WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
British government mounts world's largest bank
bailout
பிரித்தானிய அரசாங்கம் உலகில் மிப்பெரிய பிணையெடுப்புக்கு முயற்சிக்கின்றது
By Jean Shaoul
9 November 2009
Use this
version to print | Send
feedback
ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்தை (RBS),
ஒற்றை வங்கியை மீட்கும் முயற்சியில் உலகத்தின் மிகப் பெரிய பிணை எடுப்பை நிதி மந்திரி ஆலிஸ்டர் டார்லிங் அறிவித்துள்ளார்.
ஓராண்டிற்கு முன் நடந்த ஒரு ஆரம்ப பிணையெடுப்பிற்குப் பின்னர் அரசாங்கம்
RBS
க்குள் கூடுதலாக 25.5 பில்லியன் பவுண்டுகளை உட்செலுத்த உள்ளது; இதில் ஏற்கனவே இதற்கு 74 சதவிகித பங்குகள்
உள்ளன. இதைத்தவிர பரந்த முறையில் எதிர்ப்பார்க்கப்படும் தொந்தரவுகள் இன்னும் வங்கிக்கு வருமானால் அதற்கென
கூடுதலாக 8 பில்லியன் பவுண்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 8 பில்லியன் பவுண்டை பெரும் நெருக்கடி என்றால்தான்
பயன்படுத்த இருப்பதாக RBS
கூறியிருக்கையில், இந்தப் பணத்தின் ஆண்டுக் கட்டணம் தோல்வி அடைவதற்கான வாய்ப்பைத்தான் அதிகம்
கொண்டுள்ளது.
ஒரு பொது உடைமை வங்கி அல்ல, இன்னும் ஒரு தனியார் வங்கிதான் என்ற
கட்டுக்கதையைத் தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் அரசாங்கத்தின் கூடுதல் பங்கு நிலை, இன்னும் 12 சதவிகிதம்
அதிகம் சமமானதிற்கு வாக்குப் போடும் உரிமை இருக்காது; அதையொட்டி
RBS லண்டன் பங்குச்
சந்தைப் பட்டியலில் தன் பெயரைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியும்.
இந்தப் பிணை எடுப்பு இருந்தபோதிலும்கூட, வங்கியின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்
முயற்சிகள் ஏதும் இல்லை. உரிமையாளருக்குரிய வணிகத்தை பொறுத்தவரையில் அது தன் வாடிக்கையை செய்யும் --அதாவது
ஆபத்து நிறைந்த நிதியக் கருவிகளில் வணிகம் செய்வதை. அரசாங்கம் உயர்மட்ட வங்கி நிர்வாகிகளின் போனஸுக்கு
உச்ச வரம்புகளை அறிவித்திருக்கும் நிலையில், அது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும்தான் ஒத்திப்போடப்பட்டுள்ளது; இந்த
வரம்பை கடப்பதற்கு பல வழிவகைகள் உள்ளன.
நிதி அமைச்சகம் தனது நச்சு சொத்துக்களுக்கு 228 பில்லியன் பவுண்டுகள் அளவிற்கு
உத்தரவாதம் கொடுக்கும்; பெப்ருவரியில் RBS
325 பில்லியன் பவுண்டுகளுக்கு உத்தரவாதம் கேட்டிருந்தது. இதற்கு
ஈடாக வங்கி தன் புத்தகங்களில் காட்டியுள்ள சொத்து மதிப்புக்களை மீட்க இயலவில்லை என்றால், செலவினங்களின்
பெரும்பகுதியை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளது.
RBS ன் இழப்பில் இது வரி
செலுத்துபவர்களுக்கு ஒரு ஆதாயம் என்று கூட டார்லிங் இதைக் காட்டியுள்ளார். அவர் கூறினார்: "பொது
நிதிகளுக்கு வரக்கூடிய அபாயங்கள் குறைக்கப்பட்டுவிட்டன." இது அப்பட்டமான பொய் ஆகும்; அனைத்து நிதிய
நிறுவனங்களும் வர்ணனையாளர்களும் இதை அறிவர். RBS
க்கு முழு ஆதரவைக் கொடுத்து நிதி அமைச்சகம் நிற்கிறது; இந்த நச்சுச் சொத்துக்கள் வீணானவை என்று
போனால், கருவூலம்தான் இழப்பைப் பெறும்.
மேலும் அரசாங்கம் எந்த சொத்துக்களுக்கு உத்தரவாதம் கொடுக்கிறது, இது
உண்மையில் RSS
சொத்துக்கள் பற்றிய சரியான மதிப்பீடா என்று எவருக்கும் தெரியாது. சொத்துக்கள் காப்புத் திட்டம் (Asset
Protection Scheme) ல் உள்ள கடன்களை எவர்
கட்டுப்பாடு செய்வர் என்பதும் தெரியவில்லை. குறுகிய காலத்தில், இந்த ஏமாற்றுத்தனம் அரசாங்கத்தை அதன்
சொந்த அவசரக் கடன்களைக் குறைக்க உதவும்; அது கடன்கள் பற்றி தரம் கொடுக்கும் நிறுவனங்களிடம்
AAA
தகுதியைக் காக்கும் முயற்சியாகும்.
RBS கடந்த ஆண்டு இழப்புக்களை
தொடர்ந்து கணக்கில் காட்டுவதையும், வருங்கால இழப்புக்களை அதன் வருங்கால வரிப் பொறுப்புக்களுக்கு
எதிராகக் காட்டுவதையும் தான் தடுக்க மாட்டேன் என்றும் டார்லிங் கூறியுள்ளார். இதன் பொருள் இன்னும் 10
பில்லியன் வங்கி ஒழுங்கீனத்திற்கு மக்கள் வரிப்பண இழப்பில் உதவும் என்பதாகும்.
RBS பிணை எடுப்பின் மொத்தச்
செலவு இப்பொழுது 53.5 பில்லியனை எட்டி உலகெங்கிலும் இதற்கு முன் கொடுக்கப்பட்டுள்ள வங்கிப் பிணை
எடுப்புக்கள் அனைத்தையும் விஞ்சிவிட்டது. அமெரிக்காவில் சிட்டி குழுமத்திற்கு கொடுக்கப்பட்ட அரசாங்கப் பிணை
எடுப்பான $45 பில்லியனை (27.4 பில்லியன் பவுண்டுகளை) இது மிகச் சிறியதாக்கிவிட்டது.
வங்கித் துறையில் போட்டி வளர்த்தல் என்ற நலனைக் கூறிக்கொண்டு, கடந்த 12
ஆண்டுகளாக இதைக்குறைக்கத்தான் பாடுபடுவதாக தொழிற்கட்சி அரசாங்கம் கூறிவந்தது, டார்லிங்
RBS அதன் சில
உயர் மட்ட கிளைகளை விற்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்; இவை தற்பொழுது
RBS ன்
முத்திரையைக் கொண்டுள்ளன; இதில் அதன் காப்பீட்டு துணை நிறுவனங்கள்
Direct Line, Churchill, Green Flag,
இதன் பொருள் வணிகப் பிரிவு
RBS Sempra, இதன் உலகத்திற்கு கொடுக்க வேண்டிய பிரிவு
ஆகியவை அடங்கியுள்ளன. வேறுவிதமாகக் கூறினால், வங்கியின் இலாபம் தரும் பகுதிகள் ஒதுக்கி வைக்கப்பட்டு
அரசாங்கம் மிச்சத்தை எடுத்துக் கொள்ளும் நிலைதான் உள்ளது.
நிதி அமைச்சகம் மற்றும் ஒரு 5.7 பில்லியன் பணத்தை லாயிட்ஸ் வங்கி குழுமத்திற்கு
கொடுக்கும்; அதில் இப்பொழுது தோற்றுவிட்ட
Halifax/Bank ofScotland (HBOS) அடங்கும்; பணம்
கொடுக்கும் வடிவமைப்பு என்பது லாயிட்ஸில் அரசாங்கத்தின் பங்கு 43 சதவிகிதம் என்று இருக்கும். இந்த மூலதன
உட்செலுத்துதலின் பொருள் லாயிட்ஸ் அரசாங்கத்தின் நச்சு சொத்துக்கள் பாதுகாப்பு திட்டத்தை முழுமையாகப்
பயன்படுத்திக் கொண்டு பணத்தைப் பெறும் என்பதாகும். இத்தகைய தந்திரோபாயம் லாயிட்ஸின் செலவினங்களைக்
குறைக்கும்; அதே நேரத்தில் வரி செலுத்துவோரின் உட்குறிப்பான கடன்களை கண்ணுக்குப் புலப்படாமல்,
இருப்புநிலைக்குறிப்பில் காட்டாமல் செய்துவிடும்.
இதைத்தவிர, லாயிட்ஸ் அதன் 600 கிளைகளையும்,
Cheltenham & Gloucester Building Society,
அதன்
TSB மாதிரி மற்றும் 3.5 மில்லியன் வாடிக்கையாளர்கள்
கணக்கையும் விற்க வேண்டும்.
இதைத்தவிர, பங்குகள் வெளியிடும் உரிமைக்கு இன்னும் 13.5 பில்லியன் பவுண்டுகளை
எழுப்ப வேண்டும்; இது உத்தரவாதம் கொடுப்பவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் மிக அதிக அளவில் 350 மில்லியன்
பவுண்டுகளை அளிக்கும். பாங்க் ஆப் இங்கிலாந்து கொண்டுவந்துள்ள
Quantitative easing scheme
எனப்படும் பளுவை எளிதாக்கும் திட்டத்தினால்தான் முற்றிலும் இயலும்; இதையொட்டி நூற்றுக்கணக்கான பில்லியன்
பவுண்டுகள் அச்சிடப்பட்டு Lloyds/HBOS
சொத்துக்களுக்கு முட்டுக் கொடுக்க பயன்படுத்தப்படும்.
இத்தகைய நடவடிக்கைகளை டார்லிங் அறிமுகப்படுத்திய விதம் கவனத்திற்கு உரியது.
ஒருவித வங்கிக் கட்டுப்பாட்டு அதிகாரி போல் காட்டிக்கொண்டு, மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்க,
வங்கிக்கு நிகர சேமிப்பு கொடுப்பது என்று மட்டும் இல்லாமல், அரசாங்கம் போட்டியை அதிகரிக்கும் விதத்தில்
முக்கிய முயற்சி எடுப்பதாகவும் காட்டுகிறார்.
வங்கிகள் தங்கள் கிளைகளையும், துணை நிறுவனங்களையும் விற்க நேரிடும் என்று டார்லிங்
அறிவித்த இரண்டு நாட்களுக்குள், அரசு உதவி பெறுவதற்கு முதலீட்டில் இருந்து திரும்பப் பெறுதல் முக்கியம் என்று
ஐரோப்பியக்குழு வலியுறுத்திள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. இப்படி பிரிக்கப்படாவிட்டால், மீட்பு செயல் சட்ட
விரோதமாகிவிடும். வங்கிகளை பிரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கடுமையாக எதிர்க்கும் விருப்பமற்ற அரசாங்கத்தின்மீது
இது கட்டாயப்படுத்தப்படும்.
வங்கி வாடிக்கையாளர்களில் 10 சதவிகிதக் கணக்குகள் அல்லது கிளைகளில் 7
சதவிகிதம் விற்பனைக்கு வந்துவிடும்; கடந்த சில ஆண்டுகளில் இத்துறையில் நடைபெற்ற இணைப்புக்கள், எடுத்துக்
கொள்ளுல் என்ற அலைகளின் விளைவுகளுக்கு இது ஈடு கொடுக்காது. பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் தானே
HBOS
ஐ லாயிட்ஸ் எடுத்துக் கொள்ளுவதற்கு ஒப்புதல் கொடுத்தார்; இது போட்டி விதிகளகளை மீறியது என்றாலும்
அப்படிச்செய்தார்.
இதையும்விட முக்கியமானது, தற்போதைய சந்தை நிலைகள் மற்றும் வங்கிகள்
முன்னதாக தங்கள் துணை நிறுவனங்களை கடந்த ஆண்டுச் சரிவை ஒட்டி விற்க முடியாத நிலை என்னும்போது,
வங்கிகளின் சிறந்த சொத்துக்களை விரைவில் விற்பது ஒன்றுதான் வழி என்று போகும். இதையொட்டி நிதிய
தன்னலக்குழுவின் மற்றொரு தந்திரோபாயமாக இது மாறும்.
நிதி தொழிற்சங்க Unite
25,000 வேலைகள் ஆபத்திற்குட்பட்டுள்ளன என்று எச்சரித்துள்ளது. அதன் 6,000 ஊழியர்களுடைய நிலையே
சந்தேகத்திற்கு உரியது என்று அறிவித்துள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3,700
வேலைகள் தகர்க்கப்படும். இங்கிலாந்தின் தன் தொழிற்தொகுப்பை மறுகட்டமைக்கும் இரண்டாம் சுற்றில் 1,700
வேலைகள் தகர்ப்பிற்கு உட்படும் என்று HSBC
அறிவித்துள்ளது.
மொத்தத்தில் அரசாங்கம் அதிர்ச்சிதரக்கூடிய விதத்தில் இரு வங்கிகளுக்கும் 39.2
பில்லியனை தர உள்ளது; உண்மை செலவினத்தை, வரிச் சலுகைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் இது 50
பில்லியன் பவுண்டுகள் என்று ஆகும். நிதியக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்
RSS மோசமான
நிலையில் இருப்பதை "அழுத்தச் சோதனையில்" கண்டுபிடித்தபின் இந்நிலை தெரியவந்துள்ளது. சமீபத்திய மீட்பின்
அளவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வங்கிகளை "உறுதிப்படுத்துவதற்காக" பிணை எடுப்பு கொடுக்கப்பட்ட 37
பில்லியன் பவுண்டுகளைவிட மிக அதிகமாகும்; பிரிட்டனின் நிதிய நெருக்கடி இன்னும் முடிந்துவிடவில்லை என்பதைத்தான்
இது நிரூபணம் செய்கிறது.
சமீபத்திய தொகை உண்மையில் ராட்சத அளவு ஆகும். ஒரு சரியான பார்வை
கொடுக்க வேண்டும் என்றால்: மழலையர், துவக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கு அரசாங்கம்
2007-08ல் செலவழித்த முழுத் தொகையான 34 பில்லியன் பவுண்டுகளைக் காட்டிலும் அதிகமாகும். நாட்டில்
இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2,000 பவுண்டுகள் செலவு என்பதற்கு இது சமமாகும்.
மேலும் இதையொட்டி வங்கி வணிகத்திற்கோ வீடுகளுக்கோ அதிகம் கடன் கொடுக்கும்
என்ற எதிர்பார்ப்பையும் வர்ணனையாளர்கள் எவரும் கொடுக்கவில்லை; முழுப்பணமும் வங்கிகளை தொடரத்தான் பயன்படுத்தப்படும்.
வங்கிகள் மடிந்துவிட்டன என்று மிகத் தெளிவான அடையாளத்தைத்தான் இது காட்டுகிறது. வற்றி, உலர்ந்த, செயலற்ற
நிலையில் அடிப்படையில் இருக்கும் இவை அரசாங்கத்தின் உயிர்காக்கும் முறையினால்தான் முற்றிலும் நிலைத்துள்ளன.
வங்கிகளை மீண்டும் மீட்பதிலும், பல ஆண்டுகள் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்களை
இதற்காக விட்டுக் கொடுத்த நிலையிலும், அரசாங்கம் கருவூலத்தின் நிதிகள் நிதிய தன்னலக் குழுவின் சேமிப்புக் கணக்கு
போல்தான் இருக்கும் என்பதைத்தான் நிரூபித்துள்ளது.
சமீபத்திய பிணை எடுப்பு ஒரு பகுதியாக இருக்கும் நிதிய நெருக்கடியின் உட்குறிப்புக்கள்,
சர்வதேச நிதிய நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. பிரிட்டனின்
கட்டுமானப் பற்றாக்குறை ஆண்டு ஒன்றிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவிகிதம் ஆகும். வட்டிவிகிதங்கள்
தற்போதைய முன்னோடியற்ற குறைந்த அளவில் இருந்து உயரும் என்பது உறுதியான நிலையில், பிரிட்டன் குறிப்பிடத்தக்க
வகையில் பாதிப்பிற்கு உட்படும் என்பது தெரியவருகிறது. இப்பொழுது இருக்கும் நிலையில் கடன்களுக்கான வட்டிக்
கட்டணம் போன்றவையே நெருக்கடிக்கு முன்பு இருந்த வரி வருமானங்களைப் போல் இருமடங்கை விழுங்கிவிடும்.
IMF வட்டிக் கட்டணங்கள்
அதிகரிப்பு என்பது போக்குவரத்து பட்ஜேட்டிற்கு சமமாக இருக்கும் என்றுகணித்துள்ளது. அரசாங்கம் ஆண்டின் கடன்
வட்டிக் கட்டண மதிப்பு பற்றி விவரங்கள் எதையும் வெளியிடவில்லை; ஆனால் 2013-14ல் அக்கட்டணம் 58 பில்லியன்
பவுண்டுகள் என்ற மிக உயர் நிலையில் இருக்கும் என்று கூறியுள்ளது. வட்டி விகிதங்கள் உயர்கையில், இந்த செலவு
இன்னும் அதிகமாகும்; பிரிட்டனின் நாணயத்தன்மை, ஏன் திவால்தன்மை பற்றி உண்மை கவலைகளை இது
அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தான் செலவினக் குறைப்புக்கள் மற்றும் வரி உயர்வுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
கிட்டத்தட்ட 8 சதவிகிதம் என்று எடுத்துக் கொள்ளுவதாக
IMF கூறியுள்ளது;
இதுதான் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குகடன் என்ற விகிதத்தை
G20 நாடுகள் அனைத்திலும்
சராசரியாக இருக்கும் 60 சதவிகித விகிதத்திற்குக் குறைக்கும். இதையொட்டி அரசாங்கச் செலவுகளில் மிகப் பெரிய
விதத்தில் 20 சதவிகிதக் குறைப்பு நேரிடும். |