WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Indian elections
Stalinist Left Front suffers debacle in its West
Bengal bastion
இந்தியத் தேர்தல்கள்
ஸ்ராலினிச இடது முன்னணி மேற்கு வங்க கோட்டையில் படுவீழ்ச்சியை சந்தித்தது
By Arun Kumar
26 May 2009
Use this version
to print | Send
feedback
CPI (M) எனப்படும் இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுக்கள்) தலைமையில் உள்ள தேர்தல் முகாம் சமீபத்தில் முடிந்த இந்தியாவின் தேசிய
அளவிலான தேர்தல்களில் பல விதங்களில் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது.
2004ல் நடந்த கடைசிப் பொதுத் தேர்தல்களில் அது 61 தொகுதிகளை கைப்பற்றியிருந்ததோடு
ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வரவிருக்கும் லோக் சபாவில் (மக்கள் மன்றம்), இடது முன்னணி 24
எம்.பி.க்களைத்தான் கொண்டிருக்கும்.
கடந்த 32 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் அதிகாரத்தில் இருந்து வரும் இடது முன்னணி
20 இடங்களை இழந்ததுடன், மக்கள் மொத்த வாக்களிப்பில் அதன் பங்கு 8 சதவிகிதப் புள்ளியாக சரிவுற்று,
அவமானம் தரும் தோல்வியை சந்தித்தது. 2004 தேர்தலில் மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் 35 இடங்களை
இடது முன்னணி கைப்பற்றியிருந்தது, ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களில் நடைபெற்ற இந்த ஆண்டுத்
தேர்தலில் அது 15 தொகுதிகளில்தான் வெற்றிபெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில்
CPM மக்கள்
வாக்கில் அதன் பங்கு 6.5 சதவிகித புள்ளிகளை இழந்தது, அதாவது 38.5 சதவீதத்தில் இருந்து 32 ஆகும்.
இந்திய மற்றும் சர்வதேச ஊடகம் 2009 தேர்தல்களை "தீவிர நிலைப்பாடுகளின்மீது
வெற்றி" என்று அறிவித்துள்ளன; ஏனெனில் அனைத்தையும் "உள்ளடக்கிய கட்சி" என்றுகாட்டிக் கொள்ளும் காங்கிரஸ்
கட்சி, சாதாரண மனிதனுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நிலையில், பெருவணிகத்தின் நலன்களை இரக்கமற்ற
முறையில் நிலைநிறுத்தி வலதில் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி இழப்பிலும் இடதில் "மார்க்சிஸ்ட்"
கட்சியின் இழப்பிலும் அதன் பாராளுமன்ற ஆதரவை அதிகரித்துக் கொண்டுள்ளது.
இது தனக்குத்தானே உதவிசெய்துகொள்ளும் பகுப்பாய்வாகும். இந்தியாவின் ஆளும்
உயரடுக்கு, அரசியலில் வலிமை பெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA)
அரசாங்கம் தனியார்மயம், கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் பெருவணிக ஆதரவு சீர்திருத்தங்கள் கொண்ட
சந்தை ஆகியவற்றை விரைவில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கிறது.
இடது முன்னணி மேற்கு வங்கத்தில் பெற்ற தேர்தல் அடி தொழிலாள வர்க்கமும்
உழைப்பவர்களும் வலதிற்கு மாறிவிட்டதின் விளைவு என்ற பொருளைத் தராது; மாறாக, இது சிவப்பு கொடிகளால்
தன்னைச் சுற்றிக் கொண்ட ஒரு கட்சி பெருவணிகத்துடன் இணைந்து செயல்பட்டதற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட
அரசியல் அளவில் குழப்பமான எதிர்ப்பு ஆகும்.
மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம் அதன் காங்கிரஸ்,
BJP
போட்டியாளர்களை போல் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளைத்தான் பின்பற்றி வந்தது. தகவல்
தொழில்நுட்பத்துறை மற்றும் அது தொடர்பான பிற துறைகளிலும் அது வேலைநிறுத்தங்களுக்கு தடை செய்தது;
"வணிகத்திற்கு ஆதரவுடைய" வரிகள், தொழிலாளர் சட்டங்கள் ஆகியவை இருந்த சிறப்பு பொருளாதாரப்
பகுதிகளை நிறுவியது; அதற்கான நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்த விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களை
நசுக்குவதற்கு போலீசையும் குண்டர்களையும் பயன்படுத்தியது. நான்காண்டுகளாக, மே 2004ல் இருந்து ஜூன்
2008 வரை லோக் சபாவில் மேற்கு வங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, இடது முன்னணி எம்.பி.க்கள்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு தேவையான பாராளுமன்ற பெரும்பான்மையை வழங்கும் வாக்குகளை
அளித்து வந்தனர்.
இடது முன்னணி 1977ல் அதிகாரத்திற்கு முதலில் வந்தபோது செயல்படுத்திய
மட்டுப்படுத்தப்பட்ட நிலச்சீர்திருத்தங்கள் அதற்கு வலுவான வாக்காளர்கள் தளத்தை கிராமப் புறங்களில் அமைத்துக்
கொடுத்தது. ஆனால் மேற்கு வங்கத்தின் CPM
தலைமையிலான அரசாங்கம் இந்தோனேசிய தளத்தைக் கொண்ட சலிம் குழுவிற்கு நந்தி கிராமில் சிறப்பு
பொருளாதார பகுதியை அமைக்கவும், டாட்டா கார் ஆலையை சிங்கூரில் அமைக்கவும் நிலத்தை
கையகப்படுத்தும்போது எழுந்த விவசாயிகள் எதிர்ப்பை நசுக்க மிரட்டல் மற்றும் நேரடி வன்முறையையைப்
பயன்படுத்தியபோது, இது ஆட்டம் கண்டது. நந்திகிராம், சிங்கூர் ஆகிய இடங்களில் 2007, 2008ல் நடைபெற்ற
எதிர்ப்புக்களின் போது, போலீஸ் மற்றும் CPM
குண்டர்களின் கரங்களில் பலர் கொல்லப்பட்டனர்
இந்திய, சர்வதேச மூலதனத்திற்காக நிலத்தை எடுத்துக் கொள்ளும்
ஸ்ராலினிஸ்ட்டுக்களின் உந்துதல், திருணமூல் காங்கிரஸ் [அடிமட்ட காங்கிரஸ்] கட்சிக்கு ஒடுக்கப்பட்ட
விவசாயிகளுக்காக பேசும் கட்சி என்றுகாட்டிக் கொள்ள பாதை அமைத்தது. மேற்கு வங்க சட்டமன்றத்தில்
உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான திருணமூல் காங்கிரஸ் ஒரு வலதுசாரி வங்க வட்டாரக் கட்சி ஆகும்;
வரலாற்றளவில் (அதன் காங்கிரஸ் கட்சி முன்னோர் தன்மையை ஒட்டி) நிலப்பிரபுத்துவத்தை காத்தலுடன் தொடர்பு
கொண்டது, மற்றும் அடிக்கடி BJP
உடன் கூட்டணிக் கட்சியாகவும் இருந்துள்ளது. கம்யூனிச எதிர்ப்பு அரசியல் நடத்தும் மமதா பானர்ஜியின் தலைமையில்
இது உள்ளது; காங்கிரஸ் மற்றும் BJP
தலைமையிலான மத்திய அரசாங்கங்களில் மந்திரி என்னும் முறையில் அவர் இந்திய பெருவணிகத்தின் புதிய தாராள
"சீர்திருத்த" திட்டங்களை ஆதரித்துள்ளார்.
ஜனவரி 2007ல் நந்திக்கிராமில் வெகுஜன எதிர்ப்புக்கள் முதலில் வெடித்ததில் இருந்து
திருணமூல் காங்கிரஸ் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் பெரு வணிக நில அபகரிப்பு உந்துதலுக்கு வெகுஜன எதிர்ப்புடன் தன்னை
அடையாளம் காட்டிக் கொள்ள முற்பட்டது. நில அபகரிப்புப் பிரச்சினை மற்றும் நந்திக்கிராமில் வன்முறை என்பதை
தன்னுடைய கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் மையக் கருத்தாக பானர்ஜி முன்வைத்து, டாட்டாக்களுக்கும் மற்ற
முதலாளிகளின் ஏவல்களுக்கும் ஏற்ப நடந்து கொள்ளத் தயாராக இருக்கும் இடது முன்னணி அரசாங்கத்தின்மீது
பலமுறை தாக்குதல்களை நடத்தினார்.
தன்னை மேற்கு வங்கத்தின் ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் காவலர் என்று மாறிக்
காட்டிக்கொள்ளும் இழிவான முயற்சி பல மாவோயிச மற்றும் இடது என்று கூறிக் கொள்ளும் கட்சிகள் இடது முன்னணி
அரசாங்கத்திற்கு எதிராக அவருடைய கட்சியை நட்புக் கட்சியாக ஏற்றுக் கொண்டதில் உயர்வைக் கண்டது.
லோக் சபாத் தேர்தல்களில் திருணமூல் காங்கிரஸ், இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும்
1940களின் கடைசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்த அமைப்பான சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆப்
இந்தியா (SUCI)
உடன் கூட்டு சேர்ந்தது.
"மக்கள்-விரோத" இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக "மாபெரும்"
மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை தாங்குவதாகக் கூறி, திருணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில்
பெரிய வெற்றியுடன் வெளிந்துள்ளது. மக்கள் வாக்கில் தன் பங்கை அது 9.8 சதவிகிதப் புள்ளிகள் உயர்த்தி 31.2
சதவிகிதம் என்று உயர்த்திக் கொண்டு, 19 இடங்களில் வெற்றி பெற்றது. (2004 தேர்தல்களில் அது
BJP உடன் கூட்டு
சேர்ந்த நேரத்தில் 1 இடத்தை மட்டுமே பெற்றிருந்தது.) காங்கிரஸ் 6 இடங்களை 2004ல் பெற்றிருந்தவற்றை
தக்க வைத்துக் கொண்டது; SUCI
கொள்கையளவில் "பெரு முதலாளித்துவ" காங்கிரஸுக்கு ஆதரவைக் கொடுப்பதில்லை என்றுகூறி திருணமூல்
காங்கிரஸிற்கு ஆதரவு கொடுத்தது, தேர்தல் பங்காளிகளால் அதற்குக் கொடுக்கப்பட்ட 1 தொகுதியில் அது
வெற்றி பெற்றது.
மேற்கு வங்கத்தில் முதல் முறையாக
BJP ஒரு
தொகுதியில் வெற்றி பெற்றது; டார்ஜிலிங் தொகுதியில் இது வெற்றி பெற்றதற்கு காரணம் இந்திய ஒன்றியத்திற்குள்
கூர்க்காலாந்து எனப்படும் தனி கூர்க்கா மாநிலம் தோற்றுவிப்பதற்கு போராடும் கூர்க்க இனவழி அமைப்புடன் அது
கொண்டிருந்த உடன்பாடு ஆகும்.
தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட உடனேயே, பானர்ஜியும் மற்ற திருணமூல்
காங்கிரஸ் தலைவர்களும் மேற்கு வங்கத்தை "ஜனாதிபதி ஆட்சிக்குள்" கொண்டுவரவேண்டும் என்று குரல் கொடுக்கத்
தொடங்கினர்; அதாவது மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வங்கம் கொண்டுவரப்பட்டு புதிய மாநிலத்
தேர்தல்கள் வரவேண்டும் என்று கூறினர். பானர்ஜி மேற்கு வங்க இடது முன்னணி ஆட்சியின் "இடது" விமர்சகர் என்று
காட்டிக் கொள்ளும் அதேவேளை, மாநிலத்தின் அரசியலை மிகத் தீவிர வலதிற்கு தள்ளி, இடதை பதவியில் இருந்து
அப்புறப்படுத்துவதே அவருடைய நோக்கம் என்பதில் சந்தேகம் இல்லை.
