World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Workers' wages to fall further, International Labour Organization warns

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு தொழிலாளர்களின் ஊதியம் இன்னும் சரியும் என்று எச்சரிக்கிறது

By Barry Grey
4 November 2009

Back to screen version

உலகப் பொருளாதாரத்தில் மீட்பு வந்துள்ளது என்று அரசாங்கங்கள் அனைத்தும் கூறியபோதிலும், 2008ல் தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தில் உலக வளர்ச்சி தீவிரமாகச் சரிவுற்றது, இன்னும் அதிகமாக 2009ல் சரிவுறும் என்று செவ்வாயன்று, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), எச்சரித்துள்ளது.

"2009 இன்றுவரை உலக ஊதிய அறிக்கை" என்பதை அறிவித்த ஐ.நா. இணைப்புடைய அமைப்பு, "2009ல் ஊதியங்களைப் பற்றிய நிலை இன்னும் மோசமாகத்தான் இருக்கும்" என்று கூறியுள்ளது. தகவல்கள் கிடைத்துள்ள 35 நாடுகளில் பாதிக்கும் மேலானவற்றில், 2009 முதல் காலாண்டு காலத்தில், 2008 சராசரியுடன் ஒப்பிடும்போது, உண்மையான மாதாந்திர ஊதியங்கள் சரிந்தன என்றும் பல இடங்களில் இது வேலைநேரக் குறைப்புக்களால் நேர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கிறது.

ILO செய்தி ஊடக அறிக்கை கூறுவதாவது: "தவகல்கள் கிடைத்துள்ள 53 நாடுகளின் மாதிரியில் இருந்து, சராசரி நாட்டின் உண்மை சராசரி ஊதியங்கள் 2007ல் 4.3 சதவிகிதத்தில் இருந்து 2008ல் 1.4 சதவிகிதம் குறைந்துவிட்டது." புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ள 10 முன்னணியில் இருக்கும் G20 பொருளாதாரங்களில், சராசரி நாட்டின் உண்மையான ஊதிய வளர்ச்சி 2007ல் 1.0 சதவிகிதம் என்பதில் இருந்து 2008ல் -0.2 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது" என்றும் செய்தி ஊடகக் குறிப்பு கூறுகிறது. வேறுவிதமாகக்கூறினால், இந்த நாடுகளில் உண்மை ஊதியங்கள் 2008ல் குறைந்துவிட்டன என்பது தெளிவு."

நிதிய நெருக்கடி வெடிப்பிற்கு பின் ஊதியங்களில் சரிவு என்பது ஒரு தசாப்தமாக ஊதியத் தேக்கம் சர்வதேச அளவில் இருந்ததை தொடர்ந்து வந்துள்ளது என்பதையும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தொழிலாளர்கள் வருமானங்களில் சரிவு என்பது குறிப்பாக அமெரிக்காவில் தீவிரமாகியுள்ளது. உற்பத்தித்துறை தொழிலாளர்களின் சராசரி வாராந்திர வருமானம் செப்டம்பர் மாதத்தில் 0.7 சதவிகிதம்தான் உயர்ந்தது; ஆனால் வாராந்திர பணிநேரமோ மிகக் குறைந்த அளவிற்கு 33 மணி நேரமாகக் குறைந்துவிட்டது. இத்தகைய தவகல்கள் 1964ல் இருந்து சேகரிக்கப்பட்ட காலத்தில் இருந்து இது மிகக் குறைந்து ஆண்டுமயமாக்கப்பட்ட வாரந்திர வருமான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது--கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலத்திற்கு முன்னால்.

டிசம்பர் 2008ல் சமீபத்திய உச்ச அளவை அடைந்தபின், உண்மையான சராசரி வாராந்திர வருமானங்கள் 1.9 சதவிகிதம் குறைந்துவிட்டன என்று அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் துறை அமைப்பு கூறியுள்ளது.

ஊதியங்கள் சரிவிற்கான வேர்களைப் பற்றிய பகுப்பாய்வை மேற்கொள்வதை ILO தவிர்த்துள்ளது; உலக முதலாளித்துவ முறிவை ஒட்டியும், உலக ஆளும் வர்க்கங்களும் அவற்றின் அரசாங்கங்கள் நெருக்கடியை எதிர்கொண்ட விதத்தில் ஏற்ற கொள்கைகளை பற்றியும் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த மந்தநிலையைப் பயன்படுத்தி முன்னோடியில்லாத வகையில் செல்வத்தை தொழிலாள வர்க்கத்தில் இருந்து நிதிய உயரடுக்கிற்கு மறுபங்கீடு செய்யும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; இதற்கு ஓரளவு டிரில்லியன் கணக்கான டாலர்கள் உலகின் வங்கியாளர்களுக்கு பிணை எடுப்பிற்கு கொடுக்கப்பட்டதும் காரணம் ஆகும். அதே நேரத்தில் வெகுஜன வேலையின்மை அரசாங்கங்களால் ஊக்குவிக்கப்படுகின்றன; அமெரிக்காவில் உள்ள ஒபாமா நிர்வாகம் உட்பட இதைத்தான் செய்கிறது. இது தொழிலாளர்களை குறைந்த ஊதியம், குறைந்த பணிநேரம், விரைவான தகர்ப்புக்கள் ஆகியவற்றை ஒப்புக் கொள்ள மிரட்டும் உபாயம் ஆகும்.

ILO ஊதியங்கள் பற்றி அதன் அறிக்கையை வெளியிட்டபோதே, வெள்ளை மாளிகை வோல் ஸ்ட்ரீட்டிற்கு வேலைகளை தோற்றுவிக்க கணிசமான அரசாங்கச் செலவுகள் திட்டம் ஏதும் இல்லை என்பதற்கு உத்தரவாதமும், அதற்கு பதிலாக உயரும் வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகளைக் கட்டுப்படுத்த நிதிய கடும் சிக்கனப் பிரச்சாரத்தை துவக்க இருப்பதாகவும் அதற்கான சமூகச் செலவினங்களை பெரிதும் குறைக்கும் முயற்சிகள் முடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

அமெரிக்க தொழிலாளர் துறை பரந்த முறையில் அக்டோபர் மாதத்திற்கான வேலையின்மை அறிக்கையை 10 சதவிகிதம் அல்லது அதற்குக் கூடுதலாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, வெள்ளியன்று அது வெளியிட்ட வேலைத் தகவல் தொகுப்பு வேலையில்லாத தொழிலாளர்களுக்கு நேரடி வேலைகொடுக்கும் திட்டம் இல்லை என்று பகிரங்கமாகக் கூறியிருப்பதுடன், பெருவணிகத்தின் இலாப நலன்கள், முதலாளித்துவ சந்தையைப் பிணைக்கும் வேலைகள் நெருக்கடியை தீர்க்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது.

ஒபாமாவின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் தலைவரான Christina Romer கடந்த செவ்வாயன்று கொடுத்த உரை ஒன்றில் நிர்வாகம் திட்டமிட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு மறுசீரமைப்பை வணிகம் மற்றும் அரசாங்கத்திற்கு செலவுகளைக் குறைப்பதில் முக்கிய நடவடிக்கை என்றார். ஞாயிறன்று நிதி மந்திரி டிமோதி கீத்நர் NBC யின் "Meet the Press" நிகழ்ச்சியில் பேட்டி கண்டபோது, "ஜனாதிபதி இப்பற்றாக்குறைகளைப் பெரிதும் குறைப்பதில் உறுதியாக உள்ளார்" என்றார்.

வெள்ளை மாளிகையின் நிர்வாகம், வரவு-செலவு திட்ட அலுவலகத்தின் இயக்குனர் Peter Orszag செவ்வாயன்று நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் "காப்பாற்றல், மீட்பு, பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். நீடித்த வெகுஜன வேலையின்மை, பல ஆண்டுகள் அல்லது தசாப்தங்களுக்கு கூட குறைவூதிய நிலை இருக்கும் என்ற சோகம் நிரம்பிய கடுமையான சித்திரத்தை இவர் தீட்டினார்.

அடுத்த கூட்டாட்சி பட்ஜேட், பெப்ருவரி 2010ல் அளிக்கப்பட உள்ளது, சமூகநலத் திட்ட செலவுகளில் குறைப்புக்களை கோடிட்டுக்காட்டும் என்றும், இவை ஒபாமாவின் முதல்பதவிகால முடிவிற்குள் --ஜனவரி 2013க்குள்-- வரக்கூடிய வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை பாதியாக செய்துவிடும் என்ற உறுதியைத்தான் இவர் விடையிறுப்பாகக் கொடுத்தார். "பொருளாதாரம் மீட்பு அடையும்போது, நாம் ஒன்றாக, ஒரு நாடு என்ற முறையில், இணைந்து கடினமான முடிவுகளை எடுத்து நாட்டை மீண்டும் உறுதியான நிதியத் தளத்திற்கு கொண்டுவர முயலவேண்டும்" என்றார்.

ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை Orszag வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகள், தேசியக் கடன்களை குறைப்பதில் ஒரு பெரிய நடவடிக்கை என்று புகழ்ந்தார். உயரும் சுகாதாரக் காப்பு செலவுகள் "நம்முடைய நீண்ட கால நிதிய வருங்காலத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்" என்று அவர் குறிப்பிட்டார்; ஆனால் வங்கிப் பிணை எடுப்புக்கள், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களால் இராணுவப் பிரிவுச் செலவுகள் உயர்ந்தவை இவற்றின் நிதிய தாக்கத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. சுகாதார பாதுகாப்புச் சட்டவரைவு சட்டமாக இயற்றப்படும்போது அது "அடுத்த தசாப்தத்தில் பற்றாக்குறையைச் சேர்க்காது, அதன் பின் பற்றாக்குறைகளைக் குறைக்கும்" என்று கூறிய ஒபாமாவின் உறுதிமொழியை இவர் வலியுறுத்தினார்.

"தேவைகளுக்கு பணம் கொடுக்கவும்" என்ற சட்டத்தை இயற்ற விரும்பும் நிர்வாகத்தின் உந்துதலுக்கு இவர் ஆதரவு கொடுத்தார்; அதன்படி எந்தக் கூடுதலான கூட்டாட்சி செலவு அல்லது வரிக் குறைப்புக்களால் ஏற்படும் வருமானக் குறைவுகள் வரவு-செலவு திட்டத்தில் மற்ற இடங்களில் செலவுக் குறைப்புக்கள், வரி அதிகரிப்புக்களால் ஈடு செய்யப்படும் என்று உள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறைகளைக் குறைப்பதற்கு தேவையான பெரும் கடும் சிக்கன நடவடிக்கைகளின் முதல் கட்டம்தான்--அவை அடுத்த தசாப்தத்தில் $9 டிரில்லியன் மொத்தமாக இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது; அவை "ஏற்கத்தக்க" மட்டங்களுக்கு கொண்டுவரப்படும். "எனவேதான் ஜனாதிபதியும் அவருடைய பொருளாதாரக் குழுவும் 2011 க்கான வரவு-செலவு திட்டத்தை, பெப்ருவரியில் வெளியிட இருப்பதற்கான தயாரிப்பு பற்றி கடுமையாக பல விருப்புரிமைகளையும் பரிசீலிக்கின்றனர்" என்று அவர் கூறினார்.

சமூக நலத்திட்டங்களில் ஆழ்ந்த குறைப்புக்களை அவர் உறுதியளிக்கையில் Orszag அடுத்த தலைமுறையின் மீது தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு, அதுவும் இப்பொழுது தொழிலாளர் சந்தையில் நுழைய இருப்பவர்கள்மீது கடுமையாக இருக்கும் என்பதை ஒப்புக் கொண்டார். "முன்பு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் வயதிற்கு வந்தபின் குறைந்த சராசரி ஊதியங்களைத்தான் கொள்ளுவர்--அவர்களுடைய பெற்றோர்கள் பல தசாப்தங்களும் அத்தகைய பின்னடைவுகளை சந்தித்திருக்காத அளவு குறைந்த சராசரி ஊதியங்களைத்தான் அவர்கள் பெறுவர்" என்று அவர் குறிப்பிட்டார்.

"உயர்ந்த வேலையின்மைக் காலத்தில் படிப்பை முடிப்பது என்பது மிகக் குறைந்த ஆரம்ப கட்ட ஊதியங்களுக்குத்தான் வழிவகுக்கும்--வேலையின்மையில் ஒவ்வொரு சதவிகிதப் புள்ளிக்கும் சராசரியாக 6 சதவிகித ஊதியக் குறைப்பு இருக்கும்" என்று ஒரு சமீபத்திய ஆய்வு கண்டுபிடித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். பின் அவர் தொடர்ந்து கூறியதாவது: "இந்த எதிர்மறை ஊதிய விளைவு சிறிது சிறிதாகத்தான் குறையும்: ஐந்து ஆண்டுகளில் 5 சதவிகிதம், 10 ஆண்டுகளுக்கு பின்னர் 4 சதவிகிதம், பட்டப்படிப்பு முடிந்த 15 ஆண்டுகளுக்கு பின்னர் 3 சதவிகிதம் என குறையும்."

வேலையின்மை விகிதத்தில் ஒவ்வொரு சதவிகிதப் புள்ளி உயர்விற்கும் ஊதியச் சரிவு சதவிகிதம் இருக்கும் என்பதை வலியுறுத்திய அவர், நாட்டின் பெரும்பாலான மூத்த குடிமக்கள் பல்கலைக்கழகத்தில் நுழைந்தபோது வேலையின்மை விகிதம் இன்று இருப்பதைவிட 5 சதவிகிதப் புள்ளிகள் குறைவாக இருந்தது என்பதை அவர் வலியுறுத்தினார். "நீங்களே கணக்குப் போட்டுப் பார்க்கலாம்" என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் கணக்கு இப்பொழுது ஊதியங்களில் 30 சதவிகிதக் குறைப்பையும், 15 ஆண்டுகளுக்கு பின்னர் 15 சதவிகிதக் குறைப்பு என்பதையும்தான் காட்டுகிறது.

இந்தப் போக்கை மாற்றுவதற்கு கொள்கைகளை இயற்றுவதில் ஒபாமா நிர்வாகத்திற்கு விருப்பம் இல்லை என்பது திங்களன்று வாஷிங்டனில் நடைபெற்ற Economic Recovery Advisory Board ன் கூட்டத்தில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. கூட்டத்தின் ஒலிக்குறிப்பை காட்டும் விதத்தில் ஒபாமா, "அரசாங்கம் நம்முடைய கடன் தரங்கள் குறைக்கப்படுதல் பற்றி தீவிரமாக உள்ளது; உற்பத்திப் பிரிவில் "ஏற்றுமதி உந்துதலுக்கான" அழைப்பையும் அவர் கொடுத்தார்.

அரசாங்கக் கொள்கைகள் தனியார் பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்கு தாழ்த்தப்பட வேண்டும் என்ற தன்னுடைய நிலைப்பாட்டை ஒபாமா வலியுறுத்தினார். "வணிக முதலீட்டிற்கு பதிலாக அரசாங்கச் செலவு மூலம் மாற்றத்தை கொண்டுவர நாங்கள் முயலப்போவது இல்லை" என்றார் அவர். "மிக முக்கியமான விஷயம், நாம் செய்யக்கூடியது, வணிக முதலீடு ஊக்கம் பெறுவதற்கான சூழலை உருவாக்குவதுதான்" என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

பெருநிறுவன நிர்வாகிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இக்குழு இதை முழுமனத்துடன் ஏற்றது; மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் அமெரிக்க ஏற்றுமதிகள் சதவிகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

இதை எப்படிச் சாதிப்பது? அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியங்களை நிரந்தரமாகக் குறைப்பது, தொழில் உற்பத்தித் திறனை அதிகரிப்பது என்பதின் மூலம் துல்லியமாக அடைவதுதான் வழி. வேறுவிதமாகக் கூறினால் 1930 களுக்குப் பின்னர் காணப்படாத அளவிற்கு தொழிலாள வர்க்கத்தை சுரண்டும் விகிதத்தை உயர்த்துதல் மூலமாக அடையப்படும்.

அமெரிக்க பெருநிறுவன உயரடுக்கு மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் "மீட்பு" மூலோபாய அடிப்படை அமெரிக்காவை ஒரு குறைவூதிய தொழிலாளர் மையமாக உலகச் சந்தை ஏற்றுமதிக்கு செய்துவிடுதல், அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியங்களையும் வாழ்க்கைத் தரங்களையும் சீனா, இந்தியா மற்றும் ஏனைய "வளர்ச்சியடையும்" நாடுகளில் உள்ள பெரிதும் சுரண்டப்படும் தொழிலாளர்களின் தரத்திற்கு கொண்டுவர வேணடும் என்பதாக உள்ளது.

ஒபாமாவின் பொருளாதார மீட்பு ஆலோசனைக்குழுவின் தலைவர் போல் வோல்க்கர் என்பது ஒன்றும் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. அவர் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வர்க்கப் போர் நடத்துவதில் முதிர்ந்த அனுபவம் உடையவர்.

1979 ல் ஜிம்மி கார்ட்டரால் பெடரல் ரிசர்வின் தலைவராக நியமனம் பெற்றபோது வோல்க்கர் இரட்டை இலக்க பணவீக்கத்தை சமாளிப்பதற்கு, வட்டி விகிதங்களை 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தி, வேண்டுமென்றே ஆழ்ந்த மந்தநிலையை விரைவுபடுத்தினார். தொழிலாள வர்க்கத்தின்மீது கடுமையான ஊதிய இழப்புக்களை சுமத்த ஆலைகள் மூடல்கள், பரந்தளவு பணிமுடக்கங்கள் மற்றும் அரசாங்க ஆதரவு பெற்ற தொழிற்சங்க உடைப்புக்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் வேலைநிறுத்தப் போராட்டங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டது ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

ரோனால்ட் ரேகனின் கீழ் பெடரல் ரிசேர்வின் தலைவர் என்ற முறையில் வோல்க்கர் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள்மீது இருந்த கட்டுப்பாடுகளை முறையாக அகற்றுவதை மேற்பார்வையிட்டார்; அதேபோல் சமூக சமத்துவமின்மையின் பரந்த வளர்ச்சியையும் ஊக்குவித்தார். இந்த வழிவகை ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் நிர்வாகங்களால் தொடரப்படுகின்றன; ஒபாமாவின் கீழ் இப்பொழுது தீவிரமாக்கப்பட்டுள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved