World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The reality behind the US "success" in Iraq

ஈராக்கில் அமெரிக்க "வெற்றியின்" பின்னே உள்ள யதார்த்தம்

James Cogan
27 October 2009

Back to screen version

ஞாயிறன்று மத்திய பாக்தாதில் உள்ள நீதி அமைச்சகம் மற்றும் மாகாண அரசாங்கத்தின் தலைமையகத்தை துண்டாயப் பிய்த்தெறிந்து, 140க்கும் மேற்பட்டோரைக் கொன்றதுடன் குறைந்த பட்சம் 500 பேர்களைக் காயப்படுதிய பெரும் குண்டு வெடிப்புக்கள் ஆறரை ஆண்டுகால அமெரிக்க ஆக்கிரமிப்பால் உண்டுபண்ணப்பட்ட குறிப்பாக குறுங்குழுவாத, இனவாத மற்றும் அரசியல் மோதல்களின் நினைவூட்டலாக இருக்கின்றன.

வார இறுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கள் இருமாதங்களில் நடைபெற்ற அரசாங்க அலுவலகம் மீது நடந்த இரண்டாவது பெரிய தாக்குதலாகும். ஆகஸ்ட் 19 அன்று நிதி அமைச்சகம் மற்றும் வெளிவிகார அமைச்சகத்திற்கு வெளியே வெடித்த கார் குண்டு வெடிப்பில் 102 பேர் கொல்லப்பட்டனர், 600க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இரண்டு சம்பவங்களிலும் குண்டு வெடிப்பாளர்கள் வரிசையான சோதனைச் சாவடிகள் ஊடாக வெடிபொருள் ஏற்றிய வாகனங்களை ஓட்டிச்செல்லக்கூடியதாக இருந்தது.

ஒவ்வொருநாளும் ஈராக்கில் அரசாங்க அதிகாரிகளுக்கு அல்லது பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக சராசரியாக, 10 அல்லது 15 குண்டு வெடிப்புக்கள், தற்கொலை குண்டு வெடிப்புக்கள் அல்லது கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. சில சம்பவங்களில் குண்டுவெடிப்புக்கள், ஒரு குறிப்பிட்ட இனக்குழு அல்லது குறுங்குழு பின்னணி உள்ள குடிமக்களை கண்மூடித்தனமாய் இலக்கு வைக்கின்றன. ஞாயிறு குண்டு வெடிப்பைவிடவும் குறைவாக ஈர்க்கக்கூடிய அவை செய்தி ஊடகத்தால் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன.

வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் எழுச்சியாளர்கள் ஈராக்கில் இன்னும் உள்ள 120,000 அமெரிக்கத் துருப்புக்களை தாக்குகின்றனர். அமெரிக்கப் படைகள் நகர மையங்களுக்கு வெளியே நன்கு பாதுகாக்கப்பட்ட தளங்களில் இருந்து இப்பொழுது காவல்புரிந்து வருகின்றனர்.

பிரதமர் நூரி அல் மாலிக்கியின் பொம்மை அரசாங்கம் சதாம்ஹூசைனின் முன்னாள் பாத்திச ஆட்சியின் விசுவாசிகள் மீது உயர்வகை குண்டுவீச்சுக்களுக்கு குற்றம் சாட்டினார். அதன் சாத்தியம் மறுப்பதற்கில்லை. மேலாதிக்கம் உடைய சுன்னி அரபு பாத்திச அமைப்பின் குறிப்பிடத்தக்க பகுதியினர், அமெரிக்க படையெடுப்புடன் ஒத்துழைத்த ஷியைட் மற்றும் குர்திஷ் பகுதிகளிடம் ஒப்பிடுகையில் சொத்து, அந்தஸ்து, சலுகை என்ற முறையில் தாங்கள் முன்னர் ஒரு சமயம் கொண்டிருந்த அனைத்தையும் உண்மையில் இழந்துவிட்டனர்.

பல்வேறு அரசியல் மற்றும் மதப் பிரிவினரைக் கொண்ட எண்ணிறைந்த ஈராக்கியர்கள் அமெரிக்க படையெடுப்பால் உருவாக்கப்பட்ட ஆட்சியின் மீது தாக்குதல் தொடுப்பதில் தன்னார்வமாய் தொண்டாற்றுவதற்கு போதிய துன்பங்களை பெற்றுள்ளனர். 2003லிருந்து அமெரிக்கப் படைகளால் நேரடியாக கொல்லப்பட்ட நூறாயிரக் கணக்கானோர் உட்பட பத்துலட்சம் மக்களுக்குமேல் உயிரை இழந்துள்ளனர். பல பத்தாயிரக் கணக்கான ஏனையோர் அமெரிக்க மற்றும் ஈராக்கிய அரசாங்க சிறைக முகாம்களில் தன்னிச்சையாக தடுப்புக்காவலில் வைக்கப்படல் மற்றும் மோசமாக இழிவுபடுத்தப்படல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு மில்லியன் மக்களுக்கும் மேலானோர் தங்கள் வீடுகளில் இருந்து நிர்பந்திக்கப்பட்டு அல்லது ஒன்றாய் நாட்டைவிட்டு வெளியேறும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர்.

அரசாங்க அமைச்சகங்களின் மீதான தாக்குதல், 2010 ஜனவரி 31 அளவில் அரசியலமைப்பு ரீதியாக இடம்பெற்றாக வேண்டிய தேர்தல்களுக்கு இட்டுச்சென்றுள்ளதில் ஆக்கிரமிப்பு ஆதரவு ஈராக்கிய கன்னைகளின் மத்தியில் அதிகரித்த அளவிலான கசப்பான நெடுங்காலப் பகையுடன் நிகழ்வுப் பொருத்தம் உடையதாக இருக்கிறது. தனது அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் படைகள் உடன்பாடு பற்றிய நிலையின் மீதாக ஒரு தேர்தலாகவும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகவும் நடத்தவிருக்கும் உறுதிமொழியை திரும்ம்ப்பெறுவதற்கு வாஷிங்டன் மாலிக்கி-ன் மீது பேரளவில் அழுத்தத்தைக் கொடுத்தது. உடனடியாக அமெரிக்கத் துருப்புக்கள் திரும்பப்பெறப்படுவதை பார்க்க விரும்பும் ஈராக்கியரால் அத்தகைய சர்வ ஜன வாக்கெடுப்பு, உடன்பாட்டிற்கு எதிராக பெரும்பான்மை வாக்குகளை இடம்பெறச் செய்யலாம் என்று அமெரிக்க வண்ணனையாளர்கள் வெளிப்படையாக உண்மையென்று ஒப்புக்கொள்கின்றனர்.

ஒபாமா நிர்வாகத்திடமிருந்து திரைமறைவில் ஊக்குவிக்கப்படும், மாலிக்கியின் தாவா கட்சி, ஈரானிய தொடர்புடைய இஸ்லாமிய உயர் சபையால் மேலாதிக்கம் செய்யப்படும் ஷியைட் அடிப்படைவாதிகள் கூட்டணியை விட்டு விலகலாம் மற்றும் அதற்கெதிராக போட்டியிடும். அடிப்படைவாதத்திற்கு குறைவில்லாத மாலிக்கியினல் "குறுங்குழுவாத" மற்றும் "ஜனநாயக விரோதமானது" என்று நலமற்ற முறையில், பேய்போல் ஆக்கிக்காட்டப்படும் ஈராக்கிய இஸ்லாமிய உயர் சபை படிநிலையானது, தாவாவின் புதிய "தேசியவாத" கூட்டணி அறுதிப்பெரும்பான்மை பெற்றால் ஈராக்கிய அரசில் தற்போது அது வகித்துவரும் இலாபகரமிக்க நிலைகள் பலவற்றை இழக்கும் என அச்சுறுத்தப்படுகிறது. மாற்றாக, ஈராக்கிய இஸ்லாமிய உயர் சபையை ஒரங்கட்டும் அவரது முன்னோக்கு தோல்வி அடைந்தால் மாலிக்கி பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்.

அமெரிக்க படையெடுப்பை செயலூக்கத்துடன் ஆதரித்தால் அதற்கு கைமாறாக எண்ணெய் வளம் மிக்க நகரான கிர்க்குக் மற்றும் வட ஈராக்கிலுள்ள ஏனைய இடங்களை கட்டுப்பாட்டில் எடுக்கலாம் என்று 2003ல் குர்திஷ் தேசியவாத சக்திகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை கெளரவிக்க தவறியதன் மூலம் அவற்றுடன் மாலிக்கியின் அரசாங்கம் பதட்டமிக்க விலகிச்செல்லும் போக்கையும் கூட உருவாக்கியுள்ளது. குர்திஷ் சுயாட்சிப் பிராந்தியம் என்று உரிமை கோரும் வட பகுதியில் துர்க்கோமன் கன்னைகள் மற்றும் அரபு இனக்குழுவினரின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்கையில், எந்த தேர்தலும் கிர்க்குக்கில் வாக்கெடுப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என குர்துகள் வலியுறுத்தி வருகின்றனர். அரசாங்கத் துருப்புக்களும் குர்திஷ் இராணுவமும் ஒருவர் மீது ஒருவர் கிட்டத்தட்ட துப்பாக்கிச்சூடு நடத்திக்கொள்ளும் பல பல சம்பவங்கள் இந்த ஆண்டு நடந்துள்ளன.

சுன்னி மற்றும் ஷியைட் மேற்தட்டுகளுக்கிடையில், போட்டி ஷியைட் குழுக்களுக்கிடையில் மற்றும் குர்திஷ் பிராந்தியம் மற்றும் அரசாங்கத்திற்கிடையில் அதிகார நிலைப்பாடுகளும் சலுகைகளும் எப்படி பங்கிட்டுக்கொள்ளப்படும் என்பதன் மீதாக வரும் பதட்டங்கள் நீட்டிக்கப்படும் அளவிற்கு, தேர்தல்கள் நடத்தப்பட்டாலும்கூட உடன்பாடு எதுவும் எட்டப்படாது. எந்தவித தேர்தல் பிரச்சாரமும் கிட்டத்தட்ட நிச்சயமாக குறிப்பிடத்தக்க வன்முறை மற்றும் பித்தலாட்டத்தை காணும் மற்றும் பகிரங்கமான உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டிவிடும்.

புஷ் நிர்வாகத்தின் இராணுவ "அலை எழுச்சி" வெற்றி மற்றும் ஈராக் இப்பொழுது ஸ்திரமான பாதையிலிருக்கிறது என்ற அமெரிக்க நிறுவன அமைப்புக்குள் திரும்பத்திரும்ப கூறப்பட்டுவரும் கூற்றுக்களுக்கு மாறாக நிலைமையானது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. சுய ஏமாற்று மற்றும் மோசடி இவை நிலைகொண்டிருப்பதின் தெளிவான எடுத்துக்காட்டு ஞாயிறு அன்று, நியூயோர்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளரும் ஈராக்கிய படையெடுப்பின் ஆதரவாளருமான Thomas Friedman ஆல் வெளியிடப்பட்டது.

ஜனவரி தேர்தல் இடையூறில்லாமல் சென்று, "உண்மையான பல்- குழுவினரின் ஜனநாயகத்திற்கு" அர்ப்பணிக்கும் அரசாங்கத்தை விளைவிக்குமானால் மட்டுமே, "கடும் விலை கொடுக்க வேண்டினும் யுத்தத்திற்கு ஒரு நாகரிகமான முடிவை ஏற்படுத்த ஈராக்கிற்கு உதவும் நற்பெயரை எடுக்க" பாரக் ஒபாமா 2012ல் பாக்தாதிற்கு பறப்பார் என்று Friedman பகற்கனவு காண்கிறார்.

உண்மை என்ன? ஆக்கிரமிப்பு முழுவதும், மிகவும் இலஞ்சம் வாங்கும் மற்றும் ஊழல் மிக்க இன -குறுங்குழுவாத படைகளுக்கு இலஞ்சம் கொடுத்தல் உள்பட, பிரித்தாளும் தந்திரோபாயங்கள் வழிகளாகவும் அதன் மூலம் ஈராக்கிய எதிர்ப்பு உடைந்து இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க்கூடியதாகவும் உள்ளன.

2003ல் புஷ் நிர்வாகமானது உள்ளூர் ஒத்துழைப்பாளர்களின் ஆதரவைப் பெறவேண்டி, வடக்கில் சுயாட்சி கொண்ட குர்திஷ் குறு அரசையும் பாக்தாத் அரசாங்கத்தை ஷியைட் அடிப்படைவாதிகள் கட்டுப்பாட்டில் கொள்ளவும் ஊக்குவித்தது. அலை எழுச்சியின் போது, அமெரிக்கத் துருப்புக்களின் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டி, பல்லாயிரக் கணக்கனா டாலர்களுடன் நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் கட்டுப்பாடு சுன்னி கிளர்ச்சிக் கொமாண்டர்களிடம் அளிக்கப்பட்டது மற்றும் தொடர்ந்து எதிர்ப்பவர்கள் பற்றி தகவல் அளிக்கப்பட்டது. ஷியைட் பகுதிகளில், மத குரு மொக்தாதா அல் சதரின் மெஹ்தி இராணுவத்தின் தலைவர்கள் விலை போக உடன்பட்டதுடன், கிளர்ச்சி சக்திகளை அழிப்பதற்கு உதவி செய்யப்பட்டது.

வோல் ஸ்ட்ரீட் இதழானது அக்டோபர் 26 அலை எழுச்சியின் பண்பை அப்பட்டமாக விவரித்தது, "மரபார்ந்த அமெரிக்கப் படைகள் தனித்தனி ஈராக்கிய பகுதிகளிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் கிளர்ச்சித் தலைவர்கள், நிதியாளர்கள் மற்றும் போராளிகள் பற்றி விவரமான தகவல்களை பெறுவது இறுதியில் அபிவிருத்தி செய்யத்தக்கதாக இருந்தது. அத்தகவலானது கடற்படை மற்றும் இராணுவ டெல்டா படைகள் போன்ற கொமாண்டோ படையணியிடம் கொடுக்கப்பட்டன, அவை நூற்றுக்கணக்கான தனித்தனி சுன்னி மற்றும் ஷியைட் போராளிகளை தீர்த்துக் கட்டினர்."

ஈராக்கில் உள்ள கொலைப் படைகளின் நடவடிக்கைகள் தளபதி. ஜெனரல் மக்கிரிஸ்டலிடலால் வழிநடத்தப்பட்டது, அவரைத்தான் ஒபாமா ஆப்கானிஸ்தானில் "அலைஎழுச்சி" மற்றும் அதைப்போன்ற பரந்த கொலைகள் பற்றிய நிகழ்ச்சிநிரலை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார்.

"பல் குழுவினர் ஜனநாயகமானது" (multi-sectarian democracy) தங்களின் சொந்த சடரீதியான நலன்கள், சுய இலாபம் இவற்றுக்காக ஈராக்கிய மக்கள் மீது இரத்தக்குளியலை நடத்த உதவுத் முதலாளித்துவ கூறுகளிடம் இருந்து எழப் போவதில்லை. ஏதாவது இருக்குமாயின், அது மக்கள்தொகை எதிர்கொள்ளும் சமூகப் பெரும் ஆவியால், அவர்களின் இன-குழுவாத பிளவுகள் பற்றிய முன்னேற்றம் மேலும் உயர்வுறும்.

ஒரு சமயம் ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்த சமுதாயமாக இருந்த ஈராக் சிதறடிக்கப்பட்டு ஏழ்மையாக்கப்பட்டது. குறைந்த பட்சம் 50 சதவிகித உழைக்கும் மக்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பு இல்லை. மக்கட்தொகையினரில் பாதிப்பேர் மட்டுமே பாதுகாப்பான குடியீர்ப்பு பெறுகின்றனர். பாக்தாத் மற்றும் மற்றைய மாநகர்களில் ஏழ்மை பீடித்த பகுதிகளில் மக்கள் சாக்கடை வழிந்தோடும் தெருக்களில், ஒரு நாளக்கு 10 மணிநேரமே மின்சாரம் பெறக்கூடிய நிலையில் வாழ்கின்றனர். ஐ.நா தகவலின்படி, 60 சதவிகித ஈராக்கியர்கள் வருடக்கணக்கான சண்டையால் "பெரிய புனருத்தாரணம் " தேவைப்படும் வீடுகளில் வசிக்கின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஒத்துழைப்பாளர்களில் எவரும் அவற்றை சிறிதளவுகூட சீர்செய்ய வழிகளையோ அல்லது நோக்கத்தையோ கொண்டிருக்காததால், இந்த நிலைமைகளுக்கு எதிரான ஒரு அரசியல் வெடிப்பு கொதிக்கத்தொடங்கியுள்ளது. அந்த உண்மையானது தேர்தலில் தெளிவாகக் காட்டப்படும், அதில் வாய்ச்சவடால்களும் பொய் வாக்குறுதிகளையும் தவிர வேறொன்றும் செய்யப்படமாட்டாது.

இதற்கிடையில், மாலிக்கி "முதலீட்டாளர் மாட்டில்" கலந்து கொள்ளுவதற்காக கடந்த வாரம் வாஷிங்டன் சென்றார். அங்கு வர்த்தகத்தின் பிரதான விஷயம், நாட்டின் பரந்த எண்ணெய் இருப்புக்களை வெளிநாட்டு நிறுவனங்கள் சுரண்டுவதற்கும் இலாபம் சம்பாதிக்கவும் அவற்றுக்கு விற்பனை செய்வதாக இருந்தது.

ஈராக்கில் கீழ்க்காணப்படும் பதட்டங்கள் மற்றும் கிளர்ச்சித்தன்மை மற்றும் ஆப்கானிஸ்தானில் விரிந்து வரும் பேரவலம் இவற்றை எடுத்துக் கொண்டால், வார இறுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கள் ஈராக்கில் உள்ள தீவிர அமெரிக்க ஆதரவு சக்திகள் "பாதுகாப்பு நெருக்கடியை" உற்பத்தி செய்யவும், அதனை தேர்தல்களை தள்ளிப்போடவோ அல்லது ஒட்டுமொத்தமாக இல்லாது செய்யவோ எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதி என்பதன் சாத்தியத்தை, அக்கறை கொண்ட ஒரு அவதானிப்பாளரால் விலக்கி வைக்க முடியாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved