World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Oppose the Afghanistan-Pakistan war

ஆப்கானிஸ்தான்-பாக்கிஸ்தான் போரை எதிர்

By Peter Symonds
7 May 2009

Use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானுடன் அமெரிக்கா தற்போது வாஷிங்டனில் நடத்தும் உச்சிமாநாடு இரு நாடுகளிலும் பெரிய இராணுவ வன்முறையை அதிகப்படுத்தப்படுவதை குறிக்கிறது. ஒபாமா நிர்வாகம் அதின் எடுபிடிகளான ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாய் மற்றும் பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஆகியோரை அச்சுறுத்தி வழிக்குக் கொண்டுவந்து, ஒரு விரிவான போர் மூலோபாயத்தை இயற்றி ஆப்கான்-பாக்கிஸ்தால் எல்லையில் தற்போது இஸ்லாமிய எழுச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளை மீட்டு அமைதிப்படுத்தும் நோக்கத்தை இம்மாநாடு கொண்டுள்ளது.

அமெரிக்க இராணுவம், உளவுத்துறை மற்றும் வெளியுறவு கட்டமைப்பினுள் உள்ள முக்கிய நபர்களுடன் வெளிவிவகார அமைச்சர் ஹில்லாரி கிளின்டன், CIA இயக்குனர் லியோன் பானெட்டா, FBI தலைவர் ரோபர்ட் முல்லர் மற்றும் அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டின் தலைவர் தளபதி டேவிட் பெட்ரீயஸ், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றில் உள்ள அமெரிக்க தலைமைத் தளபதிகள் ஆகியோர் இதில் பங்கு பெற்றதில் இருந்து இந்த முத்தரப்பு உச்சிமாநாட்டின் முக்கியத்துவம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. இரு நாடுகளிலும் கொடூரமான இழப்புக்களை இன்னும் தவிர்க்க முடியாமல் கொடுக்கக்கூடிய இந்த கூட்டுப் போரை ஒருங்கிணைத்து திட்டமிட இன்னும் அதிக முத்தரப்பு கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

கர்சாய் மற்றும் ஜார்தாரி இருபுறமும் நிற்க, ஒபாமா செய்தி ஊடகத்திடம் நேற்று அமெரிக்க ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று கூறினார். இத்தகைய கருத்துக்கள் அவற்றிற்கு உரிய இழிவுடன் நிராகரிக்கப்பட வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் போரை முடுக்கி விட்டிருப்பதற்கான காரணம் உள்ளூர் மக்களுக்கு "பாதுகாப்பு, வாய்ப்பு, நீதி ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு" என்று இல்லாமல், எண்ணெய் வளமுடைய மத்திய ஆசியாவில் மூலோபாய இலக்கான மேலாதிக்கத்தை தொடர்வதற்காகத்தான்.

ஆழ்ந்த அமெரிக்க அழுத்தத்தின் விளைவாக பாக்கிஸ்தானிய இராணுவம் தற்பொழுது புனேர் மாவட்டத்தில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதில் 15,000 பலமான ஆயுதங்கள் கொண்ட துருப்புக்கள், ஹெலிகாப்டர் தாக்குதல் படைகள், போர் விமானங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் களத்தில் உள்ளன. வாஷிங்டனில் பாராட்டிற்கு உட்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஏற்கனவே ஏராளமான அகதிகள் பாதுகாப்பிற்காக தப்பி ஓடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி 40,000 மக்கள் இப்பகுதியை விட்டு நீங்கிவிட்டுள்ளதுடன், இந்த வெளியேற்றம் அரை இலட்சத்தை விரைவில் அடையக்கூடும்.

அண்டையில் இருக்கும் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் மேற்கு பாலா பலுக் மாவட்டத்தில் இந்த வாரத் தொடக்கத்தில் 150 பேரைக் கொன்றன. நவ காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக வரும் எந்த எதிர்ப்பையும் அடக்கவும், ஆப்கானிய மக்களை அச்சுறுத்துவும்தான் இந்தக்கடைசிக் கொடூரம் நோக்கத்தை கொண்டிருந்தது. இதைப்பற்றி ஒபாமா அதிகம் கூறாததுடன், வாடிக்கையான அறிவிப்பான அமெரிக்கா பொதுமக்கள் இறப்புக்களை தவிர்க்க "அனைத்து முயற்சிகளையும்" மேற்கொள்ளும் என்று மட்டும் கூறினார். இன்னும் கூடுதலான வன்முறை இருக்கும் என்று கூறிய ஒபாமா அமெரிக்கா "அசைந்து கொடுக்காது" என்ற தீய எச்சரிக்கையையும் விடுத்தார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் ஜனாதிபதிகள் வாஷிங்டனுக்கு தங்கள் விசுவாத்தை உறுதிபடுத்தி, "பயங்ரவாதத்திற்கு எதிரான அதன் போருக்கும்" ஆதரவைக் கூறினர். ஒபாமா இவர்களை "ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்" என்று கூறித்தாலும், அமெரிக்கா அவர்களை உத்தரவிற்குக் கீழ்ப்படியாவிட்டால் ஏதேனும் ஒரு வழியில் அகற்றுவதற்கு மன உளைச்சலைக் கொள்ளாது. சமீபத்திய மாதங்களில் அமெரிக்க அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் தேர்தலை எதிர்கொள்ளும் கர்சாய் பற்றி அதிக குறைகூறியுள்ளனர். கர்சாயின் ஊழல் மிகுந்த, திறமையற்ற நிர்வாகத்திற்காகவும் சாதாரண மக்களை அமெரிக்க இராணுவம் கொன்றது பற்றிய அவரது விமர்சனங்களுக்காகவும் அமெரிக்க அதிகாரிகளின் குறைகூறலைத்தான் பெற்றுள்ளார்.

உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் தலிபன் கரெல்லாக்களுக்கு எதிராக முழு வீச்சுடன் செயல்படத் தயக்கம் காட்டுவதற்காக சர்தாரிக்கும் கெடு விதித்துள்ளனர். பெயரிடப்படாத ஒரு மூத்த அதிகாரியை மேற்கோளிட்டு நியூயோர்க் டைம்ஸ் பாக்கிஸ்தான் போர் பாக்கிஸ்தான் இராணுவத்தை நம்பியுள்ளது என்றும், "குறிப்பாக இதுவரை அந்நாடு அமெரிக்கப் படைகள் நாட்டின் நிலப்பகுதியை போர்க்களமாக மாற்ற அனுமதிக்காதது பற்றியும் அக்கறை கொண்டுள்ளது" என்று எழுதியுள்ளது. அதன் ஏவுகணைத் தாக்குதல்களுக்கான அமெரிக்க இராணுவம் எவ்விதமான குற்றங்களையும் ஏற்றுக்கொள்ளாமலும், தான் இன்னும் கூடுதலான இராணுவப் பங்கை பாக்கிஸ்தானுக்குள் வகிக்கவேண்டும் என்று வாஷிங்டன் அழுத்தம் கொடுக்கிறது.

இதே செய்திதாள் சமீபத்திய நாட்களில் நிறைய பரபரப்புத் தகவல்களை வெளியிட்டு இஸ்லாமிய தீவிரவாதிகளை கைகளில் பாக்கிஸ்தானின் அணுவாயுதங்கள் கிடைத்துவிடக்கூடிய ஆபத்து பற்றிக் கூறியுள்ளது. இதே போலிக்காரணம்தான் புஷ் நிர்வாகத்தால் ஈராக்கில் "ஆட்சி மாற்றத்தை" செயல்புத்துவதற்கான போருக்கும் பயன்படுத்தப்பட்டது. ஒபாமா நிர்வாகம் வாஷிங்டனுக்கு கொடுத்துள்ள உறுதிமொழிகளைக் காப்பாற்றாவிட்டால் சர்தாரியையை அகற்றி வேறு ஏற்பாடுகள் செய்வது உட்பட பல விருப்புரிமைகளை பரிசீலிக்கிறது என்பது வெளிப்படை.

நேற்று நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வந்த தலையங்கங்கள் ஒபாமாவின் புதிய போர்த் திட்டங்களுக்கு விமர்சனமற்ற முழு ஆதரவை கொடுத்துள்ளன. இரு செய்தித்தாட்களும் காங்கிரஸை ஆப்கானிய, பாக்கிஸ்தானிய அரசாங்கங்கள் மற்றும் இராணுவங்களுக்கு நிதி உதவியைப் பெருக்கும் ஒபாமாவின் பில்லியன் கணக்கான டாலர்கள் கொண்ட துணை ஒதுக்கீட்டுக் கோரிக்கையை விரைவில் இயற்றுமாறு வலியுறுத்தியுள்ளன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் காங்கிரசில் இருந்து அரசியல் ஆணைகள் ஏதும் "வேண்டுகோளை மறுக்கும் வகையில்" இருக்கக்கூடாது என்றும் போரை அமெரிக்க இராணுவம் நடத்துவதில் தடைகள் கூடாது என்றும் கோரியுள்ளது.

அமெரிக்க அரசியல் ஆளும் வர்க்கத்தின் தாராளவாத குடியரசுப் பிரிவும் அதேபோல் குடியரசுக் கட்சியின் பழைமைவாத பிரிவுகளும் கொண்டிருக்கும் இந்த ஒருமித்த உணர்வு ஒபாமாவின் இரு முன்னணிப் போருக்கு ஆதரவை நிரூபிக்கிறது. ஆப்கானிஸ்தானத்திலும் பாக்கிஸ்தானிலும் போர்ப் பெருக்கம் என்பது ஒபாமாவும் செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளும் ஈராக் போர் பற்றி கூறிய முந்தைய குறைகூறல்கள் வெறும் தந்திரோபாய முறை பற்றியவைதான் என்னும் உண்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க ஆளும் உயரடுக்கு ஈராக் போரை மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் முக்கியமான நலன்களில் இருந்து பேரழிவுகரமான திசைதிரும்பல் என்று கருதியதால்தான் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த தேர்தலில் முன்னணியில் வைக்கப்பட்டார்.

பரந்த போர் எதிர்ப்பு உணர்விற்கு அழைப்புவிட்டு தேர்தலில் வெற்றி பெற்றபின், இப்பொழுது ஒபாமா அவர் தேர்ந்தெடுத்துள்ள பணியைத்தான் செய்துவருகிறார். பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் மற்றும் தளபதி பெட்ரீயஸ் என புஷ் அதிகாரிகளின் முக்கிய நபர்களால் மேற்பார்வைக்குட்பட்டு அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானில் கோடையில் பெரிய தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்திவருகிறது. இதில் அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கை 68,000 ஆகும். அதே நேரத்தில் பென்டகன் அண்டை பாக்கிஸ்தானில் திட்டமிடப்பட்டுள்ள போர் நடவடிக்கை தீவிரமானால், அது நாட்டில் எல்லைப் பகுதிகள் மூலம் பொருட்கள் அமெரிக்கப் படைகளுக்கு செல்வதை தடுக்குமேயானால், அதற்கான மாற்று போக்குவரத்து வழிகளையும் தயாரித்துவிட்டது.

தன்னுடைய தலையங்கத்தை முடிக்கும் வகையில் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒபாமா நிர்வாகம், "நாட்டின் நீண்ட காலப் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உறுதியளிக்கிறது" என்பதைத் தெளிவுபடுத்தினார். அவர் மேலும் கூறியது: "பாக்கிஸ்தானின் வலுவற்ற அமைப்புக்கள் மற்றும் உறுதியற்ற தலைவர்கள் அடிப்படைவாதிகளைத் தோற்கடிப்பதில் தங்கள் விருப்பத்தை இழக்கக்கூடியது என்பது பெரிய ஆபத்து ஆகும். அப்படித்தான் ஈரானில் ஷா 1979ல் பதவி இழந்தார். இஸ்லாமாபாத்தில் அது போல் நடப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை."

உண்மையில் ஈரானில் இருந்த அமெரிக்க ஆதரவு உடைய சர்வாதிகாரம் ஷா தன்னுடைய எதிர்ப்பாளர்களை சிறையில் தள்ளி கொலை செய்வதை விரும்பாததால் ஆட்சியை இழக்கவில்லை, மாறாக இஸ்லாமிய மதகுருமார்களின் ஆதிக்கத்தை ஒட்டி வெளிப்பட்ட மக்கள் எழுச்சியின் விளைவாக இழந்தார். ஏற்கனவே ஆப்கானிஸ்தானத்திலும் பாக்கிஸ்தானிலும் அமெரிக்கா மற்றும் அதன் கைப்பாவைகளுக்கு சமூக, அரசியல் எதிர்ப்பு பரந்த அளவில் வந்துள்ளதன் அடையாளங்கள் தென்படுகின்றன. அமெரிக்கா எதெல்லாம் தேவைப்படுகிறதோ மற்றும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமோ அத்தனை நாட்கள் வன்முறையைப் பயன்படுத்தி அமெரிக்கப் பொருளாதார மற்றும் மூலோபாய மேலாதிக்கம் அப்பகுதியில் இருப்பதற்கு வரக்கூடிய சவால்களைச் செய்யவேண்டும் என்றுதான் ஒபாமாவிற்கு வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆலோசனை கூறியுள்ளது.

ஒபாமா போரை விரிவாக்கம் செய்தல் இப்பகுதி முழுவதும் இன்னும் பரந்த இராணுவத்தின் மூலம் இரத்தம் சிந்துதல், இராணுவ மோதல்கள் ஆகியவற்றிற்கான விதைகளை விதைப்பதின் மூலம் ஆழ்ந்த உறுதிப்பாட்டுக் குலைப்பைத்தான் ஏற்படுத்தும். இதை நிறுத்த ஜனநாயகக் கட்சி மற்றும் காங்கிரஸிற்கு முறையீடுகள் மூலம் முடியாது. மாறாக அமெரிக்க தொழிலாளர்கள் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்துடனும் தெற்கு மற்றும் மத்திய ஆசியா, சர்வதேச அளவில் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுடனும் ஒருங்கிணைந்து சுயாதீனமாக திரண்டு எழுவதின் மூலம்தான் முடியும். அந்தப் போராட்டம் ஏகாதிபத்திய அடக்குமுறை மற்றும் போருக்கு தளமாக இருக்கும் முதலாளித்துவ முறையை தூக்கி எறியும் ஒரு சோசலிச முன்னோக்கைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்