World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China continues its aggressive pursuit of Africa's resources

ஆபிரிக்க இயற்கை வளங்களை ஆக்கிரோஷமாக அடைவதை சீனா தொடர்கிறது

By Brian Smith and Ann Talbot
16 November 2009

Use this version to print | Send feedback

சீனா-ஆபிரிக்கா ஒத்துழைப்பு அமைப்பின் அமைச்சக அரங்கு கடந்த வாரம் எகிப்தில் Sharm-el-Sheik ல் கூடியது; இதில் சீனப் பிரதமர் வென் ஜியாபோவும் 300க்கும் மேலான சீன நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அமெரிக்காவை அதன் மிகப் பெரிய பட்ஜேட் பற்றாக்குறைக்காக கடிந்து கொள்ளுவதற்கு வென் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.

அமெரிக்க எதிர்ப்பு இருந்தாலும் ஆபிரிக்காவில் தன் முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் சீனாவின் விருப்பத்தை அவர் தெளிவுபடுத்தினார். சலுகைக் கடன்களாக அடுத்த முன்று ஆண்டுகளில் ஆபிரிக்காவிற்கு $10 பில்லியனுக்கு அவர் உறுதியளித்தார்--இவை வழக்கமான கடன்களைவிட குறைந்த வட்டி உடையவை, அதிக தவணைகளில் திருப்பிக் கொடுக்கலாம். ஆபிரிக்க மந்திரிகள் இந்த அறிவிப்பை ஆர்வத்துடன் வரவேற்றனர்.

மாநாடு முடிந்த சில நாட்களுக்குள் அமெரிக்கா இதற்கு விடையிறுத்தது. சர்வதேச நாணய நிதியம் சீன முதலீட்டுத் திட்டத்தை குறைத்துக் கொள்ளவில்லை என்றால் தான் கொடுக்க இருக்கும் கடன்களை கொடுக்காமல் இருந்துவிடுவதாக காங்கோ ஜனநாயகக் குடியரசை அச்சுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் மேலாதிக்கத்தில் இருக்கும் IMF, இந்த போர் நிறைந்த, வறிய ஆபிரிக்க நாட்டை நிதிய ஒதுக்குதலுக்கு தள்ளத் தான் தயாராக இருப்பதைக் காட்டியது; இத்தகைய விதியைத்தான் ஏற்கனவே சரிந்துள்ள ஜிம்பாப்வே பெற்றிருக்கிறது; அதையொட்டி மக்களுக்கு பெரும் அழிவு தரும் விளைவுகள் ஏற்பட்டன.

காங்கோவில் சீன முதலீடு பற்றிய பூசல் வரவிருக்கும் நிகழ்வுகளில் ஒரு முன்னோடியாகத்தான் இருக்கும். Morgan Stanley உடைய ஆசியப் பகுதியின் நிர்வாக இயக்குனர் Stephen Roach ஒரு அமெரிக்க-சீன வர்த்தகப் போர் "ஒரு பெரிய ஆபத்தாகும்" என்று உறுதியான எச்சரிக்கையை கொடுத்துள்ளார். ஹாங்காங்கை தளமாகக் கொண்ட DNA Money இடம், "அடுத்தத ஆண்டு அமெரிக்க-சீன வணிகப் பிளவுகள் பற்றி நான் கவலை கொண்டுள்ளேன். உலகப் பொருளாதாரச் சூழலுக்கு இது மிகப் பெரிய ஆபத்துக்களில் ஒன்றாகும்."

ஆபிரிக்காவில் கடந்த தசாப்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் சீனா தன்னுடைய பொருளாதார ஈடுபாட்டை அதிகரித்துள்ளது. 2003ல் 18.5 பில்லியன் டாலர் என்பதில் இருந்து இதன் ஆபிரிக்க வணிகம் 2008ல் 107 பில்லியன் டாலர் ஆகியுள்ளது. தென்னாபிரிக்காவின் மிகப் பெரிய வணிகப் பங்காளியாக இப்பொழுது சீனா உள்ளது.

ஆபிரிக்காவில் சீன முதலீட்டு உந்துதலின் புதிய கூறுபாடு பொது-தனியார் பங்காளித்தன நிறுவனங்கள் ஆகும்; இது கடந்த ஆண்டு முதல் மூன்று காலாண்டுகளில் இருந்ததை விட 77 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. ஆபிரிக்காவின் அனைத்துப் புதிய பணி ஒப்பந்தங்கள் அனைத்திலும் 50 சதவிகிதத்திற்கும் மேலாக இப்பொழுது சீனா வெல்கிறது; சீன நிறுவனங்கள் அக்கண்டத்தில் சாலைக் கட்டமைப்புக்களில் மேலாதிக்கம் கொண்டுள்ளன. பொது-தனியார் பங்காளித்துவம் அல்லது சலுகைகளுக்கு மாற்றிக் கொண்டதில், சீனா ஏற்கனவே மேலை நாடுகளில் நிறுவப்பட்டுள்ள வடிவமைப்பைத்தான் பின்பற்றுகிறது; அங்கு கட்டமைப்புத் திட்டங்கள் வாடிக்கையாக இவ்விதத்தில்தான் நிதியம் பெறுகின்றன; நிதிய அமைப்புக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என்று தொடர்புடைய அனைத்தும் இலாபங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்றன.

கடந்த ஆண்டு மேலை வங்கிகளை பாதித்த மோசமான கொந்தளிப்பில் இருந்து சீன வங்கிகள் தப்பின என்றாலும், அதன் ஏற்றுமதி உந்துதலைக் கொண்ட பொருளாதாரம் கடுமையான பாதிப்பிற்கு உட்பட்டது. கிட்டத்தட்ட 25 மில்லியன் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்; ஏற்றுமதிகள் சரிந்துள்ளன; கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது அச்சரிவு சராசரியாக 21 சதவிகிதம் உள்ளது.

சீனாவின் மிகப் பெரிய வளர்ச்சி வங்கிகளின் ஆதரவிற்கு உட்பட்ட பெரும் ஒப்பந்தக்காரர்கள் இப்பொழுது உலகளாவிய சரிவை மலிவான வளங்களை உலகெங்கிலும் அடைவதற்கு, குறிப்பாக ஆபிரிக்காவில் இருப்பவற்றை அடைவதற்கு ஒரு வாய்ப்பாக காண்கின்றனர். வணிக அமைச்சரவையின் கருத்துப்படி, சீன நிறுவனங்கள் 2009 முதல் இரண்டு மாதங்ளில் 8 பில்லியன் டாலர் மதிப்புடைய வெளிநாட்டு ஒப்பந்தங்களை பெற்றன; இது கிட்டத்தட்ட 25 சதவிகிதம் அதிகமாகும்.

அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் நாணய இருப்பாக சீனா 2 டிரில்லியன் டாலருக்கும் மேலாகக் கொண்டுள்ளது; டாலரின் மதிப்புக் குறைகையில், இது ஒரு பெரும் சுமையாகப் பெருகிய முறையில் உணரப்படுகிறது. எனவே சீன அரசாங்கம் தன்னுடைய நாணய இருப்புக்களை பன்முகப்படுத்தும் வழியில் இயற்கை வளங்களை நிலைத்த சொத்துக்களாக வாங்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. இந்தப் பின்னணியில் குறைந்த தாதுப்பொருட்களின் விலைகள் ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாக காணப்படுகின்றன.

அங்கோலா, நைஜீரியாவில் எண்ணெய்

கடந்த சில ஆண்டுகளில் சீன நிறுவனங்கள் எண்ணெய் வளங்கள் திறன் கொண்டுள்ள ஒவ்வொரு ஆபிரிக்க நாட்டுடனும் அநேகமாக ஆய்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட முயன்றுள்ளன. இந்த ஆண்டு ஆரம்பத்தில் Sinopec கனேடிய/ஸ்விஸ் நிறுவனமான Addax ஐ விலைக்கு வாங்கி, அதையொட்டி முக்கியமான கடற்பகுதி தொழில்நுட்பத்தை அணுகும் வாய்ப்பைப் பெற்றது.

அங்கோலா, சீனாவின் மிகப் பெரிய ஆபிரிக்க வணிகப் பங்காளி ஆகும்; இது அனைத்து சீன எண்ணெய் இறக்குமதிகளில் 16 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மொத்த வணிக அளவு 2008ல் 25.3 பில்லியன் டாலரை எட்டியது; இது சீன-ஆபிரிக்க மொத்த வணிகத்தில் 23 சதவிகிதம் ஆகும். சீனாவில் இருந்து அங்கோலா இறக்குமதி செய்பவை 96 சதவிகிதம் உயர்ந்து 2.5 மில்லியன் தொன்களாக போயிற்று என்று சீன சுங்கத் துறை கூறியுள்ளது.

