World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Opel, General Motors and German-American relations

ஓப்பல், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஜேர்மனிய-அமெரிக்க உறவுகள்

Peter Schwarz
14 November 2009

Use this version to print | Send feedback

சமீபத்திய நாட்களில், ஜேர்மனிய மற்றும் அமெரிக்க அரசாங்கப் பிரதிநிதிகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கூட்டுழைப்பு பற்றி பெரும் உறுதியுடன் புகழ்கின்றனர். நவம்பர் 3ம் தேதி ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் அமெரிக்க காங்கிரசில் நீண்ட கரவொலியைப் பெற்றார். நவம்பர் 9ம் தேதி வெளிவிவகார செயலராளர் ஹில்லாரி கிளின்டன் பேர்லின் சுவர் தகர்ப்பின் இருபதாம் ஆண்டு நினைவுநாளைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கு பெற்றார். ஜனாதிபதி பாரக் ஒபாமா ஒரு வீடியோ செய்தியை அனுப்பியிருந்தார்.

ஆனால் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களின் அடித்தளத்திற்கு கீழே உள்ளவற்றையும் மற்றும் பொருளாதார, அரசியல் உறவுகளின் தன்மை பற்றி ஆராய்ந்தால், ஜேர்மனிய-அமெரிக்க உறவுகள் முற்றிலும் வேறு கோணத்தில் தென்படும். பனிப்போர் முடிந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர், பெருகிய அழுத்தங்களும் மோதல்களும் நிறைந்து காணப்படுகின்றன. கார்த்தயாரிப்பாளர் ஓப்பலை சூழ்ந்துள்ள மோதல்களில் இவை அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

மேர்க்கெல் வாஷிங்டனில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் பாராட்டப்படும்போது, 500 மைல்கள் தள்ளியுள்ள டெட்ரோயிட்டில் ஜெனரல் மோட்டார்ஸின் (GM) இயக்குனர்கள் அதன் ஜேர்மன் துணை நிறுவனமான ஓப்பலை கார் உதிரிபாகம் தயாரிக்கும் Magna விற்கு விற்பது என்ற தங்கள் முந்தைய உறுதிமொழியை நிராகரித்து, அந்நிறுவனத்தை GM ன் சொந்தக் கட்டுப்பாட்டின் கீழேயே கொள்ளுவது என்ற முடிவிற்கு வந்தனர்.

GM இப்படி முழுஅளவில் மாறியது தன்னுடைய அரசியல் வாழ்வில் மேர்க்கெல் எதிர்கொண்ட பெரும் சங்கடம் என்று விவரிப்பதில் ஜேர்மனிய செய்தி ஊடகம் கிட்டத்தட்ட ஒருமனதாக இருந்தது. ஓப்பல் மாக்னாவிற்கு விற்கப்பட வேண்டும் என்பதற்கு ஆக்கிரோஷமான முறையில் மேர்க்கெல் செயல்பட்டு அதை சமீபத்திய கூட்டாட்சி தேர்தல்களின் பிரச்சாரத்தில் மத்திய விடயமாக்கியிருந்தார்.

அமெரிக்க அரசாங்கம் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்டுள்ளதால் GM இன் முடிவு அரசியல்ரீதியாக இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த முடிவை எடுத்த இயக்குனர் குழுவை ஒபாமா நிர்வாகமே நியமித்திருந்தது.

ஜனாதிபதியை சந்தித்து மற்றும் காங்கிரஸில் உரையாற்றிய பின்னர்தான் மேர்க்கெலுக்கு இந்த முடிவு பற்றி கூறப்பட்டது. ஆனால் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஒபாமாவிற்கு இந்த முடிவு பற்றி தெரியாது என்று பின்னர் கூறப்பட்டது. எவ்வாறிருந்தபோதிலும், இதன் வெடிப்புத் தன்மை நிறைந்த வெளியுறவுக் கொள்கை தாக்கங்களால் அத்தகைய கருத்து நம்பத்தக்கது அல்ல.

தங்கள் இகழ்வுணர்வை வெளிப்படுத்த ஜேர்மனிய அரசாங்க அதிகாரிகள் ஒன்றும் மறைமுகச் செயலில் ஈடுபடவில்லை. இதுபற்றி தன்னுடைய வாடிக்கையான இராஜதந்திர முறையில் "ஆழ்ந்த வருத்தத்தை" மேர்க்கெல் தெரிவித்தாலும், மேர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை (CDU) சேர்ந்த Hesse மாநிலத்தின் பிரதமர் ரோலாண்ட் ஹொக் தன்னுடைய "எரிச்சலை" வெளிப்படுத்தினார். வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் பிரதமர் யூர்கன் ருட்கர்ஸ் (இவரும் CDU வைச் சேர்ந்தவர்தான்), GM ன் நடத்தை "பேராசை பிடித்த முதலாளித்துவத்தின் அவலட்சண முகத்தைத்தான் வெளிப்படுத்தியுள்ளது" என்றார்.

