WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
UAW, Inc.
ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்க நிறுவனம்
By Jerry White
23 May 2009
Use this version
to print | Send
feedback
ஐக்கிய கார்த்தொழிலாளர்கள் சங்கம் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் அமெரிக்க
கருவூலத்துடன் சேர்ந்து ஒரு உடன்பாட்டிற்கு உட்பட்டுள்ளது. இதன்படி ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் மீது
புதிய சலுகை பறிப்புக்களை சுமத்துவத்துவதுடன், அதே நேரத்தில் அமெரிக்காவில் இருக்கும் கார்த்தயாரிப்பு
நிறுவனத்தில் மூன்றில் ஒரு பகுதியை முடிவிடுதல், UAW
தொழிலாளர்கள் 62,000 பேரில் 23,000 பேருக்கு வேலையிழப்பு ஆகியவை இதில் அடங்கும்.
இந்த உடன்பாடு ஊதிய முடக்கம், விடுமுறை நாட்கள் குறைப்பு, பணி இடைவெளி நேரக்குறைப்பு,
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் வருமானப் பாதுகாப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்தல் ஆகியவற்றின் மூலம்
தொழிலாளர்களுக்கான செலவினங்களை 1 பில்லியன் டாலராக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது
UAW
தொழிலாளர்களை டோயோடா மற்றும் பிற ஜப்பானிய உரிமையான அமெரிக்க நிறுவனங்களில் இருக்கும் தொழிற்சங்கத்தில்
அங்கத்தவரல்லாத தொழிலாளர்களின் ஊதியங்கள், நலன்கள் ஆகியவற்றிக்கு சமமாக அல்லது குறைந்தாக மாற்றிவிடும்.
VEBA எனப்படும் தொழிற்சங்க
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் சுகாதார நலன் அறக்கட்டளை நிதிக்கு ஜெனரல்
மோட்டார்ஸ் கொடுக்க வேண்டிய 20 பில்லியன் டாலருக்கு பதிலாக $10 பில்லியன் கொடுத்தால் போதும்
என்றும் UAW
ஒப்புக் கொண்டுள்ளது. மீதிப் பணம் கிட்டத்தட்ட பயனற்ற பங்குகள் மூலம் கொடுக்கப்படும். இது நூறாயிரக்கணக்கான
ஓய்வூதியம் பெறுவோர், அவற்றை நம்பியிருப்பவர்களின் நலன்களை
UAW உறுதியாகக்
குறைக்க வைத்துவிடும்.
ஒபாமா நிர்வாகம் நூறாண்டுகளாக இருக்கும் இந்தப் பெரிய நிறுவனத்தை
கிறைஸ்லருக்கு செய்தது போல் திவால் தன்மையில் தள்ள இந்த உடன்பாடு வகை செய்கிறது. அதையொட்டி
விருப்பமில்லாத ஆலைகள், மாதிரிகள் மற்றும் விற்பனை உரிமைகள் அகற்றப்பட்டுவிடும். இது ஒரு "புதிய", மிகச்
சிறிய ஜெனரல் மோட்டார்ஸ் திவால் நீதிமன்ற வழிவகைகளுக்கு பின்னர் வெளிப்படும். அவை "மரபார்ந்த
செலவினங்களில்" இருந்து விலகி இருப்பதுடன், வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆதாயம் கொடுக்கும்
தன்மையைக் கொண்டிருக்கும்.
ஆரம்பத்தில் இருந்தே UAE
வெள்ளை மாளிகையுடன் இணைந்த முறையில் கார்த்தயாரிப்புத் தொழிலை மறுகட்டமைக்க செயல்பட்டு வருகிறது.
இதன் ஒத்துழைப்பிற்கு பரிசாக ஒபாமா ஜெனரல் மோட்டார்ஸின் உடைமையில் 39 சதவிகிதம், கிறைஸ்லரில் 55
சதவிகிதத்தையும் UAW
க்கு கொடுப்பதுடன் இயக்குனர் குழுவில் ஒரு இடத்தையும் இருநிறுவனங்களிலும் கொடுக்கிறார்.
இந்த நிலையில் இருந்து
UAW நிர்வாகிகள் தங்கள் பங்குகளின் மதிப்பை உயர்த்துவதற்காக
ஆலைகளில் இன்னும் மிருகத்தனமாக பணிநிலைகளை சுமத்தும் விதத்தில் நேரடி நிதிய ஊக்கத்தையும் பெறுவர்.
வியாழனன்று வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளபடி,
UAW நியமித்த
கிறைஸ்லர் இயக்குனர் குழு உறுப்பினர், "VEBA
நிதியத்தின் நிதி நலன்களை பாதுகாக்கும் கடமையை"
கொண்டிருப்பாரே அன்றி தொழிலாளர்கள் நலன்களை காப்பதற்கல்ல.
UAW ஒரு வணிக அமைப்பாக
மாற்றப்பட்டுள்ளது. அது கார்த் தொழிலாளர்களின் உபரிமதிப்பில் இருந்த கணிசமான பகுதியை அபகரிப்பதின் மூலம்
தன்னுடைய வருமானத்தை பெறும். பல தசாப்தங்களாக
UAW அமைப்பு தான் பிரதிபலிப்பதாக கூறும்
"உறுப்பினர்களுடைய" நலன்களுக்கு எதிராக, அவற்றில் இருந்து தனியான முறையில் தன்னுடைய பொருளாதாய
நலன்களை பெருக்கிக் கொள்ளுவது, அவர்களை காட்டிக் கொடுப்பது, இழிசரிவு பெற்றுள்ளது என்று பல
தசாப்தங்களாக நடப்பவற்றின் உச்சக்கட்டத்தை அடைந்ததுவிடும்.
கடந்த 30 ஆண்டுகளில்
UAW அமைப்பு வாடிக்கையாக அதன் பெறுநிறுவனக் கொள்கைகள்
அடிமட்ட கார்த் தொழிலாளர்கள் மீது கொடுத்த பேரழிவுத் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக்
கொண்டுள்ளதுடன், அதே நேரத்தில் தன்னுடைய சொத்துக்கள், வருமானங்கள் ஆகியவற்றையும் அதிகமாகப்
பெருக்கிக் கொண்டுள்ளது. UAW
உறுப்பினர் எண்ணிக்கையை 1979ல் உச்சக்கட்டத்தில் இருந்த 1.5 மில்லியன் என்பதில் இருந்து 2008ல் 431,000
என்று வந்துவிட்டது.
"தொழிற்சங்கத்தின் செல்வக் குவிப்பு பெருமை வாய்ந்த நாட்களை நினைவு கூர
வைக்கிறது" என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரையில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வியாழனன்று
UAW "தற்பொழுது
$1.2 பில்லியன் சொத்துக்களைக் கொண்டுள்ளது; அதையொட்டி அது நாட்டின் செல்வக் கொழிப்புடைய
தொழிற்சங்கமாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.
UAW அண்மையில் தொழிற்துறை
அமைச்சில் பதிவு செய்துள்ள ஆவணங்களில் இருந்து மேற்கோளிட்டு ஜேர்னல் இந்த அமைப்பின்
சொத்துக்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளது: "அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களில் $700 மில்லியன்; பிற
முதலீடுகளில் $321 மில்லியன், முக்கியமாக பாதுகாப்புப் பத்திரங்கள்; குறிப்பிட்ட கால முதலீட்டில் $100
மில்லியன், இதில் வாஷிங்டனுடைய Dupont Circle
ல் உள்ள $3 மில்லியன் நகரவீடும், மிச்சிகனில் $33 மில்லியன்
மதிப்பு உடைய கோல்ப் மைதானத்தில் இருக்கும் ஏரிக்கரை வீடும் அடங்கும்.
மொத்தத்தில் தொழிற்சங்கத்தின் முதலீடுகள் 2008ல் $38
மில்லியன் வருவாயைத் தோற்றுவித்தன."
2007 இறுதியில் $871 மில்லியன் மதிப்பு உடைய இச்சொத்துக்களில்
பெரும்பாலானவைவை UAW
வினால் வேலை நிறுத்த நிதியத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சிறிதும் தொடப்படாததின் காரணம்
UAW
கார்த் தயாரிப்புத் தொழிலில் கிட்டத்தட்ட வேலைநிறுத்தங்களை இல்லாதொழித்துவிட்டது. உதாரணத்திற்கு அதன்
சமீபத்திய ஜெனரல் மோட்டார்ஸ்,
கிறைஸ்லருடனான ஒப்பந்தங்களில் 2015 வரை வேலைநிறுத்தம் கிடையாது
என்ற விதிக்கு UAW
ஒப்புக் கொண்டுள்ளது.
UAW இன் நிதிய நிலை உலக
சோசலிச வலைத்தளம் மற்றும் சோசலிச் சமத்துவக் கட்சி தொழிற்சங்கங்கள் பற்றி கொடுத்துள்ள பகுப்பாய்வை
சரியென நிரூபிக்கிறது.
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு
செய்திருந்த தொடர்ச்சியான பிராந்திய மாநாடுகளில் கட்சியின் தேசியத் தலைவர் டேவிட் நோர்த் 1980 களில்
ஒரு தசாப்தம் சேதப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்களுக்கு பின்னர், "AFl-CIO,
UAW, Teamsters ஆகியவை பெயரளவில்தான்
தொழிற்சங்கங்களாக இருந்தன. தொழிலாள வர்க்கத்தின் நலன்களுடன் தொடர்பு கொண்ட அமைப்புக்கள் என்று
இருந்த நிலை மறைந்து போயிற்று. மாறாக, அவை வலதுசாரி செயலர்களின் மத்தியதர வர்க்க உயர்மட்ட
அடுக்கின் சமூக, நிதிய நலன்களுக்கு பணிபுரிந்து, பெருநிறுவனங்களின் சார்பாகவும் அவற்றின் ஒத்துழைப்புடனும்
தொழிலாளர்களை கண்காணித்தன." என்று விளக்கியுள்ளார்
இன்று, "தன்னுடைய வருமானத்திற்கு தனது உறுப்பினர்களுடன் கொண்டுள்ள ஒரு
ஒட்டுண்ணித்தன, சுரண்டல் மற்றும் மோசடியாக உறவின் அடித்தளத்தில் ஒரு பரந்த நிர்வாகத்தின் நலன்களுக்கு
உதவும் அமைப்பாகத்தான் UAW
உள்ளது" என நோர்த் கூறினார்.
தொழிற்துறை அமைச்சிற்கு கொடுத்த தகவல்களை மேற்கோளிட்டு அவர்
தொடர்கிறார்: "UAW
இன் சர்வதேச தலைமையகம் 2,000 பேருக்கு மேலான ஊழியர்களை கொண்டுள்ளது... இவர்களில் கால்
பகுதியினர் ஆண்டு ஒன்றுக்கு $110,000 ஊதியம் பெறுகின்றனர். நூற்றுக்கணக்கான "முறையில் பிரதிநிதிகளில்"
பெரும்பாலானோர் $120,000 க்கும் $140,000
ஆண்டு ஒன்றுக்கு என்ற விதத்தில் ஊதியங்களையும் கூடுதல் ரொக்க
உதவித் தொகைகளையும் பெறுகின்றனர். UAW
இன்டர்நேஷனல் ஊழியர்கள் இரத்த உறவுகளைக் கொண்டுள்ளனர்; எனவே குடும்பங்கள் ஆண்டு ஒன்றுக்கு
தொழிற்சங்கத்தில் இருந்து $200,000 க்கும் மேலாக மொத்தமாக பெறுவது என்பது அபூர்வமானது அல்ல.".
UAW உடைய மகத்தான உறுப்பினர்
எண்ணிக்கை இழப்பு அந்த நிர்வாகத்தின் நிதிய நலனில் கணிச பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று நோர்த்
தொடர்ந்து கூறினார். 2008ம் ஆண்டில் உறுப்பினர் எண்ணிக்கை 40 சதவிகிதம் குறைந்துவிட்டபோதிலும்கூட,
ஊதியங்கள் $100.9 மில்லியன் என்று உயர்ந்தன. "வேறுவிதமாக இப்புள்ளிவிவரங்களை பார்த்தால், 2000ம்
ஆண்டில் UAW
உடைய மத்திய அதிகாரத்துவம் $133 வருமானத்தை ஒவ்வொரு தொழிற்சங்க உறுப்பினரிடம் இருந்து பெறுகிறது.
எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய அதிகாரத்துவம் $233 வருமானத்தை தொழிற்சங்க உறுப்பினரிடம் இருந்து பெறுகிறது."
1979 கிறைஸ்லர் பிணை எடுப்பில் இருந்தே,
UAW மற்றும் பிற
தொழிற்சங்கங்களின் முக்கிய பணி வர்க்கப் போராட்டத்தை நசுக்குதல், தொழிலாள வர்க்கம் சுரண்டப்படுதலுக்கு
ஊக்கம் கொடுத்தல் என்றுதான் உள்ளது என்று நோர்த் மாநாட்டிற்குக் கொடுத்த அறிக்கை கூறுகிறது.
இக்காலத்தில் அமெரிக்க சமூகத்தில் நீண்ட காலமாக உள்ள வெகுஜன வேலைநிறுத்த நடவடிக்கைகள் சரிந்துவிட்டதற்கும்
சமூக சமத்துவத்துவமின்மை வெடிப்புத்தன்மையுடையதாக வளர்ச்சி பெற்றதற்கும் மற்றும், அமெரிக்க மக்களின் மிக
உயர்ந்த மட்டத்தில் செல்வக் குவிப்பு ஏற்பட்டதற்கும் இடையே நேரடி இடைத் தொடர்பு உள்ளது
செயற்கைத்தனமாக சமூகப், பொருளாதார அழுத்தங்களை அடக்குதல் என்பது அவை
மறைந்துவிட்டன என்ற பொருளை தராது. மாறாக நோர்த் கூறினார்: "எந்த அளவிற்கு இந்த முரண்பாடுகள்
அடக்கப்பட்டுள்ளன என்பது இதைத் தொடரும் நெருக்கடியில் இருக்கும் ஆற்றல், தீவிரம் ஆகியவற்றை உறுதி
செய்யும். எனவே தற்பொழுதைய நெருக்கடி புதிய வெடிப்புத் தன்மை நிறைந்த சமூக எழுச்சிகளுக்கு
வழிவகுக்கும்."
இப்போராட்டங்கள் UAW
மற்றும் பிற தொழிற்சங்கங்களுக்கு நேரடி எதிராக வெடித்து, புதிய அமைப்புக்களின் தேவையை கொண்டுவரும்;
அவை தொழிலாள வர்க்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு, முதலாளித்துவ சார்பு மற்றும் அதன் தேசியப் நோக்கை
கொண்ட அமைப்பை முற்றிலும் நிராகரிப்பதை அடித்தளமாக கொண்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக
தொழிலாள வர்க்கத்தின் புதிய, புரட்சிகர தலைமைக்கு சோசலிச சமத்துவக் கட்சி கட்டமைக்கப்பட வேண்டும்
என்பதுதான் இதன் பொருள் ஆகும். |