World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The fall of the Berlin Wall

பேர்லின் சுவர் வீழ்ச்சி

Peter Schwarz
9 November 2009

Use this version to print | Send feedback

பேர்லின் சுவர் வீழ்ச்சியின் இருபதாவது ஆண்டு நிறைவை நவம்பர் 9 குறிக்கிறது. 1989ல் இருந்து எல்லை திறக்கப்பட்ட பின் சுவரின் மேல் நடனமாடுதல், ஒருவரை ஒருவர் தழுவுதல், என்று மக்கள் களித்த படங்கள் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் ஆட்சிக்கு வந்த மற்றைய ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சிகளையும் குறிக்கும் அடையாளங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் ஏராளமான கொண்டாட்டங்கள் ஜேர்மனியில் நடைபெறுகின்றன. நாடெங்கிலும் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் "சுதந்திரக் கொண்டாட்டம்" என்று பேர்லினில் உள்ள பிராண்டன்பேர்க் வாயில் அருகே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி, ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் மற்றும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டனும் சிறப்பு விருந்தினர்களில் ஒரு பகுதியாக கலந்து கொள்கின்றனர்.

ஆனால் இந்த நிகழ்வில் பொதுமக்களுடைய ஆர்வம் மிகக் குறைவு ஆகும். சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்றின்படி, கிழக்கு ஜேர்மனியர்களில் 23 சதவிகிதத்தினர் ஜேர்மனிய மறு இணைப்பினால் தங்களை இழந்தவர்களாக கருதுவதாக தெரிகிறது. மற்றொரு 30 சதவிகிதத்தினர் பயணம், வீடுகள், சுதந்திரம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை காண்பதாகவும் வருமானம், சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, சமூக நீதி இவற்றில் எதிர்மறையான விளைவுகள்தான் இருப்பதாகவும் கூறியுள்ளனர். 32 சதவிகிதத்தினர்தான் தங்கள் பொருளாதார நிலை "நன்கு உள்ளது" என்று கூறியுள்ளனர். 1999ல் இது 47 சதவிகிதமாக இருந்தது.

உத்தியோகபூர்வ களிப்பிற்கும் பொதுமக்கள் அதிருப்திக்கும் இடையே உள்ள முரண்பாடு நவம்பர் 1989 நிகழ்வுகள் பற்றிய தன்மையின் உண்மை முக்கியத்துவம் பற்றி நிறையவே கூறுகின்றன. செய்தி ஊடகம் அவற்றை ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமாதானத்தின் ஒரு புதிய சகாப்தம், என்று பெருமைப்படுத்துவது எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பது வெளிப்படையான நிலையில் இன்னும் அதிக குரலில் முழங்குகிறது. ஜேர்மன் ஜனநாயாகக் குடியரசின் முடிவின்போது புதிராக இருந்தது போல் சமீபத்திய வரலாற்றில் வெகு சில நிகழ்வுகளே உள்ளன.

சுவரின் வீழ்ச்சி ஏராளமான இரகசியத்துறை முகவர்களின் உதவியுடன் எவ்விதமான எதிர்ப்பிற்கான அடையாளத்தையும் அடக்கிய, குறிப்பாகத் தொழிலாளர்களிடமிருந்தும், ஒரு சர்வாதிகார ஆட்சியின் முடிவை தொடக்கியது. ஆனால் அதற்குப் பின்னர் ஜனநாயகம் ஒன்றும் தழைத்துவிடவில்லை. மாறாக மற்றொரு சர்வாதிகாரம்தான் வந்துள்ளது. முதலாளித்துவத்தின் சர்வாதிகாரமே அது. சுவரின் தகர்ப்பைத் தொடர்ந்து மக்களின் ஜனநாயகப் பங்கோ அல்லது ஆலோசனைகளோ இல்லாத நிலையில் கிழக்கு ஜேர்மனிய மக்களின் வாழ்வு வியத்தகு அளவில் மாறியது.

அரசாங்க உடைமையாக இருந்த மொத்தம் 14,000 நிறுவனங்கள் விற்கப்பட்டன, சிதைக்கப்பட்டன அல்லது மேற்கு ஜேர்மனியின் பெருவணிகப் பிரதிநிதிகள் அடங்கிய Treuhandanstalt (அறக்கட்டளை அமைப்பு) னால் திவால்படுத்தப்பட்டன. தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனங்களில் 95 சதவிகிதம் கிழக்கு ஜேர்மனிக்கு வெளியே இருந்த உரிமையாளர்களால் வாங்கப்பட்டன. மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து ஊழியர்களிலும் 71 சதவிகிதத்தினர் வேலைகளை இழந்தனர் அல்லது தங்கள் வேலைகளை மாற்றிக் கொண்டனர். 1991 ஐ ஒட்டி,1.3 மில்லியன் வேலைகள் இழப்புக்கள் ஏற்பட்டன. தொடர்ந்த ஆண்டுகளில் மற்றும் ஒரு மில்லியன் வேலைகளும் தகர்க்கப்பட்டன. இன்று உற்பத்தித்துறை தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 1989 எண்ணிக்கையின் கால் பகுதிதான்.

கிழக்கு ஜேர்மனிய மக்களின் பெரும் பிரிவுகள் விரைவில் வருங்காலம் பற்றிய தங்கள் நம்பிக்கையை இழந்தனர். குறைந்துள்ள பிறப்பு விகிதம் இந்த வழிவகையில் சமூக முக்கியத்துவத்தைப் பற்றி தெரிவிக்கும் முக்கிய குறிப்பு ஆகும். இது 1989 இல் 199,000 புதிய குழந்தைகள் பிறப்பு என்பதில் இருந்து 1994ல் 79,000 என்று குறைந்தது.

இந்த தொழில்துறை மற்றும் சமூகப் பேரழிவின் விளைவுகள் இன்னும் தொடர்கின்றன. புதிய மாநிலங்களின் மொத்த மக்கள் தொகை 13 மில்லியன் என்று உள்ளது. இது GDR ல் இருந்த 14.5 மில்லியனைவிட கணிசமான குறைவாகும். சுவர் தகர்ப்பிற்கு 20 ஆண்டுகளுக்கு பின்னரும் நாள் ஒன்றிற்கு சராசரியாக 140 கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கு ஜேர்மனிக்கு வந்து சேருகின்றனர்.

பல ஆண்டுகளாக வேலையின்மை விகிதம் 20 சதவிகிதத்தை அண்மித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்தான் இது தற்பொழுதைய 12 சதவிகிதத்திற்கு வந்துள்ளது. ஆனால் இந்த குறைவு புதிய ஒழுங்கான வேலைகள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்படவில்லை. மாறாக குறைவூதிய, பகுதிநேர வேலைகள் அதிகரித்துள்ளதால் வந்துள்ளது. கிழக்கு ஜேர்மனியில் ஒவ்வொரு இரண்டாம் ஊழியரும் குறைவூதிய தரமான 9.20 யூரோக்கள் மணி நேரத்திற்கு என்பதை உழைக்கின்றனர். சராசரி ஊதியம் 13.50 யூரோக்கள் ஒரு மணி நேரத்திற்கு என்று மேற்கு ஜேர்மனியின் தரமான மணித்தியாலத்திற்கு 17.20 யூரோக்கள் என்பதைவிட மிகக் குறைவு ஆகும்.

1989 இலையுதிர்காலத்தில் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் (GDR) ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் இதயத்தானமாக இருந்த "வெளிப்படையான தேர்தல்கள்" கோரிக்கை முதலாளித்துவ ஜனநாயகம் பற்றிய ஏமாற்றத்திற்குத்தான் வழிசெய்துள்ளது. கடந்த கூட்டாட்சித் தேர்தல்களின்போது கிழக்கு ஜேர்மனியில் 60 சதவிகிதத்தினர்தான் வாக்குச் சாவடிகளுக்கு சென்றனர். மாநில, நகரசபை தேர்தல்களில் வாக்குப் பதிவு இன்னமும் குறைவாக இருந்தது.

1989 இலையுதிர்காலத்தை பற்றிய மற்றொரு கட்டுக்கதை மக்கள் ஐக்கிய சோசலிச கட்சி (SED-(முன்னாள் ஜேர்மன் ஜனநாயக குடியரசில் இருந்த ஸ்ராலினிச கட்சி) ஆட்சியை "ஒரு அமைதியான புரட்சி" மூலம் அகற்றினர் என்பதாகும்.

சுவரின் தகர்ப்பிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் பரவியிருந்த இந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், ஜேர்மன் ஜனநாயக குடியரசின் விரைவான சரிவிற்கு உதவின. ஆனால் இதற்கான உறுதியான உந்துதல் வேறு இடத்தில் இருந்து வந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு திறந்த கதவைத் தட்டிக் கொண்டிருந்தனர். செப்டம்பர் 4ம் தேதி லைப்சிக் நகரத்தின் மூலம் "திங்கள் ஆர்ப்பாட்டங்கள்" நடந்து கொண்டிருந்தபோது, ஜேர்மன் ஜனநாயக குடியரசின் முடிவு ஏற்கனவே முத்திரையிடப்பட்டிருந்தது.

அந்த முடிவு மாஸ்கோவில், 1985ல் சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பிற்கு உயர்ந்திருந்த மிகைல் கோர்ப்பஷேவால் எடுக்கப்பட்டது. "Perestroika" வின் ஒரு பகுதியாக அவர் முதலாளித்துவ மீட்பிற்கான பாதையை வகுத்தார். மேலை சக்திகளின் உதவியை அவர் நாடி நின்று, கிழக்கு ஐரோப்பிய "சகோதர" நாடுகளுடன் உறவுகளைத் துண்டித்தார். சோவியத் பொருளாதார நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த விதத்தில் சோவியத் ஏற்றுமதிகளுக்கு உலகச் சந்தை விலைகளை கோரினார்.

இது சோவியத் ஒன்றியத்தை எரிசக்தி விநியோகத்திற்கு பெரிதும் நம்பியிருந்த ஜேர்மன் ஜனநாயக குடியரசினை திவாலின் விளம்பிற்குத் தள்ளியது. ஒருபுறத்தில் நிதியப் பிரச்சினைகளின் அழுத்தம், மறுபுறத்தில் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் என்ற நிலையில், ஐக்கிய சோசலிச கட்சி நீண்டகாலமாக அதன் நிதிய கடன்களை நம்பியிருந்த மேற்கு ஜேர்மனிய அரசாங்கத்தை நாடியது.

ஜேர்மன் ஜனநாயக குடியரசின் பொருளாதாரத்திற்கு பல ஆண்டுகள் பொறுப்பாக இருந்த Günter Mittag பின்னர் Spigel ஏட்டிடம் 1987லேயே "இந்த நிலை வரும்" என்பதை அறிந்திருந்ததாக கூறினார். ஜேர்மன் ஜனநாயக குடியரசின் கடைசிப் பிரதம மந்திரியாக நவம்பர் 1989ல் இருந்து மார்ச் 1990 வரை இருந்த Hans Modrow தன்னுடைய நினைவுக் குறிப்புக்களில் "ஒரு மறு ஐக்கியமான ஜேர்மனியை அடையும் போக்கு தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது", "அந்தப் போக்கிற்கான முடிவு உறுதியாக எடுக்கப்பட்டது" என்று தான் கருதியதாக பின்னர் எழுதியுள்ளார்.

உத்தியோகபூர்வ கற்பனைக் கதைகளுக்கு மாறாக சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஜேர்மன் ஜனநாயக குடியரசில் முதலாளித்துவத்தை அறிமுகப்படுத்தும் முயற்சி ஆளும் சோவியத் அதிகாரத்துவத்திடம் இருந்தேதான் வந்தது. இந்த சலுகை பெற்ற சாதி 1920களில் மார்க்சிச எதிர்ப்பை அடக்கி, இறுதியில் அழித்தவிதத்தில் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்தை கையிலெடுத்துக்கொண்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்த அதிகாரத்துவம் தன்னுடைய ஆட்சியை கிழக்கு ஐரோப்பாவில் மாஸ்கோவின் மேலை நட்பு நாடுகளின் இணைக்கத்தை பெற்று விரிவாக்கியது. தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு சுதந்திர இயக்கத்தையும் இது நசுக்கியது. உதாரணமாக ஜேர்மன் ஜனநாயக குடியரசில் ஜூன் 17, 1953ல் தொழிலாளர்கள் எழுச்சியை அடக்கியது.

ஸ்ராலினிச அதிகாரத்துவம் தன்னுடைய ஆட்சிக்கு 1917 அக்டோபர் புரட்சியில் நிறுவப்பட்டிருந்த சொத்து உறவுகளை அடித்தளமாகக் கொண்டிருந்தது. ஆனால் அது தான் சார்ந்திருக்கும் உயிரைக் கரைத்து பின்னர் குடித்துவிடும் ஒரு ஒட்டுண்ணி போல் இதைச் செயற்பட்டது. தொழிலாளர்கள் ஜனநாயகத்தின் அனைத்து வடிவமைப்புக்களையும் அடக்கியவிதத்தில், அது சமூக உடைமை முறையின் ஆக்கபூர்வ திறனை நெரித்துவிட்டது. சர்வதேச அளவில் அதுவும் அதன் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒவ்வொரு புரட்சிகர இயக்கத்தையும் மூச்சுத் திணறடித்துக் கொன்றது. இரண்டாம் உலகப் போருக்குப்பின், இது இருக்கும் அமைப்பினை பாதுகாக்க வேண்டும் என்பதற்கு முக்கிய தூணாக நின்று உலகளவில் முதலாளித்துவ ஆட்சி உறுதிப்படுத்தப்பட உதவியது.

இந்த நிலைமை அதிக நாட்களுக்கு நீடிக்காதது ஒன்றாகும். ஸ்ராலினிசத்திற்கு எதிரான இடது எதிர்ப்பின் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கி 1938ல் சோவியத் ஒன்றியத்தின் வருங்காலத் தன்மையின் மாற்றீடுகள் பற்றிக் கூறினார். நான்காம் அகிலத்தின் நிறுவன வேலைத்திட்டத்தில் அவர் எழுதினார்: "தொழிலாளர் அரசில் உலக முதலாளித்துவத்தின் கருவியாக அதிகம் செயல்படும் அதிகாரத்துவம் புதிய சொத்துரிமை வடிவங்களை அகற்றும் அல்லது நாட்டை மீண்டும் முதலாளித்துவத்திற்குள் ஆழ்த்திவிடும் அல்லது தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை நசுக்கி சோசலிசத்திற்கான பாதையைத் திறக்கும்."

1980களின் ஆரம்பத்தில் உருவாகிய உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள், ஸ்ராலினிச நாடுகளில் இருந்த முரண்பாடுகளை ஒரு முறியும் கட்டத்திற்கு தீவிரமாக்கின. உற்பத்திமுறை பூகோளமயமானதுடன், கணினிகள், புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் அறிமுகமானது ஆகியவை தேசிய அடித்தளத்தைக் கொண்ட இந்நாடுகளின் பொருளாதாரங்களை மிகவும் பின்தங்கி இருக்க செய்தன.

தவிர்க்கமுடியாத சமூக எழுச்சியின் அடையாளங்கள் பெருகின. குறிப்பாக போலந்தில் Solidarity இயக்கம் தோன்றியது. ட்ரொட்ஸ்கி கணித்துக் கூறியபடி, அதிகாரத்துவம் இதை விடையிறுக்கும் வகையில் புதிய சொத்துறவுகளை அகற்றி, நாட்டை மீண்டும் முதலாளித்துவ பாதையில் தள்ளியது. இதுதான் கோர்பச்ஷேவ் அதிகாரத்திற்கு உயர்ந்ததன் முக்கியத்துவம் ஆகும். இது கிழக்கு ஐரோப்பாவில் தங்கள் அதிகாரத்திற்கு முற்றிலும் மாஸ்கோவை நம்பியிருந்த ஸ்ராலினிச ஆட்சிகளின் விதியையும் முத்திரையிட்டது.

1989 கடைசியில் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் சிறு நகரங்கள், பெரு நகரங்களில் ஊர்வலம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இந்தப் பின்னணி தெரியவில்லை. அவர்கள் தாங்கள் அடக்கி வைத்திருந்த ஆளும் அதிகாரத்துவம் மற்றும் பொருளாதார அரசியல் தேக்கத்தற்கு எதிரான சீற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்த இயக்கம் மேற்கிற்கு செல்லவேண்டும் என்று ஆரம்பத்தில் கருத்துக் கொண்டிருந்தது. இது சமூக அளவில் பல பிரிவுகளையும் அரசியலில் குழப்பத் தன்மையையும், ஒரு தெளிவான நோக்கம் அல்லது தான் எதிர்கொள்ள இருக்கும் சமூக சக்திகளைப் புரிந்து கொள்ளாமலும் இருந்தது. இதையொட்டி அது எளிதில் திரித்தலுக்கும், சுரண்டலுக்கும் உட்பட்டது.

எதிர்ப்பாளர்களின் செய்தித் தொடர்பாளர்கள் குடியுரிமை இயக்கத்தில் இருந்து வந்தனர். அவர்கள் பாதிரிமார்கள், வக்கீல்கள், கலைஞர்கள் என்று இருக்கும் ஆட்சியுடன் குறைந்த சீர்திருத்தம் பற்றி கோரிக்கைகளுக்கான உரையாடலைத்தான் விரும்பினர். ஆட்சி, ஒரு சில ஆரம்ப சலுகைகளைக் கொடுத்தவுடன் எரிக் ஹொனேக்கருக்குப் பதிலாக ஈகொன் கிரெனஸ், ஹான்ஸ் மோட்ரோவை நியமித்து அவர்கள் ஐக்கிய சோசலிச கட்சி உடன் நெருக்கமாக உழைத்து எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து மேற்கு ஜேர்மனியின் ஹெல்முட் கோல் அரசாங்கத்திடம் முன்முயற்சிகளை கொடுத்தனர். முதலில் மோட்ரோவின் "வட்ட மேசை" பேச்சுக்களில் கலந்து கொண்டனர், பின்னர் அதில் சேர்ந்தனர்.

மேற்கு ஜேர்மனியுடன் 1989 வசந்த காலத்தில் நிதிய இணைப்பு உடன்பாட்டைக் கண்டவுடன் மோட்ரோ அரசாங்கம் கிழக்கு ஜேர்மனியின் முடிவை உறுதியாக்கியது. ஜேர்மன் மார்க்கின் (D Mark) அறிமுகம் ஒரு நச்சு பூசப்பட்ட உணவாகும். மிகவும் விரும்பப்பட்ட மேற்கு ஜேர்மனிய நுகர்பொருட்களை பெறுவதற்கு அது வழி செய்தது. அதே நேரத்தில் கிழக்கு ஜேர்மனிய தொழில்தளத்தை முற்றிலும் சரிவாக்கவும் வகை செய்தது. மார்க்கில் விலையிடப்பட்ட கிழக்கு ஜேர்மனிய பொருட்கள் கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் வாங்கப்பட முடியவில்லை. அவற்றுடன்தான் கிழக்கு ஜேர்மனிய பொருளாதாரம் நெருக்கமாக பிணைந்திருந்தது; அதே நேரத்தில் குறைந்த உற்பத்தித்திறனால் கிழக்கு பொருட்கள் மேற்கில் போட்டியிட முடியவில்லை.

1989 இலையுதிர்கால ஆர்ப்பாட்டங்களில் பல தொழிலாளர்கள் பங்கு பெற்றிருந்தனர். ஆனால் அவர்களுக்கு தங்கள் சமூக நலன்களைக் பாதுகாத்துக் கொள்ள ஒரு முன்னோக்கு இருக்கவில்லை. அவை பெரிதும் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் சமூகமயமாக்கப்பட்ட சொத்துக்களுடன் பிணைந்திருந்தன. மார்க்சிச மரபில் இருந்து அவர்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்துடன், அதன் ஸ்டாலினிச வக்கிரமான வடிவத்தையே அறிந்திருந்தனர்.

அவர்களிடம் ஒரு முன்னோக்கு இல்லாமல் இருந்ததே ஸ்ராலினிசத்தின் பல தசாப்தங்கள் ஆதிக்கத்தின் விளைவாகும். அதன் மிகப் பெரிய குற்றம் முறையாக தொழிலாள வர்க்கத்தின் சோசலிச மரபுகளை மறைத்து அகற்றியது ஆகும். ஜேர்மன் ஜனநாயக குடியரசு நிறுவப்படுவதற்கு பலகாலத்திற்கு முன்பே ஸ்ராலின் தன்னுடைய ஆட்சியைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு முழுத் தலைமுறை புரட்சிகர மார்க்சிஸ்ட்டுக்களையும் முறையாக அழித்துவிட்டிருந்தார்.

1937-38 "பாரிய பயங்கர" ஆண்டுகளில் பாதிக்கப்பட்டவர்கள் அக்டோபர் புரட்சியின் தலைவர்கள் மட்டுமல்லாது, நாஜிகளிடம் இருந்து தப்புவதற்காக சோவியத் ஒன்றியத்திற்கு தப்பி ஓடியிருந்த ஜேர்மனிய கம்யூனிஸ்ட்டுக்களில் பலரும் ஆவர். இதில் தப்பியவர்கள் தங்கள் தோழர்களை ஸ்ராலிச தூக்கிலிடுபவர்களுக்கு காட்டிக் கொடுத்தார்கள். பின்னர் அவர்கள்தான் ஐக்கிய சோசலிச கட்சியின் (SED) தலைமையில் இருந்தவர்கள்.

ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஒன்றுதான் ஒரு மார்க்சிச நிலைப்பாட்டில் இருந்து ஸ்ராலினிசத்தை எதிர்த்தது. மேலை செய்தி ஊடகமும் அரசியல்வாதிகளும் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் மக்களைச் சந்திக்க கூடியதாக இருந்தபோது, ட்ரொட்ஸ்கிசவாதிகள் தடைக்கு உட்பட்டிருந்துடன், இறுதிவரை முதல் பொது விரோதி என்று கருதப்பட்டனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஸ்ராலினிசத்திற்கு எதிராகப் போராடியது மட்டும் அல்லாமல், அதை மாற்றி எடுத்துக் கொண்ட ஏர்னெஸ்ட் மண்டேலின் தலைமையில் இருந்த ஐக்கிய செயலகம் போன்றவற்றுடனும் போராடியது. ஐக்கிய செயலகம் கிழக்கு ஐரோப்பாவில் வெளிப்பட்ட ஸ்ராலினிச ஆட்சிகளை, ஸ்ராலினிசம் ஒரு முற்போக்கான பங்கைக் கொள்ளுவதற்கு ஒரு நிரூபணம் என்று கருதினர். மிகக்கடின அரசியல் சூழ்நிலையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பல தசாப்தங்கள் ஸ்ராலினிசம் சீர்திருத்தப்பட முடியாது, அரசியல் புரட்சியினால் அகற்றப்பட வேண்டும் என்ற ட்ரொட்ஸ்கிச நிலைப்பாட்டை பாதுகாத்து வந்தது.

1989 இலையுதிர்காலத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனியப் பிரிவு குறுக்கிட்டு ஐக்கிய சோசலிச கட்சிக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்ததிற்கு ஒரு புரட்சிகர நிலைநோக்கை கொடுக்க போராடியது. ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei fur Soziale Gleichheit) முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகம் (Bund Sozialistischer Arbeiter) ஒன்றுதான் முதலாளித்துவ மீட்பின் பேரழிவு முடிவுகள் பற்றி எச்சரித்து ஐக்கிய சோசலிச கட்சிக்கு சிறிதும் சலுகைகள் கொடுக்காத அமைப்பாக இருந்தது.

நவம்பர் 4ம் தேதி பேர்லினில் வெகுஜன ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் வழங்கப்பட்ட பிரசுரத்தில் சோசலிச தொழிலாளர் கழகம் (BSA) பின்வருமாறு விளக்கியது: "அரசியல் சுயாதீனத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கம் ஆளும் அதிகாரத்துவத்தை அகற்றி, அனைத்துப் பதவிகளில் இருந்தும் அதை விரட்டி, தொழிலாளர் சக்தி, ஜனநாயகம், தொழிலாளர் குழுக்கள் இவற்றின் சுயாதீன அமைப்புகளை நிறுவி, அவை தொழிற்சாலைகளிலும் சுற்றுப்புறங்களிலும் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில், அவர்களுக்கு பொறுப்புக்கூறும் விதத்தில் அமைத்து, முற்றிலும் அவர்களுடைய வலிமைலும், அணிதிரளலிலும் நம்பியிருக்கவேண்டும்."

அதே நேரத்தில் ஏர்னெஸ்ட் மண்டேல் கிழக்கு பேர்லினுக்கு தானே சென்று ஐக்கிய சோசலிச கட்சியை BSA ட்ரொட்ஸ்கிசவாதிகள் எழுப்பிய விமர்சனங்களுக்கு எதிராக பாதுகாக்க உதவினார். அவருடைய ஜேர்மனிய சக சிந்தனையாளர்கள் வட்டமேசையில் கலந்து கொண்டு பின்னர் Hans Modrow உடைய அரசாங்கத்திலும் பங்கு பெற்றனர். இவ்விதத்தில் அவர்கள் தொழிலாள வர்க்கத்தை மார்க்சிச மரபில் இருந்து வெட்டிவிடும் முக்கிய பங்கைக் கொண்டிருந்து முதலாளித்துவ மீட்பிற்கு பாதை அமைத்தனர்.

ஜேர்மன் ஜனநாயக குடியரசு, கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகள், சோவியத் ஒன்றியத்தின் முடிவு, முதலாளித்துவ வர்க்கத்திற்குள் பெரும் வெற்றி அலையைக் கட்டவிழ்த்தது. அதைத்தான் அது மீண்டும் தற்போதைய ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளில் புதுப்பிக்கப் பார்க்கிறது. ஆனால் இத்தகைய முயற்சிகள் உலகம் முழுவதிலும் முதலாளித்துவம் ஆழ்ந்த நெருக்கடியில் மூழ்கியுள்ளது என்ற உண்மையை மறைக்க முடியாது.

உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசுக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளும், உற்பத்தி முறையில் பூகோளமயமாக்கப்பட்ட தன்மை, உலகம் முழுவதும் இருக்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்ளை ஒரு சமூக அளவிலான ஒன்றுபட்ட உற்பத்தி முறையில் ஒன்றாகக் கொண்டுவந்துள்ளதும் மற்றும் உலகை போட்டியான தேசிய அரசுகளாக பிரித்ததுள்ளதும் ஸ்ராலிச ஆட்சிகளின் முதுகெலும்பை இரு தசாப்தங்களுக்கு முன்பு முறித்தது. ஆனால் இந்த முரண்பாடுகள் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே உள்ள பெருகும் மோதல்களாக ஈராக், ஆப்கானிஸ்தானில் பெருகும் போர்கள், தொழிலாள வர்க்க்தின் சமூக நலன்களுக்கு எதிராக நடத்தப்படும் இடைவிடாத் தாக்குதல்கள், நிதிய உயரடுக்கின் பேராசை ஆகியவற்றின் பின்னும் உறைந்துள்ளன.

இந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாமல் கடுமையான சமூக மோதல்கள், புரட்சிகரப் போராட்டங்கள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். தொழிலாளர்கள் 1989 இன் படிப்பினைகளில் இருந்தும் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பாதுகாத்த சர்வதேச சோசலிச திட்டத்தை ஏற்று அரசியல்ரீதியாக தயாராகவேண்டும்.