ஓப்பல்-மாக்னா திட்டத்திற்கான தன்னுடைய ஆதரவை, ஜேர்மனியுடைய ஓப்பல் ஆலைகளில் வேலை பற்றிய கவலைகளினால் உந்தப் பெற்றது என்று மேர்க்கெல் சித்தரித்திருந்தார். ஆனால் இது பெரும்பாலும் ஒரு தேர்தல் பிரச்சாரம்தான். மாக்னா கையேற்றுக்கொள்ளுவது என்பது GM இன் ஐரோப்பிய தொழிற்சாலைகளில் 50,000 வேலைகளில் 11,000 இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கும்.

உண்மையில், ஓப்பலைச் சூழ்ந்துள்ள முரண்பாடுகள் சந்தைகளுக்கும் பூகோள அரசியல் நலன்களுக்குமான போராட்டத்தால் உந்துதலைப் பெறுகின்றது. ஒரு சுயாதீன புதிய ஓப்பலின் (New Opel) எழுச்சி என்பது அமெரிக்கக் கார்த்தயாரிப்பு தொழிலுக்கு ஐரோப்பிய சந்தையில் ஒரு முக்கிய விற்பனை நிலையை இழத்தல் என்று ஆகியிருக்கும். அதே நேரத்தில், மாக்னா ஒப்பந்தம் ஜேர்மனிய கார்த்தயாரிப்பு தொழிலுக்கு ரஷ்ய சந்தையுடன் ஒரு இணைப்பைக் கொடுத்திருக்கும்.

ரஷ்யாவின் Sberbank உடன் சேர்ந்து ஓப்பலை எடுத்துக் கொள்ளுவதாக மாக்னா திட்டமிட்டிருந்தது. Sberbank இன் முதலாளியான Geeman Gref ஒரு முன்னாள் பொருளாதார மந்திரியும், ரஷ்ய பிரதம மந்திரி விளாடிமிர் புட்டினுடைய நெருக்கமான நண்பரும் ஆவார். குறைந்த வளர்ச்சியுடைய ரஷ்ய கார்த்தயாரிப்புத் தொழிற்துறை இதனால் அவசரமாகத் தேவைப்படும் தொழில்நுட்ப வழிவகையை அறிந்திருக்கும். இதற்குப் பதிலாக ஓப்பலும் Russelsheimல் உள்ள அதன் தொழில்நுட்ப மையமும் ரஷ்யா ஊடாக ஆசிய கார்ச் சந்தையில் நுழைந்திருக்கும் வாய்ப்பு இருந்தது. ரஷ்ய அரசாங்கமும் இத்திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது. அத்திட்டம் சரிந்தமையை அது மகிழ்ச்சியற்ற முறையில்தான் எதிர்கொண்டது.

ரஷ்ய கார்த்தயாரிப்புச் சந்தை உலகில் மிகவும் முன்னேற்றம் அடையக்கூடியது என்று கருதப்படுகிறது. 2007ல் உலகப் பொருளாதார நெருக்கடி தோன்றுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 2.5 மில்லியன் கார்கள் ரஷ்யாவில் விற்கப்பட்டிருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு $45 பில்லியன் ஆகும். இவற்றில் பாதிக்கும் மேலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். மற்றொரு ஐந்தில் ஒரு பங்கு ரஷ்யாவில் வெளிநாட்டு உரிமத்தின்கீழ் தயாரிக்கப்பட்டது.

கூடிய விரைவில் விற்பனை இருமடங்காகும் என்று வல்லுனர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். இறக்குமதிகளில் அமெரிக்க, ஜப்பானிய, கொரிய மாதிரிகள் தற்பொழுது கூடுதல் முன்னணியில் உள்ளன. GM உடைய Chevrolet, ரஷ்யாவின் Avtovaz உடன் கூட்டினை கொண்டு, முதலிடத்தில் உள்ளது. சந்தைப் பங்கு அதற்கு 8 சதவிகிதம் ஆகும். மிகவும் வலுவான ஜேர்மனிய நிறுவனமான Volkswagen மிகவும் பின்தங்கி 14வது இடத்தில்தான் உள்ளது.

