WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
New fossils provide insights into early human evolution
புதிய புதைபடிவங்கள் ஆரம்பகால மனித இன பரிணாமத்திற்குள் ஆழ்ந்த பார்வையை அளிக்கின்றன
By William Moore
20 October 2009
Use this
version to print | Send
feedback
இந்த ஆண்டு நாம் கொண்டாடி வரும் சார்லஸ் டார்வினின் 200வது நினைவுதினம்,
அவரின் நினைவு கூறத்தக்க படைப்பான On the
Origin of Speciesன் 150வது ஆண்டுடன் மிகச்
சரியாக பொருந்தி வந்திருக்கிறது. இந்த படைப்பு மனிதயின பரிணாமத்தை நமக்கு புரிய வைத்ததில் ஒரு முக்கிய
அபிவிருத்தியாக அறிவிக்கப்பட வேண்டும்.
47 ஆய்வாளர்களால் 15 ஆண்டுகள் கொடுக்கப்பட்ட மிக கடுமையான உழைப்புக்கு
பின்னர், Science
இதழ் அதன் அக்டோபர் 2ஆம் திகதி பதிப்பை இந்த அறிக்கைகளுக்கு சமர்பித்தது.
மொத்தம் 11 ஆய்வறிக்கைகள் இருந்தன, இவை ஹோமினின்களின் (hominin)
ஆரம்பகால வடிவம் என்று சொல்லப்படுகிற புதைபடிவங்கள் குறித்து எழுதப்பட்டிருந்தன. மனிதர்களும் மற்றும் பரிணாம
உடைவுகளுக்கு முன்னர் இறுதியான மூதாதையாக இருந்த சிம்பன்ஜிகளுடன் ஏனைய அனைத்து மனிதயின மூதாதைகள்
பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எதியோப்பியாவின் அஃபர் ரிஃப்ட் பகுதியில், 4.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய
புதைபடிவங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. பெர்க்லேயின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிம்
வொயிட்டின் தலைமையிலான ஓர் ஆய்வு குழுவால் இது கண்டறியப்பட்டிருக்கிறது. அவை
Ardipithecus ramidus
என்ற பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முதல் கண்டுபிடிப்பு 1992ல் நிகழ்ந்தது,
அதில் பல பற்களும், தாடைகளும் கண்டறியப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகளைப் பற்றிய ஓர் அறிக்கை 1994ல்
Nature
இதழில் வெளியிடப்பட்டது. அதற்கடுத்த ஒருசில ஆண்டுகளில், அதற்கு மேலும்
கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன, இறுதியாக மொத்தம் 100க்கும் மேலான உயிரினங்களின் படிமான எலும்புகள் கண்டறியப்பட்டிருக்கின்றன,
இவற்றில் பல துண்டுதுண்டாக கிடைத்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இவை குறைந்தபட்சம் 36 தனித்தனி உயிரிகளை
எடுத்துக்காட்டுகின்றன.
ஒரு பெண்ணின் வடிவம் ஓரளவிற்கு முழுமையாக கிடைத்திருக்கிறது, இதற்கு "ஆர்டி"
என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அப்பெண் 120 சென்டிமீட்டர் (4 அடி) உயரமும், 50 கிலோ (110
பவுண்டு) எடையும் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆர்டி படிமானத்தில் மண்டை ஓடு, பற்கள்,
இடுப்பெலும்பு பகுதி, கைகள் மற்றும் பாதங்கள் கிடைத்திருக்கின்றன. ஹோமினின் பரிணாமத்தின் முக்கிய படிகளை
விளக்கிய Lucy (Australopithecus
afarensis), Taung child (Australopithecus africanus),
மற்றும்
Nariokatome boy (Homo erectus)
ஆகியவை உட்பட பல்வேறு ஹோமினி (hominin)
படிமானங்களின் வரிசையில், இந்த பெண்ணின் உருவமும் ஒரு முக்கிய
இடம் பெறுகிறது.
ஹோமினின் படிமான ஆவணங்கள் குறித்த நம்முடைய அறிவு, இதுவரை, சுமார் 3.7
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் தான் இருந்தது. அதாவது
australopithecine
என்று அறியப்படும் முந்தைய காலம் வரைக்கும் தான் நாம்
அறிந்திருந்தோம். டிஎன்ஏ பகுப்பாய்வுகள், நவீன மனிதர்களுக்கும், நவீன சிம்பன்ஜிகளுக்கும் பரிணாம வரலாற்றில்
மிக நெருக்கமான தொடர்பு இருப்பதை எடுத்து காட்டுகின்றன. மேலும் அண்ணளவாக 98 சதவீத மரபணு
பொருட்களையும் அவை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. பிரமேட்கள் (primates)
மற்றும் பிற பாலூட்டிகள் மத்தியில் மரபணு மாற்ற தரமுறைகளின்
"molecular clock"
விகிதங்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள், சிம்பன்ஜிகளும், மனிதயின வம்சங்களும் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
பிரிந்திருக்கலாம் என்று கணிக்கின்றனர்.
Orrorin tugenensis and Sahelanthropus
tchadensis என்ற ஆரம்பகால ஹோமினின்கள் பற்றிய
கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, கடந்த தசாப்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிமான ஆதாரங்கள், இந்த
பிரிவு 7 மில்லியன் ஆண்டுகளுக்கோ அதற்கு முன்னரோ ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன. எவ்வாறிருப்பினும்,
இவை துண்டுதுண்டாக இருக்கின்றன, அவற்றின் நிலை விவாதத்தில் தான் இருக்கிறது.
ஆகவே,
australopithecinesக்கு முன்னர் மனிதயின பரிணாம அறிவு
பெருமளவில் குறைவாகவே இருந்தது; உண்மையில், ஹோமினின் பரிணாம வரலாறு பாதியளவிற்கு அறியப்படாமல்
இருந்தது. சிம்பன்ஜி மற்றும் கொரில்லா மூதாதையர்களின் ஆய்வுசெய்யப்பட்ட படிமான ஆவணங்கள் இல்லாததால்
தான் இந்த ஆதாரங்களை வெளிப்படுத்த முடியாமல் இருந்தது. சிம்பன்ஜிகளை விட கொரில்லாக்கள் மரபணுரீதியாக
மனிதயினத்தின் மரபணுக்களில் இருந்து மிகவும் வேறுபட்டிருப்பதாக டிஎன்ஏ ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கொரில்லா வம்சம் பொதுவான ஹோமினின் மற்றும் சிம்பன்ஜி வம்சம் இரண்டும் பிரிவதற்கு முன்னரே கொரில்லா
வம்சம் பிரிந்துவிட்டது.
கொரில்லாக்கள் மற்றும் நவீன சிம்பன்ஜிகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்
போது, மிக முந்தைய ஹோமினின்கள் "வாலில்லா குரங்கு போல்" இருந்திருக்கலாம் என்று உயிரின ஆய்வு
விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பொதுவாக வாலில்லா குரங்குகள் என்று அழைக்கப்படுபவை அல்லது
"ஹோமினாய்டுகள்", மரம் விட்டு மரம் தாவுவதற்கான ஒரு சிறப்பான உடற்கூறு வசதியைக் கொண்டிருக்கின்றன
என்பதன் அடிப்படையில், அவை குரங்குகளில் இருந்து வேறுபடுத்தப்படுகின்றன.
உடலின் வலது மேற்புற பகுதியைப் பயன்படுத்தி "தொங்கி கொண்டே ஏறுதல்"
மற்றும் விளிம்புகளைப் பிடித்து கிளைக்கு கிளை தாவுதல் ஆகியவை வாலில்லா குரங்குகளை மரங்களில் வேகமாக ஏற
உதவுவதுடன் நீளமாக வளரவும் செய்கின்றன. இவ்வாறு ஏறுவது மனிதர்களைத் தவிர உயிர்வாழும் ஏனைய எல்லா
வாலில்லா குரங்கு வகைகளிலும் இருக்கிறது. Gibbons,
siamangs, orangutans ஆகியவையும், அத்துடன்
கொரில்லாக்கள் மற்றும் சிம்பன்ஜிகளுக்கும் கால்களை விட கைகள் நீளமாக இருக்கின்றன; அவற்றின் பரந்த உடல்,
விளிம்புகளைத் தொடுவதற்கு வசதியாக இருக்கின்றன, அவற்றின் சிறிய பின்ஆசனங்கள் அவற்றின் உடலை மேலே
நிமிர்த்துவதற்கு தேவையான ஸ்திரத்தன்மை அளிக்கின்றன. சிம்பன்ஜிகளும், கொரில்லாக்களும் தரையில் நடப்பதற்கு
ஒரு சிறப்பு முறையைப் பயன்படுத்துகின்றன, இது
"knuckle-walking" என்று அழைக்கப்படுகிறது.
மனிதர்களோடு ஒப்பிட்டு பார்த்தால், மனிதர்கள் மேல்நிமிர்ந்து நடக்கிறார்கள்.
நவீன மனிதர்களின் சில உடல்கூறுகளும், கைகளும் நம்முடைய வாலில்லா குரங்கு
போன்ற பாரம்பரியத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக இருக்கிறது. ஆனால் நாம் தரையில் நிமிர்ந்து நடப்பதாலும்,
உயரமாக ஏறுவதில்லை என்பதாலும், வாலில்லா குரங்குகளுக்கு சிறப்பாக அமைந்திருக்கும் சிலவற்றை நாம்
இழந்திருக்கிறோம். எவ்வாறிருப்பினும், தாவுவனவற்றிற்கும், தரையில் வாழ்வனவற்றிற்கும் இடையிலான பரிணாம
வளர்ச்சியின் முக்கியமான விளைவுகளில் தெளிவு பெற வேண்டுமானால், மேலும் பல படிமானங்கள் கண்டுபிடிக்கும்
வரை காத்திருக்க வேண்டும்.
Ardipithecus ramidus
தொடர்பாக தற்போது கிடைத்திருக்கும் படிமானங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின்
சமீபத்திய வெளியீடுகள், படிமான ஆவணங்களில் இருக்கும் இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. மேலும் ஆரம்பகால
ஹோமினின் பரிணாமத்தைப் பற்றிய நம்முடைய புரிதலில் ஒரு நல்ல முன்னேற்றத்தையும் அது அளிக்கிறது.
Ardipithecus ramidus
தொடர்பாக தற்போது கிடைத்திருக்கும் படிமானங்களின் விளக்கத்திற்கு அப்பாற்பட்டு,
வாலில்லா குரங்குகளின் பரிணாமம் குறித்த நம்முடைய புரிதலில்
Ardipithecus
புரட்சியை ஏற்படுத்தும் என்று
Science
இதழில் வந்திருக்கும் கட்டுரையின் ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிம்பன்ஜிகளுக்கும், ஹோமினின்களின் பொதுவான மூதாதையர்களுக்கும் (common
ancestor) இடையிலான தொடர்பு குறித்து கூறுகையில்,
பொதுவான மூதாதையர்கள் பல்வேறு வழிகளில் நவீன சிம்பன்ஜிகளிடம் இருந்து கணிசமாக வேறுபட்டு இருப்பதை
Ardipithecus
படிமானங்கள் வலுவாக எடுத்துக்காட்டுவதாக அந்த ஆசிரியர்கள்
குறிப்பிட்டார்கள். ஹோமினின்களின் பொதுவான மூதாதையர்களைக் கடந்து அவை பரிணமித்து வந்ததற்கு பிறகு,
நவீன சிம்பன்ஜிகள் (கொரில்லாக்களும் கூட) கணிசமான பரிணாம மாற்றங்களுக்கு ஆளாகி இருக்கின்றன. பரந்த
நோக்கில் மனிதர்கள் நிச்சயமாக வாலில்லா குரங்குகள் தான் என்றாலும், ஆரம்பகால மனிதர்களின்
மூதாதையர்களோடு ஒப்பிடும் போது நவீன வாலில்லா குரங்குகள் ஒரு சிறந்த ஒற்றுமையை அளிப்பதாக இல்லை
என்று அந்த ஆசிரியர்கள் வாதிடுகிறார்கள்.
காடுகளில் இருந்து காடுகள் சூழ்ந்த பகுதிக்கும், புல்வெளி சுற்றுச்சூழலுக்கு
வருவதற்கான விரைவான மாற்றத்தை அடைவதற்கு முன்னர் இருந்த ஆரம்பகால ஹோமினின்களை
Ardipithecus
எடுத்துக்காட்டுகின்றன. இந்த மாற்றம் முதன்முதலில்
Australopithecus
TM
காணப்பட்டது. இந்த மாற்றமோ அல்லது
Homo erectus
மற்றும் "வலிமையான"
australopithecines
உட்பட, பின்னர் வந்த ஹோமினின்கள் பெரும்பாலும் நிறைய அபிவிருத்திகளுக்கு
எடுத்து சென்றன: அதாவது, வலிமையான
australopithecinesன் மறைவிற்கும், புத்திசாலியான
Homoவிற்குள்
நவீன மற்றும் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கு இட்டு சென்றன.
Ardipithecus ன் சில
முக்கியமான பண்புகள் கீழே விவரிக்கப்பட்டிருக்கின்றன, அதை தொடர்ந்து ஆரம்பகால ஹோமினின் பரிணாமம்
குறித்து இந்த பண்புகள் நமக்கு எதை விளக்குகின்றன என்ற விவாதமும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதாரங்களை வைத்து
பார்க்கும் போது, மேற்படி ஆராய்ச்சிகளால் இயங்கியல் வழிமுறையில் ஆய்வும், விமர்சனமும் செய்யப்பட்டு, அது
மேலும் ஆய்வும், விமர்சனமும் செய்யப்படும் போது, எந்த குறிப்பிடத்தக்க விஞ்ஞான கண்டுபிடிப்பும் தொடர்ந்து
சென்று கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது சொல்லப்பட்டிருக்கும் சில முடிவுகள், எதிர்கால கண்டுபிடிப்புகள் மற்றும்
ஆய்வுகளால் மாற்றப்படலாம். Ardipithecus
ன் பகுப்பாய்வுக்கு உதவும் உயிரினங்களின் படிமான
எலும்புகள் துண்டு துண்டாக இருக்கின்றன, சிலவை மிகவும் சேதாரம் அடைந்திருக்கின்றன. பல எலும்புகூடுகளுக்கு
பாரியளவில் மறுகட்டுமானம் தேவைப்பட்டன. இந்த பணியில் ஈடுபட்டவர்களில் பலர் சிறந்த வல்லுனர்கள் தான்
என்றாலும், இந்த நிகழ்முறைக்கு கொஞ்சம் தீர்மானமும் தேவைப்படுகிறது. மேலும் முன்மாதிரிகள்
மீட்டெடுக்கப்பட்டால், அது தற்போதைய மறுகட்டுமானங்களை மாற்றியமைக்கவும், அதற்கு உதவியாகவும்
இருக்கும். இது தொல்பொருள் ஆராய்ச்சியின் ஒரு பணியாக இருக்கிறது.
Ardipithecus
படிமானம் கண்டுபிடிக்கப்பட்டதற்கும், அது
Science இதழில் பிரசுரமானதற்கும் இடையிலான கால
அளவு குறித்து (15 ஆண்டுகள்) மனிதவியல் வட்டாரங்களுக்குள் விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த கால இடைவெளியில்
வேறு எந்த ஆராய்ச்சியாளர்களால் அதை அணுக முடியாமல் இருந்தது.
Nariokatome Homo erectus
போன்ற பிற முக்கிய ஹோமினின் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது
காலத்திலேயே சக ஆய்வாளர்களுக்கும் பரந்தளவில் கிடைக்குமாறு செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆராய்ச்சியில்
ஆழமாக ஒருங்கிணைந்து செயல்பட முடிந்தது. இருந்த போதிலும்,
Ardipithecus
படிமானங்களின் பகுப்பாய்வில் பெரிய ஆராய்ச்சி குழுக்கள் ஈடுபட்டிருந்தன,
கணிசமான ஆய்வு முடிவுகளும் இந்த துறையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கின்றன.
ஆய்வு முடிவுகள்
Science இதழில்
வெளியான ஆய்வறிக்கைகளின் ஆசிரியர்கள், பண்புகளின் இரண்டு அடிப்படை அமைப்புகளை பார்க்கிறார்கள். அது
இடம்பெயர்வு மற்றும் உணவுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது, குறிப்பிடத்தக்க அளவிற்கு
Ardipithecus,
நவீன வாலில்லா குரங்குகளில் இருந்து வேறுபட்டிருக்கின்றன.
சிம்பன்ஜிகளும், கொரில்லாக்களும் தரையில்
"knuckle walking"
முறையில் நகர்கின்ற நிலையில்,
Ardipithecus
நிமிர்ந்து நடக்கின்றன. மூளையோடு முதுகுத்தண்டுவடத்தை இணைக்க உதவும்
மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் இருக்கும் பெரிய துவாரம், பிற்காலத்திய ஹோமினின்களில் நேரடியாக மண்டைஓட்டின்
கீழ்புறத்தில் அமைந்திருப்பதை கிடைத்திருக்கும் ஆதாரங்கள் எடுத்துகாட்டுகின்றன. ஆனால் இதுவே நவீன வாலில்லா
குரங்குகளில் இது பின்புறத்தில் மிக நெருக்கமாக அமைந்திருக்கிறது. இவை தரையில் நடக்கும் போது, இவற்றின்
உடல்கள் மெலிந்து முன்னோக்கி வருகின்றன. எவ்வாறிருப்பினும், ஆர்டியின் கைகள் கொஞ்சம் நீளமாக இருக்கின்றன,
ஆனால் நவீன வாலில்லா குரங்குகளை விட சற்றே குட்டையாக இருக்கின்றன, மரங்களை விட்டு மரங்களுக்கு
தாவுவதற்கு கைகள் முக்கியமாக இருந்தன என்பதையை இது எடுத்துக்காட்டுகிறது.
மரங்கள் ஏறும் போதும்,
knuckle walking செய்வதற்காகவும், சிம்பன்ஜிகள் மற்றும்
கொரில்லாக்கள் அவற்றின் உடல்களின் கணிசமான எடையைத் தாங்குவதற்கு உதவியாக கைகள் பெருமளவிற்கு
சிறப்பாக அமைந்திருக்கின்றன. முக்கியமாக, ஆர்டியின் கைகள்
knuckle walkingக்கு
ஏற்ற வகையில் இல்லை. knuckle walkingக்கு
விரல்கள் இலகுவாகவும், கட்டைவிரலைத் தவிர மற்ற ஒவ்வொரு விரலின் மைய எலும்பில்
(phalange)
எடையை நிறுத்தும் வகையிலும் இருக்க வேண்டும். ஹோமினின்களின் கைகள், பிற வாலில்லா குரங்களின் இடம்பெயர்வு
ஏற்ற சிறப்பம்சங்களை இழப்பதற்கு மாறாக, முற்கால குரங்கினங்களில் இருப்பது போல இலகுவானதாக
இல்லாமல், பொருட்களைப் பறிக்க ஏற்றதாக அமைந்திருக்கின்றன என்று அவ்வாய்வறிக்கையின் ஆசிரியர்
தெரிவிக்கிறார்கள். இந்த இலகுதன்மையானது, அதோடு பின்னர் தோன்றிய அதற்கு சமமாக கட்டைவிரலின்
நீளமும், ஹோமினின்களுக்கு பொருட்களை பல்வேறு வழிகளில் உறுதியாகவும், துல்லியமாகவும் பிடித்து கையாளும்
திறனை அளித்தது. இந்த வகையில், இது கருவிகளை மாறுபட்ட வகையிலும், துல்லியமாகவும் பயன்படுத்த
அனுமதிக்கிறது.
நவீன வாலில்லா குரங்குகளில் இருப்பதை விட
Ardipithecus
ன் இடுப்பெலும்புகள் சிறியதாகவும், பரந்தும் இருக்கின்றன. இருகால்
உயிரினங்களான Australopithecusல்
பார்த்ததை விட ஒரு கணிசமான முன்னேற்றத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த கருத்து சரியென்றால்,
அப்போதிருந்த ஆர்டியின் மூதாதையோர்கள் ஏற்கனவே ஒரு கணிசமான காலத்திற்கு இருகால் உயிரிகளாக
இருந்திருக்க வேண்டும். இதுமாதிரியான பரிணாம வளர்ச்சியின் போக்கு, சிம்பன்ஜி வம்சத்திலிருந்து ஏற்பட்ட பிரிவு
தற்போதைய கருத்திற்கும் முன்னர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதையே சுட்டி காட்டுகிறது. எவ்வாறிருப்பினும்,
ஆர்டி முற்றிலும் எவ்வாறு இருகால் உயிரின வரிசையில் சேர்க்கப்பட்டது என்பதில் எல்லா ஆராய்ச்சியாளர்களும்
உடன்படவில்லை.
நவீன ஆப்ரிக்க வாலில்லா குரங்குகள், மரம் ஏறுவதற்காகவே ஒரு பாதத்தை
உயரமாக பெற்றிருக்கிறது. அது ஆர்டியை விட மிகவும் தனித்தன்மை பெற்றிருப்பதாகவும், இறுதியாக இருந்த
பொதுவான மூதாதையர்களின் பாதங்களை விட மிகவும் தனித்தன்மை பெற்றிருப்பதாகவும் அந்த கட்டுரையாளர்கள்
தெரிவிக்கிறார்கள். உண்மையில் ஆர்டிக்கு ஒரு முரட்டுத்தனமான பாத அமைப்பு இருக்கிறது, இது குரங்குகளை
நினைவுபடுத்த கூடியதாகும். இது நவீன ஆப்ரிக்க வாலில்லா குரங்குகள் மற்றும் ஹோமினின்கள் உட்பட, எல்லா
வாலில்லா குரங்குகளின் மூதாதையர்களுக்கும் பொதுவானதாக கட்டுரையாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த
முரட்டுத்தனமான பாத அமைப்பு, உண்மையில் கிளைகளுக்கு இடையில் தாவுவதற்குப் பயன்படுத்தப்படுவதாக கட்டுரையாளர்கள்
குறிப்பிடுகிறார்கள், ஹோமினின்கள் தரையில் நடக்கும் போது அவற்றின் பாத அசைவுகளை மேம்படுத்த இது
உதவுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது உண்மையாக இருந்தால், ஹோமினின்கள் காடுகளில் இருந்து புல்வெளிக்கு நகர்ந்து
வருவதற்கு, இந்த மிக கடினமான பாதம் ஒரு "முந்தைய-வளர்ச்சியாக" இருக்கலாம். எவ்வாறிருப்பினும்,
ஆர்டியின் பெரிய கால்விரல்கள், மரங்கள் ஏறுவதற்கு பயன்படும் வகையில், ஏனைய கால்விரல்களின் வரிசையில்
இருந்து கணிசமாக பரவி இருக்கிறது. ஆனால் இது தரையில் நடப்பதற்கு ஏற்றதல்ல. இதுவும், நீண்ட கைகளும்
Ardipithecus
மரங்களிலும், தரையிலும் இரண்டு இடத்திலும் அதன் காலத்தைச்
செலவிட்டிருக்கலாம் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
நாம் நடப்பது போல
Ardipithecusனால் நிமிர்ந்து நடக்க முடியும்
என்றாலும், அதன் மூளை திறன் (அதாவது, மூளை அளவு) நம்முடையதை விட மிகவும் குறைவுசுமார்
300-350 கியூபிக் செண்டிமீட்டர் மட்டும். இது அண்ணளவாக நவீன வாலில்லா குரங்குகளின் அளவுக்கு இருக்கிறது,
ஆனால் Australopithecus
விட சற்றே குறைவாக இருக்கிறது. மூளையில் கொஞ்சம் மறுகட்டமைப்பு
ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது, ஒருவேளை நவீன சிம்பன்ஜிகளுக்கு அப்பாற்பட்டு மூளைத்திறன்கள் வளர்ச்சி அடைந்து
கொண்டிருந்த ஆரம்ப காலமாக இருக்கலாம்.
எவ்வாறிருப்பினும், பிந்தைய ஹோமினின்களின் மூளை அளவு கணிசமான உயர்ந்திருந்தது.
இது கலாச்சார மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திகளோடு தொடர்புபட்டிருந்தது. அறிவு நிலையை
பொருத்தமட்டில், Ardipithecusகளில்
எந்த முன்னேற்றமும் இல்லாமலோ அல்லது மிகவும் குறைந்தளவு முன்னேற்றமோ இருந்திருக்கலாம். இருகாலில்
நடப்பது, கைகளைத் தன்னிச்சையாக பயன்படுத்துவது ஆகியன மூளை பெரிதாக தொடங்குவதற்கும், அதனோடு
தொடர்புபட்டு அறிவு விரிவடைவதற்கும் முன்னரே ஆரம்பித்துவிட்டது. மனித பரிணாமத்தைக் குறித்து "கையில் இருந்த
இந்த முதல் தத்துவம்", நீண்ட காலத்திற்கு, மனிதவியல் ஆராய்ச்சியாளர்களால் பெரியளவில் கவனிக்கப்படாமல்
இருந்தது. அதன் ஆரம்பகால ஆதரவாளர்களில் பிடரெக் ஏங்கல்ஸூம் ஒருவர், அவர் 130 ஆண்டுகளுக்கு முந்தைய
அவருடைய The Part Played by Labor
in the Transition from Ape to Man என்ற
எழுத்துக்களில் அவற்றை முன்வைத்தார்.
Ardipithecus பற்றிய
மற்றொரு குறிப்படத்தக்க விஷயம், அவற்றின் உணவுமுறை.
Australopithecus
காணப்படுவது போல கடினமானவற்றை மென்று உண்பதற்கு ஏற்ற உறுதியான
கூர்மையான பற்கள் ஹோமினின்களுக்கு கிடையாது.
Ardipithecus ஒரு மாறுபட்ட உணவுமுறைகளைக்
கொண்டிருந்தன என்பதைத் தான் இது எடுத்துக்காட்டுகிறது.
Australopithecus
சாப்பிடாத, பழுத்த பழங்கள் போன்ற மென்மையான உணவுகள் இதில்
உள்ளடங்கும். வேர்கள், கொட்டைகள் போன்ற கடினமான உணவுகளை
Australopithecus
தங்கள் உணவுமுறையில் கொண்டிருந்தன. இந்த ஒப்பீடு, மரங்களின் சூழலில்
வாழ்ந்த உயிரினங்களுக்கும், மிகவும் கலவையான நிலப்பகுதியில் வாழ்ந்த உயிரினங்களுக்கும் இடையிலான
வித்தியாசத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
Ardipithecus ன்
கீழ்முகம் (அதாவது, தாடை மற்றும் தாடை எலும்பு, அல்லது "முகத்தின் கீழ் முற்பகுதி"), சிம்பன்ஜிகளின்
அளவிற்கு முன்னோக்கி நீண்டிருக்கவில்லை, ஆனால்
Australopithecusஐ விட நீண்டிருந்தன. சிம்பன்ஜிகள்
முக்கியமாக பழுத்த பழங்களைச் சாப்பிடக்கூடியவை.
Ardipithecusன் மண்டை ஓட்டிற்கு கீழ் நேரே
இருக்கும் பல்வரிசையின் அமைப்பு, மெல்லுவதற்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கலாம். இருந்தாலும்,
சிம்பன்ஜி போன்ற விலங்குகளில் இருப்பது போல, கபாலத்தோடு இணைந்துள்ள தசைகள், நீண்ட முகவாயோடு
மேலும், கீழும் நேராக அசையும் தன்மை பெற்றிருந்திருக்கலாம்.
ஆகவே,
Ardipithecusன் பல் அமைப்பும், மெல்லும்
பாகங்களும், மென்மையான உணவுகளைச் சாப்பிடும் சிம்பன்ஜிகளுக்கும், கடினமான உணவுகளைச் சாப்பிட்ட
Australopithecusகளுக்கும்
இடையில் மத்தியமாக காணப்படுகின்றன. இந்த மத்தியமான நிலைமை, சமஅளவிற்கு உணவுமுறையிலும் மத்திய
நிலைமையைக் கொண்டிருக்கலாம், அது படிப்படியாக அவற்றை புல்வெளி சுற்றுச்சூழலுக்கு கொண்டு வருவதற்கு
ஏதுவாக ஆக்கியிருக்கும்.
Ardipithecus ன் கூர்மையான
பற்கள், சிம்பன்ஜிகள் மற்றும் கொரில்லாக்களோடு ஒப்பிடும் போது கணிசமாக குறைந்திருக்கின்றன. கூர்மையின்
அளவு படிப்படியாக குறைந்து வந்த போக்கு, பின்னர் வந்த ஹோமினின்களுக்கும் தொடர்ந்திருக்கலாம். இரண்டாவது,
இந்த மாற்றத்தைக் கணக்கில் எடுப்பதற்காக, பரஸ்பர பிரத்யேக விளக்கங்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை.
முதலாவது, பின்கடைவாயில் போட்டு அரைக்க கூடிய விதைகள் போன்ற உணவுகள் உணவுமுறையின் ஒரு பாகமாக
மாறியது, நிறைய கூர்மையாக இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக அசைப்பதற்கு தேவையான அளவிற்கு குறைந்திருக்கலாம்.
கூர்மை குறைவிற்கான காரணிகளில் இரண்டாவது சாத்தியப்பாடு, சமூக
கட்டமைப்பிற்குள் இருந்த ஆளுமையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. சமூகத்தில் அதிகாரத்தைப் பெறுவதற்காக, நவீன
ஆண் வாலில்லா குரங்களால் நீண்ட கூர்மையான பற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை பெண் குரங்களை விட
ஆண் குரங்குகளுக்கு இவை நீளமாக இருக்கின்றன, இது சமூக போட்டியின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று
நினைக்கப்படுகிறது. Ardipithecusன்
உடல் அளவை பொறுத்தும் சிறிது பாலின வேறுபாடு (அதாவது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான
வேறுபாடு இருப்பதாக கிடைத்திருக்கும் ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. கூர்மையின் அளவு குறைந்திருப்பதானது
ஆண்களுக்கு இடையிலான ஆளுமை குறைந்திருப்பதோடு ஆராய்ச்சியாளர்கள் தொடர்புபடுத்துகிறார்கள். மேலும்
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில் ஜோடி இணைப்பு ஏற்படுவதற்கான ஆரம்பமாகவும் அவர்கள் இதை
கருதுகிறார்கள். கென்ட் மாகாண பல்கலைக்கழகத்தின்
Owen Lovejoyஆல் முன்வைக்கப்பட்ட கருத்து தான்
Scienceல்
வெளியான கட்டுரை தொடர்களில் மிகவும் முரண்பாட்டைத் தோற்றுவித்த ஒன்றாக இருக்கிறது. அது கிடைத்திருக்கும்
ஆதாரங்களின் அடிப்படையில் பிற ஆராய்ச்சியாளர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக ஹாவர்டின் டேவிட்
பில்பீம்மினால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பொருள் விளக்கம்
ஆபிரிக்க வாலில்லா குரங்குகளும், ஹோமினின்களும் அவற்றிற்கு முந்தைய மரத்தில்
தாவும், குரங்கு போன்றிருந்த, பொதுவான மூதாதையர்களிடம் இருந்து வேறுபட்டு, சமவெளியில் இடம்பெயரத்
தொடங்கின, ஆனால் தரையில் துல்லியமாக நகர்வதில் இருந்த பிரச்சனையைத் தீர்க்க இவை பயன்படுத்திய முறை
வேறுபட்டது. நவீன பெரிய வாலில்லா குரங்குகள், அதாவது கொரில்லாக்கள் மற்றும் சிம்பன்ஜிகள் இரண்டும்,
தரையில் "knuckle walking"
முறையைப் பயன்படுத்தின. இந்த வகை வாலில்லா குரங்குகளின் கைகள்
அவற்றின் கால்களை விட நீளமாக இருந்தன. ஆகவே, அவை தரையில் நடக்கும் போது, நான்கு கால்
விலங்குகளை (நான்கு கரங்களின் முனைகளையும், கால்களாக பயன்படுத்தும்) போல செயல்பட்டன, ஆனால்
அவர்களின் உடல்கள் தோராயமாக தரையிலிருந்து 45 டிகிரி கோணத்தில் இருந்தன, இது பெரும்பாலான நான்கு
கால் பிராணிகளில் இருந்து வேறுபட்டது, இவற்றின் உடல்கள் தரைமட்டமாக (அதாவது, தரைக்கு இணையாக)
இருக்கும், இரண்டு கால்களில் நடக்கும் ஹோமினின்களின் உடல்கள் கிடைமட்டமாக அல்லது தரைக்கு செங்குத்தாக
இருக்கும்.
ஒப்பீட்டு வகையில், ஹோமினின்கள் தங்கள் வழியில் தரையில் நடக்க இருகால்களை
மேம்படுத்தி கொண்டன. இந்த மாற்றத்திற்கான (அதாவது,
knuckle walking
மற்றும் இருகாலில் நடப்பதற்கு இடையில்) காரணங்கள் துல்லியமாக தெரிய வேண்டுமானால், மேலும் பல படிமான
ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. ஹோமினின்களுக்கும், பெரிய வாலில்லா குரங்குகளுக்கும் இடையிலான பிரிவுக்கு முன்னரே,
இருகால் உயிரிகளின் பரிமாணம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று
Ardipithecusன்
படிமானங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால்
Ardipithecusன் படிமானங்களை விட மிகவும் பழமையான,
ஆனால் பெரியளவில் ஆய்வு செய்யப்படாத பல படிமானங்கள், தற்போது
Orrorin மற்றும்
Sahelanthropus
என்ற வேறு பிரிவில் பகுக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், இருகால் உயிரிகளும்
ஆரம்பகாலத்திய உயிரிகளில் ஒன்றாகும், இது ஹோமினின்களின் பண்புகளை விவரிக்கிறது.
இந்த ஆரம்பகால ஹோமினின்கள் வாழ்ந்த சுற்றுச்சூழல், காய்ந்த மரங்கள் அல்லது
சிறிய காடுகள் இருக்கும் பிரதேசமாக இருக்கலாம் என்று
Ardipithecus
படிமானங்களுடன் சேகரிக்கப்பட்ட தகவல்கள் குறிப்பிட்டு காட்டுகின்றன.
ஆனால் வெப்பமண்டல காட்டு பகுதியாக இருக்காது என்றும் அவை தெரிவிக்கின்றன. ஆகவே, அவை எப்போதும்
ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்கு தாவக்கூடிய வாய்ப்புகள் கிடைக்காமல் தரைக்கும் இறங்கி
வந்திருக்கலாம். ஆரம்பகால ஹோமினின்கள் பெரிய வாலில்லா குரங்களில் இருந்து மாறியிருக்கலாம் என்று
புனையப்படுகிறது, ஏனென்றால் ஒரு மரத்திற்கும் இன்னொரு மரத்திற்கும் இடையிலான தூரம் அதிகரித்ததால்
அவற்றை தாண்டுவதற்காக, திறந்த சுற்றுச்சூழலில் இருகாலில் நடக்கும் முறையை ஏற்று கொண்டிருக்கலாம். பெரிய
வாலில்லா குரங்குகள் அவற்றை பொருத்தமட்டில் காடுகளில் வாழ தொடங்கி இருக்கலாம், அதன் விளைவாக,
அவற்றின் பழக்கங்கள் காடுகளோடு சுருங்கி விட்டிருக்க கூடும்.
இந்த புனைவுகோள் பரந்த உணர்வில் உண்மையாக இருக்க கூடும் என்பதற்கு ஏற்ப,
அதிகரித்து வரும் ஒற்றுமைகளுக்கு புதிய
Ardipithecusன் தரவுகள் பங்களிப்பு செய்கின்றன.
ஆனால் உண்மையான பரிணாம நிகழ்முறையை எடுத்துரைப்பதென்பது மிகவும் சிக்கலானதாகும். இந்த மிக விரிவான
விளக்கத்திற்கான ஆதாரங்கள் இரண்டு பிரிவுகளில் கிடைக்கிறது: ஒன்று இடம்பெயர்வு, மற்றொன்று உணவுமுறை.
பெரிய வாலில்லா குரங்குகளில் இருந்து பிரிந்த உடனேயே, ஹோமினின்களின்
இடம்பெயர்வு முறை ஆரம்பித்திருக்கும் என்றும், அது 4.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்றும்
Ardipithecusன்
படிமானங்கள் குறிப்பிட்டு காட்டுகின்றன.
Ardipithecusகள் இருகாலில் நடப்பதற்கான
ஆதாரத்தை, இடுப்பெலும்புகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் (வாலில்லா குரங்குகளில் இருப்பது போல நீண்டும்,
செங்குத்தாகவும் இல்லாமல் கீழிறங்கியும், பரந்தும் இருக்கின்றன) மற்றும் அதனோடு இணைந்த தசைகள் சார்ந்த
பகுதிகளில் தெளிவாக காண முடிகிறது. எலும்புகளோடு இணைந்திருக்கும் தசைகளின் அமைப்புகள், மண்டைஓட்டிற்கு
பின்புறத்திற்கு மாறாக அதன் கீழே இருக்கும் தாடை வழிகளின் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் இதை
தெளிவாக காண முடிகிறது. இந்த போக்குகள்
Australopithecusல் இன்னும் அதிகமாக அபிவிருத்தி
அடைந்திருக்கின்றன.
கடினமான காட்டுப்பகுதி அல்லது வெப்பமண்டல பகுதிகளில் எளிதாக படிமானங்கள்
கிடைக்காது என்பதால், நவீன வாலில்லா குரங்குகளின் முழுமையான படிமானங்கள் எதுவும் நம்மிடம் இல்லை.
ஆகவே, நம்முடைய சொந்த மூதாதையர்கள் உட்பட, வாலில்லா குரங்குகளின் மூதாதையர்கள் எப்படி மரங்களில்
நகர்ந்தார்கள் என்பதை துல்லியமாக சொல்ல முடியாது. எவ்வாறிருப்பினும், பொதுவான மூதாதையர்
தொடக்கத்தில் தாவி கொண்டிருந்தார்கள் என்று சொல்வது சரியாக இருக்கும், ஆகவே இருகாலில் நடப்பதென்பது
வருவிக்கப்பட்டது (அதாவது, புதிதாக தோன்றியது), அது மூலவம்சத்தின் பண்பு கிடையாது.
ஹோமினின்களை, வாலில்லா குரங்குகளிடம் இருந்து பிரித்து காட்டும் மற்றொரு
முக்கிய பண்புகள் அவை சாப்பிடுவதோடு தொடர்புபட்டிருக்கிறது, குறிப்பாக பற்கள், தாடைதசைகள் மற்றும்
முகவாய் (கீழ் மற்றும் மேல் தாடைகள், அவற்றை சார்ந்தவை) ஆகியவற்றோடும், அவற்றை சார்ந்த
தசைகளோடும் தொடர்புபட்டிருக்கிறது. ஹோமினின்கள் எதையும் உண்ணக்கூடியவை (இதனால் அவை மரங்களிலும்,
தரையிலும் பல வகையான உணவு ஆதாரங்களை எடுத்து பயன்படுத்தின) என்பதால் வாலில்லா குரங்குகளுக்கு
முந்தையவை (அதாவது குரங்கு போன்றவை) மற்றும் வாலில்லா குரங்குகளின் மூதாதையர்களுக்கு ஆரம்பகாலத்தில்
இருந்து தக்க வைத்திருந்தன என்று கட்டுரையாளர்கள் வாதிடுகிறார்கள். பெரிய வாலில்லா குரங்குகள், குறிப்பாக
சிம்பன்ஜிகள், உணவுமுறையில் சில இலகுதன்மையைப் பெற்றிருந்தன என்றாலும், அவை முதன்மையாக காட்டு
உணவுகளை உண்பதில் சிறப்பாக இருந்தன, அவற்றை அதிகமாகவும், இருந்தாலும் அதை மட்டுமே என்று இல்லாமல்,
பழங்களையும், பிற காட்டு காய்கறிகளையும் கூட சாப்பிட்டன.
முன்னர் சொல்லப்பட்ட தட்பவெப்பநிலை உலர்வு நிகழ்முறையின் ஆரம்பத்தில் இருந்து
உணவுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு, மெதுவான காடுகள் அழிய தொடங்கிய போது,
திறந்தவெளி சூழ்நிலைகள் அதன் அளவுகளில் அதிகரிக்க தொடங்கின. மர உணவுமுறைகளுக்கு மாற்றாக அங்கு
வாழ்ந்த உயிரினங்கள் அங்கு நிலவிய நிலைமைகளுக்கு ஏற்ப தங்களின் உணவுகளை எடுக்க தொடங்கி இருக்கலாம்.
மரத்தில் வாழ்ந்த வாலில்லா குரங்குகளின் சில வகைகள், காட்டு உணவுகளை விரும்பி
தங்களை அங்கே நிலைநிறுத்தி கொண்டிருக்கலாம். பிற உயிரினங்கள் சமவெளி மற்றும் திறந்தவெளிகளுக்கு
கொஞ்சமாக இடம் பெயர்ந்திருக்க கூடும். முதலில், இது "பொதுவான விஷயத்தின் மாற்றங்களாக" இருந்தன.
எவ்வாறிருப்பினும், படிப்படியாக, சுற்றுச்சூழல் வேறுபாடுகள் அதிகரித்த போது, அதாவது சுற்றுச்சூழல் வகையிலும்
மற்றும் புவியியல்ரீதியாகவும் கூட, அதாவது அடர்ந்த காடுகள் என்ற நிலையில் இருந்து திறந்த புல்வெளி என்ற
நிலைக்கு அதிகரித்த போது, இந்த பல்வேறு மரத்தில் வாழும் வாலில்லா குரங்குகளின் கூட்டம் பெருமளவில் பிரிந்து
சென்றன.
உணவுமுறையில் ஏற்பட்ட மாற்றம், உணர்வு அடிப்படையில் மிகவும் பிற்போக்கானது,
அவை முழுமையாக புதிய உணவுமுறையைத் தீவிரமாக ஏற்று விடவில்லை. ஆனால் ஒரு மாற்று உணவைத் தக்க வைப்பதற்கான
முயற்சியில், வேறுவேறு பகுதியின் பாகமாக இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. தரையில் இரண்டு கால்களில் நடப்பதும்,
மரங்கள் ஏறுவதற்கு பயன்படும் உடலமைப்புகளும் உட்பட
Ardipithecusகளில் வித்தியாசமான பல பண்புகள்
கலந்து காணப்பட்டன. ஒரு கலவையான உணவுமுறையை ஏற்று கொள்வதற்கு இடைநிலையான இடப்பெயர்வு உடலமைப்பு
ஹோமினின்களுக்கு தேவைப்பட்டதை இந்த பண்புகள் எடுத்துகாட்டுகின்றன.
Ardipithecusன்
இடைநிலை நிலைப்பாட்டிற்கு இரசாயன ஆதாரங்கள் உள்ளன.
Ardipithecusன்
சிதைவெச்சங்களில் கடின மற்றும் மென் கார்பன்களின் விகிதங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது சிம்பன்ஜிகள் போன்ற,
மரவாழ் மிருகங்களை ஒத்திருக்கின்றன, ஆனால் புல்வெளிவாழ் விலங்குகளில் பொதுவாக காணப்படும்
australopithecine
விகிதங்களுக்கு சற்றே மிக நெருக்கமாக இருக்கின்றன.
உணவு ஆதாரங்களுக்கான இடங்கள் மற்றும் தூங்குவது, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு
ஆகியவற்றிற்கு இடையே வளர்ந்து வந்த இடஞ்சார்ந்த பிளவு, இருகாலில் இடம்பெயர்வதற்கு உந்தி இருக்கலாம்.
புல்விதைகள் போன்ற திறந்தவெளி உணவுகளை மெதுமெதுவாக சாப்பிட ஆரம்பித்த ஆரம்பகால ஹோமினின்களுக்கு,
திறந்தவெளியில் உட்கார்ந்து சாப்பிடுவதை விட, உணவை சேகரித்து மரங்களில் கொண்டு போய் பாதுகாப்பாக
வைக்க முடிந்தது ஒரு பெரும் ஆதாயமாக இருந்திருக்க வேண்டும். இருகாலில் நடக்க முடிந்ததால் கைகள் சுதந்திரமாகின,
இதனால் பொருட்களைக் கொண்டு செல்ல முடிந்தது. குறுகிய தூரத்திற்கு இருகாலில் இடம்பெயரும் சிம்பன்ஜிகளால்
பெரும்பாலும் உணவுகளையும், பொருட்களையும் கொண்டு செல்ல முடிகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Ardipithecus ன்
பல்லமைப்பு முறைகளும், அவற்றின் தாடைகள் அமைந்திருக்கும் விதமும், விதைகள் போன்ற கடினமான உணவுகளையும்
அவற்றால் மென்று சாப்பிட முடியும் என்பதையே காட்டுகின்றன. ஆனால் இதுவே பெரிய வாலில்லா குரங்குகளைப்
பொறுத்தமட்டில், பழங்களையும், காய்கறிகளையும் கரிம்பியும், துண்டுகளாக்கியும் தான் சாப்பிட முடிவதைக் காணலாம்.
Lucy (Australopithecus afarensis)
இருந்த காலத்தில், சுமார் 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்,
Ardipithecusன்
ஆரம்ப காலக்கட்டத்தில் பல்லமைப்பு/மெல்லும் அமைப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள்
கணிசமாக நன்கு அபிவிருத்தி அடைந்திருக்கின்றன. திறந்தவெளி சுற்றுச்சூழல் குடியிருப்புகளில் வாழ்ந்த வாலில்லா குரங்குகளின்
(அதாவது ஹோமினின்களின்) குண மாற்றங்கள் பாதிக்கப்பட்டன.
Ardipithecus வகைகள்
Australopithecusன்
நேரடி மூதாதையர்களா அல்லது பரிணாமத்தின் ஒரு பக்க கிளையா என்பது மேற்கொண்டு படிமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டால்
தான் வரையறுக்க முடியும். எவ்வாறிருப்பினும், வேறொரு கேள்வி முற்றிலுமாக தீர்க்கப்பட்டிருக்கிறது, சிம்பன்ஜி
போன்ற மூதாதையர்களில் இருந்து ஹோமினின்கள் தோன்றின என்ற முந்தைய கருத்து சரியாக இருக்க முடியாது
என்ற சாத்தியக்கூறை Ardipithecus
உயிரினங்கள் எழுப்பி இருக்கின்றன. ஹோமினின்களின் மற்றும் பெரிய
வாலில்லா குரங்குகளின் பரிணாமம், இதுவரை என்ன புனையப்பட்டுள்ளதோ அதிலிருந்து வித்தியாசமான பாதைகளில்
வந்திருக்க கூடும். இப்போது Ardipithecus
தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, சிம்பன்ஜி போன்ற
ஹோமினின் தோன்றி இருக்கலாம் என்று பார்ப்பவர்களுக்கும், அப்படி பார்க்காதவர்களுக்கும் இடையிலான விவாதம்,
சந்தேகத்திற்கு இடமின்றி மனிதயின பரிணாமத்தின் புரிதலையும், வழிமுறையையும் மேலும் சிறப்பாக உயர்த்தும். |