World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Trial opens of former SS member Heinrich Boere

ஜேர்மனி: முன்னாள் SS உறுப்பினர் Heinrich Boere மீதான குற்றவழக்கு ஆரம்பிக்கின்றது

By Elisabeth Zimmermann
2 November 2009

Use this version to print | Send feedback

நிகழ்ச்சி நடந்து கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் SS (தேசிய சோசலிஸ்டுகளின் இராணுவ பிரிவு) உறுப்பினர் Heinrich Boere மீதான குற்ற வழக்கு விசாரணை தொடங்கியது. 88 வயதான இவர் SS கொலைப்பிரிவில் ஒருவராக இருந்தபோது ஹாலந்தில் மூன்று குடிமக்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

1949ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் ஒரு சிறப்பு நீதிமன்றம் Boere நீதிமன்றத்தில் இல்லாத நிலையிலும் குற்றவாளி எனக் கண்டறிந்து மரணதண்டனை விதித்தது. இந்த தண்டனை பின்பு ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆனால் ஜேர்மனிய அதிகாரிகள் பல மற்ற நாஜிக் குற்றவாளிகளைக் பாதுகாத்தது போல், அவரை அந்நாட்டிற்கு அனுப்ப மறுத்து, பல முறையும் Boere அவருடைய குற்றங்களுக்கு பதில் கூற நேராமல் பார்த்துக் கொள்ளும் வகையில் குறுக்கிட்டுத் தடுத்தனர்.

ஒரு ஜேர்மனிய நீதிமன்றத்தில் நாஜிக்கள் தொடர்பான கடைசி இரு வழக்குகளில் Boere விசாரணையும் ஒன்றாக இருக்கலாம். நவம்பர் 30ம் தேதி விசாரணை மூனிச்சில் 89 வயதான John Demjanjuk மீதான விசாரணை தொடங்குகிறது. இவர் Sobibor கொலை முகாமில் குறைந்தது 27,900 யூதர்களைக் கொன்றதில் உடந்தையாக இருந்ததற்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

SS உறுப்பினர் Petrus Besteman உடன் ஹாலந்து நாட்டில் பிரேடா என்னும் இடத்தில் மருந்து கலவையாளரான Fritz Bicknese என்பவரை 1944, ஜூலை 14ம் தேதி சுட்டுக் கொன்றதாக Boere மீது குற்றச் சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி, மற்றொரு உடந்தையான Hendrk Kromhout உடன் அவர் Teunis de Groot, Frans Willem Kusters என்னும் இரண்டு சாதாரண குடிமக்களை Voorchoten என்னுமிடத்தில் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

போயரும் அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் 15 பேர் கொண்ட டச்சு நாட்டு SS ன் சிறப்பு கமாண்டோ பிரிவின் உறுப்பினர்கள் ஆவர். நாஜிகளுக்கு எதிரான டச்சு எதிர்ப்புப் போராளிகளின் நடவடிக்கைகளுக்கு "பயங்கரவாத-எதிர்ப்பு" செயல்கள் மூலம் விடையிறுக்கும் பொறுப்பை கொண்டிருந்தனர். எதிர்ப்புப் போராளிகள் கொன்ற ஒவ்வொரு நபருக்கும் எதிர்ப்புடன் தொடர்புடைய மூன்று டச்சு நாட்டவர் கொலை செய்யப்பட வேண்டும். இந்த நடவடிக்கைக்கு "Silver Fir" என்று பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. இது செப்டம்பர் 1943 ல் இருந்து 1944 இறுதிக்குள் 50க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு நிகழ்விலும் பாதிப்பிற்குட்பட்டவர் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். Boere ரும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் அந்த நபர்களின் வீட்டுக்கதவு மணியை அடித்து பின் அவருடைய அடையாள ஆவணங்களை ஆராய்ந்து அதன் பின் சிறிதும் தயக்கமின்றி அவரை அங்கேயே கொன்றனர் அல்லது வேறு எங்காவது கொல்லப்படுவதற்கு அழைத்துச் சென்றுவிடுவர்.

Silver Fir நடவடிக்கை ஹாலந்தில் மூன்றாம் குடியரசின் (Reich) ஆணையாளர் Arthur SeyB-Inquart இன் கீழ் நாஜி ஆக்கிரமிப்பு நடந்தபோது நிகழ்ந்தது. அவர்தான் 100,000 க்கும் மேற்பட்ட யூதர்களை தீர்த்துக் கட்டிவிடும் முகாம்களுக்கு அனுப்புவதற்கு பொறுப்பு கொண்டிருந்ததோடு, ஜேர்மனிக்கும் மற்றும் ஜேர்மனி ஆக்கிரமித்திருந்த பிற பகுதிகளுக்கு 1.5 மில்லியன் டச்சுத் தொழிலாளர்களை கட்டாயப் பணி செய்வதற்கு அனுப்பியும் வைத்தார்.

பாதுகாப்பு ஆணையாளராக SS-மேலதிகாரியான (Lieutenant General) Hanns Albin Rauter இருந்தார். இவருக்குக் கீழே SS பிரிகேடியர் ஜெனரல் எரிக் நெளமான் பாதுகாப்பு போலீஸ் மற்றும் உளவுத்துறையின் தளபதியாகப் பணியாற்றினார். ஹாலந்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு அவர் ''தாக்குதல் பிரிவு B''(Einsastzgruppe B) எனப்பட்ட இழிந்த கிழக்கு முன்னணிக்குத் தலைமை தாங்கியிருந்தார். அதுதான் ஏராளமான யூதர்களையும் சிந்திகளையும் கொல்லுவதற்கு பொறுப்பாக இருந்தது.

செப்டம்பர் 1943ல் டச்சு மக்களின் எதிர்ப்பு பெருகி டச்சு நாஜிக் கட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என்று ஆக்கிரமிப்பு படைகளுடன் ஒத்துழைத்தவர்கள் மீது எதிர்ப்புப் போராளிகள் தங்கள் தாக்குதலைப் அதிகரித்தபோது, Rauter, Naumann இருவரும் "Feldmeijer Special Commando Unit" என்பதை அமைக்க உத்தரவிட்டனர்.

அந்த நேரத்தில் Heinrich Boere ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக SS உறுப்பினராக இருந்தார். ஒரு ஜேர்மனிய தாயர், டச்சு தந்தையின் மகனான இவர் செப்டம்பர் 1940ல் 19 வயதிலேயே தன்னார்வத்துடன் Waffen SS இல் சேர்ந்திருந்தார். சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போரில் அவர் காகசஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டார். அவர் தீவிர நோய்வாய்ப்பட்டதால் நெதர்லாந்திற்கு திரும்பினார். அங்கு "Feldmeijer Special Commando Unit" ல் சேர்க்கப்பட்டார்.

போருக்குப் பிறகு ஹாலந்தில் நாஜிக் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற உட்படுத்தப்பட்டனர். SS-உயர்தலைமை அதிகாரி Hans Albin Rauter நெதர்லாந்திலேயே வழக்கை எதிர்கொண்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அது நிறைவேற்றவும் பட்டது. உளவுத்துறை போலீசின் தளபதியான எரிக் நெளமன் தாக்குதல் பிரிவின் உறுப்பினர்களுடன் நூரன்பேர்க் விசாரணைகளில் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

சிறப்பு கமாண்டோ பிரிவின் தலைவரான Hendrik Feldmeijer ஒரு சிறப்பு டச்சு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இவருடன் Boere இன் உடந்தைகளான Jacobus Besteman, Hendrk Kromhout ஆகியோரும் தண்டனை பெற்றனர். பின்னர் இந்த மரண தண்டனைகளை பல ஆண்டுகால சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டன. Besteman 13 ஆண்டுகளும் Kromhout 10 ஆண்டுகளும் சிறையில் இருந்தனர்.

Henrich Boere முதலில் கைது செய்யப்பட்டார். ஆனால் 1947ல் இவர் ஜேர்மல் எல்லைக்கு அருகே Aachen நகருக்கு அருகே Eschweiler என்ற இடத்திற்கு தப்பியோட முடிந்தது. எல்லையில் இருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் இவர் ஒரு சுரங்கத் தொழிலாளியாக வேலை பார்த்தார்.

நீதிமன்றத்தில் இல்லாத நிலையிலும் நெதர்லாந்தில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும்கூட, இவர் ஒப்புமையில் Eschweiler இல் ஒப்புமையில் எவ்வித சிக்கலுமின்றி 30 ஆண்டுகள் வசித்தார். 1980ல் இவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஹாலந்து கோரியது. நாடுகடத்தப்படுமுன் இரு மாதங்கள் அவர் சிறையில் இருந்தார்.

ஆனால் கோலோனில் உள்ள பிராந்திய உயர்நீதி மன்றம் அவரை நாடுகடத்துவது ஏற்கப்பட முடியாதது என்று கூறிவிட்டது. மே 19, 1943ல் அடால்ப் ஹிட்லர் வெளியிட்டிருந்த ஒரு ஆணையின் அடிப்படையில் நீதிமன்றம் இத்தீர்ப்பைக் கொடுத்தது. அதன்படி "இனவழியில் வெளிநாட்டில் உள்ள ஜேர்மனியர்கள்" Waffen SSல் சேர்ந்தவுடன் ஜேர்மனிய நாட்டுரிமையை அவர்கள் பெற்றுவிடுவர் என்று உள்ளது. ஒரு ஜேர்மனியக் குடிமகனை வெளிநாட்டிற்கு விசாரணைக்கு அனுப்பப்படக்கூடாது.

ஏற்கனவே அந்த நேரத்தில் நாஜிக் குற்றங்களை விசாரித்த Dortmund மத்திய அலுவலகம் இந்த ஒப்படைக்கும் உரிமையைப் பயன்படுத்தி Boere மீது துவக்க விசாரணை ஒன்றைத் தொடங்கியிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் மத்திய அலுவலகத்தின் இயக்குனரும் மூத்த அரசாங்க வக்கீலாகவும் இருந்த Hermann Weissing "Operation Silver Fir" (அதாவது Feldmeijer கமாண்டோக்கள் நடத்திய கொலைகள்) அப்பொழுது நடைமுறையில் இருந்த சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டன என்றும், அவர்களுடைய "அமைப்பு, செயல்பட்ட முறை" ஆகியவை "அனுமதிக்கத்தக்கது, சட்டரீதியானது" என்ற முடிவிற்கு வந்தார்.

இதையொட்டி Eschweiler ïèKTM Boere அமைதியாக, தொந்திரவு ஏதும் இல்லாமல் இன்னும் இரு தசாப்தங்கள் வாழ முடிந்தது. அதில் கடைசி ஆண்டுகள் ஒரு ஓய்வு இல்லத்தில் கழிந்தன. இந்நேரம் முழுவதிலும் அவர் தன்னுடைய சரியான பெயரைப் பயன்படுத்தி தன்மீது சாட்டப்பட்ட குற்றங்கள் பற்றி எதையும் மறுத்ததில்லை.

2003ல் டச்சு நீதி அமைச்சரகம் 1949 ஆம்ஸ்டர்டாம் நீதிமன்றம் Boereக்கு எதிராக வழங்கிய தீர்ப்பு ஜேர்மனியில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டது. Aachen பிராந்திய நீதிமன்றம் இந்த வேண்டுகோளை 2007 பெப்ருவரியில் ஒப்புக் கொள்ள நான்கு ஆண்டுகள் பிடித்தன. மீண்டும் கோலோனில் உள்ள மாநில உயர்நீதிமன்றம் Boere தண்டனை அனுபவிப்பதைத் தடுத்தது. ஆம்ஸ்டர்டாமில் உரிய வக்கீல் Boereக்கு கொடுக்கப்படவில்லை என்றும், சட்ட நடவடிக்கை துவங்கிவிட்டதால் Boereக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் போயிற்று என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையில் நாஜிகளின் (Nazi) குற்றங்களை விசாரிக்கும் Dortmund மத்திய அலுவலகத்தின் இயக்குனர் பதவிக்கு புதிதாக ஒருவர் வந்தார். ஆகஸ்ட் 2007ல் புதிய இயக்குனரும் மூத்த அரசாங்க வக்கீல் Ulrich Maaß, Heinrich Boere வழக்கை புதிதாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். இதில் புதிதாக Tuin de Groot என்னும் Teunis de Groot ன் 76 வயது மகனும், மருந்து கலப்பவர் Fritz Bicknese உடைய இரு மகன்களும் புதிதாக பிராது கொடுப்பவர்களாகச் சேர்க்கப்பட்டு, போயருக்கு எதிரான வழக்கு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்று Tuin de Groot கோரமுடிந்தது.

இந்த மாதத் தொடக்கத்தில் தலைமை நீதிமன்றம் Boere இன் வக்கீல்களின் கூற்றான அவர்கள் கட்சிக்காரர் உடல்நலக் காரணத்தையொட்டி வழக்கைச் சந்திக்க முடியாது என்று கூறிய விண்ணப்பத்தை நிராகரித்த வகையில் வழக்கு தொடர பச்சை விளக்கு காட்டியது.

ஆனால் வழக்கு விசாரணையின் முதல்நாளில் குற்றச்சாட்டு படிக்கப்படுவதற்கு முன்பே Boereஇன் வக்கீல் மூத்த அரசாங்க வக்கீல் Maaß இன் ஒருதலைப்பட்ச நிலைப்பாட்டை சவால் விடுத்து ஒரு விண்ணப்பத்தை அளித்தார். செய்தி ஊடகத்திற்கு அவர் கொடுத்த கருத்துக்களை வழக்கை முன்கூட்டி முடிவிற்கு வருவது போல் உள்ளன என்றும் இதையொட்டி கட்சிக்காரருக்கு நியாயமான விசாரணை நடத்த வாய்ப்பில்லை என்றும் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஆலோசனைகளுக்காக நீதிமன்றம் நடவடிக்கையை ஒத்தி வைத்து பின்னர் அடுத்த வாரம் வரை விசாரணையை ஒத்திவைக்க முடிவெடுத்தது. தன்னுடைய தகப்பனார் கொலையினால் குடும்பத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான ஒரு சொந்த அறிக்கையை அளிக்க நீதிமன்றத்திற்குப் பயணித்திருந்த Tuin de Groot இற்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

இந்த வழக்கு ஒரு தீர்ப்புக் கொடுக்கப்படும் வரை நடந்தாலும், Boere இன் முதிர்ந்த வயது அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டாம் என்று செய்யக்கூடும். ஆயினும்கூட Tuin de Groot உடைய வக்கீல் Detlef Hartmann, Spiegel Online இடம் கூறினார்: "நாங்கள் இறுதியாக ஒரு ஜேர்மனிய நீதிமன்றம் "இது ஒரு கொலை" என்று தீர்ப்புக் கூற விரும்புகிறோம்." அவருடைய கட்சிக்காரர் தன்னுடைய தந்தையை "மிக அதிகம்" நேசித்து மதித்ததாகவும் அவர் கூறினார்; 1944ல் தந்தையாரை கொன்ற தோட்டாக்கள் இன்னும் அவரிடம் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் கோருவது தெளிவுபடுத்தல்தான். எனவே விசாரணை "காகசஸ் பிராந்தியம் உட்பட போரில் Boere என்ன செய்தார் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்."