மாக்னா உடன்பாடு செயல்பட்டப்பட்டிருந்தால், ரஷ்யாவில் Chevrolet இன் முக்கிய போட்டியாளனாக ஓப்பல் இருந்திருக்கும். ரஷ்ய சந்தைக்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஓப்பல் மாதிரி Nizhny Novgorod ல் உள்ள Gaz கார்த்தயாரிப்பு நிறுவனம் Volga நகரில் கட்டமைக்கப்பட்டிருக்கும். தற்பொழுது உற்பத்தி அங்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு, Gaz இல் உள்ள 118,000 வேலைகளில் பாதிக்கும் மேல் குறைக்கப்பட உள்ளன. இதைத்தவிர 102,000 தொழிலாளர்களை கொண்டுள்ள, நெருக்கடிகள் நிறைந்த உற்பத்தி நிறுவனமான Avtovaz க்கு ஒரு புதிய, அவசர தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.

ரஷ்யாவிற்கு திட்டமிடப்பட்டிருந்த தொழில்நுட்ப மாற்றம் மாக்னா விற்பனையை கைவிடும் GM ன் முடிவில் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். GM ன் உலக உற்பத்தி வளர்ச்சிக்கான தலைவர் Bob Lutz உயர் நிர்வாக அதிகாரியான Fritz Henderson கருத்துக்கு எதிராக வெற்றிபெற்றார். ஓப்பலை கட்டமைப்பதற்கான செலவைச் சேமிக்கும் வகையில் ஹெண்டர்சன் நிறுவனத்தை விற்றுவிடலாம் என்று விரும்புகையில், Lutz இந்த விற்பனை ரஷ்யாவில் GM க்கு ஒரு போட்டியைத் தோற்றுவித்து GM இன் சந்தை நிலைப்பாட்டை வலுவிழக்கச் செய்வதுடன் ஐரோப்பாவிலுள்ள அதன் தொழில்நுட்ப மேன்மைக்கும் ஊறு விளைவிக்கும் என்றார்.
விற்பனைகள், சந்தைகள், தொழில்நுட்பம் ஆகியவை பற்றிய வாதங்களுக்குப் பின் பெரிய, மூலோபாயப் பிரச்சினைகளும் உள்ளன. ஜேர்மனி நீண்ட காலமாக அமெரிக்கவின் மீதான தன் பொருளாதார, இராணுவச் சார்பைக் குறைக்க முயற்று அதற்காக ரஷ்யாவுடன் வலுவான பிணைப்புக்களை வளர்க்கிறது. இது வாஷிங்டனிலும் மற்ற ஐரோப்பிய தலைநகரங்களிலும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு பேர்லின்-மாஸ்கோ அச்சு ஏற்பட்டால் தங்கள் நலன்கள் தியாகம் செய்யப்பட்டுவிடும் என்று சந்தேகப்படுகின்றன. பாரிஸிலும், லண்டனிலும், ஜேர்மனி ஒருதலைப்பட்சமாக அதன் வல்லரசு நலன்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் இழப்பில் தொடர்கிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையான மோதல் இப்பிரச்சினைகள் பற்றி விளைந்திருந்தன. சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) கீழ் இருந்த ஜேர்மனிய அரசாங்கம் ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையில் ஈராக் போருக்கு எதிர்ப்பை வெளியிட்டபோது அப்பொழுது அமெரிக்காவில் பாதுகாப்பு மந்திரியாக இருந்த டோனால்ட் ரம்ஸ்பெல்டின் சொற்களில் "பழைய ஐரோப்பாவிற்கு" எதிராக "புதிய ஐரோப்பா" என்ற கருத்தை திரட்டி ஐரோப்பிய ஒருங்கிணைப்பு போக்கு தடுமாறுவதற்கு வகை செய்தார்.

முக்கிய ஜேர்மனிய எரிசக்தி பெருநிறுவனக் கூட்டுக்களின் ஆதரவைக் கொண்டு, ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் பெரிதும் நம்பியிருந்த ஷ்ரோடரின் வெளியுறவுக் கொள்கை ஜேர்மனிக்குள்ளும் எதிர்ப்பை சந்தித்தது. ஜேர்மனிய உயரடுக்கின் முக்கிய வட்டங்கள் ரஷ்யவிடம் மிக அதிக நம்பிக்கை வைத்திருத்தல் ஆபத்தானது என்றும் அமெரிக்காவுடன் மேன்மையான உடன்பாட்டின் உயர்வைப் பற்றி வலியுறுத்தியும் பேசின. இப்பிரச்சினையில் ஷ்ரோடர் பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்டு அவருடய அரசாங்கத்திற்கு ஒரு முன்கூட்டிய முடிவிற்கு வழிவகுத்தது.

