WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
The Clearstream trial: a conflict in the French
bourgeoisie
கிளியர்ஸ்ட்ரீம் வழக்கு விசாரணை: பிரெஞ்சு முதலாளித்துவத்தில் வேறுபாடுகள்
By Alex Lantier
7 November 2009
Use this
version to print | Send
feedback
அக்டோபர் 23ல் விசாரணைகள் முடிந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற கிளியர்ஸ்ட்ரீம்
வழக்கு இரக்கமற்ற அரசு அரசியலுக்கு இழிவான நீதித்துறை மறைப்பைக் கொடுத்துள்ளது.
முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன், உளவுத்துறை மற்றும் பெருநிறுவன
நபர்களுடன் வங்கிகளுக்கிடையேயான நிதிமாற்ற நிறுவனமான கிளியர்ஸ்ட்ரீம்மில் கணக்கு வைத்திருப்பவர்கள் பட்டியலில்
சார்க்கோசி மீது அவதூறு கூறுவதற்காக அவருடைய பெயரைத் தவறான முறையில் சேர்த்தார் என்னும் பிரெஞ்சு
ஜனாதிபதி சார்க்கோசியின் குற்றச்சாட்டுக்களில் இருந்து இந்த வழக்கு எழுந்தது. முன்பு ஒப்புக் கொண்டதைவிட
முன்னரே வில்ப்பன் இப்பட்டியல்களைப் பற்றி அறிந்திருந்தார் என்பதற்கான சான்றுகளை இந்த வழக்கு விசாரணை
கண்டுபிடித்தது. ஜனவரி 2010ல் நீதிபதிகள் தீர்ப்புக்கூற இருக்கின்றனர்.
ஆனால், இதையொட்டி மட்டும் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அறிவது முற்றிலும்
இயலாதது ஆகும். இதற்கான தயாரிப்புக்கள் 2006 லேயே சார்க்கோசியும் வில்ப்பனும் கன்சர்வேடிவ்
UMP யின் 2007
ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளாரக நிற்பதற்கு போட்டியிட்ட நேரத்தில் நடந்தன. தொழிலாள வர்க்கத்திடம்
இருந்து பெருகிய சவால்களை எதிர்கொண்ட சார்க்கோசி வாஷிங்டனுடன் மறு நோக்குநிலைப்படுத்திக் கொள்ள
வேண்டும் என்றும், பேர்லின், மாஸ்கோவிடம் கொண்டிருந்த தொடர்பில் இருந்து அது விலகி இருக்க வேண்டும் என்றும்
திட்டமிட்டார்; அமெரிக்கா ஈராக்மீது 2003ல் படையெடுப்பு செய்தது பற்றி வில்ப்பனுடைய எதிர்ப்பில் அந்த
தொடர்பு கூடியிருந்தது. இதையொட்டி பிரான்சின் இராணுவ-தொழில்துறை கூட்டிலும் பிரெஞ்சு வெளியுறவுக்
கொள்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தேவைப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய ஒரு பரிமாணம் 1990 களின் ஆரம்பத்தில்
இருந்து பிரெஞ்சு நடைமுறையை அதிரவைத்த தொடர்ச்சியான அரசியல்-நிதி ஊழல்கள் பற்றிய விசாரணைகளை அடக்குவது,
முடிப்பது என்ற முயற்சி ஆகும். சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின்னர், மற்ற சக்திகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடன்,
பதட்டங்கள் அதிகரித்தபோது, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஊழல், இழிந்த செயற்பாடுகள் பற்றிய கருத்து வேறுபாடுகள்
பொது வாழ்வில் அனைவருக்கும் புலப்படும்படியாக வெளிப்பட்டன.
இவற்றுள் முக்கியமானவை எல்ப் விவகாரங்கள் மற்றும் அங்கோலா ஆயுத விற்பனை
ஊழல், தைவான் போர்க்கப்பல்கள் விற்பனை விவகாரம், செய்தியாளர் டெனிஸ் ராபேர்ட் வெளியிட்ட
Revelation$
என்ற புத்தகத்தில் கிளியர்ஸ்ட்ரீம் பெரிய அளவு குற்றத்தை மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு மற்றும்
EADS
உள்ளிருந்தோர் ஈடுபட்டிருந்த வணிக ஊழல் ஆகியவை ஆகும்.
பிரான்ஸ்: கிளியர்ஸ்ட்ரீம் குற்றவழக்கு
நசுக்கிவிட இலக்கு வைக்கும் விவகாரங்கள்
கிளியர்ஸ்ட்ரீம் விவகாரத்தில் இருந்த ஜனநாயக எதிர்ப்பு உள்ளடக்கம், --அரச
இரகசியங்கள் என்ற சலுகையை அரசாங்கம் பயன்படுத்தி இந்த ஊழல்களை அடக்கிவிடுவது, நீதித்துறை உடந்தையாக
இருந்தது மற்றும் கொலை என்றவாறாக, மக்களுக்கு பின்புறம், தேர்தல்களுக்கு புறத்தே இந்த கொள்கை வேறுபாடுகளை
முடித்துக் கொள்ளும் விதம் செயல்படுத்தப்பட்டது.
கிளியர்ஸ்ட்ரீம் பட்டியல்கள்
இந்த வழக்கு விசாரணையில் தவறான தகவல் கொடுத்தது மற்றும்/அல்லது அவதூறு செய்தது
என்பதற்கு ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது; வில்ப்பன்; முன்னாள்
EADS நிர்வாக
துணைத் தலைவரும் உளவுத்துறை அதிகாரியுமான
Jean-Lous Gergorin; முன்னாள் மெரில் லின்ச் வணிகர்,
EADS
நிர்வாகியும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க உளவுத்துறையின் பாதுகாப்புச் சொத்துமான
Imad Lahoud,
புலனாய்வு செய்தியாளர் டெனிஸ் ராபேர்ட்; இப்பொழுது செயல்படாத தணிக்கை நிறுவனத்தின் முன்னாள் உட்பிரிவில்
இருந்த Arthur Andersen
மற்றும் டெனிஸ் ராபேர்ட்டின் நூல்களுக்கு தகவல் கொடுத்த
Florian Bourges
ஆகியோராவர்.
இப்பட்டியலில் டெனிஸ் ராபேர்ட் மற்றும்
Florian Bourges
பெயர்கள் இடம் பெற்றிருப்பது முதலில் வியப்பாக இருக்கும்; இவர்களில் ஒருவர்கூட சார்க்கோசிக்கு எதிரான
குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணயை முன்னெடுக்கவும் முடியாது, அதில் இருந்து ஆதாயமும் பெறவும் முடியாது.
ஆனால் அரசியல் மற்றும் நிதிய செய்திப்பிரிவில் இத்தகைய குற்றச்சாட்டு தொடர்வதால் ஏற்படும் உறையவைக்கும்
விளைவு மிகத் தெளிவு. இவ்விதத்தில் கிளியர்ஸ்ட்ரீம் வழக்கு பற்றிய அறிவிப்பு கொடுக்கப்பட்ட நவம்பர் 2008 க்கு
முன்பு, அக்டோபர் 16, 2008ல் டெனிஸ் ராபேர்ட்டின் வலைப் பதிவுச் (blog)
செய்தி, அது இனி வெளியிடப்பட மாட்டாது என்ற அறிவிப்பைக்
கொடுத்தது.
பெப்ருவரி 2001ல் வெளிவந்த
Revelation$
ஐரோப்பாவிற்கு ஒரு அரசியல் வெடிகுண்டு போல் ஆயிற்று; உலக அரசியல் முழுவதும் இதன் பாதிப்புக்கள்
இருந்தன. ராபேர்ட் தன்னுடைய புத்தகத்திற்கு கிளியர்ஸ்ட்ரீமின் முன்னாள் நிர்வாகி
Ernest Backers
உடன் இணைந்து செயல்பட்டார்; அவரை 1983ல் கிளியர்ஸ்ட்ரீம் வேலையை விட்டு நீக்கியிருந்தது; அதற்குக்
காரணம் தான் இத்தாலியின் Banco Ambrosino
விற்கு கிளியர்ஸ்ட்ரீம் மூலம் கணக்கில் காட்டப்படாத பணங்களை பெறுவதற்கு உதவியதாக சாட்சியம்
அளித்திருந்தார். Banco Amrosiano
வின் தலைமை நிர்வாக அதிகாரி ராபேர்ட்டோ கால்வியின் கொலை பற்றிய
விசாரணையில் அவர் இவ்வாறு சாட்சியம் கொடுத்திருந்தார்; அந்த வழக்கில்
Banco Ambrosiano,
சிஐஏ
நிதிகளை Polish Solidarnosc
தொழிற்சங்கத்திற்கும் நிகராகுவா கான்ட்ரா எழுச்சியாளர்களுக்கு அனுப்பவதற்கும் உடந்தையாக இருந்தது என்ற
குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருந்தார்.
பாக்கே உடைய சான்றுகள் மற்றும் கிளியர்ஸ்ட்ரீமின் கணக்குப் பட்டியல்கள்
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ராபேர்ட் பல வெடிப்புதன்மை உடைய குற்றச் சாட்டுக்களை
முன்வைத்தார்; அவற்றில் கீழ்க்கண்டவையும் அடங்கியிருந்தன:
(1)
CIA அதிகாரிகள்
மற்றும்,
ஒசாமா பில் லேடன் ஆகியோர் 1980 களில் ஆப்கானிய சோவியத் எதிர்ப்பு முஜாஹிதினுக்கு
BCCI எனப்பட்ட
Bank of Credit and Commerce
International, நிதிகள் அளித்தது, அந்நிறுவனம் திடீர்
திவாலாக அறிவிக்கப்பட்டு 1991ல் மறைந்தும் விட்டது; பின்னர் இது கிளியர்ஸ்ட்ரீம் மூலம் இரகசியமாக
நடைபெற்றது.
(2) 1997ல் ரஷ்ய
தன்னலக்குழுக்காரர் (Oligarch)
மிகைல் கோடோர்கோவ்ஸ்கியுடன் தொடர்பு கொண்ட
Menatep Bank, IMF நிதிகளில் இருந்து ரஷ்ய
அரசாங்கத்திற்கு சென்றிருக்க வேண்டிய 7 பில்லியன் டாலர் பணத்தைக் கையாடல் செய்தது; பின் இது அப்பணத்தை
அமெரிக்க வங்கிகளுடன் பகிர்ந்து கொண்டது.
(3) கிளியர்ஸ்ட்ரீம், பிரான்சின்
தைவானுக்கான போர்க்கப்பல்கள் விற்பனை ஊழலில் இருந்த சட்டவிரோத இலஞ்சத் தொகை குறிப்பட்டவர்களுக்கு
மாற்றப்பட உதவியது.
செய்தி ஊடகத்தில் இந்தப் புத்தகம் கடும் கண்டனத்திற்கு உட்பட்டது. பிந்தைய
ஆண்டுகளில் இதை எழுதியவர்கள் பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் அவதூறுக் குற்றச்
சாட்டுக்களை 31 வழக்குகளில் எதிர்கொண்டனர். இவற்றுள் இரண்டைத் தவிர மற்ற வழக்குகளில் இருந்து ராபேர்ட்
விடுவிக்கப்பட்டார்: ராபேர்ட் முறையீடு செய்திருந்த அடையாள வகையிலான 1 யூரோ அபராதம்; மற்றும்
Revelation$
வெளிவந்தபின்னர் ராபேர்ட் பேசிய ஒரு உரைக்காக அவதூறுக் கண்டனத்திற்கு உட்பட்டது ஆகியவைதான் அவை.
ராபேர்ட்டின் குற்றச்சாட்டுக்களை, இட்டுக்கட்டப்பட்டவை என்று கண்டித்த மாபெரும்
செய்தி ஊடகப் பிரச்சாரம் ஒருபுறம் இருந்தாலும், உளவுத்துறை வட்டங்கள்
Revelation$
வெளிவந்தபின் அவருடைய ஆதாரங்களை கூர்ந்து பரிசீலித்தன. இந்தப் பின்னணியில்தான் கிளியர்ஸ்ட்ரீம் கணக்கு
வைத்திருப்போர் பட்டியல் பிரெஞ்சு முதலாளித்துவ அரசியில் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.
2002ல் பிராங்கோ-லெபனீஸ் நிதியாளர் இமத் லாஹொட் (Imad
Lahoud)
Volter Investment Fund
சரிவில் ஒரு மோசடிக்காக தண்டனை பெற்றார்; இதில் 42 மில்லியன் டாலர் காணமற்போக வழிவகுத்தது.
லாஹொட்டிற்கு லண்டன் நிதிய வட்டங்களில் தொடர்புகள் இருந்தது மட்டும் இல்லாமல், அவருடைய மாமனார்
François Heilbronner
(அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக்கின் அலுவலர்களின் துணைத் தலைவர்) மூலமாகவும் பிரெஞ்சு
அரசியல் வட்டங்களில் தொடர்பு இருந்தது. மூன்று மாத காலம் சிறைதண்டனை நிறுத்தப்பட்டபின் அக்டோபர்
2002ல் வெளிவந்த அவர் தன்னுடைய சகோதரர்,
EADS ஐரோப்பிய பாதுகாப்புத் தொழில் நிறுவனத்தில் உயர்
அதிகாரியாக இருந்த மார்வானுடன் தொடர்பு கொண்டு தனக்கு ஒசாமா பின் லேடனின் நிதிய இணையங்களை பற்றித்
தகவல் உண்டு என்று கூறினார்.
தன்னுடைய சகோதரரை
EADS நிர்வாகி மற்றும் பிரெஞ்சு உளவுத் துறை அதிகாரியான
Jean-Lous Gergroin
உடன் தொடர்பு வைக்க மார்வான் உதவினார். Imad
ä
Gergorin தளபதி பிலிப் ரோண்டோவிடம் அனுப்பி வைத்தார்.
ரோண்டோ, பிரான்சின் DGSE (வெளிப்பாதுகாப்பு
பொது இயக்ககம்) ல் பணிபுரிந்து வந்தார்; அது பாரிசில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பகுப்பாய்வு
மையத்தை CIA,
மற்றும் பிற மேலை உளவுத்துறை அமைப்புக்களுடன் கூட்டாக நடத்தி வந்தது.
Imad ஐ செய்தியாளர்
Eric Merlen
க்கும் மார்வான் அறிமுகப்படுத்தி வைத்தார்; மெர்லென் டிசம்பர் 2002ல்,
Imad Lahoud
டெனிஸ் ராபேர்ட்டை சந்திக்க ஏற்பாடு செய்தார்.
Imad Lahoud பற்றி கவனித்து வந்த
DGSE அதிகாரி,
அவருடைய குறிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன, லாஹொட்டிற்கு இக்கூட்டம் பற்றிய விரிவான தரவுகளைக்
கொடுத்தார். ஒரு DGSE
பாதுகாப்புச் சொத்தை சந்திக்கிறோம் என்பதை ராபேர்ட் அறிந்திருக்கவில்லை என்பது வெளிப்படை; ஆனால்
இமத் லாஹொட்டிற்கு ஒரு குறுந்தகடைக் கொடுத்தார்; அதில் கிளியர்ஸ்ட்ரீம் கணக்காளர் பட்டியலைப் பற்றிய
தகவல் இருந்தது.
வணிகச் சீமான்
Jean-Luc Lagardère மார்ச் 14, 2003ல் திடீரென
இறந்தது -சிராக் மற்றும் டு வில்ப்பன் எதிர்த்திருந்த --ஈராக் மீது அமெரிக்கப் படையெடுப்பிற்கு ஒரு வராம்
முன்பு-- இந்த உறவுகளை நெருக்கடியில் தள்ளியது.
Lagardère உடைய மரணம்
பிரெஞ்சு வெளியுறவு, தொழில்துறை கொள்கைப் பிரிவுகளில் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். ஒரு பிரெஞ்சு
பாதுகாப்புக் கருவிகள் நிறுவனமான Matra
விற்கு அவர் சொந்தக்காரர் ஆவார்; அது பிரான்ஸ்-ஜேர்மனி நிறுவனமான
EADS உடன்
இணைந்திருந்தது; அது Marwan Lahoud
மற்றும் Jean-Louis Gergorin
இருவரையும் பணியில் வைத்திருந்தது. இது பிரெஞ்சு பாதுகாப்புத் தொழில் நிறுவனமான
Thomson-CSF
க்கு முக்கிய போட்டி நிறுவனம் ஆகும்; பிரிட்டிஷ், அமெரிக்க இராணுவங்களுக்கு அளிக்கும் நோக்குநிலையைக்
கூடுதலாகப் பெற்றிருந்தது; இத்துடன் மாட்ரா ஊழல் மிகுந்த தைவானுக்கு கப்பல் விற்பனைகள் காலத்தில்
கடுமையான போட்டியில் இருந்தது.
Lagardère ஒரு அபூர்வ
மூளைக்காய்ச்சலினால் திடீரென இறந்து விட்டதாகவும், அதே காலப்பகுதியில் தான் அமெரிக்க முதலீட்டு
நிறுவனமான Highfields
அதன் பணயங்களை Lagardère
குழுவில் அதிகரித்திருந்தது என்றும் Gergorin
குறிப்பிட்டார். குடும்ப நிறுவனத்தை அவருடைய மகன்
Amaud எடுத்துக் கொள்ளும் நேரத்தில் வரக்கூடிய குழப்பத்தில்
இருந்து இலாபம் அடையலாம் என்ற நம்பிக்கையில், ரஷ்ய மாபியா அல்லது அமெரிக்க முகவர்கள்
Lagardère ஐக்
கொன்றிருக்கக்கூடும் என்ற தன் சந்தேகத்தை
Gergorin,
Imad Lahoud
இடம் தெரிவித்தார். இந்த விஷயத்தில் கிளியர்ஸ்ட்ரீம் பட்டியல் ஏதேனும் தகவல் கொடுக்கிறதா என்று அறியுமாறும்
Lahoud
ஐ அவர் கேட்டுக் கண்டார்.
2003ல் லாஹொட்
Brigitte Henri ஐச் சந்தித்தார்; பிந்தையவர் பிரான்சின்
DST (Direction
for the Surveillance of Territory) உடைய,
ஒரு உட்துறை உளவுத்துறைப் பிரிவின், முன்னாள் தலைவர் ஆவார். சிராக்கிற்கு நெருக்கம் என்று கருதப்பட்ட
Yves Bertrand,
1990èOTM Elf
விவகாரத்தில் சார்க்கோசியின் பங்கு இருந்ததாகக் கூறப்பட்டது விசாரணைக்கு வந்ததில் இருந்து சார்க்கோசியின்
விரோதியாக பார்க்கப்பட்டார். அந்த நேரத்தில்தான் சார்க்கோசி, சிராக்கின் வலதுசாரிப் போட்டியாளர்,
Edouard Balladur
ஐ 1995 ஜனாதிபதி பிரச்சாரத்தில் ஆதரித்திருந்தார்.
Gergorin, Laboud, Villepin
ஆகியோர் தொடர்புடைய கூட்டங்களில், -சில குற்றச்சாட்டுகள்படி
Yves Bertrand, Nagy, Bosca
ஆகியோருடைய பெயர்களும் கிளியர்ஸ்ட்ரீம் கணக்குப் பட்டியலில் வைக்கப்பட்டன. இந்தப் பெயர்கள் சார்க்கோசி
குடும்பத்தை சேர்ந்தவை; அவை ஹங்கேரியப் பின்னணி கொண்டவை. இறுதியில் மற்ற சில பிரெஞ்சு
பெருநிறுவனங்கள், அரசியல் வாதிகள் பெயர்களும் --குறிப்பாக
PS அரசியல்வாதி
மற்றும் IMF
தலைவர் டொமினிக் ஸ்ட்ரவுஸ் கான், சோசலிஸ்ட் கட்சி முன்னாள் மந்திரி
Jean-Pierre Chevenement--
பட்டியலில் இடம் பெற்றிருந்தன.
Gergorin தன் பெயரைக்
குறிக்காமல் இந்த கிளியர்ஸ்ட்ரீம் கணக்குப்பட்டியலில் இருந்தவர்கள் என்று கூறப்பட்டவர்களின் பெயர்களை
Renaud van Ruymbeke
என்னும் விசாரணை நீதிபதிக்கு அனுப்பி, தைவான் போர்க்கப்பல் ஊழலில் இவர்கள் அவருடைய விசாரணைக்கு
உதவுவர் என்றும் எழுதினார்.
ஜூன் 2004ல் Lahoud,
பின் லேடன் பற்றிக் கொடுத்த தகவலையும் Rondot,
CIA யிடம் அளித்தார். ஆனால் இறுதியில்
CIA அது
Lahoud
ஐ ஒரு ஆதாரமாக நம்பவில்லை என்று அறிவித்து அவரை சொத்து என்னும் தகுதியில் இருந்து நீக்கிவிடுமாறு
Rondot
வை நம்ப வைத்தது. இதற்கு சற்று பின்னர் செய்தி ஏடு
Le Point
பகிரங்கமாக கிளியர்ஸ்ட்ரீம் விவகாரத்தை வெளியிடும் விதத்தில் போலிப்பட்டியல் எனக் கூறப்படுவது இருப்பது
பற்றிய தகவலை வெளியிட்டது.
தோன்றிவரும் அரசியல் நெருக்கடி
நவம்பர் 2004ல் பிரெஞ்சு அரசியல் வட்டங்களில் ஒருவேளை போலியாக இருக்கக்கூடிய
கிளியர்ஸ்ட்ரீம் பட்டியல்கள் பற்றிய வழக்கு விசாரணை, கிளியர்ஸ்ட்ரீம் பட்டியல்கள் போலித்தனம் என்ற முடிவுகளை
காட்டிய அறிக்கையை வில்ப்பன் மறைத்ததாக சார்க்கோசி குற்றம் சாட்டியபோது எழுந்தது.
ஏப்ரல் 2005ல்
Lagardère குழுவின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் விருந்த ஒன்றில்
கலந்து கொண்ட சார்க்கோசி, இப்பொழுது புகழ்பெற்றுவிட்ட அச்சுறுத்தலை வெளியிட்டார்: "எனக்கு இழப்பதற்கு
ஒன்றும் இல்லை. சுவரில் குருதிகள் காட்டும். நான் அதிகாரத்திற்கு வந்தால், கசாப்புக் கடைக்கார்களின் இரும்பு
கொழுக்கியில் அனைவரையும் தூக்கிலிடுவேன்."
Gergorin, Villepin மற்றும் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள்,
DST
அதிகாரிகளை தன் இலக்கு என்று பெயரிட்டதாக கூறப்படுகிறது.
அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த டொமினிக் டு வில்ப்பனின் பிரெஞ்சு
அரசாங்கக் கொள்கையை ஒட்டி பெரிய நெருக்கடியை கிளப்பி விட்ட இரு பெரும் தாக்குதல்கள் தொழிலாள
வர்க்கத்தால் அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட்டன. மே 29, 2005ல் பொதுமக்கள் ஒரு ஐரோப்பிய
அரசியலமைப்பை நிறுவுவது பற்றிய வாக்கெடுப்பில் அதை நிராகரித்தனர். இது பிரஸ்ஸல்ஸில் இருக்கும் ஐரோப்பிய
நிறுவனங்கள் வளர்த்த வலதுசாரி அரசியல் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் விரோதப் போக்கை பிரதிபலித்தது
என்றாலும், ஐரோப்பிய முதலாளித்துவம் அமெரிக்காவில் இருந்து சுயாதீனமான அரசியல் ஒற்றுமை, வெளியுறவுக்
கொள்கையை அமைக்க முடியும் என்ற நம்பிக்கைகளையும் சிதைத்தது.
மேலும் முதல் வேலை ஒப்பந்தம்
(Contrat Première Embauche)
என்று வில்ப்பன் அரசாங்கம் கொடுத்திருந்த அறிவிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இளம் தொழிலாளர்களின் பணியிட
பாதுகாப்புக்களை குறைத்து பெப்ருவரி-ஏப்ரல் 2006ல் பரந்த எதிர்ப்புக்கள், பெரும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை
தூண்டியது. இறுதியில் வில்ப்பன் ஏப்ரல் 2006 தொடக்கத்தில் இச்சட்டத்தின் பெரும் பிரிவுகளை திரும்பப் பெற்றுக்
கொண்டார்.
தொழிற்சங்கங்களும் "தீவிர இடது" கட்சிகளும் மக்கள் ஆர்ப்பாட்டங்களின்
சீற்றத்தன்மையை குறைத்தாலும், இதில் முக்கிய அரசியல் ஆதாயம் பெற்றது வில்ப்பனுடைய மிக முக்கிய
எதிர்பாளரான சார்க்கோசிதான்.
அந்தக் கட்டத்தில் போலீஸ் விசாரணையாளர்கள் கிளியர்ஸ்ட்ரீம் பட்டியல் வழக்கை
தீவிரமாக ஆராய்ந்து வந்தனர். EADS, DGSE,
பாதுகாப்பு அமைச்சகம், ஆகியவற்றைச் சோதனையிட்டு ஏப்ரல்
13ம் தேதி பாதுகாப்பு மந்திரி Michèle
Alliot-Marie, தளபதி
Rondot
ஆகியோரிடம் அறிக்கை கொடுத்தனர். ஏப்ரல் 28 அன்று வில்ப்பனும் சிராக்கும்
Le Monde
ல் வந்த கருத்துக்களான வில்ப்பன் Rondot
வை சார்க்கோசி பற்றி விசாரிக்க சிராக்கின் ஆணையின்பேரில்தான்
உத்தரவிட்டார் என்பதை மறுத்தனர். மே 2ம் தேதி தான் பிரதம மந்திரி பதவியில் இருந்து இராஜிநாமா செய்ய
இருப்பது என்ற தகவலை வில்ப்பன் பகிரங்கமாக மறுக்கும் கட்டாயம் ஏற்பட்டது.
2007 ஜனவரியில், சார்க்கோசி உத்தியோகபூர்வமாக
UMP யின் ஜனாதிபதி
வேட்பாளராக 2007 தேர்தலில் நிறுத்தப்பட்ட அறிவிப்பு வந்தது. சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்
ஜூலை மாதத்தில் வில்ப்பன் மீது அவதூறுகள் நிறைந்த கண்டனம், போலித் தயாரிப்பில் உடந்தை மற்றும் இவை
தொடர்புடைய சட்டபூர்வ குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. நவம்பர் 2008ல் நீதிமன்றங்கள் உத்தியோகபூர்வமாக
வில்ப்பனும் மற்ற பிரதிவாதிகளும் விசாரணைக்கு உட்பட வேண்டும் என்று நிர்ணயித்தன.
கிளியர்ஸ்ட்ரீம் வழக்கு
2009 செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 23 வரை நடந்த இந்த வழக்கு, பல
கட்சிகளும் நீதிமன்றம் மற்றும் பரந்த பொதுமக்கள் கருத்தை செல்வாக்கிற்கு உட்படுத்தும் பல தந்திரோபாய
முயற்சிகள் மேற்கொண்டதை குறித்தது. வில்ப்பனுடைய வழக்கறிஞர் தன்னுடைய கட்சிக்காரருக்கு எதிரான
சார்க்கோசியின் பகைமையைத் தாக்கி, சார்க்கோசி ஜனாதிபதியாக இருப்பதால் உள்ள பாதுகாப்புக்கள் அவரை
பதிலுக்கு சட்ட வழக்குகளில் இருந்து காப்பாற்றுவதாகக் கூறினார். செப்டம்பர் 23ல், வில்ப்பனைப் பற்றி
சார்க்கோசி குற்றம் சாட்டப்பட்டவர்களை "குற்றம் செய்தவர்கள்" என்று பகிரங்கமாகக் குறிப்பிட்டார்; இது
வழக்கில் தீர்ப்புக் கூறப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் "நிரபராதிகள்" என்று கருதப்பட வேண்டும் என்ற
மரபை மீறியது ஆகும். பட்டியல் தயாரிப்பில், லாஹொட்டும்
Gergorin ம்,
மற்றவர் செய்ததாக வாக்குமூலம் கொடுத்தவர்கள், பலமுறையும் மோதிக் கொண்டனர்.
அக்டோபர் 5ம் தேதி வில்ப்பனுக்கு எதிரான சாட்சியம் என்று பரந்து காணப்பட்ட
விதத்தில், Rondot
ஜூலை 2004 கிளியர்ஸ்ட்ரீம் பட்டியல் தயாரிப்பு கூட்டங்களில் வில்ப்பன் கலந்து கொண்டதை விவரித்தார். குறிப்பாக
அவர் "எங்கள் பெயர் தோன்றினால், குடியரசின் ஜனாதிபதியும் [அதாவது ஜாக் சிராக்கும்] நானும்
புகைந்துவிடுவோம்" என்று எச்சரித்தார்.
இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு பெற்றவர்களை விசாரணை பெரிதும் புறக்கணித்துவிட்டது.
Yves Bertrnd
உடைய உதவியாளர் Lahoud
உடன் நெருக்கமாக உழைத்திருந்தாலும்,
Bertrand ஒரு
நாள் மட்டுமே விசாரிக்கப்பட்டார்; அன்று அவர் தான் லாஹொட்டைச் சந்தித்தே இல்லை என்றுகூறிவிட்டார்.
பொதுக் கண்காணிப்பில் இருந்து அவர் தப்பிவிட்டார்.
அரசாங்கக் கொள்கை மற்றும் ஆளும் வர்க்கத்தின் பரந்த குற்றத்தன்மை பற்றிய
சான்றுகளைப் பற்றிய அடிப்படை வினாக்கள் எழுந்தாலும், இந்த விசாரணை வில்ப்பனைச் சுற்றியுள்ள ஒரு சிறு
கூட்டத்தைப் பற்றிய தீர்க்கப்படாத வேறுபாடுகளை வெளிப்படுத்திய விதத்தில் இழிந்து போயிற்று. செயற்பாடுகளின்
ஜனநாயக எதிர்ப்புத் தன்மைக்கு இது மற்றொரு அடையாளம் ஆகும்.
Sources:
Frédéric Charpier, Une affaire de fous: Le roman noir
de l'affaire Clearstream (Seuil: Paris, 2009).
Frédéric Charpier, La CIA en France (Seuil: Paris,
2008).
Thierry Gadault, EADS: La guerre des gangs (Editions
Générales First: Paris, 2008).
Véronique Guillermard & Yann le Galès, Le bal des
ambitions: avions, argent, armes et politiques (Roger Lafont: Paris,
2009). |