காங்கிரஸும் அதன் UPA
வும் இதுவரை மேற்கு வங்க அரசாங்கம் கலைக்கப்பட வேண்டும் என்னும் தங்கள் நட்புக் கட்சியின் கோரிக்கைக்கு
ஆதரவு ஏதும் தெரிவிக்கவில்லை. ஸ்ராலினிஸ்ட்டுக்களுடன் சேர்ந்து செயலாற்றியதில் அதிக அனுபவம் கொண்ட
காங்கிரஸ் தலைமை, ஜனாதிபதி ஆட்சி என்னும் அச்சுறுத்தலை இருப்பில் வைத்து
CPM மற்றும்
மேற்கு வங்க அரசாங்கத்தை தனக்கு "இணக்கமாக" நடந்து கொள்ள அழுத்தம் கொடுக்கலாம் என்று ஒருவேளை
கணக்குப் போடுகிறது போலும், அதிலும் குறிப்பாக தொழிலாளர்கள்-உழைப்பாளிகளிடையே எதிர்ப்பை தூண்டக்கூடிய
வலதுசாரி சமூக பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த காங்கிரஸ் நினைத்திருக்கையில்.
அத்தகைய மூலோபாயத்துடன் இயைந்த வகையில் காங்கிரஸ் தலைமை திருணமூல்
காங்கிரஸுடன் 2011 ல் நடக்க இருக்கும் அடுத்த மாநில சட்ட மன்றத் தேர்தல்கள் வரை தற்போதைய
கூட்டைத் தொடர இருப்பதாக அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் CPM
ல் ஒரு பெரிய நெருக்கடியை கொடுத்துவிட்டன; கட்சித்தலைமையில் பலரும் கட்சி இன்னும் வலதிற்கு செல்ல
வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
மேற்கு வங்கத்தின் கட்சித் தலைமை
UPA
அரசாங்கத்திற்கு கடந்த ஜூலை ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை எதிர்த்தது என்பது அனைவருக்கும்
தெரிந்தது; காங்கிரஸ் இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த தீவிரமாக இருக்கும்
என்பது அறிவிக்கப்பட்டவுடன் இது நிகழ்ந்தது. இந்த மாதம் தேர்தல் சங்கடத்தை அடுத்து பல தோல்வியுற்ற
CPM
பாராளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைமையில் இருந்த அரசாங்கத்தை எதிர்க்கும் முடிவைக் கண்டித்து
அணுசக்திப் பிரச்சினை மற்றும் இந்திய உயரடுக்கு அமெரிக்காவுடன் ஒரு மூலோபாய பங்காளித்தனத்திற்கு முயலும்
உந்துதல் சாதாரண மக்களால் "புரிந்து கொள்ள முடியாதது" என்றும் இடது காங்கிரஸை மமதா பானர்ஜி,
அவருடைய திருணமூல் காங்கிரஸைச் சார்ந்து நிற்க விரட்டியது என்றும் வாதிட்டுள்ளனர்.
ஒரு முதலாளித்துவ முதலீட்டாளர் கண்ணோட்டத்தில் இருந்து பேசிய அமிதாப் நந்தி,
டம்டம் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டட CPM
முன்னாள் எம்.பி. கூறினார்: "UPA
அரசாங்கத்திற்கு ஆதரவை விலக்கிக் கொண்ட தினத்தில் இருந்து நம்முடைய கோஷங்கள், செயற்பாடுகள் ஆகியவை
உறுதித்தன்மைக்கு எதிராக நாம் உள்ளோம் என்பதை நிரூபித்துவிட்டன."
CPM உடைய உட்பார்வையை ஒட்டி
கட்சித் தலைமை சேதத்தைக் குறைக்கும் வகையில் சில கருத்துக்களை ஒப்புக் கொள்ள வைத்துள்ளது. கொல்கத்தா
தளத்தைக் கொண்ட Telegraph
கூற்றின்படி மேற்கு வங்க முதல் மந்திரியும் CPM
பொலிட்பீரோ உறுப்பினருமான புத்ததேப் பட்டாச்சார்ஜி மே 19 அன்று கட்சியின் மாநில செயற்குழுவின் அவசரக்
கூட்டத்தில், "நிலத்தை கையகப்படுத்தியது, முஸ்லிம்களிடையே ஏமாற்றம் மற்றும் கட்சிக்காரர்களிடம் ஊழல்"
ஆகியவைதான் இடதின் "மட்டமான" தோல்விக்குக் காரணங்கள் என்றார்.
மரபார்ந்த விதத்தில் நாட்டின் மிக வறிய மக்கட்தொகையில் விகிதத்திற்கு அதிகமாக
இருக்கும் முஸ்லிம் மக்கள் இடதை ஆதரித்த காரணம் அவர்களுடைய
BJP மற்றும் இந்து
வகுப்புவாத எதிர்ப்பை ஒட்டி ஆகும். ஆனால் அந்த ஆதரவு இடது முன்னணி அரசாங்கத்தின் நந்திகிராம நடவடிக்கைகளால்
அதிர்ச்சிக்கு உட்பட்டுவிட்டது; அந்த இடத்தில் அதிக முஸ்லிம்கள் வாழ்கின்றனர்; அதையும் தவிர ஒரு மத்திய அரசாங்கக்
குழு இந்திய முஸ்லிம் சிறுபான்மையினரின் நிலை பற்றி விசாரித்து வெளியிட்ட அறிக்கையில் கூறபட்டுள்ள கருத்துக்களும்
காரணம் ஆகும். மேற்கு வங்க மக்கட் தொகையில் முஸ்லிம்கள் 25.2 சதவிகிதம் இருந்தாலும், அரசாங்க வேலைகளில்
அவர்களுடைய விகிதாசாரம் 4.6 சதவிகிதம்தான் உள்ளது என்று கூறியுள்ளது.
2007ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் பல பேரூர்களிலும் கிராமங்களிலும் உணவுப்
பங்கீட்டுக் கடைகளில் இருந்த ஊழல் பற்றி எதிர்ப்புக்கள் கலகங்கள் மூலம் வெடித்தெழுந்தன. கடைகள் பொதுவாக
CPM
மற்றும் அதன் இடது முன்னணி பங்காளிக் கட்சிகளின் தொண்டர்களை ஊழியர்களாக கொண்டுள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தின்போது உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் இருவர்
மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவிற்கு பயணித்தனர்.
"நகரச் சாலைகளில் நாங்கள் நடந்து செல்லும்போது மிகப் பெரும் வறுமை மற்றும்
பிற்போக்குத்தனத்தின் சான்றுகளைக் கண்டோம். வீடு இல்லாத மக்கள் தங்கள் வாழ்வை--சமைத்தல்,
சாப்பிடுதல், உறங்குதல், குழந்தைகள் படித்தல், விளையாடுதல் அனைத்தையும்-- சாலையோர நடைமேடையில்
கடும் சூரிய வெப்பத்தில் செய்வதைக் கண்டோம். இது கோடை காலம், வெப்பம் பொறுத்துக் கொள்ள
முடியாததாக இருந்தது. இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது "சிவப்பு கோட்டையில்" மனிதன் ரிக்ஷா இழுத்து
பிழைப்பை நடத்துவதான்; இந்த இழிந்த பழக்கம் இந்தியாவில் பெரும்பகுதியில் தடைக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது"
என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் அலிப்பூர் வளாகத்தில் தத்துவப் பிரிவு மாணவர்
சித்திக் ஆலம் பெக் WSWS
இடம் கூறினார்: "இடது முன்னணி தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் சிந்தனைக்கு தகுதியற்றது.
இடது முன்னணி வந்துள்ளதாக கூறும் வளர்ச்சியை நாங்கள் காணவில்லை."
"இங்கு பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன; உதாரணத்திற்கு அடிப்படை
கட்டுமானங்கள், சாலைகள், போக்குவரத்து, சுகாதாரம், மின்சார வசதி போன்றவை. நான் கிராமப்புறத்தில்
இருந்து, டயமண்ட் துறைமுக காலிசரம்பூரில் இருந்து வருகிறேன். அங்கு சுகாதார மையம் எங்கள் கிராமத்தில்
கிடையாது. ஒரு சுகாதார மையத்தை அடைவதற்கு மக்கள் பல கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டும்."
"ஒரு முழு மாற்றம் நமக்குத் தேவை ஆகும். ஒரு அரசியல் மாற்றம் மட்டும்
அல்ல--எவர் அதிகாரத்தில் இருப்பார் என்பது மட்டும் இல்லை. மாறாக ஒரு சமூக மாறுதல் வேண்டும்." இடது
முன்னணியின் நிலச் சீர்திருத்தம் பற்றியும் அவர் குறைகூறினார். "ஓரளவிற்கு அது செய்யப்பட்டுள்ளது. ஆனால்
இவர்கள் கூறுவது போல் பெரிதாக ஒன்றும் இல்லை."
நந்திகிராம் வன்முறை பற்றி சித்திக் கூறினார்: "இவர்கள் அங்கு ஏதோ தவறு
செய்துள்ளனர். அவர்கள் கூறும் சிந்தனைப்போக்கின்படி இடது முன்னணி இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது."
கொல்கத்தாவில் தொழிலாளர்கள் வசிக்கும் இடமான கர்டாவில் நாங்கள்
வேலையில்லாத சணல் ஆலைத் தொழிலாளி மோகன் பிரசாத்தைச் சந்தித்தோம். தான் எப்படி வேலையை
இழந்தேன் என்று அவர் விளக்கினார். "கர்டா சணல் ஆலையில், நான் வேலைபார்த்த போது கிட்டத்தட்ட
3,000 தொழிலாளர்கள் இருந்தனர்; அப்பொழுது ஜூலை 2007ல் அது மூடப்பட்டது.
CPM உடன்
இணைந்த CITU (Center of Indian Trade
Union), தலைவர்கள் எங்களுக்கு
VRS [Voluntary Retirement Scheme]
விருப்ப ஓய்வூதியத்திட்டத்தை ஏற்குமாறு கூறினர். இல்லாவிடின் மத்திய அரசாங்கம் ஆலையை முடிவிடும் என்றனர்.
அது தனியார் மயமாக்கப்படும், "நீங்கள் அனைவரும் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள், ஊதியங்கள்
குறைக்கப்படும்" என்றனர்.
CPM அதன் அரசியல்
எதிர்ப்பாளர்களிடம் காட்டும் இழிந்த அணுகுமுறை பற்றி மோகன் வெறுப்படைந்தார். "இங்கு
CPM ஐ எதிர்க்கும்
எவரும் மாவோயிசத்தினர் அல்லது திருணமூல் ஆதரவாளர் என்று முத்திரையிடப்படுவர். 32 ஆண்டுகள் இடது முன்னணி
தொழிலாளர்களுக்கு சிறப்பானதை செய்திருந்தால், தொழிலாளர்கள் தங்கள் வாக்குகளை அதற்குத்தான்
போட்டிருப்பர்."
எதிர்க் கட்சிகள் பற்றியும் மோகன் பிரமை எதையும் கொண்டிருக்கவில்லை; இதில்
திருணமூல் காங்கிரஸும் அடங்கும். "மக்கள் CPM
மற்றும் இடது முன்னணிக்கு எதிராக உள்ளனர். ஆனால் திருணமூல் காங்கிரஸ் ஒன்றும் மாற்றீடு அல்ல. பொது
மேடைகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களை திருப்தி செய்யும் வகையில் விவசாயிகள், தொழிலாளர்களை
பற்றிப் பேசுகின்றனர்; ஆனால் அவர்கள் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதுவும் செய்யவில்லை."
