World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Almost 200 million children undernourished in poor countries

வறிய நாடுகளில் கிட்டத்தட்ட 200 மில்லியன் குழந்தைகள் ஊட்டச் சத்து உணவின்றி வாடுகின்றனர்

By James Brewer
13 November 2009

Back to screen version

புதனன்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதி அமைப்பு (UNICEF) வெளியிட்ட அறிக்கை ஒன்று ஊட்டச் சத்து இல்லாததால் வளர்ச்சி குறைந்த ஐந்து வயதிற்குட்பட்ட 195 மில்லியன் குழந்தைகள் வறிய நாடுகளில் தற்போது உள்ளதாக தெரிவித்துள்ளது.

"குழந்தைகள் முன்னேற்றம் மற்றும் தாய்களின் ஊட்டம்" என்ற தலைப்பில் வந்துள்ள அறிக்கை முற்றிலும் தடுக்கப்படக்கூடிய நோய்களினால் ஏற்படும் அசாதாரண கஷ்டங்களை எடுத்துக் காட்டியுள்ளது. இவற்றில் பல அடிப்படைத் தரமில்லாத உணவினால் ஏற்படுகின்றன.

அத்துடன் இணைந்துள்ள செய்தி ஊடகக் குறிப்பு "ஊட்டச்சத்தின்மை ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியின் இறப்பிற்குக் காரணமாக உள்ளது. ஊட்டச்சத்தின்மை நிலை பல நேரமும் நிலைமை மோசமடையும் வரை தெரிவதில்லை. மற்றும் வெளித்தோற்றத்துற்கு சுகாதார நலத்துடன் இருக்கும் குழந்தைகள் தீவிரமான, ஏன் தங்கள் சுகாதாரம், வளர்ச்சி ஆகியவற்றிற்கு நிரந்தர சேதம் ஏற்படும் ஆபத்தைக் கொண்டுள்ளன." எனக்குறிப்பிட்டது.

UNICEFன் நிர்வாக இயக்குனர் Ann Veneman கூறினார்: "ஊட்டச்சத்தின்மை ஒரு குழந்தையில் வலிமையை இல்லாதொழித்து ஆபத்தான நோய்களை எதிர்க்கக்கூடிய உடல்திறனைத் தகர்த்துவிடுகிறது. மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் குளிர்காய்ச்சல், வயிற்றுப்போக்கு இன்னும் பிற நோய்களால் இறந்தவிடுகின்றன. இவை ஊட்டச்சத்து இருந்திருந்தால் உயிரோடு இருந்திருக்கும்."

இவர், "இந்த ஊட்டச்சத்தின்மையையும் மீறி உயிரோடு இருப்பவை எப்பொழுதும் தங்கள் வாழ்க்கை முழுவதும் வலுவற்று உள்ளன. சேதமுற்ற அறியும் திறன்கள் அவற்றின் கற்கும் திறனையும் குறைத்துவிடுவதுடன், ஒரு கெளரவமான வருமானமும் இல்லாமல் போகிறது. இடைத்தலைமுறை சுகாதாரமின்மை, வறுமை ஆகியவற்றின் சுழலில் சிக்கிக்கொண்டுள்ளன." என்றும் கூறியுள்ளார்.

ஊட்டச்சத்தின்மையின் காரணங்கள், விளைவுகளைப் பற்றி இந்த 124 பக்க அறிக்கை விவரமாக கூறுகிறது. ஒவ்வொரு நாடு பற்றிய புள்ளிவிவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஊட்டச்சத்தின்மையின் அதிக அடையாளங்கள், அதாவது பிறந்த நேரத்தில் குறைவான எடை, வளர்ச்சிக் குறைவு (வயதிற்கேற்ற உயரமின்மை), வீணாகிப்போதல் (வயதிற்குத் தக்க உடல்கனம் இன்மை) ஆகியவையும் குறிக்கப்பட்டுள்ளன. நீண்டகால ஊட்டச் சத்தின்மையினால் ஏற்படும் வளர்ச்சிக் குறைவு பற்றி அறிக்கை கூறியுள்ளது.

பல நாடுகளில், 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டமின்மையினால் வளர்ச்சிக் குறைவில் உள்ளன என்று ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் ஆப்கானிஸ்தான், யேமன், குவாட்டமாலா, திமோர்-லெஸ்ட், புருண்டி, மடகாஸ்கர், மாலவி, எதியோப்பிய, ருவண்டா ஆகிய நாடுகளும் உள்ளன.

இந்தியாவில் மிக அதிகமான வளர்ச்சிக் குறைவுடைய குழந்தைகள் 60 இலட்சத்திற்கும் மேலாக உள்ளன. (இது இந்தியாவில் உள்ள மொத்தக் குழந்தைகளில் 48 சதவிகிதம் ஆகும்). "அபிவிருத்தியடையும் உலகம்" என்று ஐ.நா. வரையறுத்துள்ள நாடுகளில் இருக்கும் வளர்ச்சிக் குறைவான குழந்தைகளின் மொத்தத்தில் இது 31.2 சதவிகிதம் ஆகிறது. மொத்தக் கணக்கில் சீனா, இரண்டாவதாக, 12.6 இலட்சம் குழந்தைகளுடன் உள்ளது.

