World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Tamil asylum-seekers reject Australian government demands

தமிழ் புகலிடம்-நாடுவோர் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கோரிக்கைகளை நிராகரிக்கின்றனர்

By Richard Phillips
9 November 2009

Use this version to print | Send feedback

ஆஸ்திரேலிய சுங்கப் பிரிவு கப்பலான Oceanic Viking ல் உள்ள 78 இலங்கை தமிழ் புகலிடம் நாடுவோரை கீழிறக்கி இந்தோனேசிய குடியேற்ற தடுப்பு மையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை ரூட் அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 18ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு வரும் முயற்சியில் படகு சேதமுற்ற நிலையில் தமிழ் மக்கள் மீட்கப்பட்டனர். மூன்று வார காலத்திற்கும் மேலாக அவர்கள் நெரிசல் நிறைந்த Oceanic Viking ல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இது சிங்கப்பூர் அருகே இந்தோனேசியாவின் பின்டான் தீவிற்கு அருகே உள்ளது. இது ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோருடைய ஜனநாயக உரிமையை மீறும் செயலாகும்.

கப்பலை விட்டு நீங்க அகதிகள் உறுதியாக மறுத்துவிட்டனர். இந்தோனேசியாவின் மோசமான குடியேற்ற மையங்களில் பல ஆண்டுகள் சிறைப்படுத்தப்படுவோம் என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர். இந்தோனேசியா ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உடன்படிக்கைகளில் கையெழுத்திடாத நாடு ஆகும். ஏற்கனவே Oceanic Viking இல் உள்ள தமிழ் மக்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் இந்தோனேசியாவில் அகதிகள் அந்தஸ்த்திற்கு விண்ணப்பித்தனர். ஆனால் பலர் பல மாதங்களுக்கு பின்னரும் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் ஒருவர் அக்டோபரில் ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கும் ஆபத்தை முடிவு எடுத்தனர்.

ஒரு 30 மீட்டர் நீள மரப்படகான Lestari Jaya வில் அக்டோபர் 11ல் ஆஸ்திரேலியா செல்லும்போது பிடிக்கப்பட்ட மற்றும் ஒரு 250 தமிழ் மக்கள் அடங்கிய குழு இப்பொழுது வடமேற்கு ஜாவாவில் உள்ள மெரக் துறைமுகத்தில் உள்ளனர். அவர்களும் கப்பலில் இருந்து இறங்க மறுத்து, தாங்கள் அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குதான் தமது அகதி அந்தஸ்து பற்றிய விசாரணை தொடரப்படவேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரூட் தஞ்சம் கோருவோரை இந்தோனேசிய குடியேற்ற மையங்களில் தடுத்து நிறுத்தும் உடன்பாட்டை முன்னதாக ஜாகர்த்தாவுடன் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இது ஒரு புதிய பல மில்லியன் டாலர் துணை ஒப்பந்த ஏற்பாட்டின் ஒரு பகுதியாகும். தமிழ் மக்கள் கப்பலில் இருந்து இறங்க மறுப்பது இந்த உடன்பாடுகளை அர்த்தமற்றதாக்கியுள்ளதுடன், மேலும் தொழிற்கட்சியின் குடியேற்றக் கொள்கையில் ஜனநாயக விரோத, மனிதாபிமானமற்ற தன்மையையும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தோனேசிய அதிகாரிகள் தமிழ் மக்ககளை கரைக்குக் கொண்டுவரும் கட்டாய முயற்சியில் தாங்கள் ஈடுபட மாட்டோம் என்றும் தஞ்சம் கோருவோர் விவகாரம் "ஒரு ஆஸ்திரேலியப் பிரச்சினை" என்றும் அறிவித்துள்ளனர். வெள்ளியன்று ஜாகர்த்தா Oceanic Viking இற்கு தங்கிநிற்கும் காலஅவகாசத்தை நவம்பர் 13 வரை விரிவாக்கியுள்ளனர். ஆனால் இன்னும் மேலதிக கால அவகாசத்தைக் கொடுப்பதற்கு இல்லை என்று கூறிவிட்டனர்.

இதற்கு விடையிறுக்கும் விதத்தில் ரூட் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அழுத்தம் கொடுத்து அரசியல் தேக்கத்தை கடக்க முற்படுகிறது. வியாழனன்று சிங்கப்பூரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் ரூட் கலந்து கொள்ள இருக்கையில், இந்த பிரச்சனைக்கு முடிவு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய குடியேற்ற அதிகாரிகள், உளவியல் வல்லுனர்கள் மற்றும் குடியேறுபவர்களுக்காக வாதிடுபவர்கள் என அழைக்கப்படுபவர்கள் தஞ்சம் கோருபவர்களுடன் கீழே இறங்கும் உடன்பாட்டிற்கு பேச்சுவார்த்தைகளை நீண்ட நேரம் நடாத்தினர். 78 ஆடவர், பெண்கள், குழந்தைகள் அவர்களுடைய அகதிகள் பற்றிய விண்ணப்பங்கள் "வெகு விரைவில்" பரிசீலிக்கப்படும் என்றும் இசைவு பெற்றவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அல்லது கனடாவிற்கு செல்லலாம் என்று உறுதியளித்துள்ளனர். இந்தோனிசிய அதிகாரிகளால் ஏற்கனவே அகதிகள் என ஒப்புக் கொள்ளப்பட்டவர்கள் முதலில் மறு குடியிருப்பைப் பெறுவர்.

கான்பெர்ராவின் உறுதிமொழிகள் Oceanic Viking இல் இருந்து மிக விரைவில் இலங்கை மக்களை இறக்கிவிடும் நோக்கத்தையும், ஆஸ்திரேலிய செய்தி ஊடகப் பக்கங்களில் செய்தி வராமல் பார்த்துக் கொள்ளும் வடிவமைப்பையும் கொண்டவை. தொழில்துறை வளர்ச்சியுற்ற நாடுகளில் மிகக் குறைந்த ஆண்டு அகதிகள் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டு 13,500ம் ஒன்றாகும். இந்தோனேசியாவில் இருந்து ஆஸ்திரலியாவில் மறு குடியிருப்பிற்கு வந்த அகதிகள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும். குடியேற்றத் துறை புள்ளிவிவரங்களின்படி, 460 தஞ்சம் கோரியவர்கள்தான் 2001 முதல் 2009 வரை இந்தோனிசியாவில் மறு குடியிருப்பைப் பெற்றனர். இதில் 2008-09 ல் இருந்த 35 பேரும் அடங்குவர்.

செய்தியாளர்கள் சிறு படகுகளை அமர்த்தி பின்டன் தீவிற்கு 10 கடல் மைல்கள் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ள Oceanic Viking இற்கு சென்று பயணிகள் கப்பல் தளத்தில் இருந்து எறியும் தகவல்களைச் சேகரிப்பதைத் தடுக்க வேண்டும் என்று இந்தோனேசிய அரசாங்கத்தை கான்பெர்ரா கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை இந்தோனேசிய அதிகாரிகள் கான்பெர்ராவின் முறையீடுகளைக் கேட்டுக் கொள்ளவில்லை. The Australian என்னும் நாளேடு நவம்பர் 7 அன்று கொடுத்த தகவல்: "இலங்கை மக்கள் வெளியுலகுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால்....இந்த விஷயம் வேறுவிதத்தில் தீர்க்கப்படகூடியதாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் நம்புகின்றனர்."

வியாழனன்று செய்தியாளர்களால் எடுக்கப்பட்ட கப்பல் தளத்தில் இருந்து கையால் எழுதப்பட்டு தூக்கி எறியப்பட்ட கடிதங்கள் கப்பலின் நிலைமை பற்றி சில குறிப்புக்களைக் காட்டுகின்றன. ஆஸ்திரேலிய அதிகாரிகள் தவறாக நடத்தும் முறைகளில், உணவு, குளித்தல் ஆகியவற்றைப் போதுமானதாக கொடுப்பதில்லை. அதைத்தவிர தகாத சொற்களைப் பேசுவதுடன், தஞ்சம் கோருவோரை "அழுத்தம் கொடுத்து கீழிறக்கும் வழிவகைகளும்" கையாளப்படுகின்றன.

கான்பெர்ரா விரைவில் அவர்களுடைய புகலிடக் கோரிக்கையை பரிசீலிக்கும் என்ற உறுதிமொழியை ஒரு கடிதம் உறுதியாக நிராகரித்துள்ளது. "இந்தோனேசியாவின் தரைப்பகுதிக்கு நாங்கள் செல்ல உடன்பாட்டால் மறு குடியிருப்பு விரைவில் கொடுக்கப்படும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நாங்கள் இந்தோனேசியாவிற்கு போகத் தயாராக இல்லை. இது எங்கள் இறுதியான முடிவு ஆகும்."

மற்றொரு கடிதம் அகதிகள் கீழிறங்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டால் "உணர்வுரீதியான மற்றும் உடல்ரீதியான" பிரச்சினைகளை பெறுவர் என்று கூறியுள்ளது. இந்தோனேசியாவில் இறங்குவதற்கு "பதிலாக பெருங்கடலிலேயே உயிரை மாய்த்துக் கொள்ளுவது மேல்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் மெரக் துறைமுகத்தில் இருக்கும் Lestari Jaya 5 ல் உள்ள தமிழ் மக்கள் செய்தி ஊடகத்திடம் தங்கள் படகில் நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது என்றும் மிகக் குறைந்த குடிநீர், உணவுப் பொருட்களே வழங்கப்படுகின்றன என்றும் ஒரே ஒரு கழிப்பறைதான் உள்ளது என்றும் கூறியுள்ளனர். குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் கண் தொற்று நோயால் அவதியுற்றுள்ளனர்.

தஞ்சம் கோருவோரை அவருடைய அரசாங்கம் நடத்துவது பற்றி ஆஸ்திரேலியாவில் உள்ள கவனம் பெருகியுள்ள நிலையில், ரூட் கடந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கும் மேலாக 15 வானொலி மற்றுத் தொலைக்காட்சி பேட்டிகளை கொடுத்தார். அதில் இழிந்த முறையில் அவருடைய அரசாங்கம் மிகவும் நியாயமானது என்றும் பல முறை கூறினார். இந்தோனேசியாவில் தமிழ் மக்கள் "குடியேற்றத்திற்கு வகை செய்யப்படுவர்" என்றும் வலிமை இதற்குப் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் கூறினார். லிபரல்-தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளும் ரூட் அரசாங்கம் தமிழ் மக்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்ப வேண்டும் என்று கோரியுள்ளன.

இலங்கை அரசங்கத்தின் குற்றச்சாட்டுக்களான தமிழர்கள் அகதிகள் அல்ல பயங்கரவாதிகள் மற்றும்/அல்லது குற்றவாளிகள், "ஆஸ்திரேலிய அமைதி, பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலைக் கொடுப்பர்" என்பவற்றை விமர்சனமற்ற முறையில் ஆஸ்திரேலியப் பெருநிறுவனச் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது. உதாரணமாக கடந்த வார இறுதியில் இலங்கை அராசங்கம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு, அதில் மெரக் துறைமுகத்தில் 255 தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸ் "மக்களைக் கடத்துபவர்" என்று கூறியுள்ளது.

இலங்கையின் உயர் ஸ்தானிகர் செனகா வால்கம்பயா Channel Ten உடைய "Meet the Press" நிகழ்ச்சியில், அலெக்ஸ் இந்தியாவில் இருந்து மக்களைக் கடத்தும் செயலில் ஐந்து ஆண்டுகளாக ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். தமிழர்கள் இலங்கையின் உள்நாட்டுப்போரை "ஒரு காரணமாகப் பயன்படுத்தி" ஆஸ்திரேலியாவில் புகலிடம் நாடுகின்றனர் என்றும் அவர் தொடர்ந்து கூறினார். "இவர்களில் பலரும் நீதியில் இருந்து தப்பி ஓடுபவர்கள், அவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை சந்தேகிக்கிறது" என்றார். சஞ்சீவ் குலேந்திரராஜா என்று அடையாளம் காணப்பட்டுள்ள அலெக்ஸ், மக்கள் கடத்தல் என்று கூறப்படுவதில் எவ்விதத் தொடர்பும் தனக்குக் கிடையாது என்று தீவிரமாக மறுத்துள்ளார்.

நாட்டின் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இனவெறி அணுகுமுறை மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் முடிந்ததற்குப் பின் இன்னும் 250,000 தமிழ் மக்ககளை சிறையில் வைத்திருப்பதின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. செய்தி ஊடகமும் மனித உரிமை அமைப்புக்களும் காவல் முகாம்களுக்கு செல்ல முடியாமல் தடைக்கு உட்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் ஐ.நா. பிரதிநிதி ஒருவர் "தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தை பரப்புவதாக" குற்றம்சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்; ஏனெனில் அவர் குழந்தைகள் உட்பட தமிழ் குடிமக்களை சிறையில் வைத்துள்ளது பற்றி குறை கூறியிருந்தார்.

இந்த ஜனநாயக விரோத, இனவாத நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு பதிலாக தொழிற்கட்சி ராஜபக்ச ஆட்சியுடன் நெருக்கமாக ஒத்துழைத்து ஒடுக்கப்படும் நிலையில் இருந்து தப்பி ஓடும் தமிழ் மக்களை தடுக்க உதவுகிறது.

கடந்த ஆண்டு கான்பெர்ரா இலங்கை அரசாங்கத்திற்கு கொழும்பு துறைமுகத்தில் CCTV கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுவதற்கு நிதி அளித்தது. இலங்கை பாராளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் Sydney Mornign Herald பத்திரிகையிடம் கடந்த வாரம் குறைந்தது 29 தமிழர்களாவது இந்த மாதம் ஆஸ்திரேலிய நிதியளித்த காமிராக்கள் உதவி மூலம் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டனர் என்று கூறினார். கல்வி, வணிகம் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக நாட்டை விட்டுச் செல்லும் தமிழ் மக்களும் துன்புறுத்தப்பட்டு காவலில் வைக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார். தங்கள் உறவினர்கள் மறைந்துவிட்டனரோ என்ற அச்சத்தில் உள்ள தமிழ்க் குடும்பங்கள் தன்னைத் தொடர்பு கொள்கிறார்கள் என்றும் கணேசன் கூறினார்.

ஒரு பெயரிடப்படாத இலங்கை அரசாங்க அதிகாரி செய்தித்தாளிடம் கூறினார்: "விமான நிலையத்தில் இந்த காணாமற் போவது என்பது மக்களை மிகவும் கவலைக்கு உட்படுத்துகிறது. இதுதான் மக்களை படகுகளை நாட வைக்கிறது." இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் செய்தித்தாளிடம் இலங்கையின் "எல்லைப் பாதுகாப்பை" முன்னேற்றுவிக்கும் நோக்கத்திலேயே காமிரா வழங்கப்பட்டது என்று கூறினார்.

வெளியுறவு மந்திரி Stephen Smith இன்று, ஆஸ்திரேலியாவிற்கு தமிழ் மக்கள் கடல்கடந்து வருவதை நிறுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்க இலங்கைக்கு பறந்து சென்றுள்ளார். ஒரு மூத்த ஆஸ்திரேலிய தூதரான ஜோன் மக்கார்த்தியும் பேச்சுவார்த்தைகளுக்காக கடந்த வாரம் கொழும்புவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ரூட் அரசாங்கம் "மக்கள் கடத்தல் திட்டம்" எனப்படுவதை உருவாக்க இலங்கையில் ஒரு நிரந்தர ஆஸ்திரேலிய கூட்டாட்சி போலீஸ் இடைத்தொடர்பு நிலையத்தை நிறுவுவதற்கு 48 மில்லியன் டாலரைக் கொடுக்க உள்ளது. இந்த நிதிகள் உள்ளூர் போலீஸுக்கு பயிற்சி, கணினிகள், காமிராக்கள் மற்றும் "சான்றுகள் சேகரிக்கும் கருவிகள்" என அழைக்கப்படுவதை வாங்கவும் பயன்படுத்தப்படும்.

கடந்த வாரம் 12 தமிழ் தஞ்சம் கோருவோர்கள் படகு கோக்காஸ் தீவிற்கு வடமேற்கே சோகம் ததும்பிய முறையில் மூழ்கியது ரூட் அரசாங்க குடியேற்றக் கொள்கையின் நேரடி விளைவாகும். "ஆஸ்திரேலிய கோட்டை" நடவடிக்கைகள் மற்றும் ராஜபக்ச அரசாங்கத்துடன் இது கொண்டுள்ள ஆழ்ந்த ஒத்துழைப்பு இன்னும் அத்தகைய அழிவுகள் இருக்கும் என்பதைத்தான் உறுதிபடுத்துகின்றன.

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்

ஆஸ்திரேலியா: சமீபத்திய அகதிகள் இறப்புக்கள்--ரூட் அரசாங்கத்தின் SIEV X