இந்த ஆண்டு அங்கோலாவின் ஜனாதிபதி தேர்தல்கள் வரவிருக்கையில், சீனக் கட்டமைப்பு திட்டங்கள் ஜனாதிபதி Dos Santos உடைய பிரச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளன. ஆனால் சில துறைகளில் அங்கோலாவின் நிறுவனங்கள் சீனர்களின் நிலைப்பாடு தங்கள் வளர்ச்சியை நெரிப்பதாக குறைகூறியுள்ளன; ஏனெனில் அங்கோலாவிலேயே கிடைக்கக்கூடிய பல பொருட்கள் பல நேரமும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. பொது-தனியார் பங்காளித்துவத்தை நிறுவும் சீனாவின் முயற்சி இத்தகைய குறைகூறலைக் கடப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

ஆபிரிக்காவின் மிக அதிக எரிவாயு இருப்புக்கள், மற்றும் இரண்டாம் அதிகபட்ச எண்ணெய் இருப்புக்கள் இருக்கும் நைஜீரியாவில், சீன எண்ணெய் நிறுவனங்கள் தற்பொழுது மேற்கத்திய எண்ணெய் பெருநிறுவனங்களுக்கு உரிமம் கொடுத்துள்ள 50 பில்லியன் டாலர் மதிப்புடைய எண்ணெய் இருப்புக்களை எடுத்துக் கொள்ளுவதில் ஆர்வம் காட்டியுள்ளன. சீனாவின் மூன்றாம் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான சீன தேசிய கடல் கடந்த எண்ணெய் நிறுவனம் (CNOOC)-- -23 எண்ணெய் உரிமங்களில் 49 சதவிகிதப் பங்கைப் பெற முயல்கிறது; இவற்றுள் 10 நிறுவனங்கள் Chevron, எட்டு Royal Dutch Shell, நான்கு ExxonMobil, மற்றும் ஒன்று Total ஆகியவற்றுடையவை ஆகும்; இவை உறுதியான 10 பில்லியன் பீப்பாய். எண்ணெய் இருப்புக்கள், கணிசமான எரிவாயு இருப்புக்கள் ஆகியவற்றை கொண்டவை ஆகும்.

நைஜீரிய ஜனாதிபதியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் Tanimu Yakubu கருத்தின்படி, "இந்த ஆரம்ப கட்டத்தில்கூட, எதுவும் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என்றாலும், சீனர்கள் இருக்கும் நிறுவனங்களைவிட இந்த உரிமைகளை பெறுவதற்கு மிக, மிக அதிக விலை கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பது தெளிவு."

இது வெற்றியடைந்தால் CNOOC (Chinese national off-shore oil Corporation) நைஜீரியாவில் மிக அதிக பங்கு கொள்ளும் வெளிநாடாக விளங்கும்.

அணைகள், துறைமுகங்கள் மற்றும் குழாய்த்திட்டங்கள்

எதியோப்பியாவில் சீன கட்டமைப்பு நிறுவனங்கள் ஏராளமான பெரிய அணைகளை நாட்டின் நீர்சக்தித் திறனைப் பயன்படுத்தி, எதியோப்பியாவை உள்நாட்டு சக்தியை ஆதார அதிகரிப்பிற்கு அனுமதிப்பதுடன், அண்டை நாடுகளுக்கு சக்தியை ஏற்றுமதி செய்யும் விதத்தில் கட்ட உள்ளது.

கென்யாவில், சமீபத்தில் அரசாங்கம் ஒரு 3.5 பில்லியன் டாலர் கட்டமைப்புத் திட்டத்திற்கு அணுகியது; இதில் லாமு எனப்படும் சுற்றுலாப் பகுதியில் ஒரு துறைமுகத்தை கட்டும் திட்டமும், எதியோப்பியா மற்றும் தெற்கு சூடானுடனான கென்யாவின் எல்லைகளுக்கு சாலை, இரயில் பிணைப்புக்கள் அமைப்பதும் உள்ளன. இத்திட்டம் பற்றி கத்தாருடன் நைரோபி விவாதித்து வருகிறது; இதில் பயிர்களை வளர்க்கும் திட்டத்தின்கீழ் 40,000 ஹெக்டேர் நிலங்கள் குத்தகைக்கு எடுப்பதும் அடங்கும். இந்த போக்குவரத்து பகுதி சீன எண்ணெய்க்கு தெற்கு சூடானில் இருந்து ஏற்றுமதி வழியைக் கொடுக்கும்; அது சீனாவின் எண்ணெய் இறக்குமதிகளில் 6 சதவிகிதத்தை கொடுக்கிறது.

இதைத்தவிர சீன தேசிய கடற்பகுதி எண்ணெய் பெருநிறுவனம் வடக்கு கென்யாவில் எண்ணெய் எடுப்பதற்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று கென்யாவின் சக்தி அமைச்சரகம் கூறியுள்ளது; மேலும் அது லாமு பகுதியில் இரண்டாம் பிரிவில் ஆய்விற்கான உரிமைகளையும் பெற்றுள்ளது.

உகாண்டாவில் CNOOC, அயர்லாந்து நிறுவனமான Tullow வின் எண்ணெய் நலன்களில் ஒரு பகுதியை வாங்க இருக்கிறது; லேக் ஆல்பெர்ட்டில் இருக்கும் இந்த எண்ணெய் இருப்புக்கள் ஒரு மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமாக இருக்கக்கூடும். கிட்டத்தட்ட துறைமுகம் மற்றும் ஒரு சுத்திகரப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்த்திட்டத்திற்கு தேவைப்படும் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது.

தன்னுடைய ஆபிரிக்க நலன்களைக் காப்பது பற்றி சீனா மிகத் தெளிவுடன் உள்ளது. ஏடன் வளைகுடாப் பகுதியில் ஒரு பிரிவு போர்க்கப்பல்களை அது அனுப்பி வைத்துள்ளது; இதற்கு போலிக் காரணமாக கடற்கொள்ளையையும், புவிசார்-அரசியல் ரீதியான உணர்ச்சி நிறைந்த நீர்நிலைகளையும் காட்டியுள்ளது. சீனாவின் பொருட்கள், மூலப் பொருட்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் இந்த நீர்நிலைகள் வழியே வருகின்றன. இது ஐ.நா.செயற்பாடுகளுக்கு இணங்கியதைத்தவிர, சீனக் கடற்படையின் முதல் பெரிய வெளிநாட்டு ஈடுபாடு ஆகும்.

நைஜரில், சீனா யுரேனியத்தை வாங்கும் நாடு என்ற விதத்தில் பிரான்ஸுடன் போட்டியிடுகிறது. கடந்த ஆண்டு சீனத் தேசிய பெட்ரோலிய நிறுவனம் Zinder க்கு அருகே Agadem எண்ணெய் பகுதியில் ஒரு 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. லைபீரியாவில் China Union நிறுவனம் Bong County ல் இரும்புத் தாதுப் பொருட்கள் சுரங்கங்களை வளர்ப்பதற்கு 2.6 பில்லியன் டாலரை செலவழிக்க உள்ளது.

சாம்பியாவில் சீனாவின் 'இரும்புத்தாது அல்லா நிறுவனம்-ஆபிரிக்கா', Launshya Copper Mine என்னும் 230 மில்லியன் டாலர் மதிப்புடைய சுரங்கத்தை வாங்கியுள்ளது; அந்நிறுவனம் 200 மில்லியன் டாலர் கடன்களை கொண்டு இருந்தது; China Exim Bank வடக்கு கரிபாவில் ஒரு சக்தி திட்டத்திற்கு தேவையான 400 மில்லியன் டாலரில் 85 சதவிகிதத்திற்கு நிதி கொடுக்கிறது.

தெற்கு ஆபிரிக்காவில் கிழக்கு, மேற்கு கடலோரப் பகுதிகளை ஒரு இரயில்-பிணைப்பு மூலம் இணைக்கும் கட்டமைப்பு பற்றியும் சீனா விவாதங்களை நடத்தி வருகிறது; இது மொசாம்பிக், அங்கோலா, காங்கோ-கின்ஷாசா, காங்கோ ப்ரஜாவில்லே, மாளவி மற்றும் சாம்பியாவை இணைக்கும்.

