிதம் குறிப்பிடத்தக்க வகையில் பெருகியது. மிக அதிக விகிதங்கள் நெவடாவிலும் மேற்கு வர்ஜீனியாவிலும் இருந்தன.

திங்களன்று வந்துள்ள அறிக்கை ஒபாமா நிர்வாகம் வேலைகள் நெருக்கடி, வறுமை வளர்ச்சி பற்றி எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்க மறுப்பதைத்தான் அடிக்கோடிட்டு காட்டுகிறது. அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில், ஒபாமா அமெரிக்க கருவூலப் பத்திரங்களை 800 பில்லியன் டாலர் அளவிற்கு வைத்திருக்கும் சீன அரசாங்கத்திடம், தன்னுடைய நிர்வாகம் பெய்ஜிங்கின் டாலர் சொத்துக்களை பாதுகாக்கும் என்றும் அதற்காக உள்நாட்டில் சுகாதாரப்பாதுகாப்புச் செலவினங்களை குறைத்து மருத்துவ பாதுகாப்பு, மருத்துவ உதவி, சமூகப் பாதுகாப்பு போன்ற சமூக நலத் திட்டங்களில் பெரும் குறைப்புக்களை சுமத்த இருப்பதாகவும் உறுதியளித்தார்.

ஒபாமா நிர்வாகம், காங்கிரஸ் மற்றும் இரு பெரு வணிகக் கட்சிகள் அமெரிக்க நிதியப் பிரபுத்துவத்தின் செல்வத்தை காப்பதற்காக, பொதுக் கருவூலத்தை காலியாக்குதல், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை குறைத்தல் என்ற ஒருதலைப்பட்சமான தீர்மானங்களுக்கு அமெரிக்க மக்கள் கொடுக்கும் விலைகளில் ஒன்றுதான் பெருகிய பட்டினி ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved