World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Speculative recovery sows seeds of an even greater economic crash

ஊக வழிவகை மீட்பு இன்னும் கூடுதலான பொருளாதாரச் சரிவிற்கு வித்துக்களை விதைக்கிறது

By Barry Grey
10 November 2009

Back to screen version

கடந்த புதனன்று மத்திய வங்கிக் கூட்டமைப்பின் (FED) கொள்கை இயற்றும் Federal Open Market Committee அதன் கூட்டாட்சி நிதிகளின் வட்டி விகிதத்தை தற்போதைய தரமான பூஜ்யத்தில் இருந்து 0.25 சதவிகிதத்துடன் தக்கவைத்துக் கொள்ள இருப்பதாக அறிவித்தது. அந்த முடிவு பரந்த அளவில் எதிர்பார்க்கப்பட்டது என்றாலும், மத்திய வங்கிக்கூட்டமைப்பு விரைவில் வட்டி விகிதங்களை அதிகரிக்க உள்ளது என்பதை சுட்டிக்காட்டும் வார்த்தைகள் இந்த அறிவிப்பில் இருக்கலாம் என்று அதிக ஊகங்கள் இருந்தன.

ஆனால் மத்திய வங்கிக்கூட்டமைப்பு அதன் சமீபத்திய மந்திரமான வட்டிவிகிதங்கள் "மிக மிகக் குறைந்த விகிதத்தில்", "ஒரு நீடித்த காலத்திற்கு" வைத்திருக்கும் என்பதைத்தான் மீண்டும் கூறியுள்ளது. "ஒரு நீடித்த காலத்திற்கு" என்பதில் இருந்து "சிறிது காலத்திற்கு" என்று கூறப்படுவதில் உள்ள மாற்றம் அதன் கொள்கையான கிட்டத்தட்ட பூஜ்ய விகிதங்களில் இருந்து மாறுதலுக்கு மத்திய வங்கிக்கூட்டமைப்பு தயார் செய்து வருகிறது என்பதற்கான அடையாளத்தை காண்பித்திருக்கலாம்.

ஆனால் தன்னுடைய அசாதாரணமாக மலிவான கடன் கொள்ளையில் சீக்கிரமாக மாற்றம் இராது என்று மத்திய வங்கிக்கூட்டமைப்பு அடையாளம் காட்டியமை பங்குச் சந்தைகளில் ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை மத்திய வங்கிக்கூட்டமைப்பின் அறிவிப்பை தொடர்ந்து, Dow Jones Industrial Average நூறு புள்ளிகள் ஏற்றம் பெற்றது. வெள்ளியன்று தொழிற்துறை உத்தியோகபூர்வ அமெரிக்க வேலையின்மை விகிதம் 10.2 என்று மோசமான தன்மையை அறிவித்திருந்தபோதும் இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளது. திங்களன்று Dow Jones Industrial Average 205 புள்ளிகளை ஆதாயம் பெற்று 13 மாதத்தில் இல்லாத 10,227 எண்ணிக்கையை அடைந்தது.

பங்குச் சந்தைகளில் மிகச் சமீபத்திய எழுச்சி, சமீபகாலங்களில் வெளிவந்துள்ள போக்கை தொடர்கிறது. உலக நாணய சந்தைகளில் டாலரின் மதிப்பை ஒட்டிய நெருக்கமான ஆனால் தலைகீழான விதத்தில் பங்குகள் பரிமாற்றம் அடைந்தன. கடந்த புதனன்று இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு யூரோவிற்கு எதிராக டாலர் வீழ்ச்சி அடைந்தது. அந்தப் போக்கு திங்களன்றும் தொடர்ந்தது, மீண்டும் டாலர் யூரோவிற்கு எதிராக 1.50 டாலர் ஆக குறைந்தது.

சமீபத்திய போக்குகளை ஒட்டியே, எண்ணெய், தங்கம் மற்றும் பிற பொருட்களும் பங்குவிலை எழுச்சிக்கு ஏற்ப விலை ஏற்றம் பெற்றன. மிகப் பெரிய அளவில் உயரும் சொத்து விலைகளுக்கும் டாலர் சரிவிற்கும் இடையே உள்ள தொடர்பு 2008 மற்றும் 2009 முன்பகுதியில் இருந்த நிதிய நெருக்கடி, மந்தநிலையில் இருந்து உலக மீட்பு என்று அழைக்கப்படுவதில் அசாதாரண முறையில் உள்ள ஊக, உறுதியற்ற தன்மையை சுட்டிக் காட்டுகிறது.

பெருநிறுவன, வங்கிகள், நிதியச் சொத்துக்களில் மீட்பு என்பதுதான் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள சக்திவாய்ந்த நிதிய நலன்களை பெரும் செல்வக்கொழிப்பு நலன்களுக்கு உட்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வேலையின்மையும், வறுமையும் உயர்ந்துள்ளன. அடிப்படை உற்பத்தி பெருமந்த நிலைக்குப் பின் ஆழ்ந்த வீழ்ச்சியில் சிக்கியுள்ளது. இந்தத "மீட்பு" அநேகமாக முற்றிலும் ஆபத்தான சொத்துக்களில் ஊக எழுச்சி ஏற்பட்டுள்ளதின் உந்ததுதலில் இருந்து வந்துள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் கிட்டத்தட்ட வட்டியில்லா கடன் பெருவங்கிகளுக்குக் கொடுத்து அதிகளவில் பொதுக்கடனை வளர்த்துள்ளதினாலும் எரியூட்டப்பட்டுள்ளது.

CNBC வர்ணனையாளர் Charles Gasparino நவம்பர் 6ம் தேதி வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, "வட்டி விகிதங்கள் பூஜ்யத்திற்கு அருகில் உள்ளன. உண்மையில் மத்திய வங்கிக் கூட்டமைப்பு ஆபத்துக்கள் எடுப்பதற்கும் பத்திர வணிகத்திற்கும் உதவித் தொகை கொடுப்பது போல் உள்ளது. அதுதான் கோல்ட்மன் சாஷ்ஸை இலாபங்களாக பில்லியன் கணக்கில் பெற அனுமதித்து இகழ்வுற்ற 16 பில்லியன் டாலர் மேலதிககொடுப்பனவுகள் பொதியை கொடுக்கவும் அனுமதித்தது. (பகுப்பாய்வாளர்கள் இது 20 பில்லியன் டாலருக்கு உயரலாம் என்று கூறுகின்றனர்.) நிதி அமைச்சரகம் வங்கிகளுக்கு பணத்தைக் கடனாகக் கொடுத்து, வோல் ஸ்ட்ரீட்டின் கடன்களுக்கு உத்தரவாதம் கொடுத்து, எந்த நிறுவனத்தையும் வணிக வங்கி என்று அறிவித்துள்ளது....இவை அனைத்தும் "பெரிய அளவில் தோல்வியடையக் கூடியவை" எனவே அவை விரும்பும் வகையில் வணிகம் நடத்த சுதந்திரம் உண்டு என்று கூறியுள்ளது --ஆனால் வரி செலுத்துபவர்களுடைய பணத்தில்."

திங்களன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் 30 ஆண்டுகளாக உலகப் பொருளாதாரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ரொக்கத்தின் அளவைப் பற்றி அது ஆராய்ந்து வருவதில் தற்போது சுற்றில் உள்ள பணம்தான் மிக அதிகம் என்ற முடிவிற்கு மோர்கன் ஸ்டான்லி வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சூடான பண அலை உற்பத்தித்துறையில் இலாபகரமான உட்செலுத்துதலை காண முடியாததால், பங்குச் சந்தைகள், பொருட்கள், நாணயங்கள் மீதான ஊக வணிகம் ஆகியவற்றில் செலுத்தப்படுகிறது. இதன் விளைவு விரைவிலோ, தாமதித்தோ வெடிக்க இருக்கும் மகத்தான உலகளாவிய சொத்துக்கள் குமிழிதான்.

இந்தக் குமிழியின் அளவு பற்றி சில குறிப்புக்களைக் கீழே காண்போம்:

"மார்ச் 9ம் தேதி குறைந்த அளவிற்கு பின்னர், Standard & Poor இன் பங்குக் குறியீடு 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 22 "எழுச்சி பெறும் சந்தைகள்" இருக்கும் நாடுகளின் (பிரேசில், சீனா, இந்தியா உட்பட) பங்குகளின் கூறியீடு சமீபத்தியக் குறைவில் இருந்து இரு மடங்கு அதிகரித்துள்ளது. இப்பொழுது 80 டாலர் ஒரு பீப்பாய் என்று விற்கப்படுவது, சமீபத்திய குறைவான 31 டாலரில் இருந்து 150 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தங்கம் கிட்டத்தட்ட இதுகாறும் இல்லாத அளவிற்கு 1,090 டாலர் ஒரு அவுன்ஸிற்கு என்று உயர்ந்துள்ளது. (Robert J. Samuelson in Monday's Washington Post).

இந்தக் கொள்கையின் மத்திய கூறுபாடு டாலர் சரிவு நடந்து கொண்டிருப்பதை உட்குறிப்பாக ஊக்குவிப்பது ஆகும். இறுதியில் டாலரின் சரிவு அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நிலையில் காணப்படும் புறநிலைச் சரிவினால் நிர்ணயிக்கபடுகிறது. நிதியச் சரிவு மற்றும் அதைத்தொடர்ந்து அமெரிக்காவில் தொடங்கிய உலக மந்தநிலை, டாலரின் மீதான உலக நம்பிக்கையை இன்னும் கூடுதலாக அரித்துள்ளது. மேலும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும்போது அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியின் கனத்தையும் குறைத்துள்ளது.

இது உலகப் பொருளாதாரத்திற்கு ஆழ்ந்த உறுதிகுலைக்கும் காரணியாகும். எந்த மீட்பையும் உறுதியற்றதாக்கி, இறுதியில் தொடர்ந்து இருக்க முடியாமல் செய்துவிடும். பெருகிய முறையில் அமெரிக்க டாலரின் பங்கு, உலகின் முக்கிய இருப்பு, வணிக நாணயம் ஆகிய செயற்பாடுகளில் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. கடந்த செவ்வாயன்று இந்தியாவின் மத்திய வங்கி சர்வதேச நிதிய நிறுவனம் அளித்த 200 மெட்ரிக் டன்கள் தங்கத்தை வாங்கியுள்ள அறிவிப்பில் இருந்து உயர்த்திக் காட்டப்படுகிறது.

இந்த அறிவிப்பைக் கொடுக்கையில், இந்தியாவின் நிதியமைச்சர் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் "சரிந்துவிட்டன" என்று கூறினார். கிட்டத்தட்ட 2.4 டிரில்லியன் டாலர் சொத்துக்களாக கொண்டுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ள சீனா அதன் தங்க இருப்புக்களை கிட்டத்தட்ட கடந்த ஆறு ஆண்டுகளில் இரு மடங்காக்கியுள்ளது என்பதை வெளியிட்ட சில மாதங்களுக்கு பின்னர் இந்தியா வாங்கியிருக்கிறது.

தங்க இருப்புக்களை பெருக்கிக் கொள்வது என்பது டாலரில் இருந்து புறத்தே கடன் கொடுக்கும் நாடுகளில் மேற்கொள்ளப்படும் பெருகிய நடவடிக்கை ஆகும். கடந்த மாதம் Business Week கூறியுள்ளபடி: "தங்கள் வெளிநாட்டு நாணய செலாவணி இருப்புக்களுக்கு டாலரை வாங்குவதற்கு பதிலாக, அவை மற்ற நாணய முறைகளில் ஈடுபட்டுள்ளன. தங்கள் மொத்த இருப்புக்களை கொண்டுள்ள நாடுகள், இரண்டாம் காலாண்டில் தங்கள் புதிய இருப்புக்களில் 63 சதவிகிதத்தை யூரோக்களிலும், யென்னிலும் கொண்டுள்ளன என்று Barclays Capital கொடுத்துள்ள ஒரு பகுப்பாய்வு தெரிவிக்கிறது."

உலகத்தில் டாலரின் நிலைப்பாட்டில் அரிப்பு ஏற்பட்டுள்ளதின் இடைக்கால, நீண்ட கால தாக்கங்கள் பாரியளவிலானவை. ஒரு வலுவான, உறுதியான டாலர் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் நடைபெற்ற பிரெட்டன் உட்ஸ் மாநாட்டில் நிறுவப்பட்ட சர்வதேச முதலாளித்துவ நிதிமுறையின் அடித்தளமாக இருந்தது. கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் உலகில் தலையாய வணிக, மற்றும் இருப்பு நாணயமாக டாலர் இயங்கியுள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்திற்கு மகத்தான நலன்களை கொடுத்த டாலரின் பிரத்தியேகமான, சலுகை நிறைந்த நிலை போரின் முடிவில் அமெரிக்கா கொண்டிருந்த சவாலுக்கு இடமில்லாத பொருளாதார மேலாண்மை அடித்தளமாக கொண்டிருந்தது. அதுவோ அமெரிக்க தொழில்துறையின் உலக மேலாதிக்கத்தில் நிறுவப்பட்டிருந்தது.

அதன் தொழில்துறைத் அடித்தளத்தின் சரிவில் மிக முக்கியமாக பிரதிபலிக்கும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்ட காலச் சரிவு, கடன் வாங்கிய நாடுகளுக்கு இடையே பாரிய உலக சமசீரற்ற நிலையை விளைவித்தது. முதலிலும் முக்கியமானதுமாக அமெரிக்காவிலும் மற்றும் கடன் கொடுக்கும் நாடுகளான சீனா, ஜப்பான், ஜேர்மனி போன்றவற்றிலும் ஏற்படுத்தியது. இதையொட்டி உலகப் பொருளாதாரத்தில் ஒரு உள்வெடிப்பு ஓராண்டிற்கு முன் ஏற்பட்டது. இறுதிப்பகுப்பாய்வில் உலகின் தொழில்துறையில் சக்தி வாய்ந்த நிலையம் என்பதில் இருந்து உலக நிதிய ஊக வழிவகை மற்றும் அதிலுள்ள ஒட்டுண்ணித்தனம்தான் டாலரின் சர்வதேச நிலைப்பாட்டை இல்லாதொழிக்கும் அடித்தளமாக உள்ளது.

அமெரிக்க நிதியக் கொள்கையின் பொறுப்பற்ற தன்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. டாலரின் ஆபத்தான சரிவு என்ற பேரழிவுடன் அமெரிக்கா விளையாடிக் கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே அதன் சமீபத்திய மார்ச் மாத உயர்நிலையில் இருந்து வாஷிங்டனின் முக்கிய வணிகத் தொடர்பு நாடுகளில் இருந்து 15 சதவிகித மதிப்புக் குறைவைக் கண்டுவிட்டது. ஒரு முழு டாலர் நெருக்கடி என்பது அமெரிக்கா மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சேதத்தைத் தோற்றுவிக்கும்.

இது அமெரிக்காவை தீவிரமாக கட்டாயப்படுத்தி, அதிகமாக வட்டிவிகிதத்தை உயர்த்தச் செய்து அமெரிக்க பொருளாதாரத்தை மந்தநிலையில் தள்ளி முக்கிய நிதிய நிறுவனங்களை திவால் செய்துவிடும். சீனா, ஜப்பான், ஜேர்மனி போன்ற ஏற்றுமதிச் சார்புடைய நாடுகளில் அமெரிக்கச் சந்தையை திகைப்பிற்கு உட்படுத்தி, போட்டித்தன்மை நிறைந்த நாணய மதிப்புக் குறைவு, வணிகப் போர் நடவடிக்கைகளை தூண்டிவிடும்.

ஆயினும்கூட, தன்னுடைய முதலாளித்துவ போட்டிநாடுகளுக்கு எதிராக ஒரு குறுகியகால ஆதாயத்தை அடையவும், முக்கிய அமெரிக்க வங்கிகள் பெரும் இலாபத்தை அடைந்து அவற்றின் நிர்வாகிகளுக்கும் வணிகர்களுக்கும் மிக அதிக மேலதிக கொடுப்பனவுகளை வழங்கக்கூடிய விதத்தில் பணப்புளக்கத்தை கொடுப்பதற்காக அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு மூலம் மின்னஞ்சல் வேகத்திற்கு ஒப்பாக டிரிட்டிலியன் டாலர்களை அச்சடித்து நிதியச் சந்தைகளில் குறைந்த கடனுக்கு வெள்ளமெனக் கொடுத்துள்ளது. டாலர் தொடர்ந்து சரியக் கூடும் என்பதை தெரிந்தே அது இவ்வாறு செய்துள்ளது. இது அமெரிக்க ஏற்றுமதிகளை மலிவாகவும் வெளிநாட்டில் இருந்து வரும் இறக்குமதிகளை அதிக விலையுடையதாகவும் செய்துவிடும்.

இதன் குறுகிய கால விளைவு உலக நிதிய மற்றும் வணிக அழுத்தங்களில் ஒரு தீவிரம் வரும் என்பதாகும். கடந்த வெள்ளியன்று அமெரிக்கா சீன எஃகு குழாய் இறக்குமதிகளுக்கு வரிகள் விதித்தது. இரண்டு மாதங்கள் முன்பு சீன டயர் இறக்குமதிகள் மீது காப்பு வரிகள் சுமத்தப்பட்டதை அடுத்து இதை தொடர்ந்து வந்துள்ளது. வெள்ளியன்று இதற்கு விடையிறுக்கும் வகையில் சீன "தவறான காப்புவரி முறையை" கண்டித்து, அமெரிக்க கார்கள் மற்றும் சீனச் சந்தைக்கு வரும் பிற பொருட்கள் மீது பதிலடி கொடுப்பதாகக் உறுதியளித்துள்ளது.

வெள்ளியன்று அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கை, ஜனாதிபதி ஒபாமா ஆசியாவிற்கு செல்ல இருக்கும் தேதிக்கு ஒரு வாரத்திற்குள் இது நடத்தப்பட்டுள்ளது என்பதில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இதற்கிடையில் நியூயோர்க் பல்கலைக்கழகப் பொருளாதார வல்லுனர் Nourien Roubini இதே போன்ற பேரழிவு தரும் பொருளாதார விளைவுகளைக் கொடுக்கக்கூடிய டாலர் பற்றிய ஒரு மாற்றீட்டுத் தோற்றத்தை கொடுத்து எச்சரிக்கை மணி அடுத்துள்ளார். 2006ல் வீடுகள் குமிழி தவிர்க்க முடியாமல் சரியும், நிதிய கரைப்பு ஏற்படும் என்று கணித்துக்கூறி பிரபல்யம் அடைந்த Roubini, டாலர் குறுகிய காலத்தில் ஏற்றம் பெற்றால் அது உலக சொத்துக் குமிழின் சரிவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

நவம்பர் 1, Financial Times TM "அனைத்து முக்கியமான பணபரிமாற்ற வர்த்தகமும் தவிர்க்கமுடியாத வெடிப்பை எதிர்கொள்கின்றன" என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை ஒன்றில், Roubini எழுதுகிறார்: "மார்ச்சில் இருந்து அனைத்துவித ஆபத்தான சொத்துக்களிலும் --பங்குகள், எண்ணெய், விசை, பொருட்கள் விலை என... -- மக்தான மீட்பு உள்ளது, சந்தை சொத்துப் பிரிவுகளிலும் (அவற்றின் பங்குகள், பத்திரங்கள், நாணயங்கள் என) இன்னும் அதிக மீட்பு எழுச்சிபெறும் சந்தையில் உள்ளது."

இத்தகைய மீட்பின் இதயத்தானத்தில் "அமெரிக்க டாலரின் வலுவிழந்த தன்மை உள்ளது. இதுவோ அனைத்து பணபரிமாற்ற வர்த்தகத்தையும் (Carry Trade) நடத்திச் செல்லும் உந்துதலைக் கொண்டுள்ளது." இந்த பணபரிமாற்ற வர்த்தகம் என்ற சொற்றொடர் ஊக வணிகத்திற்காக நாணங்களை குறைந்த வட்டிக்கு கடன்வாங்கி பின் அவற்றை இன்னும் கூடுதல் பெறுமதியுடைய நாணயங்களால் குறியிடப்பட்டுள்ள சொத்துக்களில் முதலீடு செய்யும் வழக்கத்தை குறிக்கிறது.

அமெரிக்க டாலர் இத்தகைய "பணபரிமாற்ற வர்த்தகத்தில்" முக்கிய நிதியளிக்கும் யென்னிற்கு பதில் நாணயமாக வந்துள்ளது. ஊக வணிகர்கள் அதிக நெம்புகோல்தன்மை (leveraged trade) இருக்கும் வணிகங்களில் டாலர்களை கடன் வாங்கி, டாலர் இன்னும் சரிவடையும் என்ற பந்தயத்தில் பயன்படுத்தி, இதனால் கிடைக்கும் இலாபங்களை உலகெங்கிலும் ஆபத்தான சொந்துக்களில் முதலீடு செய்கின்றனர். இதன் விளைவாக ஊக வணிகர்கள் உண்மையில் டாலர்களை மத்திய வங்கிக்கூட்டமைப்பு நிர்ணயிக்கும் பூஜ்ய வட்டி விகிதத்தில் கடன் வாங்குவதில்லை, ஆனால் மிக எதிர்மறை விகிதங்களில் வாங்குகின்றனர். வருடாந்த ரீதியில் அது -10 அல்லது -20 வட்டியாகக் கூட இருக்கும்.

இதன் விளைவாக "பணபரிமாற்ற வர்த்தக" முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் இருந்து 50-70 சதவிகித அளவில் மொத்த வருமானங்களை அடைந்து வருகின்றனர் என்று Roubini கூறுகிறார்.

அமெரிக்காவின் "பொறுப்பற்ற" கொள்கை மற்ற நாடுகளையும் தங்கள் வட்டி விகிதங்களை செயற்கையாக குறைத்து வைக்கச் சொல்லுகையில், "பணபரிமாற்ற வர்த்தக குமிழி மோசமாகும்... உலகெங்கிலும் இருக்கும் சொத்துடைய வர்க்கங்களின் சொத்துக்ககள் நன்கு இடைத்தொடர்புடைய குமிழியுடன் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன."

பொருளாதாரக் காரணிகள் அல்லது ஈரான் மீதான இராணுவத் தாக்குதல் போன்ற ஒரு வெளி நிகழ்வினால் இந்தக் குமிழி ஒரு நாள் வெடிக்கும். அதையொட்டி டாலர் "ஒரு திருப்பத்தைப் பெற்று திடீரென மதிப்பில் உயரும்." என Roubini முடிவுரையாகக் கூறுகிறார்: "ஆனால் நீண்ட காலம், அதிக அளவில் பணபரிமாற்ற வர்த்தகமாக இருந்தால், சொத்துக்கள் குமிழி அதிகமாக இருந்தால், வரிவிருக்கும் சொத்துக் குமிழிச் சரிவும் பெரிதாக இருக்கும். மத்திய வங்கிக்கூட்டமைப்பு மற்றும் பிற கொள்கை இயற்றுபவர்கள் தாங்கள் தோற்றுவித்துக் கொண்டிருக்கும் அரக்கத்தனான குமிழி பற்றி அறியாமல் உள்ளனர். அவர்கள் நீடித்து கண்மூடித்தனமாக இருந்தால், சந்தைகள் கடினமான முறையில் சரியும்."

Roubini மட்டும் இத்தகைய கருத்தைக் கூறவில்லை. கடந்த வாரம் சர்வதேச நிதியநிறுவனமும் உலக வங்கியும் பெருகும் சொத்துக்கள் குமிழிகள் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது ஆசியப் பொருளாதாரங்களில் இருக்கும் நாட்டுக்கு நாடு மாறும் பணத்தால் (Hot Money) எரியூட்டப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலாளித்துவம் இந்த மகத்தான கடன் வளர்ச்சி, ஊக "மீட்பிற்கு" அளிப்படுவதை சமாளிக்க ஒரு மூலோபாயம் கொண்டிருந்தால், அது இந்த நெருக்கடியின் விலை முழுவதையும் தொழிலாள வர்க்கத்தின்மீது சுமத்துவது என்பதில்தான் உள்ளது. கடந்த மாதம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (OECD) நாடுகள் நிதிய நெருக்கடி மற்றும் மந்த நிலையால் ஏற்பட்டுள்ள உயர் கடன் அளவுகளை குறைப்பதற்காக கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகத் திட்டங்களுக்கு ஆகும் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

OECD இற்கு சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கடந்த வாரம் ஆதரவு கொடுக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் தொழில்துறை வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் அனைத்தும் செலவீனங்கள பெரிதும் குறைக்க வேண்டும் என்றும் வரிகள் உயர்த்தப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தது. சர்வதேச நாணய நிதியம் குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியங்களுக்கான செலவு வளர்ச்சியை தீவிரமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

தன்னுடைய பங்கிற்கு ஒபாமா நிர்வாகம் இதே கொள்கையில் உறுதியைக் கொண்டுள்ளது. அரசாங்க மற்றும் வணிக சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்களைக் குறைக்க உறுதி பூண்டுள்ளது. இது நிதிய கடும் சிக்கன ஆட்சிக்கு ஒரு முன்னோடியாகும். இதன் இலக்கு தொழிலாள வர்க்கத்தின் நுகர்வைக் குறைத்து, வெகுஜன வேலையின்மையை பயன்படுத்தி ஊதியங்களை குறைத்தல், உற்பத்தித் திறனை உயர்த்துதல், அதையொட்டி அமெரிக்காவை உலகின் சந்தைகளுக்கு ஏற்றமதி செய்வதற்கான குறைவூதிய தொழிலாளர் தொகுப்பாக மாற்றுவது ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved