Newly repaired Hubble telescope releases first images
புதிதாக பழுதுபார்க்கப்பட்ட ஹப்பெல் தொலைநோக்கி அதன் முதல் படங்களை அனுப்பியது
By Bryan Dyne
23 September 2009
Use this version
to print | Send
feedback
மே 2009ல், ஹப்பெல் விண்வெளி தொலைநோக்கி இறுதித் தரத்தை உயர்த்தி
அபிவிருத்தி (Final upgrade)
செய்யப்பட்டது. இந்த பில்லியன் டாலர் முயற்சி, செப்டம்பர் 9ல் அதன்
முதல் பலனை வெளியிட்டது. ஹப்பெல் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட விண்வெளி நெபுலாக்களின், நட்சத்திர
கூட்டங்களின் மற்றும் கேலக்சிகளின் ஓர் ஒளிமிக்க மிக சமீபத்திய படங்களை நாசா வெளியிட்டிருந்தது.
NGC 6302 (The Butterfly
Nebula)
வெளியிடப்பட்ட படங்களில் கோள்களின் நெபுலா
NGC 6302 என்ற
பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருந்தது, ஆனால் இது மிக பொதுவாக மூட்டைப்பூச்சி அல்லது பட்டாம்பூச்சி நெபுலா
என்று தான் அழைக்கப்படுகிறது. ஸ்கார்பியஸ் (விருச்சிகம்) நட்சத்திர கூட்டத்தில் இருந்து சுமார் 3,800 ஒளி
ஆண்டுகளுக்கு [|ஒளி,
ஒரு வருடத்திற்கு ஒன்பது லட்சத்து நாற்பத்து ஆறாயிரம் கோடி கிலோமீட்டர் பயணம் செய்ய வல்லது (Exactly
9,460,730,472,580.8 km (about 10 Pm)- இந்த
துாரத்தை ஓர் ஒளி ஆண்டு என்று சொல்லுவார்கள்]
அப்பால் இருக்கும் இந்த நெபுலா, Wide Field
Camera 3 ஆல் எடுக்கப்பட்டது. அண்ணளவாக 2,200 ஆண்டுகளுக்கு
முன்னால் உருவாகி இருக்க கூடிய NGC 6302ன்
நட்சத்திரங்களில் இருந்து நீண்டுவிரிந்த வாயு உருவாகிறது. இந்த "பட்டாம்பூச்சியின் சிறகுகள்" ஓர் அசாதாரணமான
தூரத்திற்கு பரவி நிற்கின்றனஅண்ணளவாக
இரண்டு ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு, அல்லது சூரியனில் இருந்து அதற்கு மிக அருகில் இருக்கும் ஆல்ஃபா சென்டெளரி (Alpha
Centauri) நட்சத்திர கூட்டம் இருக்கும் தூரத்தில் பாதி
அளவிற்கு இது விரிந்து நிற்கிறது.
NGC 6302 ன் உருவெளி வடிவம்,
ஒரு மைய நட்சத்திரத்தை வெளிப்படுத்தி காட்டுகிறது. அது நமது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் மிக வெப்பமான
நட்சத்திரங்களில் ஒன்றை போல இருக்கிறது, வெப்பம் 200,000 கெல்வினுக்கும் அதிகமாக (சுமார் 400,000
டிகிரி பாரன்ஹீட்டிற்கு நெருக்கமாக) இருக்கிறது. இதுவரை கண்டறியப்பட்டிராத இந்த மைய நட்சத்திரம், அதன்
மத்திய பகுதியில் (Equator)
அடர்த்தியான வாயுக்களாலும், தூசிகளாலும் சூழப்பட்டிருக்கிறது. இந்த வட்டின் அதீதமான அடர்த்தி தான்,
நெபுலாவின் இருதுருவமுனைப்பாட்டு வடிவத்தை (Bipolar
structure) ஏற்படுத்தி இருக்க கூடும் என்று புனையப்படுகிறது.
இந்த நெபுலாவின் சிக்கலான வடிவம் அதன் வரலாற்றின் பலனாக ஏற்பட்டிருக்கிறது.
