WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Obama's sermon at Notre Dame
நோத்ர் டாமில் ஒபாமாவின் உபதேச உரை
By Tom Eley
19 May 2009
Use this version
to print | Send
feedback
சில வாரங்கள் செய்தி ஊடகத்தினால் பரபரப்புக் கொடுக்கப்பட்ட, கருக்கலைப்பு
எதிர்ப்பு வெறியர்கள், நாட்டின் முக்கிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில், கருக்கலைப்பில் "விருப்பத் தேர்விற்கு
ஆதரவு" கொடுப்பதாகக் கூறப்படும் ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு நடத்தியதால், நோத்ர் டாம் பல்கலைக்கழகத்தில்
ஜனாதிபதி ஒபாமாவின் துவக்க உரை உயர்ந்த அரசியல் முக்கியத்துவத்தை பெற்றது.
நடந்தது என்னவென்றால், பிற்போக்குத்தன பிரச்சாரத்தினர் நூறு எதிர்ப்பாளர்களுக்கு
மேல் திரட்ட முடியவில்லை; அவர்களில் பெரும்பாலானவர்களும் பிற இடங்களில் இருந்து வளாகத்திற்கு அழைத்துவரப்
பட்டவர்கள் ஆவர். நோத்ர் டாம் இருக்கும் இந்தியானா,
South Bend ல்
வசிக்கும் மக்கள் கருக்கலைப்பு எதிர்ப்பு வெறிபிடித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்மீதும் அவர்களுடைய விளம்பரத்திற்காக
நடத்தப்படும் பிரச்சாரத்தின்மீதும் பெரிதும் விரோதப் போக்கை உடையவர்கள். பல வாரங்கள் ரூபர்ட்
மர்டோக்கின் Fox News
வழிநடத்திய செய்தி ஊடக வலதுசாரிப் பிரச்சாரத்திற்குப் பின்னரும் நோத்ர் டாமின் மாணவர்களில் பெரும்பலானவர்கள்
கருக்கலைப்பு-எதிர்ப்பு சக்திகளுக்கு விரோதப் போக்கைத்தான் காட்டினர். ஒபாமாவின் உரையை தடைக்கு உட்படுத்த
முயன்ற ஒரு சில எதிர்ப்பாளர்கள் முற்றிலும் கூட்டத்தின் ஆரவாரத்தில் மூழ்கடிக்கப்பட்டனர்.
இந்த விளைவு குறிப்பிடத்தக்க வகையில் வியப்பளிக்கவில்லை. தேசியக் கருத்துக் கணிப்புக்கள்
மக்களில் கணிசமான பகுதியினர் கருக்கலைப்பில் இன்னும் அதிகத் தடைகளை எதிர்க்கின்றனர் என்பதையும், தலைமை
நீதிமன்றத்தின் சிறப்புத் தீர்ப்பு Roe v.Wade
1973 வழக்குத் தீர்ப்பிற்கு வலுவான ஒருமித்த ஆரதவு உள்ளது என்பதும் தெரிகிறது. எதிர்ப்புத் தலைவர்களில் ஒருவரான
Randall Terry,
நோத்ர் டாம் பிரச்சாரத்தின் நோக்கம் "புதைந்துவிட்ட" கருக்கலைப்பு-எதிர்ப்பு இயக்கத்தை புதுப்பிப்பதுதான்
என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
ஒபாமா வெகு எளிதில் எதிர்ப்பைப் புறக்கணித்து தான் வந்திருப்பதைப் பயன்படுத்தி
நோத்ர் டாம் மாணவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மொத்தமாக கூடுதல் அக்கறை இருக்கும் பல பிரச்சினைகளில்
ஏதேனும் ஒன்று பற்றி பேசியிருக்கலாம். அல்லது கருக்கலைப்பு பிரச்சினை பற்றி பேசத்தான் வேண்டும் என்றால்,
குழப்பத்திற்கு இடமில்லாத வகையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் அரசியல் அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அந்தரங்கம்,
விருப்புரிமை பற்றிய கருத்துக்களை அளிக்கும் வாய்ப்பாக கொண்டிருக்கலாம்.
மாறாக, இவருடைய நிர்வாகத்தின் வாடிக்கை நடவடிக்கையாகிவிட்ட விதத்தில் ஒபாமா
பிற்போக்குத்தனம் நிறைந்த முதுகு எலும்பு அற்ற அணுகுமுறையைத்தான் கையாண்டார். இவருடைய உரையின் மைய
முன்கருத்து ஜனநாயக உரிமைகளை மறுக்கும் மக்களுடைய கருத்துக்களும் ஜனாநாயக உரிமைகளை ஏற்று மதித்து
காக்கும் மக்கள் போலவே மரியாதைக்கு உரியவை என்பதுதான். கருக்கலைப்புப் பிரச்சினை பற்றி அவர் அணுகிய
முறை இந்த சட்டபூர்வ உரிமை தங்கள் உரிமைகளை செயல்படுத்த விரும்புபவர்களுக்கும் மகளிருக்கு இச்சட்டத்தின்
பாதுகாப்பை மறுப்பவர்களுக்கும் இடையே நிரந்தர பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது என்பது போல் இருந்தது.
ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு பற்றி ஒபாமாவின் பொருட்படுத்தாத அணுகுமுறை
கருக் கலைப்பு பிரச்சினையுடன் நின்றுவிடவில்லை. ஒவ்வொரு முறையும் படிக்கும்போது உட்குறிப்பான
பிற்போக்குத்தன எண்ணங்கள் தெளிவாக வெளிப்படும் முறையில் அவருடைய அறிக்கையில் ஒபாமா கூறியிருப்பதாவது:
"சிப்பாயும், வழக்கறிஞரும் இந்நாட்டை சமமான தீவிர உணர்வில் நேசிக்கலாம், ஆயினும் அவர்கள் தீமையில்
இருந்து காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பொறுத்த வரையில் முற்றிலும் மாறுபட்ட முடிவுகளை
அடையலாம்."
ஆண் ஓரினச் சேர்க்கை பிரச்சாரகரும் மத நற்போதனையாளரும்
HIV/AIDs ன்
பெரும் தீமைகளைக் கண்டிக்கலாம், ஆனால் இருவருமே தங்கள் முயற்சிகளை ஒன்றுபடுத்தக் கூடிய பண்பாட்டு பிளவை
மறைக்க முடியாமல் போகலாம். Stem cell
ஆராய்ச்சிக்கு எதிராகப் பேசுபவர்கள் வாழ்வின் புனிதம் என்ற
சிறப்பான நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கலாம், ஆனால் இளவயது நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையின்
பெற்றோர்கள், தங்கள் மகன் அல்லது மகளின் துன்பங்கள் கரைக்கப்பட்டுவிடலாம் என்று நம்புவர்களின்
நம்பிக்கையும் அதே ஆழ்ந்த தன்மையைக் கொண்டிருக்கின்றன.
ஒபாமாவின் கருத்து என்ன? "நம்மை தீமையில் இருந்து காப்பதற்கு" இராணுவச்
சட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் தளபதி, உரிமைகள் சட்டத்தைக் காக்கும் வழக்கறிஞர் கருத்தைப் போன்றே
நெறியான பார்வையைத்தான் கொண்டிருக்கிறார் என்பதா? ஆண் ஓரின சேர்க்கையை வெறுத்து ஒதுக்கி பேசும்
வெறுப்பு நிறைந்த உரைகளை ஊக்குவிக்கும் நற்போதனை உரைப்பவரின் கருத்துக்கள், தேசிய கலந்துரையாடலுக்கு
மதிப்புடைய பங்களிப்புக்களா? மேலும் இறுதியாக, ஸ்டெம் செல் ஆய்வை எதிர்ப்பவர்கள், மற்றும் அத்தகைய
எதிர்ப்புக்களின் பிற்போக்குத்தன விளைவுகளால் குழந்தைகளை இழக்கக்கூடிய பெற்றோர்களுக்கும் இடையே ஒரு
வகை பொதுவான உடன்பாட்டுத் தளம் காணப்படவேண்டும் என்பதா? அறிவியல் பற்றி விரோதப் போக்கு மற்றும்
அறியாமையில் வேர்களைக் கொண்டுள்ள ஸ்டெம் செல் ஆய்வுக்கான எதிர்ப்பு, ஜனாதிபதியால் "வாழ்வின்
புனிதத்துவம் பற்றிய போற்றத்தக்க நம்பிக்கை" என்று ஏன் பாராட்டப்பட வேண்டும்?
கருக்கலைப்பு பிரச்சினை பற்றியே கூட, ஒபாமா இந்த வழிவகையில் ஈடுபடும்
மகளிர் ஒரு இழிவான செயலில் ஈடுபடுகின்றனர் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டினார்; கருக்கலைப்பிற்கு எதிரான
கருத்தை உடையவர்கள் உயர்ந்த அறநெறித் தளத்தைக் கொண்டுள்ளனர் என்பதைப் போல் உரைத்தார். அவர்
அறிவித்தது: "கருக்கலைப்பை ஏற்காதவர்களுடைய மனச்சாட்சியையும் பெருமைப்படுத்துவோம்; ஒரு
பொருள்பொதிந்த மனச்சாட்சி விதியை இயற்றி எமது சுகாதாரப் பாதுகாப்பு கொள்கைகள் நல்ல அறிவியல்
கோட்பாட்டில் தளம் கொண்டிருக்கின்றன என்று மட்டும் இல்லாமல் தெளிவான அறிநெறியிலும் தோய்ந்துள்ளது என்று
கொள்ளுவோம்; அதேபோல் மகளிர் சமத்துவத்திற்கு மதிப்பு அளிப்போம்."
