World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French university strikes end in union betrayal

பிரெஞ்சு பல்கலைக்கழக வேலைநிறுத்தங்கள் மாணவர் சங்கக் காட்டிக் கொடுப்பினால் முடிவுற்றன

By Pierre Mabut
27 May 2009

Use this version to print | Send feedback

16 வாரங்கள் தொடர்ச்சியாக பகிஷ்கரிப்புப் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பார்ப்பாட்டங்கள் நடத்திய பின்னர், அரசாங்கத்தின் பல்கலைக்கழகங்களுக்கான LRU "தன்னாட்சி"யை எதிர்த்த இயக்கம் உடைந்துபோனது. வரவிருக்கும் தேர்வுப் பரீட்சைகள் பற்றிய அரசாங்கத்தின் அச்சுறுத்தலின் கீழான அழுத்தங்கள் மற்றும் ஒற்றுமையை திரட்ட மறுத்து மாணவர் சங்கங்கள் சேதப்படுத்தியதை அடுத்து இவ்வாறு நிகழ்ந்தது.

இச்சட்டம் பொது உயர் கல்வியில் இலாப நோக்கு மற்றும் போட்டி ஆகியன அறிமுகம் ஆவதற்கு வழியைத் திறக்கிறது.

கடந்த பெப்ருவரி மாதத்தில் இருந்து பிரான்சின் 83 பல்கலைக் கழகங்களில் பாதிக்கும் மேலானவை பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இப்பொழுது Toulouse இல் உள்ள Le Mirail University ஒன்றுதான் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் உள்ளது. தெற்கு துலோன்-வார் பல்கலைக்கழகத்தின் 11 மாணவர்கள் LRU திரும்பப் பெற வேண்டும் என்று உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

Paris IV சோர்போன் பல்கலைக்கழகம், நிகழ்வுகளுக்கு மத்தியில் மே 19 அன்று விரிவுரைகள் மீண்டும் துவக்கப் பெறலாம் என்று வாக்களித்தது. உயர் கல்வி மந்திரி வலெரி பெக்றேஸ் (Valérie Pécresse) மாணவர்கள் உதவித் தொகை விரிவாக்கத்திற்கு உத்தரவாதம் கொடுத்து மாணவர்கள் இருப்பிடங்கள் மற்றும் உணவுவிடுதிகளை திறந்து வைப்பதாகவும் தாமதித்து வரும் தேர்வுகளால் ஏற்படும் செலவை இது குறைக்கும் என்றும் கூறியுள்ளார். அரசாங்கம் ஏற்கனவே LRU வின் சில விதிகளில் சமரசம் செய்து கொண்டுள்ளது; ஆனால் சட்டத்தின் அடிப்படை நோக்கம் கைவிடப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஊழியர் குறைப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது; ஆசிரியர் குழுவிற்கு என்று இல்லாமல் பல்கலைக்கழக தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆசிரியர் பதவி உயர்வு, பணிக்கு அமர்த்தல் போன்ற அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன, ஆய்வு ஆசிரியர் அந்தஸ்து மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது, ஆசிரியருக்கு கூடுதல் வேலைச்சுமை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி (IUFM) மாணவர்கள் ஓராண்டு கற்பிக்கும் முறையையும் அரசாங்கம் அகற்றிவிட உள்ளது; அதே போல் அவர்கள் ஊதியம் மற்றும் அரசாங்க பணியாளர் அந்தஸ்தையும் அகற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகள் டிப்ளோமா பட்டம் இதற்குப் பதிலாக வரும். மே 13 புதனன்று கல்வி மந்திரி சேவியர் டார்கோ இச்சீர்திருத்தம் தற்காலிகமாக 2010/11ல் ஆசிரியர் தகுதி பெறும் மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்தார். முக்கிய ஆசிரியர்கள் சங்கமான Snesup FSU இதை "அழுத்தத்தின் விளைவாக அரசாங்கம் பின்வாங்கியது" என்று பாராட்டியுள்ளது.

அரசாங்கத்தின் அணுகுமுறை கடினமாதலையும் சமீபத்திய வாரங்கள் கண்டன. மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் வன்முறை பலமுறையும் பயன்படுத்தப்பட்டது. அமியானில் ஒரு அமைதியான அணிவகுப்பு CRS கலகப் பிரிவு போலீசால் ஏப்ரல் 1 இல் முறியடிக்கப்பட்டது. மாணவர் ஆர்ப்பாட்டங்களில் போலீசாரின் மிருகத்தன தாக்குதல்கள் ஆசிரியர் மற்றும் மாணவர் சங்கங்களின் பொருட்படுத்தாத தன்மைக்கு எதிராக இருந்தன; அல்லது இவை வெளிப்படையாக அரசாங்கத்தின் நிலைப்பாடான LRU வை திருத்தி, அதன் அடிப்படைகளை கொள்ளுதல் என்பதற்கு ஆதரவாக இருந்தன.

CNU எனப்படும் National University Co-ordination இன் பல்கலைக்கழக ஊழியர்கள், ஆசிரியர்களுடைய பிரதிநிதிகள், 73 பல்கலைக் கழகங்களில் இருந்து வந்தவர்கள், ஏப்ரல் 29 அன்று சோர்போனில் கூடி, "கோரிக்கைகள் திருப்திகரமாக நிறைவேற்றப்படும் வரை தேர்வுகளை ஏற்பாடு செய்வதில்லை" என்று உறுதி கொண்டனர். உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் இந்த அழைப்பிற்கு ஆதரவு கொடுக்கவில்லை. மே 6ம் தேதி Pécresse, தேர்விற்கு ஏற்பாடு செய்யாத, தகுதித் தரம் வழங்காமல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் ஊதியங்கள் குறைக்கப்படும் என்று கூறினார்; Darcos எதிர்ப்பு நடத்தும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் கொடுக்கப்படமாட்டாது என்று அறிவித்தார். ஆளும் UMP இன் பாராளுமன்றச் செய்தித் தொடர்பாளர் Frederique Lefebvre மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதைத் தடுப்பவர்கள்மீது சட்டபூர்வ நடவடிக்கை வேண்டும் என்றார்.

சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் François Hollande, "எதையும் கேட்காத, பேச்சுவார்த்தை நடத்தாத அரசாங்கத்திற்கும், தனக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக பூசலில் ஈடுபடும் தீவிர இடதிற்கும் இடையே பிளவுகள் நீண்டகாலம் நீடித்துவிட்டன" என்று அறிவித்தார்.

ஆசிரியர், மாணவர் போர்க்குணத்தை தாக்கி கட்டுரை ஒன்று Informations Ouvrires, இன் மே 7-13 பதிப்பில் வந்துள்ளது. POI எனப்படும் Independent Workrs Party, மற்றும் CGT (பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு) இன் முக்கிய உறுப்பினர் எழுதினார்: "மாணவர்கள், அவர்களுடைய குடும்பங்கள், ஆராய்ச்சி ஆசிரியர்களுடைய கவலை ஆகியவை பெருகியுள்ளது. இந்தக் கவலை கடைசியாக பல்கலைக்கழக இணைப்பு மாநாடு ஏப்ரல் 29 கொடுத்த முறையீட்டில் திண்மை பெறுகிறது [அதில் தேர்தல் புறக்கணிப்பு கோரப்பட்டது]. இது சற்று "பொறுப்பற்றதாகும்" என்று அவர் கூறியுள்ளார். POI என்பது OCI (Organisation Communiste Internationaliste) அமைப்பிற்கு பின்தோன்றல் ஆகும், இது ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து 1971ல் உடைத்துக் கொண்டது.

இந்த ஆண்டு பல்கலைக்கழக வேலைநிறுத்தம் 2007 இல் நடந்ததைப் போன்றே இருந்தது; அப்பொழுது மாணவர்கள் பல மாதங்கள் LRU சட்டத்திற்கு எதிராகப் போராடினர்; இதற்கு ஆசிரியர் சங்கங்கள் அல்லது UNEF (பிரெஞ்சு தேசிய மாணவர்கள் சங்கம்) ஆகியவற்றின் ஆதரவு இல்லை. ஆரம்பத்தில் இருந்தே ஆசிரியர் மாணவர் சங்கங்கள் மீண்டும் ஜனாதிபதி சார்க்கோசி அரசாங்கத்துடன் மோதாமல் பின்வாங்கத்தான் முற்பட்டன. ஏப்ரல் 28ம் தேதி பொதுப்பணித் தாக்குதல்களுக்கு எதிராக 32,000 மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இணைந்து நின்றபோது, மே 14ல் அதே போன்ற எதிர்ப்பில் ஆசிரியர்கள் தனித்துப் போயினர். மருத்துவமனைகளில் 20,000 செவிலியர் வேலைகளை அரசாங்கத்தின் சுகாதாரப் பிரிவு சீர்திருத்தத்தினால் இழக்க உள்ளனர்.

மார்ச் 22ம் தேதி LIBE Forum, UNEF தலைவர் Jean Baptiste Prévost நடத்திய விவாதத்தில், அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் LRU Benoist Apparu பொதுக் கூட்டங்கள் திரட்டப்படுவதின் பங்கு, தேசிய ஒருங்கிணைப்பு குழுக்கள் திரட்டப்படுவது ஆகியவை பற்றிப் பேசினார். "தொழிற்சங்கங்கள் ஒன்றுதான் [அரசாங்கத்துடன்] பங்காளிகளாக பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளனர். தேசிய ஒருங்கிணைப்புக் குழுக்கள், சோவியத் ஜனநாயகம் போன்றவை."

பிரான்சின் தொழிலாளர் தொகுப்பில் 7 சதவிகித்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தில் "பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளிகள்" என்று அங்கீகரிக்கப்படுகின்றன; ஏனெனில் அவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதிகாரத்துவத்தின் நலன்களுக்கு உதவுகின்றன. Prévost உடைய UNEF 2007TM LRU ஏற்பது பற்றி பேச்சு வார்த்தை நடத்தியது, அவர் Apparu உடன் கருத்தில் உடன்படுவது இயல்புதான். பொதுக்கூட்டங்கள் "தொழிற்சங்கங்கள் போல் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு நெறியை" கொண்டிருக்கவில்லை என்று Prévost அறிவித்தார்.

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ஒலிவியே பெசன்ஸநோவின் தலைமையில் இருப்பது, போர்க்குண எதிர்ப்பு --"உண்மையான ஒற்றுமை", "போராட்டங்களின் இணைப்பு", "அடித்தளத்தில் அணிதிரட்டி கட்டமைக்கப்படுதல்" என்று கூறியபடி-- மாணவர்கள் வெற்றியை அடையப் போதுமானது என்றது. இதே நிலைப்பாடுதான் SUD (Solidarity, Unity, Democracy) தொழிற்சங்கம் மற்றும் பிற அராஜகவாத, சிண்டிகலிச இயக்கங்களால் (சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான) UNF க்கு மாற்றீடாக முன்வைக்கப்படுகிறது. இவை பொது வேலைநிறுத்தத்திற்கு கொடுத்த அழைப்பு தொழிற்சங்க அதிகாரத்திற்கு, அதன் தேசியவாதம், வர்க்க ஒத்துழைப்பிற்கு எதிராக அரசியல் எழுச்சியை எழுப்ப வேண்டும் என்ற அவசியமான நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் முன்வைக்கப்படுவதில்லை.

தேசிய மாணவர் ஒருங்கிணைப்பு மாநாட்டின் (National Student Co-ordinating Conference) கடைசிக் கூட்டம் மே 3ம் தேதி Dijon ல் நடந்தது; அது LRU சட்டம் அகற்றப்பட வேண்டும், மாணவர்கள் கல்விப்பருவம் முறையாக ஏற்கப்படல் மற்றும் பொது வேலைநிறுத்தம் ஆகியவற்றிற்கு அழைப்புக் கொடுத்தது. ஆனால் அரசாங்கத்திற்கு எதிராக, தொழிற்சங்கத்தில் உள்ள அதன் உடந்தையாளர்களுக்கு எதிராக அரசியல் போராட்டத்தை முன்வைக்காமல், இதன் அழைப்பு தவிர்க்கமுடியாத தோல்வியின் எதிரே வெறும் அலங்காரச் சொற்களாகத்தான் வந்தது.

பிரான்சில் மாணவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை ஒரு புதிய தலைமையைக் கட்டமைப்பது ஆகும்; இது பல "இடது" குழுக்களின் காலம் கடந்துவிட்ட எதிர்ப்பு அரசியலுக்கு பதிலாக ஒரு சோசலிச, சர்வதேச முன்னோக்கை முன்வைக்கிறது.

சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு (The International Students for Social Equality) என்பது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மாணவர் அமைப்பு ஆகும். இதன் முக்கிய அறிக்கை விளக்குவதாவது:

"ISSE எதிர்க்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் எதிர்ப்புக் கொள்கையை நிராகரிக்கிறது; நிறுவப்பட்டுள்ள கட்சிகள் "நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பதற்காக அவற்றின் மீது அழுத்தம் கொடுப்பதை நிராகரிக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் பல குழுக்களிடத்தில் உள்ள இந்த முன்னோக்கு பயனற்றது, திவால்தன்மை கொண்டது. எங்கள் நோக்கம் ஒரு வெகுஜன அரசியல் இயக்கத்தை, தெளிவான, விரிவான தத்துவார்த்த முன்னோக்கில் கட்டமைத்து, அதிகாரத்திற்கு போராடுதல், தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுதல் மற்றும் சமூகத்தை ஒரு ஜனநாயக, சமத்துவ, அறிவார்ந்த தன்மையில் மறு சீரமைத்தல் என்பதாகும்."

"எங்கள் நோக்கம் சுத்தமான மாணவர் இயக்கத்தைக் கட்டமைப்பது இல்லை. முக்கிய தேவை தொழிலாள வர்க்கம் முழுவதிற்கும், அதாவது உலகின் பெரும்பாலான மக்களுக்காக ஒரு சுயாதீன அரசியல் இயக்கம் வேண்டும் என்பதாகும். மாணவ இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் இப்பொழுது இல்லாவிடினும் சிறிது காலத்தில் தொழிலாள வர்க்கத்தின் பகுதியாக இருப்பர். மாணவர்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சினைகள் அனைத்து தொழிலாளர்களையும் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட, முதலாளித்துவ முறையின் விளைவுகள் ஆகும்."

எல்லாவற்றிற்கும் மேலாக, "தொழிலாள வர்க்கத்திற்கு அதற்கென ஒரு கட்சி, ஒரு வேலைத்திட்டம், அதன் சொந்தக் குரல் வேண்டும்."

இந்த இலக்கிற்காக ISSE, சோசலிச சமத்துவக் கட்சிகள் ICFI இன் பிரிவுகளாக பிரான்சிலும் உலகெங்கிலும் கட்டமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.