WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Hillary Clinton gives Obama's Middle East game away
ஒபாமாவின் மத்திய கிழக்குத் திட்டத்தை ஹில்லாரி கிளின்டன் கைவிட்டுவிட்டார்
Chris Marsden
5 November 2009
Use this
version to print | Send
feedback
கடந்த சில நாட்களாக வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் இஸ்ரேலிய
பிரதம மந்திரி பென்ஜமின் நேடன்யாகு பற்றி அவர் "முன்னோடியில்லாத வகையில்" பாலஸ்தீனியர்களுக்கு சலுகை
கொடுக்கிறார் என்று முன்னர் பாராட்டியதால் வந்த பாதிப்பை குறைக்கும் வகையில் மேற்குகரையில் குடியிருப்பு
கட்டமைப்புக்களை "குறைக்க" வேண்டும் என்ற கருத்தை இப்போது கூறியுள்ளார்.
பாலஸ்தீனிய அதிகாரத்தின் (PA)
ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை அபுதாபியில் சந்தித்த பின்னர் கிளின்டன் தன் கருத்துக்களை கூறினார். அங்கு அப்பாஸ்
மேற்கு கரையிலும் கிழக்கு ஜெருசலமிலும் அனைத்து குடியிருப்பு கட்டமைப்புக்களும் நிறுத்தப்பட்டால் ஒழிய
பேச்சுவார்த்தைகள் தொடரப்பட மாட்டாது என்ற தன் கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
நேடன்யாகுவை சந்திக்க ஜெருசலத்திற்கு பயணித்தபின், கிளின்டன் பாலஸ்தீன
பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும் என்று கோரி, குடியிருப்பு கட்டமைப்பிற்கு முற்றுப்புள்ளி என்பது
ஒருபோதும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னிபந்தனையாக இருந்ததில்லை என்றார். "எப்பொழுதும் ஒரு முன் நிபந்தனை
இருந்ததில்லை. இது பேச்சுவார்த்தைகளில்தான் எப்பொழுதும் ஒரு பிரச்சினையாக இருந்தது" என்றார்.
நேடன்யாகு பெரும் களிப்புற்று ஒரு முற்றுமுழுதான இஸ்ரேலிய குடியிருப்பை முடக்குவதற்கான
கோரிக்கைகள் "பேச்சுவார்த்தைகளை தொடர ஒரு தடைபோல் ஒரு போலிக்காரணமாக பயன்படுத்தப்படுகின்றன..."
பாலஸ்தீனியர்கள் "உறுதியாகப் பேசவேண்டும்" என்று அவர் சேர்த்துக் கொண்டார்.
நேடன்யாகு கொடுத்ததாக கூறப்பட்ட சலுகைகளுக்கு கிளின்டன் கொடுத்த ஒப்புதல்,
ஜனாதிபதி ஒபாமா வழங்கிய பல பகிரங்க அறிக்கைகளுக்கு எதிராக உள்ளது. இவ்வாறு செய்கையில் அவர்
வாஷிங்டனின் உண்மையான உண்மையான விருப்பங்கள், முன்னுரிமைகள் பற்றிய ஒளிவுமறைவற்ற உள்ளடக்கத்தை
கொடுத்துள்ளார்.
குடியேற்றங்கள் அமைப்பதற்கு முடிவு என்பது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்,
ரஷ்யா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை 2002ல் தயாரித்த "சாலை வரைபடத்தில்" (Road
Map) அடங்கியிருந்தது. இது அமெரிக்காவின் முறையான
நிலைப்பாடாகத்தான் அப்பொழுது முதல் உள்ளது. சாலை வரைபடம் பாலஸ்தீனியர்கள் தங்கள் தலைநகராக
இருக்க வேண்டும் என்று விரும்பும் கிழக்கு ஜெருசலம் பற்றியும், அது பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கட்டத்தில்
முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளது. நேடன்யாகு குடியேற்ற செயல்களில் "நிதானம்" என்று கூறுவது கிழக்கு
ஜெருசலத்தை ஒதுக்கி வைத்துள்ளது.
ஒரு பேச்சுவார்த்தைகள் மூலம், பாலஸ்தீனிய நாடு தோற்றுவிப்பதற்கு உடன்பாடு
காணப்படும் என்ற உறுதிமொழியைக் கொடுத்து வெள்ளை மாளிகைக்கு ஒபாமா வந்தார். இவ்விதத்தில் ஈராக்
போருக்கு பின்னர் அமெரிக்காவின் புகழை மறுபடியும் சீரமைக்க உறுதி கொண்டிருந்தார். ஜூன் மாதம் கெய்ரோவில்
முக்கிய கொள்கை உரை ஆற்றுகையில் அவர் "தானே நேரடியாக" பாலஸ்தீனிய நாடு அடையப்படுவதற்கு முயற்சி
எடுக்கப்போவதாக உறுதியளித்து, "இந்த குடியேற்றங்களை நிறுத்தும் நேரம்" வந்துவிட்டது என்றும் வலியுறுத்தினார்.
இத்தகைய பகிரங்க அறிக்கைகளை நேடன்யாகு இழிவுடன்தான் நோக்கினார்.
இப்பிராந்தியத்தில் தன் விருப்பத்தை நிறைவேற்ற இஸ்ரேலை அமெரிக்கா நம்பியுள்ளது என்பதில் அவர் நம்பிக்கை
கொண்டிருந்தார். நியாயமான போக்கு பற்றி அமெரிக்கா பேசுவது மக்களை திருப்திப் படுத்துவதற்குத்தான்
என்றும் கருதினார்.
செப்டம்பர் 4ம்தேதி அவர் மேற்குக்கரையிலும் கிழக்கு ஜெருசலத்திலும் மொத்தம்
3,500 பிரிவுகள் என்ற விதத்தில் பாரிய வீடுகள் கட்டும் திட்டத்தை அறிவித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
வாடிக்கையான அறிக்கைகளை ஒபாமா வெளியிட்டார். ஆனால் செப்டம்பர் 22ல் நேடன்யாகுவையும்,
அப்பாஸையும் நியூயோர்க்கில் சந்தித்தபோது, இந்த நிலைப்பாடு கைவிடப்பட்டது. நேடன்யாகு "குடியேற்ற
நடவடிக்கைகளில் நிதானமாக இருப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளை" மேற்கொண்டுள்ளதற்கு அவர் பாராட்டுத்
தெரிவித்தார்; இரு தலைவர்களும் "ஒரு சமரச உணர்வைக் காட்டுவதாகவும்" வலியுறுத்தினார்.
அமெரிக்க தூதர் ஜோர்ஜ் மிட்சல் ஒபாமாவின் அறிக்கையை தொடர்ந்த விதத்தில்
ஜெருசலம் போஸ்ட்டிடம், "எந்த பிரச்சினையையும் நாங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னிபந்தனை
எனவோ அல்லது தடையெனவோ அடையாளம் காணவில்லை" என்றார். அமெரிக்காவில் பல "வேண்டுகோள்களின்"
உடன்பாடு என்பது ஒன்று என்றும் கூறினார்.
கிளின்டனுடைய பேச்சும் முன்பு மிட்சல் வெளியிட்ட கருத்துக்களைத்தான் எதிரொலித்து,
ஒபாமா குறிப்பிட்டது போல் இருந்தது. ஆயினும்கூட அவர் பகிரங்கமாக ஒரு அவமானகரமான பின்வாங்கலை
செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.
திங்களன்று மொரோக்கோவில் ஒரு பிராந்திய அரங்கில் அவர் பல அரபுத்
தலைவர்களை சந்தித்தபோது, நேடன்யாகு குடியேற்றங்களை குறைப்பது பற்றிக் கூறியது குடியேற்ற முடக்கத்தில்
இருந்து "மிகக் குறைந்த நிலைப்பாடு" என்றும் "தொடர்ச்சியான இரு கட்சிகளின் அமெரிக்க நிர்வாகங்களும்
இஸ்ரேலின் குடியேற்றக் கொள்கையை எதிர்த்துள்ளன" என்றார்.
Al Jazeera
செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் அவர் ஒபாமா "அனைத்து குடியேற்ற நடவடிக்கையும் நிறுத்தப்பட வேண்டும்"
என்று விரும்புவதில் "மிகத் தெளிவாக உள்ளார்" என்றும், "அவருக்காக, அவருடன் உழைக்கும் நாங்கள் இதுதான்
அவருடைய கொள்கை என்பதைத் தெரிவிப்பதில் இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்." என்றார்.
புதனன்று கெய்ரோவில் கிளின்டன், மேற்குக்கரையிலுள்ள குடியேற்றங்களின்
நெறித்தன்மையை வாஷிங்டன் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கட்டுமான வேலைகள் "முற்றாக" நிறுத்தப்பட வேண்டிய
ஒன்றும் கூறினார்.
மத்திய கிழக்கு முழுவதிலும் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இவர்
நேடன்யாகுவிடம் தாழ்ந்து நிற்பது கண்டு எழுந்த சீற்றத்தால் இத்தகைய அசாதாரண மாறுபட்ட கருத்தை
வெளியிடும் தேவை ஏற்பட்டது.
பாலஸ்தீனிய அதிகாரத்தில் ஏற்கனவே அழுத்தங்கள் வெடிப்புத் தன்மையில் உள்ளன.
கிழக்கு ஜெருசலத்தில் பல பாலஸ்தீனிய வீடுகள் இஸ்ரேலின் குடியேற்றத்திட்டங்களுக்காக தகர்க்கப்பட்டுள்ளது
இதற்குக் காரணம் ஆகும். தொடர்ச்சியான எதிர்ப்புக்கள், கலகங்கள் மற்றும் பாலஸ்தீனிய இளைஞர்களுக்கும்
இஸ்ரேலிய போலீசுக்கும் அல்-அக்சா மசூதி வளாகத்தைச் சுற்றி வன்முறை மோதல்கள் நடந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில், கிளின்டனுக்கு அப்பாஸ் ஆபத்தான அரசியல் தாக்குதலைக்
கொடுத்திருக்க முடியும். ஏற்கனவே அவர் மேற்கின் கைக்கூலி என்று இகழப்படுகிறார். குறிப்பாக கடந்த
மாதத்திற்கு பின்னர் அவர் ஒபாமாவின் வேண்டுகோளான கடந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் காசா தாக்குதலை
22 நாட்கள் நடத்தியபோது இஸ்ரேல் போர்க் குற்றங்களை செய்தது என்று கூறுவதற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது
என்பதற்கு அவர் ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டபோது இது நேர்ந்தது.
கிளின்டனுடைய கருத்துக்களைப் பற்றிக் கூறிய பாலஸ்தீனிய அதிகாரத்தின் வெளியுறவு
மந்திரி ரியன் மால்கி, "பாலஸ்தீனிய அதிகாரத்தின் நம்பகத்தன்மை, நெறித்தன்மை ஆகியவற்றை மீண்டும்
பாதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது... அவர்கள் எங்கள் ஜனாதிபதியையும், பாலஸ்தீனிய தலைமையையும்
நாட்டுத்துரோகம் என்று குற்றம்சாட்டி, ஏதேனும் ஒரு ஆதாயத்திற்காக பாலஸ்தீனிய மக்களை துன்பப்பட
விட்டனர்." என்று எச்சரித்தார்.
இதை போன்ற கவலைகள் மத்திய கிழக்கு முழுவதும் பிரதிபலித்தன. அரபு லீக்கின்
தலைமைச் செயலாளரான Amre Koussa,
"நாங்கள் அனைவரும், (சவுதி அரேபியா, எகிப்து உட்பட) மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்பதை
உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.....சூழ்நிலையில் தோல்விதான் உள்ளது."
கிளின்டன் பின்வாங்கியமை இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஒபாமாவின்
கீழுள்ள அமெரிக்கா ஒரு நியாயமான இடைத்தரகராக இருக்கும் என்ற நப்பாசையை மீட்கும் அவநம்பிக்கை மிக்க
முயற்சியாகும். ஆனால் அப்பகுதியில் இருக்கும் வெற்று அரேபிய முதலாளித்துவ ஆட்சிகளின் உறுதிப்பாட்டுக்கும் ஏன்
தப்பிப் பிழைப்பதற்குக் கூட முக்கியமான இந்த பாசாங்குத்தனம் சிதைந்துவிட்டதுடன், இனி மீட்கப்பட
முடியாததாகிவிட்டது.
ஒபாமாவின் ஜனாதிபதி பதவியானது மத்திய கிழக்கில் ஒரு புதிய தசாப்தம் துவங்குவதைக்
காட்டுகிறது என்ற கூற்றே துவக்கத்தில் இருந்து மட்டமான நோக்கங்களுக்குத்தான் பயன்படுத்தப்பட்டது. பாலஸ்தீனியர்களுக்கு
நண்பர் போல் காட்டிக் கொண்டு, ஒபாமா கெய்ரோ, ரியத் மற்றும் டிரிபோலியில் இருக்கும் கொடுங்கோன்மை
ஆட்சியாளர்கள் அதன் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களில் அமெரிக்காவிற்குப் பின் துணை நிற்பதை எளிதாக்கத்தான்
முயன்றுள்ளார். இதனால் அப்பகுதியில் அமெரிக்க மேலாதிக்கம் உறுதிப்படுத்தப்படுவது நோக்கமாக உள்ளது.
தெஹ்ரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு ஆதரவு பற்றி அரேபியத் தலைவர்களுடன்
விவாதிப்பதற்குத்தான் கிளின்டன் மொரோக்கோவில் இருந்தார். எனவேதான் இத்தகைய பகிரங்கப் பின்வாங்கல்
அவசியமாக இருந்தது. அரேபியத் தலைவர்கள் பலமுறையும் அவர்களுடைய அரசாங்கங்கள் "இஸ்ரேலிடம் இருந்து
பதிலுக்கு எதையும் பெறாமல், மற்றொரு முஸ்லீம் நாட்டிற்கு எதிராக சதி செய்வதற்காக தமது அரசாங்கல்கள்
மக்களால் தாக்குதலுக்கு உட்படக்கூடும்" என்று எச்சரித்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய இழிந்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், அமெரிக்கா இஸ்ரேலுடன்
Operation Juniper-Cobra
என்ற 2,000 துருப்புக்களை கொண்ட நீண்டதூர ராடர் மற்றும் பேட்ரியட்
ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை பரிசோதித்த கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தது. அமெரிக்க கடற்படையின்
தகர்க்கும் கப்பல் Higgins
ன் தளபதி Carl Meuser
செய்தி ஊடகத்திடம், "நாங்கள் இங்கு குறிப்பிட்ட காரணங்களுக்காக வந்துள்ளோம். இஸ்ரேலியர்கள் அக்கறை
கொண்டுள்ள சில குறிப்பான அச்சுறுத்தல்கள் பற்றி நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்." என்றார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்களில் இஸ்ரேலியத் தாக்குதல் நடத்துவதற்கான தயாரிப்பு
பற்றிய தெளிவான விருப்பம் உள்ளது. அதே நேரத்தில் ஏதேனும் வரக்கூடிய பதிலடியில் இருந்தும் காப்பாற்றிக்
கொள்ள வேண்டும் என்ற நினைப்பும் உள்ளது. இதுதான் மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கையின் அடிப்படை உள்ளடக்கம்
ஆகும். இது அம்பலப்படுத்தப்படுத்தல் அரபு ஆட்சிகள் "அவற்றின் மக்களால்" உண்மையில் தாக்கப்படும் நாட்களை
விரைவுபடுத்தும். |