World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP/ISSE meeting in Colombo

Seventy years since World War II: lessons and warnings

சோ.ச.க./ஐ.எஸ்.எஸ்.ஈ. கொழும்பில் நடத்தும் கூட்டம்

இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்து எழுபது ஆண்டுகள்: படிப்பினைகளும் எச்சரிக்கைகளும்

5 November 2009

Use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும், "இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்து எழுபது ஆண்டுகள்: படிப்பினைகளும் எச்சரிக்கைகளும்" என்ற தலைப்பில் நவம்பர் 10ம் திகதி கொழும்பில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளன.

இரண்டாம் உலக யுத்தமானது ஜனநாயகத்துக்கும் பாசிசத்துக்கும் இடையில் நடந்த போராட்டம் அல்ல, மாறாக, முதலாம் உலக யுத்தத்தில் வெடித்த அதே முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளின் உற்பத்தியே ஆகும். 1914 மற்றும் 1918ம் ஆண்டுகளுக்கு இடையில் நான்கு ஆண்டுகள் தொடர்ந்த படுகொலைகள், அடிநிலையில் உள்ள தேசிய பகைமைகளை அல்லது பொருளாதார இக்கட்டு நிலைமைகளில் எதையும் தீர்த்து வைக்காத நிலையில், அவை இரண்டு தசாப்தங்களின் பின்னர் இரண்டாவது பூகோள மோதல்களுக்கு வழிவகுத்தன. அது குறைந்த பட்சம் 70 மில்லியன் மக்களின் மரணம் உட்பட சொல்லனா காட்டுமிராண்டித்தனத்தை விளைவாக்கியது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரும் பராமரிக்கப்படும் முதலாளித்துவ அமைப்பின் சார்பில் மன்னிப்புக் கோருபவர்கள், இந்த மோதல்களுக்கான காரணங்கள் மீண்டும் தோன்றாது எனக் கூறுகின்றனர். ஆயினும், கடந்த 12 மாதங்களாக, பூகோள பொருளாதாரம் 75 ஆண்டுகளில் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், முதலாளித்துவத்தின் பாதுகாவலர்கள் கூட மூன்றாம் உலக யுத்தத்தின் ஆபத்துக்களைப் பற்றி சுட்டிக் காட்டுகின்றனர். ஏற்கனவே, 2001ல் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்துள்ளதோடு ஈரான் மீதான இராணுவத் தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றது.

சோ.ச.க./ஐ.எஸ்.எஸ்.ஈ. கொழும்பில் நடத்தும் கூட்டத்தில், இரண்டாம் உலக யுத்தத்தின் தீர்க்கமான வரலாற்று படிப்பினைகள் கலந்துரையாடப்படும். இந்த பயங்கரமான பேரழிவு தவிர்க்க முடியாததாகும். சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்டாலினிசமும் துரோகத்தனமான அரசியல் பாத்திரத்தை இட்டு நிரப்பியதுடன், யுத்தத்தையே ஒரே "தீர்வாக" வைத்திருக்கும் உலக முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் அதனது சொந்த புரட்சிகர மற்றும் முன்னேற்றமான தீர்வை அபிவிருத்தி செய்வதில் இருந்து அவை மீண்டும் மீண்டும் அதை தடுத்தன.

சோ.ச.க. பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான விஜே டயஸின் பிரதான அறிக்கையை அடுத்து, கேள்வி நேரமும் கலந்துரையாடலும் இடம்பெறும். யுத்தத்தையும் இராணுவவாதத்தையும் எதிர்க்கும் அனைவருக்கும் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் கூட்டத்துக்கு வருகை தருமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இடம்: பொது நூலக கேட்போர் கூடம், கொழும்பு 07

காலம்: நவம்பர் 10,&ஸீதீsஜீ; மாலை 4.00 மணி