World Socialist Web Site www.wsws.org |
: செய்திகள்
ஆய்வுகள் : கலை
விமர்சனம்
Roman Polanski refused bail by Swiss court ரோமன் போலன்ஸ்கிக்கு ஜாமீன் அளிக்க சுவிஸ் நீதிமன்றம் மறுப்பு By Hiram Lee சுவிட்சர்லாந்தின் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் செவ்வாயன்று திரைப்பட இயக்குனர் ரோமன் போலன்ஸ்கிக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளதோடு, அவர் தப்பிவிடும் அபாயம் இருப்பதாக அது அறிவித்துள்ளது. செப்டம்பர் 26 ஜூரிச்சில் கைது செய்யப்பட்ட போலன்ஸ்கி, இப்போது கிட்டத்தட்ட ஒரு மாதமாக சிறையில் இருந்து வருகிறார். நீதிமன்றத்தால் செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: "சுவிஸ் விதியின்படி, முழு ஒப்படைப்பு வழிமுறைகளின் போது, காவலில் வைத்திருக்க வேண்டும் என்பது சட்டமாகும்," அது மேலும் தெரிவிக்கையில், "காவலில் இருந்து விடுவிக்கப்பட்டால் போலன்ஸ்கி தப்பிவிடும் அபாயம் அதிகமாக இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது" என்று குறிப்பிட்டது. தம்மை காவலில் வைத்திருப்பதற்கு அடையாளமாக, சுவிட்சர்லாந்தின் Gstaadல் இருக்கும் தமது வீட்டிற்காகவது தம்மை விடுவிக்க வேண்டும் என்று முன்னதாக போலன்ஸ்கி சுவிஸ் நீதித்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்திருந்தார், ஆனால் அதுவும் மறுக்கப்பட்டது. போலன்ஸ்கி, தனது பயண ஆவணங்களை ஒப்படைத்தாலும், சட்ட ஒழுங்கு அதிகாரிகளைத் தினமும் சந்திக்க ஒப்பு கொண்டாலும் கூட, ஒப்படைப்பு நிகழ்முறை வரைக்கும் அந்த இயக்குனர் சுவிட்சர்லாந்தில் இருப்பார் என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று சுவிஸ் நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த வெள்ளியன்று, 76 வயதான போலன்ஸ்கி "மருத்துவ சிகிச்சைக்காக" மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அதற்கான காரணங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது மிகவும் இரகசியமாக கையாளப்படுகிறது. சுவிஸ் நீதித்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பால்கோ கல்லி, ராய்ட்டர் செய்தி நிறுவனத்துடன் பேசும் போது, "போலன்ஸ்கி இன்னமும் காவலில் தான் இருக்கிறார். தேவைப்பட்டால் அவருக்கு எல்லாவிதமான மருத்துவ கவனிப்பும் அளிக்கப்படும். பொதுவாக, அது சிறைச்சாலையிலேயே நடக்கலாம் அல்லது மருத்துவமனையில் நடக்கலாம்" என்று கூறியதோடு அவர் விஷயத்தை தெளிவுபடுத்தவில்லை. பிரான்சில் இருக்கும் போலன்ஸ்கியின் வழக்கறிஞர் Herve Temime ம் ராய்ட்டருக்கு பேட்டி அளித்தபோது, போலன்ஸ்கி சரியாக எங்கே வைக்கப்பட்டிருக்கிறார் என்பது கூட தமக்கு வெளிப்படையாக தெரியாது என்று தெரிவித்தார். "அவர் மருத்து கவனிப்புக்காக சிறைச்சாலையில் இருந்து அழைத்து செல்லப்பட்டார் என்பது மட்டும் தான் எனக்கு தெரியும். அவர் எங்கே இருக்கிறார், எப்போது சிறைச்சாலைக்கு திருப்பி அழைத்து வரப்பட்டார் என்று எதுவுமே எனக்கு தெரியாது" என்றார். கடந்த வாரம் இந்த வழக்கறிஞர் போலன்ஸ்கியைச் சிறைச்சாலையில் சந்தித்துவிட்டு வந்த போது, அவரது உடல்நிலை குறித்து மிகுந்த கவலை தெரிவித்திருந்தார். போலன்ஸ்கி "மன அமைதியில்லாமல் இருக்கிறார்", அவர் "மன இறுக்கத்தோடும்", "சோர்வாகவும்" இருக்கிறார் என்று அந்த வழக்கறிஞர் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார். போலன்ஸ்கி சிறை வேதனையில் பாதிக்கப்பட்டிருப்பது, வலதுசாரிகளிடமும், மத்திய வர்க்க தாராளவாத பிரிவுகளிடமும் எந்த இரக்கத்தையும் தூண்டிவிடவில்லை. அவை அவருக்கு எதிராக அவதூறைப் பரப்புவதில் ஒன்றிணைந்துள்ளன. செப்டம்பரில் அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து, அவரது தலையை கோரி வரும் சிலருக்கு இது சந்தேகத்திற்கு இடமில்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த சக்திகள், இந்த வழக்கு இழுத்து கொண்டே போவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி இருக்கின்றன. இவை தசாப்தங்களாக நீண்டு வரும் வேதனையான சூழ்நிலைகளுக்கு, வழக்கின் சட்டரீதியான உண்மைகளிலும், பாதிக்கப்பட்டவரின் விருப்பங்களிலும், அல்லது போலன்ஸ்கியின் வாழ்க்கையில் நிஜமாகவே நடந்த வேதனையான சம்பவங்களிலும் எவ்வித முக்கிய அணுகுமுறையையும் நிராகரித்திருக்கின்றன. அமெரிக்கா மற்றும் சுவிஸ் அரசாங்கங்கள், அவர்கள் விரும்பிய வகையில், அவர்களின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் எவ்வித முக்கிய எதிர்ப்பிற்கும் பயப்படாமல், போலன்ஸ்கியின் மீது அவற்றின் கொடூரமான தாக்குதலை நடத்துவதற்கான பாதையைச் சரி செய்து கொள்வதற்கு தான் இந்த புனிதமான "நீதி அட்டூழியம்" உதவி இருக்கிறது. |