WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
Paris CGT jobs protest dominated by nationalist
politics
பாரிஸ் CGT
இன் வேலை ஊர்வலம் தேசிய அரசியலின் ஆதிக்கத்திற்கு
உட்பட்டுள்ளது
By Antoine Lerougetel
26 October 2009
Use this
version to print | Send
feedback
கடந்த வியாழனன்று பிரான்ஸ் முழுவதிலும் இருந்து 20,000 தொழில்துறை
தொழிலாளர்கள் ஆலை மூடல்கள், பணிநீக்கங்கள் என்று அவர்கள் துறையில் அலையென நடப்பவற்றை எதிர்த்து
தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பான CGT
அழைப்பின் பேரில் எதிர்ப்பில் கலந்து கொள்ள பாரிசில் கூடினர்.
"வேலைகள் பாதுகாப்பு, தொழில்துறை வளர்ச்சிக்கான தேசிய ஆர்ப்பாட்டம்"
என்று அழைக்கப்பட்டிருந்த இந்த எதிர்ப்பில் பிரான்சின் மிகப் பெரிய தொழிற்சங்கமான
CGT யின் வலதுசாரி
தேசிய அரசியல்தான் மேலாதிக்கம் பெற்றிருந்தது; இந்த அமைப்பு
PCF எனப்படும்
ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானது ஆகும்.
"வேலைகளைக் காப்பதற்கு", "தொடர்ச்சியான தொழில்துறை வளர்ச்சிக்கு" என்று பதாகைகள் முழங்கின.
தொழிலாளர்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் உலகம் முழுவதும்
தொழிலாளர்கள் குறைக்கப்படுவதில் சம்பந்தப்பட்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் என்று தனியார் துறையில் இருக்கும்
ஆலைகளில் இருந்து வந்தனர். கான்டினென்டல் டயர்ஸ், ஆர்ஸிலர்-மிட்டல், மிஷ்லன், டோட்டல், அல்கடெல்-லூசென்ட்,
காக்னக் கண்ணாடி தயாரிப்பாளர்கள், ஆர்செனல் சேர்பர்க் ஆகிய நிறுவனங்களை சார்ந்திருந்தனர். பொதுத் துறையில்
இருந்து தேசிய இரயில் நிறுவனமான SNCF
ல் இருந்து தொழிலாளர்கள் வந்திருந்தனர்; அங்கு மறு கட்டமைப்பை காரணம் காட்டி 6,000 தொழிலாளர்கள்
வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்; இதைத்தவிர மருத்துவமனை தொழிலாளர்களும் இருந்தனர்; இவர்கள்
அனைவரும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தனியார்மயமாக்கப்படும் கொள்கையை எதிர்கொண்டிருப்பவர்கள்.
தற்போதைய நெருக்கடியினால் விளைந்துள்ள சமூகப் பேரழிவில் சிக்கியுள்ள உலகெங்கிலும்
இருக்கும் தங்கள் சக தொழிலாள வர்க்கத்தினருடன் பிரெஞ்சு தொழிலாளர்களை பிணைக்கும் விதத்தில் எந்த முழக்க
அட்டைகளையும் பதாகைகளையும் WSWS
நிருபர் குழு காணவில்லை.
ஆனால் நெருக்கடிக்கு தாங்கள் விலைகொடுப்பதால் ஏற்பட்டுள்ள கசப்பை வெளிப்படுத்தும்
விதத்தில் முழக்கங்கள் காணப்பட்டன; "சார்க்கோசி, நீ தற்கொலை செய்து கொள்" (France
Telecom, Renault இன்னும் மற்ற இடங்களில் பணி
தொடர்புடைய தற்கொலைகள் அலையென இருப்பதைக் குறிக்கும் விதத்தில்), "ஆர்செலர் இலாபம் காண்கிறது,
ஆனால் எஃகுத் தொழிலாளர்களுக்கு அதில் பங்கு ஏதும் இல்லை" போன்றவை இருந்தன.
அதே நேரத்தில் தேசிய சார்புடைய முழக்கங்கள் நிறைந்திருந்தன: "வேலையிடங்கள்
மாற்றப்படல் வேலைகளையும் வருங்கால இளைஞர்களின் வாழ்வையும் கொல்கிறது" (Continental),
"குறைவூதிய நாடுகளில் புதிய ஆலைகள், ஆலைகள் கொண்டு செல்லப்படுவதற்கு
எதிர்ப்பு" (CGT),
"நம்முடைய பகுதிகளில் வேலைக் காப்பிற்கான தொழில்துறை கொள்கை" போன்றவை இருந்தன. "Nord-Pas-de-Calais"
(பிரான்சின் வடக்குப் பகுதி) தொழிற்துறை வளர்ச்சிக்காகவும்
சேர்த்து" போன்றவட்டார உணர்விற்கான அழைப்பு முழக்கங்களும் ஊர்வலத்தில் ஒலித்தன.
அடிப்படை வர்க்க ஒத்துழைப்பு மற்றும் ஆர்பாட்டத்தை அமைத்தவர்களின் தேசிய
அரசியலின் மிக நாணமற்ற, தெளிவான வெளிப்பாடுகள்
CGT க்குள் இருக்கும் கடினப் போக்குடைய ஸ்ராலினிச இஞ்சிக்
குழுக்கள், Front Syndical de Classe (வர்க்க
தொழிற்சங்க முன்னணி) ஆகியவற்றிடம் இருந்து வந்தன; இவை "வெகுஜன
CGT வர்க்கத்திற்காக"
போராடுவதாகக் கூறிக்கொண்டன. குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு நாடுகளில் ஆலைகள் மாற்றப்படுவதற்கான
எதிர்பபை நியாயப்படுத்தும் வகையில் அங்கெல்லாம் "மிகப் பெரிய சுரண்டலுக்கு" தொழிலாளர்கள் உட்படுத்தப்படுகின்றனர்"
என்று கூறி, "எனவே, அதையொட்டி தேசிய உற்பத்தியைக் காப்பது ஒன்றும் தேசியவாதம் அல்ல; இது முதலாளித்துவ
சுரண்டலுக்கு எதிரான வர்க்க நிலைப்பாடு ஆகும்" என்று உறுதியாக வலியுறுத்தப்பட்டது.
ஆனால் "பெரிதும் சுரண்டப்படும்" தொழிலாளர்களுடன் ஐக்கியம் வேண்டும் என்று
துண்டுப்பிரசுரம் கூறவில்லை; அவர்களுடைய வேலைகள் தியாகம் செய்யப்பட வேண்டும் என்று குழு விரும்புகிறது. இதன்
மிக முக்கியமான முழக்கம் 1980 களில் PCF
கொண்டிருந்த நிலைப்பாட்டை மீண்டும் கூறுவதுதான்: "வேலைகள் பாதுகாக்கப்படுவதற்கும், பிரான்சில் உற்பத்தி
தொடர்வதற்கும்."
இந்த அளவிற்கு அப்பட்டமான தேசியவெறி முறையீடு செய்யவில்லை என்றாலும், மத்தியதர
வர்க்க "இடது" Lutte Ouvrière, Nouveau
Parti Anticapitaliste (NPA) இரண்டும் அதை மூடிமறைக்கும்
வகையில், CGT
இன் முன்முயற்சி, "குறைந்தபட்சம் தேசிய மட்டத்திலேனும் முதல் நடவடிக்கை" என்று அறிவித்துள்ளன (NPA,
அக்டோபர் 22), அல்லது "CGT
அக்டோபர் 22 கொடுத்துள்ள நடவடிக்கைகள் தினத்திற்கு
விடுத்துள்ள அழைப்பு அச்சறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு பிற்போக்குத்தன செயல் அல்ல. அந்த திசையில் ஒரு தப்படி
ஆகும்." (Lutte Ouvrière editorial by
Arlette Laguiller October 22)
இந்த "இடதுகள்" ஒரு சோசலிச அல்லது சர்வதேச முன்னோக்கை ஐரோப்பாவிலும்
உலகம் முழுவதும் வெகுஜன வேலையின்மை மற்றும் வாழ்க்கைத் தர அழிப்புக்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் தங்கள்
சக ஊழியர்களுடன் பிரெஞ்சு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு கூட்டு போராட்டம் என்று முன்வைக்கவில்லை.
ஐரோப்பிய வேலையின்மை விகிதம் 10 சதவிகிதத்தில் இருந்து, இன்னும் அதிகரிக்க இருக்கையில்,
OECD ன் ஆண்டறிக்கை,
செப்டம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது, "வேலையின்மையை பொறுத்தவரையில் மந்த நிலைமையின் மோசமான
தன்மை இன்னும் நமக்கு முன்புதான் உள்ளது, குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில்" என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த உண்மைகளைப் பற்றியோ அல்லது சில ஐரோப்பிய நாடுகளில் மெலிந்த முறையில்
நடக்கும் வளர்ச்சிப் போக்கை பற்றியோ, குறிப்பாகக் கார்த்தொழிலில் ஏற்பட்டுள்ளது பற்றி
துண்டுப்பிரசுரங்களோ அரசியல் அறிக்கைகளோ குறிப்பிடவில்லை; மகத்தான அளவில் வரிசெலுத்தபவர்களின்
ரொக்கம் "மட்டமான சொத்துக்கு ரொக்கம்" அல்லது தகர்க்கும் திட்டங்களுக்கு கொடுப்பது வேலையின்மையை
நிறுத்திவிடாது என்பது பற்றிய குறிப்பும் இல்லை. இத்திட்டங்கள் பல நாடுகளிலும் முடிக்கப்பட்டுவிட்டன. அவற்றின்
பாதிப்பு பிரான்சில் டிசம்பர் மாத இறுதியில்தான் முடிவிற்கு வரும்.
அரசாங்கக் கடன் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது யூரோவின் உறுதித்தன்மையை
அச்சுறுத்துவதுடன் இக்கடனை மீட்பதற்கு ஊதியங்கள், சமூக உரிமைகளில் மகத்தான வெட்டுக்கள் வேண்டும் என்ற
அழுத்தங்களும் அதிகரித்துள்ளது. பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகளில் உள்ள ஒரே கருத்து வேறுபாடு
எப்பொழுது, எந்த வேகத்தில் இந்த வெட்டுக்களை திணிக்க வேண்டும் என்பதுதான். ஹாலந்து தான் 20 சதவிகித
சமூகநலச் செலவுகளை குறைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
CGT இன் தலைவரான
Bernard Thibault
ஐக் குறைகூறும் விதத்தில் எந்த துண்டுப் பிரசுரங்களையும், முழுக்கங்களையும்
WSWS நிருபர்கள்
காணவில்லை; அவரோ இடைவிடாமல் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மே 2007ல் தேர்ந்தெடுக்கப்பட்டதில்
இருந்து அவருடன் தொடர்பு கொண்டு அவருடைய தற்போதைய கடும் சிக்கனக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு
நெருக்கமாகவும் ஒத்துழைக்கிறார். சார்க்கோசியுடன் முதலாளிகள், அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்
ஒரு முத்தரப்பு விவாதம் நடத்தி உலக அரங்கில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் போட்டியிடுவதற்கு உகந்த வகையில் ஒரு
தொழில்துறை கொள்கையை விரிவாக்குவதற்கான அவருடைய கூட்டு முயற்சி பற்றியும் எந்தக் கண்டனமும் இல்லை.
(பிரான்ஸ்:
CGT
யின் தொழில்துறை கொள்கை என்பதன் பொருள் தொழிலாளர்கள் நெருக்கடிக்கான விலையைக் கொடுப்பார்கள்
என்பதாகும்).
வேலை நீக்கங்கள், ஆலை முடல்கள் என்று ஆலைகளில் நடக்கும்போது அங்கு இருக்கும்
தொழிலாளர்களை காண மறுப்பதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள தீபோ, தங்கள் வேலைப் பாதுகாப்பிற்காக
மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறு கான்டினன்டல் தொழிலாளர்களுக்கு ஆதரவு
கொடுக்காததற்காகவும் சீற்றத்தை எழுப்பியுள்ளனர்; இவர்
Place Denfert-Rochereau
வில் தொழிலாளர்கள் புறப்படுமுன் ஒரு சில நிமிஷங்கள் பேச முற்பட்டார்.
"நிலைமை மிகத் தீவிரமாக உள்ளது. இக்கூட்டத்திரட்டு ஒரு எச்சரிக்கை மணி
ஒலிப்பதற்கு ஒப்பாக இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது" என்று அவர் உபதேசித்தார். "20,000
வேலைகள் தொழில்துறையில் ஒவ்வொரு மாதமும் தகர்க்கப்படுகின்றன; இன்னும் 300,000 வேலைகள் அபாயத்தில்
உள்ளன" என்று சேர்த்துக் கொண்டார்.
இவருக்கு இகழ்வான எதிரொலியாக ஏளனச் சொற்களும் விசில் ஒலிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம்
இருந்து வந்தது; "இராஜிநாமா செய்" என்று அவர்கள் உரத்துக் கூவினர்.
Nexus ல் இருந்து வந்த
தொழிலாளி Francis Thomann,
செப்புத் தகடுகள் உற்பத்தி மற்றும் பிறவழிவகைகளில் வல்லுனர், தன்னுடைய நிறுவனம்
Picardy மாவட்டத்தில்
உள்ள Aisne
என்னும் இடத்தில் இருக்கும் Chauny
ல் 240 வேலைகளை தகர்க்க உள்ளது என்பதை அறிவித்துள்ளதாக செய்தியாளரிடம் கூறினார். "எங்களைப் பற்றி
வெகுஜன செய்தி ஊடகம் ஏதேனும் குறிப்பிட்டால் ஒழிய எங்கள் ஆலைகள் பக்கம் தொழிற்சங்க தலைவர்கள்
வருவதில்லை. புகைப்படம் எடுத்துக் கொள்ளுவதற்குத்தான் அவர்கள் உள்ளனர்; மற்ற நேரத்தில் அவர்கள்
Elysée
யில் [ஜனாதிபதி அரண்மனை]
அல்லது Bercy
[நிதித்துறை]
இவற்றில்தான் இருக்கின்றனர்." |