World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காDetroit job fair draws thousands டெட்ரோயிட் வேலைச் சந்தை ஆயிரக்கணக்கானவர்களை ஈர்க்கிறது By Naomi Spencer வெள்ளிக் கிழமையன்று டெட்ரோயிட் நகர மக்கள் ஆயிரக்கணக்கில் ஒரு பரபரப்பான வேலைச் சந்தையில் 400 வேலைகளுக்கு விண்ணப்பிக்க நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். வேலைச் சந்தைக்கு வரக்கூடிய கூட்டம் முதலில் நடைபெறுவதாக இருந்த Work Place Building ல் இருந்து இந்த நிகழ்ச்சி பின்னர் Cobo Hall மாநாட்டு மையத்திற்கு முதல் இடம் போதாது என்பதை அறிந்தபின் மாற்றப்பட்டது. இப்பகுதியில் உள்ள ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் அடையாளமாக, வேலைச் சந்தை என்பது இந்த ஆண்டு கோபோ அரங்கத்திற்கு ஏராளமான கூட்டத்தை வருவித்த வேலைகள், உதவியளிக்கும் நிகழ்வுகளின் தொடர்ச்சியில் சமீபத்தியதாகும். மார்ச் மாதம் நகரத்தில் இதே போன்ற மற்றொரு வேலைச் சந்தை நடந்தது; அது 10,000 மக்களை ஈர்த்தது. கடந்த மாதம் 3,400 பேருக்கு மட்டுமே உஷ்ணம் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட உதவியைப் பெறுவதற்கு 50,000 பேர் வரை கூடியிருந்தனர். நகரத்தின் மக்கள் பெருகிய முறையில் வேலையின்மை நிலையால் எதிர்கொள்ளப் படுகின்றனர். தற்பொழுது டெட்ரோயிட்டில் வேலையின்மை 28.9 சதவிகிதம் என்று உள்ளது; மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவர்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய உளச் சோர்வு தரும் நிலைமைகள் ஆயிரக்கணக்கானவர்களை எவ்வித நிதி உதவியையும் நாட வைத்துள்ளன. டெட்ரோயின் பணிப்பிரிவு வளர்ச்சித் துறை, மிச்சிகனில் உள்ள நகர்ப்பகுதி சட்டப்பணிகள் பிரிவு மற்றும் மேயர் டேவிட் பிங்கின் அலுவலகம் ஆகியவை டெட்ரோயிட்டில் வேலைகளை தோற்றுவிப்பதற்கான ஒரு கூட்டு முயற்சி என்று WSWS இடம் தெரிவித்தனர். கூட்டு நடவடிக்கையின் செய்தித் தொடர்பாளர் Mark Jones, இந்தச் சந்தை "டெட்ரோயிட்டிற்கு வேலைகளை கொண்டுவரும் மேயர் பிங்கின் உறுதி நிறைவேறுவதைக் காட்டுகிறது" என்றார். "டெட்ரோயிட்டிற்கு வேலைகளைக் கொண்டுவருவதற்கு" என்பதற்கு முற்றிலும் மாறாக, பிங் ஆசிரியர்கள் மற்றும் நகரவைத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கியதுடன், நகரத்தின் தொடர்ந்த பொருளாதாரச் சரிவிற்கும்தான் தலைமை தாங்குகிறார். வேலையை எதிர்நோக்கியிருக்கும் மக்கள் இந்த நிகழ்வு வேலை கொடுப்பவர்கள் நபர் பற்றிய குறிப்புக்களை ஏற்று பதவிகளுக்கு பேட்டி காண்பர் என்று கூறப்பட்டிருந்ததால் நிகழ்வைப் பற்றி திகைப்பு அடைந்தனர். நீண்ட வரிசையைக் கடந்தபின், வேலை தேடுபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கோரடப்பட்டு வலைத்தள விலாசங்களும் கொடுக்கப்பட்டனர். சந்தையில் விளம்பரப்படுத்தப்பட்ட பெரும்பாலான வேலைகள் குறைவூதிய பணிப்பிரிவு வேலைகள் ஆகும். வால் மார்ட் 300 வேலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியது. ஆனால் WSWS நிருபர்களிடம் விண்ணப்பித்தவர்கள் ஆரம்ப நிலை, பகுதி நேர அல்லது தற்காலிக வேலை என்று விவரித்தனர் (அருகில் இருக்கும் வீடியோ காட்சியைக் காணவும்.) "இது நேரத்தை வீணடிப்பதாகும்" என்று WSWS நிருபர்களிடம் Movita Gresham மாநாட்டு அரங்கில் இருந்து வெளியே வரும்போது கூறினார். "என்னிடத்தில் முதுகலைப் பட்டம் உள்ளது, பெரும்பாலான பதவிகளைப் பொறுத்த வரையில் நான் கூடுதல் தகுதி படைத்துள்ளேன்; எங்களிடம் அவர்கள் கூறியதெல்லாம் 'ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.' என்பதுதான். இது நேரத்தை வீணடித்துள்ளது." Kmart ன் பிரதிநிதி ஒருவர் WSWS இடம் நிறுவனம் பகுதி நேர, பருவக்கால வேலைகள், இரவு நேரத்தில் அலமாரித்தட்டுக்களில் பொருட்களை நிரப்புதல், விடுமுறைக்காலத்தில் வாடிக்கையாளர் சேவை மற்றும் கல்லாப் பெட்டிகளில் உட்கார்தல் போன்ற வேலைகளைத்தான் அளிக்க உள்ளது என்றார். 20 முதல் 40 வேலைகளுக்கு நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ள நிலையில், 3,000 முதல் 4,000 விண்ணப்பங்களைத் தாங்கள் பெறக்கூடும் என்று பிரதிநிதி கூறினார்.WSWS பிரெட்டி கெல்லியுடன் உரையாடியது; அவர் சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதாகவும் வேலை கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். "ஒபாமா இன்னும் அதிக வேலைகளைத் தோற்றுவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வேலைகள் கிடைப்பதற்கு ஒருவர் நிறைய விண்ணப்பங்களை ஆன்லைனில் கொடுக்க வேண்டியுள்ளது; எனக்கு கணினி பற்றி அதிகம் தெரியாது. ஒரு மாதமாக நான் வேலை தேடிவருகிறேன். ஒரு தற்காலிகப் பணிக்கு பேட்டி வந்துள்ளது, ஆனால் நான் வால்மார்ட், கேமார்ட், பார்மர் ஜாக் ஆகியவற்றிற்கும் விண்ணப்பித்துள்ளேன்; இவை அனைத்தும் உணவுத் தொடர் நிறுவனங்கள்; ஆனால் எந்த பதிலும் வரவில்லை. சில துறைகளில் வெல்டிங் போன்றவற்றில் நான் பயிற்சி பெற்றுள்ளேன், ஆனால் வேலை கிடைக்கவில்லை. என் குடும்பத்திற்கும் நான் உணவு அளிக்க வேண்டும்."WSWS இடம் ஆன்டனி ஸ்க்ரீன் கூறினார்: "23 டிரில்லியன் டாலர் கொடுத்து அரசாங்கம் வங்கிகளை பிணை எடுப்புச் செய்யலாம். அமெரிக்காவில் 23 டிரில்லியன் மக்களா இருக்கின்றனர்? நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் டாலர்கள் கொடுத்திருக்கலாம். அவர்கள் செய்வது பொருளற்றதாக உள்ளது. மக்களுடைய வேலைகளைக் குறைப்பதின் மூலம் பொருளாதாரத்தில் சமசீர் நிலைமையை அடையமுடியாது."ஒரு வன்முறையற்ற குற்றத்திற்காக பரோலில் இருக்கும் Dwayne Harris பல வேலைகளுக்கு விண்ணப்பிப்பதால் ஏற்பாடும் பெரும் திகைப்பை வெளிப்படுத்தினார். "ஒன்றரை ஆண்டுகளாக நான் இப்பொழுது வேலையில் இல்லை. பாதுகாப்பு வேலைகளில் இங்குமங்கும் பணிபுரிந்துள்ளேன். ஆனால் இப்பொழுது வேலைகள் அதிகமாக இல்லை." "Popeye's Chicken இடம் விண்ணப்பிக்கச் சென்றேன், அங்குள்ள மேலாளர், 'நாங்கள் தேவையான அளவிற்கு ஆட்களை எடுத்து விட்டோம், குறைந்த ஊதியம் கொடுப்பதற்காக பள்ளிச் சிறுவர்களை எடுக்கப் போகிறோம்' என்று என்னிடம் கூறினார்" என்றார். தையல் வேலை தெரிந்த வேலை கிடைக்காத ஒரு 20 வயது ரியன் ஹேயர் சமீபத்தில் கென்டக்கியில் இருந்து வேலையை நாடி மற்றொரு பகுதிக்குச் சென்றுள்ளார். பல நிறுவனங்களுக்கு சென்றதில் ஐந்து நிறுவனங்கள்தான் உண்மையில் வேலைக்கு ஆட்களை எடுக்கின்றனர் என்று அவர் WSWS இடம் தெரிவித்தார். பெரும்பாலனவர்கள் வெறும் வலைத் தள விலாசங்களைத்தான் கொடுக்கின்றனர். "மார்ச் மாதத்தில் இருந்து வேலை தேடுகிறேன். நான் ஒரு கல்லூரிக்குப் போக விரும்புகிறேன். ஆனால் பல கடன்கள் சேர்ந்து இன்னமும் வேலையும் கிடைக்காத நிலைதான் இருக்கும் என்று நம்புகிறேன்." |