WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
ஜிலீமீ ணிஜிஹிசிs ஞிணீஹ்s ஷீயீ கிநீtவீஷீஸீணீ நீஹ்ஸீவீநீணீறீ னீணீஸீஷீமீuஸ்க்ஷீமீ தீஹ்
ணிuக்ஷீஷீஜீமீs tக்ஷீணீபீமீ uஸீவீஷீஸீ தீuக்ஷீமீணீuநீக்ஷீணீநீவீமீs
ETUC யின் நடவடிக்கை
தினம்--ஐரோப்பிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இழிந்த ஏமாற்று
By Stefan Steinberg
19 May 2009
Use this version
to print | Send
feedback
கடந்த வார இறுதியில் ஐரோப்பிய தொழிற்சங்க ஒன்றியக் கூட்டமைப்பு (ETUC)
பேர்லின், பிரஸ்ஸல்ஸ், மாட்ரிட் மற்றும் பிராக் உட்பட பல ஐரோப்பிய தலைநகரங்களிலும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களுக்கு
ஏற்பாடு செய்திருந்தது. சற்றே சிறிய ஆர்ப்பாட்டங்கள் இங்கிலாந்தில் பர்மிங்ஹாம்
(see "The Unite trade union March for
Jobs'") மற்றும் ருமேனியாவின் புக்காரஸ்ட்டிலும் நடைபெற்றன.
ஆர்ப்பாட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள்
ஆர்ப்பாட்டங்கள் 300,000 என மதிப்பிடப்பட்ட தொழிலாளர்களை ஈர்த்தது. கடந்த
மே 14 அன்று தொடங்கிய ETUC
யின் "நடவடிக்கை தினங்களின்" உச்சக் கட்டமாக அவை விளங்கின. ஆர்ப்பாட்டங்களின் அறிவிக்கப்பட்ட நோக்கம்
தற்போதைய சர்வதேச நிதிய நெருக்கடியின் விளைவுகள் தொழிலாளர்களுக்கு எதிராக இருப்பதில் இருந்து பாதுகாப்பதற்கு
ஐரோப்பாவில் இருக்கும் அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முறையிடுவதாகும்.
ஆனால் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்களின் உண்மை நோக்கம் "நெருக்கடியை எதிர்த்துப்
போராடுக, ஐரோப்பாவில் ஒரு சமூக ஒப்பந்தத்திற்காக" என்ற பொதுவான கோஷத்தின்கீழ், ஐரோப்பா
முழுவதும் இருக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் நிறுவன நிர்வாகிகள் மற்றும் அவற்றின் தேசிய அரசாங்கங்களுக்கு
முற்றிலும் அடிபணிந்திருக்கும் நிலையை மூடிமறைப்பதுதான்.
ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சங்கங்கள் பலமுறையும் குறுக்கிட்டு தங்கள் "தேசிய
இடங்களில்" வேலையை தக்க வைத்துக் கொள்ளுவதற்காக இன்னும் அதிக விட்டுக்கொடுப்புகளை வழங்கவேண்டும்
என்று கோருகின்றன.
இந்த மாதம்தான் முக்கிய ஜேர்மனிய தொழிற்சங்கங்கள் எல்லை கடந்த நடவடிக்கை
பிரெஞ்சு கொன்டினென்டல் டயர்ஸ் தொழிலாளர்கள் நடத்த இருந்ததை தடை செய்ய முற்பட்டன. அந்நிறுவனம் இரு
நாடுகளிலும் ஆலைகளைக் கொண்டுள்ளது. ஜேர்மனிய ஓப்பல் நிறுவனத்தில் ஜேர்மனிய தொழிற்சங்கமான
IG Metall
கார்த்தயாரிப்புத் தொழில் நெருக்கடிக்கு தீர்வு வேண்டும் என்றும், அதன் தாய் நிறுவனமான ஜெனரல்
மோட்டார்ஸ் திவால் ஆகாமல் தடுப்பதற்கு தீர்வு வேண்டும் என்றும்; இவற்றையொட்டி சில ஜேர்மனிய ஆலைகளில்
ஓப்பல் குழுவின் ஏனைய செயற்பாடுகளைக் கொண்டுள்ள பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாட்டுத்
தொழிலாளர்களின் இழப்பில் வேலைகள் தக்க வைக்கப்படும் என்றும் கூறியது.
பேர்லினில் தொழிற்சங்கத் தலைவர்கள்
அதே நேரத்தில் ஜேர்மனிய தொழிற்சங்கம் வாடிக்கையாக அமெரிக்காவில் ஜெனரல்
மோட்டர்ஸின் பங்கை அரக்கத்தனமாக சித்தரிக்கிறது. இதற்குக் காரணம் ஐரோப்பிய ஓப்பல் மற்றும் ஜெனரல்
மோட்டர்ஸின் அமெரிக்க தொழிலாளர் பிரிவிற்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதுதான்.
இந்த தேசிய நச்சுதான் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் இரத்த நாளங்களில்
அன்றாடம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் உட்செலுத்தப்படுகிறது-- ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரான
பிரஸ்ஸல்ஸ் ஆர்ப்பாட்டத்தில் சிறிய எண்ணிக்கையிலான ஓப்பல் தொழிலாளர்கள் கலந்து கொண்ட உண்மை இதை மூடி
மறைக்க முடியாது.
தங்கள் தேசியத் தடத்தை மூடி மறைக்கும் முயற்சியில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர்
நிதியச் சந்தைகள் பற்றி முழுக் கண்டனங்களையும் கூறத் தயாராக உள்ளனர். இக்குறைகூறல்கள் தீவிரமாக எடுத்துக்
கொள்ளப்பட வேண்டியதில்லை.
பிரஸ்ஸல்ஸில் ஜேர்மனியில் உள்ள
Kaiserslautern
நகரில் ஓப்பல் ஆலையின் தொழிற்சாலை தொழிலாளர் குழுத் துணைத் தலைவரான லோதர் சோகர் செய்தியாளர்களிடம்
"இந்தத் தடையற்ற சந்தை செயல்முறை, காசினோ முதலாளித்துவம்தான் இந்தநெருக்கடிக்கு நம்மை இட்டுச் சென்றுள்ளது
என்று நாங்கள் நம்புகிறோம்; இது மீண்டும் வராமல் இருக்க கடுமையான விதிகள் தேவை." எனகூறினார்.
பேர்லினில் ஜேர்மனிய தொழிற்சங்க ஒன்றியக் கூட்டமைப்பின் தலைவரான மைக்கேல்
சொம்மர், "வூடோ முதலாளித்துவம்", "ஆங்கிலோ-அமெரிக்க பங்குதாரர்-மதிப்பு முதலாளித்துவம்" பற்றி கடுமையாகக்
கூறினார். ஒதுக்கு நிதி, ஊக வணிகர்களின் செயற்பாடுகள் பற்றி கண்டித்த அவர், "அரசியல் மற்றும்
பொருளாதார உயரடுக்குகள் தோல்வியுற்றன" என்று கூறும் அளவிற்குச் சென்றார்.
இந்த கருத்துக்கள் அனைத்தும் வெற்றுத்தனமான போலி உரைகள் ஆகும். பேர்லினில்
அரங்கில் இறங்கியவுடன் சொம்மரை பாராட்டக் காத்திருந்து, அவர் பேசியபோது ஒப்புதலுடன் சிரித்தவர்கள்,
சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான பிரன்ஸ் முன்டபெயரிங் மற்றும் பசுமைக் கட்சியின் வரவிருக்கும் ஐரோப்பிய
தேர்தல்கள் முக்கிய வேட்பாளரான ரைன்ஹார்ட் புட்டிக்ஹோவர் ஆகியோர் ஆவர்.
ரைன்ஹார்ட் புட்டிஹோவர் (இடது), பிரன்ஸ் முன்டபெயரிங் (வலது)
முன்டபெயரிங் மற்றும் புட்டிஹோவர் இருவருமே முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி-
பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். அதுதான் 1998-2005 வரையிலான
ஆட்சிக்காலத்தில், போருக்குப் பிந்தைய ஜேர்மனியின் வரலாற்றில் பேரழிவு தரக்கூடிய சமூக வெட்டுக்களை அறிமுகப்படுத்தியது.
அதே நேரத்தில் தொடர்ச்சியான பல சட்டங்களை இயற்றி வெள்ளமென எல்லை கடந்த பத்திரங்களுக்கு பணங்கள்
செல்ல வழிவகுத்தனர். இன்று பேர்லின் அரங்கில் தொழிற்சங்க பேச்சாளர்கள் அதைத்தான் கடுமையாக
சாடியுள்ளனர்.
பேர்லின் உரைக்கு சற்று முன்னதாக சொம்மர் இந்த ஆண்டு முன்னதாக கூறிய
கருத்துக்களை பழையபடி கூறினார்; அவற்றில் ஜேர்மனியில் மக்கள் அமைதியின்மை பரந்த இருப்பதான எச்சரிக்கை
கொடுக்கப்பட்டுள்ளது. "நாம் இப்பொழுது செயல்படவில்லை என்றால், ஜனநாயகத்திற்கும் சமூக அமைதிக்கும் கடுமையான
விளைவுகள் ஏற்படும்" என்று அவர் Deutsche Welle
வானொலிக்கு கூறினார்.
சொம்மரும் பேர்லின், பிரஸ்ஸல்ஸ், மாட்ரிட் மற்றும் பிராக்கில் அரங்குகளில்
கூடியிருந்த அதிகாரத்துவத்தினரும் பெருகிவரும் சமூக அமைதியின்மை ஐரோப்பிய முதலாளித்துவ முறை
தொடர்ந்திருப்பதற்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும் என்று பெரும் கவலை கொண்டுள்ளனர். தற்போது இருக்கும்
இந்த அமைப்புமுறையை பாதுகாப்பதற்கு அரசியல் பிரிவினருக்கு தங்கள் பணியை வழங்குகின்றனர். ஆனால்
தற்போதைய நெருக்கடிக்கு உதவிய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகளுக்குத்தான் ஆதரவு என்ற
வடிவமைப்பை துல்லியமாக பெறுகிறது.
நிதியச் சந்தைகளின் கட்டுப்பாட்டிற்கு அழைப்புக்கள் விடுத்தபின் (இக்கோரிக்கை
கிட்டத்தட்ட அனைத்துத் தொழிற்சங்க பேச்சாளர்களால் கூறப்பட்டது) சொம்மர் இந்த ஆண்டு தொடக்கத்தில்
G20
முக்கிய முதலாளித்துவ நாடுகள் குழு இயற்றிய முடிவுகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார். தன்னுடைய பேச்சின்
முடிவில் சொம்மர் "ஐரோப்பிய அரசாங்கங்கள், தொடர்ந்து ஆங்கில-அமெரிக்க பங்குதாரர் மதிப்புடைய முதலாளித்துவ
கோட்பாட்டிற்கு தாழ்ந்திராமல் இருக்க வேண்டும்" என்று பணிவுடன் அழைப்பு விடுத்தார்.
சொம்மருடைய தற்போதுள்ள அரசியல் நடைமுறையுடன் ஒத்துழைப்பு என்பதற்கான
அழைப்பு பேர்லின் அணிவகுப்பில் அடுத்த பேச்சாளரான
ETUC பொதுச் செயலாளர் ஜோன் மொன்க்ஸ் ஆல் தொடரப்பட்டது.
"காசினோ முதலாளித்துவம்" பற்றித் தன்னுடைய கண்டனங்களுடன் மொங்க்ஸ்
உரையைத் தொடங்கி, விரைவில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அரசியல் நிறுவனங்களுடன் தன் ஒற்றுமையை
நிரூபிக்க முயன்றார். ஐரோப்பிய ஆளும் வர்க்கம் "மிகவும் எச்சரிக்கையுடனும், அச்சத்துடனும் உள்ளது,
நெருக்கடியை சந்திப்பதற்கு தேவையான விழைவுகளையும் கற்பனைத்திறனையும் கொண்டிருக்கவில்லை" என்று
அறிவித்தார்.
இந்தப்பிளவு, இந்த பாசாங்கு உரையாளரின் கருத்துப்படி, தொழிற்சங்க அதிகாரத்துவத்தான்
நிரப்பப்படும். "ஐரொப்பிய ஒன்றியம் என்பது ஐரோப்பிய தொழிற்சங்க இயக்கம் போன்றது. ஒரு
போராட்டத்தை கூட்டாக நாம் எடுத்துக் கொள்கிறோம் என்றால், நாம் இன்னும் திறமையுடன், வலிமையுடன்,
சிறப்புடன் தனியாக இருப்பதை விடச் செய்கிறோம்." மொங்கின் அறிவிப்பு எந்த அளவிற்கு பெருநிறுவன ஒத்துழைப்பு
ETUC
க்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே உள்ளது என்பது பற்றி அதிகமாகக் கூறகிறது.
மொன்க்ஸ்
தன்னுடைய உரையை முடிக்கையில் அட்லான்டிக் மறுபுறம் உள்ள அரசியல்
வளர்ச்சி பற்றி குறிப்பிட்டார். அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் தற்போதைய தலைமையைப் பற்றி போலிக்
கருத்துக்களையும் விதைத்தார். "ஐரோப்பாவில் ஜனாதிபதி ஒபாமா போல் முக்கிய தலைவர்கள் வேண்டும்; அவர்
தொழிற்சங்கங்கள் தீர்வின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்" என்று முடித்தார்.
சர்வதேச ஆர்ப்பாட்டங்கள் பற்றிய தன்னுடைய அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய
செய்தித்தாள் EU Observer,
ஒரு முக்கிய கருத்தை முடிவுரையாகக்க ஊறியுள்ளது. அதன் வலைத்தள பதிப்பு பின்வருமாறு குறிப்பிடுகிறது: "ETUC
இன் ஒருங்கிணைத்த தொடர்ச்சியான எதிர்ப்புக்கள், ஐரோப்பிய தொழிலாளர்களிடையே பெருகிய சீற்றம் வளர்ந்து
வரும் நேரத்தில் வந்துள்ளன. ஆயினும்கூட நெருக்கடி தொடங்கியதில் இருந்து பிரான்ஸில் ஏற்பட்டுள்ள பொது
வேலைநிறுத்தங்கள் "முதலாளிகளைப் பிடித்தல்" என்ற அலை என மில்லியன் கணக்கில் தொழிலாளர்கள் தெருக்களுக்கு
வந்துவிட்டதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறைந்த தன்மையுடையதாகத்தான் உள்ளது."
EU Observer சனிக்கிழமையன்று
நடந்த எதிர்ப்புக்கள், கொடி அசைப்புக்கள் மற்றும் விசில் ஊதும் தொழிற்சங்க ஆதரவாளர்களின் செயல்கள்,
பிரான்ஸில் சமீபத்தில் நடைபெற்ற எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைந்த தன்மையில்
இருந்தன என்று சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளது. உண்மையில்
ETUC உடைய
நடவடிக்கை தினங்கள் போர்க்குணமிக்க வெளிப்பாடுகளை எதிர்க்கவும் "சமூக அமைதியை" காக்கவும்தான்
துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளன.
பணிநீக்கப்பட்ட தொழிலாளர்கள்: "தொழிற்சங்கங்கள் எங்களுக்கு ஏதும்
செய்யவில்லை."
சமீபத்தில் ஒரு மேற்கு ஜேர்மனி கார் பாகங்கள நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட
தொழிலாளர் குழு ஒன்று WSWS
இடம் தொழிற்சங்கங்கள் அவர்களைக் கைவிட்டுவிட்டன என்றது. லிவர்குஸன் நகரில் உள்ள
TMD Friction
ஆலையின் தொழிலாளர் பிரதிநிதிக்குழு பேர்லினுக்கு வந்து தங்கள் வேலையை மீட்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக
ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டது.
சபிட் ஓகாயான் ஆலையில் இருந்த 160 தொழிலாளர்கள் நிர்வாகத்தால் இரண்டு
மாதங்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்றார். லிவர்குசனில் இருக்கும் ஆலை கார்த் தொழிலுக்கு துணை
பாகங்களை உற்பத்தி செய்கிறது. Porsche,
Mercedes போன்ற முக்கிய கார்களும் இதில் அடங்கும், அதன்
மொத்த தொழிலாளர் எண்ணிக்கை 800 ஆக இருந்தது.
"நான் ஆலையில் ஒரு குழுத் தலைவராக இருந்தேன், 13 ஆண்டுகள் அங்கு வேலை
பார்த்தேன். இரு மாதங்களுக்கு முன்பு, இரு நாட்கள் அறிவிப்பில் 160 சக ஊழியர்களுடன் நானும் வெளியேற்றப்பட்டேன்.
பணிநீக்கம் செய்யப்பட்ட பலரும் நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்தவர்கள், குடும்பங்கள், குழந்தைகளை
உடையவர்கள். எங்கள் வேலை போன பின்னர், நாங்கள் இப்பொழுது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் புதிய
வேலையைப் பெறுவதும் இயலாது.
"நிர்வாகம் இலாபத்தில் செயல்பட வேண்டும் என்ற காரணம் காட்டி நாங்கள் நீக்கப்பட்டோம்,
ஆனால் நிர்வாகத்திடம் நிறைய வேலைகள் முடிக்க வேண்டியிருந்தன, ஆலை இன்னமும் நான்கு பணிமுறைகளில் 24 மணி
நேரமும் வேலை செய்து வந்தது என்ற உண்மை எனக்குத் தெரியும். அவர்கள் எங்களை வெளியே அனுப்ப
விரும்பினர், ஏனெனில் நாங்கள் 2,000 யூரோக்களுக்கு மேல் ஊதியம் பெறுகிறோம்; எங்களுக்குப் பதிலாக புதிய
இளந்தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் நியமிக்கப்படலாம்."
IG Chemie ஆலையின் தொழிற்சங்க
அமைப்பு இதை எதிர்கொள்ளுவது பற்றி கேட்கப்பட்டபோது ஒகாயான் மற்றும் அவருடைய சக ஊழியர்கள் உள்ளூர்
தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் பற்றி கடுமையாக குறைகூறினர்.
அவர் தெரிவித்தார்: "தொழிற்சங்கங்கள் எங்களுக்கு ஏதும் செய்யவில்லை.
நிர்வாகத்துடன் நேரடியாக பேச முயன்றோம்; ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் உள்ளூர் தொழிற்சங்க
பிரதிநிதியை அனுப்புகின்றனர்; அவர் தொழிற்சங்கம் பணிநீக்கங்கள் பற்றி ஏதும் செய்ய முடியாது என்றும் ஒரு சமூகத்
திட்டத்திற்கு நாம் காத்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். சமூகத் திட்டத்தின் விவரங்களும் தொழிற்சங்கங்களிடம்
தான் உள்ளன; இரண்டு மாதங்களுப் பிறகு விவரங்கள் பற்றி ஏதும் எங்களுக்குக்கூறப்படவில்லை.
"எங்களுடைய பணிநீக்கங்களை எதிர்த்து லிவர்குஸனில் மூன்று ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு
செய்தோம், ஆனால் தொழிற்சங்கங்களிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. நிர்வாகத்தின் துணைக் கைகள்
போல்தான் தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன." |