விவசாயமும், இயற்கை எரிபொருட்களும்

மொசாம்பிக்கில் Zambezi ஆற்றில் Mphanda Nkuwa அணை கட்டுவதற்கு China Exim Bank 2.3 பில்லியன் டாலர் கடன் கொடுக்க உள்ளது. சீனா, மொசாம்பிக்கிற்கு 800 மில்லியன் டாலரை விவசாயத் துறைக்கு ஆதரவாகவும் கொடுக்க உள்ளது; இது தேசிய அரிசி உற்பத்திக்கு ஏற்றம் கொடுக்கும்; மேலும் மாளவிக்கு அருகே உள்ள Lake Malavi ஐ எப்படி மொசாம்பிக்கின் ஆறுகளுடன் இணைப்பது, இருக்கும் விவசாய உள்கட்டுமானங்களை முன்னேற்றுவிக்க அணைகளைக் கட்டுவது என்பதைப் பற்றியும் விவாதித்துள்ளது.

சீன நிறுவனங்கள் Zambezi பள்ளத்தாக்கில் கால்நடைப் பண்ணைகள் மற்றும் தோட்டங்களுக்கான நிலத்தை பெறுவதற்கு தயாராகின்றன. இவற்றில் 3,000 சீன விவசாயத் தொழிலாளர்களை மொசாம்பிக்கில் இருக்கும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட மற்றொரு நிலத்தில் ஈடுபடுத்தவும் விழைகிறது; இதற்கு உள்ளூர் மக்களின் கடுமையான எதிர்ப்பு வந்துள்ளது. உலகின் மொத்த விவசாய நிலத்தில் சீனா 9 சதவிகிதத்தைத்தான் கொண்டுள்ளது; உணவு இறக்குமதியை அது நம்பியுள்ளது.

உகாண்டாவில், சீனா 10,000 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது; ஜாம்பியாவில் சீனா 2 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை இயற்கை எரிவாயு உற்பத்திக்காக கேட்டுள்ளது. ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பெரும் செல்வந்தர் Stanley Ho விரைவில் ஒரு இயற்கை எரிவாயு சாம்ராஜியத்தை கட்டமைக்க விரும்புகிறார்; இதன் மதிப்பு 40 பில்லியன் டாலர் ஆகும்; இது உலகின் உற்பத்தியைவிட 10 சதவிகிதம் அதிகமாகும்.

மிக விரைவில், மிக மலிவாக கட்டுமானத் திட்டங்களை முடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில், சீன நிறுவனங்கள் ஆபிரிக்கா முழுவதும் இருக்கும் தொழிற்சங்கங்களால் குறைந்த ஊதியம், பணி நிலைமை ஆகியவை பற்றி இருக்கும் கட்டுப்பாடுகளை மீறுவதற்காக குறைகூறப்பட்டுள்ளன. African Labour Research Network (ALRN) என்று தொழிற்சங்க நிதி கொடுத்துள்ள அமைப்பில் இருந்து மே மாதம் வெளிவந்துள்ள அறிக்கை ஒன்று, "பதட்டமான தொழிலாளர் உறவுகள், சீன முதலாளிகள் தொழிற்சங்கம் பற்றி கொண்டிருக்கும் விரோதப் போக்கு, தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படுதல், இழிவான பணி நிலைகள், நியாயமற்ற தொழில்துறை வழக்கங்கள்" ஆகியவற்றை விளக்கியுள்ளது. தெற்கு ஆபிரிக்க ஜவுளித் தொழிலாளர் சங்கம் கிட்டத்தட்ட 600,000 வேலைகள் ஜவுளித்துறையில் 2001ல் இருந்து இழக்கப்பட்டன, இதற்குக் காரணம் உள்ளூர் பொருட்களுக்கு பதிலாக இறக்குமதிகள் வந்துள்ளதுதான் என்று கூறியுள்ளது.

Sinohydro வின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கானாவின் Bui Dam ல் எல்லாத் தொழிலாளர்களும் அன்றாட தற்காலிக தொழிலாளர்களாகத்தான் நடத்தப்படுகின்றனர்; ஒரு அறையில் 12 பேர் தங்க வைக்கப்படுகின்றனர்; அதிக காற்றோட்டமோ, சுகாதார வசதிகளோ கிடையாது. Sinohydro தொழிலாளர்கள் சங்கம் அமைக்க முற்பட்டபோது, அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளானதால், அத்திட்டத்தை கைவிட்டனர்.

சீன நிதிய அமைப்புக்கள் சமீபத்திய பொருளாதார சரிவைத் தொடர்ந்து தங்கள் முதலீடுகளுக்கு உயர்ந்த வருமானங்கள் கிடைப்பதற்கு ஆக்கிரோஷமான முறையில் தேடல்களை கொண்டுள்ளன. உலக வங்கியின் தலைவர் Robert Zoellick சமீபத்தில் சீன முதலீட்டுக் கழகத்துடன் பேச்சுக்கள் நடத்தினார்; அது கிட்டத்தட்ட பெய்ஜிங்கின் வெளிநாட்டு இருப்புக்களில் 400 பில்லியன் டாலரை நிர்வகிக்கிறது; சிறப்புத் தொழில்துறை பகுதிகள் மூலம் ஆபிரிக்க உற்பத்திப் பிரிவில் முதலீட்டிற்கு ஒத்துழைப்பையும் அளிக்கிறது.

அமெரிக்க டாலரின் சரிவு சீனாவை தன்னுடை சொந்த உலக நிதிய மூலோபாயங்களை வளர்க்க ஊக்கம் கொடுத்துள்ளது. சீன வங்கிகளின் தொகுப்பு ஒன்று சமீபத்தில் Standard Bank of South Africa மூலம் ஆபிரிக்காவில் Standard Bank விரிவாக்கத்திற்கு 1 பில்லியன் டாலரை உட்செலுத்தியுள்ளது; இன்னும் அதிக சீன உடன்பாடுகளுக்கு அது நிதி கொடுக்கும்.

பெய்ஜிங் அதிகாரிகள் சமீபத்தில் சீனாவின் வெளிநாட்டு இருப்புக்களின் ஒரு பகுதியை உலகின் மிகப் பெரிய வளர்ச்சி உதவித் திட்டத்திற்கு நிதியளிக்கும் வாய்ப்பு பற்றியும் விவாதித்துள்ளனர் --இதற்கு "Harmonious World Plan" -"சுமுகமாக ஒருங்கிணைந்த உலகத் திட்டம்" என்று பெயரிடப்பட்டுள்ளது; ஆபிரிக்கா, இலத்தின் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் இதில் இருந்து முக்கிய நலன்களைப் பெறும்.

இந்த நிதிக்கு கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர் மூலதனம் இருக்கும்; 100 பில்லியன் டாலர் வெளிநாட்டு நாணயச் செலாவணி இருப்புக்கள் இருக்கும்; எஞ்சியவை சீன Renminbi யில் இருக்கும் (ஒரு RMB 2.7 டிரில்லியன் ஆகும்). நிறுவன அமைப்புக்களான Forum on China-Africa Cooperation போன்றவற்றின் மூலம் இது கடன்களை கொடுக்கும்; இது வளரும் நாடுகளுக்கு அமெரிக்க டாலர்கள் மற்றும் ரென்மின்பி கலவையை பெருக்க உதவும்; இது திருப்பிக் கொடுக்கப்படுவது தேசியக் கடனில் இருந்து அல்லது கிடைக்கும் இலாபத்தில் இருந்து என்று இருக்கும்.

பொருளாதார வல்லுனர் Xu Shanda சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டிற்கு ஜூலையில் கொடுத்த திட்டம் அமெரிக்காவின் போருக்குப் பிந்தைய மார்ஷல் திட்டத்தில் இருந்து கருத்துக்களை பற்றிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சீனத் தொழில்துறையில் உலக மந்த நிலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கும் முயற்சியாகும்; அதற்காக புதிய ஏற்றுமதிச் சந்தைகள் தோற்றுவிக்கப்பட்டு, Renminbi ஒரு சர்வதேச வணிகத்தின் நாணயமாகவும் நிறுவப்படும்.

ஆபிரிக்காவில் சீனத் திட்டங்களின் பேரவாத் தன்மை உலக மந்தநிலை மற்றும் அமெரிக்க கொள்கை பெருகிய முறையில் காப்புவாதத்தை நோக்கிச் செல்லுவதால் உந்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சர்வதேச நலன்களுக்கு முக்கியமான பகுதியில் சீனா ஊடுருவும் போது, தவிர்க்க முடியாமல் இது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இன்னும் அதிக பதட்டத்தை ஏற்படுத்தும்.

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்

ஒபாமாவின் ஆசியப் பயணம் அமெரிக்க-சீன அழுத்தங்களால் சூழப்பட்டுள்ளது