World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Olivier Besancenot in Poland

போலாந்தில் ஒலிவியே பெசன்ஸநோ

By Ulrich Rippert
23 May 2009

Use this version to print | Send feedback

கடந்த வாரயிறுதியில் Katowice ல் போலாந்து தொழிலாளர் கட்சியின் (PPP) ஐரோப்பிய தேர்தல் காங்கிரஸில் ஒலிவியே பெசன்ஸநோ வின் பங்கேற்பானது, அவரால் புதிதாக தொடங்கப்பட்ட முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் உண்மையான நோக்கங்களை தெளிவாக எடுத்துகாட்டுகிறது.

அனைத்து முதலாளித்துவ எதிர்ப்பு பேச்சுக்களுக்கும், போராட்டங்களுக்கும் பின்னால், இந்த பிரெஞ்சு NPA ஒரு முழுமையான பிற்போக்கான அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுகிறது என்பதுடன் வெளிப்படையாகவே வலதுசாரி அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளது. Katowiceல், போலாந்து தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் ஒலிவியே பெசன்ஸநோ பேசினார். முன்னாள் போலாந்து சர்வாதிகாரி பிஜூட்ஸ்கியின் ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரி மக்கள் கட்சியான சமூப்ரோனாவின் முன்னாள் செயலர்களையும் PPP அதன் பதவிகளில் உட்கொண்டிருக்கிறது.

காங்கிரஸில் உள்ள முக்கிய பேச்சாளர்களில், போலாந்து வர்த்தக கழகத்தின் துணை-தலைவரான போக்டன் கோலிக் ஒருவராக இருந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், சமூப்ரோனா பட்டியலில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கோலிக், தற்போது சமூக ஜனநாயக குழுவின் ஒரு பகுதியாக அங்கு அமர்ந்துள்ளார். ஜூனில், ஐரோப்பிய தேர்தலுக்கு PPPன் முன்னணி வேட்பாளராக கோலிக் லோட்ஜில் (Lodz) முதன்முதலாக களம் இறங்கினார்.

பிரான்சில் சோசலிஸ்ட் கட்சியுடன் தாம் ஒத்துழைக்க போவதில்லை என்று ஒலிவியே பெசன்ஸநோ தொடர்ந்து வலியுறுத்துகிறார். பாராளுமன்றக் குழுவில் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியினருடன் Strasbourgல் அமர்ந்திருப்பவரும், முழு நேரம் ஒரு பொருளாதார பேரவையாளராக செயல்படுபவரும், ஒரு முக்கிய தேசியவாதியுமான ஒருவருடன் போலாந்தில் நிற்பதற்கு தமக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று தெரிவிக்கிறார். Strasbourg பாராளுமன்றத்தில் போலாந்து நலன்களை தீவிரமாக பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே மனிதர் தாம் மட்டுமே என்று Katowiceல் ஆற்றிய உரையில் கோலிக் பல முறை வலியுறுத்தினார்.

முதலாளித்துவத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையில் ஒரு "மூன்றாம் வழியைக்" கையாள சமூப்ரோனா திட்டமிடுகிறது என்ற வகைப்பாட்டிற்கு பின்னால் அதன் வலதுசாரி அரசியல் நிலைமைகளை அது மறைக்கிறது. சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியை நியாயப்படுத்த மிக்கேல் கோர்பச்சேவினால் இழிவாக பயன்படுத்தப்பட்ட இந்த வலதுசாரி முழக்கத்தின் எவ்வித விமர்சனத்தையும் ஒலிவியே பெசன்ஸநோ போலாந்தில் தவிர்த்தார். சோசலிசம் என்ற வார்த்தையே அவர் உரையில் வெளிப்படவில்லை. அதற்கு மாற்றாக, NPA ஒரு மூன்றாம் மாதிரிக்காகவும் போராடி வருவது குறித்து பெசன்ஸநோ பேசினார். இது PPP பிரதிநிதிகளிடையே பலத்த கைத்தட்டலைப் பெற்றது.

PPP உடனான ஒலிவியே பெசன்ஸநோவின் கூட்டணி, சர்வதேச பொருளாதார நெருக்கடியின் சீரழிக்கும் விளைவுகளால் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வரும் போலாந்து தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச முன்னோக்கின் அபிவிருத்திக்கு நேடியாக எதிராக உள்ளது.

1980களில், சொலிடாரிற்றி இயக்கத்தின் போராட்டமானது போலாந்து தொழிலாளர்களின் போராட்டத்தின் பாரிய வலிமையை எடுத்துக்காட்டியது. Gdansk துறைமுகத்தில் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தை தொடர்ந்து, பணியிட ஆக்கிரமிப்புகளில் ஓர் அலை ஏற்பட்டது. மேலும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 10 மில்லியன் தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே சொலிடாரிற்றி தொழிற்சங்கத்திற்குள் ஒருங்கிணைத்து கொண்டார்கள்.

