World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குOne year since the election of Barack Obama பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டிற்குப் பின்னர் Patrick Martin இன்றைக்கு ஓராண்டிற்கு முன் நவம்பர் 4, 2008ல் பாரக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றது அனைத்து நடைமுறை தேவைகளையிட்டு பார்த்தாலும் பெரும் அரசியல் தோல்வியாகும். ஜனநாயகக்கட்சி வேட்பாளர், குடியரசுக்கட்சிப் போட்டியாளரை 10 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது 50 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இல்லாத ஒரு வேட்பாளர் பெற்ற மிகப் பெரிய வித்தியாசம் ஆகும். 28 மாநிலங்களை வெற்றி கொண்ட அவர் 338 தேர்தல்குழு வாக்குகளை வென்றார். ஜனநாயகக் கட்சி காங்கிரஸில் இரு மன்றங்களிலும் 30 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. முந்தைய எட்டு ஆண்டுகளில் புஷ் நிர்வாகம் தொடர்ந்திருந்த வலதுசாரிக் கொள்கைகள் மக்களால் நிராகரிக்கப்பட்டதைத்தான் தேர்தல் முடிவு காட்டியது. முன்னோடியில்லாத அளவிற்கு முதல்தடைவையாக சிறுபான்மையினர், இளவயது வாக்காளர்களுமான பல மில்லியன் மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து, ஈராக் போருக்கு எதிரான தங்கள் எதிர்ப்பு, ஆழ்ந்து கொண்டிருக்கும் மந்த நிலை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் வெளிப்படையாக செல்வந்தருக்கு ஆதரவு கொடுத்து வெகுஜன கஷ்டங்களைப் பொருட்படுத்தாத் தன்மையை நிரூபித்த அரசாங்கம், கத்தரீனா புயலுக்கு புஷ்ஷின் பிரதிபலிப்பை பற்றி அப்பட்டமாகத் தங்கள் எதிர்ப்பு ஆகியவற்றை வெளிப்படுத்த மக்கள் வாக்களித்தனர். அமெரிக்காவில் இருக்கும் இரு கட்சி முறை வடிவமைப்பிற்குள், ஜனநாயகக் கட்சியின் சட்டமன்றத் தலைமை புஷ்ஷின் வெள்ளை மாளிகையுடன் ஒத்துழைத்திருந்ததாலும் மற்றும் போர், சமூகப் பிற்போக்குக் கொள்கைகள் தொடர்வதற்குத் தன் ஆதரவைக் கொடுத்திருந்த நிலையிலும் குடியரசுக் கட்சி நிர்வாகத்திற்கு எதிரான வெறுப்பு, பெரும் மக்கள் வெளிப்பாடாக ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி என்ற விதத்தில்தான் இருந்திருந்தது. ஒபாமாவிற்கு வாக்களித்தவர்களில் பலர் ஐயத்திற்கு இடமின்றி ஒரு ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதி, தன்னுடைய இனவழிப் பின்னணியை ஒட்டி, தொழிலாளர், வறிய மக்களின் தேவைகளுக்கு கூடுதல் பரிவு காட்டுவார், "மாற்றத்திற்கான" வேட்பாளரின் வெற்றி பல தசாப்தங்களாக இருக்கும் அரசியல் பிற்போக்குத்தனத்தில் இருந்து ஒரு முறிவிற்கு அடையாளம் காட்டும், முற்போக்கான கொள்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று நம்பினர். ஓராண்டிற்குப் பின், இந்தப் போலிக் கற்பனைகள் சீற்றமாகவும், பெரும் திகைப்பு, பெரிதும் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்வாக மாறிவிட்டன. ஒபாமா நிர்வாகத்துடன் மட்டுமல்லாது முழு அரசியல், பொருளாதார நடைமுறை பற்றியும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஒரு அடிப்படை அனுபவத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். வோல் ஸ்ட்ரீட்டிற்கு தாழ்ந்து நிற்கும் போக்கு, தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டிருக்கும் சமூக நெருக்கடி பற்றி பொருட்படுத்தாத்தன்மை ஆகியவற்றிற்கு விடையிறுப்பு, மற்றும் அதன் ஏகாதிபத்தியப் போரை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியும், முழு அரசியல் நடைமுறையும் நிதிய தன்னலக்குழுவின் வர்க்க நலன்களுக்குத்தான் உதவுகிறது என்ற உணர்வுதான் நன்கு அறியப்பட்டுள்ளது. இடது புறம் உழைக்கும் மக்கள் நகர்ந்த ஒரு இயக்கத்தை 2008 தேர்தல் பிரதிபலித்தது. ஆனால் ஒபாமா ஒன்றும் இந்த இயக்கத்தின் பதாகையை தாங்குபவர் அல்ல. மாறாக ஆளும் உயரடுக்கின் மிகச் சக்திவாய்ந்த பிரிவுகளின் கருவியாகத்தான் அவர் உள்ளார். அவர்கள் ஒபாமாவிற்கு ஆதரவு கொடுத்த காரணம் வெளியுறவுக் கொள்கையில் சில தந்திரோபாய மாற்றங்களைச் செய்யவும் புஷ்ஷின் ஆண்டுகளில் ஏற்பட்ட அமெரிக்காவின் சர்வதேச தோற்றத்தை மாற்றி முன்னேற்றுவிக்க வேண்டும் என்ற விருப்பமும், பெரு வணிகத்திற்கு எதிராக உள்நாட்டில் பெருகும் எதிர்ப்பை அகற்ற வேண்டும் என்ற எண்ணமும்தான். தேர்தல் நடந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் உலக சோசலிச வலைத் தளம் எழுதியது போல்: "அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த நன்கு தெரிய வந்துள்ள சரிவைச் சமாளிக்க, இதன் பெருமிதச் சின்ன வங்கிகளும் தொழில்துறை நிறுவனங்களும் சரிவின் விளிம்பில் நிற்க்கையில், இப்பிரிவுகள் மக்களிடையே செல்வாக்கு கொண்ட, அதே நேரத்தில் முற்றிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வர்க்க நலன்கள் மற்றும் உலக இலக்குகளின் நம்பிக்கைக்கு உகந்த பிரதிநிதியை பதவியில் இருத்த வேண்டும் என்ற கருத்தில் ஒபாமவின் பிரச்சாரத்திற்கு ஆதரவையும் நிதியையும் கொடுத்தன. அமெரிக்கத் தொழில்துறை கிட்டத்தட்ட திவால் தன்மையில் இருக்கலாம், ஆனால் அமெரிக்காதான் சந்தை முறையில் உலகத் தலைவராக உள்ளது. நன்கு எண்ணெய் தடவப்பட்ட, பெரும் நிதி அளிக்கப்பட்ட சந்தைப் பிரச்சாரம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு புது மாதிரியை, ஒரு இளைய ஆபிரிக்க-அமெரிக்க இல்லிநோய்சின் செனட்டர் என்ற வடிவில் கொடுக்க தொடங்கப்பட்டது." ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனப் பின்னணிக்கான போட்டியில் ஒபாமாவின் வெற்றி அவர் ஈராக் போருக்கு காட்டிய எதிர்ப்பில் பெருமளவு உறைந்திருந்தது. அவருடைய முக்கிய போட்டியாளர் ஹில்லாரி கிளின்டன் ஈராக் போருக்கு செனட்டின் இசைவிற்காக வாக்குப் பதிவைச் செய்திருந்தார். ஆனால் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஒபாமா விரைவில் வாஷிங்டனில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக கூறிய தன் உறுதிமொழியை உதறிவிட்டு வெள்ளை மாளிகை மற்றும் மந்திரிப் பதவிகளில் முக்கிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களான கிளின்டன், ராம் இம்மானுவெல் போன்றோரையும், புஷ் நிர்வாகத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட, புஷ்ஷின் பாதுகாப்பு மந்திரியாக இருந்து ஈராக்கில் "விரிவாக்கத்தை" மேற்பார்வையிட்ட ரோபர்ட் கேட்ஸ் போன்றவர்களையும் நியமித்தார். தன்னுடைய முக்கிய பொருளாதார, வரவு செலவுத்திட்ட பதவிகளில் முதலீட்டு வங்கியாளர்கள் அல்லது அது போன்ற தன்மையில் இருக்கும் வோல் ஸ்ட்ரீட்டுடன் நீண்டகால பிணைப்புக்களை உடைய நியூயோர்க் மத்திய வங்கியின் தலைவர் டிமோமதி கீன்தனர் போன்றோரை நியமித்தார். கடந்த ஆண்டு நடைமுறை போலியான மாற்றங்கள் இருந்தாலும், உள்ளடக்கத்தில் புஷ் நிர்வாகத்தின் பிற்போக்குத்தன கொள்கைகள்தான் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. வெளியுறவுக் கொள்கையில் ஒபாமா, ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளதை தொடர்ந்துள்ளார். வெள்ளை மாளிகையில் இருந்து புஷ் நீங்குமுன் நிர்ணயித்திருந்த துருப்பு அளவுகளை தக்க வைத்துள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலாக 21,000 துருப்புக்களை அனுப்பிவைத்துள்ளார். "ஆப்-பாக்" அரங்கில் போர் விரிவாக்கத்திற்கு இன்னும் அதிக துருப்புக்களை அனுப்பும் முடிவின் விளிம்பில் உள்ளார். உள்நாட்டுக் கொள்கையில் ஒபாமா புஷ் நிர்வாகத்தின் மிக முக்கியமான முடிவை அணைத்துக்கொண்டுள்ளார். அதாவது வங்கிகளுக்கு $700 பில்லியன் பிணை எடுப்பை ஏற்று, அதைப் பெரிதும் விரிவடையச் செய்து கடன்கள், உத்தரவாதங்கள், உதவித் தொகைகள், வோல் ஸ்ட்ரீட்டிற்கு ரொக்க உட்செலுத்துதல்கள் ஆகியவற்றின் மூலம் $23.7 டிரில்லியன்களை அளித்துள்ளார். புஷ்ஷின் ஆட்சியில் இருந்து ஒபாமா காலத்திற்கு மாறுகையில் பங்குச் சந்தை சரிந்து மார்ச் தொடக்கத்தில் மிக மோசமாயிற்று. ஆனால் பெருநிதிய நலன்கள் புதிய நிர்வாகம் வரம்பில்லாத இருப்புக்களை நிதி அமைச்சரகம், மத்திய வங்கிக்கூட்டமைப்பு மூலம் கிடைக்கச் செய்யும் என்று உறுதியாக உணர்ந்தவுடன் மீளத் தொடங்கியது. கீழ் மட்டத்தில் இருந்து Dow Jones சராசரி 50 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. இது வோல் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ள நம்பிக்கை வாக்கு ஆகும். அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடி தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள், வேலைகள் ஆகியவற்றின்மீது பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் உள்நாட்டு முன்முயற்சிகள் அனைத்தும் வோல் ஸ்ட்ரீட்டின் அரசாங்கம் என்ற அடிப்படை வர்க்கத் தன்மையில் இருந்து வெளிவந்தன. கட்டாய திவால்தன்மை, ஊதிய வெட்டுக்கள் ஜெனரல் மோட்டார்ஸிலும், கிறைஸ்லரிலும், வணிகத்திற்கும் அரசாங்கத்திற்கும் செலவுகளைக் குறைக்கும் வகையில் சுகாதாரப் பாதுகாப்பு நலன்களை மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்களின் இழப்பில் புஷ் நிர்வாகத்தின் ஜனநாயக உரிமைகள், குடிமை உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களை தொடர்தல் என்ற விதத்தில் மறு கட்டமைத்தது. இந்த நடவடிக்கைகள் இதுவரை குறைந்தளவு வெளிப்படையான மக்கள் எதிர்ப்புடன்தான் நடத்தப்பட்டுள்ளன. இதுதான் ஒபாமாவிற்கு ஆளும் உயரடுக்கு வழங்கிய முக்கியமான பணியாகும் இது. ஒரு மக்கெயின்-போலின் நிர்வாகமும் இதே போல் பிணை எடுப்பை தொழிலாளர்களின் இழப்பில் வோல் ஸ்ட்ரீட்டிற்கு செய்திருக்கும், ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்கியிருக்கும், கார்த் தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்புக்களை கோரியிருக்கும். ஆனால் அது குறிப்பாக வேலையின்மை விகிதம் 10 சதவிகிதம் என்று பெரிதும் உயர்ந்துவிட்ட நிலையில் ஒரு சமூக, அரசியல் வெடிப்பை தூண்டிவிடக்கூடிய ஆபத்தைக் கொண்டு இருந்திருக்கும். ஆனால் இந்த நிகழ்போக்கிற்கு குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. வோல் ஸ்ட்ரீட் மற்றும் செய்தி ஊடகத்தில் பாராட்டைப் பெற்றாலும், ஒபாமா நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகள் உலகப் பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் இல்லை, அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால வரலாற்றுத்தன்மை உடைய சரிவை மாற்றவும் இல்லை. நவம்பர் 4, 2008ல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு $741.85 ஆக இருந்தது. ஓராண்டிற்கு பின்னர் தங்கத்தின் விலை மிக அதிக அளவில் $1,085.07 என்று உயர்ந்துள்ளது. இது டாலரின் மதிப்பு 47% குறைந்துவிட்டதை பிரதிபலிக்கிறது. Dow Jones Industrial Average அல்ல, இந்த எண்ணிக்கைதான் அமெரிக்க முதலாளித்துவத்தின் உண்மையான நிலையைக் குறிப்பது ஆகும். வோல் ஸ்ட்ரீட்டை முட்டுக் கொடுத்து நிறுத்த கருவூலத்தின் பாரிய செலவினங்கள் அமெரிக்க பொருளாதாரத்தை திவாலாக்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கான விலை பணவீக்கம், ஊதியக் குறைப்பு மற்றும் மத்திய அரசு சமூக சேவைகளான சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் செலவுகளை குறைக்கும் வகையில் தொழிலாள வர்க்கத்தால் கொடுக்கப்படும். ஒபாமா நிர்வாகம் பற்றி மக்களின் போலித் தோற்றங்களில் ஏற்பட்டுள்ள சிதைவு குறைந்த அளவில் மக்கள் கருத்துக் கணிப்புக்களில் பிரதிபலிக்கிறது. இவை இரு பெருவணிகக் கட்சிகள் பற்றியும் பெருகியுள்ள வெறுப்புணர்வை காட்டுகின்றன. சில தேர்தல் முடிவுகளில், நிர்வாகம் பற்றிய பரந்த ஏமாற்ற உணர்வின் விளைவாக விகிதத்தை மீறிய முறையில் ஜனநாயகக் கட்சிக்கு வாக்குச் சரிவும் ஏற்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் மாறும் உணர்வுகளுக்கான தெளிவான அடையாளம் நிர்வாகம், UAW ஆதரவுடன் கோரிய சலுகை இழப்புக்கள் ஒப்பந்தத்தை Ford இன் அனைத்துத் தொழிலாளர்களும் நிராகரித்த வாக்களிப்பில் வெளிப்பட்டுள்ளது. வாக்களித்தவர்களில் முக்கால் பங்கிற்கும் மேலானவர்கள் ஒபாமா நிர்வாகத்தால் GM, Chrysler மீது சுமத்தப்பட்டுள்ள அதே வெட்டுக்களைக் அவர்கள் மீதும் சுமத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்த ஒப்பந்தத்தை வாக்குமூலம் நிராகரித்தனர். தொழிலாளர்கள் எதிர்த்தரப்பிற்கு நகர்கையில், மத்தியதர வர்க்க தாராளவாதிகளும், முன்னாள் தீவிரவாதிகளும் ஒபாமாவுடன் இருந்த வேறுபாடுகளைக் களைந்துவிட்டனர். அவருடைய நிர்வாகம் இன்னும் வலதிற்கு செல்லும் அரசியல் சக்திகள் செல்லும் ஒரு அரசியல் கருவியாக மாறிவிட்டது. ஒரு வலதுசாரி, தொழிலாளர் எதிர்ப்பு, வர்க்க அரசாங்கத்திற்கு பின்னால் அவர்கள் நிற்கின்றனர். அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளிநாட்டு நலன்களைக் பாதுகாக்கத்தான் உள்ளது. அவற்றின் வளர்ச்சி வர்க்கம் என்பது சமூகத்தின் அடைப்படைப் பிரிவு என்பதை நிராகரிப்பதுடன் இனம், பால் வேறுபாடு ஆகியவற்றை தளமாகக் கொண்ட அரசியலைத் தழுவி நிற்கின்றது. இதற்கிடையில் ஒபாமா சமூகத்தின் அடிப்படை பிரிவு இனம் இல்லை வர்க்கம்தான் உள்ளது என்ற முக்கியமான படிப்பினையை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய தேர்தல் முடிவின் விளைவு உண்மையான மாற்றம் என்பது இருக்கும் அரசியல் முறை அதன் உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மூலம் கொண்டுவரப்பட முடியும் என்ற கருத்தின் பயனற்றை தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவை அனைத்தும் உற்பத்தி வழிவகைகளை உரிமையாக்கிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தின் கீழ்தான் இருப்பவை. ஒபாமா தேர்தல் முடிந்த மறுநாள் உலக சோசலிச வலைத் தளம் அறிவித்தது: "ஜனநாயகக் கட்சி வெற்றியில் இருந்து எவ்விதத் திருப்தியைக் கொண்டாலும், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமாவின் உள்வட்டம், கட்சித் தலைமை மற்றும் அரசியல் நடைமுறைக்குள் வெகுஜன எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள் என்று தேர்தல் முடிவுகள் கொடுத்துள்ளவை எளிதில் தீர்க்கப்பட முடியாது என்ற உணர்வினால் அழுத்தப்படுகிறது. தேர்தலின் முடிவு அமெரிக்காவில் ஆழ்ந்த வர்க்கப் போராட்டத்திற்கான புதிய, நீடித்த காலத்திற்கு அரங்கு அமைக்கிறது." இந்தக் கணிப்பு வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை, வாழ்க்கைத்தரங்கள், சமூக நலன்களை பாதுகாப்பதற்கு மற்றும் ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதற்கு போராட்டத்தை நடத்துகையில் உறுதிபடுத்தப்படும். அந்தப் போராட்டத்திற்கு ஒரு புதிய அரசியல் மூலோபாயம் தேவைப்படுகிறது. தொழிலாள வர்க்கம் உணர்மையுடன் ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொண்டு, முதலாளித்துவ இலாப முறைக்கு எதிரான அரசியல் போராட்டப் பாதையை பின்பற்ற வேண்டும். அது ஒரு சோசலிச, சர்வதேச வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். |