மற்றொரு முன்னாள் சணல் ஆலைத் தொழிலாளி 46 வயதான பிரகாஷ் செளதரியிடமும்
WSWS
பேசியது. இவர் 1977ல் கர்டா சணல் ஆலையில் பயிற்சி பெறுபவராக சேர்ந்து 1980ல் வேலையைப் பெற்றார்.
"2007ல் நாங்கள் வெளியேற்றப்பட்டோம்; எனக்கு அப்பொழுது 44 வயது. எங்கள் முக்கிய தேவை வேலைகள்
ஆகும். வேலையின்றி நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களுக்கு தொழிற்சங்கத் தலைவர்கள் ஏதும் செய்யவில்லை.
இப்பொழுது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பொருத்துனராக உள்ளேன்; தற்காலிக அடிப்படையில், நாள்
ஒன்றுக்கு 100 ரூபாய் பெறுகிறேன் ($2). என்ன செய்வது? விடுமுறை நாட்களுக்கு ஊதியம் கிடையாது."
பல தொழிலாளர்களை போலவே பிரகாஷும் எதிர்த்தரப்பில் அதிக நம்பிக்கை
கொண்டிருக்கவில்லை. "CPM,
இடது முன்னணி பற்றி என்ன கூறுவது? எங்கள் ஆலைகளுக்கு அவர்கள் என்ன செய்தனர் என்பதை நாங்கள்
பார்த்துள்ளோம். எங்களுக்கு வேலைகள் கொடுத்தால் திருணமூல் காங்கிரஸுக்கு நல்லது. ஆனால் அவர்களையும்
நாங்கள் நம்ப முடியாது, அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது.
"கடந்த காலத்தில் CPM
எங்களுக்குச் சில நன்மைகளை செய்தது. எங்களுக்கு அதிக ஊதியம்
வேண்டும் என்று அது போராடியது. இப்பொழுது அவர்கள் மோசமாக நடந்து கொள்ளுகின்றனர். வேலை
எங்களுக்கு கிடைத்தால் அது நலன் தரும். ஆனால் VRS
மூலம் வேலைகளை இழந்தபோது அவர்கள் ஏதும் செய்யவில்லை."
தொழிலாளர்களுக்கு ஒரு சிறந்த வருங்காலத்தை தான் காணமுடியவில்லை என்று
பிரகாஷ் உளைச்சல் கொண்டுள்ளார்: "10 உறுப்பினர்கள் இருக்கும் எங்கள் வீட்டில் நான் ஒருவன்தான் உழைத்து
ஊதியம் கொண்டுவருபவன். 10 பேருக்கும் நான் ஒருவன்தான் இந்த 100 ரூபாயில் ஒரு நாளைக் கடத்த
வேண்டும். தங்கள் குடும்பங்களை காப்பாற்றுவதற்கு மக்களுக்கு வேலைகள் வேண்டும், அது முக்கியம். சிறு வணிகம்
செய்தாலும் போதாது. சிறு வணிகங்களிலும் பிரச்சினைகள் உண்டு. சிறு ஆலைகள் நடத்துபவர்கள் தொழிலாளிகளுக்கு
நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 ரூபாய்தான் கொடுப்பர்."
"CPM
மக்களுக்காக உழைக்கும் என்றுகூறுகிறது. அவர்கள் அதைச் செய்தால் நல்லதுதான். ஆனால் அதை நான்
நம்புவதில்லை. ஆலைகளை நடத்தும் கட்சி எங்களுக்கு வேலைகளை கொடுக்க முடியும், எங்களுக்கு உதவமுடியும்,
அது நன்றாக இருக்கும்." |