நாசாவின் கருத்துப்படி, அதன் மையத்தில் இருக்கும் நட்சத்திரம், சூரியனை விட விட்டத்தில் 1,000 மடங்கு பெரிய
ஒரு "பெரிய சிவப்பு திட்டாக" உருவாகி இருக்கிறது. வெளிப்புறத்தில் இருக்கும் சில வாயுக்கள், மத்திய பகுதியில்
இருந்து குறைந்த வேகத்தில் வெளியேற்றப்படுகின்றன. இவை அந்த "வளையங்களுக்கு" செங்குத்தாக சிறிய
வட்டத்தை உருவாக்குகின்றன. இந்த சிறகுகள் உயர்ந்த வேகத்தில் வெளியிடப்படும் வாயுக்களால் உருவாகின்றன.
"காலப்போக்கில், மைய நட்சத்திரம் வெப்பமடையும் போது, மிக வேகமான நட்சத்திர காற்று (மணிக்கு 2
மில்லியன் மைல்களுக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் மின்னேற்றம் பெற்ற துகள்களின் ஆவி) ஏற்கனவே இருக்கும்
சிறகு வடிவத்திலான உருவெளி வடித்தின் வழியாக வெளிப்படும், இது அதன் வடிவத்தை மேலும் மாற்றி அமைக்கும்."
The Carina Nebula
கரீனா நெபுலாவின் மற்றொரு படமும் வெளியானது, வாயுக்களாலும், தூசிகளாலும்
உருவான ஒரு தூணைப் போல இந்த நட்சத்திர கூட்டம் உருவாகி இருக்கிறது, இது கரீனா நட்சத்திர மண்டலத்தின்
தெற்கு பகுதியில் இருந்து 7,500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்திருக்கிறது. இன்ப்ராரெட்டிற்கு நெருக்கமான அலைவரிசையை
பயன்படுத்தி துல்லியமான தகவல்களை அறியும் போது, இந்த படம் ஒரு முழுமையான தூணின் மற்றும் அதன் உட்புற
காட்சியைத் தருகிறது. வாயு கூட்டங்களில் இருந்து வெளிவரும் சக்தி வாய்ந்த கதிரியக்கம், வடிவத்தின்
மேற்புறத்தில் இருந்து பார்க்கும் போது ஒளிவீச்சுக்களை உருவாக்குகின்றன. உள்ளே, அதீத வெப்பமும், அழுத்தமும்
புதிய நட்சத்திரங்களை உருவாக்குகிறது.
Eta Carina என்று அறியப்படும்
ஹைபர்ஜெயிண்ட் பைனரி நட்சத்திரமும் (Hypergiant
binary star) இந்த நெபுலாவில் தான் இருக்கிறது. இந்த
பைனரி அமைப்புமுறையை (Binary system)
உருவாக்கும் நிறைய மாபெரும் ஜோடிகள், சூரியனின் நிறையை (Mass)
விட 100-150 மடங்கு வரை நிறை அளவு கொண்டவை. அதே போல சூரியனை விட ஏறத்தாழ 4 மில்லியன்
அளவு அதிகமான ஒளிஉமிழ்தன்மை (Luminosity)
கொண்டவை. அதன் பெரிய அளவின் காரணமாக, (விண்ணியல் ரீதியாக பேசுவோமேயானால்) எதிர்வரும் காலத்தில்
இந்த நட்சத்திரம் காமா கதிர்வெடிப்பிற்குள்ளோ அல்லது ஹைபர்நோவாவிற்குள்ளோ (Hypernova)
போகும். அதன் விளைவாக ஏற்படும் ஒரு வெடிப்பில் அதன் ஜோடி அழிக்கப்படலாம் அல்லது அந்த நிகழ்வில் உருவாகும்
கண்ணுக்கு தெரியாத கருந்துளைக்குள் (Black hole)
இழுத்துக் கொள்ளப்படலாம்.
வரிவரியாக இருக்கும் சுருள் கேலக்சியான
NGC 6217
தான், ஆய்வுகளுக்கான நவீன காமெராவால் புகைப்படமெடுக்கப்பட்ட முதல் விண்வெளி பொருளாகும். இந்த நவீன
காமெரா ஹப்பெல் பழுதுபார்க்கும் திட்டம் 4ல்
(STS-125) மறுநிர்மாணம் செய்யப்பட்டது.
NGC 6217
இந்த கேலக்சி (Galaxy),
Ursa Major
எனும் நட்சத்திர கூட்டத்தில் இருந்து 6 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால்
இருக்கிறது. 2001ல், ஒரு எக்ஸ்-ரே கதிர்வீச்சு இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது, இது "நட்சத்திர
வெடிப்பு" (Starburst)
பால்வெளி மண்டலம் என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டது.
5 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும்,
Abell 370 கேலக்சியின்
புகைப்படங்கள், கிரேவிடேஷனல் லென்சிங் (Gravitational
lensing) உதவியால் படமெடுக்கப்பட்டன.
Gravitational lensing
என்பது, ஐன்ஸ்ரைனின் பொது சார்புத்தத்துவம் (General
relativity) மற்றும் வெளிகாலத்தின் வளைவு (Curvature
of spacetime) ஆகியவற்றின் பலனாகும். இது மாபெரும்
பொருட்களைச் சுற்றி ஒளியின் பாதையை வளைத்து எடுத்து செல்கிறது. பார்வையாளருக்கு சரியான சாதக புள்ளி
இருந்தால், இது ஒளியை ஒருமுகப்படுத்தி காட்டும். விண்வெளி மண்டலத்தில் (A
Galactic Cluster) குவிப்பதன் மூலம், ஹப்பெல் தொலைநோக்கியால்
பிரபஞ்சத்திற்குள் மிக ஆழமான தூரத்திற்கு போக முடியும், அத்தோடு சாதாரணமாக சாத்தியப்படுவதை விட மிக
மிக துல்லியமாகவும் அதனால் ஊடுருவ முடியும்.
அண்டவெளி-காலத்தில் (Spacetime)
ஏற்படும் மாற்றங்கள் தான், படத்தின் பின்புலத்தில் நீண்டு மெலிந்த ஒழுங்கற்ற கோடுகளையும், சுடர்களையும்
ஏற்படுத்துகின்றன.
Globular Cluster Abell
370
Gravitational lensing
என்பது விண்ணியல் பெளதீகத்தில் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கிறது. உதாரணமாக, இது கரும்பொருள் (Dark
Matter) குறித்து ஆய்வு செய்ய விண்ணியல் நிபுணர்களுக்கு
உதவுகிறது. அதன் நிறை பிற நிறைகளைப் போன்றே அண்டவெளி-காலத்தை (Spacetime)
வளைக்கிறது என்றாலும், சிதறுதலாக இருக்கும் நிறையை மறுகட்டமைப்பு செய்யும் போது, அது கரும்பொருள்
இருக்கும் இடத்தை வெளிப்படுத்தி காட்டுகிறது.
மற்றொரு படம் ஓர் ஐம்பெரும் கேலக்சிகளை எடுத்துக்காட்டுகிறது. இது கேலக்சி
மண்டலங்களின் மாபெரும் வடிவங்கள் மோதும் போது என்ன நடக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. வெளியின்(space)
அருகாமைப் பகுதிகளை இந்த ஐந்து கேலக்சிகளும் (Five
galaxies) ஆக்கிரமிப்பதாக தெரிகிறது, மேல் இடது பக்கம்
இருக்கும் விண்வெளி மண்டலம் மற்ற நான்கையும் விட ஏழு மடங்கு நெருக்கமாக இருக்கும் உண்மையை இந்த இரு
பரிமாண படம் எடுத்துகாட்டுகிறது. ஐந்து விண்வெளி மண்டலங்களில் இருந்தும் பெறப்பட்ட ஒளிகளின் அலைநீளத்தின்
மூலமாகவும், இடதில் இருக்கும் ஒன்றின் Redshift
மற்ற நான்கையும் விட குறைவாக இருப்பதில் இருந்தும் இது
அறியப்படுகிறது. பூமியில் இருந்தும், அண்டவெளி-காலத்தின் விரிவாக்கத்தில் இருந்தும் கேலக்சிகள் இருக்கும் தூரத்தின்
விளைவாக இந்த Redshift
ஏற்படுகிறது.
Stephan's Quintet
இரண்டைப் போல தெரியும், ஏனைய நான்கு கேலக்சிகளும் (மீண்டும் விண்ணியல் மொழியில்
கூறுவதானால்) சமீபத்தில் மோதி கொண்டு, அவை மெதுவாக மறுவடிவம் எடுத்து வருகின்றன. வெள்ளை நிற
புள்ளிகள் கேலக்சிகளின் முந்தைய மையங்கள், பெரும்பாலும் இது கருந்துளைகளாக இருக்கலாம், இவை தவிர்க்க
முடியாமல் இணைய கூடும், அவ்வாறு இணையும் போது அதற்கு அதற்குரிய கேலக்சிகளில் ஒரு மாபெரும் சக்தி
வெடிப்பு ஏற்படலாம்.
உருவாகி வரும் இரண்டு விண்வெளி மண்டலங்களில் காணப்படும் துளிர்கள், பழைய
சுழற்கரங்களின் எச்சசொச்சங்களாக இருக்கலாம். இந்த இரண்டு கேலக்சிகளும் மோதும் போது ஏற்படும் எதிரெதிர்
ஈர்ப்பு விளைவுகளில் இருந்து விண்வெளிக்குள் ஒரு பெரிய கதிர்வீச்சு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. கேலக்சிகள்
மோதி கொள்வது என்பது, எப்போதும் சாதாரணமாக நடப்பது தான். அண்ணளவாக இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு
பின்னர் பால்வெளி மண்டலம், ஆண்ட்ரோமெடா கேலக்சியுடன் (Andromeda
Galaxy) மோதும் போது, நம்முடைய சூரியனுக்கும் இது
போல ஏற்படலாம்.
Omega Centauri Globular
Cluster
Omega Centauri Globular
மண்டலத்திற்குள் ஹப்பெலின் பார்வையில், ஒரு நூறு ஆயிரத்திற்கும் மேலான
நட்சத்திரங்கள் சிக்கி இருக்கின்றன. இவையெல்லாம் பால்வெளி மண்டலத்திற்குள் இருக்கின்றன. உண்மையில்,
Edmond Hailey
இந்த மண்டலத்தை நெபுலா என்று வகைப்படுத்தினார். ஆனால் உண்மையில்
அந்த மண்டலம் என்னவென்று 1830களில், ஜோன் வில்லியம் ஹெர்ஸ்செல் கண்டறியும் வரை, அது அங்கீகரிக்கப்படாமல்
இருந்தது. அதை வெறுங்கண்களாலேயே பார்க்கலாம், கிரேக்க விண்ணியல் ஆராய்ச்சியாளர்
Ptolemy, அதை
தான் அது ஒரேயொரு நட்சத்திரம் என்று நம்பிக் கொண்டிருந்தார்.
அந்த மண்டலம் மிகவும் பழமையானது, அண்ணளவாக 12 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக
இருக்க கூடும். எவ்வாறிருப்பினும், அந்த மண்டலம் பலவிதமான விண்வெளி காலத்தைக் கொண்டிருக்கிறது, அது ஒரே
காலகட்டத்தில் உருவாகவில்லை என்பதும் அதில் அடங்கும், ஒப்பிட்டுப்பார்க்கும் போது, இதை தான்
globular மண்டலங்கள்
என்று விண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இந்த மண்டலங்களின் மையத்தில் இருக்கும் ஒரு கருந்துளைப்
பற்றிய சமீபத்திய ஆதாரங்களின்படி, இந்த நட்சத்திரங்கள் நீண்ட காலத்திற்கு முன்னர் பால்வெளியால் "விழுங்கப்பட்ட"
ஒரு சிறிய கேலக்சியின் எச்சசொச்சங்களாக இருக்க கூடும். |