எவ்வாறிருப்பினும், போலாந்து தொழிலாளர்கள் எவ்வித சுயாதீனமான அரசியல் முன்னோக்கும் இல்லாமல் இருந்தார்கள். ஸ்ராலினிச அடக்குமுறையின் தசாப்தங்கள், ஒரு சர்வதேசியவாத மற்றும் சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு ஆகியவற்றின் அடித்தளத்தில், 1923ல் இருந்து ஸ்ராலினிசத்தை எதிர்த்து வரும் ட்ரொட்ஸ்கிச போராட்டத்தின் அனுபவங்களை அவர்களிடமிருந்து முற்றிலுமாக துண்டாடி விட்டது.

லியோன் ட்ரொட்ஸ்கியும், இடது எதிர்ப்பும், பின்னர் நான்காம் அகிலமும் சோசலிசத்திற்கும், ஸ்ராலினிசத்திற்கும் இடையிலான ஒத்திணைந்து வர முடியாத பிளவை துல்லியமாக தெளிவுபடுத்தியது. மார்க்சிச எதிர்ப்பை நேரடியாக அழித்ததன் மூலமாகவும், அக்டோபர் புரட்சிக்கு தலைமை கொடுத்த மற்றும் ஆதரித்தவர்களுக்கு எதிராக அரசியல் படுகொலைகளை நிகழ்த்தியதன் மூலமாகவும் மட்டுமே 1930களில் சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினின் அதிகாரத்துவ ஆட்சியை அதனால் நிலைநாட்ட முடிந்தது.

நாட்டை முதலாளித்துவத்திற்கு திறந்து விட தயாராவதற்காக, இறுதியாக சொலிடாரிற்றி இயக்கத்தின் தலைமையானது கத்தோலிக்க ஆலயத்திற்கு நெருக்கமான வலதுசாரி மூலங்களின் கரங்களில் விழுந்ததுடன், ஸ்ராலினிச ஆளும் குறுங்குழுவிற்குள் தன்னைத்தானே பொருத்தி கொண்டது. தொழிலாளர்களுக்கு, அதன் பலாபலன் ஒரு சமூக பேரிடராக இருந்தது. 1980களில் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும்பாலான ஆலைகள் மற்றும் கப்பற்தளங்கள் இன்று வரையிலும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.

இன்று ஒலிவியே பெசன்ஸநோ சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் முன்னோடிகள், ஏற்கனவே 1980ல், போலாந்து தொழிலாளர்களை மரணத்திற்குள் இட்டு செல்வதில் ஒரு முக்கிய முக்கிய பங்காற்றி உள்ளார்கள். அந்த வேளையில் இருந்த, LCR (புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் -Ligue Communiste Révolutionnaire), NPA இன் முன்னோடியும் மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளும், ஏர்னெஸ்ட் மண்டேலின் தலைமையிலான பப்லோவாத ஐக்கிய செயலகமும், (நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் நிராகரித்திருந்த போதினும்) இன்றும் ட்ரொட்ஸ்கிசத்துடன் ஒட்டுக் கொண்டிருப்பது போன்று காட்டுபவர்களும், ஸ்ராலினிசத்திற்கும், சமூக ஜனநாயகத்திற்கும் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்திற்கும் தங்களைத்தாங்களே பொருத்தி கொள்கிறார்கள். எவ்வாறிருப்பினும், ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான LCRன் உதட்டு சேவையானது, ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிசத்தின் கடுமையான எதிர்ப்பாளர் என்பதை அறிந்திருந்த போலாந்து தொழிலாளர்களை ஏமாற்றுவதில் பயன்பட்டது.

லெக் வலெசாவில் பப்லோவாதிகள் மகிழ்ச்சி கொண்டார்கள், அவரின் தேசியவாத முன்னோக்கை ஏற்றுகொண்டார்கள், மேலும் முதலாளித்துவ மீள்வுக்கு வழி வகுக்கும் படைகளுக்கும் ஆதரவளித்தார்கள். 1964ல், கட்சிக்கு எழுதிய பொதுமடலில் அதிகாரத்துவத்தைத் தூக்கி எறிவதற்கு அழைப்பு விடுத்திருந்த ஸ்ராலினிச மாணவர் கூட்டமைப்பின் முன்னணி உறுப்பினரான Jacek Kuron ஐ (ஸ்ராலினிசத்தைப் பற்றிய அவரின் சொந்த கணிப்பு ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வுடன் எதையுமே பொதுவாக கொண்டிருக்கவில்லை என்ற போதினும்) ட்ரொட்ஸ்கிவாதியாக அவர்கள் எடுத்துக்காட்டினார்கள்.

குரொன், லெக் வலேசாவின் ஒரு முன்னணி அரசியல் ஆலோசகராக உருவானார். தொழிலாளர்களால் ஸ்ராலினிச ஆட்சி தூக்கி எறியப்பட்டதை அவர் கடுமையாக எதிர்த்தார் என்பதுடன் வார்சோவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு பொறுப்பேற்று கொண்டதுடன் அரசாங்கத்திற்கு அவரின் ஒத்துழைத்தார். முதலாளித்துவ மீள்வு காலத்தின் போது, நாட்டின் அதிகாரத்தை சுமூகமாக மாற்றி அளிப்பதிலும், தொழிலாள வர்க்கத்தின் எவ்வித சுயாதீனமான தலையீட்டை தடுக்கவும் வட்ட மேசை மாநாடு என்று அழைக்கப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் குரொன் சேர்ந்து கொண்டிருந்தார்.

1989 மற்றும் 1993க்கு இடையில், சமூக மற்றும் தொழிலாளர் விவகாரத்திற்கான மந்திரிப் பதவி (சிறிய குறுக்கீடுகளுடன்) வகித்த குரொன், முதலாளித்துவ மீள்வை எட்ட தேவையான சமூக மற்றும் அரசியல் தாக்குதல்களை செயல்படுத்துவதில் நேரடியாக பங்கு வகித்தார்.

ஐக்கிய இயக்கத்திலிருந்து உருவான பல வலதுசாரி அரசியல்வாதிகளில் குரொனும் ஒருவராவார். 1980களில் ஏற்பட்ட எழுச்சியில் ட்ரொட்ஸ்கிச முன்னோக்கு இல்லாதிருந்தது, போலாந்து தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் பேரழிவான விளைவுகளை கொண்டிருந்தது.

1980ல் அமெரிக்க தலைமையகத்தால் தொடங்கப்பட்ட கொடூரமான பணியை ஒலிவியே பெசன்ஸநோ தொடர்ந்து கொண்டிருக்கிறார். மீண்டும் ஒருமுறை, இந்த பணியானது ஒரு சக்திவாய்ந்த சமூக போராட்டத்தை முறியடிப்பதற்கானது. எவ்வாறிருப்பினும், ஒரு குறுக்கீடாக, ட்ரொட்ஸ்கிச முத்திரையை பெசன்ஸநோ இன்று பாராட்டுகிறார். 1980ன் போது, பப்லோவாதிகள் வலேசாவிற்கு விளக்கம் அளிக்கவும், குரொனை ஸ்ராலினிசத்தின் நிலையான எதிர்ப்பாளராகவும் காட்ட விரும்பினார்கள், இன்று 1980ன் பாடங்கள் மற்றும் ஸ்ராலினிச பாத்திரம் என்னவாக இருந்தாலும் கூட, எவ்வித விவாதத்தையும் ஒடுக்குவதே வேலையாக உள்ளது. ட்ரொட்ஸ்கியை பற்றி எதை குறிப்பிட்டாலும் தவிர்க்க முடியாமல் இந்த கேள்விகள் எழும்.

அதன் ஸ்தாபக மாநாட்டில், வரலாற்றுக்கான எவ்வித ஆதாரத்தையும் மற்றும் நான்காம் அகிலத்தின் முன்னோக்குகளையும், NPA அதன் வேலைத்திட்டத்தில் இருந்து அகற்றியது. சோவியத் ஒன்றியத்தின் உடைவு ஒரு முழுமையான சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக ஒலிவியே பெசன்ஸநோ தொடர்ந்து கூறி வருகிறார். அவரின் அரசியல்ரீதியான பார்வையின்படி, இது இருபதாம் நூற்றாண்டின் அனைத்து அனுபவங்களுடன் பொருந்தாத்தன்மையையே அளிக்கிறது. பல்வேறு அரசியல் பாரம்பரியங்களில் -ஸ்ராலினிசம், மாவோயிசம், சீர்திருத்தவாதம், அனார்சிசம் மற்றும் சிண்டிகலிசம்- இருந்து "சிறந்த" தன்மைகளை தேர்ந்தெடுப்பது தான் இன்று தேவையாக உள்ளது. அதாவது, ஒரு முழு குழப்பமான கூட்டுக்கலவை.

எவ்வாறிருப்பினும், போலாந்தின் தொழிலாள வர்க்கமோ அல்லது சர்வதேச தொழிலாள வர்க்கமோ, 1980களில் நடந்த நிகழ்வுகளில் இருந்தும், ஸ்ராலினிச பாத்திரத்தில் இருந்தும் பாடங்களை எடுக்காமல் ஓர் அடி கூட முன்னேற முடியாது. சோசலிசம் என்ற பெயரில் ஸ்ராலினிசத்தால் நடத்தப்பட்ட நேர்மைகேடான குற்றங்கள், அனைத்து சோசலிச எதிர்ப்பாளர்களாலும் இன்று ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதுடன் கிழக்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் குழப்பத்திற்கான ஒரு பெரும் மூலமாகவும் விளங்குகின்றன. இதுபோன்ற குழப்பத்திற்கான எவ்வித தெளிவையும் தடுப்பதும், போலாந்து தொழிலாளர்களை மீண்டுமொரு முறை ஒரு தேசியவாத குருட்டு பாதையில் இட்டு செல்ல தயாராகும் அந்த பிற்போக்குதனமான படைகளின் கரங்களை வலிமைப்படுத்துவதும் தான் பெசன்ஸநோ இன் Katowice சுற்றுப்பயணத்தின் உண்மையான நோக்கமாக இருந்தது.