World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம் World economy in freefall உலகப் பொருளாதாரம் பெரும் சரிவில் By Andre Damon உலகின் முக்கிய பொருளாதாரங்களின் அரசாங்கங்கள் கடந்த சில தினங்களில் அதிர்ச்சி தரும் முதல் காலாண்டு குறைப்புக்களை அறிவித்தன; பொருளாதார நெருக்கடி தொடர்ந்து மோசமாகும் என்பதற்கு இவை உண்மையான குறியீடுகள் ஆகும். முதல் காலாண்டில் மிக அதிகச் சரிவை கொண்டுள்ள நாடு சமீபத்தில் அதை அறிவித்துள்ள மெக்சிகோ ஆகும்; புதனன்று சென்ற ஆண்டை விட அதன் பொருளாதாரம் 8.2 சதவிகிதம் சுருக்கம் கண்டதாக அது கூறியுள்ளது. 1995ல் நாட்டை திவாலின் விளிம்பிற்கு கொண்டு வந்த பெசோ நெருக்கடிக்கு பின் இது மிகத் தீவிர சரிவு ஆகும்; ஆண்டு அடிப்படையில் இது 21.5 சதவிகித தடையற்ற சரிவு என்று ஆகிறது. இது செவ்வாயன்று வந்த அறிவிப்பான ஜப்பானிய பொருளாதாரம் நான்காம் காலாண்டில் 4 சதவிகிதம் குறைந்தது என்று வந்த அறிவிப்பை தொடர்ந்து வந்துள்ளது; இது 1955க்கு பின்னர் மிக மோசமான சரிவு ஆகும்; ஆண்டு கணக்கின்படி பார்த்தால் இது 15.2 சதவிகித சுருக்கமாகும். முந்தைய காலாண்டுக் காலத்தில் ஜப்பானிய பொருளாதாரம் 3.8 சதவிகிதம் குறைந்துவிட்டது. கடந்த வாரம் ஜேர்மனி, அதன் பொருளாதாரமும் முதல் காலாண்டில் 4 சதவிகிதம் சரிந்து விட்டது என்று அறிவித்தது; இது 1970ல் இருந்து காலாண்டு முறையில் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் முறையிலேயே மிகத் தீவிரச் சரிவு ஆகும். வெளித் தேவையை அதிகம் நம்பியிருக்கும் ஏற்றுமதி வழிப் பொருளாதாரத்தை கொண்டுள்ள ஜேர்மனி யூரோப்பகுதி பொருளாதாரங்களில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாகும்; ஆனால் அனைத்துமே கணிசமான சரிவுகளைக் காட்டியுள்ளன. திங்களன்றுதான் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் Jean-Claude Trichet, Organization for Economic Cooperation and Development சார்பாக கீழ்நோக்குச் சரிவு "பணவீக்க கட்டத்தை" அடைந்து விட்டது என்று கூறினார். பங்குச் சந்தை செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் Trichet ஏற்றம் விரைவில் வந்துவிடும் என்ற குறிப்பைக் கூறியுள்ளார். "எல்லா நிலைகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவில் ஒரு குறைவு வந்துள்ளதை காண்கிறோம். சிலவற்றில் ஏற்கனவே உயர்வு இருந்ததைப் பார்த்திருக்க முடியும்," என்று Trichet முடித்தார். சமீபத்தில் வந்துள்ள GDP புள்ளிவிவர தொகுப்புக்கள் இந்த முடிவிற்கு நம்பகத்தன்மையை கொடுக்கவில்லை. வெள்ளியன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் யூரோப்பகுதியில் முதல் காலாண்டு காலத்தில் சரிவு 2.5 சதவிகிதம் எனவும் 2008 கடைசிக் காலாண்டில் இது 1.5 சதவிகிதமாகவும் இருந்தது என்று குறிக்கின்றன. இப்புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி தருபவை ஆகும். பைனான்ஸியல் டைம்ஸின் கட்டுரையாளர் Lex விளக்குகிறார்: "இதே விகிதத்தில் ஜேர்மனிய பொருளாதாரம் தொடர்ந்து சுருக்கம் அடைந்தால், அது ஆண்டு இறுதியில் ஐந்து சதவிகித சுருக்கத்திற்கும் மேலாக அடைந்துவிடும், நாடு ஒற்றுமைப்பட்டுள்ள ஒன்றரை தசாப்தக்காலத்தின் வளர்ச்சியை முற்றலும் மாற்றிவிடும் விதத்தில்." கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்கள் பெரும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன; சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உறுப்பு நாடான ஸ்லோவாக்கியா அதன் பொருளாதாரம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 11.2 சதவிகிதம் குறைந்ததை கண்டுள்ளது. மெக்சிகோ, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகியவை அமெரிக்காவின் பெரிய வணிகப் பங்காளி நாடுகளாகும்; இவை இணைந்த விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுடன் அரை டிரில்லியன் டாலர்களுக்கும் மேலான கணக்கை கொண்டுள்ளன சரிவிற்கு முன்பு அமெரிக்க இறக்குமதிகள் கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றுக்கு 3 டிரில்லியன் டாலர்கள் என்று இருந்து, வெளிநாடுகளில் உற்பத்தி உந்துதலில் பெரும் சக்தியாக இருந்தன. அமெரிக்க பொருட்கள் இறக்குமதி ஓராண்டிற்கு முன் இதே காலத்தில் இருந்ததைவிட 2009ல் 30 சதவிகிதத்திற்கும் குறைந்தன என்று வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறுகிறது. 2006ல் அமெரிக்க நடப்புநிலை கணக்குப் பற்றாக்குறையாக 800 பில்லியனை டாலரை கொண்டிருந்தது; இது இப்பொழுது 500 பில்லியன் டாலர் என்று வந்துள்ளது. வேலையின்மை அதிகரிப்பு, வீடுகளின் மதிப்பு சரிதல், மிகப் பெரிய அளவில் முன்கூட்டி கடன்கள் அடைப்பு ஆகியவை வெளிநாட்டுப் பொருட்கள் நுகர்வில் கணிசமாக சரிவை ஏற்படுத்தியுள்ளன; இதில் கார்கள் இன்னும் பல நுகர்வோர் பொருட்கள் அடங்கும். அமெரிக்கச் சந்தைக்கு பெரும்பாலும் வரும் மெக்சிகோ கார் உற்பத்தி, 41 சதவிகிதம் இதையொட்டி சரிந்துவிட்டதாக வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறுகிறது. இந்த சரிவு சர்வதேச உற்பத்தி முறை என்னும் சிக்கல் வாய்ந்த வலையை பெரும் தாக்குதலுக்கு உட்படுத்தியுள்ளது; உலக அளிப்புச் சங்கிலியில் உற்பத்தியாளர்களுக்கு எவ்வளவு உற்பத்தி செய்யவேண்டும் என்ற தகவலை முற்றிலும் வெட்டி விட்டது. "எந்த ஆதாரமும் இல்லாமல் ஏதேனும் ஒரு எண்ணிக்கையை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது; ஏனெனில் எவருக்கும் சரியாக எதுவும் தெரியவில்லை" என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பேட்டி கண்ட மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பவர் ஒருவர் கூறினார். ஜப்பானின் உற்பத்தி வீழ்ச்சி அறிவிப்பை தொடர்ந்து சோனி தன் உலக அளிப்பு வலைப்பின்னலை பாதியாக குறைப்பதாக இருப்பதாகவும் அப்பொழுதுதான் குறைந்துவிட்ட தேவைக்கு ஈடாக அது இருக்கும் என்றும் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றம் புதனன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, வெளிநாட்டு நேரடி முதலீடு கடந்த ஆண்டு 15 சதவிகிதம் குறைந்தது. UNCTAD (UN Conference on Trade and Development) உடைய தலைமைச் செயலாளர் Supachai Panitchpakdi வெளி நாட்டு முதலீட்டில் ஏற்பட்டுள்ள சரிவு கடந்த ஆண்டை விட "மிக அதிகமாக" இருக்கும் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் உலகப் பங்குச் சந்தை மற்றும் நிதிய இலாபங்கள் அவற்றின் ஓட்டத்தை தொடர்ந்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் அனைத்து முக்கிய உலகப் பங்குச் சந்தைகளும் தீவிரமாக உயர்ந்துள்ளன FTSE அனைத்துலகக் குறியீடு மார்ச்சில் இருந்து 40 சதவிகித்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க NASDAQ 16.88 சதவிகிதம் அதிகரித்துள்ளது, ஐரோப்பிய FTSE Eurofirst 18 சதவிகிதம், ஜப்பானிய Nikkei 24.91 சதவிகிதம், தைவானின் Hang Seng 35.44 சதவிகிதம் உயர்ந்துள்ளன. இதற்கிடையில் Vanguard Financials குறியீடு இவை அனைத்தையும் கடந்த விதத்தில் மார்ச் 6 ல் இருந்து 42 சதவிகிதம் உயர்ந்துள்ளது. Financial Times வியாழனன்று ஒரு கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளபடி, பங்குச் சந்தைகளில் மீட்பு என்பது உலகம் முழுவதிலும் மத்திய வங்கிகள் டிரில்லியன் கணக்கான டாலர்களை சுற்றில் விட்டதுடன் பிணைக்கப்பட்டுள்ளது. "அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகள் கட்டவிழ்த்துள்ள பணக் குவிப்பின் மூலம் சந்தைகள் பணத்தில் மூழ்குகின்றன. இது ஊகத்தில் பழையபடி பெரும் நாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது; அதையொட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குறியீடுகளைவிட அதிகமாக இப்பொழுது போய்விட்டது. ஒரு கட்டத்தில் இது சரியும்.....நம்பிக்கை செயற்கை என்றால், ஏமாற்றங்கள் மிகவும் உண்மையாக போய்விடும்."அமெரிக்கா மட்டுமே கிட்டத்தட்ட $15 டிரில்லியனை நிதிய முறையில் உட்செலுத்த இருக்கிறது என்று சமீபத்திய Deutsche Bank தெரிவிக்கிறது. முக்கிய வளர்ச்சியுற்ற நாடுகள் இதே போன்ற முன்முயற்சிகளை எடுத்து கணக்கிலடங்கா டிரில்லின்களை நிதிய முறையில் உட்செலுத்தியுள்ளன; அதே நேரத்தில் உண்மைப் பொருளாதாரங்கள் 1930 களுக்கு பின்னர் மிக மோசமான சேதங்களில் ஆழ்ந்துள்ளன. ஒபாமா நிர்வாகத்தின் திட்டம்--பணிநீக்கம் மறு கட்டமைப்பின் மூலம் தொழிலாளர்களை வறிய நிலையில் தள்ளுவது மற்றும் மிகப் பெரிய உதவித் தொகைகளை நிதிய உலகிற்கு அளிப்பது--சில தடுப்புக்களுடன் அனைத்து முன்னேற்றப் பொருளாதாரங்களை கொண்ட நாடுகளிலும் செயல்படுத்தப்படும் முறையாகிவிட்டது. மிக அதிக வெளிப் பற்றாக்குறைகள் கொண்ட நாடுகள், அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து போன்றவற்றில் இது சுருக்கத்தை வெளிநாட்டிற்கு மாற்றும் விளைவைக் கொடுத்துள்ளது. ஆனால் உபரி இருக்கும் நாடுகளும் பகுத்தறிவற்ற முறையில்தான் எதிர்கொள்கின்றன. பெய்ஜிங்கின் பீகிங் பல்கலைக்கழகத்தில் நிதித்துறைப் பேராசிரியராக இருக்கும் Michael Pettis, வியாழன் பைனான்சியல் டைம்ஸில், பல ஆசியான் ஏற்றுமதி நாடுகளில், குறிப்பாக சீனாவில், உலகத் தேவை சரிவை ஈடுபடுத்தும் வகையில் தொழில் உற்பத்தியை பெருக்கும் முயற்சி உள்ளதாக எழுதியுள்ளார். "இத்தகைய முதலீட்டு-சார்பு உடைய கொள்கைகள் நுகர்வை மறைமுகமாக அதிகரிக்கின்றன; உற்பத்தி பெருக்கம் அடைவதால்; எனவே தற்காலிகமாக வளர்ச்சியை பெருக்கினாலும் அவை பொதுமான அளவு உள்நாட்டு நிகர நுகர்வை அமெரிக்கா வாங்குவதற்கு ஈடு செய்யும் என்ற முறையில் அதிகப்படுத்த முடியாது. இன்னும் மோசமான நிலை என்ன என்றால், சில இடங்களில் இக்கொள்கைகள் வருங்கால உள்நாட்டு நுகர்விலும் பெரும் தடைகளை ஏற்படுத்தும்; அதுவும் எப்பொழுது கூடுதலான நுகர்வு இருக்க வேண்டுமோ அப்பொழுது." சுருங்கக் கூறின், அமெரிக்க உயரடுக்கு மில்லியன் கணக்கான வறியவர்களின் நிலை மூலம், அதையொட்டி நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் குறைவு ஏற்படுவதால் வரக்கூடிய பெரும் இலாப முறைக்கு திரும்ப விரும்புகையில், சீனா தன்னுடைய இலாபங்களை மீட்பதற்கு செயல்படுத்த முடியாத உற்பத்தித் திறனைக் கட்டமைப்பதின் மூலம் செய்ய விரும்புகிறது. இந்த இரு கொள்கைகளும் மோதல் பாதையில் இல்லை; ஆனால் இரண்டின் விளைவும் ஒன்றாகத்தான் இருக்கும்: அதாவது இறக்குமதி செய்யும் நாடுகளில் தொழிலாளர்கள் வறுமையில் தள்ளப்படுதல், கூடுதல் திறன் பிரச்சினைகள், மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி எனவாகும். உலகப் பொருளாதாரத்தின் பெரும் சரிவு, மாபெரும் வேலையின்மைப் பெருக்கம் ஆகியவற்றிற்குள் தோன்றியிருக்கும் இந்த நிகழ்வுப் போக்குகள் உலகம் முழுவதும் சமூக எழுச்சிகளை ஏற்படுத்தக் கூடும். |