இந்த அறிக்கை இன்னும் வறிய நாடுகள் பற்றி முக்கியத்துவம் கொடுக்கின்றது. ஆனால் அறிக்கையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை வளர்ச்சி குறைந்துள்ள எண்ணிக்கை உடைய குழந்தைகளை வைத்து தரப்பட்டியலைக் கொடுத்துள்ளது. பட்டியலில் வளர்ச்சியுற்ற ஒரே நாடாக இருக்கும் அமெரிக்கா 136 நாடுகளில் 45வது இடத்தில் உள்ளது. இங்கு ஐந்து வயதிற்குட்பட்ட 714,000 குழந்தைகள் வளர்ச்சிக் குறைவில் உள்ளன.

இந்த ஆவணத்தில் ஆரம்பமாதங்களில் தாய்ப்பால் கொடுத்தல், உணவு ஊட்டமாகக் கொடுத்தல் ஆகியவற்றை முன்னெடுக்க மட்டுப்படுத்தப்பட்ட தலையீடுகளின் விளைவுகளை பற்றிய புள்ளிவிவரங்களும் இருக்கின்றன. இந்த மட்டுபப்டுத்தப்பட்ட "செலவுக் குறைந்த" மூலோபாயங்களுக்கு நிதியளிப்பதுதான் அடுத்து ஐ.நா.உணவு உச்சிமாநாட்டில் அழைப்பின் முக்கிய பகுதியாக கொள்ளப்படும்.

ரோமில் நடக்கும் இந்த உச்சிமாநாடு ஏப்ரல் மாதம் நடந்த G8 உச்சிமாநாட்டில் இருந்து வந்துள்ள எச்சரிக்கையை அடுத்து தொடர்கிறது. அதில் உலகப் பட்டினி நிலைமை ஒரு சர்வதேச அரசியல் உறுதிகுலைக்கும் அச்சுறுத்தல் என்று கூறப்பட்டுள்ளது. WSWS அப்பொழுது G8 அறிக்கை, "உலக உணவு உற்பத்தி 2050க்குகள் இரு மடங்காக ஆக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் பெருகும் உலக மக்கள் தொகையில் தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியும்'' என்று வலியுறுத்தியிருந்தது.

G8 சற்றே அச்சத்துடன் பெருகும் உணவு நெருக்கடி "வணிக உறவுகளில் தீவிர விளைவுகளை கொடுக்கும் என்பதோடு மட்டும் இல்லாமல், சமூக, மற்றும் சர்வதேச உறவுகளிலும் கொடுக்கும்; அவை நேரடியாக உலக அரசியலின் பாதுகாப்பு, உறுதித்தன்மை இவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று எழுதியது. (See "G8 document on world hunger warns of global instability")

கடந்த ஆண்டு ரோமாபுரியில் நடந்த உணவு உச்சிமாநாட்டில் பங்கு பெற்ற நாடுகளில் இருந்து அதன் முறையீடுகளுக்கு சிறு அளவு உதவிக்கான உத்தரவாதத்தை பெற்றது. 30 பில்லியன் டாலர் தேவை என்று கோரப்பட்டதற்கு 1 பில்லியன் டாலர்தான் கிடைத்தது. உணவுக்கும் விவசாயத்திற்குமான அமைப்பின் (FAO) பொது இயக்குனரான Jacques Diouf அப்பொழுது இந்த அழைப்பு "செவிடரின் காதுகளில்தான் பொதுவாக விழுந்துள்ளது" என்று கூறினார்.

பரந்தபட்டினி பொருளாதார நெருக்கடியினால் மோசமடைந்ததை முக்கிய நாடுகள் முற்றிலும் அரசியல், பொருளாதார முறையின் "உறுதிப்பாட்டில்" ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்ற நிலைப்பாட்டில்தான் காண்கின்றன என Diof குறிப்பிடுகிறார்: "பெரும் வறிய நிலையில் இருப்பவர்கள், செல்வந்தர்களின் நிறைந்த மேசைகளில் இருந்து ஒதுக்கப்பட்டு தெருவிற்கு வந்துள்ளவர்கள்தான் தங்கள் அதிருப்தியையும், வெறுப்பையும் காட்டுகின்றனர். அதன் பின்னர்தான் உணவு உதவிக்கான ஆதரவு கொடுக்கும் கருத்துக்கள் வெளிப்படத் தொடங்கின."

அப்படி இருந்தும், கொடுக்கப்பட்டுள்ள உதவித் தொகை மிக, மிகக்குறைவாகும். ஒவ்வொரு முக்கிய நாட்டிலும் நிதிய உயரடுக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ள பணத்தில் மிக மிகக் குறைந்த விகிதம் ஆகும்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved