World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குThe political-financial scandals in France பிரான்சில் அரசியல்-நிதிய ஊழல்கள் Alex Lantier முன்னாள் ஜனாதிபதி ஜாக் சிராக் மீது குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, முதல் தடவையாக ஒரு ஜனாதிபதி மீது குற்ற விசாரணைக்கு வழியமைக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்சின் அரசியல்-நிதிய ஊழல்கள் முழு அளவு அரசாங்க நெருக்கடியாக வளர்ந்துள்ளன. சிராக் மீதான குற்றச் சாட்டு, முன்னாள் உள்துறை மந்திரி சார்ல்ஸ் பாஸ்குவா அங்கோலாவிற்கு ஆயுதம் விற்ற ஊழல் தொடர்பாக பரோலில் வெளிவர முடியாமல் ஓராண்டு சிறைத் தண்டனையைப் பெற்றது மற்றும் Clearstream விவகாரத்தில் முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் ஒரு மாத கால விசாரணைக்கு உட்பட்டது ஆகியவற்றைத் தொடர்ந்து வந்துள்ளது. முக்கிய அரசியல் வாதிகள் சிறைத் தண்டனை, பொது அவமானம் இரண்டையும் எதிர்கொள்கையில், நீடிக்கும் சட்ட மோதல்களுக்கான அரங்கு அரசியல் நடைமுறை முழுவதையுமே இழிசரிவிற்குட்படுத்தும் வகைக்கு அமைக்கப்படுகிறது- இவை தண்டனைக்குட்பட்ட எண்ணெய் நிர்வாகி Alfred Sirven அவருடைய 2001 குற்ற விசாரணைக்கு முன்பு குறிப்பிட்டது போல், "குடியரசையே 20 தடவை சிதைத்துவிடக்கூடிய" தன்மையைக் கொண்டுள்ளன. முன்னாள் நாட்டின் தலைவர் மீதான குற்றச் சாட்டு என்பது நிலைமையில் வெடிப்புத் தன்மை பற்றிய ஒரு அறிகுறிதான். தனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை எதிர்கொள்கையில் Pasqua அவருடைய நடவடிக்கைகள் சிராக், எடுவார்ட் பலடூர் (தற்போதைய ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் ஒருகாலத்திய நண்பர்) மற்றும் 1981ல் இருந்து 1995 வரை ஜனாதிபதியாக இருந்த முன்னாள் சோசலிஸ்ட் கட்சித் தலைவர் பிரான்சுவா மித்திரோன் ஆகியோருக்குத் தெரியும் என்று கூறினார். அரச இரகசியங்கள் என்ற சலுகையை பயன்படுத்துவது அரசியல்-நிதிய ஊழல்கள் பற்றிய அனைத்து விசாரணைகளிலும் அகற்றப்பட வேண்டும் என்றும் Pasqua கோரினார். 1980, 1990 களில் வெளிப்பட்ட ஊழல்கள் மிகப் பெரிய அளவில் இலஞ்சம் பெற்ற தொடர்ச்சியான நிகழ்வுகளில் தொடர்பு கொண்டிருந்தன. போருக்குப் பிந்தைய பிரெஞ்சு அரசியல் ஒழுங்கின் பெருகிய முரண்பாடுகளை அவை பிரதிபலித்தன--முக்கிய தொழில்துறை நலன்களின் பொது உடைமைக்கும் நிர்வாகிகள் மற்றும் அரசியல் வாதிகள் மிகப் பெரிய செல்வக் கொழிப்பை பெறுவதற்காக அதிக ஆதரவில்லாத வலதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே உள்ள உந்துதலினால் ஏற்பட்டன; மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கும் அதன் போட்டி நாடுகளுக்கும் இடையே, குறிப்பாக அமெரிக்காவிற்கும் இடையே இருந்த தொடர்புகளால்; இவை பிரான்சின் மீது கூடுதலான அழுத்தத்தைக் கொடுத்தன. Elf விவகாரம் --இதில் 1990களின் தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனமான எல்ப் (இப்பொழுது Total) ஆல் பிரெஞ்சு வணிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பிரெஞ்சு ஆதரவு ஆபிரிக்க தலைவர்களுக்கும் இலஞ்சப் பணம் கொடுக்கப்பட்டது; Angolagate ஊழல் எனப்பட்ட 1993-98 களில் அங்கோலாவிற்கு ஆயுதங்கள் விற்றபோது அரசியல் வாதிகள் மாஃபியா நபர்களுக்கு கொடுக்கப்பட்ட இலஞ்சத் தொகைகள்; தைவான் கப்பல்கள் விவகாரம், இதில் 1990 களில் பிரெஞ்சு கப்பல்களுக்கு உயர்த்தப்பட்ட விலையை தைவான் கொடுத்தது, அதையொட்டி பிரெஞ்சு, தைவானிய பெரும்புள்ளிகள் ஆதாயம் அடைந்தது; அதையொட்டி பல கொலைகளும் சந்தேகத்திற்குரிய தற்கொலைகளும் நடந்து, அவை மூடிமறைக்கப்பட்டன; "போலி வேலைகள் ஊழல்" என்பதில் பாரிஸ் நகரசபை அப்பொழுது பாரிஸ் மேயராக இருந்த சிராக்கின் கட்சி அலுவலர்களுக்கு முறையற்ற வகையில் பணம் கொடுத்தது, அது வாக்குகள் தில்லுமுல்லுக்கு இடையேயும், செல்வாக்கைப் பெற்ற கட்டிடம் கட்டும் நிறுவனங்கள் வாங்குதலுக்கு இடையேயும் நடைபெற்றது--என்ற விதத்தில் பட்டியல் பெருகுகிறது.வில்ப்பனுக்கு எதிரான Clearstream குற்ற விசாரணை, சார்க்கோசியின் குற்றச்சாட்டுக்களான வில்ப்பன் தனக்கு எதிரான அரசியல்-நிதிய விவகாரங்கள் பற்றிய விசாரணைகளை திரிக்க முற்பட்டார் என்பதில் இருந்து வெளிவந்துள்ளது. இதுவரை இந்த ஊழல்களில் தீவிர விசாரணை தடுப்பிற்கு உட்படுத்தப்பட்டன; குற்றம் செய்வர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிலர் குறைந்த தண்டனையே பெற்றனர். 2002-03 எல்ப் குற்ற விசாரணையில் எந்த அரசியல்வாதிகளும் தண்டிக்கப்படவில்லை. தண்டிக்கப்பட்ட எல்ப் நிர்வாகி ஒருவரான Andre Tarallo இரு மாதங்களிலேயே சிறையில் இருந்து வெளிவந்துவிட்டார்; 2மில்லியன் யூரோக்கள் அபராதத்தையும் அவர் கட்டவில்லை. தைவான் கப்பல்கள் பற்றிய விசாரணை இடது, வலது அரசாங்கங்கள் அரசாங்க இரகசியங்கள் என்ற சலுகையைப் பலமுறை பயன்படுத்தியதால் தடுக்கப்பட்டு விட்டன. சார்க்கோசி 2007ல் பதவிக்கு வந்ததோடு, சிராக்கைச் சுற்றியுள்ள தனக்கு எதிரான கன்னைவாத தலைவர்களைவிட ஆதாயம் பெறும் நோக்கத்துடன் இந்த விவகாரங்களை பயன்படுத்தத் திட்டமிட்டார். Clearstream விவகாரம் பற்றிப் பேசுகையில், 2005ல் Lagardère Group நிர்வாகிகள் கூட்டத்தில் புகழ்பெற்ற விதத்தில் அவர் கூறினார்: "சுவர்களில் குருதிக் கறை இருக்கும். நான் அதிகாரத்திற்கு வந்தால், இவர்கள் அனைவரையும் கசாப்புக் கடைக்காரரின் கொழுக்கியை பயன்படுத்தித் தூக்கில் இடுவேன்." தன்னுடைய ஜனாதிபதி பதவிக்காலம் முடியும் நேரத்தில் இந்த ஊழல்கள் பற்றிய விசாரணைகளை தன்னுடைய நலனுக்கு ஏற்ப திரித்து முடித்துவிடலாம் என்றும் சார்க்கோசி நம்பினார். ஜனவரி 2009ல் அவர் அடுத்த ஆண்டில் இருந்து விசாரணை நீதிபதி (Investigating judge) பதவி அகற்றப்பட்டுவிடும் என்று அறிவித்தார். இந்த நீதிபதிகள்தான் ஊழல்கள் பற்றிய விசாரணையை நடத்தி வந்தனர். வில்ப்பனை இலக்கு வைத்து சார்க்கோசி செயல்படுத்திய அரசியல் சூழ்நிலையில், நீதித்துறை நெருக்கடியை அதிகரித்த அளவில் அதை எதிர்கொண்டது. பரோல் இல்லாமல் Pasqua விற்கு தண்டனை அளித்ததில் அது அரசாங்க வழக்குரைஞர் பரிந்துரைத்ததற்கும் அப்பால் சென்றது. சிராக் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததில் நீதித்துறை சார்க்கோசியின் பிரச்சாரத்தை அதன் தர்க்கரீதியான முடிவின் பக்கம் தள்ளியுள்ளது: அதாவது நடைமுறைக்குள் தீர்க்கப்பட வேண்டிய கணக்குகள் அனைத்தும் நீதிமன்றம் ஏறிவிட்டன. இந்தப் போராட்டம், சார்க்கோசி மற்றும் அவருக்கு முன்பு 1995 முதல் 2007 வரை பதவியில் இருந்த சிராக், இவர்களுடைய கொள்கை மாறுதல்களில் இருந்த சக்திவாய்ந்த ஏகாதிபத்திய நலன்களைத்தான் பிரதிபலிக்கிறது. 1990 களின் அரசியல்-நிதிய ஊழல்கள், வெளியுறவுக் கொள்கையில் மரபார்ந்த வகையில் பிரான்சின் கோலிஸ்டுகள், பகுதியளவிலான சுதந்திரத்தை அமெரிக்காவில் இருந்து தொடர்ந்ததில் வெளிவந்தன --குறிப்பாக ஒரு சுயாதீன பாதுகாப்புத் துறை தொழில்துறையை தக்கவைத்துக் கொண்டு, பிரெஞ்சு செல்வாக்கை நாட்டின் முன்னாள் ஆபிரிக்க காலனிகளில் வளர்த்தது தொடர்ந்தது. அங்கோலா, கொங்கோ மற்றும் பிற ஆபிரிக்க நாடுகளில் பிரான்ஸ் அமெரிக்க எதிப்புடைய எதிர்ப்பு இயக்கங்களை எதிர்கொண்ட ஆட்சிகளுக்கு உதவியது; மிக இழிவான முறையில் 1994ல் ஹூட்டு ஆட்சி அதிகாரம் ருவாண்டன் இனப்படுகொலையை செய்தது. 1999ல் பிரான்ஸ்-ஜேர்மனி பாதுகாப்பு நிறுவனமான EADS ஐ தோற்றுவித்தமை அமெரிக்க வான்வழி நலன்களுக்கு உட்குறிப்பான சவால் ஆகும்; இதையொட்டி பிரான்ஸ் ஜேர்மனியுடன் பலமுறை தொழில்துறை பூசல்களையும் கொண்டது.ஒரு ஜனாதிபதி என்னும் முறையில் சிராக் மரபார்ந்த கோலிச கொள்களைத் தொடர்ந்தவராகத்தான் பரவலாக கருதப்பட்டார். 2003ல் அவரும் அப்பொழுது வெளியுறவு மந்திரியாக இருந்த டு வில்ப்பனும் ஐ.நா.வில் ஈராக்கிற்கு எதிரான புஷ் நிர்வாகத்தின் போர் உந்துதலை எதிர்த்து, ஜேர்மனி, ரஷ்யாவுடன் சற்றே தளர்ந்த அமெரிக்க எதிர்ப்புக் கூட்டணியை உருவாக்கினார். பிரான்சை நேட்டோ கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைப்பதற்கான அழுத்தத்தையும் சிராக் எதிர்கொண்டார். பிரான்ஸ் 1966ல் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த சார்ல்ஸ் டு கோல் காலத்தில் நேட்டோவை விட்டு நீங்கியிருந்தது. தன்னுடைய பதவிக்காலத்தின் இறுதி ஆண்டுகளில் சிராக் பெருகிய முறையில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைச் சந்தித்தார். ஐரோப்பிய உடன்பாடு வாக்கெடுப்பு 2005ல் தோல்வி அடைந்தது மற்றும் சிராக்கின் சமூகநலச் செலவுக் குறைப்புக்களுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் முதலாளித்துவத்திற்குள்ளேயே சிராக்கின் ஆட்சிக்கு எதிர்ப்பைத் தூண்டின; அவை சார்க்கோசியுடன் பிணைந்து நின்றன. அதே நேரத்தில் உலக ஏகாதிபத்திய ஒழுங்கின் நெருக்கடி, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா சங்கடம் அடைந்ததில் உருவகாமாகி நின்றது, பிரெஞ்சு முதலாளித்துவத்தை அமெரிக்காவிற்கு நெருக்கத்தில் இட்டுச் சென்று தன்னுடைய சொந்த ஏகாதிபத்திய நலன்களையும் வெளிநாட்டில் காப்பதற்கு முயல வைத்தது. 2007ல் இவர் தேர்தலுக்கு பின்னர் சார்க்கோசி, பிரான்சின் அனைத்துலக அழைப்பு பற்றிய மரபார்ந்த கோலிச வனப்புரையைக் கைவிட்டு தேசிய இனவெறி முறையீட்டை நம்பி புதிய பாசிச வாக்குகளைப் பெறவும் வாஷிங்டன் ஆதரவு வெளியுறவுக் கொள்கையில் நிலைநிறுத்தவும் முற்பட்டுள்ளார். நேட்டோவுடன் பிரான்ஸ் மறுபடியும் இணைக்கப்பட வேண்டும் என்று கூறி, ஈராக் போருக்கு ஆதரவையும் கொடுத்து, ஆப்கானிஸ்தானிற்கும் பாரசீக வளைகுடாவிற்கும் கூடுதலான படைகளையும் அனுப்பியள்ளார். இதைத்தவிர அவர் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக செயல்பட்டு பரந்த சமூக நலக் குறைப்புக்களை தொழிலாளர்களுக்கு எதிராகவும் வெற்றிகரமாக சுமத்தியுள்ளார். இந்தப் பிரச்சினைகள் 2007 தேர்தல் பிரச்சாரத்தில் பெரும்பாலும் விவாதிக்கப்படவில்லை என்ற உண்மை, அதில் சட்டம் மற்றும் ஒழுங்கு என வெகுஜனத் திருப்தி விவாதம்தான் சார்க்கோசி மற்றும் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் செகோலீன் ரோயாலால் நடத்தப்பட்டன; இது பிரான்சின் ஜனநாயகம் எந்த அளவு ஆழ்ந்த இழிசரிவு பெற்றுள்ளது என்பதற்கு நிரூபணம் ஆகும். தொடர்ச்சியாக நடக்கும் சட்டப் பூசல்கள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கையும் ஆகும். இந்த கவனமாக மட்டுப்படுத்தப்பட்ட, அரசியல் நோக்கம் கொண்ட விசாரணைகளும், வழக்குகளும் முக்கியமாக தேர்தலுக்கு புறத்தே உள்ள ஆளும் வர்க்கத்தின் அரசியல் வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ளும் முயற்சிகளாகும்; அவற்றின் உண்மையான குற்றத்தன்மையின் முழுமை மறைக்கப்படுகிறது. எனவே அவை ஆழ்ந்த முறையில் ஜனநாயக எதிர்ப்பு, மற்றும் பிற்போக்குத்தன சமூக உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. முதலாளித்துவத்திற்குள் இருக்கும் கன்னைவாத யுத்தங்களோடு இந்த அரசியல் போராட்டம் நின்றுவிடுகிறது என்ற நிலையில், அவை தவிர்க்க முடியாமல் பிரான்சிலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தால் இலக்கு வைக்கப்படும் நாடுகளிலும் தொழிலாளர்களின் இழப்புக்களில் பிற்போக்குத்தன உடன்பாடுகள் என்ற போக்கிற்கு வழிவிடுகின்றன. |