ஓப்பல் பிரச்சினையைப் போவே, அமெரிக்கா ஐரோப்பிய உட்பூசல்கள் மற்றும் ஜேர்மனியின் உள்நாட்டு அழுத்தங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. ஓப்பலும் GM இன் பிரிட்டிஷ் துணை நிறுவனமான Vauxhall ஆலைகளைக் கொண்ட ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் பிரிட்டனில் GM மாக்னாவிற்கு எதிராக எடுத்துள்ள முடிவு வரவேற்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் மாக்னா உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாகவும் கருணயற்றும் தொடர்ந்து, ஜேர்மனிய உற்பத்தி ஆலைகளுக்கு முன்விருப்பம் கொடுத்தது. இது இந்நாடுகளில் வெறுப்பை ஏற்படுத்தியது.

இவை ஐரோப்பிய ஒன்றிய போட்டிப்பிரிவு ஆணையர் Nelli Kroes ஐ அணுகினர். அவர் ஜேர்மனிய அரசாங்கத்திடம் இருந்து 4.5 பில்லியன் யூரோக்கள் மறுவளர்ச்சி உதவித்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒரே ஒரு முதலீட்டாளர் மாக்னாவிற்காக அளிக்கப்படக்கூடாது என்ற உறுதிமொழியை கேட்டார். ஜேர்மனிய பொதுநிதிகளில் இருந்து GM ஆதாயம் அடையக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்த டெட்ரோயிட்டில் வேறுவித கருத்துக்களைக் கொடுத்து ஓப்பலை தக்கவைத்துக் கொள்ளுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

மாக்னாவிற்கு எதிரான முடிவு ஜேர்மனியில் அமெரிக்கச் சார்புடைய அரசியல் வட்டங்களால் மட்டும் வரவேற்கப்படாமல், பெருவணிகத்தின் பிரிவுகளாலும் வரவேற்கப்பட்டது. அவை ஜேர்மனிய அரசாங்கம் ஓப்பலின் நிர்வாகத்தில் குறுக்கிடுவது பொருளாதாரத்தின் "சுதந்திர சந்தைமுறைக்கு" ஒரு இழுக்கு என்று கருதின.

இதுபற்றி Frankfurther Allegemeine பத்திரிகை கூறியது: "உதவிக்கு எவரேனும் வருவர் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ள ஜேர்மனிய அரசியல்வாதிகள் ஓப்பலில் சிவப்புக் கோட்டைக் கடந்துவிட்டனர். கார் உற்பத்திப் பிரிவில் அவர்கள் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி ஜேர்மனி பெரும்பாதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் தள்ளவிட்டனர்." Die Welt பத்திரிகை எழுதுவது: "ஓப்பல் விவகாரத்தில் அம்பலமானது அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினையை கற்பிக்க வேண்டும்: இனி வருங்காலத்தில் நிர்வாக முடிவுகளை அந்தத் துறை முதலாளிகளுக்கு விட்டுவிடுக" என்பதே அது. இரு செய்தித்தாட்களும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நலிந்த வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் நூறாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் உதவி என்ற விதத்தில் ஆதரவு கொடுத்ததற்கும் அதே நேரத்தில் பெருநிறுவன முடிவுகளைப் பற்றிச் சிறிதும் குறுக்கிடாத் தன்மை பற்றியும் பாரட்டியுள்ளன.

கிறிஸ்துவ ஜனதாயகவாதிகளின்(CDU) பெருவணிகப் பிரிவும், மேர்க்கெலின் புதிய அரசாங்கத்தில் இளைய பங்காளியான தடையற்ற சந்தைக்கு ஆதரவு தரும் சுதந்திர ஜனநாயகக் கட்சியும் (FTP) GM இன் முடிவினால் வலுப்பெற்றது போல் உணர்கின்றனர். தன்னுடைய சமீபத்திய அரசாங்க அறிக்கையில் மேர்க்கெல் அவற்றிற்கு ஆதரவாக மிக அடிப்படை பிரச்சினைகளை எடுத்துரைத்தார். அரசாங்கம் வரிக் குறைப்புக்கள், இணைந்து நிதி வழங்கும் சமூக காப்பீட்டுத் திட்டம் (முதலாளிகளும் தொழிலாளிகளும் செலவினங்களில் பங்கு பெறும் முறை) கைவிடப்படல், ஓர் ஈரடுக்குச் சுகாதார முறை ஆகியவற்றை வளர்த்தல் ஆகியவற்றில் தன் அரசாங்கத்தின் உறுதியைக் கூறினார்.

அமெரிக்காவுடனான மோதல் இதனால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. மாறாக, ஜேர்மனிய, அமெரிக்க பொருளாதார நலன்கள் ஓப்பல் பற்றி மட்டுமின்றி நாணயம், நிதியக் கொள்கை, எரிசக்தி, மூலப்பொருட்களை அடைவதற்கான போட்டி, Airbus, Boing இவற்றிற்கு இடையே உள்ள போட்டி போன்ற பல முக்கிய பிரச்சினைகளிலும் மோதுகின்றன. இதேதான் ஜேர்மனிக்கும் மற்ற ஐரோப்பிய சக்திகளான பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

உலகளாவிய பொருளாதார நெருக்கடி இருக்கும் சூழ்நிலையில், சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் இலாபங்களுக்கான போட்டி தவிர்க்க முடியாமல் ஏகாதிபத்திய சக்திகளிடேயே பூசல்களைத் தீவிரப்படுத்தும். வணிக, பொருளாதார மோதல்கள் காலனித்துவ வகைப் போர்களுக்கு இட்டுச் சென்று இறுதியில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான போருக்கும் வழிவகுக்கும். இவை அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராக நிகழ்பவை. சர்வதேச மோதல்களின் அதிகரிப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.

இந்த நிகழ்வில் தொழிற்சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட தவறான பங்கைக்கொள்ளுகின்றன. ஓப்பலைப் பொறுத்தவரையில் மாக்னா உடன்பாட்டிற்காக தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் IG Metall தொழிற்சங்கமும் மிக அதிகம் முரசை முழக்கின. அமெரிக்க நடவடிக்கைகளை GM மறு கட்டமைத்து 14 ஆலைகளை மூடி, 27,000 ஊழியர்களை நீக்கி, ஊதியங்களைக் குறைத்தபோது அமெரிக்க தொழிலாளர்களுடன் ஒற்றுமை தெரிவித்து ஒரு சொல்கூட Russelsheim இல் உள்ள தொழிற்சாலை தொழிலாளர்குழு அலுவலகத்தில் இருந்தோ, பிராங்க்பேர்ட்டில் உள்ள IG Metall தலைமையகத்தில் இருந்தோ வரவில்லை. மாறாக அவை அமெரிக்க எதிர்ப்பு உணர்வை தூண்டி, ஓப்பல் GM இடம் இருந்து பிரிக்கப்பட வேண்டும் என்றும் மாக்னாவில் ஊதியக் குறைப்புக்கள் மற்றும் 11,000 வேலைகள் தகர்ப்பிற்கும் ஒப்புக் கொண்டன.

மாக்னா உடன்பாடு தோல்வியுற்றபின், தொழிற்சாலை தொழிலாளர் குழு GMக்கு ஆதரவாக வெகுவிரைவில் வந்து, ஓப்பல் நிர்வாகத்திற்கு தன் ஒத்துழைப்பை "தொழிற்சாலையின் மறுவளர்ச்சிக்கு" அளிக்க முன்வந்துள்ளது. GM இன் உயர் நிர்வாக அதிகாரி Henderson ஏற்கனவே ஜேர்மனி முழுவதும் ஆதரவுப் பிரச்சாரப் பயணத்தை தொடங்கியுள்ளார்.

வேலைகள், ஊதியங்கள், சமூக உரிமைகள் ஆகியவை தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுடனும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களுடனும் முறித்துக் கொண்டு சுயாதீன பாதுகாப்பு குழுக்களை அபிவிருத்தி செய்வதன் மூலம்தான் முடியும். ஊதியங்கள் மற்றும் வேலைகள் பாதுகாப்பு என்பது ஏகாதிபத்தியம், போர் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களுடன் பிரிக்க முடியாமல் இணைந்தது. எல்லைகளை கடந்து தொழிலாளர் ஐக்கியப்பட்டு ஒரு சோசலி வேலைத்திட்டத்தின் மூலம் போட்டி முதலாளித்துவ குழுக்களை எதிர்க்க வேண்டும்.