எவரும் சட்டப்படி கருக்கலைப்பு செய்து கொள்ளக் கட்டாயப் படுத்தப்படுவதில்லை
என்ற உண்மையை ஒபாமா கவனிக்கவில்லை. கருக்கலைப்பை எதிர்ப்பவர்கள் சட்ட உரிமை ஒன்றை பயன்படுத்திக்
கொள்ளும் தேவையில் இல்லை. ஆனால் ஜனாதிபதி ஏன் இந்த உரிமையைக் கொண்டவர்கள் தங்கள் உரிமையை அடைவதை
மறுக்க முற்படுவபவர்களின் "மனச்சாட்சியை கெளரவப்படுத்த வேண்டும்" என்று கூறும் கட்டாயத்திற்கு உட்பட்டார்?
"மனச்சாட்சி விதி" என்று அழைக்கப்படுவது சுகாதாரப்
பாதுகாப்பு ஊழியர்களுக்கு சட்டபூர்வமாக உள்ள உரிமையை தனிநபர்களுக்கு சிகிச்சை கொடுக்க மறுக்கும் நிலையை
ஏற்படுத்தலாம். இதன் பின் "நல்ல அறிவியல்" மோசமான அறநெறியைத் தளமாகக் கொண்டிருக்கலாம் என்ற
கருத்து வந்தது. மீண்டும் ஜனாதிபதி இங்கு ஆதாரமற்ற மதவாத வலதின் கூற்றுக்களுக்கு ஏற்ப பேசுகிறார்; அவைதான்
அறிவியல் தங்கள் அறியாமை நிறைந்த, பிற்போக்குத்தன உலகப் பார்வைக்கு தாழ்ந்து நிற்க வேண்டும் என்கின்றனர்.
ஒபாமாவின் குறிப்பான "மகளிரின் சமத்துவம்" என்னும் சொற்றோடர் இந்த சொற்கள் பின்னால் நினைத்து சேர்க்கப்பட்டவை
என்பதை தெளிவாக்குகிறது.
ஒபாமாவின் உரையில் பல கூறுபாடுகளும் ஜனநாயகக் கொள்கைகளை முற்றிலும்
பொருட்படுத்தாத்தன்மையை வெளிப்படுத்தின; இவற்றில் திருச்சபை மற்றும் அரசாங்கம் பிரிக்கப்பட வேண்டியதும்
அடங்கியிருந்தது. ஒரு அரசியல் உரை என்பதைவிட ஒபாமாவின் கருத்துக்கள் மத உபதேச உரையாக இருந்தன;
பல முறையும் கடவுளை இழுத்தது, "முதல் பாவத்தை" பற்றிய குறிப்பு மற்றும் தானே எப்படி கிறிஸ்துவைக் கண்டது
என்பதை மறுமுறை கூறியது இவையெல்லாம் உரையில் இருந்தன.
உண்மையில் அவருடைய மறைந்த தாயார் நாஸ்திகராக இருந்த நிலையில், ஒபாமா
உண்மையிலேயே இவற்றுள் எதையும் நம்புகிறாரா? தான் மாறியதைப் பற்றி நோத்ர் டாமில் கூறியபோது,
ஒபாமா கத்தோலிக்க படிநிலையின் செல்வாக்கை வலியுறுத்தினார். தன்னுடைய நீண்ட நாள் மத பிரச்சாரகர்
Rev.Jeremiah Wright
பற்றி அவர் ஏதும் குறிப்பிடவில்லை. அரசியலில் அது வசதி கொடுக்கும் என்றால் தன்னுடைய மத மனச்சாட்சிக்காக
தெற்கு சிக்காகோவில் உள்ள கறுப்பு பாப்டிஸ்ட் பிரச்சாரான ரைட்டிற்கு ஒபாமா மதிப்பு கொடுப்பார்.
ரைட்டின் சொற்றொடரான "நம்பிக்கையின் பெரும் தைரியம்" என்ற தலைப்பைக் கூட ஒபாமா அதே பெயரைக்
கொண்ட தன்னுடைய மிக அதிக விற்பனையாள நூலுக்கு வைத்தார்.
நோத்ர் டாமில் வெளிவந்தது ஒபாமாவின் ஆழ்ந்த மத நம்பிக்கைகள் அல்ல
--அவருடைய பிற நம்பிகைகளை போலவே வளைந்து கொடுக்கக்கூடியவை என நாம் சந்தேகிக்றோம்-- ஆனால்
உறுதியான அரசியல் கணக்கு வழக்குகள். ஜனாதிபதியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அனைவரையும் அரவணைத்துச்
செல்லுவதும், மிகப் பிற்போக்குத்தன சமூக சக்திகளுடன் பழகுதல் என்றும் உள்ளது. |